துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சியை நோக்கிய பாதையில் நேசக்கரம். ஒரு நாட்டின் உயர்ச்சி கிராமங்களிலேயே தங்கியுள்ளது. ஆனால் தமிழர் பிரதேசங்களைத் தின்றுமுடித்த போரின் வடுக்களாக மிஞ்சியிருப்பது வறுமையும் துயரமும் வாழ்வாதார முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கிய நிலமையே காண்கிறது. இந்த வகையில் பெயர் அறியப்படாத பெயர் தெரியாத தமிழர் கிராமங்கள் எத்தனையோக கிழக்கு மாகாணத்தில் இருக்கிறது. அத்தகைய கிராமங்களில் ஒன்று மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் குசேலன்மலை எனப்படும் கிராமமும் ஒன்றாகும். இங்கு 27குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். போராட்டத்திற்காக உயிர்கள் முதல் உடமைகள் வரை இழந்த காயங்களையும் தன்னகத்தே தாங்க…
-
- 4 replies
- 977 views
-
-
தமிழர் தாயகத்தின் முதலாவது கைத்தொழில் பேட்டை யாழ். கோப்பாயில் திறந்துவைப்பு ஐ.பி.சிதமிழின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட வட கிழக்கின் முதலாவது கைப்பணித் தொழிற்பேட்டைஇன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்கோப்பாய் வடக்கு இலகடி என்ற பகுதியில் இந்த கைத்தொழில் பேட்டை, தாயக நேரப்படி இன்றுகாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த கைத்தொழில் பேட்டையில் 30 பேர் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுள்ளதுடன்,மூன்று மாதங்களில் 100 பேருக்கான வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. நவீனஇயந்திரங்களுடன் கூடிய இந்த கைத் தொழில் பேட்டையில் சித்திரம், தையல், புடைப்புச் சித்திரம்,கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படு…
-
- 1 reply
- 1.3k views
-
-
புங்குடுதீவு சிறீ சுப்ரமணிய மகளிர் வித்தியாலய அதிபர் அவர்கள் எமது பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் ஓர் வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தார். அதாவது தங்கள் பாடசாலையில் பாவிக்கப்பட்டு வந்த போட்டோக்கொப்பி இயந்திரம் 9 வருடங்களாக சேவையில் இருந்து திருத்தமுடியாத அளவு பழுதடைந்து விட்டதாகவும் அதற்கு பதிலாக புதிதாக ஒன்று வாங்குவதற்கு உதவி செய்யும் படி கேட்டிருந்தார். அத்துடன் நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஓர் புதிய இயந்திரத்திற்கான மதிப்பீடும் எடுத்துத் தந்துள்ளார். இது விடயமாக இணைய வழியில் ஒன்று கூடிய பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் உடனடியாகவே அவ்வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டு போட்டோக்கொப்பி இயந்…
-
- 5 replies
- 746 views
-
-
திருமதி.நாகேந்திரர் செல்லம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட நிதி: மனிதநேயக்கரங்கள் நிறுவனம்:- 1 நிதி உதவி : இலங்கையின் முதலாவது கிராம சேவைத் தலைவி திருமதி.நாகேந்திரர் செல்லம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட நிதி திட்ட அமுலாக்கம் : மனிதநேயக்கரங்கள் நிறுவனம் 2 01. அறிமுகம் : அனர்த்தங்கள் வந்து சென்றாலும் அது தந்து விட்டுப்போன அழிவுகளின் வடுக்கள் இலகுவில் மறைந்து போவதில்லை. அத்தகைய நிலையே இன்று இலங்கையில் காணப்படுகின்றது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களை முழுமையாக மூழ்கடித்த கொடிய யுத்தத்தால் பல உயிர்களையும், உடமைகளையும், உடல் அங்கங்களையும் இழந்து அவற்றின் வலிகளில் இருந்து மீண்டு வர மு…
-
- 2 replies
- 834 views
-
-
எல்லாவற்றையும் இழந்து தங்கள் உயிர்களையும் மிஞ்சிய கல்வியையும் நம்பி புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளிவந்து கற்கைக்குச் சென்றுள்ள 30 மாணவர்களுக்கான உதவிகளை நேசக்கரம் உலகத்தமிழர்களிடம் கோருகிறது. இந்த மாணவர்கள் உடலாலும் மனதாலும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களது குறிப்பிட்ட காலக்கற்கைக்கான உதவிகளை வழங்குமிடத்து அவர்களது எதிர்காலத்தை ஒளிபெறச் செய்யலாம். உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். மாணவர்களுடைய விபரங்களைத் தந்துதவுவோம். நீங்கள் நேரடியாகவே மாணவர்களுடன் தொடர்புகளைப் பேணி உதவிகளை வழங்கலாம். உதவிகோரும் 36 மாணவர்களின் விபரங்கள் 1) சுரேஸ்கண்ணா கோபாலராசன் கலைப்பீடம் 1ம் வருடம் 2) …
-
- 1 reply
- 1.1k views
-
-
அன்பார்ந்த நண்பர்களுக்கும் நவ்வாவ்இன் நலன் விரும்பிகளுக்கும், போரால் சீரழிந்த கிழக்குப் பிரதேசத்தில் சுய முயற்சிக் கமத்தொழில் பணிகளுக்கு நிதி வழங்கல் கிழக்கிலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இயல்பு வாழ்வுக்கு திரும்பவைப்பதில் நவ்வாவ் கடந்த ஒன்றரை வருட காலமாக முன்னெடுத்துவரும் செயல்பாடுகளைத் தாங்கள் நன்கறிவீர்கள் என்பதில் எமக்குச் சந்தேகம் இல்லை. கடந்த மார்ச் 2013 ல் அமெரிக்க வரியாணை செயலகம் எம்மை மார்ச் 2012 இலிருந்து பதிவு செய்யபட்ட அறக்கட்டளை நிலையமாக அதிவிரைவாக ஏற்றுக்கொண்டது, நாம் தனிய நின்று பொறுப்பெடுத்து நிதிவழங்கி பின்வரும் வரும் பணிகளை அவதானமாக திட்டமிட்டும், நுண்மையாக நிறைவேற்றி வைத்ததிலிருந்தும் ஊற்றெடுத்ததாகும் என்பதை நாம் பெருமையுடன் காட்டி…
-
- 3 replies
- 702 views
-
-
நீங்கள் படித்த நூல்களை எங்கள் மாணவர்களுக்குத் தாருங்கள். வெளிநாடுகளில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் அல்லது பல்கலைக்கழகப் படிப்பை முடித்த மாணவர்கள் தாங்கள் படித்த பழைய நூல்களை (ஆங்கில நூல்கள்) தாயகத்தில் பல்கலைக்கழகப் படிப்பை தொடங்கியிருக்கும் மாணவர்களுக்கு தந்துதவுங்கள். மருத்துவம், எந்திரவியல் துறைகள் தொடர்பான நூல்கள் எமது மாணவர்களுக்கு தேவைப்படுகிறது. புதிய நூல்களை வாங்கிப்படிக்கும் வசதி பல மாணவர்களிடம் இல்லை. எனவே உங்களது பாடநூல்களை இம்மாவணவர்களுக்கு வழங்கியுதவுங்கள். நீங்கள் வழங்கும் நூல்கள் சுழற்சி முறையில் மாணவர்கள் பயன்படுத்தி பயனடைவார்கள். நூல்களை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418 nesakkaram@gma…
-
- 0 replies
- 454 views
-
-
நேசம் இலவச கல்வித்திட்டத்தில் புலமைப்பரிசில் சித்தியடைந்த 337மாணவர்கள். நேசம் இலவச கல்வித்திட்டத்தில் 2013 புலமைப்பரிசில் தோற்றிய அதிகூடிய சிறப்பச் சித்தியடைந்த 337 மாணவர்களுக்கான கௌரவிப்பினைச் செய்யவுள்ளோம். (அம்பாறை - 77மாணவர்கள், வெல்லாவெளி – 134 மாணவர்கள் ,மன்னர் 33 மாணவர்கள் , மட்டக்களப்பு – 51 மாணவர்கள் ,மூதூர் – 42 மாணவர்கள்) இம்மாணவர்கள் 337 பேருக்கும் சேமிப்புக்கணக்கை ஆரம்பித்து மாணவர்களுக்கான சேமிப்பை ஊக்குவிக்கவும் தலா ஒரு மாணவருக்கு 500ரூபாவை வைப்பிலிட்டு வழங்கவும் , கௌரவிப்பு ஞாபகக்கிண்ணம், மற்றும் அடிப்படை கற்கை உபகரணங்களையும் வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இம்மாணவர்களுக்கான ஆதரவினை உறவுகளிடமிருந்து வேண்டுகிறோம். தலா ஒரு மாணவருக்கு 1…
-
- 0 replies
- 408 views
-
-
“தேன்சிட்டு” ஆயுர்வேத மருத்துவ குறுநிலம் உருவாக்கம். அருகிவரும் தமிழ் பாரம்பரிய சித்த வைத்தியத்தை மேம்படுத்திப் பேணும் நோக்கிலும் ஆங்கில வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத (வாதம், அஸ்மா , நீழிழிவு…..போன்ற) நோய்களைக் குணப்படுத்தும் நோக்கிலும் தமிழ் மாணவர்களுக்கு சித்த வைத்தியப் பயற்சியை வழங்கும் நோக்கிலும் எம்மால் உருவாக்கப்படும் தேன்சிட்டு குறுநிலத்தில் அரிய வகை 500மூலிகைச் செடிகளைப் பயிரிடும் முயற்சிகளை மேற்கொள்கிறோம். இதன் மூலம் ஆயுர்வேத வைத்திய நிலையத்தையும் உருவாக்கிக் கொள்வதன் மூலம் எமது மருத்துவத்துறையை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்பினையும் உருவாக்க முடியும். முழுமையாக அழிந்து வரும் தமிழ் ஆயுர்வேத சித்த வைத்தியத்தினை எமது மக்கள் சரியான வகையில் பெற்றுக் கொள்ளும…
-
- 19 replies
- 3.2k views
-
-
அமரர் ஐயம்பிள்ளை சுவாமிநாதன் நினைவாக பள்ளி செல்லும் மாணவர்களுக்கு உதவி கிளிநொச்சி உழவர் ஒன்றியம் விளையாட்டுக்கழக்தின் ஆதரவில் அமரர் ஐயம்பிள்ளை சுவாமிநாதன் (அப்பையா) 4ம் ஆண்டு நினைவாக லண்டனினல் வசிக்கும் அவரது மகன் கிளிபேட் குலநாயகத்தின் நிதிப்பங்களிப்புடன் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு கடந்த 24ம் நாள் சிவநகர் அ.த.க.பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் இராசரட்ணம் தலைமையில் நடைபெற்றது. என்னுடன் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் நாவை.குகராசா மற்றும் அமரர் ஐயம்பிள்ளை சுவாமிநாதன்(அப்பையா) ஆகியோரின் குடும்பத்தினர், ஓய்வுநிலை அதிபர் நாகலிங்கம், கிளிநொச்சி கிருஸ்ணபுரம் இராமகிருஸ்ண வித்தியாலயம் பரந்தன் அ.த.க.பாடசாலை அதிபர், உழவர் ஒன…
-
- 0 replies
- 442 views
-
-
2014 க.பொ.த.சாதாரணதரம் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான உதவி. 2014 க.பொ.த.சாதாரணதரம் தோற்றும் போரால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களிற்கான நேசக்கரம் மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் 6மாத பயிற்சி வகுப்புகளை நடாத்தவுள்ளோம். விஞ்ஞானம், இயந்திரவியல் துறைகளுக்கான மாணவர்களை அதிகரிக்கும் வகையில் எம்மால் நடத்தப்பட்டு வரும் பயிற்சி வகுப்புகளில் கடந்த வருடமும் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வருடம் அனைத்துப் பாடங்களுக்குமான பயிற்சிகளை வழங்கவுள்ளோம். இம்மாணவர்களுக்கான இலவச கற்றல் பயிற்சி வகுப்புகளை எமது மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தினர் கிராமங்கள் தோறும் செயற்படுத்தி வருகின்றனர். இவ்வருடம் முதல் குறைந்தது ஆறுமாத காலம் பயிற்சி வகுப்புகளை நடாத்துவதென தீர்ம…
-
- 7 replies
- 814 views
-
-
-
- 13 replies
- 3.1k views
-
-
மாலதி படையணி போராளியின் இன்றைய அவல நிலை!! தூக்கிவிடுவார்களா புலம்பெயர் தமிழர்கள்?? 15 வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் போராளியின் இன்றைய வாழ்க்கை, அவளுக்கு மட்டுமல்ல அவளைப் பார்ப்போருக்கும் கண்களில் கண்ணீரை வரவளைக்கின்றது. புதுக்குடியிருப்பில் ஒரு ஓலைக்குடிசையில் வறுமையின் உச்சத்தில் வாழ்க்கை நடாத்திக்கொண்டிருக்கும் அந்தப் பெண்ணை சந்தித்தது ஐ.பீ.சி. தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சிக் குழு. இதய பலவீனம் உள்ளவர்கள் தயவுசெய்து இந்த ஒளியாவனத்தை பார்க்கவேண்டாம். இந்தப் பெண்ணுக்கு உதவ விரும்புகின்றவர்கள் பின்வரும் தொடர்பிலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்: 0094212030600 https://www.ibctamil.com/lifestyl…
-
- 0 replies
- 1k views
-
-
HMCநிறுவனத்தின் சீமெந்துக்கல் உற்பத்தியில் முதலாவது முன்னேற்றம் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டினை உயர்த்தும் முகமாக இவ்வருடம் 3ம் மாதம் இலங்கையின் நிறுவனங்களுக்கான சட்ட வரைபுக்கு அமைய HAND MADE CREATORS (PVT) Ltd என்ற பெயரில் நிறுவனமொன்றை ஆரம்பித்திருந்தோம். இந்நிறுவனத்தை ஆரம்பித்ததன் நோக்கம் தொடர்ந்து எங்கள் மக்களை உதவி உதவியென்று உபத்திரம் கொடுக்காமல் தொழில் முயற்சிகளைச் செய்வதன் மூலம் சுயபொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி வறுமையில் உள்ளவர்களை மீட்பதோடு அவர்களது உழைப்பிலிருந்து அவர்களது பிள்ளைகளின் கல்வியை உயர்த்துவதையும் நோக்காகக் கொண்டு ஆரம்பித்தோம். வியாபாரத்தில் அனுபவம் வியாபார தந்திரம் எதனையும் அறியாத புதியவர்களே இந்நிறுவனத்தின் ஒழுங்…
-
- 4 replies
- 750 views
-
-
நேசக்கரம் மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம் உருவாக்கம். தமிழ்மாணவர்களின் மருத்துவம், இயந்திரவியல் பீடங்களுக்கான பல்கலைக்கழக நுளைவை அதிகரிக்கும் நோக்கிலும் படித்த இளைஞர்களின் வழிகாட்டலில் சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்கும் நோக்கிலும் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பினால் ‘மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் ஒன்றியத்தில் பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களே அங்கம் வகிப்பர். குறிப்பாக மருத்துவம் , எந்திரவியல் பீடங்களுக்கு அனுமதி பெற்றவர்களே இவ்வைமப்பின் உறுப்பினர்களாகும் தகுதியைப் பெறுவார்கள். நோக்கம் :- பல மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று மருத்துவ எந்திரவியல் பீடத்திற்கு அனுமதி கிடைத்தும் பணவசதியின்மையாலும் குடும்ப வறுமையின் நிமித்தமும் குறைந…
-
- 4 replies
- 667 views
-
-
தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலம், குமரியில் வசித்து வரும் அகதியான மாணவி தினுசியா இன்ஜினியரிங் படிக்க உதவியுள்ளார் நடிகர் சூர்யா. குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஈழத்து அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வி தினுசியா பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்து கொண்டார். அதில், தினுசியாவிற்கு நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. அக்கல்லூரியில் தமிழ் உணர்வாளர்கள் ரூபாய் 25,000 பணம் கட்டி தினுசியாவை சேர்த்தனர். ஆனால் அதற்கு மறுநாளே நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் இருந்து தினுசியாவிற்கு அழைப்பு வந்தது. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில் பொறியியல் படிக்க இடம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் நான்கு ஆண்டுகள் படிப்பிற்…
-
- 9 replies
- 865 views
-
-
மீள்குடியேறிய 16 மாணவர்களுக்கும் 160€ உதவினால் போதும். போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மண்டுர் 16ம் வட்டாரத்திலுள்ள அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான அடிப்படை கல்வி உபகரணங்கள் கோரப்பட்டுள்ளது. இப்பிரதேசமானது கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட பிரதான இடங்களில் ஒன்றாகும். கல்வித் தரத்திலும் பொருளாதார முன்னேற்றத்திலும் பின்தங்கிய நிலமையில் இருந்து வரும் இப்பிரதேசத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமையால் பள்ளி செல்லும் மாணவர்களின் தொகை மிகவும் குறைவாகவே உள்ளது. கற்கை உபகரணங்கள் , பாதணிகள் , உடைகள் இல்லாத நிலமையில் உள்ள 16மாணவர்களுக்கும் புலம் பெயர் உறவுகளிடம் உதவியைக் கோருகிறோம். ஒரு மாணவருக்கு 10€தே…
-
- 0 replies
- 526 views
-
-
மட்டக்களப்பு மலையர்கட்டு கிராம மாணவர்களுக்கு அவசர கல்வியுதவி தேவை போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மலையர்கட்டு கிராமத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் 43 பேருக்கான அடிப்படை கற்கை உபகரணங்களும் பாதணிகளும் வழங்க வேண்டியுள்ளது. இப்பாடசாலைக்கு நேரில் சென்று மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்ட எமது அமைப்பின் பணியாளர்களின் அவதானிப்பில் இக்கிராமம்; போரால் பாதிப்புற்ற கிராமங்களில் அதிக பாதிப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் யாவற்றிலும் தேவைகளை அதிகம் எதிர்பார்த்து இருக்கும் இக்கிராமத்தில் வறிய நிலமையில் உள்ள மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலமையில் வாழ்கின்றனர். தொடர் இடப்பெயர்வு யுத்தம் அனைத்தாலும் பாதிப…
-
- 0 replies
- 414 views
-
-
கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவான M.அரியராஜா என்பவர் தனது 60 வது பிறந்ததினத்தில் வன்னியில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு உதவுவதன் மூலம் கொண்டாடினார். கண் ஒன்றை இழந்த பெண் ஒருவருக்கு கை கொடுக்கும் வகையில் ரூபா ஒரு இலட்சம் வழங்கியுள்ளார். இந் நிதியினை பெறுப்பேற்ற வலிவடக்கு பிரதேசசபை துணைத்தவிசாளர் ச. சஜீவன் அவர்கள் அப் பணத்தினை குறித்த பெண்ணிடம் கையளித்துள்ளார். பிறந்த நாட்களை நட்சத்திர விடுதிகளில் கொண்டாடி வரும் மக்கள் மத்தியில் திரு M. அரியராஜாவின் இச் செயற்பாடு வரவேற்கத் தக்கது. ஏனைய புலம்பெயர் உறவுகளும் யுத்தால் பாதிக்கபட்ட தமது மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் உதவ முன்வரவேண்டும். போரினால் அவயங்களை இழந்த எம்மவர்களுக்கு புலம் பெயர் உறவுகள் கைகொட…
-
- 2 replies
- 581 views
-
-
மாற்றுத் திறனாளிகளின் நண்பன் We Can அறக்கட்டளைநிறுவனம் உள்நாட்டுப் போரைநாம் மறந்துபோனாலும் அதுதந்துவிட்டுச் சென்றஆறாதஉடல் மற்றும் உளகாயங்களால் தினம் தினம் செத்துப் பிழைப்பவர்கள் மாற்றுத் திறனாளிகள். பிறப்பால் உடல் அங்கவீனமானவர்களைவிடகொடியபோரால் அவயவங்களை இழந்தவர்கள் வடக்கில் அதிகம். மன்னார் மாவட்டத்திலேமாந்தைமேற்கில்தான் மாற்றுத் திறனாளிகள் அதிகம் பேர் உள்ளனர். மாந்தைமேற்கின் மாற்றுத் திறனாளிகள் மண்மீதுபற்றும் இனத்தின் மீதுகாதலும் கொண்டவர்கள்.உடலளவில் பாதிப்படைந்தவர்களாக இருந்தாலும் உளரீதியில் மிகப் பலசாலிகள். இவர்களுக்கானவாழ்வை WeCan என்னும் அறக்கட்டளை அமைப்பு கட்டமைத்து வருகின்றது. காலம் முழுக்க சுய தொழிலை மேற்கொள்ளத் தேவையான உதவியை மாற்றுவலுவுள்ளோருக்கு அளித்…
-
- 0 replies
- 689 views
- 1 follower
-
-
யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு யாழ்கருத்துக்கள மட்டுறுத்தினர்களில் ஒருவரான நிழலி அவர்கள் 15.12.2014 அன்று தனது 40வது பிறந்தநாளில் 120 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கியிருந்தார். போரால் பாதிக்கப்பட்ட குடும்பநல வாழ்வாதார உதவிகளை தனது சக்திக்கு மேற்பட்டு பலவகையில் உதவி வருவதோடு நின்றுவிடாமல் பல வகையில் செயற்பட்டு வரும் ஒருவர். 2009யுத்தத்தில் மாவீரர்களான குடும்பமொன்றின் குழந்தைகள் 2பேரை கடந்த 3வருடங்களுக்கு மேலாக மாதாந்த உதவி வழங்கி வருவதோடு மாவீரர்களின் தாயார் ஒருவருக்கும் மாதாந்தம் உதவிவருகிறார் நிழலி. நிழலியின் பணிகளுக்கு ஆதரவு வழங்கி வரும் அவரது துணைவியாரையும் இந்நேரம் நினைவு கொள்கிறோம். நிழலியின் உதவியில் கழுவங்கேணி 1குடும்பலநல உத்தியோகத்தர்…
-
- 31 replies
- 3.6k views
-
-
ஜெனிவாவில் இருந்து ஒளி உதவும் கரங்கள் கண்ணகைபுரம் மாணவர்களுக்கு உதவி புலம்பெயர்ந்து உறவுகள் தாயகத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் பொருட்டு யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன் உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக ஜெனிவாவிலிருந்து உதவும் உறவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் கிளிநொச்சி அக்கராயன் கண்ணகைபுரம் கிராமத்தின் மாணவர்களுக்கு புத்தகப்பைகள் கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளனர்.கரைச்சி பிரதேசபை உறுப்பினர் தயாபரன் தலையமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் எம்முடன் கண்ணகைபுரம் அ.த.க.பாடசாலை அதிபர் கரைச்சி பிரதேசபை உறுப்பினர்களான் அன்ரன்டானியல் சுப்பையா அக்கராயன் பிரதேச தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சிறீ செயலாளர் கதிர்மகன் அமைப்பாளர் கரன் கட்சியின் செயற்பாட்டாள…
-
- 0 replies
- 453 views
-
-
செய்யத் துணிக கருமம் - கருணாகரன் இவளுக்கு இரண்டு கால்களுமில்லை. வயது 29. இன்னும் திருமணமும் ஆகவில்லை. முன்பு போராளியாக இருந்தாள். யுத்தம் அவளுடைய கால்களைத் தின்றுவிட்டது. புனர்வாழ்வு முகாம்வரை சென்று மீண்டவளின் முன்னே, புதிய வாழ்க்கைச் சவால்கள் நிற்கின்றன. அவற்றையெல்லாம் எப்படி எதிர்கொள்வதென்று அவளுக்குப் புரியவில்லை. கால்களும் கைகளும் உருப்படியாக இருப்பவர்களாலேயே வாழ்க்கையை எதிர்கொள்ளக் கடினமாக இருக்கும்போது கால்களில்லாதவளால் ஓரடி நகர முடியுமா? அப்படியென்றால், அவளின் கதி என்ன? இதுதான் பெரிய கேள்வியே. இப்படிப் பலர் இந்த மாதிரியான நிலைமையில், இந்த மாதிரியான கேள்விகளின் முன்னே நிறுத்தப்பட்டிருக்கிற…
-
- 0 replies
- 479 views
-
-
ஜேர்மன் ’உதயம்’ தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வாழ்வாதார உதவி! ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வாழ்வாதார உதவிக்கான பொருட்கள் மற்றும் ஆடு வளர்ப்பிற்கான ஆடுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் வாகரை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கதிரவெளி புச்சாக்கேணி பிரதேசத்தில் அந்நிறுவனத்தின் கிழக்கு மாகாண செயற்பாட்டாளர் எம்.டிலான் தலைமையில் நடைபெற்றது. இதன் போது புச்சாக்கேணி பிரதேசத்தில் கடந்த கால போரினால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின் வாழ்கின்ற தெரிவு செய்யப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாடுக்கான 50 ஆயிரம் ரூபா செலவிலான கடை அபிவிருத்திக்கான பொருட்களும் ஆடு வளர்ப்பிற்காக 50 ஆயிரம் ரூபா செலவில் நான்கு ஆடுகளும் வழங்கி வ…
-
- 0 replies
- 549 views
-
-
ஆனந்த குமாரசுவாமி முகாம் மாணவர்களுக்கு 100 பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனந்தகுமாரசாமி (மெனிக்பாம் செட்டிகுளம் வவுனியா) நலன்புரி நிலைய பொதுப்பாடசாலை மாணவர்களுக்கு 20.08.2011 அன்று 100பாதணிகள் வழங்கப்பட்டது. கடந்தமாதம் மெனிக்பாம் முகாமில் வதியும் 800மாணவர்களுக்கான பாதணிகள் , சீருடைகள் போன்ற உதவிகளை வேண்டியிருந்தோம். அதன் முதற்கட்டமாக நேசக்கரம் உறவுகளால் வழங்கப்பட்ட உதவியிலிருந்து இவ்வுதவியை 100மாணவர்கள் பாதணிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இம்மாணவர்களுக்கான தங்கள் உதவிகளை வழங்கிய MRS.Angela Sechneidereit (KFD SANKT JOSEPH BOCHUM,GERMANY) அவர்களுக்கும் தனது 50வது பிறந்தநாளை முன்னிட்டு உதவியை வழங்கிய பவானி தர்மகுலசிங்கம் அவர்களுக்கும் பெயர் குறிப்பிடவிரும்ப…
-
- 5 replies
- 1.5k views
-