துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
ஒக்ரோபர்மாதம் 2011 கணக்கறிக்கை ஒக்ரோபர் 2011 கணக்கறிக்கை கணக்கறிக்கையினை PDF Fileவடிவில் இணைத்துள்ளோம். கீழ் வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையினைப் பாருங்கள். ஒக்ரோபர்மாதம் 2011 கணக்கறிக்கை வளமையாக ஒவ்வொரு 5ம் திகதிக்குள்ளும் வெளியிடப்படும் கணக்கறிக்கை இம்மாதம் 8ம் திகதி வரை தாமதமானதற்காக உறவுகள் மன்னிக்கவும். ஜெகதீஸ்வரனின் மருத்துவத்திற்காக உங்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியின் கணக்கறிக்கையை அவரது அக்காவிடமிருந்து பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. இன்றுதான் ஜெகதீஸ்வரனின் அக்காவின் கடிதம் கணக்கறிக்கை கிடைக்கப்பெற்றது. அதனையும் இம்மாத அறிக்கையுடன் இணைத்துள்ளோம். *உதவிய அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்*
-
- 0 replies
- 760 views
-
-
இரண்டாம் இணைப்பு.தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரனின் அலுவலகத்தில் பதிவுசெய்தால் புலம்பெயர்ந்து வாழுகின்ற உறவிகளிடமிருந்து வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற பரபரப்புத் தகவலொன்று சமூகவலைத் தளமான ' பேஸ்புக் ' வாயிலாக பரப்பப்பட்டுவருவதால் போராளிகளும் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் குழப்பமடைந்துள்ளனர் . புலம்பெயர்ந்து வாழுகின்றவர்களின் உதவிகளை குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் அலுவகத்தின் ஊடாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதற்கான பதிவுகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் இந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அத்துடன் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கும் ம…
-
- 2 replies
- 760 views
-
-
உறவுகளே இந்த காணொளியில் உள்ள லிண்டன் (Lindon) எனும் இளைஞன் எனது ஊரை சேர்ந்தவர் ....சிங்கள தாய் தந்தைக்கு பிறந்திருந்தாலும் சிறுவயது முதல் எனது ஊரிலேயே வாழ்ந்து வருகிறார்....அதுமட்டுமில்லாது பிறப்பிலேயே உடல் ஊனமுற்ற இவர் சுய முயற்சியில் Electronic Repairing படித்து தன் கையே தனக்குதவி என்று வாழ்ந்தவர் .....எங்களூரில் பலபேருக்கு (நான் உட்பட ) சிங்கள மொழியை பிள்ளையார் சுழி போட்டு கற்பித்தவர்...தற்போது Arthritis நோய் தாக்க அதிகரிப்பால் அவரது கை விரல் மூட்டுகள் மடிந்து இசைந்து கொடுக்க மறுக்கின்றன ....இதனால் முன்னைநாட்கள் போல அவரால் repairing ஐ திறம்பட செய்யமுடியவில்லை ... பௌத் போன்ற உபகரணங்களை பிடித்து வேலை செய்வதில் அதிக கடினத்தை எதிர்நோக்குகிறார் ....நடமாடும் திறனையு…
-
- 0 replies
- 756 views
- 1 follower
-
-
சர்வதேச எயிட்ஸ் தினம் விழிப்பூட்டல் பேரணி தமிழர் பிரதேசங்களில் தற்போது வெளிநாட்டவர் சுற்றுலாச் செல்லல் அதிகரித்துவருகிறது. இத்தோடு எயிட்ஸ் நோயின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. அது மட்டுமின்றி போரால் பாதிக்கப்பட்டவர்களையும் பொருளாதார வசதியுள்ளவர்கள் தவறாக வழிகளில் பயன்படுத்தி வருவதும் அதிகரித்துள்ள நிலமையில் பல குழந்தைகளை இளம் வயதினைரை எயிட்ஸ் அபாயத்தை எமது தழிழ்ச் சமூகமும் பெற்றுள்ளது. இன்றைய சர்வதேச எயிட்ஸ் தினத்தை விழிப்பூட்டல் நாளாக ஏற்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் மேற்படி பேரணியை ஒழுங்கமைத்திருந்தது. நேசக்கரம் பிறைட் பூயூச்சர் அமைப்பின் நாவலர் பாலர் பாடசாலையும் இணைந்து பேரணியில் எமது ஆதரவினையும் வழங்கியிருந்தது. இப்பேரணியில் …
-
- 3 replies
- 755 views
-
-
HMCநிறுவனத்தின் சீமெந்துக்கல் உற்பத்தியில் முதலாவது முன்னேற்றம் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டினை உயர்த்தும் முகமாக இவ்வருடம் 3ம் மாதம் இலங்கையின் நிறுவனங்களுக்கான சட்ட வரைபுக்கு அமைய HAND MADE CREATORS (PVT) Ltd என்ற பெயரில் நிறுவனமொன்றை ஆரம்பித்திருந்தோம். இந்நிறுவனத்தை ஆரம்பித்ததன் நோக்கம் தொடர்ந்து எங்கள் மக்களை உதவி உதவியென்று உபத்திரம் கொடுக்காமல் தொழில் முயற்சிகளைச் செய்வதன் மூலம் சுயபொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி வறுமையில் உள்ளவர்களை மீட்பதோடு அவர்களது உழைப்பிலிருந்து அவர்களது பிள்ளைகளின் கல்வியை உயர்த்துவதையும் நோக்காகக் கொண்டு ஆரம்பித்தோம். வியாபாரத்தில் அனுபவம் வியாபார தந்திரம் எதனையும் அறியாத புதியவர்களே இந்நிறுவனத்தின் ஒழுங்…
-
- 4 replies
- 750 views
-
-
புங்குடுதீவு சிறீ சுப்ரமணிய மகளிர் வித்தியாலய அதிபர் அவர்கள் எமது பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திடம் ஓர் வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தார். அதாவது தங்கள் பாடசாலையில் பாவிக்கப்பட்டு வந்த போட்டோக்கொப்பி இயந்திரம் 9 வருடங்களாக சேவையில் இருந்து திருத்தமுடியாத அளவு பழுதடைந்து விட்டதாகவும் அதற்கு பதிலாக புதிதாக ஒன்று வாங்குவதற்கு உதவி செய்யும் படி கேட்டிருந்தார். அத்துடன் நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஓர் புதிய இயந்திரத்திற்கான மதிப்பீடும் எடுத்துத் தந்துள்ளார். இது விடயமாக இணைய வழியில் ஒன்று கூடிய பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் உடனடியாகவே அவ்வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டு போட்டோக்கொப்பி இயந்…
-
- 5 replies
- 747 views
-
-
க.பொ.த உயர்தரக் கல்வியை தொடரக் கஷ்டப்படும் 350 வறிய ஆனால் திறமையான மாணவர்களுக்கு மாதாந்தம் கல்வி கற்பதற்காக 1500 ரூபா வீதம் வழங்கப்பட்டது. நாமும் கேட்டுக் கொண்டதற்கு அமைய இப்பெரிய முயற்சியை மேற்கொண்ட வலன்ரீனா மனித நேய அமைப்பு மிகவும் பாராட்டுக்குரியது.
-
- 0 replies
- 746 views
-
-
போரால் பாதிப்புற்ற தங்கராசா 10ஆயிரம் ரூபா உதவி தங்கராசா ரமேஷ் இவர் பிறப்பிலே ஊனமானவர். போரால் பாதிக்கப்பட்டு சொத்துகள் உடமைகள் யாவையும் இழந்து போனவர். எனினும் இழக்காத மனவுறுதியோடு முல்லைத்தீவு நகரில் கச்சான் விற்றுத் தனது குடும்ப வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்கிறார். வளங்கள் இல்லாத நிலமையில் அன்றாடம் தன்னால் இயன்றளவு முயற்சித்து உழைக்கும் தன்னம்பிக்கையுள்ள மனிதர். இவருடைய தொழிலை மேலும் சற்று விரிவுபடுத்திக் கொள்ள இவருக்கு இலங்கை ரூபா பத்தாயிரம் ரூபா (அண்ணளவாக 60€)உதவினால் போதுமென்ற பெருமனதோடு வாழும் மனிதர். இவருக்கு யாராவது உதவ முன்வந்து உதவினால் அவரது வாழ்வில் மீண்டும் புது நம்பிக்கையும் ஏற்றமும் உண்டாக ஏதுவாக இருக்கும். தொடர்புகளுக்கு :- Telephone: (Shanthy) +49…
-
- 3 replies
- 744 views
-
-
ஒரு காலையும், கையையும் இழந்த ஒருவருக்கும், அங்கவீனமான அல்லது கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நிலையிலும், தம்மையும் உறவினரையும் தமது உழைப்பில் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ள ஐந்து பெண்களுக்கும், உதவி தேவையாக இருக்கிறது. இவர்களுக்கு சிறு தொழில் முயற்சிகள் தேவையாக இருக்கின்றன. சிறிய தென்னந்தோட்டத்தில் வரும் வருமானமும், கோழி வளர்ப்பும் இவர்களுக்கு சாத்தியமான தொழில்களாக இருக்கின்றன. தேவையான பணத்தின் அளவு பற்றி இன்னமும் கணக்கிடவில்லை. உங்களால் உதவ முடியுமானால் தொடர்பு கொள்ளுங்கள். பணஉதவி மட்டுமல்ல, தொழில்துறை சார்பான உபகரணங்களை பெற்றுக்கொடுப்பது முதல், தொழில்நுட்ப அறிவு, தொழிலை நட்டமடையாமல் வருமானம் வரக்கூடிய வகையில் நடத்துவதற்கு உதவுதல், போன்றவற்றில் பங்களிப்பு செய்ய…
-
- 0 replies
- 732 views
-
-
யாழ்.இந்துக் கல்லூரியின் 2005 உயர்தர மாணவர்களால் கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 7 பாடசாலைகளுக்கு 45 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. கடந்த 3 வருடங்களாக யாழ் இந்துக் கல்லூரியின் 2005 உயர்தர மாணவர்கள் பல கல்விக்கான செய்ற்றிட்டங்களை குறிப்பாக வன்னிப் பகுதியில் யுத்ததினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மற்றும் பாடசாலைகளுக்கு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 2016ஆம் ஆண்டுக்கான கல்விக்கான செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட உயர்தர மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள்கள் மொத்தமாக பத்தொன்பது பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டன. அதன் அடுத்த கட்டமாக மேமாதம் 13ஆம் திகதி அம்பலவன்பொக்கணை அ.த.க…
-
- 0 replies
- 730 views
-
-
IBC தமிழ் தொலைக்காட்சியில் பிரதி ஞாயிற்று கிழமைகளில் மத்திய ஐரோப்பிய நேரம் மாலை 7:30 மணிக்கு ( 19h 30 ) ஒளிபரப்பாகும் "லகர தொடு கரம் கொடு " நிகழ்ச்சியில் பங்குபற்ற இன்றே தொடர்பு கொள்ளுங்கள்..... இது கடந்த வரம் ஒளிபரப்பானது...
-
- 0 replies
- 724 views
-
-
ஆனந்தபுரம் கிராமத்திற்கான தென்னங்கன்றுகள் வழங்கல் நிகழ்வு. மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமத்தின் குடியேறியுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் மீள வாழ்வுக்கான பணிகளை நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான தேன்சிட்டு அமைப்பானது முன்னெடுத்து வருகிறது. ஆனந்தபுரம் கிராமத்தில் குடியேறிய குடும்பங்களுக்கான பயன்தரு மரங்கள் நாட்டுவதற்கான உதவியை வேண்டியிருந்தோம். எமது வேண்டுதலையேற்று தங்கள் உதவியை வழங்க முன்வந்த உறவுகளான எமது திரு.திருமதி தெய்வேந்திரன் வதனி (வட்வெட்டித்துறை) கதிரவேற்பிள்ளை சீதாலக்ஸ்மி குடும்பத்தினரின் ஆதரவில் 41குடும்பங்களுக்கும் 410 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. அமரர்கள் நடராசா சறோயினிதேவி தம்பதிகளின் நினைவுநாளை முன்னிட்டு 14குடும்பங்களுக்கான தென்னைமரக்கன்றுகள் வழங்குவதற்கான …
-
- 2 replies
- 722 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கால்நடை விவசாய அபிவிருத்திக்கு பணம் உதவல். இந்த ஆரம்பத்தில், நவ்வவ் இன்று இந்த உயர்நிலை அடைவதற்கு காரணமாக இருந்த உங்களின் குறைவில்லாத கொடைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். நவ்வவ் கடந்த சில ஆண்டுகளாக கூடக் கூட திறனுடனான சிக்கலான முன்னெடுப்புகளை எடுத்துவருவதை நீங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறீர்கள். எங்கள் அமைப்பின் பிரகாரத்தில் உள்ளடங்கத்தக்கதாக, குடும்பங்களை மீளக் கட்டமைப்பதுடன் தொழில் வாய்ப்பையும் பெற்றுத்தரத்தக்க முழுமையான முன்னேற்றமாக அமைந்த கட்டைபறிச்சான் கமத்தொழில் முன்னேற்ற முயற்சியின் ஆச்சரியமான பெரு வெற்றி எமது திறன் வலு கூடிய முன்னெடுப்புக்களின் ஒரு உதாரணம். எங்களின் இலக…
-
- 2 replies
- 721 views
-
-
நேசக்கரம் கிராம அபிவிருத்தி பட்டப்படிப்பு உதவி. படித்த மாணவர்களை அவர்களின் கிராமங்களை மேம்படுத்தவும் உள்ளுர் வளங்களைப் பயன்படுத்தி தொழில்சார் துறைகளில் முன்னேற்றவும் Brightfuture Nesakkaram அமைப்பின் ஒன்றரை வருட கற்கைநெறியினை ஆரம்பிக்கவுள்ளோம்.போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் 19வயது தொடக்கம் 24வயதுக்கு உட்பட்டவர்கள் கிராம அபிவிருத்தி பட்டப்பட்டிப்பில் பங்கேற்க முடியும். கற்றலுக்குத் தேவையான தகைமை :- கல்விப்பொதுத்தராதரம் குறைந்தது 3பாடங்கள் சித்தியடைந்திருக்க வேண்டும். பாடத்திட்டம் :- 1) தகவல்தொழில்நுட்பம் 2) பொருளாதாரஅபிவிருத்தி 3) அனர்த்தமுகாமைத்துவம் 4) உளவியல் 5) சிறுவர்மேம்பாடு 6) கிராமிய வள முகாமைத்து…
-
- 4 replies
- 717 views
-
-
மத்திய - மாகாண கல்வி அமைச்சர்கள் - அதிகாரிகள் நித்திரையா? நெடுந்தீவு பாடசாலைகளுக்கு ஆங்கில ஆசிரியர் இல்லாத குறையை நெடுந்தீவு ஒன்றியம் (ஐக்கிய இராச்சியம்) நிபர்த்தி செய்துள்ளது. நெடுந்தீவுக் கோட்டக்கல்வி அதிகாரி திருமதி சாரதாதேவி கிருஷ்ணதாஸ் அவர்கள் நெடுந்தீவு ஒன்றிய பொருளாளர் மாலினி தர்மலிங்கம் அவர்களை தொடர்வு கொண்டு ஆங்கில ஆசிரியர் அவசியம் பற்றி எடுத்து கூறியதன் எடுத்துக் கூறியனை அடுத்து அல்பிறட் டேனிகிளாஸ் M,A(ind English) அவர்களை ஒன்றிய நிர்வாகசபையின் ஒப்புதலுடன் ஒன்றியத் தலைவர் கந்தையா புண்ணியமூர்த்தி நியமித்துள்ளார். இவ் ஆங்கில ஆசிரியர் வாரத்தின் மூன்று நாட்கள் நெடுந்தீவு மகா வித்தியாலயத்திலும் வாரம் இரு தினங்கள் நெடுந்தீவு சைவப்பிரகாசா வி…
-
- 5 replies
- 716 views
-
-
தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நன்கொடையாளர்கள் கவனத்துக்கு. இயற்றை அனர்த்த வேளைகளில் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழும் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் நிறுவனங்கள் , நன்கொடையாளர்களால் வழங்கப்படும் உலருணவு நிவாரணப் பொருட்களை எமது நிறுவனம் மூலம் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் கிடைக்கும் இலாபமானது நேசக்கரம் சமூக வேலைத்திடங்களுக்கு வழங்கப்படுவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கான வேலை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். உதாரணமாக :- அரிசி 10கிலோ(கல் மண் நீக்கப்பட்ட சுத்தமான அரிசி) – 670ரூபா (கடைவிலை) எம்மால் போக்குவரத்துச் செலவோடு 620ரூபாவிற்கு வழங்க முடியும். மீன்ரின் – 220ரூபா (கடைவிலை) எம்மால் போக்குவரத்துச் செலவோடு 180ரூபாவிற்கு வழங்…
-
- 0 replies
- 711 views
-
-
-
வறிய மாணவர்களுக்கு பேருதவி! - ரொரன்ரோ மனித நேயக் குரலுக்கு நன்றி தெரிவித்த பள்ளி அதிபர் மிகவும் பின் தங்கிய பிரதேசத்தை சேர்ந்த தமது பாடசாலைக்கு கனடா நாட்டின் ரொரன்ரோ மனித நேயக் குரல் அமைப்பு வழங்கிய உதவி பேருதவியாக அமைந்துள்ளதாக கிளிநொச்சி மாயவனூர் அதிபர் திருமதி ல. கோபாலராசா தெரிவித்தார். கிளிநொச்சி மாயவனூர் வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பேசிய பாடசாலை அதிபர் திருமதி ல. கோபாலராசா தமது பாடசாலை மிகவும் பின்தங்கிய பாடசாலை என்றும் அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் பல்வேறு நிலையிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்…
-
- 1 reply
- 703 views
-
-
அன்பார்ந்த நண்பர்களுக்கும் நவ்வாவ்இன் நலன் விரும்பிகளுக்கும், போரால் சீரழிந்த கிழக்குப் பிரதேசத்தில் சுய முயற்சிக் கமத்தொழில் பணிகளுக்கு நிதி வழங்கல் கிழக்கிலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இயல்பு வாழ்வுக்கு திரும்பவைப்பதில் நவ்வாவ் கடந்த ஒன்றரை வருட காலமாக முன்னெடுத்துவரும் செயல்பாடுகளைத் தாங்கள் நன்கறிவீர்கள் என்பதில் எமக்குச் சந்தேகம் இல்லை. கடந்த மார்ச் 2013 ல் அமெரிக்க வரியாணை செயலகம் எம்மை மார்ச் 2012 இலிருந்து பதிவு செய்யபட்ட அறக்கட்டளை நிலையமாக அதிவிரைவாக ஏற்றுக்கொண்டது, நாம் தனிய நின்று பொறுப்பெடுத்து நிதிவழங்கி பின்வரும் வரும் பணிகளை அவதானமாக திட்டமிட்டும், நுண்மையாக நிறைவேற்றி வைத்ததிலிருந்தும் ஊற்றெடுத்ததாகும் என்பதை நாம் பெருமையுடன் காட்டி…
-
- 3 replies
- 702 views
-
-
இலங்கைத்தீவிலே குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களிலே பல நெடுங் காலமாக தமிழர்கள் மீது நன்கு திட்டமிட்டு அரச படைகளாளும், ஏனைய சமூகத்தினராலும் நாங்கள் அடக்கப்பட்டு எமது சகோதரர்களையும், சகோதரிகளையும் இழந்தவர்களாக இந்த நாட்டிலே வாழமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் எமது உறவுகளுக்காக கனடாவில் இருக்கும் வாழவைப்போம் அமைப்பு வாழ்வாதார உதவித்திட்டங்களை எமது பகுதிகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கூறினார். நேற்று நாவிதன்வெளி பிரதேசத்தில் நடைபெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்விலும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்விலும், மாணவர்களுக்கான கொப்பிகள் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார். கனடாவில் இருக்கும் வாழவைப்போம் அமைப்பானது வாழ்வாதார உதவிகளுக்க…
-
- 0 replies
- 700 views
-
-
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிக்குக் கிடைத்த உதவி. மட்டக்களப்பு மயிலம்பாவெளி , தன்னாமுனையைச் சேர்ந்த சுந்தரதாஸ்அவர்கள் மூளைப்புற்றுநோய் கண்டறியப்படாமல் நீண்ட நாட்கள் நோயோடு போராடினார். 3பிள்ளைகள் குடும்பத்தோடு வாழ்ந்து சுந்தரதாஸ் அவர்கள் தனது குடும்ப வாழ்வாதாரத்திற்கான வசதிகள் ஏதுமற்ற நிலமையில் எம்மிடம் உதவி கோரியிருந்தார். இவருக்கான முதல்கட்ட உதவியினை கருணையுள்ளம் கொண்ட எழிலி பொன்னுத்துரை அவர்கள் முன்வந்து வழங்கியிருந்தார். http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/
-
- 0 replies
- 698 views
-
-
தமிழின அழிப்பு கொடிய போரினால் பாதிக்கப்பட்ட எமது தாயக உறவுகளை வலுப்படுத்த யேர்மனியில் இயங்கும் Help for Smile அமைப்பு பல்வேறான உதவித்திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகின்றது. அந்தவகையில், அவசர நிவாரண உதவிகள் , சுயதொழில் செய்வதுக்கான உதவித்திட்டம் , சிறுவர்களுக்கான உதவித்திட்டம் என பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. அத்தோடு வரலாறு காணாத இயற்கை வெள்ள அனர்த்தத்தை கண்ட தமிழக மக்களுக்கும் நிவாரண நிதி Help for Smile அமைப்பால் வழங்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் தாயக மக்களுக்கான உதவித்திட்டங்கள் விரிவாக்கப்பட்டு மேலும் அதிகரிக்கப்படும் என Help for Smile அமைப்பின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். …
-
- 2 replies
- 697 views
-
-
நேசக்கரம் பிறைட் பியூச்சர் புலமைப்பரிசில்2013 வழிகாட்டி வினாத்தாள் பகிர்வு நேசக்கரம் பிறைட் பியூச்சர் நிறுவனத்தின் இலவச கல்வித்திட்டம் 2013 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாதாந்த பயிற்சி வகுப்புகளும் பிரத்தியேக தயார்படுத்தல் வினாத்தாள் பகிர்வும் 18.02.2013 ஆரம்பமாகியுள்ளது. 10ஆயிரம் மாணவர்களை உள்ளடக்கிய இத்திட்டத்தின் மார்ச் மாதத்துக்கான மாதாந்த இலவச வழிகாட்டி வினாத்தாள்கள் மட்டக்களப்பு , அம்பாறை , திருகோணமலை ,மன்னார் ஆகிய மாவட்டங்களில் போரால் பாதிப்புற்ற அடைவுமட்டம் குறைந்த பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. மாணவர்களின் அடைவு மட்டத்தினை உயர்த்தும் வகையில் எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் புலமைப்பரிசில் ஆவணி2013 பரீட்…
-
- 0 replies
- 696 views
-
-
சம்பூர் அகதிக்குடும்பங்கள் அரசினால் புறக்கணிப்பு - த.தே.கூட்டமைப்பு [கனடா] மறுவாழ்வு மையம் உதவுகிறது [ வெள்ளிக்கிழமை, 11 சனவரி 2013, 18:00 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மறுவாழ்வு [கனடா] மையத்தின் ஆதரவுடன் மூதூர் கிழக்கு பிரதேசத்தில் சம்பூர் மற்றும் கிராமங்களிலிருந்து 2006 ஏப்ரல் மாதம் சிறிலங்கா இராணுவம் நடத்திய தாக்குதலில் இடம்பெயர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நான்கு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 1224 தமிழ் குடும்பங்களில் கட்டைப்பறிச்சான் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 400 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண உதவியாக உலர்உணவுப் பொதிகள் கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டன. கிழக்கு மாகாண சபையில் அங்கம்…
-
- 3 replies
- 695 views
-
-
மாற்றுத் திறனாளிகளின் நண்பன் We Can அறக்கட்டளைநிறுவனம் உள்நாட்டுப் போரைநாம் மறந்துபோனாலும் அதுதந்துவிட்டுச் சென்றஆறாதஉடல் மற்றும் உளகாயங்களால் தினம் தினம் செத்துப் பிழைப்பவர்கள் மாற்றுத் திறனாளிகள். பிறப்பால் உடல் அங்கவீனமானவர்களைவிடகொடியபோரால் அவயவங்களை இழந்தவர்கள் வடக்கில் அதிகம். மன்னார் மாவட்டத்திலேமாந்தைமேற்கில்தான் மாற்றுத் திறனாளிகள் அதிகம் பேர் உள்ளனர். மாந்தைமேற்கின் மாற்றுத் திறனாளிகள் மண்மீதுபற்றும் இனத்தின் மீதுகாதலும் கொண்டவர்கள்.உடலளவில் பாதிப்படைந்தவர்களாக இருந்தாலும் உளரீதியில் மிகப் பலசாலிகள். இவர்களுக்கானவாழ்வை WeCan என்னும் அறக்கட்டளை அமைப்பு கட்டமைத்து வருகின்றது. காலம் முழுக்க சுய தொழிலை மேற்கொள்ளத் தேவையான உதவியை மாற்றுவலுவுள்ளோருக்கு அளித்…
-
- 0 replies
- 689 views
- 1 follower
-