செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
செல்லப் பிராணிகள் இறக்குமதிக்கு தடை விதித்தது உக்ரைன்! சீனாவிலிருந்து செல்லப்பிராணிகளை இறக்குமதி செய்வதற்கு உக்ரைன் அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஹொங் கொங்கில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பு ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘கொரோனா நோய்க்கிருமியை உக்ரைனுக்கு பரப்புவதால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க, உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான மாநில சேவை, சீன மக்கள் குடியரசில் இருந்து 33 ஆவது பிரிவின் கீழ் செல்லப்பிராணிகளை (நாய்கள், பூனைகள் போன்றவை) மற்றும் மாமிசங்களை இறக்குமதி செய்வதை உக்…
-
- 0 replies
- 243 views
-
-
சில நாட்களிற்கு முன்னர் நேப்பிளசில் பிரான்ஸ் இத்தாலி உச்சி மாநாடு இடம்பெற்றவேளை பிரான்ஸ் ஜனாதிபதி இத்தாலிய பிரதமரை இரண்டு தடவைகள் முத்தமிட்டார். அது வெறுமனே நட்புறவை வெளிப்படுத்தும் முத்தம் மாத்திரமல்ல. கொரோன வைரஸ் அச்சம் உலகை ஆட்கொண்டுள்ள சூழலில்உங்கள் அயலவர்களை பார்த்து அஞ்சவேண்டாம் என மக்களிற்கு தெரிவிக்கும் செய்தியாகவும் அந்த முத்தம் காணப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக, நட்பை வெளிப்படுத்துவதற்கு முத்தமிடுவதும் தர்மசங்கடமானதாக மாறியுள்ளது. குறிப்பாக தென்ஐரோப்பாவில் இந்த நிலை காணப்படுகின்றது. இத்தாலிய அரசாங்கத்தின் கொரோன வைரசிற்கான விசேட ஆணையாளர் இத்தாலியர்கள் தங்கள் நெருக்கத்தை அதிகமாக வெளிப்படுத்துவதற்கு கையாளும் வழிமுறைகள் கொரோனா வைரஸ் பரவுவதற்…
-
- 4 replies
- 467 views
-
-
அமெரிக்காவில் பள்ளிச்சிறுவன் ஒருவன் தனது ஆசிரியருக்கு விடைத்தாளில் விடுத்த வினோத கோரிக்கை, இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. கெண்டக்கி மாநில பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மாணவனின் விடைத்தாளை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டிருந்தார். அதில் 94 மதிப்பெண்கள் எடுத்திருந்த அந்த மாணவன், தனக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் ஐந்தினை, அது மிகவும் தேவைப்படும் வேறு மாணவனுக்கு வழங்க முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தான். இதனை பார்த்து வியப்படைந்த ஆசிரியர் சிறுவனின் பெருந்தன்மையை எண்ணி அவனது விடைத்தாளை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட, அது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் சிறுவனை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். https://www.poli…
-
- 0 replies
- 363 views
-
-
நமது காலண்டரில் ஒவ்வொரு ஆண்டின் 12 மாதங்களில் 30,31 நாட்கள் உள்ளன. ஆனால் இரண்டாம் மாதமாக வரும் பிப்ரவரியில் 28 நாட்களும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் மாதமாக 29 நாட்களும் வருகிறது. அதற்கான வரலாற்றை பார்ப்போம். ஒரு வருடத்திற்கு 365 நாட்கள், 12 மாதங்கள், 52 வாரங்கள் (ஒன்றரை நாள்களும் ) லீப் வருடத்திற்கு 366 நாட்கள் 12 மாதங்கள் 52 வாரங்கள் ( இரண்டு நாட்களும் ) உள்ளன. பழங்கால கிரிகோரிய நாட்காட்டி படி லீப் ஆண்டு என்பது நான்கில் பெருக்கங்களாக வருவபை. 2016,2020, 2024 போன்றவை லீப் ஆண்டாக இருந்து வருகின்றன. இதற்கு கிரிகோரிய ஆண்டின் நெட்டாண்டு என பெயரிட்டுள்ளனர். ஆனால் நான்கின் பெருக்கங்களாக “00”என முடியும் ஆண்டு லீப் ஆண்டாக இருப்பதில்லை. உதாரணத்திற்க்கு “00” என…
-
- 1 reply
- 569 views
-
-
காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் - போலீசிடம் சிக்கியது எப்படி? காதலியை சந்திப்பதற்கு பிறர் கவனத்தை திசை திருப்பும் வகையில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார் இளைஞரொருவர். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சாலையில் ஒரு குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் திடீரென தீ பிடித்துள்ளது. வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அருகிலிருந்த பெட்ரோல் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது இளைஞர் ஒருவர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி செல்வது பதிவாகியிருந்தது. …
-
- 0 replies
- 343 views
-
-
இங்கிலாந்து நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரகசிய கதவு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை குறித்து ஆராய்ச்சியாளர்களை ஆய்வு செய்தபோது, சுமார் மூன்றரை மீட்டர் உயரமுள்ள இரண்டு ரகசிய கதவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மரத்திலால் ஆன கதவை திறந்து பார்த்த போது மன்னரும் ராணியும் அமரும் மேல் அவைக்கு செல்லும் ரகசிய பாதையும் பென்சிலால் எழுதப்பட்ட சிறுசிறு குறிப்புகளும் அங்கு இருப்பது தெரிய வந்தது. இந்த பாதையானது 1661-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை சீரமைப்புக்கு பின்னர், இந்த பாதை சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 287 views
-
-
கொவிட் 19 என்ற கொடிய கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பரவியுள்ள நிலையில் அதனை எதிர்த்துப் போராடும் நோக்கில் உலகம் முழுவதும் முகக்கவசங்கள் மற்றும் சுவாசக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், ஆண்கள் முகத்தில் தாடி வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. எந்த வடிவத்தில் தாடியை வளர்த்தால் முகத்தில் முகக்கவசங்கள் அணிய ஏதுவாக இருக்கும் என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் வெளியிட்டுள்ள படம் ஒன்றை குறிப்பிட்டு இந்த செய்தி பரவி வருகிறது. ஆனால் இந்த படத்திற்கும் கொரோனா தொற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 2017 ஆம் ஆண்டு பணியிடங்களுக்க…
-
- 0 replies
- 573 views
-
-
உலகின் மிக வயதான மனிதர் பொப் வீற்ரனின் வயது 111 பிரித்தானியாவில் நீண்ட ஆயுளைக் கொண்ட மனிதராகக் கருதப்படும் பொப் வீற்ரனின் (Bob Weighton) வயது 111 ஆகும். பொப் வீற்ரன் கடந்த ஆண்டு தனது 111 வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். ஜப்பானில் நீண்ட ஆயுளைக் கொண்ட மனிதரின் மரணத்தைத் தொடர்ந்து பிரித்தானியாவில் நீண்ட ஆயுளைக் கொண்ட நபரான பொப் வீற்ரனே இப்போது உலகின் மிக வயதான மனிதராகக் கருதப்படுகின்றார். ஸ்கொட்லாந்தின் பேர்த்ஷையரிலுள்ள (Perthshire) செயின்ற் மடோஸைச் (St Madoes) சேர்ந்த அல்பிரட் ஸ்மித்தின் (Alfred Smith) மரணத்தின் பின்னர் பொப் வீற்ரன் பிரித்தானியாவின் மிக வயதான மனிதரானார். 1908 மார்ச் 29 இல் பிறந்த பொப் வீற்ரன் கடந்த ஆண்டு கோடையில் இருந்து பிரித்தா…
-
- 0 replies
- 379 views
-
-
கேலி கிண்டலுக்குள்ளான சிறுவனுக்கு மைதானத்திற்குள் கம்பீர வரவேற்பு – நெகிழ்ச்சியான சம்பவம்! அவுஸ்ரேலியாவில் பாடசாலை ஒன்றில் மாணவர்களால் கேலி கிண்டலுக்குள்ளான சிறுவனை ஆல்-ஸ்டார் ரக்பி அணியினர் மைதானத்திற்கு அழைத்து வந்து அணியை வழிநடத்தும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வளர்ச்சியின்மை காரணமாக குறித்த சிறுவன் பாடசாலையில் எதிர்கொண்ட துன்பங்களை தனது தாயிடம் தெரிவித்து, தான் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் எனவும் தெரிவித்து அண்மையில் மனதை உருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது இதனை அடுத்து உலக நாடுகளில் அச் சிறுவனுக்கு ஆதரவாக குரல் எழுப்பட்டு வருகிறது குறிப்பாக சிறுவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் பிரபலங்கள் உள்பட வ…
-
- 3 replies
- 696 views
-
-
திரைப்படங்களில் வில்லன்கள் ஐபோன் உபயோகிக்கக் கூடாது என்ற ஆப்பிள் நிறுவனத்தின் ரகசிய விதிமுறையை நைப்ஸ் அவுட் ஆங்கில திரைப்பட இயக்குநர் கசிய விட்டுள்ளார். நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் ரியான் ஜான்சன், திரைப்படங்களில் ஐபோன் பயன்படுத்துவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் செய்துள்ள ஒப்பந்தங்கள் குறித்த சில சுவாரஸ்மான தகவல்களை வெளியிட்டார். மர்ம திரைப்படங்கள் எடுக்கும்போது மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஏனெனில் எதிர்மறை கதாபாத்திரங்கள் ஐபோன் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் ஜான்சன் குறிப்பிட்டார். மேலும், செல்போனை மையப்படுத்தி தற்போது மர்ம படம் எடுக்கும் இயக்குநர்கள் அனைவரும் இந்த தகவலால் தன்னை கடிந்துக்கொள்வார்கள் என நக…
-
- 0 replies
- 410 views
-
-
தலைமறைவாக இருந்த குற்றவாளி 28 ஆண்டுகளின் பின்னர் கைது கென்ற், மெய்ட்ஸ்ரன் சிறையில் இருந்து 1992 ஆம் ஆண்டு தப்பி ஓடிய குற்றவாளி மீண்டும் கைதாகியுள்ளார். சார்ள்ஸ் லின்ச் (Charles Lynch) என்ற நபர், தனது மோட்டர் படகில் ஆங்கிலக் கால்வாயினூடாக சட்டவிரோதக் குடியேறியவர்களை ஏற்றிவந்த நிலையில் எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போர்ட்ஸ்மவுத் கிரவுன் நீதிமன்றுக்குக் கொண்டுவரப்பட்ட சார்ள்ஸ் லின்சுக்கு 44 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நொவெம்பர் 6 ஆம் திகதி இரண்டு எல்லை படைக் கப்பல்களும் கடலோரக் காவல்படையின் ஹெலிகொப்ரரும் இணைத்து விரட்டிப்பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டன. இறுதியில் ஆங்கிலக் கால்வாயின் சில மைல்…
-
- 0 replies
- 303 views
-
-
கடந்த வெள்ளிக்கிழமை 21.02.2020 இரவு யேர்மனி Bielefeld நகரத்தில் திருட வந்த ஒருவர் கொஞ்சம் அவதானம் இல்லாமல் நடந்திருக்கிறார் . Bielefeld நகரில் Ummelner வீதியில் இருந்த அலுவலகக் கட்டிடத்தில் திருட வந்த இளைஞன் தனது சைக்கிளை அலுவலகத்துக்கு முன்னால் நிறுத்தி, அதன்மேல் தனது ஜக்கெற்றைக் கழட்டிப் போட்டு விட்டு அலுவலகத்தின் வாசல் கதவின் கண்ணாடியை உடைத்து உள் நுளைந்திருக்கிறான். வாசற்கதவின் கண்ணாடி உடைந்திருப்பதையும் சைக்கிள் ஒன்று அங்கே நிற்பதையும் அவதானித்த ஒரு பாதுகாவலர் உடனடியாக பொலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ஆனால் பொலீஸார் வருவதற்கு முன்னால் திருட வந்தவன் தப்பி ஓடி விட்டான். ஆனால் திருடுவதற்காக அங்கே இருந்து எடுத்த பொருட்களை அவன் ஒரு இடத்தில் ஒன்…
-
- 3 replies
- 979 views
-
-
பூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் முதல் உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து பலசெல் உயிரினங்களிலும் காற்றுசுவாசம் நடைபெறுவதாக நம்பப்படும் நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் ஒட்டுயிரியை கண்டுபிடித்துள்ளனர். சால்மோன் மீனின் தசைசெல்களில் உயிர்வாழும் ஜெல்லிமீன் போன்ற அந்த ஒட்டுயிரிக்கு, ஹெனிகுவா சால்மினிகோலா எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதில் செல்களின் ஆற்றல் நிலையமான மைட்டோகாண்ட்ரியா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைட்டோகாண்ட்ரியா பலசெல் உயிரிகளில் ஆக்சிஜனை வேதி ஆற்றலாக மாற்றும் தலையாய பணியை செய்வதால், காற்றுசுவாசத்திற்கு முக்கியமானதாகும். இந்நிலையில் அவ்வமைப்பில்லாத உய…
-
- 3 replies
- 537 views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த 62 வயதான ஜோர்ஜ் ஹூட்என்பவர் 8 மணித்தியாலங்கள் பிளேன்ங் நிலையில் (plank position) நின்று கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். 62 வயதான ஜோர்ஜ் ஹூட் விசித்திரமான சாதனை ஒன்றைப் படைக்க முற்பட்டுள்துடன் அவர் பிளேன்ங் நிலையில் நின்றபடி குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். பிளேன்ங் நிலை என்பது நுனி காலையும் முழங்கையையும் தரையில் ஊன்றியவாறு தரையிலிருந்து உயர்ந்து தரைக்கு சமாந்தரமாக நிற்பதாகும். இந்த நிலையயில் 8 மணித்தியாலம், 15 நிமிடங்கள், 15 நொடிகள் நின்றவாறு ஜோர்ஜ் ஹூட் குறித்த சாதனையைப் படைத்த ஆண் சாதனையாளராக தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் இவரது சாதனைக்கு முன் கனடாவைச் சேர்ந்த டானா க்ளோவாக்கா என்ற பெண் இந்த சாதனையை நிகழ்த்தியருந்தார்.…
-
- 5 replies
- 576 views
- 1 follower
-
-
9 வயது மகனுக்கு மின்னளுத்தியால் சூடு வைத்த தாய் – காத்தான்குடியில் பதறவைக்கும் சம்பவம்! காத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஊர் வீதியில் வசித்து வரும் சிறுவனொருவன் சிறுவனின் தாய் சூடு வைத்த காயங்களுடன் காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை சென்ற அப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அப்பாடசாலையின் அதிபரை சந்தித்து இங்கு தரம் 4ல் கல்வி கற்கும் 9 வதுடைய குறித்த சிறுவன் ஒருவனுக்கு அச்சிறுவனின் தாய் மின்னளுத்தியால் சூடு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து குறித்த பாடசாலை அதிபரும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும் மாணவனின் வீட்டுக்கு சென்று சிறுவனை பார்க்க முற்பட்டபோது முதலில் மறுத்த தாய் பின்னர் மகனை …
-
- 1 reply
- 2.5k views
-
-
கண்கள் இல்லாத, பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் வினோத உயிரினம் என்று மெக்ஸிக்கோ கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. மெக்ஸிக்கோ - புவேர்ட்டோ வல்லார்டா கடற்கரையில் டொல்பின் போன்ற தலை அமைப்புடைய குறித்த உயிரினத்துக்கு கண்கள் இல்லாமல், கொடிய பற்களுடன் வினோதமான உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதைக்கண்ட மக்கள் இதுபோன்ற ஒரு உயிரினத்தை கண்டதில்லை எனவும் அத்தோடு குறித்த உயிரினம் உயிரிழந்து கிடந்தது என நினைத்துள்ளார்கள். அதன் பின்னர் வினோத உயிரினம் குறித்து கடல் மற்றும் வன உயிரின அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அந்த உயிரினம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய ஆராய்ச்சியாளர்கள், பசுபிக் கடலின் சூரிய ஒளி புகமுடியாத மிக ஆழ…
-
- 0 replies
- 782 views
-
-
-
பொறியியலாளர் மணமகனை எதிர்பார்த்த ஆசிரியை ஒருவர் ஒன்பது இலட்ச ரூபா பணத்தைக் கொடுத்துஏமாந்த சம்பவமொன்று வெலிமடை, அம்பகஸ்தோவை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.வெலிமடை அரச பாடசாலை ஆசிரியை ஒருவரே பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டமை குறித்து, அம்பகஸ் தோவை பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை முறையிட் டுள்ளார்.40 வயதான அந்த ஆசிரியை, ஒரு பொறியியலாளரைத் திருமணம் செய்வதே தனது இலக்கு என்று கூறி, தனது பெற்றோர் பார்த்த அனைத்து மாப்பிள்ளைகளையும் நிராகரித்து வந்துள்ளார்.இதையடுத்து, பொறியியலாளர் மணமகனுக்கு, ஆசி ரியையான மணமகள் தேவை என்ற பத்திரிகை விளம்பரத்திற்கமைய தனது விண்ணப்பத்தை அனுப்பியுள்ளார்.அதைத் தொடர்ந்து கடிதங்கள் பரிமாறப்பட்டதுடன், கையடக்கத் தொலைபேசி மூலமும் இருவரும் தொடர் புகளை ஏற்படுத்தி வந்…
-
- 0 replies
- 415 views
-
-
அமெரிக்காவின் புளோரிடா காடுகளில் கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக அரியவகை வானவில் பாம்பு கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், ஓர்லாண்டோவிற்கு((Orlando)) வடக்கே 47 மைல் தொலைவில் உள்ள ஓக்காலா வனப்பகுதியில் டிரேசி கவுதென் என்பவர் நடைபயணம் மேற்கொண்டபோது வண்ணமயமான 4 அடி நீள வானவில் பாம்பை கண்டதாக குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலும் நீர்வாழ் தாவரங்களில் மறைந்து வாழும் இந்த வானவில் பாம்புகள், தீங்கு விளைவிக்காதவை என்றும் எப்போதாவது அரிதாக நிலப்பரப்பிற்கு வருவதாகவும் உயிரியலாளர்கள் தெரிவிக்கின்றனர். https://www.polimernews.com/dnews/101442/50-ஆண்டுகளில்-முதன்முறையாககாட்டில்-கண்டறியப்பட்டவானவில்-பாம்பு
-
- 0 replies
- 784 views
-
-
நான் இறந்துவிட்டேன்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும்- நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு காணொளி தனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என சாமியார் நித்யானந்தா புதிய காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். உலகின் ஏதோ ஒரு இடத்தில் தலைமறைவாக இருந்துகொண்டு நித்தம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இருந்துவருகிறார் சாமியார் நித்யானந்தா. அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “20 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு கைலாசத்தைக் கட்டியமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள. வாடிகனைப் போல இந்து மதத்துக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அதுகுறித்து வேறு எந்தத் தகவலையும் தரப்போவது இல்லை. …
-
- 0 replies
- 1.2k views
-
-
99 ஸ்மார்ட் போன்களில் ஒரே நேரத்தில் கூகுள் மேப் செயலியை ஓப்பன் செய்த ஜெர்மானியர் ஒருவர், எல்லா போன்களையும் ஒரு தள்ளு வண்டியில் ஒன்றாக போட்டு பெர்லின் நகர வீதிகளில் அதை இழுத்துச் செல்ல ஒருவரை ஏற்பாடு செய்தார். இந்த கண்கட்டு வித்தையின் காரணமாக ஒரே நேரத்தில் 99 வாகனங்கள் வீதியில் செல்வதாக நினைத்து, நிஜத்தில் காலியாக கிடந்த பெர்லின் வீதிகள் அனைத்திலும் டிராபிக் நெரிசலைக் குறிக்கும் சிவப்பு வரிகள் கூகுள் மேப்பில் தோன்றின. பச்சை நிறத்தில் காணப்பட்ட பெர்லின் சாலைகள் எல்லாம் சிவப்பாக மாறியதால் கூகுள் மேப் உபயோகிப்பாளர்கள் திகைத்தனர். சைமன் வெக்கெர்ட் (Simon Weckert) என்ற இந்த ஜெர்மன் ஓவியர் எதற்காக கூகுள் மேப்பை ஏமாற்றி இந்த விளையாட்டை நடத்தினார் என்பது தெரியவ…
-
- 3 replies
- 1k views
-
-
பல காலநிலைகளை கடந்து வந்துள்ள மனித இனம், கடுமையான இயற்கை சூழல்களை சமாளித்து இன்று வரை இந்த புவியில் வாழ்ந்து வருவதற்கான முக்கிய காரணமாக கூறப்படுவது பாக்டீரியாக்கள் தான். ஆம் நம் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களே (குடல் பாக்டீரியா), மனித இனம் காலம் காலமாக இந்த பூமியில் நிலைத்து நிற்க காரணமாக உள்ளதாம். மனித இனத்தின் மூதாதையர்கள் புதுப்புது சூழல்களை எதிர்கொண்ட போது, அவர்கள் வசித்த இடங்களுக்கு அருகே கிடைத்த உணவுகளை சாப்பிடவும், புது வகை உணவுகளின் மூலம் சூழலுக்கு ஏற்றவாறு வாழ்வதற்கு ஏற்பவும் சில பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் சென்றிருக்கின்றன. குடலில் அதிகம்: இந்த பாக்டீரியாக்கள் தான் நம் மூதாதயர்களை சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு வாழ வைத்திருக்கிறது என்று ஆய்…
-
- 0 replies
- 636 views
-
-
சைபிரியா பிரதேசத்தில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பறவையின் உடல், 46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹார்ன்ட் லார்க் ((horned lark)) பறவையினுடையது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சைபிரியாவின் வடகிழக்கிலுள்ள பெலாய கோராவில் அந்த பறவையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சுவீடன் ஆய்வாளர்கள் நிகோலஸ் டஸக்ஸ், லவ் டேலன் ஆகியோர் ஆய்வு செய்தபோது, இந்த விவரம் தெரியவந்தது.. இதேபோல் அங்கு கண்டெடுக்கப்பட்ட ஓநாய்கள், மம்மோத் எனப்படும் ராட்சத யானை, கம்பளி காண்டாமிருகங்களின் உடல் பாகங்களையும் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். https://www.polimernews.com/dnews/101333/46,000-ஆண்டுகளுக்கு-முன்புவாழ்ந்த-ஹார்ன்ட்-லார்க்பறவையின்-உடல்
-
- 0 replies
- 280 views
-
-
அமெரிக்க மாகாணமான யூட்டாவின் மாநில செனட் சபை, ஒரே ஆண் பல பெண்களுடனோ, ஒரே பெண் பல ஆண்களுடனோ, ஒரே சமயத்தில் திருமண உறவில் இருப்பதை பெரிய குற்றமில்லை என்று அறிவிக்கும் சட்டத்துக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய சட்டத்தின்படி, பலருடன் திருமண உறவு கொண்டுள்ளவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். புதிய சட்ட வரைவின்படி, இரண்டு நபர்களுடன் ஒரே சமயத்தில் திருமண உறவில் இருந்தால் அது போக்குவரத்து விதிமீறல் போன்ற சிறு குற்றமாகவே கருதப்படும். எனினும், இந்த உறவில் தொடர்புடைய அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இது குற்றமாக கருதப்படாது. தமது கணவர் அல்லது மனைவிக்கு தெரியாமல், வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்வது தொடர்…
-
- 3 replies
- 522 views
-
-
ஸ்வீடனைச் சேர்ந்த தொழிலதிபர் கிம். இவர், சில மாதங்களுக்கு முன், இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்தார். அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தவர், கோவையில் உள்ள ஈஷா யோக மையம் குறித்துக் கேள்விப்பட்டு, சில நாட்களுக்கு முன் அங்கு சென்றார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்தவர், பிறகு அங்கிருந்தும் வெளியேறினார். இந்நிலையில், கோவை ரயில்வே ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம், காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையம் என, கோவையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குச் சென்று, பிச்சையெடுத்து வருகிறார். பிச்சையிடுவோருக்கு இருகரம் கூப்பி, நன்றியும் வணக்கமும் தெரிவித்து வருகிறார்.இவரிடம் கல்லூரி மாணவர்களும், சமூக ஆர்வலர்களும், போலீசாரும், 'உங்களுக்கு ஏன் இந்த நிலை' எனக் கேட்டு வருகின்றனர். அவர்க…
-
- 0 replies
- 491 views
-