மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
956 topics in this forum
-
கடற்கரும்புலிகள் ஜெயந்தனும், சிதம்பரமும் கடலில் 04.05.1991 அன்று! AdminMay 4, 2019 கடற்கரும்புலி சிதம்பரம நிறையப் படிக்க வேண்டும் என்று அவன் சின்னவனாக இருக்கும் போது ஆசைபடுவான். ஆனால், குடும்பத்தின் நிலை அவனது கனவுகளைச் சிதைத்தது, நான்காம் வகுப்பிற்குப் பிறகு அவன் புத்தகங்களைத் தூக்கியதில்லை. அவர்கள் குடியிருந்த வீட்டில்தான் ஏழ்மையும் குடியிருந்தது. வீட்டில் அம்மாவும் அக்காமாரும் செய்கின்ற எள்ளுப்பாகுவையும், பலகாரங்களையும் தோளில் வைத்துக்கொண்டு அவன் தெருவில் இறங்குவான். திரும்பி வந்த பிறகுதான் அவர்களின் வீட்டில் அடுப்பெரியும். வளர்ந்தபின் ‘றோலரில்’ கடலில் மீன் பிடிக்கச் செல்வான். மீன் கிடைக்காது போனால், வாட்டத்தோடு திரும்பிவருவான். முற்றத்தில் நிற்கு…
-
- 0 replies
- 625 views
-
-
எங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள்! தீபச்செல்வன்.. April 19, 2019 ஈழத்தில் அன்னையர்களின் போராட்டத்திற்கு தனித்துவமான இடமுண்டு. தாய்மை உலகில் உன்னதமான உணர்வு. மனிதர்கள் மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களிலும் தாய்மை மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களிலும் தாய்மையின் மகத்துவத்தை உணரலாம். ஈழத்து அன்னையர்களின் வாழ்வு துயரத்தில் தோய்ந்தது. இன்றைக்கு ஈழமெங்கும் அன்னையர்கள் தவித்து வாழும் ஒரு வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக, அவர்களின் விடுதலைக்காக, நீதிக்காக ஈழத்தில் அன்னையர்கள் தெருவில் வாழும் ஒரு போராட்டத்திற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அன்னையர்கள் கண்ணீர் சி…
-
- 0 replies
- 869 views
-
-
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சின் மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களுக்கான நாட்டுப்பற்றாளர் மதிப்பளித்தல் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள்
-
- 4 replies
- 601 views
-
-
பிரமந்தனாறு படுகொலை ஈழ மண்ணில் இடம்பெற்ற படுகொலைகளில் பிரமந்தனாறு படுகொலை வேறுவிதமானது. இப்படுகொலையை பிரித்தானிய அல்லது இஸ்ரேல்காரர்கள் நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் சந்தேகம் கொள்கின்றனர். பொதுவாக வெள்ளைக்காரர்கள் நம் மீது நடத்திய படுகொலை என்றாலும், உலகமே சேர்ந்து தான் நம்மை அழித்திருக்கிறது என்பதற்கு எஞ்சியிருக்கும் ஒரேயொரு சாட்சிதான் இந்த அய்யா
-
- 0 replies
- 800 views
-
-
நாட்டுப்பற்றாளர் /ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் 12/02/2019.நாட்டுப் பற்றாளர் சத்தியமூர்த்தி அவர்களின் இறுதி குரல். ################### ####################### ###################### ################# சிந்து சத்தியமூர்த்தி...... பத்து வருடம் கடந்து சிந்து அப்பாவைப் பற்றி புத்தகத்தில் எழுதிய பதிவு இது.... அப்பாவும் நானும்...! ஆண்டுகள் பல முடிந்திட்டாலும் எனது அப்பா உயிருடன் இருந்து என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் உணர்வு எனக்கு. ஏனெனில் இரண்டரைவயதில் எனது அப்பா எனக்கு செய்தவை செய்யநினைத்தவை செய்யவைத்து கைதட்டிமகிழ்ந்தவை எல்லாமே இன்று எனக்கு கொஞ்சமே ஞபகமாய்........…
-
-
- 7 replies
- 1k views
-
-
20.02,2009 அன்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான் படைத் தளம் மீதும் வான்புலிகளின் கரும்புலித் தாக்குதல் இதில் வீர காவியமான கேணல் ரூபன் ,லெப் .கேணல் சிரித்திரன் இவர்களுக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
-
- 13 replies
- 3.3k views
-
-
வெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….! லெப்கேணல் மணிவண்ணன் அடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா என்றும் தெரியாமல் எப்படித்தான் பயணிப்பது? அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது? இப்போதுதானே அவன் போராளியாகியிருந்தான். பயிற்சிகளை இனித்தான் பெறவேண்டும். அந்தப் பயிற்சிகளைப் பெறவேண்டுமாயின் இந்தப் பயணம் முடிந்தாக வேண்டும். மணிவண்ணன் எதற்கும் அஞ்சியவனல்ல. அவனிடம் துணிவு என்பது ஏராளமாக இருந்தது.…
-
- 1 reply
- 1.2k views
-
-
11.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட "தவளை பாய்ச்சல்" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று! வீரவணக்கம்
-
- 3 replies
- 865 views
-
-
மட்டு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் ஜீவன்...! ஜீவனுள்ள நினைவுகள்….. கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. – கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு தேவையான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் தேவையான அரிச்சுவடி. கத்தி வெட்டுப் போல் ஒரு நகர்வு… கை வீசும் தென்றல் போல் ஒரு நகர்வு… இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்த…
-
-
- 3 replies
- 1.8k views
-
-
தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்காலத்தில் இருந்து செயற்பட்ட பாலா அண்ணா விடுதலை இயக்கத்தின் பிதாவாக காணப்பட்டார். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கும் விடுதலைப் போராளிகளுக்கும் உலக போராட்ட வரலாறுகளை எடுத்துக் கூறி பல்வேறு நாடுகளின் அரசியலாளர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி அதனுடாக விடுதலைக்கான உழைப்பினை மேற்கொண்டதில் தேசத்தின்குரல் முதன்மையானவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது துணை…
-
- 8 replies
- 1.9k views
-
-
1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 02 ஆம் நாள் முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்மேற்கு எல்லைக் கிராமமான ஒதியமலைக்குள் நுழைந்த இலங்கை இராணுவத்தினர், அக்கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் 32 பேரை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்தது. எல்லைக் கிராமங்களில் இருந்து தமிழர்களை வெளியேற்றும் நோக்குடன் நடத்தப்பட்ட இந்தப் படுகொலைக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.
-
- 0 replies
- 609 views
-
-
மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக…. தங்கையர்கள் தாருஜா, போன்றோரின் ஞாபகார்த்தமாக லண்டன் ஐபிசி தமிழில் வாசிக்கப்பட்ட இக்கவிதையை மாவீரர் நாளுக்காக இங்கு பதிகிறேன் அன்னை மண்மீட்புக்காய் அணிவகுத்த தங்கையரே இன்னுயிரை ஈந்தீர் எமக்காய் உம் வாழ்வளித்தீர் பொல்லாப் பகையின் புறங்காணப் போரிட்ட மெல்லியலார் நீங்கள் விதிமாற்றப் பாடுபட்டீர் உங்கள் நினைவெம்மை ஒரு போதும் நீங்காது செங்களத்தில் ஆடிய உம் தீரம் மறக்காது நெஞ்சை நிமிர்த்தி நேர் வந்த குண்டேந்த அஞ்சாது நின்றீர் அக்காலம் போனதுவே! எம்மினத்து மாதர் இரும்பொத்த நெஞ்சினர் ஓர் இம்மியளவும் இதயம் பயமறியா வீரத்தாய்மார்கள் விடுதலையைக் காதலித்து ஆரத்தழுவிய எம் அக்காமார் …
-
- 3 replies
- 810 views
-
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரபாகரன் வழங்கிய ஆவணங்களுடன் மகனைத் தேடிய தாய்: முன்னாள் போராளிகள் ஆறுதல்! தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட முக்கிய ஆவணங்களுடன் தனது மகனது புகைப்படத்தினைத் தாயொருவர் தேடியலைந்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களின் உருவப் படங்களை அவர்களது பெற்றோருக்கு வழங்கி கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று (சனிக்கிழமை) ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் மட்டக்களப்பு வெல்லாவெளியில் நடத்தப்பட்டது. இதனையறிந்த மாவீரரின் தாயொருவர் வீரச்சாவடைந்த தனது மகனது பிரபாகரன் வழங்கிய முக்கிய ஆவணங்களுடன் மகனின் புகைப்படத்தைக் காண குறித்த நிகழ்விற்கு ஓடிவந்தார் அந்த வயது முதிர்ந்த தாய். இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கா…
-
- 2 replies
- 1.3k views
-
-
வவுனியாவில், ‘தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2018 நினைவேந்தல்! அகரன்November 24, 2018 in: நிகழ்வுகள் தமிழீழ தேசிய மாவீரர் நாள் – நவம்பர் 21 தொடக்கம் 27 வரையான ‘நினைவேந்தல் வாரத்தை’ இல்லாமல் செய்து, பிறிதொரு நாளை ‘நினைவு கூருதலுக்கான பொதுநாளாக’ தேர்ந்தெடுக்கும் விசமத்தனமான பிரசாரத்தில் கயமைக்கூட்டம் ஒன்று ஈடுபட்டிருக்கும் சூழலில், ‘தமிழ் தேசிய இனத்தின் வீரஆத்மாக்களை’ நெஞ்சத்தில் இன்னும் இன்னும் உயர உயர ஏந்திப்பிடித்து விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைந்துருகி, கர்வத்தோடும் – பெருமையோடும் அஞ்சலித்து ‘வீரவணக்கம்’ செலுத்துமாறு தமிழீழ மக்களிடம் வலியுறுத்தி கூறியுள்ள வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, 2018 நவம்பர் 27 செவ்வாய் கிழமை அன்று, வழமை போன்றே இம்முற…
-
- 0 replies
- 1.1k views
-
-
மாவீரர்... வாரம், இன்று ஆரம்பம். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் தின அனுஷ்டிப்பு வாரம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது இன்னுயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்த முதலாவது மாவீரர் சங்கரின் நினைவாக, அவர் உயிரிழந்த கார்த்திகை 27ஆம் திகதி, விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனினால் மாவீரர் தினமாக 1987ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைக்காய் உயிர் தியாகம் செய்த விடுதலைப்புலிகளை நினைவுகூரும் அஞ்சலிகள் நடைபெற்றுவருகின்றன. மாவீரர் நாளை அனுஷ்டிக்கும் வகையில் கார்த்திகை 21ஆம் திகதி மாவீரர் வாரம் ஆரம்பம…
-
- 0 replies
- 951 views
-
-
பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11,12,13 ஆகிய திகதிளில் இடம்பெற்றன. பூநகரி வெற்றி நாள்! ஒபரேசன் தவளைப் பாய்ச்சல் என்ற வெற்றிகரமான இராணுவ நடவடிக்கை ஊடாக நிலத்திலும் நீரிலும் பாய்ந்து பூநகரி இராணுவத்தளத்தை அழித்து நிர்மூலமாக்கி பெரும் சாதனை படைத்த விடுதலைப் புலிகளின் பூநகரித் தள வெற்றிச் சமரின் வெற்றி நாள் இன்றாகும்...!
-
- 0 replies
- 595 views
-
-
தென்தமிழீழம் தந்த இன்னுமோர் முத்து - அக்பர்! நன்றி "விடுதலைப்புலிகள்" விடுதலை வீரியம் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்டினன்ட் கேணல் அக்பர் / வழுதி.................. வட போர்முனையின் கட்டளைப் பணியகம். தொலைத்தொடர்புக் கருவி அக்பரைத் தேடுகிறது. தொடர்பு இல்லை. காலையில்தான் முன்னணி நிலைகளைப் பார்த்துவிட்டு, அணித் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக பின் தளத்திற்குப் போய் வருவதாகத் தளபதி தீபனிடம் கூறிச்சென்றவன். இன்னமும் வரவில்லை. மாலை 3.00 மணி அக்பரின் தொடர்பில்லை. மாலை 5.00 மணி தொடர்பில்லை. இரவு 8.00 மணி தொடர்பில்லை. தளபதியின் மனதில் ஐயம் தோன்றுகின்றது. நாளை விடிந்தால் எதிரி முன்னேறக்கூடிய நிலையில் அக்பர் ஒருபோதும் இத்தனை மணிநேரம் தொடர்பில…
-
- 1 reply
- 1.2k views
-
-
லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள்.! 1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது. இத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று. 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அன்றைய தினத்தில் தியா…
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு பெற்ற லெப்கேணல். சித்தா மாஸ்டர் 20ம்ஆண்டு நினைவு நாள் மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தளப்பகுதி. அடிப்படைப் பயிற்சி முகாம் ஒன்று நிறைவடைந்து புதிய போராளிகள் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தகைய வேளைகளில் இயல்பாகக் காணப்படும் புத்துணர்வும், கலகலப்பும் அவர்களின் முகங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆயினும் எமது முகாமிற்கு வரவிருந்த புதிய போராளிகள் அநேகரின் முகங்களில் ஒருவகையான கலக்கத்தை அவதானிக்க முடிந்தது. காரணத்தை ஊகிப்பது அவ்வளவு கடினமல்ல. படைத்துறைப் பயிற்சிப் பிரிவாக செயற்பட இம் முகாம் சற்று வேறுபாடானதுதான். மிகக் கடுமையான விதிமுறைகளுக்கும், விசித்திரமான தண்டனைகளுக்கும் பெயர் பெற்றது. அதேவேளை ஆற்றல்…
-
- 0 replies
- 744 views
-
-
புலிகளின் முதலாவது வெற்றிகரமான தாக்குதல் - லெப்.செல்லக்கிளி அம்மானின் 35வது நினைவுநாள் லெப்.செல்லக்கிளி அம்மான் சதாசிவம் செல்வநாயகம் தமிழீழம்(யாழ் மாவட்டம்) தாய் மடியில் 15.06.1953 மண் மடியில் 23.07.1983 தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்ற திருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்க வளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த கரும்புலி வீரர்களுக்கு வீரவணக்கங்கள் !!! மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!
-
-
- 15 replies
- 4.7k views
- 1 follower
-
-
கடற்கரும்புலி மேஜர் பாலன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு 28.06.1997 அன்று திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற படகு விபத்தின்போது வீரச்சாவைத் தழுவிய ஆறு மாவீரர்களினதும் இதன்போது படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் தனது நாக்கினை தறித்து தலையை கட்டிலுடன் மோதி தற்கொடை செய்த கடற்கரும்புலி மேஜர் பாலனினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தென்தமிழீழத்திலிருந்து போராளிகள் படகுகள் மூலம் வன்னிக்கு வந்து கொண்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டது. இதன்போது ஒரு விபத்திற்குள்ளாது. படகு விபத்தைத் தொடர்ந்து நீந்திக் கரையையடைந்த கடற்கரும்புலி மேஜர் பாலன் மயங்கிய நிலையில் படையினரால் கைது செய்யப்பட்டார். படையினரி…
-
- 9 replies
- 2k views
-
-
சொந்தப்பெயர்: சிவஞானசுந்தரமூர்த்தி ஐங்கரன் இயக்கப்பெயர்: ஜெயம் முகவரி: புலோலி தெற்கு , பருத்தித்துறை, யாழ்ப்பாணம் சம்பவம்: முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம். உறவுகளே! இம் மாவீரன் பருத்தித்துறையிலுள்ள யா/புற்றளை மகாவித்தியாலயத்தில் 1995 வரை கல்வி கற்று அவ்வாண்டிலேயே விடுதலைப்புலிகளின் அமைப்பில் இணைந்து இம்ரான் பாண்டியன் படையணியில் ஜெயம் என்னும் பெயருடன் சிறந்த விடுதலைப் புலியாக முள்ளிவாய்க்கால் இறுதி வரை செயற்பட்டவர். ஏற்கனவே இவரது தம்பியாரான கடற்கரும்புலி மேஜர். பொதிகைத்தேவன்( சிவஞானசுந்தரமூர்த்தி. தயாபரன்)மாவீரராகியுள்ளார். இப்புகைப்படத்திலுள்ள ஐங்கரன்/ ஜெயம் என்பவருக்கு என்ன நடந்ததென்று தெரியாது உறவினர்களால் தேடப்பட்ட நிலையில் , சிங்…
-
- 3 replies
- 1.4k views
-