மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
வேலாயுதம் வசந்தி என்ற இயற்பெயர் கொண்டு திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தமிழீழ மண் மீட்புப் போரிலே இணைந்து கொண்டார். விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறப்பு பயிற்சிகளை திறமையாக செய்து முடித்தார்.மகளிர் நாங்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்ற செயல் வடிவம் மூலம் பயிற்சி ஆசிரியர்களுக்கு பல முறை நிரூபித்துக் காட்டினார். மகளிர் பிரிவில் இவரது அசாத்தியமான திறமை தேசியத் தலைவரின் பார்வைக்கு அறிவிக்கப்படுகிறது.அந்த சூழ்நிலையில் கடற்புலிகளின் கப்பலுக்கான விநியோக நடவடிக்கைக்கு மகளிர் அணி கட்டாயமாக பங்கு கொள்ள வேண்டிய தேவை இருந்தது. இந்த விநியோக நடவடிக்கைக்காக கடற்புலிகளின் சிறப்பு தளபதியால் லெப் கேணல் றோசாவை உள்வாங்க சிறப்பு தகமைப் பரீட்சை வழங்கப்பட்டது. இந்த தகமைப் பரீட்சையி…
-
- 1 reply
- 369 views
-
-
பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளனாக மேஜர் கேடில்ஸ் விளங்கினார். பதினெட்டு வயதிலேயே இப்பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கண்டாவளையில் மகாலிங்கம் இணையரின் மகனான கேடில்சிற்கு பெற்றோர் இட்ட பெயர் திலீபன். இயல்பாய் சுறுசுறுப்பும், துருதுருவென இருந்த கேடில்ஸ் புலமைப் பரிசில் தேர்வில் சித்தியடைந்து யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். பாடசாலை நாட்களில் கல்வியில் மாத்திரமின்றி விளையாட்டுத் துறையிலும் ஒளிர்ந்தார். தடைகள விளையாட்டுகளில் பல சா…
-
- 1 reply
- 670 views
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
கிட்டண்ணை எண்ண ஓட்டங்களுக்கு ஈடு கொடுப்பது கடினம் இயக்கத்தின் எந்த ஒரு பணியானாலும் புதிய புதிய எண்ணங்களை வெளிப்படுத்துவார்.ஒவ்வொரு துறையும் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி நீண்டவிரிவுரை நிகழ்த்தும் அளவிற்கு ஒவ்வொன்றையும் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து வைத்திருந்தார். வெறுமனே சிந்தித்துவிட்டு, சொல்லிவிட்டு, எழுதிவிட்டு,அதனை மறந்துவிடும் அல்லது கைவிடும் சாதாரணமனிதர் அல்ல கிட்டண்ணை.அவரது எல்லா சிந்தனைகளும் செயல்வடிம் பெறவேண்டும் என்பதில் விடாபிடியானவர்.கிட்டண்ணையின் நிர்வாகத்திறன் வித்தியாசமானது தன்கீழ் பணியாற்றும் எல்லோரையும் தன் வசப்படுத்தும் தான்நினைத்ததைச் செய்ய வைக்கும் திறன் அவரதுதனித்துவமான வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தது. ஒவ்வொரு வேலைகளையும் தானே திட்டமிட்டு…
-
- 0 replies
- 624 views
-
-
1991ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த ஒஸ்காா் மணியந்தோட்டத்தில் லெப் கேணல் சாரா அவர்களின் தலைமையில் பயிற்சிபெற்றுக்கொண்டிருந்த வேளையில் (இவர் மன்னாா் மாவட்டத் தளபதியான லெப் கேணல் விக்ரர் அண்ணையின் தமையனது மகனென அறிந்த சரா அண்ணை விக்ரர் அண்ணையின் சங்கேதப் பெயரானா ஒஸ்காரை இவனுக்கு வைத்தார்.அத்தோடு விக்ரர் அண்ணையைப் பற்றி சில அறிவுரைகளையும் வழங்கினாா்.) 'ஆகாயக் கடல் வெளிச்' சமருக்கான பின்களப்பணிகளுக்கான சென்றாா். ஆகாய கடல் வெளி சமருக்குப் பின் கடற்புறாவாக இருந்த அணி கடற்புலிகளாக உருவாக்கப்பட்டபோது அங்கு சென்று ஐப்பான் 01 இல் பயிற்சிபெற்று கடற்புலியானான். 29.08.1993 ம் ஆண்டு பருத்தித்தித்துறைக் கடற்பரப்பில் கரும்புலித்தாக்குதலில் அழிக்கப்பட்ட டோறா பீரங்கிப் படகில் கைப்பற்றப்பட்ட …
-
- 0 replies
- 773 views
-
-
18.11.1997 அன்று வவுனியா மதியாமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் யோகரஞ்சன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 14 replies
- 1.5k views
-
-
நிமிர்ந்த பனை சிலந்திவலைப்பின்னலாகிப் படர்ந்திருந்த இந்தியர்களின் கையில், தமிழீழம் சிக்கிப் போயிருந்தது ஒரு காலம். மறக்க முடியாத அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் நின்று பிடித்து புலிகளின் சுவடுகளைப் பேணிக்காத்து நிலைநிறுத்தி வைத்திருந்த வீரர்கள், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிலபேர்தான். அந்தச் சில பேருக்குள் நேற்றுவரையும் எஞ்சியிருந்தவன் தான் சூட். அவனை விளங்கிக்கொள்ள அந்த நேரத்து ‘இராணுவச்சூழ்நிலை’ யைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வலிகாமத்தின் தரையமைப்பைத் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழீழத்தில் வேறெங்கும் இல்லாதவிதமாக முற்றுமுழுதான நகரச்சூழலை பெரிய அளவில் கொண்ட புவியியல் அமைப்பையும், குறைந்தளவு நிலத்தில் கூடியளவ…
-
- 0 replies
- 716 views
-
-
சுகவீனம் காரணமாக சாவடைந்த கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். கேணல் ராயு அவர்கள் தொடர்பான குறிப்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயு அண்ணை புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று சாவடைந்தார். ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆரா…
-
- 13 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
-
- 1 reply
- 872 views
-
-
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி மேஜர் கிண்ணி (அசோகன்) கந்தசாமித்துரை ரவீந்திரன் வேம்படி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் 25.07.1966 - 10.07.1992 கிளிநொச்சி இயக்கச்சியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு என்றென்றும் மறக்க முடியாத நண்பன், மாவீரன் கிண்ணிக்கு வீர வணக்கம்!💐🙏
-
-
- 7 replies
- 1.8k views
- 1 follower
-
-
பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களை குறித்து ச.பொட்டு அம்மான் அவர்கள் கூறுகையில்.! தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவு. சபையில் புன்சிரிப்பும், எம்மிடையே கலகலத்த அதிரடிச் சிரிப்புமாக உலாவந்த தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனாக வணக்கத்திற்கு உரியவனாகிவிட்டான். தமிழ்ச்செல்வனைப் பற்றி எதிலிருந்து தொடங்குவது? அவனது வீரச்சாவிற்கு முந்திய பின்மாலைப்பொழுது…, அநுராதபுர…
-
- 7 replies
- 2.4k views
-
-
" லெப். செல்லக்கிளி அம்மானின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் " 23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தளபதி லெப்.சீலன் அவர்கள் மீதான தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக 23.07.1983 அன்று இரு படை ஊர்திகளில் சுற்றுக்காவல் வந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. கண்ணிவெடித் தாக்குதலுடன் தொடங்கிய விடுதலைப் புலிகளின் கரந்தடித் தாக்குதலில் சுற்றுக்காவல் வந்த படையினரில் 13 பேர் கொல்லப்பட இரு படுகாயத்துடன் தப்பியோடினர். [ லெப் செல்லக்கிளி அம்மான் நினைவூட்டல் ‘ ] தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் உட்பட விடுதலைப் புலிகளின…
-
- 9 replies
- 1.1k views
-
-
கேணல் வாகீசன் (சீலன்/துரோணர்) தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் புலனாய் நடவடிக்கையின் “தாயக விடுதலைக்காய் தன்னையே மறைத்து எதிரியின் சாம்ராஜ்யத்தில் சாதனைகள் பல படைத்து விடுதலை அமைப்பின் நகர்வுக்கு வித்திட்ட போராளி” புலனாய்வுக் கட்டமைப்பே ஒரு இராணுவ அமைப்பை சீராக வழிநடத்த ஊன்றுகோலான ஒன்றாகும். போராட்டத்தில் இணைந்த ஆரம்பத்திலேயே புலனாய்வு சம்பந்தமான துறையில் இணைந்து விடுதலைப் பணியாற்றிய தளபதி துரோணர். இவரின் பணியில் விடுதலை தீ வீச்சாக தென்பட்டது. காலம் உருண்டோட பொறுப்பாளர்களின் அதி நம்பிக்கைக்குரியவனாக திகழ்ந்தான். விடுதலையை வேண்டி போராடும் ஒரு இராணுவ அமைப்பு கட்டுக் கோப்பாக சீர்குலைவின்றி வளர புலனாய்வுத் துறையே முக்கியம் என்பதை உ…
-
- 1 reply
- 668 views
-
-
1990 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த கந்தையா பலாலிக்கான வேவு நடவடிக்கையில் முதன்மையானவராக செயற்பட்டவர் . அதாவது வடமராட்சியிலிருந்து பலாலி விமானப்படைத்தளத்திற்க்குச் சென்று அங்கு விமானங்கள் பற்றியும் இராணுவம் மற்றும் விமானப்படையின் நடவடிக்கைகள் பற்றிய வேவுத்தகவல்களை துல்லியமாகச் சொன்னவர்.அந்நடவடிக்கைகளில் ஒரு தடவை காவலரனை எட்டிப்பார்க்கும் பொழுது காவலரனில் உள்ள இராணுவத்தினன் சத்தம் கேட்டு ரோச் லயிற் அடிக்க இவன் அந்த லயிற்றை பறித்ததும் எதிரி ரவையால் பொழிந்து தள்ளினான்.இப்படியாக பல சம்பவங்கள் உண்டு. 1992.11.24 அன்றைய தினம் எம்மால் மேற்கொள்ளப்பட்ட தொண்டமானறு முதல் ஒட்டகப்புலம் வரையான சுமார் 150 காவலரன் மீதான தாக்குதலிற்கான வேவு நடவடிக்கையின் பிரதான பங்காளனான இவன் 11.11.…
-
- 0 replies
- 700 views
-
-
லெப்.கேணல்.அருணன் (அருணா) அவர்களது 3ம் ஆண்டு நினைவுநாள் இன்று. 27.02.2009 அன்று விமானக்குண்டுத் தாக்குதலால் வீரச்சாவடைந்தார். 3ம் ஆண்டு கடந்த நினைவுநாளில் இன்று அருணாண்ணா பற்றிய பதிவுகள் சில:- கொள்ளைபோன கனவும் ஓராண்டு நினைவுகளும் ஓராண்டை இழுத்து வந்துவிட்டது காலம் உன் நினைவுகள் தா(தே)ங்கிய மனங்களில் நீ எத்தனையோ அடையாளங்களாய்..... தேசம் தேசியம் என்றெல்லாம் கனவுகள் நிரம்பியல்லவா உனது கடிதங்களை எழுதினாய்...! ஒவ்வொரு தோழமைப் பிரிதலின் முடிவிலும் உரமூட்டி உரமூட்டியல்லவா உன்னைத் தீட்டிக்கொண்டாய்....! உனதும் உன்போன்ற தூயவர்கள் கனவுகளிலும் காலம் இப்படியொரு கோலம் வரையுமென்று கனவில்கூட எண்ணாத ஒரு பொழுதொன்றில் எங்கள் கோட்டைக…
-
- 14 replies
- 2.4k views
-
-
முதற் கடற்கரும்புலிகளின் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் வல்வெட்டித்துறைக் கடலில் 10.07.1990 அன்று காவியமான முதற் கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோரின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் நின்றவாறு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் எடித்தாரா கட்டளைக் கப்பல் மீது, 10.07.1990 அன்று கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோர் வெடிமருந்து நிரப்பப்பட்ட தமது படகினை மோதி வெடிக்க வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதியதொரு வரலாற்றைப் படைத்தனர். இக்கடற்கரும்புலி மாவீரர்கள் தொடங்கி வைத்த வழியினில…
-
- 2 replies
- 703 views
-
-
21.02.2001 அன்று முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி (பூங்கதிர்) நல்லநாதன் பவானி வவுனியா இதேநாளில் முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையின் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் விடுதலை கந்தையா இந்திராணி யாழ்ப்பாணம் ஆகிய கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். கரும்புலிகள் உயிராயுதம் https://www.fac…
-
- 5 replies
- 2.3k views
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
20.08.2004 அன்று மட்டக்களப்பு மாவட்டம் காயன்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஒத்துழைப்புடன் தேசவிரோதிகள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளர் லெப்.கேணல் பாவா(தயாசீலன்), தொண்டுநிறுவனங்களிற்கான மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட இணைப்பாளரான லெப்.கேணல் யோகா ஆகியோரின் 6ம் ஆண்டு நினைவு.
-
- 7 replies
- 2.6k views
-
-
-
விந்தன் அண்ணாவுடனான அறிமுகம் கிடைத்தது எனது ஒன்றுவிட்ட அண்ணன்கள் மூலம்தான். அது 1983களின் பிற்பகுதி. ஆடிக்கலவரம் ஓரளவு ஓய்ந்திருந்தாலும் தமிழ் இளைஞர்களிடம் அது விட்டுச்சென்ற தாக்கம் அதிகம். இளைஞர்கள் எல்லோரும் ஏதேனுமொரு அமைப்புடன் தொடர்புகொண்டு தீவிரமாக இயங்கியகாலமது. அவ்வாறே விந்தன் அண்ணாவும் புலிகள் அமைப்புடன் இணைந்து தீவிரமாக இயங்கத்தொடங்கியிருந்தார். அண்ணன்களைப்போலவே அவரும் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் படித்துக்கொண்டு பகுதிநேரமாக வல்லையிலும் வெவ்வேறு இடங்களிலும் இரவில் சென்றிக்கு செல்வார். அக்காலத்தில் சென்றிக்கு செல்வோர் கொழித்தி எறியும் கிரனைட்டையே வைத்திருப்பார்கள். குமுழமுனையில் வாழ்ந்துவந்த மாமாவின் வீட்டிற்கு மட்டக்களப்பு சிறையுடைத்து வெளியேறிய புள…
-
- 0 replies
- 347 views
-
-
இன்று மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் திருகோணமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினை மூழ்கடித்து வீரச்சாவடைந்திருந்தனர். இவர்களுக்கு ஈழதேசம் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது. http://www.eeladhesa...ndex.php?option தமிழ் ஈழத்தாயகத்தை மீட்க்கும் போராட்டத்தில் தம் இனிய உயிர்களை அர்ப்பணித்த இந்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.
-
- 13 replies
- 1.3k views
-
-
-
- 9 replies
- 1.4k views
-
-
"யாழ்ப்பாணத்தை முற்று முழுதாகக் கைப்பற்றிவிட்டோம். யாழ் நகரில் இருந்த வடக்கு மாகணத்தின் மிகப் பெரிய வைத்தியசாலை தமிழர் நிழல் அரசு இழந்துவிட்டது." "எதிர் காலத்தில் தமிழர் சேனையில் பலர் இறந்துவிடுவர். களங்களில் காயமடையும் அவர்களுக்கு உரிய வைத்தியசாலைப் பராமரிப்பு கிடையாது" By வயவையூர் அறத்தலைவன் - 06/02/2019 1934 யாழ்ப்பாணத்தை முற்று முழுதாகக்கைப்பற்றிவிட்டோம். யாழ் நகரில் இருந்த வடக்கு மாகாணத்தின் மிகப் பெரிய வைத்தியசாலை தமிழர் நிழல் அரசு (De facto Government) இழந்துவிட்டது. எதிர் காலத்தில் தமிழர் சேனையில் பலர் இறந்துவிடுவர். களங்களில் காயமடையும் அவர்களுக்கு உரிய வைத்தியசால…
-
- 0 replies
- 315 views
-
-
பரந்தன் பகுதியில் சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது காவியமான 67 மாவீரர்களினதும், இதன்போது கிளிநொச்சிப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சு மற்றும் வான் தாக்குதல்களில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் வெண்நிலவன், கப்டன் உத்தமன் ஆகியோரினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். || ஆனையிறவு படைத்தளத்திலிருந்து 04.08.1996 அன்று பரந்தன் பகுதி நோக்கி “சத்ஜய” என்ருபெருமெடுப்பில் பெயர் சூட்டபப்ட்டு முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகளினால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலின்போது சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.|| இந்த முறியடிப்புத் தாக்குதலில் 67 வரையான போராளிகள் வெற்றிக்கு வித்திட்ட தாய்மண்ணின் விடியலுக்காக கல்லறையி…
-
- 8 replies
- 1.2k views
-