Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளித் துளியாய்

தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.

தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.

  1. அன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் போர் நிலைமையினால் வெளிநாடு வந்தார்கள். இன்று பார்த்தால் இளைஞர்கள் மட்டுமே வருகிறார்கள். ஆபத்துகளால் மண்ணுக்காக போராடியவர்கள் வருவது ஏற்கவேண்டிய விடையம். இன்னும் மண்ணில் எல்லா தமிழர் பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை என்றும் தெரியும். வெளிநாட்டின் வாழ்வதர்க்கான உரிமை கிடைத்தவுடன் சொந்த நாட்டுக்கு விடுமுறை செல்கிறார்கள். பதியும்போது போராட்டத்தை காரணம் காட்டுகிறார்கள். இன்றும் இந்த ஒரு காரணத்தால் தமிழர்களை வெளிநாட்டு பத்திரிகைகள் போட்டு வாங்குகிறார்கள். பதிவு செய்தவர்களில் அதிகமானவர்களுக்கு திருப்பி அனுப்பும் நிலையே வந்திருக்கின்றது. பல இலட்சம் ரூபா செலவு செய்தது திரும்பி செல்லவா? உண்மை நிலை தான் என்ன? வேலை வாய்ப்புகளுக்கு …

  2. யாழ் கட்டப்பிராய் வறிய குடும்பத்திற்கு முதற்கட்டமாக உதவிய ஜப்னா மின்னல்

  3. சுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினர் வழங்கிய உதவிக்கு நன்றிகள். போரால் பாதிப்புற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவு பற்று கோட்டத்தில் 32 பாடசாலைகள் இயங்குகின்றது. இப்பிரதேசமானது வளங்கள் குறைந்த மிகவும் பின் தங்கிய பிரதேசமாகும். இப்பாடசாலைகளில் கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தும் முகமாக நேசக்கரம் அமைப்பானது பலவகையிலான உதவிகளை வழங்கி வருகிறது. இப்பகுதிகளில் வாழும் மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் மழை , வெயில் காலங்களில் மாணவர்கள் பாவிப்பதற்கான குடைகளை சுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினருக்கு முன்வந்து வழங்கியுள்ளனர். எம்மால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கற்கும் பாடசாலைகளில் ஒன்றான ஆணைகட்டியவெளி நாமகள் வித்தியாலத்தில் கற்கும் மாணவர்களுக்கு சுவிஸ் ப…

    • 2 replies
    • 682 views
  4. தேன்சிட்டு நாட்டார்பாடல் இசைவிருது 2013. தமிழ்க் கலைகளை வளர்க்கும் நோக்கிலும் கலைத்துறையில் ஆர்வம் மிக்க இளையோரை ஊக்குவித்து முன்னேற்றும் வகையிலும் நேசக்கரம் உப அமைப்பான நேசம் அமைப்பின் ஏற்பாட்டில் முதல் முயற்சியாக 04.11.2013 – 05.11.2013 வரையான இரண்டு நாட்களும் நாட்டார் பாடல் போட்டியினை நடாத்தியுள்ளோம். மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட போரால் பாதிக்கப்பட்ட இன்னும் பழைய வாழ்வுக்குத் திரும்பாத வறுமையும் வசதிகளாலும் பின்தங்கிய நிலமையில் இருக்கும் கதிரவெளியில் முதல் கட்டமாக 6பாடசாலைகளைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட34 மாணவர்கள் தேன்சிட்டு நாட்டார்பாடல் இசைவிருது 2013 போட்டியில் பங்கெடுத்திருந்தனர். எமது உப அமைப்பான நேசம் அமைப்பின் அமைப்பாளர்; நே…

    • 0 replies
    • 680 views
  5. முல்லைத்தீவு மாவட்டம் போரால் பாதிக்கப்பட்ட 100 விதவைகள் ஊனமுற்றவர்களுக்கான வாழ்வாதாரம். முல்லைத்தீவு மாவட்டத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட 100குடும்பங்களுக்கான பழப்பயிர்ச்செய்கைக்கான பழக்கன்றுகளை உற்பத்தி செய்து வழங்கவுள்ளோம். எம்மால் வழங்கப்படும் பழக்கன்றுகளின் பழங்களையும் கொள்வனவு செய்து விற்பனை செய்யக்கூடிய சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய ஒழுங்கினையும் செய்துள்ளோம். இதன் முதற்கட்டமாக 3மாதங்களில் பயன்தரும் பப்பாசிகளை உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். 3மாதங்களில் பயன்தரத் தொடங்கும் பப்பாசிகள் ஒன்றரை வருடம் தொடக்கம் 2வருடங்கள் வரையில் தொடர்ந்து பயன்தரக்கூடியவை. பப்பாசி விதைகளை பதியமிட்டு 3வாரங்களில் கன்றுகளாக உருவாக்கிக் கொடுக்…

    • 2 replies
    • 679 views
  6. யுத்தத்தின் விளைவுகளால் தனது கால் ஒன்றினை இழந்து மற்றைய காலும் செயலிழந்து போகும் நிலையில் வாழ்வாதாரத்திற்காக துடிக்கும் முன்னால் பெண் போராளி. தந்தை நோய்வாய்பட்ட நிலையில் தாயும் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டு உள்ளதால் தனது வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி அலைந்தும் கால்கள் இல்லை என்ற காரணத்தினால் வேலை ஏதும் கிடைக்காத நிலையில் போராடும் இளம் பெண். உதவும் நல் உள்ளம் கொண்டோரே உதவிக்கரங்கள் கொடுத்திடுங்கள். தொலைபேசி இலக்கம்; 0773256776 வங்கி கணக்கு இலக்கம் கிஸ்ணபிள்ளை துரைசிங்கம் 70580467 இலங்கை வங்கி கிளிநொச்சி இலங்கை - See more at: http://www.canadamirror.com/canada/30236.html#sthash.X2GQDnnv.dpuf

    • 0 replies
    • 677 views
  7. அவசர உதவி. கனடிய உறவுகள் கவனத்திற்கு. கீழ் வரும் இணைப்பில் அழுத்தி செய்தியை படியுங்கள்.உறுப்பினர்கள் மட்டுமே இச்செய்தியை படிக்க முடியும். 2013 ஒரு போராளிக்கான உதவி கோரயிருந்தேன். தற்போது குறித்த போராளி உடல்நலமின்றி இருப்பதால் மீண்டு உதவியை வேண்டுகிறேன். அங்கத்தவர்கள் செய்தியை வாசியுங்கள். உதவ முடிந்தோர் உதவுங்கள். https://www.yarl.com/forum3/topic/133094-யாழ்கள-கனடிய-உறவுகளே-உங்களிடமிருந்து-அவசர-உதவி-தேவை/?page=3#comment-1265521

  8. ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சி வெற்றியை நோக்கிச் செல்கிறது வறுமையாலும் கல்வி நிலமையாலும் பின்தங்கி யாராலும் கவனிக்கப்படாதிருந்த மட்டக்களப்பு கரடியன்குளம் (குசேலன்மலை) கிராமம் இவ்வருடம் வெள்ள அனர்த்தத்தின் போது எமது அமைப்பால் இனங்காணப்பட்டது. அவசர உதவியாக இக்கிராமத்து மக்களுக்கான வெள்ள நிவாரணத்தை இவ்வருடம் தைமாதம் வழங்கியிருந்தோம். இக்கிராமத்தின் புவியியல் அமைவு வாழ்வாதார உயர்வுக்கான வழிமுறைகள் கல்வித் தகைமை போன்றவற்றை ஆராய்ந்து அவர்களை உயர்த்தும் நோக்கில் நேசக்கரம் களக்குழுவினர் நீண்ட நாட்கள் இந்தக் கிராமத்தின் குழந்தைகளோடும் குடும்பங்களோடும் கூடியிருந்து அவர்களது தேவைகள் பிரச்சனைகள் போன்றவற்றை ஆராய்ந்து அறிக்கையினை சமர்ப்பித்திருந்தனர். இக்கிராமத்தின் தேவைகள…

  9. ‘தேன்சிட்டு இசைவிருது 2014′ முல்லைத்தீவு மாவட்ட முடிவுகள். தேன்சிட்டு இசை விருதுக்கான முல்லைத்தீவு மாவட்ட பாடகர்களுக்கான குரல் தேர்வு 16.09.2014 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. நேசக்கரம் அமைப்பின் அனுசரணையில் தேன்சிட்டு உளவள அமைப்பின் திட்டமிடல் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியை யோ.புரட்சி அவர்கள் நெறியாள்கை செய்தார். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் நூறு வரையான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பார்வையாளர்களும் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் திரு.இ.பிரதாபன் அவர்கள் ஆசியுரை கூறி சுடறேற்றினார். பிரதேச செயலக முக்கிய அதிகாரிகளும், வண பிதா ரோய் அவர்களும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்துக் …

  10. தொழில் செய்ய விரும்பும் போராளிக்கான உதவி ஓரு முன்னாள் போராளி. காலொன்றை இழந்தவர். 3பிள்ளைகளின் தந்தை. மனைவி இருதய நோய் பாதிப்புக்கு உள்ளானவர். நீண்டகாலம் சிறையில் இருந்து விடுதலையானவர்.வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிக்கடன் எடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் வங்கிக்கடன் எடுக்க முடியாது எல்லா முயற்சிகளும் தோற்றுப்போனது. தற்போது வியாபாரம் ஒன்றைச் செய்வதற்காக உதவி கோரியுள்ளார். 50ஆயிரம் ரூபா(அண்ணளவாக 285€) உதவினால் தன்னால் வியாபாரத்தை மேற்கொள்ள ஆதரவாக இருக்குமென உதவி கோரியுள்ளார். இவருக்கான உதவியை உறவுகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம். 18வருட போராட்ட வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து எதுவுமற்றுப் போன இக்குடும்பத்துக்கு உதவுங்கள். நேரடியாகவே உங்கள் உதவியை வழங்க …

    • 1 reply
    • 670 views
  11. நேசக்கரம் மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம் உருவாக்கம். தமிழ்மாணவர்களின் மருத்துவம், இயந்திரவியல் பீடங்களுக்கான பல்கலைக்கழக நுளைவை அதிகரிக்கும் நோக்கிலும் படித்த இளைஞர்களின் வழிகாட்டலில் சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்கும் நோக்கிலும் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பினால் ‘மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் ஒன்றியத்தில் பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களே அங்கம் வகிப்பர். குறிப்பாக மருத்துவம் , எந்திரவியல் பீடங்களுக்கு அனுமதி பெற்றவர்களே இவ்வைமப்பின் உறுப்பினர்களாகும் தகுதியைப் பெறுவார்கள். நோக்கம் :- பல மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று மருத்துவ எந்திரவியல் பீடத்திற்கு அனுமதி கிடைத்தும் பணவசதியின்மையாலும் குடும்ப வறுமையின் நிமித்தமும் குறைந…

    • 4 replies
    • 669 views
  12. சம்பூர் மீள்குடியேற்ற மக்களுக்கு வீடுகள் கையளிப்பு திருகோணமலை சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட பொதுமக்களுக்கு சொந்த வீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று (25) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போது 18 பயனாளிகளுக்கு கனடா தமிழ்ப் பேரவையினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பொது மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 2006ம் ஆண்டு இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்து தற்போது சொந்த வீடுகளில் வாழ்வதற்கு உதவி வழங்கிய இ…

  13. மருத்துவம் இயந்திரவியல் கற்கும் பல்கலைக்கழக ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள். நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் கல்வி ஊக்குவிப்புக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மருத்துவ , இயந்திரபீட மாணவர்கள் 50பேருக்கான கல்வியுதவியை வழங்க புலம்பெயர் உறவுகளை வேண்டுகிறோம். சிறந்த பெறுபேறுகளைப் பெற்றும் தொடர்ந்து மருத்துவ , இயந்திரபீடக்கல்வியை தொடர வசதியற்ற மாணவர்களை நேசக்கரம் இவ்வாண்டிலிருந்து குறித்த துறைகளில் கற்று முடிக்க வேண்டிய ஆதரவினை வழங்க வேண்டிய பொறுப்பை ஏற்றுள்ளது. எமது அமைப்பின் மூலம் பல்கலைக்கழக கல்விக்கான உதவியை பெறும் மாணவர்கள் நாம் தெரிவு செய்து கூறும் ஊர்களில் வாழும் வறிய மாணவர்களுக்கான இலவச கற்பித்தல் வகுப்புக்களை இலவசமாக வழங்…

  14. 2013 புலமைப்பரிசில் 5ம் வகுப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மட்டக்களப்பு மேற்கு வலயம் ஏறாவூர் மேற்கு கோட்டப்பிரதேசத்தில் நடைபெறும் 2013 புலமைப்பரிசில் 5ம் வகுப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேசம் இலவச வழிகாட்டி பயிற்சி முன்னோடிப் பரீட்சைகளில் மேற்படி கோட்டப் பிரதேசத்தில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற 48மாணவர்களுக்குமான சிறப்பு தயார்படுத்தல் பயிற்சி வகுப்பினை ஆவணி 24ம் திகதி வரையும் நடாத்த திட்டமிட்டு மாணவர்களுக்கான தொடர் பயிற்சிநெறி நடைபெற்று வருகிறது. இம்மாணவர்கள் அனைவரும் திங்கள் தொடக்கம் சனிக்கிழமை வரையிலும் தங்கி நின்று கல்வியைப் பெறுகின்றனர். இவர்களுக்கான உணவு இதர அடிப்படை உதவிகளை சோபா நிறுவனம் வழங்கிவருகிறது. நேசம் …

    • 0 replies
    • 659 views
  15. உயிர் கொல்லும் புற்றுநோயிலிருந்து வாழத் துடிக்கும் 22 வயது இளைஞனின் கதை. 13.06.1991 உலகின் மகிழ்ச்சிகளை அனுபவிக்கப் பிறந்த அவனது பிறப்பு மர்மமானது. ஓவ்வொரு பிள்ளையும் விரும்பும் அம்மாவின் மடிவாசம் அப்பாவின் தோழ்வாசம் எதையும் அவன் அனுபவிக்காதவன். பெற்றவர்களை அவன் காணவேயில்லை. உறவென்று சொல்லி உரிமை கொண்டாட யாருமில்லாத சிசுவாகவே தனித்துப் போனான். அவனை வளர்த்தவர்களும் பாலக வயதிலேயே ஏனோ கைவிட்டு விட்டார்கள். யாரில்லாது போனாலென்ன 'புனிதபூமி' இருக்கிறது என அவனை புனிதபூமியே தத்தெடுத்துக் கொண்டது. புனிதபூமியின் குழந்தையாகி மீண்டது அவனது மகிழ்ச்சிக்காலம். உறவில்லை உறவினர்கள் இல்லையென்று அழுத பிஞ்சு மனசில் ஆயிரக்கணக்கான உறவுகளின் அணைப்பையும் ஆற்றுதலையும் புனிதபூமி கொடு…

    • 1 reply
    • 657 views
  16. நேசக்கரம் கணணிப்பயிற்சி முன்னேற்றம் எவ்வாறுள்ளது ? நேசக்கரம் இலவச கணணிப்பயிற்சி நிலையமொன்றினை 15.12.2012நடராஜா ஆனந்தா வீதி நாவற்குடா கிழக்கு மட்டக்களப்பில் ஆரம்பித்திருந்தோம். நேசக்கரம் கணணிப்பயிற்சி நெறியினை நடாத்துவதற்கான கணணிகளுக்கான உதவியை அமெரிக்காவிலிருந்து தவேந்திரராஜா ஐயா அவர்கள் முன்வந்து வழங்கியிருந்தார். இம்மாதத்தோடு எமது கணணிப்பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகி 4மாதங்களாகின்றது. எமது இலவச கணணிப்பயிற்சியை யுத்தத்தாலும் சுனாமியாலும் பாதிப்புற்ற குடும்பங்களிலிருந்து 75 மாணவர்களும் வேலை வாய்ப்புத் தேடும் 40 இளைஞர் யுவதிகளும் , தொழில் செய்து கொண்டிருக்கும் பெரியவர்கள் 10 பேரும் பயிற்சியைப் பெற்று வருகின்றனர். நிலையத்திற்கான பராமரிப்பு , மின்கட்டணம் போன்றவற்ற…

    • 0 replies
    • 651 views
  17. வடமராட்சி கிழக்கில் மாணவர்கள் கௌரவிப்பு வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் திறைமை உள்ள மாணவர்கள் இந்த ஆண்டு முதல் கௌரவிக்கப்படவுள்ளனர். அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் அன்பர் ஒருவருடைய நிதி உதவியினூடாக இக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. வடமராட்சி பிரதேச செயலாளர் க.கனகேஸ்வரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அப்பகுதி பிள்ளைகளின் கல்வியை மேம்ப டுத்துவதற்காக இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதற்கமைய தரம் 5புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள், இணை…

  18. சுவிஸ் லுசர்ன் மாநிலத்தில் போரினால் பாதிக்கப் பட்ட தாயக மக்களுக்கு உதவும் முகமாக சில நலன் விரும்பிகளால் நலன் காப்போம் என்ற அமைப்பு தொடங்கப் பட்டு உதவி வருகிறது. மனிதாபிமானம் கொண்ட மக்கள் எம் உறவுகளுக்கு தொடர்பு கொண்டு உதவுங்கள் நன்றி . நலன் காப்போம் அமைப்பு சுவிஸ்.

  19. நேசக்கரம் ஆறுமாதங்களின் மொத்த கணக்கறிக்கையின் தொகுப்பு. தைமாதம் கிழக்கு மாகணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்காக நேசக்கரம் உதவும் உறவுகள் வழங்கிய உதவித் தொகை :- (1473,82€, 350,00£) ( 277825,00/=இலங்கை ரூபாவில்) இவ்வுதவி மூலம் 170 குழந்தைகளுக்கான பால்மா உணவு வகைகளும் 25குடும்பங்களுக்கான உலர் உணவு வகைகளும் வழங்கப்பட்டது. தைமாதம் மாதாந்த உதவி மற்றும் மாணவர்கள் உதவி – 617,80€ பயன்பெற்றோர் தொகை :- + மாதாந்த குடும்ப உதவி – 2 குடும்பம். மாணவர்கள் கல்வியுதவி – 69மாணவர்கள். சுயதொழில் – 1 குடும்பம். தைமாதம் கணக்கறிக்கை. மாசிமாதம் கிழக்கு மாகணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்காக கிடைத்த உதவி – 1108,52€. குடும்பக் கொடுப்பனவு மாணவர்களின் உதவி –…

    • 0 replies
    • 642 views
  20. நேசக்கரம் எழுவான் அமைப்பு வாழ்வாதார கடனுதவி வழங்கல். மன்னார் மாவட்டத்தில் எம்மால் உருவாக்கப்பட்ட நேசக்கரத்தின் உப அமைப்பான எழுவான் அமைப்பின் ஆய்வறிக்கைக்குழுவினால் தெரிவு செய்யப்பட்ட 11குடும்பங்களுக்கான விவசாயக்கடனுதவியானது இம்மாதம் வழங்கப்பட்டுள்ளது. 1) ஜெயராசன் மாலினி 2) சிவானந்தராசா கென்சிகா 3) வடிவேல் அருள்வாசகம் 4) சூசைப்பிள்ளை எட்மன் 5) பிரான்சிஸ் 6) செபஸ்ரியன் 7) அந்தோனிப்பிள்ளை 8) சந்திரகுமார் 9)வீரசிங்கம் …

    • 2 replies
    • 642 views
  21. கனடாவில் உள்ள வாழவைப்போம் அமைப்பினரால் புதுக்குடியிருப்பு கைவேலிப் பிரதேசத்தைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை கைவேலி கணேச வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் வீ.கனகசுந்தரம் கலந்துகொண்டு இந்த கொடுப்பனவை வழங்கிவைத்தார். இதில் குறித்த பிரதேசசத்தைச் சேர்ந்த 12 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=101447&category=TamilNews&language=tamil

  22. நேசக்கரம் ஆதரவில் எழுவான் அபிவிருத்திச் சங்கம் உருவாக்கம் மன்னாரில் போரால் பாதிப்புற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக நேசக்கரம் பிறைட் பியூச்சர் உப அமைப்பான ‚'எழுவான்' அபிவிருத்திச் சங்கத்தின் முதலாவது ஒன்று கூடலும் முதலாவது தொழில் முயற்சிக்கான உதவி வழங்கலும் 23.03.2013 அன்று நடைபெற்றது. மன்னார் தேனுடையான் கிராமத்தில் உருவாக்கப்பட்ட 'எழுவான்' அபிவிருத்திச் சங்கமானது வடக்கின் அனைத்துப் பகுதிகளுக்கும் தனது சேவையை எதிர்காலத்தில் அதிகரித்து தமிழ் மக்களின் பொருளாதார கல்வி மேம்பாட்டை நோக்கிய பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும் நோக்கிலே உருவாக்கம் பெற்றுள்ளது. மன்னார் தேனுடையான் ஞானவைரவர் கோவில் தலைவர் வீ.தினேஸ்வரன் தலைமையில் 23.03.2013 அன்று முதலாவது ஒன்று கூடல் இடம…

    • 0 replies
    • 630 views
  23. கிளிநொச்சி விஸ்வமடுவில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் செயற்கை உறுப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏற்பாட்டில் லயன் மாவட்டம் 306-B1 இன் கொழும்பு மத்தி லயன்ஸ் கழகத்தினால் யுத்தத்தினால் அவையவங்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. பல நன்கொடையாளர்களின் அனுசரணையுடன் யுத்தத்தினால் அவையவங்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள், கோழிக்குஞ்சுகள், துவிச்சக்கர வண்டிகள், ஊன்றுகோல்கள், வங்கி சேமிப்புகணக்கு புத்தகங்கள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது தகவலுக்கு நன்றி Chelvadurai Shanmugabaskaran

    • 0 replies
    • 629 views
  24. 2011 – 2014 வரையான கடன் உதவித்திட்டத்தின் தொகுப்பறிக்கை. சிறு சிறு துளியாக பாதிக்கப்பட்டவர்களின் துணையாக எழுந்த நேசக்கரமானது 2011 யூலைமாதம்; கடன் வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்திருந்தது. இதுவொரு பரீட்சார்த்த முயற்சியாக செயற்படுத்த திட்டமிட்டோம். புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்படும் நிதியை மீள செலுத்தக் கூடியவர்களிடமிருந்து மீளப்பெறுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது. இதன் பிரகாரம் வழங்கும் உதவிகளை கடன் அடிப்படையில் வழங்கி மீளப்பெறும் நிதியை சுழற்சி முறையில் அடுத்தடுத்தவர்களுக்கு பயன்படுத்தலாம் எனவும் திட்டமிடப்பட்டது. கட்டம் 1. திருமுறிகண்டியில் மீள்குடியேறிய குடும்பங்களில் 4குடும்பங்களை தெரிவு செய்து தலா ஒரு குடும்பத்திற்கு 30ஆயிரம் ரூபா அடிப்படையில் 120000ரூபா(ஒருலட்சத்த…

    • 2 replies
    • 627 views
  25. சர்வதேச சிறுவர்தின நிகழ்வு சர்வதேச சிறுவர்தினம் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பும் மட்டக்களப்பு மேற்கு கல்விவலய தொழில் வழிகாட்டல் பிரிவும் இணைந்து 01.10.2013 அன்று மட்டக்களப்பு விபுலானந்தா முதியோர் இல்லத்தில் சர்வதேச சிறுவர் முதியோர் தின நிகழ்வினை நடாத்தியிருந்தது. நிகழ்வில் 50பாடசாலை மாணவர்களுக்கு நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பு 21500ரூபா பெறுமதியான 50 புத்தகப்பைகளை அன்பளிப்புச் செய்திருந்தது. 18முதியோர்களுக்கான பரிசுப்பொருட்களை பாடுமீன் லயன்ஸ் கழகத்தினர் வழங்கியிருந்தனர். இந்நிகழ்வில் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரூபி அவர்களும் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வியதிகாரி சுபா சக்கரவர்த்தி , மட்டக்க…

    • 0 replies
    • 626 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.