மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
2ம் லெப்டினன்ட் சுரேந்தினி வலிகாமத்தின் வடபகுதியில் அமைந்த அழகிய கிராமம்தான் இளவாலை. விவசாயிகளின் கை வண்ணத்ததில் பசுமை குறையாது செழிப்புடன் விளங்கியது. தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக பல ஆண், பெண் போராளிகளைத் தந்து புகழிபூத்த மண்ணது. அந்த மண்ணில் பிறந்ததாலோ என்னவோ ஜனந்தினியும் அச்சம் சிறிதும் இன்றி ஆயுதம் கரத்தில் ஏந்தி களம் பல கண்டு வீரச்சாவை புகழுடன் தழுவிக் கொணடவள். இளவாலையைச் சேர்ந்த பரமானந்தம் தம்பதிகளுக்கு மூன்று சகோதரர்களுக்கு ஒரே ஒரு அன்புச் சகோதரியாக ஜனந்தினி மலர்ந்தாள். ஒரேயோரு பெண் குழந்தை என்று பெற்றோரும் இனத்தவர்களும் மிகச் செல்லமாக ஜனந்தினியை வளர்த்தார்கள். அவளை நல்ல முறையில் கற்பித்து ஆளாக்க வேண்டுமென பெற்றோர் பெருவிருப்புக…
-
- 4 replies
- 711 views
- 1 follower
-
-
வித்தியாசமான வீரன் கப்டன் கௌதமன் ஓவ்வொரு குழந்தையும் மண்ணில் பிறக்கின்ற போது அந்தக் குழந்தையைப் பெற்ற குடும்பத்தின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் வித்தியாசமானவை. ஒவ்வொரு அம்மாக்களும் உலகின் பெருமைகளையெல்லாம் தன் பிள்ளை பெற்றுச் சிறப்படைய வேண்டுமென்றே கனவுகள் காண்பார்கள். அத்தகைய கனவுகள் ஊரான் அல்லது கௌதமனின் அம்மாவுக்கும் நிச்சயம் இருந்திருக்கும். 2அக்காக்களுக்குப் பிறகு திரு.திருமதி. அடைக்கலம் தம்பதிகளுக்கு 01.05.1974 அன்று பிறந்தான் இன்பசோதி. அந்தக் குடும்பத்தின் ஒரேயொரு ஆண் பிள்ளையும் அவனே. இன்பசோதியின் பிறப்பு வீட்டாருக்கு மட்டுமல்ல ஒருநாள் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்த்துப் புலியாவான் என்று யார் அன்று நினைத்திருப்பார்கள் ? இன்பசோதியென…
-
- 4 replies
- 915 views
- 1 follower
-
-
புலிகளின் ஆற்றல் மிகு கடற் போர்த் தளபதி. லெப்.கேணல் நரேஸ் Last updated Jul 16, 2020 தலைவரை பிரமிக்கச்செய்த அவரது தலைசிறந்த படைவீரர்களுள் ஒருவன். புலிகளின் ஆற்றல் மிகு கடற் போர்த் தளபதி. கிளாலிக் கடற்சமர் அரங்கில் மாவீரன் சாள்ஸ் களப்பலியாகிய பின்னரே, கடற்புல்களின் தாக்குதற் படைத் தளபதியாக பொறுப்பேற்ற போதிலும். கடற்புலிகளின் சரித்திரத்தில் மிகப்பெரும் பகுதியோடு, நரேஸ் பின்னிப் பிணைந்தவனாகவே உள்ளான். “கடற்புலிகளின் சிறப்புத்தளபதி போல இயங்கியவன் அவன்தான்” என்கிறார் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி. கண்களில் நீர்வழிய நீர்வழிய நாங்கள் மண் அள்ளித் தூவி விதை குழியலிட்ட அந்தத் தோழன…
-
- 4 replies
- 994 views
-
-
சிங்கள படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன் லெப்டினன்ட் சீலன் (ஆசீர்) Last updated Jul 14, 2020 “அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்…. இதோ இந்த அலைகள் போல…….” லெப்டினன்ட் சீலன் (ஆசீர்) ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ்அன்ரனி புனிதமரியாள் வீதி, திருகோணமலை வீரப்பிறப்பு:11.12.1960 வீரச்சாவு:15.07.1983 நிகழ்வு:யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போதான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவு “அதோ அந்தப் பறவைபோல …
-
- 4 replies
- 704 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் இளம் கெரில்லா வீரன் வீரவேங்கை ஆனந் Last updated Jul 14, 2020 வீரவேங்கை ஆனந் இராமநாதன் அருள்நாதன் மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:25.01.1964 வீரச்சாவு:15.07.1983 நிகழ்வு:யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போதான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவு தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந் என்னும் அருள்நாதன் உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். மீசாலை மண்ணிலே சுற்றி வளைத்துக் கொண்ட சிங்கள இராணுவக் கூலிப் படைகளுடன் சாகும்வரை துப்பாக்கி ஏந்திப் போராடிய வேங்கைதான் அருள்நாதன். நெஞ்சில் வழிய…
-
- 3 replies
- 695 views
-
-
முதற் கடற்கரும்புலிகளின் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் வல்வெட்டித்துறைக் கடலில் 10.07.1990 அன்று காவியமான முதற் கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் நின்றவாறு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் எடித்தாரா கட்டளைக் கப்பல் மீது, 10.07.1990 அன்று கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோர் வெடிமருந்து நிரப்பப்பட்ட தமது படகினை மோதி வெடிக்க வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதியதொரு வரலாற்றைப் படைத்தனர். இக்கடற்கரும்புலி மாவீரர்கள் தொடங்கி வைத்த வழியினில…
-
- 2 replies
- 703 views
-
-
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தாக்குதல் தளபதி லெப். கேணல் ரமணன் மன்னார் மாவட்டத்தில் பிறந்த வெள்ளைசாமி கோணேஸ்வரன் என்ற பன்னிரண்டு வயது மாணவன் 1990 ன் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட போது , அவனுடைய சிறு வயது கருதி படைத்துறைப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். அங்கே பொதுக்கல்வியும் படைத்துறை சார்ந்த கல்வியும் சில வருடங்கள் பயின்ற கோணேஸ்வரன், அடிப்படை பயிற்சி பெற்று ரமணன் என்ற போராளியாக செயற்படத் துவங்கினான். 1993 ல் சிறுத்தைப் படையணியில் இணைக்கப்பட்டு ஆங்கே நீண்ட கால பயிற்சியில் ஈடுபட்டு தேர்ந்த போராளியாக தாக்குதலணியில் இணைந்தான் . மணலாற்றுக் காடுகளில் ரமணனுடைய பாதங்கள் வேவு நடவடிக்கைகளிலும் களச் செயற்பாடுகளிலும் ஓய்வின்றி நடந்தன. பல…
-
- 1 reply
- 690 views
- 1 follower
-
-
பொட்டம்மான் வருவாரா? என்ற எனது கேள்வி பலருக்கும் அவர் வரவேண்டும், மீண்டும் இயக்கத்தை கட்டி வளர்க்க வேண்டும் என்ற எண்ணங்களையும் ஏற்படுத்தி இருக்கலாம். அவர் மீண்டும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கும் பல்லாயிரக் கணக்கானோரில் நானும் ஒருவன்! இந்த நேரத்தில் அவர் வந்துவிடக் கூடாது.இறந்தவராகவே இருக்கட்டும் என்று சிந்திப்பவர்களும் புலம்பெயர் தேசங்களில் இருக்கலாம். ஏனெனில் இயக்கத்தின் சொத்துக்கள் இன்னார் இன்னாரிடம் இருக்கின்றன என்ற விபரங்கள் அடங்கிய பெயர்ப் பட்டியலும் வெளிவருகின்றது. நிச்சியமாக இயக்கத்தின் சொத்துக்கள் பலரிடம் இருக்க வேண்டும்.அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தை, "அம்மான் வந்தால் கொடுப்பம்".அவர் வந்து கணக்கு கேட்டால் நாங்கள் என்ன செய்வது என்றொரு புருடா, கதையை அவ…
-
- 0 replies
- 1.4k views
-
-
மேகத்தில் முடியும் ஆழத்தில் அடியும் கொண்டு தாகத்தில் திரியும் கோபங்கள்! நெஞ்சினிலே பஞ்சுவைத்து எண்ணையிட்ட நெருப்பு நில்லெனவே சொல்வதற்கு யாருமில்லை எமக்கு சாகவென்று தேதிசொல்லிப் போகும்புயல் கறுப்பு நாளைபகை மீதினிலே கேட்குமெங்கள் சிரிப்பு புதிய திசையொன்றின் புலர்வு தினம். ஆதிக்கக் கதிரைகள் அச்சத்தில் உறையும் நாள். நெல்லியடியில் மில்லர் தொடக்கி வைத்த சொல்லியடிக்கும் திருநாள். “கரும்புலிகள்” மேகத்தில் முடியும் ஆழத்தில் அடியும் கொண்டு தாகத்தில் திரியும் கோபங்கள். தேகத்தில் தீமூட்டும் போதும் சோகத்தின் திரைமூடாத திருமுகங்கள். ஆழத்திற் கிடக்கும் இவரின் அனல்வேர்களை எந்த ஆய்வாளர்களாலும் அளவெடுக்க முடிவதில்லை. அழுதழுது வரு…
-
- 2 replies
- 592 views
-
-
அமரர் துரைரத்தினம்- இவரின் வாழ்க்கையை நீங்கள் அறிந்ததுண்டா? சொத்து சுகபோக வாழ்க்கை என அலையும் தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் சொத்து என்று எதையும் சேர்க்காது தனது மிகப்பெரும் சொத்தாக இருந்த இரு பிள்ளைகளை விடுதலைப்போராட்டத்திற்கு கொடுத்து விட்டு இறுதிக்காலத்தில் ஆச்சிரமத்தில் இருந்து காலமானவர்தான் பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரத்தினம். தமிழ் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கல்வி கற்கிறார்கள் என பரவலான குற்றச்சாட்டு காணப்படுகிறது. இந்த காலத்தில் சொத்து சேர்க்காத அரசியல்…
-
- 2 replies
- 1.6k views
-
-
நெஞ்சைவிட்டு அகலாத நினைவுகளில் என்றும் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி.! Last updated Jun 9, 2020 எந்த விடயத்திலும் கண்டபடி அலட்டிக்கொள்ளாத அமைதியான போராளி. அவளுக்குள்ளே கனன்று கொண்டிருந்த எரிமலையைப் பற்றியோ, உள்மனப் போராட்டங்களையோ, ஆழ்ந்து ஊறுகின்ற மென்மையைப் பற்றியோ நாங்கள் உணர்ந்ததில்லை. எல்லாவற்றையும் தனக்குள் பூட்டிவைத்தது போன்ற அமைதி. தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கின்ற பண்பு. தான் நெருங்கிப் பழகுகின்ற ஒரு சில போராளிகளுக்கும் மட்டுமே தன்னைப்பற்றி வெளிப்படுத்திய சில தருணங்கள். அவற்றுக்குள்ளே அவளது உறுதியையும் வேகத்தையும் மிகுந்த துணிச்சலையும் மட்டும் அறிந்துகொண்டோம். அதுதான் அவளைக் கரும்புலியாச் சாதிக்கவைத்ததோ. யாழினியின் அக்கா 2ம்.…
-
- 0 replies
- 458 views
-
-
லெப். கேணல் மகேந்தி போராளி என்பதற்கு மேலாக, “விடுதலைப் போராட்ட ஞானி” Last updated Jun 9, 2020 மகேந்தி வீரச்சாவடைந்துவிட்ட செய்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமாதான காலப்பகுதியில் ஒரு வழமையான பகல்ப்பொழுதில் எம்மை வந்தடைந்தது. செய்தி உண்மையா? பொய்யா? என்ற ஆதங்கத்துடன் உறுதிப்படுத்த முற்பட்ட வேளையில், இல்லை அது உண்மைதான் என்ற கசப்பான யதார்த்தம் உறுதிப்படுத்தப்பட்டு வந்துவிட்டது. மகேந்தி எமது போராட்ட வரலாற்றில் வித்தியாசமானவன். பல்லாயிரம் பேர் போராடிய இந்த மண்ணில், பல்லாயிரம் வீரர்கள் வீரச்சாவடைந்துவிட்ட இந்த மண்ணில், விடுதலைப் போரில், அவர்கள் எல்லோருடனும் பொதுவான இணைப்பில் இணைத்துப்பார்த்துவிட முடியாத அளவிற்கு மகேந்தி வித்தியாசமானவன். மக்கள…
-
- 0 replies
- 464 views
-
-
தலைவரையும் , தமிழர்களையும் உயிருக்கும் மேலாக நேசித்த லெப் கேணல் சரிதா .! On Jun 8, 2020 மன்னார் பாலம்பிட்டிக் களமுனை மிகக் கடுமையாகவும் ஆக்ரோசமகவும் இருந்தது. சிங்கள படைகளின் எறிகணைகள் மழைபோல் பொழிந்த வண்ணம் இருந்தன கொத்துக்குண்டுகளுக்கும் குறைவில்லை. எங்கும் புற்றீசல்கள் போல படையினர் சளைத்திடாத தமிழீழத்தின் மகளிர் படையணியான . மேஜர் சோதிய படையணி பொருத்திக்கொண்டு இருந்தது. பெண்களை இளக்கமாக நினைத்த சிங்கள படைகளுக்கு அண்ணனின் புலித்தங்கைகள் சரியான படம் புகட்டிக்கொண்டு இருந்தார்கள் . குறைந்த அளவு பெண்போராளிகள் பலநூறு இராணுவத்துடன் போர்புரிந்துகொண்டு இருந்தார்கள். நேரம் சென்றுகொண்டு இருந்தது படைகளுக்கு சாதகமாக மாறிக்கொண்டு இருந்தது . அக்கா!… அல்பா பகுதியை உடைச்…
-
- 1 reply
- 878 views
-
-
“ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .! கரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் குமலவன் / லவன் ஆகிய கரும்புலி மாவீரரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ”அம்மா இனி இருக்கேலாது, நான் இயக்கத்திற்குப் போகப்போறன்” என்று மகன் சொன்னபோது அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவன் இப்படித்தான் அடிக்கடி விளையாட்டாகச் சொல்லுவான். பின் அம்மாவையே கட்டிப்பிடித்துக் கொண்டு சிரிப்பான். அம்மாவிற்கு பிள்ளை தன்னைவிட்டுப் போய்விடான் என்ற நம்பிக்கை. சிரித்தாள். பாவம் – அன்று அவன் முகத்த…
-
- 1 reply
- 866 views
-
-
கேணல் “ரமணனை மத்திய புலனாய்வுத் துறையில் இணைக்க விரும்பினேன்.! Last updated May 20, 2020 மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு போராளிகளின் எல்லைக் காவலரண்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினர் சமாதான உடன்படிக்கையை மீறி 21.05.2006 அன்று மேற்கொண்ட குறிசூட்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல் ரணமன் ஆகிய மாவீரரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். பாடசாலைக் கட்டிடத்திற்குள் இருந்த புழுக்கத்தை ஆற்றங்கரைக் காற்று கழுவிக்கொண்டிருந்தது. அது வகுப்புக்களுக்கான நேரம் அல்ல. வகுப்பறைகள் வெறிச்சோடிப்போய்க் கிடந்தன. காவலாளியும் காணப்படவில்லை. முற்றிலும் ஆளரவமற்றிருந்தது அந்தப் பள்ளி, மதிலோரமும் தொருவோரக் கட்டிடத்திற…
-
- 1 reply
- 531 views
- 1 follower
-
-
சமர்கள நாயகனுக்கு வீர வணக்கம் 🙏/ ஆனையிறவில் வீசும் காற்றும் சொல்லும் பால்ராஜ் அண்ணாவின் வீரத்தை 💪/ என்றும் உங்கள் நினைவுடன் எங்கள் தமிழீழ பயணம் தொடர்கிறது 🙏
-
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
இது யாழ் இணையம் சார்பில் பிரபாகரனுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலி 22.05.2009 அன்று நான் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தி ஒரு பதிவை யாழ் களத்தில் இட்டிருந்தபோது பெரும்பாலான உறுப்பினர்களால் திட்டி தீர்க்கப்பட்டு யாழ் கள நிருவாககமும் அந்த பதிவை நீக்கி விட்டிருந்தது அத்தோடு தான் எனக்கும் யாழ் களத்துகுமான இடைவெளி ஆரம்பித்து யாழ் கள நிருவாகத்தில் நுனாவிலான் என்னை நீக்கியும் விட்டுந்தார் அது பிரச்சனையில்லை பதினோரு வருடம் கழித்து பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தியது நிச்சயம் ஒரு இனத்துக்காக குடும்பத்தையும் இழந்து போராடிய ஒரு வீரனுக்கு செலுத்தும் மரியாதையே ..அஞ்சலிகள் ..ஒரு கருத்தை உண்மையை ஏற்றுக்கொள்ளவே பதினோரு வருடம் சென்றிருக்கிறது என்கிறபோது இந்த இனம் உருப்படாது என்று மட்டு…
-
-
- 14 replies
- 2.4k views
-
-
வெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் கேணல் சங்கீதன் .! வெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் கேணல் சங்கீதன் .! உளவுத்தலமைக்கு கடைசிவரை மதி உரை (உறுதி) கொடுத்து உயர்ந்தவனே உயிர்போகும் இறுதிவரையும் உயர் இரகசியங்களை தன்னகத்தே காத்தவனே.! வெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் இவனே.! தேடித் தேடித் தான் படித்து தேர்ந்தெடுத்து பலரை வளர்த்து விட்ட வித்தகனே.! எதிர்காலத்தை நிகழ்காலத்தில் கணித்து மதிப்பீடுகளை மனம் கோணாது முன்வைத்த விவேகனே.! ஈழப்போரின் கடசிக்களம்வரையும் ஈகம் ஒன்றை தவிர வேறொன்றையும் தேர்ந்தெடுக்காத புனிதனே விழுப்புண் ஏற்றபோதும்.! விசாரணையில் சூட்சுமம் அவிழ்த்து விசமிகள் வேரறுத்த வீரனிவன் கற்றுக் கற்பித்து கணித்தவற்றை.! இவன் கிளைகளாய் இருந்து அ…
-
- 1 reply
- 954 views
-
-
மூடு இனியன் தமிழீழம் இன் இடுகையில் உள்ள படங்கள் மொபைல் பதிவேற்றங்கள் விருப்பத்தேர்வுகள் Messenger இல் அனுப்பு விரும்பு பகிர் …
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனை கப்டன் லிங்கம்! கப்டன் லிங்கம் சிங்காரவேல் செல்வகுமார் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு:16.12.1960 வீரச்சாவு:29.04.1986 நிகழ்வு:யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் ரெலோ கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு லிங்கத்தின் மறைவு விடுதலைப்போரில் திருப்புமுனை.! யாழ். மாவட்டத்தில் வைத்து ரெலோ துரோகக் கும்பலினால் கடத்திச் செல்லப்பட்ட மேஜர் பசீரும், லெப்டினண்ட் முரளியும் ஆகிய தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை மீட்பதற்காக தலைமைப் பீடத்தினால் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்ட வேளை யாழ். மாவட்டம் கல்வியங்காட்டில் உள்ள டெலோவின் தலைமையகத்தில் வைத்து 29.04.1986 அன்று ரெலோ கும்பலினால் கண்ண…
-
- 3 replies
- 1.2k views
-
-
இருவரும் பெண்கள். இருவரும் இலங்கையர்.ஒருவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த இசைப்பிரியாஇன்னொருவர் சிங்கள இனத்தைச் சேர்ந்த மன்னம்பெரி இருவரும் பயங்கரவாதிகள் என கூறப்பட்டு கொல்லப்பட்டனர். இருவரும் அரச படைகளால் பாலியல் வல்லறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். ஒருவர் 1971ல் வீட்டில் இருந்தபோது இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். இன்னொருவர் 2009ல் சரணடைந்த பின்பு அரச படையால் கொல்லப்பட்டார். நிராயுதபாணியாக இருந்தவர்களை அதுவும் பெண்களை கொல்வது தவறு இல்லையா என்று கேட்டபோது ஆம். அவர்கள் பயங்கரவாதிகள் எனவே அவர்களை கொல்வது நியாயமே என்றார்கள். சரி. அதற்காக பாலியல் வல்லுறவு செய்து கொல்வது எப்படி நியாயமாகும் என்று கேட்டால் அது சில கட்டுப்பாடற்ற படையினரின் செயல். அதை விசாரித…
-
- 0 replies
- 872 views
-
-
தலைவரின் திட்டத்தை, செவ்வனே செய்து முடித்த லெப் .கேணல் நிர்மா On Apr 28, 2020 “இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கின்றதோ அன்றுதான் எமக்கு விடிவு பிறக்கும்” லெப். கேணல் திலீபனின் உரையைச் சுமந்த காற்று கோட்டையிலே கம்பீரமாக பறந்து கொண்டிருந்த புலிக்கொடியைத் தழுவி வீசியது. மகிழ்ச்சி, பெருமிதம், இன்னும் இனம் புரியாத உணர்வுகள் எல்லாம் கலந்த ஒரு உணர்வில் தமிழர்கள் ஊறிப்போயினர். ‘ஜீவன்’ கானகப் பாசறை வெற்றியைக் கொண்டாடியது. லெப். கேணல் மாதவி (பின்நாட்களில் கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி) யிடம் படையியற் பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்த மகளிர் படையணியின் அந்த அணிக்கு, தாம் பயிற்சி முடித்துப் போய் அடித்துத்தான் கோட்டையைப் பிடிப்போம் என்று சொல்லிச் சொல்…
-
- 2 replies
- 732 views
-
-
அன்னை பூபதியை நினைவில் கொள்வோம் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அன்னை பூபதியை நினைவில் கொள்வோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறித்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அன்னை பூபதியின் 32வது நினைவு தினம் இன்றாகும். தமிழ் மக்களின் விடுதலை யாகம் ஒரு இக்கட்டான காலகட்டத்தை அடைந்தபோது அதனை முன்னகர்த்த அந்த வேள்வித்தீயில் தன்னையும் ஆகுதியாக்கிக் கொண்டவர் அன்னை பூபதியாவார். நட்பு முகத்தோடு வந்த இந்திய அரசின் உண்மையான துரோக முகத்தை வெளிப்படுத்திய தியாக தீபம் திலீபனின் வழியில் தன் இன்னுயிரை ஈந்த அன்னை பூபதியை வாஞ்சையோடும் அர்ப்பணிப்போடும் நினை…
-
- 3 replies
- 992 views
-
-
நாட்டுப்பற்றாளர் நினைவு நாள் இன்று, ஒன்றுகூடி நினைவுகொள்வதற்கான காலச்சூழல் இல்லாத நிலையில், அனைவரும் தனித்திருந்து, தேசவிடுதலைக்காக தம்வாழ்வை அர்ப்பணித்த நாட்டுப்பற்றாளர்களையும் மாமனிதர்களையும் உள்ளங்களில் நினைவில் இருத்தி நினைவுகூருங்கள். https://newuthayan.com/நாட்டுப்பற்றாளர்-நாள்/
-
- 0 replies
- 422 views
-
-
அம்மா….என்னை தேடவேண்டாம் நான் எல்லோருக்குமாகப் போராடப்போகிறேன்.! - கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் Last updated Apr 11, 2020 கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்.! தென் தமிழீழத்திலிருந்து வேவுநடவடிக்கை ஒன்றை முடித்து 11.04.2000 அன்று தளம் திரும்பிக்கொண்டிருந்த போது திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் காவியமான கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழத்தின் போரியல் வரலாற்றில் பல கரும்புலி நடவடிக்கைசென்று மீண்ட வரலாறு இக் கரும்புலிக்கும் உண்டு. ஆண்குரல்:- “அம்மா…. எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக…. என்னால் செய்யக்கூடிய தியாகம் எது…
-
-
- 2 replies
- 636 views
-