மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
956 topics in this forum
-
[size=1][size=3][size=4]கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் திருமலையில் காவியமான மேஜர் பாபு, 2ம் லெப்.நித்தியன் ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்[/size][/size] [size=3][size=4]09.10.2001 அன்று சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது[/size][/size] [size=3][size=4]கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் (பாலசுந்தரம் தயாபரன் – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)[/size][/size] [size=3][size=4]என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.[/size][/size] [size=3][size=4]இம் மாவீரரினதும் இதே நாள் திருகோணமலை வெல்வேரி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா வான்படை முகாம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவைத் தழுவிய[/size][/size] [size=3][size=4]மேஜர் பாபு (தெய்வேந்திரம் சிவகுமார் – பி…
-
- 12 replies
- 1.5k views
-
-
[size=3][size=4]02.10.1995 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்குகலம் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவற்றின் மீதான தாக்குதலின்போது[/size] [size=4]கடற்கரும்புலி மேஜர் அருமை (செல்லத்துரை விஜயானந்தன் - புத்துவெட்டுவான், கிளிநொச்சி) கடற்கரும்புலி கப்டன் தணிகை (கணபதிப்பிள்ளை வதனா - யாழ்ப்பாணம்) லெப்.கேணல் இளநிலா (செல்வராசா அனுராஜினி - இராமநாதபுரம், கிளிநொச்சி) கப்டன் சுஜீவன் (யோகராசா) (இராசரத்தினம் இராஜேந்திரன் - களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு) லெப்டினன்ட் அமுதன் (ஏகாம்பரம் குலசிங்கம் - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவினர். இம் மாவீரர்களினதும் இதேநாள் அம்பாறை மாவட்டம் 40ம் கிராமம் …
-
- 12 replies
- 745 views
-
-
மான்னார் மாவட்ட கடற்பரப்பில் காவியமான கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் நிரோயன் உட்பட்ட 15 மாவீரர்களினதும் நெடுங்கேணியில் காவியமான வீரவேங்கை இசையமுது என்ற மாவீரரினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 07.10.1999 அன்று மன்னார் மாவட்டக் கடற்பரப்பில் நடவடிக்கை ஒன்றின்போது சிறிலங்கா கடற்படையுடன் ஏற்பட்ட மோதலில் கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் நிரோயன் (பாலசுப்பிரமணியம் கிருஸ்ணபாலன் - ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம்) மேஜர் காமினி (ஜெயராஜ்) (குப்புசாமி அருணாசலம் - கதிரவெளி, மட்டக்களப்பு) மேஜர் நகுலன் (சண்முகலிங்கம் லோகேஸ்வரன் - மாரீசன்கூடல், யாழ்ப்பாணம்) மேஜர் குகன் (செல்லையா) (யோசப் நியூட்டன் - நானாட்டான், மன்னார்) மேஜர் சோழன்…
-
- 9 replies
- 1.2k views
-
-
07.10.1999 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் நிரோஜன் உட்பட்ட கடற்புலிகள் 12ம் ஆண்டு நினைவு நாளும், வடபோர் முனையில் 07.10.2006 அன்று சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் அக்பர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளும், இந்து மாகடலில் 07.10.2007 அன்று சிறலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கபிலன், லெப்.கேணல் அண்ணாமறவன் உட்பட்ட கடற்புலி மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். கடற்புலிகளின் பல்வேறு வெற்றிகர தாக்குதல் நடவடிக்கைகளை வழிநடத்திய லெப்.கேணல் நிரோஜன் அவர…
-
- 8 replies
- 2.5k views
-
-
ஜெயக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் மாங்குளம் மற்றும் கனகராயன்ஆற்று பகுதிகளில் காவியமான லெப்.கேணல் டயஸ் உட்பட்ட 17 மாவீரர்களினதும் தமிழீழத்தின் ஏனைய பகுதிகளில் காவியமான ஒன்பது மாவீரர்களினதும் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 06.10.1998 அன்று மாங்குளம் நோக்கி முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் லெப்.கேணல் தீபராஜ் (டயஸ்) (சுப்பிரமணியம் வரதச்சந்திரன் - அம்பாறை) கப்டன் இலக்கியன் (லீனஸ்பொன்னுக்கோன் ஜெறோம் எட்வின் - யாழ்ப்பாணம்) கப்டன் மதர்சகுமார் (கோகுலன்) (நாகலிங்கம் சிவநேசன் - மட்டக்களப்பு) கப்டன் கெங்காதரன் (சிவசுப்பிரமணியம் பகீரதன் - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தமிழ்மணி (யோதி) (கோபாலப்பிள்ளை நமசிவாயம் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் புதியவன்…
-
- 5 replies
- 1.4k views
-
-
“ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது யாழ். நாகர்கோவில் பகுதியில் காவியமான லெப்.கேணல் சாந்தகுமாரி(ஜெயசுதா) உட்பட்ட 23 மாவீரர்களினதும், அரியாலை, கல்வயல், சாவகச்சேரி பகுதிகளில் காவியமான நான்கு மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 06.10.2000 அன்று யாழ். நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது லெப்.கேணல் சாந்தகுமாரி (ஜேசுதா) (சூசைப்பமொராயஸ் ரமணி - மன்னார்) மேஜர் வேழினி (முருகையா சந்தானலட்சுமி - வவுனியா) கப்டன் அறிவொளி (தேவசகாயம் கமலதாஸ் - வவுனியா) லெப்டினன்ட் களத்தேவி (செபமாலை மரியான் நிர்மலா - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் பனிநிலா (இரத்தினம் திலகவதி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஈகைவேங்கை (தங்கவேல் பக்தகௌரி - கண்டி) 2ம் லெப்டின…
-
- 3 replies
- 898 views
-
-
[size=4]ஜெயசிக்குறு முன்நகர்வுக்கு எதிரான சமர் மற்றும் வழங்கல் தளங்கள் மீதான தாக்குதல் என்பவற்றின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 106 மாவீரர்களினதும் மல்லாவி மற்றும் மறவன்புலவு பகுதிகளில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட இரு மாவீரர்களினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பெருமெடுப்பில் ஜெயக்சிக்குறு படையினரால் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்விற்கு எதிரான சமரின்போது 05.10.1997 அன்று 52 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். ஜெயசிக்குறு நடவடிக்கையில் ஈடுபடும் படையிருக்கான வழங்கல்களை மேற்கொள்வதற்காக கரப்புக்குத்தி மற்றும் விஞ்ஞானகுளம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வழங்கல் தளங்கள் மீது விடுதலைப் புலிகளால் அதிரடித் தாக்குதல் நடாத்தப்பட்டது. சிறிலங்கா படைத் தரப்பு பலத்த அழிவுகளை…
-
- 3 replies
- 1k views
- 1 follower
-
-
[size=3][size=1][size=4]இழமுழக்கம் படை நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் ஜீவன், மேஜர் வெள்ளை உட்பட்ட 161 மாவீரர்களினதும் மட்டக்களப்பில் காவியமான 2ம் லெப். அன்பரசன் என்ற மாவீரரினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.[/size][/size] [size=1][size=4]இடிமுழக்கம் என்ற குறியீட்டுப் பெயருடன் முன்னகர்ந்ந்து வலிகாமம் புத்தூர் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது கடந்த 03.10.1995 அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது,[/size][/size] [size=1][size=4]1.லெப்.கேணல் ஜீவன் (ஆசிம்) (அருளப்பு ஜேம்ஸ்குரூஸ் – மன்னார்)[/size][/size] [size=1][size=4]2.மேஜர் வெள்ளை (றொபேட்) (சேனாதிராசா நாகராசா – முல்லைத்தீவு)[/size][/size] [size=1][size=4]3.மேஜர் அப்பன் (ஜெசி)…
-
- 5 replies
- 932 views
-
-
[size=4]ஜெயசிக்குறு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினருடனான மோதல் மற்றும் பிற நிகழ்வுகளில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் பிரதீபராஜ் உட்பட்ட 13 மாவீரர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 03.10.1998 அன்று ஒலுமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் லெப்.கேணல் பிரதீபராஜ் (பூபாலப்பிள்ளை திரேஸ்காந் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் இதயக்கண்ணன் (சிவலிங்கம் சாந்தலிங்கம் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் புண்ணியசீலன் (அருணாசலம் ஜெயகுலம் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் பரிதரன் (பேரின்பம் அரசரத்தினம் - மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இம் மாவீரர்களினதும் ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையின் போது விழுப்புண்ணடைந்து இதேநாளில…
-
- 10 replies
- 888 views
-
-
[size=3][size=4]“ஓயாத அலைகள் - 4” படைநடவடிக்கையின்போது 02.10.2000ம் அன்று முகமாலை, எழுதுமட்டுவாள், இத்தாவில் மற்றும் கிளாலி பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது[/size] [size=4]லெப்.கேணல் தில்லையழகன் (தில்லை) (கபிரியேல் அருந்தவராஜன் - முருங்கன், மன்னார்) கப்டன் ஆரதி (நாராயணன் ராணி - கந்தர்மடம், யாழ்ப்பாணம்) கப்டன் நேசமலர் (வெள்ளையன் கலா - கல்மடு, வவுனியா) கப்டன் பவநீதன் (செபஸ்ரியான் சந்தான்குரூஸ் - தாழ்வுபாடு, மன்னார்) வீரவேங்கை சிவா (புவனேந்திரன் சசிக்குமார் - உரும்பிராய், யாழ்ப்பாணம்) வீரவேங்கை மணிமாறன் (மரியநாயகம் மரியபிறவுன்சன் - மாந்தை, மன்னார்) வீரவேங்கை கருவேங்கை (விஜயன் சுரேந்திரன் - கச்சாய், யாழ்ப்பாணம்) வீரவேங்கை…
-
- 8 replies
- 981 views
-
-
யாழ்தேவி நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் நரேஸ் உட்பட்ட 80 மாவீரர்களினதும் அச்சுவேலி மற்றும் மட்டக்களப்பில் காவியமான ஏழு மாவீரர்களினதும் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தென்மராட்சிப் பகுதிகளை வல்வளைக்கும் நோக்குடன் ஆனையிறவிலிருந்து சிறிலங்கா படைகளால் “யாழ்தேவி” என்ற குறியீட்டுப் பெயருடன் தொடங்கப்பட்ட படைநடவடிக்கைக்கு எதிராக புலோப்பளைப் பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் இப்படை நடவடிக்கையை வழிநடாத்திய சரத் பொன்சேகா உட்பட இரு நூறு படையினர் படுகாயமடைந்தனர். படையினரின் இரு முதன்மைப் போர் டாங்கிகள் தாக்கியழிக்கப்பட்டன. பெருமளவான ஆயுதங்கள், வெடிபொருட்கள் என்பன விட…
-
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
[size=4]தமிழீழக் கடற்பரப்பில் காவியமான லெப்.கேணல் அண்ணாச்சி உட்பட்ட 9 மாவீரர்களினதும், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காவியமான இரு மாவீரர்களினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.[/size] [size=4]01.10.1999ம் அன்று நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை ஏற்பட்ட விபத்தில் லெப்.கேணல் அண்ணாச்சி (சிறி) (காங்கேயமூர்த்தி கருணாநிதி - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) மேஜர் குகராஜ் (சிலம்பரசன்) (ஜோன்பீற்றர் தார்ற்றியாஸ் - குடத்தனை, யாழ்ப்பாணம்) மேஜர் ராகினி (பாலசிங்கம் பிரபா - தாளையடி, யாழ்ப்பாணம்) கப்டன் கோபி (நகையன்) (கோபாலராசா ரமேஸ்கண்ணா - கரவெட்டி, யாழ்ப்பாணம்) கப்டன் செந்தமிழ்நம்பி (இராசையா பிரபாகரன் - நீர்வேலி, யாழ்ப…
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட யாழ்.தேவி படைநடவடிக்கையில் கிளாலி நோக்கிய முன்நகர்விற்கு எதிரான முறியடிப்புச் சமரில் 29.09.1993 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நரேஸ்(நாயகம்) உட்பட்ட மாவீரர்களினது 17ம் ஆண்டு நினைவு நாளும் 29.09.2006 அன்று யாழ். தீவகக்கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் ரதன்(பொன்முடி) அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.
-
- 10 replies
- 2.3k views
-
-
27.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நிசாந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 9 replies
- 2.5k views
-
-
[size=3] [size=4]கிளிநொச்சி படைத்தளம் தாக்கியழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையில் காவியமான 293 மாவீரர்களின் நினைவு வணக்க நாள் இன்றாகும்.[/size] [size=4]27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது “ஓயாத அலைகள் 2” படை நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின்போது 2000 வரையான படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் படுகாயமடைந்தனர். பெருமளவான போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், படை ஊர்திகள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன. கிளிநொச்சிப் பகுதி சிறிலங்கா படைகளின் வல்வளைப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட “ஓயாத அலைகள் - 2” நடவடிக்கையின் வெற்றிக்காக 400 வரையான போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர். 27.09.1998 அன்று ஓயாத அலைகள் - 2 நடவடிக்கை…
-
- 11 replies
- 1.5k views
-
-
[size=4]26.09.1999 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலின் போது வீரசவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களான [/size] [size=4]கடற்கரும்புலி மேஜர் ரவி (விடுதலை)[/size] [size=4]கந்தையா செல்வராஜா[/size] [size=4]யாழ்ப்பாணம்[/size] [size=4]கடற்கரும்புலி மேஜர் உமேசன் (செழியன்)[/size] [size=4]தங்கவேல் ஆனந்தகுமார்[/size] [size=4]வவுனியா[/size] [size=4] கடற்கரும்புலி மேஜர் நாதவேணி நாகேந்திரம் அனுசா யாழ்ப்பாணம் ஆகியோரின் 13ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் இந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம். [/size] [size=4] [/size] [size=4] கரும்புலிகள் உயிராயுதம் [/size][size=4] h…
-
- 12 replies
- 922 views
-
-
களுவாஞ்சிக்குடி சிறிலங்கா காவல்துறை நிலையத் தாக்குதலில் காவியமான லெப்.பரமதேவா, வீரவேங்கை ரவி ஆகியோரின் 28ம் ஆண்டு நினைவு நாளும், முல்லைக் கடலில் காவியமான லெப்.கேணல் அருணனின் 14ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். 22.09.1984 அன்று மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது மட்டக்களப்பு மாவட்ட தாக்குதல் படைத் தளபதி லெப்டினன்ட் ராஜா (இராமலிங்கம் பரமதேவா - மட்டக்களப்பு) வீரவேங்கை ரவி (தம்பையா வாமதேவன் - மகிழடித்தீவு, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவினர். 22.09.1998 அன்று முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற மோதலில் லெப்.கேணல் அருணன் …
-
- 12 replies
- 1.8k views
-
-
25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்கள் உட்பட்ட மாவீரர்களின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 16 replies
- 2.3k views
-
-
-
-
- 38 replies
- 7.1k views
-
-
[size=4]கடற்கரும்புலி கப்டன் புலிமகள்[/size] [size=4]முத்துலிங்கம் யசோதா[/size] [size=4]முல்லைத்தீவு[/size] [size=4]பிரிவு: கடற்கரும்புலி[/size] [size=4]நிலை: கப்டன்[/size] [size=4]இயக்கப் பெயர்: புலிமகள்[/size] [size=4]இயற்பெயர்: முத்துலிங்கம் யசோதா[/size] [size=4]பால்: பெண்[/size] [size=4] ஊர்: முல்லைத்தீவு மாவட்டம்: முல்லைத்தீவு வீரப்பிறப்பு: 13.04.1982 வீரச்சாவு: 23.09.2001 நிகழ்வு: 23.09.2001 அன்று முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையின் கடற்கலங்கள் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரசவைத் தழுவிக்கொண்டார் துயிலுமில்லம்: விசுவமடு மேலதிக விபரம்: மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது[/size][size=…
-
- 13 replies
- 1.7k views
-
-
[size=4]தமிழீழக் கடற்பரப்பில் காவியமான லெப்.கேணல் சந்திரன் உட்பட்ட 10 மாவீரர்களினதும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் காவியமான இரு மாவீரர்களினதும் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 23.09.1990 அன்று தமிழீழக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையுடன் ஏற்பட்ட மோதலின்போது கிளிநொச்சி மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சந்திரன் (இராமலிங்கம் முத்துலிங்கம் - 4ம் வாய்க்கால், கிளிநொச்சி) மேஜர் வின்சன் (ஐயப்பன்) (நவரத்தினம் வசந்தன் - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) மேஜர் அரவிந்தன் (சிவலிங்கம் தவானந்தராசா - பொலிகண்டி, யாழ்ப்பாணம்.) கப்டன் நிவாஸ் (குமாரசாமி கணேஸ் - கொம்மர்துறை, மட்டக்களப்பு.) வீரவேங்கை நுட்வ…
-
- 10 replies
- 935 views
- 1 follower
-
-
24.09.2006 அன்று சுகவீனம் காரணமாக சாவடைந்த நவம் அறிவுக்கூட நிர்வாகப் பொறுப்பாளர் லெப்.கேணல் பிறையாளன்(சுட்டா) மற்றும் அதே நாள் புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் செவ்வேள், லெப்.கேணல் சீராளன், லெப்.கேணல் புயலினி உட்பட்ட கடற்புலி மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். படங்களைப் பெரிதாய் பார்க்க அவற்றின்மீது அழுத்தவும்
-
- 7 replies
- 2k views
-
-
காங்கேசன்துறை மற்றும் மாதகல் கடற்பரப்பில் காவியமான நான்கு கடற்கரும்புலிகளினதும் மட்டக்களப்பில் காவியமான மூன்று மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 20.09.1995 அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதான தாக்குதலில் கடற்கரும்புலி மேஜர் கீர்த்தி (வல்லிபுரம் நகுலேஸ்வரன் - பளை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் சிவன் (சிவா) (கிருஸ்ணபிள்ளை மோகனதாஸ் - மண்டைதீவு, யாழ்ப்பாணம்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். மாதகல் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் மீதான தாக்குலில் கடற்புலிகளின் முல்லை மாவட்டத் சிறப்புத் தளபதி கடற்கரும்புலி மேஜர் அன்பு (அந்தமான்) (இராமசாமி …
-
- 14 replies
- 1.2k views
-
-
கற்பிட்டிக் கடற்பரப்பில் காவியமான லெப்.கேணல் நளாயினி உட்பட்ட கடற்கரும்புலிகளினதும் யாழ்ப்பாணத்தில் காவியமான கப்டன் மயூரனினதும் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 19.09.1994 அன்று கற்பிட்டிக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “சகாரவர்த்தனா” போர்க்கப்பலை மூழ்கடித்து கடற்புலிகளின் மகளீர் படையணி சிறப்புத் தளபதி கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி (ஆறுமுகசாமி பத்மாவதி - ஊறணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி மேஜர் மங்கை (கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி - முள்ளியான், யாழ்ப்பாணம்) கடற்கரும்புலி கப்டன் வாமன் (தூயமணி) (கந்தசாமி ரவிநாயகம் - கோயில்போரதீவு, மட்டக்களப்பு) கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் (இசைவாணன்) (குகதாசன் பிரணவன் - நல்லூர…
-
- 10 replies
- 1.2k views
-
-
19.09.1994 அன்று மன்னார் கற்பிட்டிக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “சாகரவர்த்தன” போர்க் கலத்தினை மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நளாயினி, மேஜர் மங்கை, கப்டன் வாமன், கப்டன் லக்ஸ்மன் ஆகியோரின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்(19.09.2010) கீழேயுள்ள படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்
-
- 10 replies
- 2.8k views
-