துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
இன்றைய குரலுக்குரியவள் ஒரு மாவீரனின் மனைவி. ஒரு தளபதியாய் எத்தனையோ வெற்றிகளுக்கெல்லாம் வேராக இருந்த ஒரு மாவீரனினுடன் வாழ்ந்த வாழ்வின் இனிமைகளையும் அவனை இழந்த துயரின் வலிகளையும் பகிர்கிறாள். இந்தப் பெண்ணின் துயரங்கள் ஆயிரமாயிரம் தமிழ்ப்பெண்களின் கண்ணீரின் கதைகளாக வருகிறது. வெற்றிகளை மட்டுமே கேட்ட காதுகளிற்கு இத்தகைய கண்ணீரின் கனம் புரியாமலேயே இருந்திருப்பதை உணர்கின்ற தருணங்களில் இந்த இழப்புகள் பிரிவுகளுக்காக நாமென்ன செய்தோமென்ற கேள்வியே மிஞ்சிக்கிடக்கிறது. வாழ்வும் மரணமும் இயற்கையின் தீர்வாகிற போதே மனிதம் எத்தனை தவித்துப்போகிறது. ஆனால் எங்கள் மண்ணிலும் எங்கள் மனிதர்களிலும் வாழ்வு துயராலேயே தின்னப்பட்டிருக்கிறது. இதோ ஒரு மாவீரனின் மனைவி பேசுகிறாள். இவளது கண்ணீரின் ஊடா…
-
- 1 reply
- 987 views
-
-
ஒரு குடும்பத்திற்கு 115€ உதவினால் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம். 2013 ஆனி மாதம் 8ம் திகதியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குசேலன்மலை(கரடியனாறு) கிராமத்தின் குழந்தைகளுக்கான கல்வியை வழங்கும் நோக்கில் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட கற்பித்தல் செயற்பாடானத ஒருவருடத்தை நிறைவு செய்து கொண்டுள்ளது. எமது கற்பித்தல் செயற்பாட்டில் மேற்படி கிராமத்தில் வாழும் 27குடும்பங்களிலிருந்தும் பிள்ளைகள் தொடர்ந்து பங்கேற்று அடைவுமட்டத்தில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இம்மாணவர்களின் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களாகும். இவர்களது பிரதான தொழில் மீன்பிடி , விவசாயம் ஆகும். இவர்களால் பிடிக்கப்படும் மீனை சந்தைப்படுத்தவோ தொழிலுக்கான வலைகள…
-
- 3 replies
- 1.1k views
-
-
நமது தேசம் சிறீலங்கா இனவெறி அரசின் கொடூரத்தால் துயர் சூழ்ந்து நிற்கின்றது . அவர்கள் பொழிந்த நச்சு குண்டுகளால் எமது மக்களின் உயிர்கள் உடைமைகள் அழிக்கப்பட்டு பிறந்த மண்ணிலேயே அகதிகளாக தகர குடிசைக்குள் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது . வீடிழந்து வாழ்விழந்து அங்கமிழந்து துயர்சுழியில் சிக்கி துயரத்தின் விரிவின் உச்சியிலே வாழும் எம் மக்களை இயற்கை அனர்த்தமும் அழிப்பதாகவே உள்ளது . நாட்டில் சீரற்ற காலநிலையால் தொடரும் அடைமழை காரணமாக எமது தேசத்தில் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளது.அத்தோடு மலையகத்தில் தொடரும் மண்சரிவுக்கு மக்கள் பலியாகின்றனர். ஆயிரக்கணக்கான எம் உறவுகள் எவ் வித உதவிகளும் இன்றி தவிக்கின்றார்கள் . சிறப்பாக குழந்தைகள் பால்மா பற்ற…
-
- 0 replies
- 518 views
-
-
வன்னியில் இருக்கும் உறவுகளோடு நம் குடும்பத்து நிகழ்வுகளை எப்படிக் கொண்டாடி மன நிறைவு கொள்ளலாம் என்று தனிப்பட்ட முறையில் எனக்குத் தனி மடலில் நண்பர்கள் பலர் இந்த இல்லங்கள் குறித்த விபரங்களைத் தனி மடலில் கேட்டிருந்தீர்கள். நம் வீட்டில் நிகழும் பிறந்த நாள், திருமணம், திருமண நாள் மற்றும் நினைவு நிகழ்வுகளை இவ்வண்ணம் நீங்கள் வன்னியில் இருக்கும் எம் குழந்தைகளோடு கொண்டாட விரும்பினால் இதோ செலவு மற்றும் மேலதிக தொடர்பு குறித்த விபரங்கள். நீங்கள் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாத சந்தர்ப்பத்திலும், இவர்களுக்குப் பணம் அனுப்புவதன் மூலம் குறித்த நாள் நிகழ்வை அவர்கள் கொண்டாடுவார்கள். செலவுக்கான ரசீதும் அனுப்பி வைக்கப்படும். இதை உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள். கா…
-
- 0 replies
- 1.2k views
-
-
நேசக்கரம் உப அமைப்புக்களின் விபரங்கள். போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்கருதி பிரதேச வாரியாக உப அமைப்புக்களை உருவாக்கி வருகிறோம். உப அமைப்புக்கள் உருவாக்கத்தின் நோக்கம் :- 1) உதவிகள் ஒருங்கிணைப்பு தொடர்பால் இல்லாதிருப்பதால் ஒருவரே பல வழிகளிலும் உதவியைப் பெறுவார். இதனால் உண்மையான பாதிப்போடு உதவி தேவைப்படுவோருக்கு உதவிகள் செல்லாதிருக்கிறது. இந்த நிலமையை மாற்றி எல்லோருக்கும் உதவிகள் பகிரப்பட உப அமைப்புக்கள் ஊடாக ஒருங்கிணைவை உண்டாக்கும் நோக்கில் உப அமைப்புக்கள் தோற்றுவிக்கப்படுகிறது. 2) ஓவ்வொரு பிரதேசத்தினதும் சரியான நிலமைகளை கண்டறிந்து சரியான தரவுகளை உப அமைப்பின் நிர்வாகத்தினரின் தொடர் கவனிப்பு மூலம் அறிக்கைகளை எமக்குத் தந்துதவுவார்கள். தரவுகள் அ…
-
- 7 replies
- 1.1k views
-
-
பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க கனடா வாழ் புலம்பெயர் உறவுகளான ஜெயம், ஜெனா, ராஜ் ஆகியோர் கடந்த 13ம் நாள் கிளிநொச்சி பளையில் விவசாயம் கல்வி போன்ற முயற்சிகளுக்காக நீரிறைக்கும் மோட்டார் இயந்திரம் மற்றும் மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி என்பவற்றை வழங்கியுள்ளனர்.ஒருங்கிணைப்பாளர் கோகுலச்செல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த வாழ்வாதார உதவிகள் பளையைச் சேர்ந்த இரத்தினம் கறுப்பையா, கனகசீலன் நிர்மலா, சேனாதிராசா தெய்வானைப்பிள்ளை, செல்லையா செல்வேஸ்வரி ஆகியோருக்கும் கல்வியுதவிகள் ரவீந்திரன் பிரியங்கன், கந்தையா ஜெயசீலன், கனகசிங்கம் நிசாந்தன் ஆகியோருக்கு வழங்…
-
- 0 replies
- 473 views
-
-
https://chng.it/ZZCGSdj7Bn Justice for the Forcibly Disappeared: Ensure Truth, Justice, and Accountability for Chemmani and Beyond We, the undersigned, call upon the Government of Sri Lanka to take immediate, transparent, and meaningful action to address the long-standing issue of enforced disappearances and mass graves, including the recent discovery at Chemmani, Jaffna. The excavation at the Ariyalai Siththupaaththi Hindu Crematorium has already uncovered 19 bodies, including three infants. This painful discovery has reopened the wounds of thousands of families whose loved ones were forcibly disappeared during Sri Lanka’s brutal civil war. Chemmani is not just a site of…
-
-
- 1 reply
- 146 views
- 1 follower
-
-
தாயக மக்களுக்கு பிரித்தானியா கொவன்றி மக்கள் மேம்மாபாட்டு மையம் உதவி போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கடந்த 11-01-2012 அன்று பிரித்தானியாவில் இருந்து கொவன்றி மக்கள் மேம்பாட்டு மையத்தினரால் அனுப்பப்பட்ட பணம் பின்வரும் பயனாளிகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தாயக மக்களின் எதிர்கால நல்வாழ்வை கருத்தில் கொண்டு தாங்கள் இந்த உதவியை வழங்கியைமைக்கு தாயக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். சிலரது புகைப்படங்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களது தொலை பேசி இலக்கங்கள் இங்கு தரப்பட்டுள்ளது. அந்த இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுவதன் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.…
-
- 5 replies
- 3.4k views
-
-
ஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி ஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவிக்கான தங்கராசாவின் நன்றிக்கடிதம். இவ்வுதவியை முன் வந்து வழங்கிய பிரித்தானியா நிவேதா அவர்களுக்கு மிக்க நன்றிகள். குறித்த உறவால் கடிதம் எழுதும் திறன் இல்லாமையால் பிறிதொரு நபர் எழுதிக் கொடுத்த கடிதத்தில் ரமேஷ் அவர்கள் ஒப்பமிட்டுத் தந்துள்ளார். தொடர்புபட்ட செய்தி இணைப்பு :- http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/ http://nesakkaram.org/ta/%E0%AE%8A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%…
-
- 0 replies
- 478 views
-
-
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரைக்கும் ஆலைகள் நிறுவுதல். போரால் பாதிக்கப்பட்டு மீள எழுந்து கொண்டிருக்கும் முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களில் ஊனமுற்றவர்கள், போர் விதவைகளை உள்வாங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் எமது அமைப்பானது செயற்படத் தொடங்கியுள்ளது. மிளகாய்த்தூள், மாவகைகள், கோப்பித்தூள் உள்ளிட்ட அன்றாட பயன் பொருட்களை அரைத்துப் பொதி செய்து விற்பனை செய்யக்கூடிய சந்தை வாய்ப்பை எங்களது உற்பத்திக் குழுவினர் ஏற்படுத்தக் காத்திருக்கின்றனர். முதலாவதாக புதுக்குடியிருப்பு பகுதியை அண்டிய இடத்தில் முதலாவது அரைக்கும் ஆலையை நிறுவவுள்ளோம். இத்திட்டத்திற்கு 4லட்சரூபாய்கள் தேவைப்படுகிறது. (அண்ணளவாக 2300€) புடிப்படியாக இம்முயற்சியின் வெற்றி வேலைவாய்ப்பை…
-
- 3 replies
- 760 views
-
-
New Opportunities for Wounded, Widowed, and Orphans of War, (புதிய சந்தர்ப்பங்கள்) அமைப்பானது அமெரிக்க நாட்டு வருமானவரிச்சட்டத்தின் பிரிவு 501c3 பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்டு அமெரிக்க நாட்டைத் தளமாகவும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் வாழ் தமிழ் பேசும் மக்களைத் தன் சேவை நலங்களின் பெறுனராகவும்கொண்டியங்கும் ஒரு அறக்கொடை அமைப்பாகும். புலம்பெயர் தமிழ் மக்களுக்குத் தகவல் தருநோக்கில் உருவாக்கப்பட்ட எமது முகநூற் தளத்தினைத் (Facebook page) தற்போது நாம் விரிவுபடுத்தி வருகின்றனம். இந்த வகையில் நடைமுறையில் விரிந்துவரும், மற்றும் ஏற்கெனவே கனிந்துவிட்ட எமது திட்டங்கள் பற்றிய புள்ளிவிவரங்கள், சலனப்படங்கள், நிழற்படங்கள் போன்றவற்றால் நிறைந்து காணப்படும் இத்தளமானது மேலதிகமாக…
-
- 0 replies
- 442 views
-
-
பெண்கள் தலைமை தாங்கும் 53 குடும்பங்களுக்கான வலுவூட்டல் மேம்பாடு. மட்டக்களப்பு முறுத்தானை கிராமத்தில் 241 குடும்பங்களைக் கொண்ட 855பேர் வாழ்கின்றனர். போர் நடைபெற்ற காலங்களில் இக்கிராமமும் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகிய கிராமம். மெல்ல மெல்லத் தனது இயல்பை மீளப்பெற விரும்பும் இக்கிராமமானது அனைத்து வசதிகளாலும் மிகவும் பின் தங்கிய கிராமமாகும். கல்வி , சுகாதாரம் , உட்பட சமூகப்பிறள்வுகளும் நிறைந்த இடமாகக் காணப்படுகிறது. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களையே கொண்ட இக்கிராமத்தின் கல்வி , பொருளாதாரம் ஆகியவற்றை உயர்த்த வேண்டிய தேவையை உணர்கிறோம். ஊருக்குள் கிடைக்கும் வளங்களை சரியான முறையில் பயன்படுத்தி முன்னேற்றமடையக் கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனினும் வழிநடத்தல…
-
- 1 reply
- 549 views
-
-
எமக்காக வாழ்வை தியாகம் செய்தவர்களைப் பேணி காப்பாற்ற வேண்டியது எமது சமூகத்தின் கடமையாகும். ஆனால் அதனை எவ்வளவு பெயர் மனதில் முன்னிறுத்தி செயற்படுகின்றார்களென்பது கேள்விக்குறியே. மல்லாவி பாண்டியன்குளம் பகுதியில் முள்ளந்தண்டு செயலிழந்த நிலையில் நீண்ட காலமாக படுத்தபடுக்கையாக இருந்திருந்த 35 வயதேயான முன்னாள் போராளியொருவர் அண்மையில் இயற்கை எய்திருந்தார். படுக்கை புண் முள்ளந்தண்டை தாக்கியதினால் மரணம் சம்பவித்துள்ளது. எனினும் இயற்கை எய்திய முன்னாள் போராளியான அவ்விளைஞரது புகழுடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லக்கூட வசதியற்றதாககே அவரது குடும்ப நிலை இருந்துள்ளது.இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் சிலர் ஜெர்மனின் உதவும் இதயங்கள் அமைப்பினருக்கு அறிவித்துள்ளனர். விரைந்து தொழிற்பட்ட அவ்வமைப்ப…
-
- 2 replies
- 1k views
-
-
கிளிநொச்சி பாரதி புரத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்த பிள்ளைகளின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் எஸ்.கே.அறிவுச்சோலை SKT உரிமையாளரால் இன்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 1991ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பிற்காக இயங்கிய அறிவுச்சோலை இல்லம் யுத்தம் காரணமாக முழுமையாக அழிவடைந்தது. மேற்படி இல்லத்தை மீளவும் இயக்குவதற்கு நீண்ட காலமாக பலரும் முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் பயனாக இன்று முதல் மீண்டும் கிளிநொச்சியில் எஸ்.கே.அறிவுச்சோலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று ஒன்பது மணியளவில் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் பாராளுமன்ற உ…
-
- 3 replies
- 1.8k views
-
-
நாவலர் ஆங்கிலபாடசாலை பாலர்களுக்கு சீருடை வழங்கல் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் சுமார் 900 குடும்பங்களை கொண்ட நாவற்குடா கிழக்கு எனும் பின்தங்கிய கிராமம் உள்ளது. இங்கு சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்காக இவ்வூர் கிராம அபிவிருத்திச் சங்கம் நாவலர் ஆங்கில பாலர் பாடசாலை ஒன்றினை 2013 தை மாதம் முதல் நடத்தி வருகின்றது. இங்கு ஆரம்பக்கல்வியைப் பெற்றுவரும் 16 பாலர்களுக்கு சீருடையினை நேசக்கரம் வழங்கியுள்ளது. இன்று ஆங்கிலப்பாடசாலைகள் பணக்காரர்களுக்கு மட்டுமேயான ஒன்றாகவுள்ளது. இந்நிலையில் ஏழைமாணவர்களும் ஆங்கிலக்கல்வியைப் பெற வைக்கும் நோக்கில் ஆசிரியர்களுக்கான சிறிய கொடுப்பனவின் ஒருபகுதி உதவியை மட்டும் பெற்று இப்பாடசாலையை நடத்தப்படுகிறது. பாலர்களின் தேவைகளான புத்தகங்கள் சீருடை போன…
-
- 0 replies
- 490 views
-
-
‘சிறுவர் போசாக்கு வாரம்’ 100 குழந்தைகளை உள்வாங்கும் திட்டம். போசாக்கு மாதத்தினை முன்னிட்டு போசாக்கு குறைந்த சிறுவர்கள் (இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் சிறுவர்கள் ஒரு வயது முதல் 5வயது வரையானவர்கள்) , தாய்மார்களுக்குமான சத்துணவு வழங்கலினை மேற்கொள்ளும் திட்டத்தினை தேன்சிட்டு உளவள அமைப்பானது பரிந்துரை செய்துள்ளது. இத்திட்டத்தில் 2வாரகாலத்திற்கான போசாக்கு உணவுத் திட்டத்தின் கீழ் வறுமையால் நல்லுணவு கிடைக்காத போசாக்கு குறைபாடுள்ள குழந்தைகள் 100பேரைத் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யவுள்ளோம். வடகிழக்கில் இரு இடங்களில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் குழந்தைகளுக்கான 2வாரத்திற்கான 2நேர உணவு மற்றும் மாலைநேர சிற்றூண்டிகளும் வழங்கி விழிப்பணர்வு வாரமாக அனுட்டிக…
-
- 0 replies
- 784 views
-
-
கல்வி என்ற இலக்கினூடாக உலகத்தில் நமதினத்தை பெருமைப்படுத்தவேண்டும்…. கிளிநொச்சி பாரதிபுரம் ஒக்ஸ்போட் தனியார் கல்வி நிறுவனத்தின் பருத்திவிழாவும் பரிசளிப்பு விழாவும் நேற்று பாரதிபுரம் வித்தியாலய மண்டபத்தில் கல்வி நிலையத்தின் இயக்குனர்; கே.எம்.கேதீஸ் தலைமையில் நடைபெற்றது. நாமம் இதில் கலந்துகொண்ட வேளை எமது பதிவுகளாக….. பாரதிபுரத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடசாலையில் புறச்செயற்பாடாக மாணவர்கள் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் தங்கள் பொழுதை சிறந்த முறையில் ஆக்குவதற்காக இத்தகைய கல்வி நிலையங்களின் பங்கு அளப்பரியது. ஒக்ஸ்போட் கல்வி நிலையத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கு சில தரப்புக்களால் பல்வேறுமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் இந்தப்பிரதேச மக்கள் இந்த கல்வி நிலையம் மாணவர்…
-
- 0 replies
- 553 views
-
-
2013 புலமைப்பரிசில் 5ம் வகுப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மட்டக்களப்பு மேற்கு வலயம் ஏறாவூர் மேற்கு கோட்டப்பிரதேசத்தில் நடைபெறும் 2013 புலமைப்பரிசில் 5ம் வகுப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேசம் இலவச வழிகாட்டி பயிற்சி முன்னோடிப் பரீட்சைகளில் மேற்படி கோட்டப் பிரதேசத்தில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற 48மாணவர்களுக்குமான சிறப்பு தயார்படுத்தல் பயிற்சி வகுப்பினை ஆவணி 24ம் திகதி வரையும் நடாத்த திட்டமிட்டு மாணவர்களுக்கான தொடர் பயிற்சிநெறி நடைபெற்று வருகிறது. இம்மாணவர்கள் அனைவரும் திங்கள் தொடக்கம் சனிக்கிழமை வரையிலும் தங்கி நின்று கல்வியைப் பெறுகின்றனர். இவர்களுக்கான உணவு இதர அடிப்படை உதவிகளை சோபா நிறுவனம் வழங்கிவருகிறது. நேசம் …
-
- 0 replies
- 658 views
-
-
சம்பூர் அகதிக்குடும்பங்கள் அரசினால் புறக்கணிப்பு - த.தே.கூட்டமைப்பு [கனடா] மறுவாழ்வு மையம் உதவுகிறது [ வெள்ளிக்கிழமை, 11 சனவரி 2013, 18:00 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மறுவாழ்வு [கனடா] மையத்தின் ஆதரவுடன் மூதூர் கிழக்கு பிரதேசத்தில் சம்பூர் மற்றும் கிராமங்களிலிருந்து 2006 ஏப்ரல் மாதம் சிறிலங்கா இராணுவம் நடத்திய தாக்குதலில் இடம்பெயர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நான்கு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 1224 தமிழ் குடும்பங்களில் கட்டைப்பறிச்சான் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 400 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண உதவியாக உலர்உணவுப் பொதிகள் கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டன. கிழக்கு மாகாண சபையில் அங்கம்…
-
- 3 replies
- 695 views
-
-
-
- 5 replies
- 5.5k views
- 1 follower
-
-
மூன்று ஆண்டுகளை கடந்து கனடா கணினி நிலையம் வடமராட்சி மருதங்கேணியில் இயங்கி வருகின்றது. எங்களது நோக்கம் அந்த பிரதேசத்தில் இருக்கும் மாணவ சமூகம் கணினி பயன்பாட்டினை ஊக்குவிப்பதேயாகும். இருநூறு மாணவர்களுக்கு மேல் MS Office தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் பெற்றுள்ளார்கள்.தற்சமயம் பெரியோர்களும் இதனால் பயனுறுகிறார்கள். இந்த நிலையத்தை பொறுப்பெடுத்து நடத்தும் சூர்யா மற்றும் அணைத்து ஊழியர்களுக்கும் நன்றிகள். மே 2016 ஆண்டில் தொடங்கிய இந்த நிறுவனத்திற்கு இதுவரை ருபாய் 1,474,886.70 (Canadian $12,301) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதினை அறிய தருகின்றோம். தொடர்ச்சியாக நிவாரண அமைப்பிற்கு பங்களிக்கும் அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி! மே 2016 துவக்க நாளில் …
-
- 0 replies
- 605 views
-
-
மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர் ஒருவருக்கு 15ஆயிரம் ரூபா உதவுங்கள். மட்டக்களப்பு நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 46கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிராமமே கோப்பாவெளி எனப்படும் நீர்வளத்தைக் கொண்ட கிராமம் ஆகும். மொத்தம் 114 குடும்பங்களைக் கொண்ட இக்கிராமத்தில் 105 குடும்பங்கள் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் 25 விதவைகளும் அவர்களது பிள்ளைகளும் உட்பட 52 குடும்பங்கள் மீன்பிடித் தொழிலையும் மீதி குடும்பங்கள் விறகு வெட்டுதல் , மாடுமேய்த்தல் என சில தொழில்களைச் செய்து வருகின்றனர். போரால் பாதிப்புற்ற கிராமங்களில் இக்கிராமமும் மிகவும் பாதிப்படைந்த ஒரு கிராமம். இந்த மக்களிடம் பணம் வசதிகள் எதுவுமில்லை. ஆயினும் அன்றாட வாழ்வை கொண்டு செல்ல தங்களது உடல் உழைப்பை மட்டுமே மூலதன…
-
- 24 replies
- 2.7k views
-
-
போரால் பாதிக்கப்பட்ட 5குடும்பங்களுக்கான தொழில்விருத்திக்கான உதவியாக 252500ரூபா (இரண்டு இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து ஐநூறு ரூபா) பண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவிலிருந்து நேசக்கரம் நீட்டிய நாதன் , பவித்திரன் , MGR அகியோரின் உதவியில் மேற்படி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3குடும்பங்களுக்கான அவசர நிதியாக 50000ரூபா (ஐம்பதாயிரம் ரூபா) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இப்பங்களிப்பை வழங்கிய பெயர் குறிப்பிட விரும்பாத உறவுகளுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகளை கிழக்கு மாகணத்தில் போரால் பாதிக்கப்பட்ட உதவிகள் பெற்ற குடும்பங்களின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம். உறவுகளுக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள :- முகவரி: Nesakkaram e.V Hauptstr …
-
- 0 replies
- 608 views
-
-
கிளிநொச்சியில் அமைந்துள்ள... இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில், நடத்தப்படும் 2021 ஆம் ஆண்டிற்கான... இரண்டு வருட முழு நேர கற்கை நெறிகளுக்காக... விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. (15 வகையான கற்கை நெறிகள்) வருகையின் அடிப்படையில் மாதாந்தம் Rs.4000/= கொடுப்பனவாக வழங்கப்படும் வெளி மாகாணத்தில் இருந்து வருகின்றவர்களுக்கு தங்குமிட வசதிகள் கொடுக்கப்படும்தேவையான தகைமை :சாதாரண தர பரீட்சையில் தமிழ் மொழி மற்றும் கணிதம் உள்ளடங்களாக இரண்டு அமர்வுகளுக்குள் ஆறு பாடங்களில் சித்தி அல்லது குறித்த பாட நெறிக்குரிய NVQ 03 தகைமையை பெற்றிருத்தல்வயதெல்லை : 16 - 24 Closing Date : 30. 04. 2021 Sivakumar Subramaniam
-
- 8 replies
- 1.9k views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து கல்வி கற்கும் 15மாணவர்களுக்கான கல்வியுதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது. மீள்குடியேறியுள்ள கிராமங்களில் வாழும் இம்மாணவர்கள் தமது கல்விச் செயற்பாட்டைத் தொடர்வதற்கான பொருளாதார உதவிகளை இழந்து நிற்கின்றனர். ஒரு மாணவருக்கு 10€ (அண்ணளவாக இலங்கை ரூபா 1500ரூபா) தேவைப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் முன்னாள் போராளிகளிலிருந்து 5மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கான உதவிகளை எம்மிடம் வேண்டியுள்ளனர். 2மாணவிகளும் 3மாணவர்களும் உறவுகளிடமிருந்து உதவிகளை எதிர்பார்த்து விண்ணப்பித்துள்ளனர். ஒரு மாணவருக்கு தலா 4ஆயிரம் ரூபா தேவைப்படுகிறது. உதவ விரும்பும் உறவுகள் கீழ் வரும் விபரங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். உதவிகளை…
-
- 1 reply
- 1.1k views
-