Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளித் துளியாய்

தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.

தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.

  1. 08.07.2011 அன்று நேசக்கரம் தொடர்பாளர்கள் ஊடாக செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி தற்காலி முகாமிற்குள் வதியும் மாணவர்களில் ஒருபகுதியினருக்கான கற்கை உபகரணங்களை வழங்கியிருந்தோம். தொடர்புபட்ட செய்தியைப்பார்க்க இந்த இணைப்பில் அழுத்துங்கள். தரம் 5 , தரம் 11, தரம் 12,13ஆகிய வகுப்புகளில் கற்கும் 244மாணவர்களுக்கான உதவிகள் மட்டுமே வழங்கியிருந்தோம். ஆனால் இம்முகாமில் 2031 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 55ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். உயர்தர மாணவர்களுக்கான ஆசியர்கள் பற்றாக்குறை போன்ற பல அவசியத்தேவைகளை இவர்கள் இழந்து நிற்கிறார்கள். முகாமில் வதியும் குடும்ப மற்றும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை:- மொத்த குடும்ப எண்ணிக்கை – 1827 (ஆண்கள் =2268, பெண்கள் =3153) மாணவர்கள்: 5வயதிலிருந்து 10…

    • 4 replies
    • 1.2k views
  2. நேசம் உணவு உற்பத்தி கணக்கறிக்கையும் பெற்ற வெற்றியும். 2012 நேசம் உற்பத்திகள் தொழில் முயற்சியின் பரீட்சார்த்தமாக சாம்பிராணி உற்பத்தியினையடுத்து மிக்சர் உணவு உற்பத்தியினை 09.06.2012 அன்று ஆரம்பித்திருந்தோம். மிக்சர் உற்பத்தியினை மட்டக்களப்பினைத் தளமாகக் கொண்டு ஆரம்பித்திருந்தோம். முதல் கட்டம் 4பிரதான தொழிலாளர்களைக் கொண்டு ஆரம்பித்திருந்த இம்முயற்சிக்கு மொத்தம் 336500.00ரூபாவினை முதலிட்டிருந்தோம். அத்தோடு உதவியாளர்கள் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் உட்பட 7பேர் பணியில் இணைந்தார்கள். வேலைசெய்வோருக்கான மதிய உணவும் வழங்கியிருந்தோம். தேவைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கான உணவுகளும் வழங்கப்பட்டது. வேலைக்கு ஏற்ப முதல் ஆறுமாதங்களும் சம்பளங்களும் வழங்கப்பட்டு தொழிலில் தொடர்ந்த வெற்றி…

    • 4 replies
    • 972 views
  3. அவனுக்கு இடுப்பின் கீழ் உணர்வற்று போனது 2009 இறுதி யுத்தத்தின் போது. ஒரு போராளியாய் தனது கடைசி நாட்களை களத்தில் செலவளித்த போதில் காலம் முழுவதும் மற்றவர்களுக்கு பாரமாகிவிடுவேனென்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. இறுதியாய் இராணுவத்திடம் சரணடைந்தவர்களுடன் அவனும் சரணடைந்தான். தடுப்பு மருத்துவமனையென்று 2011வரையும் அங்குமிங்கும் அலைவு. 2012இல் அவர்களை பராமரித்த மருத்துவமனையும் எல்லோரையும் வீடுகளுக்கு அனுப்பியது. அப்போதுதான் தனது அடுத்த கட்டத்தின் பயங்கரத்தை உணரத் தொடங்கினான். ஊனமில்லாது சுகதேகியாக இருந்திருப்பின் அக்காக்களுக்கும் அவன் இராசகுமாரனாக இருந்திருப்பான். ஆனால் நாட்டுக்காக போனவன் ஊனமாகி வீடு திரும்பிய போது யாரும் அவனை விரும்பியேற்கவில்லை. அன்பை எதிர்பார்த்து போன அக்…

    • 4 replies
    • 1.4k views
  4. நேசக்கரம் கிராம அபிவிருத்தி பட்டப்படிப்பு உதவி. படித்த மாணவர்களை அவர்களின் கிராமங்களை மேம்படுத்தவும் உள்ளுர் வளங்களைப் பயன்படுத்தி தொழில்சார் துறைகளில் முன்னேற்றவும் Brightfuture Nesakkaram அமைப்பின் ஒன்றரை வருட கற்கைநெறியினை ஆரம்பிக்கவுள்ளோம்.போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் 19வயது தொடக்கம் 24வயதுக்கு உட்பட்டவர்கள் கிராம அபிவிருத்தி பட்டப்பட்டிப்பில் பங்கேற்க முடியும். கற்றலுக்குத் தேவையான தகைமை :- கல்விப்பொதுத்தராதரம் குறைந்தது 3பாடங்கள் சித்தியடைந்திருக்க வேண்டும். பாடத்திட்டம் :- 1) தகவல்தொழில்நுட்பம் 2) பொருளாதாரஅபிவிருத்தி 3) அனர்த்தமுகாமைத்துவம் 4) உளவியல் 5) சிறுவர்மேம்பாடு 6) கிராமிய வள முகாமைத்து…

    • 4 replies
    • 717 views
  5. கரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஏழு குடும்பங்கள் உதவி ! ராஜகிராமம் கரவெட்டி மேற்கை சேர்ந்த ஒரு குடும்பம் கருணாகரன் குடும்பம் . இக்குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்த பொது பட்டகாலில் படும் என்பது போல் கருணாகரனை கைது செய்து புனர் வாழ்வு முகாமில் வைத்துள்ளனர் .மூன்று பிள்ளைகளுடன் அன்றாடம் உணவுக்கே அல்லல் பட்டுக் கொண்டிருந்த பொது தலை மகனாக இருந்த பதினாறு வயது மகன் லீம்சன் ஏழ்மை நிலை காரணமாக சுருக்கிட்டு தற்கொலை செய்து மேலும் மோச நிலையை ஏற்ப்படுத்தி விட்டது மிகப் பரிதாபத்துக்குரியது .இன் நிலையில் இக் குடும்பத்துக்கு நோர்வேயில் உள்ள நல்ல மனம் உள்ள ஏழு குடும்பங்கள் இணைந்து ரூபா எண்பதினாயிரம் உதவியுள்ளது .ஆலை…

  6. மாவைக் கந்தன் கொடியேற்றம் -2024

    • 3 replies
    • 816 views
  7. கிளிநொச்சி வைத்தியசாலைக்கு புலம் பெயர் உறவுகளால் இதய நோய் சிகிச்சை கருவிகள் அன்பளிப்பு(படங்கள்) கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 8.6 மில்லியன் ரூபா பெறுமதியான இதயநோய் சிகிச்சை கருவிகள் புலம் பெயர் உறவுகளால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதி நவீன எக்கோ இயந்திரம், இதய நோய் சிகிசை இயந்திரங்கள் என்பன அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத்தினரும், புலம்பெயர் உறவான வரதராஜன் என்பவரும் லண்டன் யுளளளைவ சுசு அமைப்பும் இணைந்து 8 மில்லியன் பெறுமதியான இவ் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர். இதில் வரதராஜன் என்பவரின் நிதி உதவியில் அதி நவீன எக்கோ இயந்திரத்தினை ஆறு மில்லியன் ரூபாவுக்கு வழங்கி…

  8. போரால் பாதிப்புற்ற தங்கராசா 10ஆயிரம் ரூபா உதவி தங்கராசா ரமேஷ் இவர் பிறப்பிலே ஊனமானவர். போரால் பாதிக்கப்பட்டு சொத்துகள் உடமைகள் யாவையும் இழந்து போனவர். எனினும் இழக்காத மனவுறுதியோடு முல்லைத்தீவு நகரில் கச்சான் விற்றுத் தனது குடும்ப வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்கிறார். வளங்கள் இல்லாத நிலமையில் அன்றாடம் தன்னால் இயன்றளவு முயற்சித்து உழைக்கும் தன்னம்பிக்கையுள்ள மனிதர். இவருடைய தொழிலை மேலும் சற்று விரிவுபடுத்திக் கொள்ள இவருக்கு இலங்கை ரூபா பத்தாயிரம் ரூபா (அண்ணளவாக 60€)உதவினால் போதுமென்ற பெருமனதோடு வாழும் மனிதர். இவருக்கு யாராவது உதவ முன்வந்து உதவினால் அவரது வாழ்வில் மீண்டும் புது நம்பிக்கையும் ஏற்றமும் உண்டாக ஏதுவாக இருக்கும். தொடர்புகளுக்கு :- Telephone: (Shanthy) +49…

    • 3 replies
    • 744 views
  9. அன்பார்ந்த நண்பர்களுக்கும் நவ்வாவ்இன் நலன் விரும்பிகளுக்கும், போரால் சீரழிந்த கிழக்குப் பிரதேசத்தில் சுய முயற்சிக் கமத்தொழில் பணிகளுக்கு நிதி வழங்கல் கிழக்கிலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இயல்பு வாழ்வுக்கு திரும்பவைப்பதில் நவ்வாவ் கடந்த ஒன்றரை வருட காலமாக முன்னெடுத்துவரும் செயல்பாடுகளைத் தாங்கள் நன்கறிவீர்கள் என்பதில் எமக்குச் சந்தேகம் இல்லை. கடந்த மார்ச் 2013 ல் அமெரிக்க வரியாணை செயலகம் எம்மை மார்ச் 2012 இலிருந்து பதிவு செய்யபட்ட அறக்கட்டளை நிலையமாக அதிவிரைவாக ஏற்றுக்கொண்டது, நாம் தனிய நின்று பொறுப்பெடுத்து நிதிவழங்கி பின்வரும் வரும் பணிகளை அவதானமாக திட்டமிட்டும், நுண்மையாக நிறைவேற்றி வைத்ததிலிருந்தும் ஊற்றெடுத்ததாகும் என்பதை நாம் பெருமையுடன் காட்டி…

  10. நேசக்கரம் மே 2011 கணக்கறிக்கை மே2011 கணக்கறிக்கை கீழ் உள்ள இணைப்பில் அழுத்திப் பாருங்கள். கணக்கறிக்கை உதவிய அனைவருக்கும் நன்றிகள். (ஒவ்வொரு மாதமும் 5ம் திகதிக்கிடையில் மாதாந்த கணக்கறிக்கை இணைக்கப்படும்)

    • 3 replies
    • 1.2k views
  11. இளம் தமிழ் பொறியியலாளரை ஆதரியுங்கள்! மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் இரு இளம் பொறியியலாளர்களது முயற்சிக்கு உலகின் முதல் நிலை பொறியியல் கல்லூரியான அமெரிக்காவின் MIT பல்கலைக் கழகத்தினால் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. இவர்களது நீர் நிலைகளை தன்னியக்கமாகச் சுத்திகரிக்கும் கருவி MIT பல்கலைக்கழகத்தின் Solve Challenge இல் இறுதி அறுபதில் ஒன்றாகத் தெரிவாகியிருக்கின்றது. உலகெங்கும் இருந்து கிடைக்கப் பெற்ற ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து இவர்கள் தெரிவாகியிருக்கின்றார்கள். இவர்கள் இறுதிச் சுற்றுத் தெரிவிற்கு இம் மாதம் நியூயோர்க் நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுக் கூட்டத்தொடரிற்கு செல்லவிருக்…

  12. பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (TCC)நேசக்கரம் இணைந்து வழங்கிய உதவி மட்டக்களப்பு தாளங்குடா மதுராபுரம் முன்பள்ளி மாணவர்கள் 30பேருக்கான கல்வியுபகரணங்கள் நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பினால் 20.09.2013அன்று வழங்கி வைக்கப்பட்டது. முன்பள்ளி செல்லும் மாணவர்களுக்குத் தேவையான புத்தகப்பை , தண்ணீர்ப்போத்தல் ,சாப்பாட்டுப்பெட்டி , கொம்பாஸ்பெட்டி , கலர்பெட்டி ,சித்திரக்கொப்பி , பென்சில் ,அழிறப்பர் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வாசுதேவன் , மண்முனைப்பற்று திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேந்திரன் தாளங்குடா 1 கிராமசேவகர் டிலக்சன் , சீப்பிரா விளையாட்டு கழக உறுப்பினர்கள் , மதுராபுரபொதுமக்கள் பிறைட்; பியூட்சர் – நேசக்கரம் அமைப…

    • 3 replies
    • 977 views
  13. புல்லுமலைக் கிராமத்தின் குழந்தைகளையும் ஆதரிப்போம். மட்டக்களப்பு நகரத்தின் மேற்கே 30 கிலோ மீற்றருக்கு அப்பால் செங்கலடி பதுளை பிரதான வீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு எல்லைக் கிராமமாக ‘பெரிய புல்லுமலை’ எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது. சுமார் 800வரையிலான தமிழ்குடும்பங்கள் குடியிருந்த இக்கிராமம் விவசாயத்தையே தன் ஆதாரமாகக் கொண்டிருந்தது. காலத்துக்குக் காலம் யுத்தத்தின் பாதிப்பு இக்கிராமத்தையும் அதிகளவில் காவு கொண்டது. யுத்தத்தினால் ஊர்களை விட்டு மக்கள் வெளியேறிவிட ஒரு கட்டத்தில் புல்லுமலை மனிதர்கள் இல்லாத ஊராக இருந்ததும் ஒருகாலம். இதர இடங்களில் குடியேறி அங்கங்கே பல குடும்பங்கள் நிரந்தரமாக தங்கிவிட்ட போதும் 148 குடும்பங்கள் தங்கள் சொந்த ஊரான புல்லுமலைக்குத் திர…

    • 3 replies
    • 846 views
  14. ஒரு குடும்பத்திற்கு 115€ உதவினால் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம். 2013 ஆனி மாதம் 8ம் திகதியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குசேலன்மலை(கரடியனாறு) கிராமத்தின் குழந்தைகளுக்கான கல்வியை வழங்கும் நோக்கில் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட கற்பித்தல் செயற்பாடானத ஒருவருடத்தை நிறைவு செய்து கொண்டுள்ளது. எமது கற்பித்தல் செயற்பாட்டில் மேற்படி கிராமத்தில் வாழும் 27குடும்பங்களிலிருந்தும் பிள்ளைகள் தொடர்ந்து பங்கேற்று அடைவுமட்டத்தில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இம்மாணவர்களின் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களாகும். இவர்களது பிரதான தொழில் மீன்பிடி , விவசாயம் ஆகும். இவர்களால் பிடிக்கப்படும் மீனை சந்தைப்படுத்தவோ தொழிலுக்கான வலைகள…

    • 3 replies
    • 1.1k views
  15. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரைக்கும் ஆலைகள் நிறுவுதல். போரால் பாதிக்கப்பட்டு மீள எழுந்து கொண்டிருக்கும் முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களில் ஊனமுற்றவர்கள், போர் விதவைகளை உள்வாங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் எமது அமைப்பானது செயற்படத் தொடங்கியுள்ளது. மிளகாய்த்தூள், மாவகைகள், கோப்பித்தூள் உள்ளிட்ட அன்றாட பயன் பொருட்களை அரைத்துப் பொதி செய்து விற்பனை செய்யக்கூடிய சந்தை வாய்ப்பை எங்களது உற்பத்திக் குழுவினர் ஏற்படுத்தக் காத்திருக்கின்றனர். முதலாவதாக புதுக்குடியிருப்பு பகுதியை அண்டிய இடத்தில் முதலாவது அரைக்கும் ஆலையை நிறுவவுள்ளோம். இத்திட்டத்திற்கு 4லட்சரூபாய்கள் தேவைப்படுகிறது. (அண்ணளவாக 2300€) புடிப்படியாக இம்முயற்சியின் வெற்றி வேலைவாய்ப்பை…

  16. கிளிநொச்சி பாரதி புரத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்த பிள்ளைகளின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் எஸ்.கே.அறிவுச்சோலை SKT உரிமையாளரால் இன்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 1991ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பிற்காக இயங்கிய அறிவுச்சோலை இல்லம் யுத்தம் காரணமாக முழுமையாக அழிவடைந்தது. மேற்படி இல்லத்தை மீளவும் இயக்குவதற்கு நீண்ட காலமாக பலரும் முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் பயனாக இன்று முதல் மீண்டும் கிளிநொச்சியில் எஸ்.கே.அறிவுச்சோலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று ஒன்பது மணியளவில் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் பாராளுமன்ற உ…

  17. சம்பூர் அகதிக்குடும்பங்கள் அரசினால் புறக்கணிப்பு - த.தே.கூட்டமைப்பு [கனடா] மறுவாழ்வு மையம் உதவுகிறது [ வெள்ளிக்கிழமை, 11 சனவரி 2013, 18:00 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மறுவாழ்வு [கனடா] மையத்தின் ஆதரவுடன் மூதூர் கிழக்கு பிரதேசத்தில் சம்பூர் மற்றும் கிராமங்களிலிருந்து 2006 ஏப்ரல் மாதம் சிறிலங்கா இராணுவம் நடத்திய தாக்குதலில் இடம்பெயர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நான்கு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 1224 தமிழ் குடும்பங்களில் கட்டைப்பறிச்சான் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 400 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண உதவியாக உலர்உணவுப் பொதிகள் கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டன. கிழக்கு மாகாண சபையில் அங்கம்…

  18. புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கான சுற்றுமதிலுக்கான திருத்த வேலைகளும் வர்ணம் பூசுதலும் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் 75ஆவது நிறைவை கொண்டாடும் விதமாக நடைபெற இருக்கும் பவளவிழாவை (26/04/2021) முன்னிட்டு 2015ம் ஆண்டு பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 6.66 மில்லியன் ரூபா செலவில் புங்/மகாவித்தியாலயத்திற்கு பாடசாலையையும் மைதானத்தையும் இணைத்து நிர்மானிக்கப்பட்ட 620மீட்டர் நீளமும் 1.8மீட்டர் உயரமுமான சுற்றுமதிலுக்கு திருத்த வேலைகளும் வர்ணம் பூசுதலும் தேவைப்படுவதாக பாடசாலை பவளவிழாக் குழுவினரூடாக பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலனை செய்த ஒன்றிய நிர்வாகம் கொரோனா காலப் பகுதி என்றாலும் கூட இணைய வழியில் ஒன்று கூடி உடனடிய…

  19. கணக்கறிக்கையினை PDF Fileவடிவில் இணைத்துள்ளோம். கீழ் வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையினைப் பாருங்கள். ஓகஸ்ட் 2011 கணக்கறிக்கை இம்மாதம் பயன்பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை – 102 இம்மாதம் பயன்பெற்ற குடும்பங்கள் எண்ணிக்கை – 13. நேரடியாக பயன்பெறும் குடும்பங்கள் மாணவர்கள் எண்ணிக்கை இங்கு சேர்க்கப்படவில்லை. *உதவிய அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்*

    • 3 replies
    • 1.3k views
  20. உறவுகளிற்கு உதவுங்கள் உறுப்பினராகுங்கள் நேசக்கரம் அமைப்பு என்பது சுமார் மூன்று ஆண்டு களிற்கு முன்னர் யாழ் இணையத்தில் சில நண்பர்களால் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு உதவி அமைம்பாகும். இந்த அமைப்பின் நோக்கம் தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கபட்ட எமது உறவுகளிற்கான உதவிகளை வழங்குதல்..அவற்றில் 1) போரினால் உறவுகளை இழந்த பின்னைகளை பராமரித்தல் மற்றும் அவர்களிற்கான கல்வி உதவிகளை வழங்குதல். 2)குடும்பத் தலைவரை இழந்து பொருளாதார வசதிகள் இன்றி தவிக்கும் பெண்களிற்கான சுய வேலைவாய்ப்பத் திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தல் 3)யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உடல் அவயவங்களை இழந்தோரிற்கான வைத்திய உதவிகளை வழங்குதல். 4)பண வசதியின்றி உயர்கல்வியை தொடர முடியாது போயுள்ள மாணவர்களிற்குஉயர் …

    • 3 replies
    • 1.4k views
  21. முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கான வேலை திட்டம் யாழில் விரைவில்! தமிழீழ விடுதலை புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரம், வாழ்க்கை தரம், சுய தொழில் வாய்ப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்ற பாரிய வேலை திட்டம் ஒன்றை யாழ்ப்பாண மாவட்டத்தை மையமாக கொண்டு விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக இலங்கை மக்கள் நலன்புரி ஸ்தாபனத்தின் தலைவி வதனி மோகனசங்கர் அம்மையார் தெரிவித்தார். வதனி மோகனசங்கர் தனது 24 ஆவது திருமண ஆண்டு நிறைவை ஒட்டி வறிய, போரால் பாதிக்கப்பட்ட, பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த 15 பயனாளிகளுக்கு சுய தொழில் மேம்பாடுக்காக நேற்றையதினம் (28-03-2018) தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் கலந்துக…

  22. ஆனந்தகுமாரசாமி முகாம் மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 08.07.2011 ஆம் திகதி செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி புனர்வாழ்வு முகாமில் கல்வி கற்கும் மாணவர்களில் 244 மாணவ மாணவியர்களுக்கான கற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தரம் 5இல் கற்கும் 120 மாணவ மாணவியருக்கும் , தரம் 11இல் கற்கும் 82 மாணவர்களுக்கும் , தரம் 12,13இல் கற்கும் 42மாணவர்களுக்கும் அப்பியாசக்கொப்பிகள் , பேனாக்கள் , கொம்பாஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. 1. தரம் 5இல் கற்கும் மாணவர்களுக்கு:- (அ) அப்பியாசக் கொப்பிகள் (ஒருவருக்கு) - 3 (ஆ) பேனாக்கள்(ஒருவருக்கு) – 3 2.தரம் 11இல் கற்கும் மாணவர்களுக்கு:- (அ) அப்பியாசக் கொப்பிகள்(ஒருவருக்கு) – 5 (ஆ) கொம்பாஸ் பெட்டி (ஒருவருக்கு) – 1 (இ…

    • 3 replies
    • 1.1k views
  23. கிளிநொச்சி செல்வாநகர் குடியிருப்பில் வாழ்கின்ற 10குடும்பங்களுக்கான உதவிகள் 14.09.10 அன்று வழங்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தங்களாலும் போரினாலும் பாதிக்கப்பட்ட மேற்படி குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்புக்கான உதவிகளும் பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளும் வழங்கப்பட்டது. இக்குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் அங்கவீனர்களாகவும் போரில் பிள்ளைகளை கணவர்களை இழந்தவர்களாகவும் மற்றும் தடுப்புமுகாமிலிருந்து வெளிவந்தவர்களாகவும் இருக்கின்றனர். இன்னும் தங்கள் உடல்களில் சன்னங்கள் எறிகணைத்துண்டுகளையும் சுமந்து கொண்டிருக்கும் இவர்களை நம்பிக்கைகொடுத்துப் புதுப்பிக்கும் உதவியாக இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கூரைகள் அற்ற வீடுகளில் தறப்பாள்களோடு வாழ்கின்ற இம்மக்கள் தங்களுக்கான தெ…

  24. France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் + பாராளுமன்ற உறுப்பினர் யோகேசுவரன் = அவசர வெள்ள நிவாரண உதவி (மட்டக்கிளப்பு) 24ந்திகதி மட்டக்கிளப்பிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் திரு. S. YEHESWARAN அவர்கள் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சின் தலைவருக்கு நேரடியாக தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு மட்டக்கிளப்பின் தற்போதைய வெள்ள நிலையை எடுத்துக்கூறி அவசர நிதியுதவியைக்கேட்டார். புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சினால் வேறு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் போதும் .... உடனடியாக நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து வெள்ளத்தால் ஏற்பட்ட அவசரநிலை என்பதாலும் கோரிக்கையை வைத்தவர் அந்த மக்களால் தெரிவு செய்ப்பட்டவர் தாயக மக்களுடன் அல்லும் பகலும் …

  25. எட்டுலட்சரூபாய் உதவிகளை வழங்கிய கனடிய நண்பர்கள் றவி, சுரேஷ். நேசக்கரம் சமூகப்பணிகளில் இணைந்து கடந்த ஒருவருட காலத்தில் றவி, சுரேஷ்(கனடா) நண்பர்கள் இருவரும் இணைந்து இதுவரையில் எமக்கு 800000.00ரூபா (எட்டுலட்சரூபாய்கள்) உதவியுள்ளார்கள். போரால்பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதார கல்வி மேம்பாட்டுக்கான தங்கள் உதவிகளை வழங்கி தாயகத்திற்கான பணிகளில் தங்களையும் இணைத்து எம்மோடு தொடர்ந்து வரும் நண்பர்கள் றவி , சுNhஷ் ஆகியோருக்கு எங்களது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நேரில் ஆளையாள் அறிந்தவர்களே குற்றம் குறை பழி தீர்த்தல் என சுயநலத்தோடு நேசக்கரம் மீது அள்ளியெறிந்த சேற்றுக்குள்ளிருந்து மீள எழும் நம்பிக்கையைத் தந்த நண்பர் றவி அவர்களும் அவரது நண்பர் சுரேஸ் இருவரையும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.