செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
கிண்ணியாவில் மீனவர்களின் வலையில் சிக்கிய 5,000 கிலோ கிராம் எடையை மதிக்கத்தக்க சுறா வகை மீன் (Whale Shark) ஒன்று சிக்கியுள்ளது. குறித்த சுறா வகை மீன் இனமானது நேற்று (12) கிண்ணியா கடற்பரப்பில் மீனவர்களுக்கு சிக்கியுள்ளதாக தெரியவருகிறது. இதனை மீனவர்கள் கரைக்கு பெரும் சிரமத்திற்கு மத்தியில் கொண்டு சேர்த்தனர். கிண்ணியா கடலில் சிக்கிய 5,000 கிலோ எடை கொண்ட சுறா மீன் | Virakesari.lk
-
- 5 replies
- 442 views
-
-
மன்னார் வைத்தியசாலையின்... நோயாளர் விடுதியில், கத்திக்குத்து – ஒருவர் கைது! மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சைப் பெற்று வந்த மன்னார் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் மீது இவ்வாறு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1286780
-
- 0 replies
- 197 views
-
-
கதிரையில் இருந்து... தவறி விழுந்து, கிளிநொச்சியில் குழந்தை உயிரிழப்பு! கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் ஒரு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கதிரையில் இருந்து கீழே விழுந்தே இந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெற்றோர் குழந்தையை கதிரையில் இருத்தி விட்டு சமயலறையில் இருந்துள்ள நிலையில், குழந்தை கதிரையிலிருந்து தவறி விழுந்துள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தையடுத்து உடனடியாக குறித்த குழந்தை, முழங்காவில் பிரதேச வைத்தியசாலைக்கு, கொண்டு செல்லப்பட்ட போது, வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com…
-
- 0 replies
- 256 views
-
-
200 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வேன் நித்யானந்தா உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அவர் தான் சமாதி நிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- நான் இன்னும் சமாதியில் இருந்தாலும் சீடர்கள் மூலம் உடல் மனமும், ஆன்மாவும் ஒரே நிலையில் செயல்படுகின்றன. எனது சீடர்களின் பதிவுகளை நான் மிகவும் அரிதாகவே பகிர்கிறேன். எனது அன்பான பக்தர்கள், அன்பான சீடர்கள் மற்றும் கைலாசாவாசிகள் அனைவரையும் நான் விரும்புகிறேன். அதிர்ஷ்டவசமாக பரமசிவனின் கருணையுடனும், உங்கள் எல்லா ஆத…
-
- 0 replies
- 211 views
-
-
வீடொன்றில் தங்கப் புதையல் தோண்டுவதற்கு முயன்ற ஏழு பேர் கைது ShanaJune 11, 2022 கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலையில் வீடொன்றில் தங்கம் புதைக்கப்பட்டிருப்பதாக தோண்ட முற்பட்ட 7 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டு உரிமையாளர் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 6 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டின் வளாகத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத் தகடு புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை தோண்டி எடுக்கும் முயற்சியில் அவர்கள் எடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மின் பயன்பாடு அற்ற டெட்ட…
-
- 0 replies
- 156 views
-
-
ஒரே விரலில் 129 கிலோ எடையை தூக்கி உலக சாதனை மின்னம்பலம்2022-06-11 உங்களால் அதிகமாக எவ்வளவு எடை தூக்க முடியும்? நம்மில் பலருக்கு வீட்டில் இருக்கும் சிலிண்டர்களை தூக்குவது கடினமாக உள்ள நிலையில் ஒருவர் ஒரு விரலில் 129 கிலோ எடையை தூக்கி உள்ளார். இதன் மூலம் இவர் புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். மேலும் 10 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலக சாதனையை நிகழ்த்தியவர் 48 வயதான ஸ்டீவ் கீலர். இவர் தனது 18 வயதில் இருந்தே கராத்தே பயிற்சி செய்து வருகிறார். அப்பொழுது ஒரு நாள் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது தனது நடுவிரலால் மட்டும் ஒரு சேட் எடையை முழுமையாக தூக்கி உள்ளார். அதற்குப் பின்னர்தான் கின்னஸ் உலக சாதனையை முறியடிக்…
-
- 0 replies
- 190 views
-
-
வீட்டில்... கஞ்சா செடிகளை வளர்த்து, விற்க... தாய்லாந்து அனுமதி! தாய்லாந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்கிய பிறகு, தாய்லாந்தில் உள்ளவர்கள் இப்போது வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து அந்த பயிரை விற்கலாம். தென்கிழக்கு ஆசியாவில், கடுமையான போதைப்பொருள் சட்டங்களுக்கு பெயர் பெற்ற நாடு, அத்தகைய நடவடிக்கையை முதன்முதலில் முன்னெடுத்த நாடாக மாறியுள்ளது. எனினும், பொழுதுபோக்கு பயன்பாடு இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளது. உள்ளூர் கஞ்சா வர்த்தகத்தை வளர்ப்பது விவசாயம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று அரசாங்கம் நம்புகிறது. இது குடிமக்களுக்கு ஒரு மில்லியன் கஞ்சா நாற்றுகளை வழங்குவதை ஊக்குவிக்கிறது. ‘கஞ்சா மற்றும் கஞ்சா தொழிற்து…
-
- 2 replies
- 422 views
- 1 follower
-
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் தாக்குவதை படம் பிடித்த புகைப்படபிடிப்பாளர் சேன விதானகம காலமானார் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் தாக்குவதை படம் பிடித்த பிரபல புகைப்படபிடிப்பாளர் சேன விதானகம அவரது 80 ஆவது வயதில் காலமானார். கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையின் போது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் துப்பாக்கியால் தாக்குவதை சேன விதானகம படம்பிடித்திருந்தமை உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்போது சேன விதானகம டெய்லி நியூஸ் பத்திரிகையில் புகைப்பட ஊடகவியலாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 346 views
-
-
ஹஜ் யாத்திரை... குறித்து, முக்கிய தீர்மானம் ஹஜ் யாத்திரைக்கு இந்த ஆண்டு முஸ்லிம்களை அனுப்ப முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு ஹஜ்ஜில் பங்கேற்பதில்லை என முஸ்லிம்கள் முன்னதாகவே தீர்மானித்திருந்தனர். எவ்வாறாயினும் குறித்த நபர்கள் ஹஜ்ஜுக்கு தேவையான டொலர்களை தமது நண்பர்கள் மூலம் கொண்டு வந்தபின்னரே ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவர் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருட ஹஜ் யாத்திரையில் 1,585 இலங்கையர்களுக்கு பங்குபற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1285982
-
- 0 replies
- 175 views
-
-
குரங்குகளின் நடவடிக்கையால்... கிளிநொச்சியில், குளவி கொட்டுக்கு இலக்காகிய... 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) குளவி கொட்டுக்கு இலக்காகிய 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பகல் 1.30 மணியளவில் குரங்குகளின் நடவடிக்கையால் குளவி கூடு கலைந்துள்ளது. இதன் காரணமாக பாடசாலையை விட்டு வெளியேறுகின்ற நேரத்தில் பல மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளரின் வாகனத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்…
-
- 0 replies
- 140 views
-
-
மரணம் அல்லாத... கழுத்தை நெரிக்கும், குற்றவாளிகளுக்கு... ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை! மரணம் அல்லாத கழுத்தை நெரிக்கும் குற்றவாளிகள், குடும்ப துஷ்பிரயோகச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கின்றனர். ஒரு புதிய குற்றம் நடைமுறைக்கு வந்த பிறகு பயத்தை கட்டுப்படுத்த அல்லது தூண்டும் முயற்சியில் தங்கள் நண்பர்களை கழுத்தை நெரிக்கும் துஷ்பிரயோகம் செய்பவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கின்றனர். மரணம் அல்லாத கழுத்தை நெரித்தல் என்பது பொதுவாக யாரோ ஒருவர் கழுத்தை நெரிப்பது அல்லது வேண்டுமென்றே பாதிக்கப்பட்டவரின் மூச்சுத்திணறல் திறனைக் கட்டுப்படுத்த அல்லது பயமுறுத்துவதை உள்ளடக்குகிறது மேலும், இது அரசாங்கத்தின்…
-
- 0 replies
- 172 views
-
-
மிருசுவில் பெண் மீது... வாள் வெட்டு – 2 வருடங்களின் பின், ஒருவர் கைது! மிருசுவிலில் பெண் ஒருவரை வாளினால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் 2 ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட பணத்துக்காக அந்தப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரியைச் சேர்ந்த 26 வயதுடையவரே கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார் . 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மிருசுவில் வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர் மீது வாள்வெட…
-
- 0 replies
- 219 views
-
-
இலங்கையின் இரண்டு விமான நிலையங்கள் மூடப்படுகிறதா? June 1, 2022 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு விமான நிலையங்கள் மூடப்படும் நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, மத்தள மற்றும் ரத்மலான விமான நிலையங்களே மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விமான நிலையங்களுடான வருமானங்கள் குறைந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் செலவை குறைக்கு நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. https://globaltamilnews.net/2022/177243
-
- 22 replies
- 896 views
- 1 follower
-
-
மன்னாரில்... இரு குடும்பஸ்தர்களின், மரணத்திற்கான.... காரணம் வெளியானது! மன்னாரில் கடந்த திங்கட்கிழமை இரவு காரினுல் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளம் குடும்பஸ்தர்களும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 30 ஆம் திகதி இரவு மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி காரில் பயணித்த இரண்டு இளம் குடும்பஸ்தர்களின் பிரேதப் பரிசோதனை யாழ் வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது. இதன் போதே மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய மையினால் ஏற்பட்ட ஒவ்வாமை உயிரிழந்தமைக்கான காரணம் என தெரிய வந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 30 ஆம் திகதி இரவு மன்னாரிலிரு…
-
- 0 replies
- 128 views
-
-
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய... மாணவியை, துன்புறுத்திய சம்பவம் – முழுமையான விசாரணைக்கு உத்தரவு! க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவரை துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பரீட்சைகள் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அநுராதபுரம் ஹிடோகம பாடசாலை பரீட்சை நிலையத்தில் கடந்த 25ஆம் திகதி பரீட்சைக்குத் தோற்றிய மாணவியொருவர் பரீட்சை பார்வையாளரால் துன்புறுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக குறித்த மாணவி தனது தாயுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். இதன்படி கண்காணிப்பாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறிய…
-
- 0 replies
- 104 views
-
-
இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்.. இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விமான நிலையத்தின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிமர் செய்தி
-
- 24 replies
- 1.8k views
-
-
சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட கல்லடி மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு KalmunaiMay 28, 2022 (பாறுக் ஷிஹான்) சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது கடந்த வியாழக்கிழமை(26) வழமை போன்று மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி இலங்கை மின்சார சபை காரியாலயத்தில் கடமையாற்றும் 57 வயதான நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கடமை நிமிர்த்தம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றிற்கு சென்று மின்மானியை பரீட்சித்துள்ளார். பின்னர் அந்த வீட்டில் தாயுடன் நின்ற 9 வயது மதிக்கத்தக்க…
-
- 1 reply
- 262 views
-
-
யாழ். மதுபானசாலையில்... இரு குழுக்களுக்கு, இடையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு! (காணொளி) மதுபானசாலையில் எழுந்த வாய்த்தர்க்கம் போத்தல் குத்தில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை வெளி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் நேற்று (திங்கட்கிழமை) மது அருந்திய இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் முற்றி இரு குழுவினரும் கைக்கலப்பில் ஈடுபட்டனர். அதன்போது ஒருவர் மதுபான போத்தல் ஒன்றினை உடைத்து இளைஞன் ஒருவரை குத்தியுள்ளார். அதனைத்தொடர்ந்து அக்குழு அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் அங்கிருந்தவர்கள் போத்தல் குத்துக்கு இலக்கான இளைஞனை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்த…
-
- 13 replies
- 918 views
-
-
பெண்ணாக... சமூக ஊடகத்தில் உரையாடி, பணம் பறித்த ஆண் – வட்டுகோட்டையில் கைது! கைபேசியில் செயலியை உபயோகித்து பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டை கிழக்கைச் 26 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இன்று(புதன்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வந்த கைபேசி அழைப்பில் பெண் ஒருவர் உரையாடியுள்ளார். அதன்பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக உரையாடியுள்ளனர். பின்னர் அவர்கள் அந்தரங்கப் படங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். அதன்பின்னர் கைபேசியில் பேசிய பெண், அந்த நபரை மிரட்டி ஒன்றரை லட்சம் ரூபாய் பறித்துள்ளார். அதன்பின்…
-
- 0 replies
- 274 views
-
-
ஆசிரியர் அறைந்ததால்... செவிப்பறை பாதிப்பு – யாழ் வைத்தியசாலையில், மாணவன்! ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்படைந்து தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள பிரபல கல்லூரி ஆசிரியரே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு அறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவரது செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1283212
-
- 0 replies
- 229 views
-
-
கோப்பாயில், அதிகாலையில்... தொடரும் வழிப்பறி கொள்ளைகள்! கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை வேளைகளில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து செல்வதாகவும், அதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் அக்கறையின்றி காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோப்பாய் வீதியில் அதிகாலை 4 மணியளவில் முகம் முகத்தினை மறைத்தவாறு தொப்பி அணிந்துகொண்டு கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் நிற்கும் நான்கு பேர் கொண்ட கும்பல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வருகிறது…
-
- 0 replies
- 414 views
-
-
யாழில்.... தென்னை மரம் விழுந்ததில், முதியவர் உயிரிழப்பு! யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீசும் கடும் காற்றினால் வீட்டின் முன் நின்ற பட்ட தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் அதன் கீழ் சிக்கிக்கொண்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன் (வயது-80 ) என்ற 2 பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார். அவர் தனது வீட்டில் மதியம் சாப்பிட்டுவிட்டு அலைபேசி கதைத்துகொண்டு வீட்டு முற்றத்தில் கதிரையில் இருந்தபோது அவர் மீது பட்ட தென்னை மரம் காற்றுக்கு அடியோடு சரிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். https://athavannews.com/2022/12…
-
- 0 replies
- 208 views
-
-
யாழில் புறா வளர்ப்பில் போட்டி- பெற்றோல் ஊற்றி கூட்டோடு கொழுத்தப்பட்ட 50 புறாக்கள் யாழ். கொட்டடி பகுதியில் புறா வளர்ப்பில் ஏற்பட்ட போட்டியினால் சுமார் 50 புறாக்களுடன் இருந்த புறா கூட்டுக்கு விசமிகள் பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளன.யாழ் நகரில் பூட்டு திருத்தும் கடை ஒன்றினை நடத்திவரும் நபர் ஒருவருடைய வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த நிலையில் புறா கூட்டுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்த விசமிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.இதனையடுத்து அயலவர்கள் கூடி தீணை கட்டுப்படுத்தினர் எனினும் 40 வரையான புறாக்கள் தீயில் எரிந்து இறந்த சில் எரிந்த காயங்களுடன் சில புறாக்கள் தப்பியுள்ளன. https://www.thaarakam.com/news/…
-
- 5 replies
- 615 views
-
-
தென் இலங்கையில் இதுவரை கண்டிராத அபூர்வ விலங்கு! அச்சத்தில் மக்கள் மாத்தறை, மிதிகம பிரதேசத்தில் இனந்தெரியாத மிருகம் ஒன்று நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மிதிகமவில் பல கிராமங்களில் சுற்றித்திரிந்த விலங்கினால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் இளைஞர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் முதல் இந்த விலங்கை தேடி வந்தனர். அதற்கமைய, நேற்று மிதிகம ஜெயவிஜய கிராமத்தில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த மிருகம் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், மிருகம் ஆக்ரோஷமாக செயற்பட ஆரம்பித்தமையினால் கிராம மக்கள் அதனை கயிற்றினால் கட்டி வைத்துள்ளனர். நான்கு கால் மற்றும் நீண்ட வால் கொண்ட இந்த உயிரினத்தை இதுவரை பார்த்ததில்லை என கிராம மக்கள் …
-
- 8 replies
- 620 views
-
-
யாழ். பல்கலை மாணவிகள், தங்கியிருந்த வீட்டின் மீது... தாக்குதல்! யாழ்ப்பாணம் கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த தாக்குதக் சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 4 மோட்டார் சைக்களில் வந்த குழு வீட்டுக்குள் புகுந்து ஐன்னல்கள், கதவுகளை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை குறித்த வீட்டில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவிகள் வாடகைக்கு தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1282208
-
- 0 replies
- 155 views
-