Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தேள்களை கடத்த முயற்சித்த சீன நாட்டவர் கைது! உயிருடனான 200 தேள் பூச்சிகளுடன் சீன நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையிலிருந்து அவர் சீனாவுக்கு அவற்றை கொண்டு செல்ல முயற்சித்துள்ள நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரின் பயணப் பொதியை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் 200 தேள் பூச்சிகளை மீட்டுள்ளனர். -(3) http://www.samakalam.com/செய்திகள்/தேள்களை-கடத்த-முயற்சித்த/

  2. “ஒரு மோசமான படத்தை அவர் பார்த்திருக்க வேண்டும்” யேர்மனியப் பொலீஸ் சொல்கிறது யேர்மனியில் Bochum என்ற நகரில் உள்ள சினிமா அரங்கிற்கு 30 வயது இளைஞன் ஒருவர் தென்னிந்தியத் திரைப் (படமான தர்பார்)படம் பார்க்க புதன் கிழமை சென்றிருக்கிறார். படத்தில் அவருக்கு ஈடுபாடு இல்லாமல் போக அவர் அப்படியே இருக்கையிலேயே உறங்கிப் போனார். பின்னர் இருக்கையில இருந்து சற்று வழுக்கி இருக்கைக்குள் அப்படியே ஆழ்ந்த நித்திரையாகிப் போனார். திரைப்படம் முடிந்து பார்வையாளர்கள் வெளியேற இவர் மட்டும் பூட்டப் பட்ட திரையரங்கில் தனியாக நித்திரையில் இருந்திருக்கிறார். அதிகாலை ஐந்து மணிக்கு விழித்துக் கொண்ட இளைஞர் நிலமையை உணர்ந்து பொலீஸுக்குத் தகவல் தர, அவர்கள் நடவடிக்கை எடுத்து அந்த இளைஞனை மீட்டு வீட்…

  3. யேர்மனியில் போதைப் பொருள் பாவனை இளைஞர்களிடம் அதிகரித்திருப்பதாக பேர்லின் நகரத்தின் சமூக நல ஆலோசகர் Gordon Lemm சமீபத்தில் எச்சரித்திருக்கிறார். கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையில் பாடசாலை மாணவிகளே அதிகமாக போதைப் பொருள் பாவனையாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதிலும் 11 முதல் 14 வரையிலான சிறுமிகள் இதற்குள் அடங்கி இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி. பார்த்தாலே மனதைக் கவரும் வண்ணம் வண்ணமயமாக இருக்கும் Ecstasy போதை மாத்திரைகள் 1,50யூரோக்களுக்கு இப்பொழுது யேர்மனியில் இலகுவாக கிடைக்கிறது. இதனால் தங்கள் கைச் செலவுக்கு பெற்றோர்கள் தரும் சிறிய பணத்துக்குள்ளேயே பாடசாலை மாணவ, மாணவிகளால் இந்த மாத்திரைகளை வாங்கிக் கொள்ள முடிகிறது. விருந்…

  4. யேர்மனியில் Ludwigshafen என்ற இடத்தில் நான்கு வயதுச் சிறுமி ஒருத்தி புதன்கிழமை (08.01.2020) ஊடகங்களில் கதாநாயகி ஆகியிருக்கிறாள். தனது தாய் திடீரென மயங்கி விழ, உடனடியாக 112 என்ற அவசரகால அழைப்பில் தொடர்பு கொண்டு தனது தாய்ககு உடனடியாக உதவி தேவை என்று அறிவித்திருக்கிறாள். நிலமையை உணர்ந்த காவல்துறை உடனடியாக அம்புலன்ஸை அவளது வீட்டுக்கு அனுப்பி வைத்தது. சிறுமியின் தாய் சிறிது நேரத்தில் மயக்கம் தெளிய மேலதிக சிகிச்சைக்காக அவளது தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். தாயை அழைத்துச் சென்ற வாகனம் “ Tatü-Tata” என்ற ஒலியுடன் வைத்தியசாலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தில் ஓட்டுனருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த நான்கு வயதுச் சிறுமிக்கு அது ஒரு பு…

  5. 2019 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட மிக விலையுயர்ந்த ஒயின் என்ற பெருமையை எசென்சியா 2008 தனதாக்கியுள்ளது. ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் கார்கஸ் என்பவரின் தனித்துவ படைப்பான இந்த ஒயின் பாட்டில் ஒன்றின் விலை இந்திய மதிப்பில் 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். சிறந்த அஸ்ஸா திராட்சைகளை சேகரித்து அவற்றை பாதாள அறையில் 10 ஆண்டுகளாக நொதிக்க வைத்து தயாரிக்கப்பட்ட இந்த எசென்சியா ஒயினில் 4 சதவீதம் ஆல்கஹால் உள்ளதாக ராயல் டோகாஜி ஒயின் ஆலையின் பொது மேலாளர் சோல்டன் கோவாக்ஸ் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு சந்தைக்கு வந்த 1.5 லிட்டர் எசென்சியா ஒயின் பாட்டில்கள் 18ல் 11 விற்பனையாகிவிட்டதாகவும் மீதமுள்ள ஏழு பாட்டில்களை 2300ஆம் ஆண்டு காலாவதியாவதற்குள் விற்றுவிடுவோம் என்றும் அவ…

    • 0 replies
    • 507 views
  6. இங்கிலாந்து நாட்டில் 44 வயதான பெண் ஒருவர் கடந்த 15 ஆண்டுகளாக டால்கம் பவுடரை சாப்பிட்டு வருகிறார். இவருக்கு இந்த வினோத பழக்கம் இரும்பு சத்து குறைபாடு மற்றும் வேறு சில நோய் அறிகுறியால் ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர்கள் நினைக்கின்றனர். லிசா ஆண்டர்சன் என்ற பெண்மணி இங்கிலாந்து நாட்டின் டெவோனைச் சேர்ந்தவர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக Talcum Powder-ஐ டப்பா டப்பாவாக தின்று தீர்த்து வருகிறார். முகத்திற்கு பூசும் பவுடரை தின்பதற்கு அடிமையான லிசா ஆண்டர்சன், அதற்காக இதுவரை எவ்வளவு பணத்தை செலவழித்துள்ளார் தெரியுமா? மயங்கி விடாதீர்கள். 15 வருடங்களாக சுமார் 8,000 பவுண்டு தொகையை டால்கம் பவுடர் சாப்பிடுவதற்காகவே செலவிட்டுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7.50 லட்சம் ரூபாய். …

    • 0 replies
    • 536 views
  7. ரஷியா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மதுபாட்டில்களை கீழே தள்ளி உடைத்து தரையில் சிந்திய மதுவை பன்றிகள் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சைபீரியா பிராந்தியத்தின் டியூமன்((Tyumen)) நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குள் நுழைந்த தாய் பன்றி ஒன்றும் அதன் குட்டிகளும், அங்கிருந்த அலமாரிகளை ஒவ்வொன்றாக மோப்பம் பிடித்துக்கொண்டே உள்ளே சென்றது. பின்னர் மதுபாட்டில்கள் இருந்த இடத்தை கண்ட பின் அதிலிருந்த இரண்டு மது பாட்டில்களை தாய் பன்றி தனது மூக்கால் கீழே தள்ளிவிட்டு உடைத்தது. பின்னர் தரையில் சிந்திய மதுவை 3 பன்றிகளும் சேர்ந்து குடிக்க தொடங்கின. இந்த காட்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இதையடுத்து பன்றிகளை வெளியேற்றிய ஊழியர்கள், அதன் உரிமையாள…

    • 0 replies
    • 282 views
  8. வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை பின்லாந்து நாட்டின் இளம்பிரதமர் சன்னா மாரின் முன்வைத்துள்ளார். வேலை நாட்களை குறைப்பது மட்டுமின்றி, வேலை நேரத்தையும் 8 மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் எனக் கூறும் அவர், இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாற்றம் கலை, கலாச்சாரம் மற்றும் விருப்பமான பொழுதுபோக்குகளில் ஊழியர்கள் நேரம் செலவிட வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார். வேலை நேரத்தைக் குறைத்து சம்பளத்தைக் குறைக்காமல் வழங்கினால் நிறுவனங்களுக்கு சுமை கூடும் என ஒருப்பக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும், போதிய விடுமுறை கிடைக்கும் மகிழ்ச்சியில் சிறப்பாக செயல…

  9. பிரித்தானியாவின் கொடிய வல்லுறவுக் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை 136 வல்லுறவுகள் உட்பட 159 பாலியல் குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தோனேசியாவைச் சேர்ந்த ரெய்னார்ட் சீனகா என்பவர் இங்கிலாந்தின் மிக மோசமான வல்லுறவுக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 36 வயதான சீனாகா 48 ஆண்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாமென பொலிஸார் நம்புகின்றனர். மன்செஸ்ரரில் உள்ள இரவு நேர விடுதிகளிலிருந்து ஆண்களை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற சீனாகா அவர்களுக்கு போதைப்பொருள் வழங்கி அதன் பின்னர் அவர்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதல்களை பதிவு செய்த…

  10. கேகாலை, புளத்கொஹுபிட்டியவின் ஊடாகப் பல கிராமங்களுக்குப் பயணிக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள பாலமொன்று, இரண்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களால், இரு முறை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களாலேயே, இந்தப் பாலம் இரண்டு முறை திறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் யடியந்ததோட்டை தொகுதி அமைப்பாளரும் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஸ்ரீ லால் விக்கிரமசிங்க, பொதுஜன பெரமுனவின் பிரதேச சபையின் உறுப்பினர் அளவததுரே ரதன வங்ஷ தேரர் உள்ளிட்டோர் இவ்வீதியை வெள்ளிக்கிழமை (03) திறந்து வைத்துள்ளனர். இதனையடுத்து நேற்று (04), முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹாசீம், ஐ.தே.கட்சிய…

    • 2 replies
    • 483 views
  11. ரஷ்யாவில் பனி வெடிப்பில் சிக்கி 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீருக்குள் மூழ்கின. விளாடிவோஸ்டாக் அருகில் உள்ள ரஸ்கி தீவில் உறை பனிக்காலம் முடிவடைந்த நிலையில் அங்கு ஏராளமானோர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது உருகிய பனியில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. பல நூறு மீட்டர் நீளத்திற்கு ஏற்பட்ட பனி வெடிப்பினால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீருக்குள் முழுமையாக மூழ்கின. சில வாகனங்கள் நீருக்கு அடியில் இருந்த உறைபனியில் சிக்கிக் கொண்டன. இதனையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஏனைய வாகனங்களில் கயிறு கட்டி நீருக்குள் மூழ்கிய வாகனங்களை மீட்டெடுத்தனர். https://www.polimernews.com/dnews/95606/ரஷ்யாவில்-பனிவெடிப்பில்சிக்கி-ஏராளமான…

    • 0 replies
    • 277 views
  12. ஆசிய நாடான ஜப்பானில், புத்தாண்டு தினத்தன்று நடந்த மீன் ஏலத்தில், 276 கிலோ எடையுள்ள, டுனா வகை மீனை, 13 கோடி ரூபாய்க்கு, ஓட்டல் நடத்தி வரும், 'டுனா கிங்' என்றழைக்கப்படும், கியோஷி கிமுரா ஏலம் எடுத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் டுனா மீன் ஏலத்தில், அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்து பிரபலமானவர் இவர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2451177

    • 0 replies
    • 376 views
  13. ஒஸ்ரியா - இத்தாலி எல்லையில் அமைந்துள்ள Luttach என்ற இடத்தில் இருபதிலிருந்து இருபத்தியொரு வயது வரை மதிக்கத்தக்க யேர்மனிய சுற்றுலாப் பயணிகள் 6பேர் இறந்தும் 11 பேர்காயப்பட்டும் ஒரு துயரச் சம்பவம் இன்று நடந்திருக்கிறது. கடந்த வார இறுதியில்தான் ஒஸ்ரியாவின் தெற்கு Tyrol என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு விபத்தில் மூன்று யேர்மனியர்கள் இறந்து போனார்கள். இப்பொழுது இது இரண்டாவது சம்பவம். குளிர் காலத்தில் பனிச்சறுக்கலுக்காகச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இவை அதிர்ச்சிச் செய்திகள். இன்றைய சம்பவத்தில் இறந்த யேர்மனியர்கள் பற்றிய விபரங்கள் இன்னமும் அறியப்படவில்லை. சம்பவம் பற்றிய தகவல் இப்படி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 1 மணியளவில் பனிச் சறுக்கலுக்காக யேர்மன…

  14. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஜான்சன், தான் வளர்த்து வந்த ராட்வீலர் இனத்தைச் சேர்ந்த கிரிப்பின்ஸ் என்ற நாய்க்கு 2017 டிசம்பரில் ஒரு கட்டி இருப்பதைக் கவனித்தார். மருந்து, மாத்திரையால் சரியாகக்கூடிய சாதாரண கட்டிதான் அது என்று நினைத்தார். ஆனால் மருத்துவர்கள், அது சாதாரண கட்டி அல்ல, டிசெல் லிம்போமா (T cell lymphoma) என்ற புற்றுநோய்க் கட்டி என்றும், இன்னும் மூன்று மாத காலமே கிரிப்பின்ஸ் வாழும் என்றும் தெரிவித்தனர். கிரிப்பின்ஸுக்கு இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்க முடிவெடுத்தார் ஆடம். அப்படி அதை நீக்கிவிட்டு, அறுவை சிகிச்சையின்போது போட்ட தையலை பிரிக்கச் சென்றபோது, அங்கு மேலும் மூன்று கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கட்டிகள் வேகமாக வளர்ந்திருந்தன. அவற்றைச் …

    • 1 reply
    • 487 views
  15. தி.மலை: அவனவன் ஒரு மனைவியை சமாளிக்க அல்லாடிக்கொண்டு இருக்கிறான். ஆனால் வந்தவாசியில் ஒருவர், இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துகொண்டு, இருவரையும் தேர்தலில் நிற்க வைத்து, வெற்றியும் பெற வைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியதிற்கு உட்பட்ட கோவில் குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு காஞ்சனாவும், வழூர் அகரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு செல்வியும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும், முன்னாள் பஞ்., தலைவர் தனசேகர் என்பவரின் மனைவிகள் என்பது தான் சுவாரஸ்யம். இரு மனைவிகளுடன் ஒரே குடும்பமாக வசித்து வரும் தனசேகர், விவசாயம் செய்து வருகிறார். மனைவிகள் இருவரும் வெவ்வேறு கிராம பஞ்., தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததால், இருவரை…

    • 8 replies
    • 1.4k views
  16. Started by Kavi arunasalam,

    புது வருடத்தில் நுளையும் போது “ஐயையோ எனக்கு ஒரு வயது கூடப் போகிறதே” என வருத்தப்படும் சில வயதுக்கு வந்த பெரியவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஐப்பானில் ஒரு பெண் தன் வயது ஏற ஏற பெருமிதம் கொள்கிறார். Tanaka என்ற ஒரு பெண்ணுக்கு இந்த வருடம் ஜனவரி இரண்டாம் திகதி 117 வயதாகி இருக்கிறது. இவர்தான் இன்றைய நிலையில் உலகில் அதிக வயதானவர் என்ற இடத்தில் இருக்கிறார். எட்டுக் குழந்தைகளில் ஏழாவதாக 1903ம் ஆண்டு பிறந்த Tanka 1922இல் திருமணம் செய்து தனது கணவனுடன் நூடுள்ஸ்-அரிசி விற்கும் ஒரு சிறிய கடையை ஆரம்பித்தார். தனது கணவணின் மறைவுக்குப் பின்னர் தனியாகவே அந்தக் கடையை இவர் நடத்தி வந்திருக்கிறார். இன்று ஓய்வூதியம் பெறும் நான்கு பிள்ளைகளுக்குத் தாயான Tankaவுக்கு ஐந்து…

    • 10 replies
    • 972 views
  17. முறை கேடாக... பல்லாயிரக்கணக்கான டொலர்களை வசூலித்த பல்மருத்துவருக்கு கடுமையான தண்டனை! பிரிட்டிஷ் கொலம்பியா – ரிச்மண்ட் பகுதியில், செய்யாத வேலைக்காக பல்லாயிரக்கணக்கான டொலர்களை வசூலித்த பல்மருத்துவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட அபராதத் தீர்ப்பின்படி, மருத்துவர் பின் சூ, கடந்த 2017ஆம் ஆண்டு தானாக முன்வந்து பல்மருத்துவருக்கான நடைமுறையில் இருந்து விலகிய பின்னர் காணாமல் போனார். இதனைத் தொடர்ந்து பி.சி.யின் பல் அறுவை சிகிச்சை கல்லூரி நடத்திய விசாரணையின் போது, அவர் திறமையற்றவர் என்றும் மூன்று ஆண்டுகளில் 70 தடவைகளுக்கு மேல் முறைகேடு செய்ததாகவும் கண்டறியப்பட்டது. இதனால், அவருக்கு உரிமத்தை இரத்து செய்த நிர்வாகம், அவருக்கு 50,00…

    • 1 reply
    • 521 views
  18. ஒரு குடிமகன் தான் குடியிருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் இருந்த அத்தனை பேரையும் புத்தாண்டில் வீதியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். புத்தாண்டு நேரத்தில் பட்டாசு, வாண வேடிக்கைகள் இல்லாவிட்டால் அது அழகிருகாயிருக்காது. அத்தோடு கடந்த வருடத்தை கவலையோடு அனுப்பி வைக்கவும் வரும் வருடத்தை மகிழ்ச்சியோடு வரவேற்பதற்கும் தண்ணி போட்டுத்தானே ஆக வேண்டும். ஆனால் ஒருவர் நள்ளிரவில் போட வேண்டிய தண்ணியை மாற்றி பகல் நேரத்தில் போட்டதால் அவரது வாணவேடிக்கையை இரசிக்க முடியாமல் போயிற்று. யேர்மனியில் Hessen மாநிலத்தில் Bebra என்ற இடத்தில் 52 வயதான ஒருவர் நண்பகல் தனது வீட்டுக்குள் இருந்து வாணம் விட்டிருக்கின்றார். அவர் விட்ட வாணம் அவரது வீட்டுக்குள்ளேயே அவர் வாங்கி வைத்திருந்த் பட்டா…

  19. சிங்கப்பூரில் தடையை மீறி பட்டாசுகளை வெடித்த தமிழருக்கு 15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பொது இடங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி தீபாவளி பண்டிகையின்போது இந்தியர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் சீனிவாசன் சுப்பையா முருகன் என்ற தமிழர், தடையை மீறி பட்டாசுகளை வெடித்தார். இது தொடர்பாக முருகன் மீது வழக்கு தொடரப்பட்டு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. இதில் முருகன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து, முருகனுக்கு இந்திய மதிப்பில் சுமார் 15 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். …

    • 0 replies
    • 301 views
  20. டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணிக்கு விண்ணில் நடக்கும் வாணவேடிக்கைகள் ஒரு குதூகலத்தைத் தந்து நெஞ்சில் நிறைந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் புதிய ஆண்டை பெரும்பாலும் அனைவரும் மகிழ்ச்சியாகத்தான் வரவேற்பார்கள். கடந்த ஆண்டில் நிறைவேற்ற முடியாததை புது ஆண்டில் முடித்து விடலாம் என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கும். பிறக்கும் புது ஆண்டில் தேவையில்லாத சில விடயங்களைக் கைவிடுவதாக சிலர் சபதமும் எடுத்துக் கொள்வார்கள். புத்தாண்டு பிறக்கும் வேளைகளில் சில நாடுகளில் சம்பிராதயங்கள் சிலவற்றை காலகாலமாகக் கடைப்பிடிக்கிறார்கள். ஸ்பெயின், போர்த்துக்கல், ஆர்ஜென்ரீனிய நாடுகளில் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் விரைவாக முந்திரிப் பழங்களை உண்ணும் ஒரு பழக்கம் இருக்கிறது. பழங்களை உண்ணும் போது அவற்றை…

  21. புத்தாண்டு தினமான இன்று, உலகிலேயே இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பிறக்கவுள்ளதாக யுனிசெப் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள யுனிசெப் அமைப்பு, நேற்று நள்ளிரவு முதல், ஜனவரி 1ஆம் தேதி இரவு வரையிலான காலக்கட்டத்தில், உலகம் முழுவதும் சுமார் 3 லட்சத்து 92 ஆயிரம் குழந்தைகள் பிறக்கவுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. அதில், சுமார் 67 ஆயிரம் குழந்தைகள் இந்தியாவில் பிறக்கவுள்ளதாகவும் கணித்துள்ளது. உலக அளவில் ஒப்பிடும்போது, இந்தியாவில் பிறக்கவுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 17 சதவிகிதமாக உள்ளது. பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ள சீனாவில், சுமார் 46ஆயிரம் குழந்தைகள் பிறக்கவுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நைஜீரியாவில் சுமார் 26ஆயிரம் குழந்தைகளும், பாகிஸ்…

  22. ரோமானியாவில்.... அறுவை சிகிச்சையின் போது, நோயாளி மீது பற்றி ஏரிந்த.. தீ! ரோமானியாவில் மருத்துவமனை ஒன்றில், புற்றுநோய் அறுவை சிகிச்சையின் போது நோயாளி மீது தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புளோரியாஸ்கா அவசர சிகிச்சை மருத்துவமனையில், கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 66 வயதான பெண்னொருவருக்கு, அறுவை சிகிச்சையின் போது அல்கஹால் கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின் அவருக்கு மின்சார கத்தியை மருத்துவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதன்போது மின்சாரமும் அல்கஹாலும் வினையாற்றியதால் நோயாளி மீது தீ பற்றியது. இதன் காரணமாக அவருக்கு 40 சதவீத காயம் ஏற்பட்டு பின்னர், அவர் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்…

  23. ஆங்கில புத்தாண்டு தொடக்கத்தின்போது, லண்டனிலுள்ள புகழ்பெற்ற பிக்பென் கடிகாரம் ஒலிக்க செய்யப்படவுள்ளது. 96 மீட்டர் உயர எலிசபெத் கோபுர உச்சியில் உள்ள அக்கடிகாரத்தை புதுப்பிக்கும் பணி 2017 முதல் நடைபெறுகிறது. அந்தப் பணி இன்னும் நிறைவடையாத போதிலும், மிக முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அது அவ்வப்போது ஒலிக்க செய்யப்படுகிறது. அதன்படி புத்தாண்டு தொடக்கத்தை குறிக்கும் வகையில் 31ம் தேதி நள்ளிரவு ஒலிக்க செய்யப்படவுள்ளது. இதையொட்டி மூடி வைக்கப்பட்டிருந்த கடிகாரம் திறக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/94790/புத்தாண்டு-தொடக்கத்தில்புகழ்பெற்ற-பிக்பென்கடிகாரம்-ஒலிக்கசெய்யப்படுகிறது

    • 0 replies
    • 406 views
  24. ஆயுதங்களுக்கு பதில் மாவு, முட்டைகளை வீசி தாக்கிக் கொண்ட வித்தியாசமான போர் திருவிழா ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது. ஏரோது மன்னர் ஆட்சிக் காலத்தில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நகரத்தின் மையத்தில், இரு குழுக்களாக ராணுவ உடையணிந்தவர்கள் பிரிந்து உணவுப்பொருட்கள், பட்டாசுகளை ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து விளையாடினர். இறுதியாக தோல்வியடைந்த குழுவிடம் இருந்து பணம் வசூலித்து தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. https://www.polimernews.com/dnews/94824/மாவு,-முட்டை-வீசி-நடந்தவித்தியாசமான-போர்-திருவிழா

    • 2 replies
    • 448 views
  25. உணவகத்தில் பிரித்தானிய அரச தம்பதியினருக்கு அனுமதி மறுப்பு! கனடாவிற்கு சுற்றுலா சென்றுள்ள பிரித்தானிய அரச குடும்பத்திற்கு உணவகம் ஒன்றில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி குடும்பத்தை கனடா பிரதமரே வரவேற்றுள்ள நிலையில், உணவகம் ஒன்று அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. வன்கூவரிலுள்ள Deep Cove Chalet என்ற உணவகத்தைக் கண்ட ஹரியின் பாதுகாவலர்கள், அந்த உணவகம் ஹரி குடும்பம் உணவு உண்ண பாதுகாப்பானதாக இருக்கும் என எண்ணி அங்கு முன் பதிவு செய்வதற்காக சென்றுள்ளனர். குறித்த உணவகத்தை நடத்தி வரும் Pierre மற்றும் Bev Koffel ஆகியோர் ஹரி குடும்பத்தின் வேண்டுகோளை நிராகரித்துள்ளனர். தங்கள் உணவகம் அமைந்திருக்கும் Horth Hill என்னும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.