மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
லெப். கேணல் ஈழப்பிரியன் டிசம்பர் 31, 2020/தேசக்காற்று/அணையாத தீபங்கள்/0 கருத்து பிரியா என் அன்பு நண்பனே…! உனக்கு…… என் வீரவணக்கங்கள்..! ஈழப்பிரியன், ஆரம்பத்தில் இருந்தே அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ் செல்வன் அவர்களின் வளர்ப்பில் வளர்ந்தவன். மெய்ப்பாதுகாவலனாக, தனிப்பட்ட உதவியாளனாக, கிலோ வண் முகாம் பொறுப்பாளனாக, அரசியல் துறைக்கு ஆயுத அறிக்கை பரிசோதனாக, பயிற்சியாளனாக, துப்பாக்கி சூட்டு பயிற்சியாளனாக, வினியோக அணி பொறுப்பாளனாக, முகாம்கள் கட்டுமான பணிப்பாளனாக, இறுதியாக படையணிப்பொறுப்பாளனாக….. எவ்வளவு பணிகள்? எவ்வளவு பொறுப்புக்கள்.. சிறிய வயதிற்குள்.. மிகப்பெரிய பொறுப்புக்கள்… கிளிநொச்சி உருத்திரபுரம் தான்…
-
- 2 replies
- 1.4k views
-
-
முள்ளிவாய்க்கால் வரை எதிர்நின்று சமராடிய லெப்.கேணல் தமிழ்மாறன்….! 22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவர் காண்பித்த நாள் அது. ஏன் இந்த உலகமும் எல்லாளனை அறிந்துகொண்டது அந்த நாளில்தான். இந்த எல்லாளன் நடவடிக்கை ஒரு சில மணி நேரங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டபோதும், இதற்கான திட்டமிடல்களும், பயிற்சிகளும், வேவுகளும் மிக நீண்ட காலமாக இடம்பெற்றன. இந்த வெற்றிக்காக கொடுக்கப்பட்ட விலையும் மிகவும் அதிகம். இந்த வெற்றிக்காக 21 அற்புதமான போராளிகள் தங்கள் உயிர்களை விலையாகக் …
-
- 2 replies
- 762 views
-
-
கப்டன் ஈழமாறன் நவம்பர் 11, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து “டேய் மச்சான் என்னைக் கொண்டுபோய் விடுறா…. என்ர பொடியள் என்ன மாதிரியோ…. விடடா மச்சான்….” வைத்தியசாலையின் கட்டிலில் இருந்தபடி, காலில்குத்திய திருக்கைமுள்ளைப் பற்றிப் பெரிதும் கவலைப்படாதவனாய், வேதனைகளை மறைத்தபடி, தன் அருகில் இருந்த போராளியிடம் கூறிக்கொண்டிருந்தான் ஈழமாறன். அவனின் நச்சரிப்பினைத் தாங்காது வைத்தியரிடம் சொல்லும் அவர்களுக்கு, அவரின் வார்த்தைகள் ஏமாற்றத்தையே கொடுக்கும். “விசம் உடனே இறங்காது தம்பி, இதால ஆக்கள் செத்துப்போய் இருக்கினம்: ஒரு இரண்டு நாள் பொறும், பிறகு போகலாம்” எனப் புன்னகைதனை முகத்தில் தவழவிட்டவாறு சொல்வதை, ஏமாற்றத்துடன் பார்ப்பான் அவன். அதனை…
-
- 2 replies
- 817 views
-
-
கரும்புலி லெப்டினன்ட் கண்ணன் நவம்பர் 12, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து கனவை நனவாக்கியவன் கரும்புலி லெப்டினன்ட் கண்ணன் / சத்துருக்கன். 1991ம் ஆண்டு 9ம் மாதம் மணலாற்றில் ‘மின்னல்’ இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அனைத்துப் போராளிகளும் சண்டைக்கத் தங்களை தயார்ப்படுத்திக்கொண்டு இருந்தார்கள. சத்துருக்கன் சின்னவன் என்ற காரணத்தால் பொறுப்பாளர் அவனைச் சண்டைக்கு அனுப்பவில்லை. உடனே அவரிடம் சென்ற, “நீங்கள் ஏன் என்னைக் கழித்துவிட்டீர்கள்? ஏன் நான் சண்டை பிடிக்காமாட்டேனோ? இப்படித்தான் நீங்கள் என்னைப் பலமுறை ஏமாற்றி விட்டுச் சண்டைக்கு சென்றீர்கள் ஆனால் இந்த முறை என்னையும் கூட்டிக்கொண்டு போகவேணும்” என்று அடம் பிடித்து சண்டைக்குச்…
-
-
- 2 replies
- 1.1k views
-
-
‘சமர்க்கள நாயகன்’ பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு May 21, 2025 தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர். அவர்களில் முதன்மையான ஒருவர் தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவர்களில் பிரதானமானவர். எல்லாவற்றுக்கும் மேலாக, “விடுதலைப்புலிகள் அமைப்பின் இமாலய வெற்றிகள் பலவற்றிற்கு நடு…
-
- 2 replies
- 369 views
-
-
வேகுந்தீ ஊடேயும் ஆகு(ம்)தி யானீரே வேங்கைம கர்க்கென்றும் வீழ்விலை யே! சாகுந்தீ ஆனாலும் போகும்பு லிக்கென்றும் சாவில்லை யாமிது சத்திய மே! தாகம்தீன் தெரியாது தூரம்தான் சலியாது போகும்தி சைகாணும் சூரியர் ரே! மோகம்பெண் நாடாது வேள்விக்குக் கோடாது வேருக்குள் நீராகும் மாவீர ரே! வீட்டினுள் பெண்களாய் வீழ்ந்துகி டக்காமல் நாட்டுக்காய் உதிர்ந்த நாரிய ரே! காட்டிக்கொ டுப்பாரும் கண்டதி சைக்குள்ளும் கால்கள்ப தித்தவெம் காரிகை யே! அண்ணன்தி சையோடும் ஆகிப்ப றந்தேகும் வண்ணக்கி ளியான மாதுக ளே! மண்ணின்ம டிக்குள்ளே மானப்போர் செய்திட்ட வஞ்சிக்கு என்றென்றும் சாவிலை யே! செங்களத் தின்னுயிர் சேரம ரித்திட்ட எங்களின் பிள்ளைக ளானவ ரே! இங்குபு லத்தெங்கும் ஈகச்…
-
- 2 replies
- 834 views
-
-
லெப். கேணல் ஜஸ்ரின் எல்லையில் நின்று எதிரியை விரட்டியவன்: சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின். போர்முனைக்குச் சென்றவர்கள் வென்றதுண்டு வந்ததில்லை என்பார்கள். இதை ஜஸ்ரினும் படித்திருந்ததினாலோ என்னவோ இறுதியாக மணலாற்றுச் சண்டைக்குச் செல்வதற்கு முன்னர் தனது தாயை அவன் சந்தித்தபோது “அம்மா, நான் சண்டைக்குப் போறேன். ஆனால் நான் உயிரோடை திரும்பி வர மாட்டன்” என்று கூறிவிட்டுச் சென்றான். கண் தெரியாத அந்தத் தாயிடம் அதனைத் தெரிவித்துவிடவேண்டும் என்று அவனது உள்ளுணர்வு அவனைத் தூண்டியுள்ளது. தாக்கு மகனாகச் செய்ய வேண்டிய கடமையைவிட மண்ணின் மகனாக அவன் ஆற்றவேண்டிய கடமை அவனுக்குப் பெரிதாகத் தெரிந்தது. 1984ம் ஆண்டு காலத்திலிர…
-
- 2 replies
- 1.6k views
-
-
லெப். கேணல் தியாகன் தமிழீழ போரியல் வரலாற்றில் அதிகளவான கடற் சமர்களின் கதாநாயகனாக விளங்கிய ‘கடற்புலிகளின் சாள்ஸ் படையணி பொறுப்பாளன்’ லெப். கேணல் தியாகன். 1991ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்புக்கள் இராணுவத் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தியாகன். கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமான மாவீரரான மேஜர் யப்பான் நினைவாக அவரது பெயரில் உருவான ‘யப்பான் 02’ல் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து; மேலதிக பயிற்சிக்காக கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு செல்கிறான். அங்கு படிப்பிலும் விளையாட்டிலும் குறிப்பாக தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட வகுப்பிலும் சிறந்து விளங்கினான். அத்தோடு தொலைத்த…
-
- 2 replies
- 1.2k views
-
-
லெப். கேணல் வீரன் தமிழீழ விடுதலையில் உறுதியான பற்றுக் கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப். கேணல் வீரன் / கோபிதன். கிளிநொச்சி மாவட்டம் கந்தபுரம் தான் வீரனினசொந்த ஊர். க.பொ.த.சாதாரண தர கல்வியை 1995ல் முடித்த சோமசுந்தரம் மோகனசுந்தரம் என்ற பதினாறு வயது மாணவன் விடுதலைப் போராட்டத்தின்பால் கவரப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டான். “சரத்பாபு – 10” பயிற்சித் தளங்களில் அடிப்படை பயிற்சியை முடித்த வீரன் யாழ். மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான். யாழ் குடா நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனது களச் செயற்பாடுகளைத் துவங்கிய இளம் போராளி வீரன் தொடர்ந்து வன்னிக் காடுகளில் கடமையாற்றினான். 1996ம் ஆணடு லெப். சாள்ஸ் அ…
-
- 2 replies
- 1.2k views
-
-
கிருமிச்சையில் காவியமான லெப்.கேணல் முரளி உட்பட்ட 14 மாவீரர்களினதும் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையில் காவியமான நான்கு மாவீரர்களினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் 14.12.1999 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது லெப்.கேணல் முரளி (நல்லரட்ணம் சுவீந்திரராசா - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) மேஜர் சோழவளவன் (சோழன்) (சின்னத்தம்பி கோபாலப்பிள்ளை - மண்டூர், மட்டக்களப்பு) மேஜர் நிர்மல் (முருகேஸ் ராதா - வைக்கலை, மட்டக்களப்பு) மேஜர் தர்மினி (சுந்தரலிங்கம் ராஜினி - தும்பங்கேணி, மட்டக்களப்பு) கப்டன் காந்தகுமாரன் (சாதாசிவம் ஏகாம்பரமூர்த்தி - அக்கரைப்பற்று, அம்பாறை) லெப்டினன்ட் மனோச்சந…
-
- 2 replies
- 612 views
-
-
முதல் பெண் தரைகரும்புலி மேஜர் யாழினி மற்றும் கரும்புலி மேஜர் நிதன் , கரும்புலி கப்டன் சாதுரியன் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. புளியங்குளம் பற்றிய இராணுவ அபிலாசைகளுடன் படைத்தலைமை இருந்த வேளை , படையினருக்கு ஒரு பேரிடி தாண்டிக்குளத்தில் விழுந்தது. 10.06.1997 அன்று தாண்டிக்குளம் – நொச்சிமோட்டைப் பகுதிகள் மீது உள்நுழைந்து தாக்கும் ஒரு அதிரடித்தாக்குதலை புலிவீரர்கள் நிகழ்த்தினர். ஆக்கிரமிக்கப்பட்ட பாதிப்பகுதி மீது புலிகள் தாக்குவர் என்பதை படையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தாக்குதலுக்காக புலிகள் தெரு செய்த இடங்களை சிங்களத் தளபதிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஓமந்தையையும் அதற்க்கு வடக்காகவும் புலிகள் தாக்குதலை எதிர்பார்த்திருந்த படையினருக்கு வவுனியாவின் வாசலிலேயே …
-
- 2 replies
- 697 views
-
-
பலாலி வான்படைத்தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதலின்போது வீரகாவியமான கரும்புலிகள் மேஜர் ஜெயம், கப்டன் திரு, கப்டன் திலகன், கப்டன் நவரட்ணம், லெப்.ரங்கன் மற்றும் வேவுப்புலி மேஜர் சேரன் ஆகியோரின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். உன்னத விடுதலை பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலிலிருந்து….. என்பது இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணி ஆகஸ்ட் 2 1994 இல் நடத்திய அதிரடித் தாக்குதலைக் குறிக்கும். இது பலாலித் தளத்தின் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதலாகும். இதயம் முழுதும் தலைவன் பின்னணி : 1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல் என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத…
-
- 2 replies
- 803 views
-
-
கட்டுநாயக்கா விமானப்படை தளம் மீதான தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலை புலிகளின் பயணத்தில், வெற்றி மகுடம் சூட்டிய நாள்.ஆம். கட்டுநாயகா வான்படை தளத்தை தகர்த்த நாள்! 1983 ஆம் ஆண்டு யூலை மாதம், தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத,இன்னல்கள், கொடிய துயரங்கள் நிறைந்த மாதம். கொடுங்கோலன் சிங்களவனால்,ஒரு மிகப்பெரிய யுத்தத்தை, தமிழர்களின் வாழ்வில் திணித்த நாள். ஆயிரக்கணக்கான தமிழர்களை, சிங்களன் கொன்றொழித்த நாள். லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள்,வீடுகளற்ற அகதிகளாக நடுத்தெருவில் நின்ற நாள். பல்லாயிரகணக்கான தமிழர்களின் வீடுகளையும், ,உடமைகளையும்,அவர்களின் வியாபார ஸ்தலங்களையும் அடித்து நொறுக்கிய நாள். தமிழர்களுக்கு பெருமளவில் பொருட்சேத…
-
- 2 replies
- 975 views
-
-
இந்தியா இராணுவகாலத்தின் போது வரலாற்று சமரான நெடுங்கேணி பாடசாலை தாக்குதலை நேரடியாக வழிநடத்தி பெரும் வெற்றியை பெற்று முல்லை மண்ணிக்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்து அனைத்து போராளிகளிடமும் அன்பாக பழகி பல போராளிகளை சண்டைகாறராக வளர்த்த பெரு வீரன். பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் மேற்பார்வையில் பல சமர்களை வென்றவர். மணலாற்றில் தலைவர் தங்கியிருந்த போது விசேடமாக அழைக்கப்பட்டு முன்னணி முகாமான கையிலமலை முகாமின் பெறுப்பாளாராக தலைவரால் நியமிக்கப்பட்டார். எல்விற்ரனை தாண்டிதான் இந்திய இராணுவம் உள்ளே வரமுடியும் என தலைவர் சொன்னாராம். பின் இலங்கை அரசுடன் 1990களில் சண்டை தொடங்கிய போது பலாலி வசாவிளான் முன்னரங்க பகுதியில் முன்னேற முற்பட்ட இராணுவத்தை முன்னேற விடாது தடுத்தார். …
-
- 2 replies
- 821 views
-
-
நாகர்கோவில் பதுங்கித் தாக்குதலும்! – லெப்.கேணல் றெஜித்தனும்! லெப்.கேணல் றெஜித்தன் 2008 ஜூன் மாதம் 11ஆம் திகதி வன்னிச் சமரில் வீரச்சாவடைந்தார். எல்லோரும் பரபரப்பாக தொலைத்தொடர்புக் கருவிக்கு அருகில் காத்திருந்தோம். ‘எல்லாம்சரி, படுங்கோ’ என்றொரு செய்தி றெஜித்தன் அண்ணனிடம் இருந்து வரவேண்டும். நேரம் நள்ளிரவையும் தாண்டி நீண்டுகொண்டிருந்தது. எதிர்பார்த்த நேரத்துள் அந்தச் செய்தி வரவில்லையாதலால் ஏதாவது சிக்கலாகியிருக்க வேண்டுமென்று உள்மனம் சொல்லிக்கொண்டாலும், அப்படியேதும் இருக்கக்கூடாது என்று விரும்பினோம். சிலவேளை றெஜித்தன் அண்ணா எங்களை மறந்திருக்கலாமென்று ஒருவன் சொன்னான். ஆனால் அவர் அப்படிப்பட்டவரில்லை. செய்திக்காக நாம் காத்திருப்போமென்பது அவருக்கு நன்றாகத் தெ…
-
- 2 replies
- 942 views
-
-
தலைவரின் பாதுகாப்புப் பொறுப்பிலிருந்து வீரச்சாவடைந்த போராளிகள் சிலரின் பெயர் விரிப்பு இவையாவும் தலைவரின் மெய்க்காவலராகக் கடமையாற்றிய பிரியன் என்ற ராதா வான்காப்புப் படையணிப் போராளின் வாக்குமூலம் ஆகும். பெயர் (பதவி நிலை) சிலம்பு/சிலம்பரசன் (ராதா வான்காப்புப் படையணியின் முன்னாள் சிறப்புக் கட்டளையாளர். ஆனந்தபுரம் முற்றுகையினை உடைத்து உணாவில் களித்தரைப் பகுதிக்குள்ளால் பிரிகேடியர் பானுவுடன் வெளியேறியோரில் இவரும் ஒருவர். எனினும் ஆனந்தபுரத்தில் காயமடைந்திருந்தார்.) செந்தில் (ராதா வான்காப்புப் படையணியின் சிறப்புக் கட்டளையாளர். சிலம்பரசன் அவர்களுக்குப் பின்னர் நியமிக்கப்பட்டார்.) சுவர்ணன் (வட்டப் பொறுப்பாளர்) ரட்ணம் மாஸ்டர் சேந்தன் (ஜேசுதாஸ் தாக்குதல் அணியின் நிதிப் பொறுப்பாளர்) …
-
-
- 2 replies
- 975 views
-
-
ஈமத்தாழிகள் கண்டெடுக்கப்பட்ட பழம்பெருமை வாய்ந்த தமிழர்தம் பூநகரி மண்ணில் அவதரித்த லெப் கேணல் தமிழ்வாணன் படைத்துறைச் செயல்பாடுகளிலும் முத்திரை பதித்தவர் ஆவார். ஆரம்பத்தில் மன்னார் மாவட்டப் படையணியில் இயங்கியவர். இவரை புலியாகப் புடம்போட்ட பாசறை”மன்னார்- 14” ஆகும். கரும்புலி மேஜர் டாம்போ அவர்களிடம் போர்க்கலையை பயின்றதாக நண்பர்கள் கூறக் கேள்விப் பட்டதுண்டு.(உறுதி செய்யவும்) மன்னார் மாவட்ட மருத்துவப் பொறுப்பில் இருக்கும் போது பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் அரும்பணி ஆற்றிவர். இயக்கத்தில் மிகுந்த விசுவாசம் கொண்டவர். பிழைகள், தவறுகள் யார் இழைத்தாலும் தயங்காமல் தண்டனை கொடுப்பார். அல்லது தண்டனை பெற்றுக்கொடுப்பார். பூநகரி மண் மீட்புக்கான “தவளைப் பாய்ச்சல்”…
-
- 2 replies
- 1.3k views
-
-
கரும்புலிகள் ஒரு வரலாற்று அபூர்வம்! July 5, 2019 இன்று கரும்புலி நாள். எமது மக்களின் விடுதலைக்காகத் தமது உயிர்களையே ஆகுதியாக்கிய உன்னத மறவர்களை நினைவேந்தல் செய்யேண்டிய நாள். இன்றைய நாள்குறித்த சிறப்புக் கட்டுரையே இது. ஒருமுறை பொறுமையோடு இதனை நோக்குவோம்…! தத்துவங்கள் எல்லாம் தலைகீழாகி விட்டன. வீறு கொண்டெழுந்த விடுதலைப் போராட்டங்கள் பல இடையில் வெம்பிப் பழுத்தவை போலாகிவிட்டன. அமைதி என்ற மாயத்திரைக்குள் சமரசங்களும் இயலாமையும் தாண்டவமாடுகின்றன. இப்படியான இன்றைய உலகிலே பனிப்போர் கால கட்ட நெருக்கடிகளையும் தாண்டி புதிய உலக ஒழுங்கினுள்ளும் புகுந்து அதன் அழுத்தங்கட்கும் முகம் கொடுக்கத் தயாராகும் விடுதலைப்புலிகள்; இயக்கம் ” கரும்புலிகள் ” எனும் படையணியைப் போரா…
-
- 2 replies
- 906 views
-
-
விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம் விடுதலைக்கு விறகான ஒரு குடும்ப விருட்சம் இந்தியர்களும், இந்தியக்கூலிகளும் அம்மாவின் வீட்டிற்குள் அடிக்கடி பாய்வார்கள் நெடுமாறனையும், அவன் சனோதரர்களையும் தேடி…… நெடுமாறன் அம்மாவின் ஏழாவது பிள்ளை; அவன் தான் கடைசி. “நெடுமாறன் இங்க வாறதில்லையா… நேற்று வந்து எங்கட ஒரு ஆளையும் போட்டிட்டான்……” “அம்மாவில் அன்பிருந்தா மோன் அடிக்கடி வீட்டை வருவான் தானே……” அம்மாவையும், அக்காவையும் அவர்கள் அடிக்கடி வந்து உறுக்கிப் பார்ப்பார்கள். அப்போதெல்லாம் அக்கா அவர்களுக்குச் சூடாகவே பதில் சொல்லி அனுப்புவாள். இது அம்மா கொடுத்து வளர்த்த உறுதி – துணிவு. ஆனால், அம்மா அமைதியானவள் – எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு பேசாமலி…
-
- 2 replies
- 765 views
-
-
லெப். கேணல் சந்தோசம் லெப். கேணல் சந்தோசம்: ஒரு முன்னுதாரணமான போராளி. இரட்டை இலக்கத்தில் அங்கத்தவர்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் விளங்கிய காலத்தில் தாக்குதல்கள் பற்றிய திட்டங்கள் போடப்படும்போது குண்டு வீசுவது என்ற பொறுப்பு சந்தோசத்திற்குதான். வெடிமருந்துகள், இயக்கத்தின் நிதி வசதி இவை மிகக் குறைவாக இருந்த காலம் அது. வீசப்படும் ஒவ்வொரு குண்டுகளுக்கும் நிறையப் பலன் எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே நிதானமாகச் சரியாகக் குண்டு வீசுவதற்குப் பொருத்தமான ஆளாகச் சந்தோசந்தான் பதிவு செய்யப்பட்டான். ஒவ்வொரு தாக்குதலிலும் இயக்கத்தின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற வகையில் செயற்பட்டான் சந்தோசம். பின்னர் கண்ணிவெடியை சரியாகக் குறிதவறாது வெடிக்க வைப்பதற்குரிய நபராவும் தேர்ந்தெடுக்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழீழ வரலாற்றில் அழியா பெயர் லெப்.கேணல் புலேந்திரன்... லெப்.கேணல் புலேந்திரன்(திருமலை மாவட்ட தளபதியும் மத்தியகுழு உறுப்பினரும்) குணநாயகம் தருமராசா பாலையூற்று, திருகோணமலை. வீரப்பிறப்பு:07.06.1961 வீரச்சாவு:05.10.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் பலாலி படை முகாமில் இந்திய – சிறிலங்கா கூட்டுச்சதியை அம்பலப்படுத்துவதற்காக சயனைட் உட்கொண்டு வீரச்சாவு அன்பின் புலேந்திரன், தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே உத்தரவாதம் என்று எமது ஆயுதங்களைப் பெற்ற இந்தியா, நீ திருமலைக்குப் போவதற்குப் பாதுகாப்புக் கேட்டபோது இந்திய இராணுவத்திலுள்ள மேஜர் கருப்பசாமி உனக்குச் சொன்னார், “இன்றும் இல்லை, இனி எப்போதும் இல்லை” என்று. விடுதலைக்காகப் போரிடும் ஓரினம் தன்னைத் தான…
-
-
- 2 replies
- 1.1k views
-
-
-
லெப்டினன்ட் கேணல் அகிலா அக்டோபர் 30, 2020/தேசக்காற்று/வெஞ்சமரின் நாயகிகள்/0 கருத்து லெப்டினன்ட் கேணல் அகிலா: தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவர் ஓர் தனி அத்தியாயம். எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது. அவருள் இருந்த அந்த ஆளுமை, பல்துறை விற்பன்மை, எமது தேசத்தைக் கடந்து பறந்து போன பெருமை….. அவரது தனித்துவமான இடம் நிரப்பப்பட முடியாததுதான். எப்போதுமே காற்சப்பாத்துக்களைக் கழற்றியறியாத கால்கள், நடந்துவரும் போது தனியானதொரு கம்பீரம் நடையிற் தெரியும். அந்த மெல்லிய உருவத்தின் வல்லமை, அதைவிட உறுதியின் வலிமை, எல்லாவற்றிலுமே முன்னுதாரணமான …
-
- 2 replies
- 667 views
-
-
வீரத்தின் சிகரங்கள் நவம்பர் 5, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து இவைகள் ஒரு சாதாரண வீரனால் செய்யப்பட முடியாதவை. இதைச் செய்வதற்கென்றொரு ஆன்மீகப்பலம் தேவை. தன்னை அழித்துக்கொள்ள தயாரான மனோதிடம் தேவை. தனது இறுதி நேரத்திலும் கூட பதற்றமின்றி, உறுதியுடன், குறிபிசகாது எதிரியைத் தேடியோடும் வீரம் தேவை. விரக்தி காரணமாகவோ, முட்டாள்தனமாகவோ தன்னை அழித்துக்கொள்ள முனையும் தற்கொலை முயற்சியை போலல்ல இது. அல்லது எதிரியின் கண்ணோட்டத்தின் படி கொடூரம் மிக்கதும் மானிட இனமாக இல்லாததுமான ஒரு பூதம் அல்ல இது: அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு தேசிய இயக்க சக்திக்கு உந்துவிசையாக விளங்கும் உயரிய போர்வடிவம் தான் எங்களது கரும்புலிகள். உலகின் எந்த ஆயுதங்களாலும…
-
- 2 replies
- 867 views
-
-
கேணல் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) 1979ல் ஆரம்ப காலப்பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிடப் பட்ட காலம் சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் பதினெட்டு வயது நிறைந்த இளைஞன் தன்னை விடுதலைப் போராளியாக மாற்றியதன் மூலம் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். கிட்டுவும், இன்னும் சில தோழர்களும் தலைவரிடமே போரியலை நேரில் கற்றார்கள். கிட்டுவின் துடிப்பும், வேகமும் அங்கிருந்தவர்களிடையே அவரை வேறுபடுத்திக் காட்டியது. எதையும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற வேகமும் எந்த விடயத்தையும் அறிந்துகொள்ளும் ஆற்றலும் கிட்டுவிற்கு இயல்பாகவே இருந்ததால் தலைவரின் எண்ணங்களை, சிந்தனைகளை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த எல்லை கடந்த பாசத்தை, த…
-
- 2 replies
- 2.1k views
-