மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
957 topics in this forum
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையிலிருந்து.... உலக வரலாற்றில் எங்கும், எப்பொழுதும் நிகழாத அற்புதமான தியாகங்களும், அதிசயமான அர்ப்பணிப்புகளும் இங்கு, எமது தாயக மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. சாவுக்கும் அஞ்சாத வீரத்திற்கும், ஈகத்திற்கும் இலட்சியப் பற்றிற்கும் எமது மாவீரருக்கு நிகர் எவருமேயில்லை என நான் பெருமிதத்துடன் கூறுவேன். இப்படியானதொரு மகிமையும், மேன்மையும் வாய்ந்த ஒரு மகத்தான வீரகாவியத்தை எமது மாவீரர்கள் படைத்துச் சென்றிருக்கிறார்கள். எமது போராட்டம் ஒரு உந்துசக்தியாக, ஒரு முன்னுதாரணமாக, ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது. முழு விபரம் இணைப்பை சொடுக்கவும் : http://veeravengaika...ninaivuvanakkam தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னு…
-
-
- 16.9k replies
- 1.3m views
- 3 followers
-
-
கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் Published By: Vishnu 17 Jan, 2026 | 04:29 AM கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் முத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (16) முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுவேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன. இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். அந்தவகையில் முல்லைத்தீவு - தேராவில் மாவீரர் துயிலுமில்ல மண்டபத்திலும், மூங்கிலாறு வடக்கு மாதர்கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்திலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமை அக…
-
- 0 replies
- 55 views
- 1 follower
-
-
லெப். கேணல் நிரோஜன் கடலில் அவனது காவியம்: கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் நிரோஜன் கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக்கொண்டிருந்தது. இந்த அலையைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்கள் நெஞ்சில் அழியாத தடங்களாகப் பதிந்திருக்கின்றன. கடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திறந்து பேசுமானால் இவனைப் பற்றி இவன் சாதனைகளைப் பற்றி இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் என்பது பற்றி தெளிவாகச் சொல்லியிருக்கும். ஆனால்இ அவை இப்போது மௌனமாய் இருப்பதால் அந்தப் பணியை எனது எழுதுகோல் ஏற்…
-
-
- 7 replies
- 1.8k views
- 1 follower
-
-
நானும் ஆனந்தபுரமும்..... 04/04/2009. அப்போது அந்த வைத்தியர் யார் என்று எனக்கு தெரியாது அவருக்கு உதவியாக அவருடைய மாமா அங்கு இருந்தார் அவருடைய குடும்பமும் அதே வைத்தியசாலையில் இருந்தது என்று தெரியும். ஆனந்தபுர கோர தாண்டவத்தின் இறுதி நாள் வித்துடல்கள் கிடந்த கிடங்கிற்குள் மயக்க நிலையில் நான் இருந்தது தெரியாமல் வீரச்சாவு என்று நினைத்து என்னையும் போட்டு விட்டு சென்று விட்டனர். மயக்கம் தெளிந்து நான் அலம்பிக்கொண்டு கிடந்தேன் ஒருவர் எனது கைகளை பிடிக்க மற்றையவர் எனது இரு கால்களையும் பிடித்து தூக்கி கொண்டு வாகனத்தில் போட்டார்கள். பின் வைத்தியசாலையில் நான் பெரிய சத்தமாக கத்தினேன் நான் சாக போறன் சாகப்போறன் என கத்தினேன் அதற்கு முதல் தேசிக்காய் தண்ணி தாங்க என்று கத்த அங்கு இருந்த வைத்தி…
-
- 3 replies
- 642 views
-
-
சிங்களத் தாயாரான திருமதி சீலாவதி அவர்களின் 5 பிள்ளைகளும் தவிபு அமைப்பில் போராளிகளாகயிருந்தனர். அவர்களில் 3 பேர் மாவீரர்களாயினர். கப்டன் சிவரூபன், வீரவேங்கை சிவரூபன், வீரவேங்கை இளமயில் ஆகியோரே மாவீரர்களாயினர். இவரின் ஏனைய இரு பிள்ளைகளில் ஒருவரை இயக்கத்திலிருந்து இயக்கமே விடுவித்தது, பெற்றாரிற்கு உதவிக்காக. எனினும் அவர் கிபிர் வான்குண்டுவீச்சில் 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இறந்து போனார். மற்றையவர் பேருக்குப் பின்னர் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இவரின் கணவர் தமிழராவார்.
-
- 0 replies
- 103 views
-
-
குறிப்பிட்ட 1-3 கிலோமீட்டர் பரப்பளவு. வல்லாதிக்க நாடுகளின் உதவிகளோடு முப்படைகளும் ஒருங்கிணைந்து தாக்கும் களமாக மாறி இருக்கிறது அந்த குறுகிய நிலப்பரப்பு. கந்தக நெடியும் குருதி நெடியையும் தவிர வேறெதும் இல்லாத இருண்ட பொழுது. மூடிய பதுங்ககழி இல்லை. திறந்தநிலை பதுங்ககழி வெட்ட எங்களால் முடியவும் இல்லை. நந்திக்களி அவ்வளவு திடமான மண். அதனால் பெரும்பாலும் சின்ன சின்ன கிடங்குகளே எம் அரண். அதை விட்டால் துணிகளில் நிரப்பப்பட்ட மண். அதுவும் இல்லை என்றால் திறந்தவெளியே எம் அரண். திரும்பும் இடமெங்கும் பிணக்காடு. “ஐயோ அம்மா என்னைக் காப்பாத்துங்கோ “ என்ற அலறல். காயப்பட்டுவிட்ட போராளி மைத்துனனின் பிள்ளைகள் இருவரையும் தூக்கிக் கொண்டு நடைப்பிணமாக நடந்து கொண்டிருக்கிறேன் நான். இல்லை இல்லை தவ…
-
- 0 replies
- 220 views
-
-
அன்புடன் குமுதினி அக்கா…! எப்பிடி நீ சுகமா இருக்கிறியா என்று எழுதிடத்தான் என் விரல்கள் துடிக்கிறது. ஆனால் நீ உன் நண்பிகளோடு இணைந்து தமிழீழ தேசத்துக்காக உன்னை விதையாக்கிவிட்டாய் என்ற தூய்மையான திமிர் எழுந்து என்னை “நினைவுக்கல்லுக்குள் நீ நலமாக உறங்குகிறாயா? என்று தான் கேட்க சொல்கிறது. நீ எப்படி நிம்மதியாக உறங்குவாய்? அந்த நிம்மதியை நாங்கள் உனக்குத் தரவில்லையே. உன் நிம்மதியாக உறக்கத்துக்கு கூட சந்தர்ப்பத்தை தராது எங்கள் தேசத்தை எதிரியிடம் கைவிட்டு விட்டோமே. குமுதினி அக்கா என்று தான் உனை நான் அழைப்பேன். என் பெரியப்பாவிற்கு நீ மூன்றாவதாக பிறந்தவள். சிறு வயதில் இருந்து நீ அமைதியின் உருவம். உன்னை நேசித்தவர்களுக்கு அது நன்றாகவே தெரியும். அக்கா அக்கா என்று உங்களோடு திரிந்த காலங…
-
- 0 replies
- 98 views
-
-
2006 மார்கழி 4 ஆம் நாள், நீயும் நானும் சந்தித்த முதல் நாள். நீ உயரமானவன் என்பதால் அந்த கல்லூரியின் பின்வரிசையையே ஆக்கிரமிப்பாய். முதன்நாளிலும் அப்படித்தான். மெல்லிய நீல கோடு போட்ட சேட் என்று நினைக்கிறேன். உன் புன்னகையை ஒரு தடவை பார்த்துவிட்டு முன்னாலே புரொஜெக்டரின் ஊடக வெளிவந்து வெண்ணிற திரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த கற்றலுக்கான எழுத்துக்களை பார்த்தேன். முதல் நாள் எந்த அறிமுகமும் இல்லை. மணிவண்ணன் உன் பெயர் என்பதை மட்டுமே அறிந்தேன். நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது. எம் கல்லூரி நாட்கள் இனிமையாக கழிந்தது. நீ கல்வியில் ஒரு படி மேலே இருந்தாய். உன் சிந்தனை முழுவதும், உன் இலக்கு முழுவதும் ஒரே ஒரு விடயத்தில் தான் குவிந்து நின்றது. அந்த பாடத்திட்டத்தின் ஒவ்வொரு நிலைகளையும் சிற…
-
- 0 replies
- 54 views
-
-
மேஜர் செஞ்சேரன் நீ எங்களின் நீலக் கடலில் சாதித்தவன். உன்னை அறிமுகம் இல்லாத கடற்புலிகள் மிகக் குறைவென்றே நான் நம்புகிறேன். ஏனெனில் அப்படித்தான் உன் பணி இருக்கும். நிர்வாக போராளியாக இருந்த நீ படிப்படியாக ஒரு பொறுப்பாளனாக உயர்ந்ததை யாரும் மறக்க மாட்டோம். 1996 மல்லாவி மண்ணுக்கு நானும் நீயும், எனது குடும்பமும் உனது குடும்பமும் இடம்பெயர்ந்து வந்தோம். உனது தம்பி ( சித்தியின் மகன்) எனது நெருங்கிய தோழனாகிய போது தான் நீ எனக்கு அறிமுகமாகினாய். அப்போதெல்லாம் அகிலன் அண்ணா என்று தான் உனை அழைப்பேன். நீங்கள் இரட்டைக் குழந்தைகள். ஒரே வயிற்றில் பிறந்த மற்றவன் நிமலன். உங்கள் இருவரையும் இனங்கண்டு கொள்வது என்பது மிக மிக கடினமான ஒன்று. அடிக்கடி உன்னை நிமலன் அண்ணா என்றும் அவனை அகிலன் அண்ணா என்…
-
- 0 replies
- 98 views
-
-
பூவொன்று புயலானது! ❤️💛 பலாலி கிழக்கை பூர்வீக இடமாக கொண்ட கந்தசாமி-சின்னத்தங்கச்சி இணையரிற்கு இளைய மகளாக பிறந்தவள் தான் விஜயராணி. குடும்பத்திலே அவளுக்கு 3சகோதரர்களும் 1சகோதரியுமாக, அவளது குடும்பம் பலாலியிலே மிகவும் செளிப்புடன் வாழ்க்கையை வாழ்ந்துவந்தனர். விஜயராணி தனது ஆரம்பக்கல்வியை பலாலி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையிலே கற்றாள்,பின்னர் 1990.ஆனி.15 > பலாலி இடப்பெயர்வு காரணமாக தனது கல்வியை கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயத்திலும் (தற்போது மத்திய கல்லூரியாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது) பின்னர் அச்சுவேலி- பத்தைமேனியில் வசித்த காலத்தில்- இடைநிலைக்கல்வியை அச்சுவேலி புனித தெரேசாள் மகளீர் கல்லூரியிலுமாக கற்றிருந்தாள். சிறுவயதிலிருந்தே மிகவும் துடிப்பானவளாக, பய…
-
- 0 replies
- 89 views
-
-
எனது மாமாவின் மகன் , மைத்துனன் , என்னைவிட இரண்டு வயது தான் அதிகம் ,ஆறடி உயரம் , சிறுவயதிலிருந்தே மிகுந்த ஆளுமையானவர் , விளையாட்டு கிரிக்கெட் முதல் கொண்டு கல்வி வரை மட்டுமல்லாது தமையனோடும் எங்களோடு போடும் குத்து சணடை தொடக்கம் விளையாட்டு வரை எப்போதும் அவர் இருந்தால் அது எங்களுக்குச் சிறிய திருவிழாதான். என் மாமா மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியவர் முதலில் மட்டக்களப்பு , சாவகச்சேரி பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியவர் . அதனால் ராகவனும் மட்டக்களப்பு , முதல் சாவகச்சேரி இந்து கல்லூரியிலும் , யாழ் இந்து கல்லூரியிலும் கல்வி பயின்றவர் . சிறுவனாக இருக்கும் போதே மிக உயர்ந்த சிந்தனை கொண்டு இருந்தவர் , ஒரு விமான ஓட்டியாக படிப்பேன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார்…
-
- 0 replies
- 121 views
-
-
விடுதலைப் பு*லிகள் ஒருதலைப் பட்சமாக போர் நிறுத்தம் செய்திருந்த காலப்பகுதியது என நினைக்கின்றேன் எனது மாமா வேலை நிமித்தம் மன்னார் பெருநிலப் பரப்பில் ஒரு முக்கிய பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார் விடுதலை பு*லிகளின் கட்டுப் பாட்டுப் பகுதியில் இருந்த எங்களது வீட்டிற்கு மாமா அவ்வப்போது வந்து போவார்.. தாய் மாமன் மாரை யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும் அப்படித்தான் நானும் என் குட்டி மாமா மீது அதீத நேசம்... அன்று ஒரு நாள் மாலை மங்கும் நேரம் எங்கள் வீட்டில் மாமா தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். மாமாவோடு போராளிகள் அல்லாத இரண்டு அண்ணா மார்களும் இருந்தனர் அவர்களும் எமக்கு பரிட்சயமானவர்களே ... மாமா அவ்வப்போது வீட்டிற்கு வரும்போது இவர்களும் கூட வருவார்கள்.. அன்றுதான் நான் மாமாவை உயிருட…
-
- 0 replies
- 102 views
-
-
இறுதி வரை உறுதியாக நின்றாய். பிரிகேடியர் தமிழ்செல்வன் அண்ணாவின் இறுதி வணக்க நிகழ்வு தான் உனக்கும் எனக்குமான இறுதி சந்திப்பு. தமிழ்செல்வன் அண்ணாவின் விதை குழியருகில் செல்ல நீண்ட நேர காத்திருப்பு. அத்தனை நேரமும் அவருக்கும் உனக்கும் இடையிலான சம்பாசனைகளை எனக்குள் விதைத்துக்கொண்டு வந்தாய். விதைகுழியருகில் வந்துவிட்டோம். நீ முன்னால் நான் உன் பின்னால். கையில் ஏந்திய மண்ணினை வித்துடலின் மேல் மெதுவாக தூவினோம். கையை நெஞ்சில் வைத்து மரியாதை செய்தாய். விழிகள் அருவியாக கரைந்தன. பாதங்களை உறுதியோடு முன்னால் வைத்து நகர்ந்தோம். அப்போது “ மச்சான் விரைவில எனக்கும் இப்பிடி மண் போடுவாய் என்று நினைக்கிறன். எதுக்கும் புலிகளின்குரலைக் கேளு ஈழநாதத்தை தினமும் பாரு“ என்று கூறினாய். அது உன்னைப…
-
- 0 replies
- 146 views
-
-
நண்பா உன்னுடைய கனவுகள் மிக நீண்டது…பயணத்தின் பாதையில் உன்னை தவற விட்டு விட்டோம்…. உன்னைப் பற்றி அதிகம் எழுத வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் இந்த முகநூல் அதற்கு உகந்ததல்ல… அது ஒரு காலம்…ஸ்கந்தபுரம் தொடக்கம் பூநகரி கௌதாரி முனை வரை பயணமும் பாதையும் எங்களுடைய யாழ்ப்பாணத்து கடமைகளை கதைகளை சொல்லும்…கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் விமானத்தை விட நாங்கள் வேகமாக யாழ்ப்பாணத்துக்கு சென்ற நாட்கள் பல… ஒருமுறை உனக்கும் பிரதீப் மாஸ்டருக்கும் சின்னதாக சண்டை.. எங்களுடைய முகாமுக்கு வந்து யாரிடமாவது பாதை இருக்கிறதா என்று நீ காத்திருந்த அந்த நினைவுகள் இன்றும் என் நினைவில்…உன்னுடைய தேசக்கடமை உன் உயிரை விட மேல் என்பது உன்னுடைய ஒவ்வொரு செயல்பாடுகளும் எங்களுக்கு உணர்த்திக் கொண்டே இர…
-
- 0 replies
- 79 views
-
-
“அந்தச் சிரிப்பும் கடைசி வார்த்தைகளும்...” 2006 ஆம் ஆண்டு மே மாதமளவில் அவனை கடைசியாக சந்தித்திருந்தேன். உடலாலும் மனதாலும் சோர்ந்திருந்தான். அதற்கு ஒரு மாதம் முன்பு வீதியால் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்திருந்தான். ஓட வழியின்றி இரண்டு மூன்று மதில்களால் ஏறி பாய்ந்தவனால், அதிக குருதிப்பெருக்கத்தால் ஒரு கட்டத்தில் இயலவில்லை. அருகில் தெரிந்த வீடொன்றின் மலசலகூடமொன்றில் சென்று படுத்துவிட்டான் - இல்லை மயங்கிவிட்டான். சிறிது நேரத்தில் அங்கு வந்த வீட்டின் அம்மா, இவனை அடையாளம் கண்டு கொண்டுள்ளார். உடனடியாக சறமொன்றினால் காயத்தை கட்டிவிட்டு தனக்கு தெரிந்த மருத்துவபீட மாணவன் ஒருவருக்கு தெரியப்படுத்தியுள்ளார். உடனேயெ சம்பவ இடத்திற்கு வ…
-
- 0 replies
- 88 views
-
-
01-11-2008 அன்று பகல் 2.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு செல்ல முற்பட்டபோது , கூட இருந்த ஒருவரால் காட்டி கொடுக்கப்பட்டு அரியாலை பகுதியில் இராணுவம் சுற்றிவலைத்தபோது நடைபெற்ற நேரடி தாக்குதலில் வீரச்சாவை தழுவிக்கொண்டார். இதே சம்பவத்தில் கப்டன் உத்தமன் எதிரியிடம் அகப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக குப்பி கடித்து வீரச்சாவை தழுவிக்கொண்டார். https://www.facebook.com/amal.raj.108
-
- 0 replies
- 87 views
-
-
இன்று மாவீரர் தினம்! November 27, 2018 இன்று மாவீரர் தினம் ஈழத்தமிழர்கள் அரசியல் உரிமைகளை பெற்று, சுதந்திர இனமாக வாழ வேண்டுமென்பதற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் நாள். ஈழ விடுதலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும், அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் மொத்தமான 30,000 வரையான மாவீரர்கள் ஆகுதியாகியுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர்நீத்த முதல் மாவீரன் லெப். சங்கர் (சத்தியநாதன்) உயிர்நீத்த நவம்வர் 27ம் திகதியையே புலிகள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தினார்கள். தமது அமைப்பிலிருந்து உயிர்நீத்தவர்களின் உடல்களை எந்த சந்தர்ப்பத்திலும் எதிரியின் கைகளில் சிக்க அனுமதிக்ககூடாது, உயிர…
-
-
- 125 replies
- 26k views
- 3 followers
-
-
சிறு கதை - 190 / கார்த்திகை தீபம் – 27 நவம்பர் 2025 இன்று கார்த்திகை தீபம். ஆனால் இந்த நாள், தீபத்தின் ஒளி மட்டுமல்ல — மண்ணுக்குள் உறங்கும் நினைவுகளின் நெஞ்சைத் திறந்து வைக்கும் நாள் இது. இரவு வானம் கருந்துகிலும் அணிந்து, சோகமும் நம்பிக்கையும் கலந்த நட்சத்திரங்களால் நிரம்பிக் கிடந்தது. மெல்ல வீசும் காற்றில், எரியும் விளக்குகளின் புகையோடு கலந்த தூப வாசனை — அது எந்த ஆலயத்திலிருந்தும் அல்ல … அது ஒரு வரலாற்றின் உயிர்வாசனை. ஆதித்தன், கைப்பிடி அளவு எண்ணெய் விளக்கை தன் உள்ளங்கையில் தாங்கியவாறு, மெதுவாக அந்த நினைவுத் திடலுக்குள் நுழைந்தான். புல்லின் மேல் இன்னும் பனித்துளிகள். சின்னச் சின்ன மண் மேடுகளில் சிவப்பு – மஞ்சள் ரிப்பன் கட்டப்பட்ட குச்சிகள். ஒவ்வொரு தீபமும் ஒரு உயிர்.…
-
- 0 replies
- 115 views
-
-
"🕯️ நவம்பர் 27 தீபத் திருநாள்" “🕯️ நாம் ஏன் தீபம் ஏற்றுகிறோம்?“ ஒவ்வொரு நவம்பர் 27 ஆம் தேதியும் தமிழ் உலகம் நினைவுகூருகிறது போரை அல்ல, அரசியலை அல்ல — மக்களை, உயிர்களை, கனவுகளை! சம உரிமைகளுக்கான ..... கண்ணியத்திற்கான ..... தாயகத்திற்கான ..... குழந்தைகள் பயமின்றி வாழ்வதற்கான .... நவம்பர் 27 அழைப்பிற்கு செவிகொடுத்தது வெறுப்பின் தீயால் அல்ல நம்பிக்கையின் ஒளியால் — நாம் விளக்கை ஏற்றுகிறோம் — உலகம் தங்கள் ஒளியைத் தாங்கிக்கொள்ள மறுத்துவிட்டதால்! நீதி அவர்களைப் பேச மறுத்துவிட்டதால் - திரும்பி வராத மக்களின் பெயர்களைக் கிசுகிசுக்கிறோம்! நாம் துக்கப்படுகிறோம் — ஏனென்றால் நாம் மனிதர்கள் மேலும் அவர்களும் மனிதர்கள்! நாளையத் தலைமுறைக்கென்று கண்ணீரிலே விதைத்த மறக்க முடியாத கன…
-
- 0 replies
- 73 views
-
-
🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul” ஓ… முள்ளிவாய்க்கால் ஆன்மாக்களே காற்றில் அலையும் ஜீவன்களே அலைகளுடன் நகரும் மென்மையானவர்களே உங்களின் முன் தலை குனிந்து வணங்குகிறோம்! உங்கள் துன்பம் மறக்கமுடியாதது உங்கள் பெயர்கள் மறையமுடியாதது உங்கள் கனவுகள் எங்களால் வாழட்டும்! குழந்தைகளைப் பாதுகாத்த தாய்மார்களுக்கும் கதிரவனைக் காணாத குழந்தைகளுக்கும் நம்பிக்கையை மட்டுமே சுமந்த இளைஞர்களுக்கும் நாங்கள் இந்த தீபத்தை ஏற்றுகிறோம்! உங்களை கைவிட்ட உலகிற்கு இந்த தீபம் வழிநடத்தட்டும்! நாங்கள் வழங்க முடியாத பாதுகாப்பை அமைதி சூழ்ந்து கொடுக்கட்டும்! முள்ளிவாய்க்காலின் ஆன்மாக்களே நாங்கள் உங்களைப் போற்றுகிறோம் உங்களுக்காகப் பேசுகிறோம்! ஒவ்வொரு தீபத்திலும் …
-
- 0 replies
- 349 views
-
-
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
- 3 replies
- 205 views
- 1 follower
-
-
ஈழத்தமிழருக்காக தனது இறுதி மூச்சுவரை அல்லும் பகலும் பாடுபட்ட ஒரு இளம் அரசியல்வாதியை இழந்து இன்றோடு 19 ஆண்டுகள் கடந்தது. நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி மாமனிதர் நடராஜா ரவிராஜ். Babu Babugi
-
- 6 replies
- 378 views
-
-
அறிந்திராத கடற்கரும்புலிகள்: 2006 இல் கடற்கரும்புலிகளானோரில்: தலைநகர் திருமலை கடற்பரப்பில்: மேஜர் நிலாவேந்தி மன்னார் கடலில் 11.02.2006: லெப். கேணல் புரட்சிநிலவன் மற்றும் இரு நாட்டுப்பற்றாளர்கள் மட்டு மாங்கேணி கடற்கரையில் வைத்து தேசவிரோதிகளால் 24.08.2006: கப்டன் இயல்வளவன், கப்டன் இசையரசன் பொத்துவில் கடற்பரப்பில் 17.09.2006: லெப்.கேணல் அந்தணன் (தமிழ்மாறன்), லெப்.கேணல் கலைச்செல்வன் (சபீன்), லெப்.கேணல் விதுசன் (வெள்ளை), மேஜர் தமிழ்த்தென்றல், கப்டன் சமர்மறவன் இவர்களுடன் கடற்புலிகள் சிலரும் அதே விசைப்படகில் காவியமாகினர். புல்மோட்டை கடற்பரப்பில் 24.09.2006: மேஜர் மைந்தனா, கப்டன் கதிர்மதி தமிழீழ கடற்பரப்பில் 15.10.2006: லெப். கேணல் வளவன், 2ம் லெப். அன்புக்கொடி பருத்தித்துறை - வல்…
-
- 1 reply
- 301 views
-
-
பார்திபன் கனவு எங்கள் பார்திபனுக்கும் ஒரு கனவிருந்தது, அவன் மனதில் அனல் குடி இருந்தது. உறையூரான் கனவு சோழத்தை ஒட்டியது, எங்கள் ஊரெழுவான் கனவு ஈழத்தை பற்றியது. சோழப் பார்தீபன் கனவு வளர்த்தது வம்சத்தை, எங்கள் ஈழப் பார்தீபன் நகர்வு, சிதைத்தது பாரத வஞ்சத்தை. பழுவேட்டையர்கள் உடம்பு பல தழும்புகள் கொண்டதாம். போங்கடா போங்கள், எங்கள் பார்தீபன் உடம்பே தழும்பில்தான் இருந்தது. அவனுக்கு பொருத்தப் பட்டது ஆட்டு ஈரலாம். இருக்கட்டும், அவன் இதயம் வேங்கையினது. அவன் ஒரு சாரம் கட்டிய பொடியன். ஆனால், பாரதத்துக்கே காந்திய சாரம் புகட்டிய வலியன். மருத்துவனாய் வந்திருக்கவேண்டியவன், இனத்தின் ரணத்திற்கு தானே மருந்தாய் வந்தான். முடிவில் மருத்த…
-
-
- 13 replies
- 1.7k views
-
-
தேசியத் தலைவர் தோள்தட்டி வளர்த்த கடல்வேங்கை. லெப் கேணல் பழனி. 1992 காலப்பகுதியில் கடற்புலிகள் அமைப்பிற்கு வந்த நாட்களிலிருந்து எட்டு வருடங்கள் தொடர்ந்த நட்பொன்று மூச்சிழந்துபோனது. இயக்கத்தின் கடைசி மூச்சென்று தலைவரால் பெயர்சூட்டி நடத்தப்பட்ட அந்த இரகசியக் கடல் நடவடிக்கையான ‘ஒப்பரேசன் மூச்சு’ எனும் ஆழ்கடல் ஆயுத வினியோக நடவடிக்கையில் தொடராக 25 நாட்கள் முக்குளித்து நின்று வானில் எமது வான்கலங்கள் பறப்பதற்காய் அந்தக் கலங்களையே சுமந்துவந்த படகில் இவனுமாய் பத்திரமாய் கரைசேர்த்த பாரி அவன். ஒன்றாயிருந்து ஒருவேளைகூட விட்டுப்பிரியா உறவாகி தோள்கொடுத்துநின்ற நண்பனிவன் 15/08/2000 அன்று தனது இன்னுயிரை எம் தேசத்துக்காய் தந்து வீரவரலாறாய் மண்ணை முத்தமிட்டான். நினைவுகளுடன் புலவர். க…
-
- 0 replies
- 159 views
-