மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
லெப். கேணல் மனோஜ் டிசம்பர் 11, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து சொல்லு வான்நிலாவே! உனக்குத்தான் தெரியும் அவனது வீரநடை. திருமலை மாவட்ட தாக்குதல் படையணித் தளபதி லெப். கேணல் மனோஜ் தலைநகர் ஊற்றெடுத்த உப்பாற்றிலே 1971.02.05 தினத்திலே மண்ணாகி காப்பதற்கு மட்டுமல்லாமல் தமிழீழ மன்னைப் பாதுகாப்பதற்காக ஆண் மகன் ஒருவனை நொந்து சுமந்து ஈன்றெடுத்தாள் அன்னை. தாய் தந்தையருக்கு மூன்றாவது இளம்பிறையாக தோன்றியவனுக்கு வசந்தன் என்று செல்லப் பெயரிட்டார்கள். ஆனால் தன் சமுதாயம் அடக்கி ஒழிக்கப்படுவதைக் கண்ட கண்களும் உடலும் தீப்பிழம்புகள் போல சீறிப்பாய்ந்தன. என் இனிய உள்ளங்களுக்கா இந்த நிலை? இதை மாற்றியமைப்பேன் என்று தன்னுள் ஆணையிட்டான். தன் வீட…
-
- 1 reply
- 1.1k views
-
-
தாயக விடுதலைக்கு ஏற்பட்ட தடையை நீக்கி போராட்டத்தை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்திய கடற்கரும்புலிகள். கடற்கரும்புலி லெப்கேணல் சிவரூபன் சிவநேசன் சிவபாக்கியநாதன். வீரச்சாவு ..08.12.1999 1995ம் ஆண்டு இராணுவத்தால் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பான முன்னேறிப்பாயச்சலும் அதனைத்தொடர்ந்து மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் அதிகமானோர் காயப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும்.இருந்த சூழலில் இச்சம்பவங்களை நேரில் பார்த்த சிவரூபன் வீணாகச் சாவதைவிட இவ் ஆக்கிரமிப்புக்கெதிராக போராடுவதென முடிவெடுத்து . விடுதலைப் புலிகளில் தன்னை இணைத் கொண்டு தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து கடற்புலிகளி…
-
- 0 replies
- 339 views
-
-
கடற்கரும்புலி கப்டன் மாலிகா டிசம்பர் 8, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து நெஞ்சில் பூத்த மலர்கள் கடற்கரும்புலி கப்டன் மாலிகா. கடற்கரும்புலி கப்டன் விக்கியும் கடற்கரும்புலி கப்டன் மாலிகாவும் இணைபியாத தோழிகள். இருவரும் ஒன்றாகவே இயக்கத்தில் இணைந்து ஒன்றாகப் பயிற்சி எடுத்து, எப்போதும் இணைபிரியாமல் பாசறையில் உலா வந்தார்கள். இருவரும் தோழிகள் என்றாலும், பயிற்சிப்பாசறையில் இருவருக்கும் போட்டி. நீந்துவது, படகு ஓட்டுவது, ஏனைய பயிற்சிகள் எல்லாவற்றிலும் ஒருவருக்கு மற்றவர் சளைத்தவர் இல்லை என்ற ரீதியில் வேகம் இருக்கும். கடற்கரும்புலி கப்டன் விக்கி கொழும்புத் துறைமுகத்தினுள் கரும்புலியாய் சென்று அவளைவிட்டுப் பிரிந்ததில், மாலிகாவுக்கு ம…
-
- 2 replies
- 1k views
-
-
லெப். கேணல் ஜீவன் டிசம்பர் 6, 2020/தேசக்காற்று/வீரத் தளபதிகள்/0 கருத்து ஜீவனுள்ள நினைவுகள்… “மட்டக்களப்பு – அம்மாறை மாவட்ட துணைத் தளபதி” தளபதி லெப். கேணல் ஜீவன். கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கைபோட்டிருக்கும் முட்செடிகள். கொழும்பு ரோட் (மட்டு – கொழும்பு நெடுஞ்சாலை ) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலங்குகள் சலசலக்காது இறுக்கிப்பிடிக்கப்படுகின்றன. ஆபத்தை தவிர்க்கும் அளவிற்கு அவசியமான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து பின் செல்வதே ஒரு கலை. தென்ஈழக் காடுகளிலே இந்தக் கலைதான் அவசியமான அரிச்சுவடி. கத்திவெட்டுப் போல் ஒரு நகர்வு… …
-
- 2 replies
- 1.4k views
-
-
பிரிகேடியர் தமிழேந்தி, தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம், (15.02.1950 – 10.03.2009). தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர். 10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்து விடுதலைக்காக உழைத்து அனைவராலும் தமிழேந்தி அப்பா என அழைக்கப்படும் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் இரண்டாம் ஆண்டு 10.03.2011 இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவு பொறுப்ப…
-
-
- 18 replies
- 2.8k views
-
-
காலத்தின் குரலாக பேசும் புதுவை இரத்தினதுரை டிசம்பர் 3, 2020/தேசக்காற்று/தமிழீழக் கலைஞர்கள், போராளிக் கலைஞர்கள்/0 கருத்து தமிழ் வாசகர்களுக்கு புதுவை அண்ணருக்குமான அறிமுகம் தேவையில்லை. வீச்சும், மூச்சுமான அவரது படைப்புக்களுக்கு எமது விடுதலைப்போரில் தனியானதோர் இடமுண்டு. சொல்லப்போனால் விடுதலைப்போரின் வரலாற்றுடன் சேர்ந்து அவரது கவிதைகளும் பயணித்துள்ளன எனலாம். விடுதலைப் போராடடம் போரியலில் முனைப்புப்பெற்ற 1987க்கு முந்திய காலத்தில் அவரது கவிதைகள் ஒரு தேசம் என்ற கருத்தின் தோல்வியை உரைத்தன. எம் தேசியத்து எழுச்சியின் நம்பிக்கையைக் கூறின. இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு காலத்தில் அவரது பாடல்கள் காடுகளின் கரந்துறை விடுதலை வாழ்வியலுடன் பயண…
-
-
- 1 reply
- 1.3k views
-
-
லெப். கேணல் ஜோய் நவம்பர் 30, 2020/தேசக்காற்று/வீரத் தளபதிகள்/0 கருத்து மட்டக்களப்பு – அம்பாறை பிராந்தியத் தளபதி லெப். கேணல் ஜோய் / விசாலகன் கணபதிப்பிள்ளை ரகுநாதன் செங்கலடி, மட்டக்களப்பு பிறப்பு:- 20.05.1956 வீரச்சாவு:- 30.11.1991 முடுகு… முடுகு… ஆ… ஆ… கிறுகு… கிறுகு… மெல்லிய உயரமாக இருந்த ஒருவனைப் பார்த்து கமல் கத்திக் கொண்டிருந்தான். ‘ஏன்டா, கமல் இப்படிக் கத்துது’ நான் சதீசைக் கேட்கிறேன். சத்தம் கேட்டுத் திரும்பிய கமல் “அண்ணை இவங்கள் தான் மறுகா கோஸ்டி” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறான். இது என்ன புது கோஸ்டி. வியப்பாக இருந்தது. அதில் உயரமாக மெல்லியவனாக இருந்தவனைப் பார்க்கிறேன். “அப்பன…
-
- 3 replies
- 1.6k views
-
-
https://www.facebook.com/photo?fbid=10159695301231950&set=a.10151018148611950
-
- 0 replies
- 541 views
-
-
மின்மினிப் பூச்சிகள் விளக்கேந்திய கானகம் விருட்சங்களின் உரசலில் தீப்பொறிக்கும் நீலக்கடல் நிமிர்ந்த தென்னை,பனை மரங்கள் உச்சரிக்கும் குடம் குடமாய் இரத்தம் பருகிய நிலம் எதையும் மறவாது நெருப்புப் பூக்கள் பூத்திருக்கின்றன நினைப்பதற்கு காலம் நேரமென்றில்லை சந்ததி சந்ததியாக ஒளி சூடி ஓடிக்கொண்டேயிருப்பதற்காகவே பிறந்தோம்.. -தா.பாலகணேசன்
-
- 0 replies
- 433 views
-
-
ஒரு வீரனின் ஆசை நவம்பர் 23, 2020/தேசக்காற்று/கரும்புலிகள் காவியங்கள்/0 கருத்து கரும்புலி லெப். கேணல் போர்க் மாப்பாணப்பிள்ளை அரசரத்தினம் ஆறுமுகத்தான் புதுக்குளம், வவுனியா பிறப்பு: 11.11.1959 வீரச்சாவு: 23.11.1990 வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் – அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப் படைமுகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது. இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம் முகாம் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படைமுகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. அப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடாத்தி அதைக் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்பட…
-
- 1 reply
- 1.1k views
-
-
எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் லெப். கேணல் மல்லி.! எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.! லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன்.இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்னும் இடத்தில் பிறந்தான். நீண்ட போராட்ட வாழ்வில் ஒயாது கடுமையாக உழைத்தவன். தனைவருத்தி தன்னொளி பார்த்தவன். அமைதிப் போர்வையுடன் வந்த இந்தியப் படைகள் முள்ளியவளையில் முகாம் இட்டிருந்தன. 1990ம் ஆண்டில் இம்முகாம் மீதான தாக்குதலில் பங்கேற்று நின்றான். இந்தக் காலப்பகுதியிலேயே அவர்களோடு கூட்டாக நின்ற கும்பல்கள், கிளிநொச்சி 18ம் போர் எனும் இடத்…
-
- 2 replies
- 896 views
-
-
இறுதிவரை போரிட்டு நிதானமாக கட்டளைகளை வழங்கியபடி தமிழீழ மண்ணை முத்தமிட்ட லெப்.கேணல் விடுதலை 15.11.2007 அன்று படையினருடனான ஏற்பட்ட நேரடி மோதலில் இறுதிவரை போரிட்டு நிதானமாக கட்டளைகளை வழங்கியபடி தமிழீழ மண்ணை முத்தமிட்ட லெப்.கேணல் விடுதலை லெப்.கேணல் ஐெரோமினி/விடுதலை தங்கராசா வினீதா. யாழ்மாவட்டம். முன்னாள் கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி. மாலதிபடையணி தாக்குதல் தளபதி. 1990 களில் இணைந்த ஐெரோமினி தனது ஆரம்ப இராணுவப்பயிற்சியை மணலாற்றில் முடித்தவள் .தொடர்ந்து மேலதிக இராணுவப் பயிற்சியை கிளாலியில் உள்ள மகளிரனி பயிற்சிப் பாசறையில் முடித்த ஐெரோமினி.தொடர்ந்து தொலைத்தொடர்பு சம்பந்தமான பயிற்சிகளையும் முடித்து மகளிர் பட…
-
- 0 replies
- 313 views
-
-
தேசியத் தலைவரின் கைக்கு இறுக்கமாக வலுவூட்டிய குடும்பத்தில் பிறந்த கப்டன்அக்கினோ... போராட்டம். .... இந்தச் சொல்லுக்குள் தான் எத்தனை விதமான உணர்ச்சி அலைகள் அடங்கி இருக்கின்றன.குடும்பம் என்ற சிறிய பரப்புக் குள் சில மனிதர்கள், சில உணர்வுகளென்று வாழ்ந்த நாம் 'விடுதலை இயக்கம்' என்ற விரிந்த பரப்புக்குள் வந்ததால் , எத்தனை விதமான உள்ளங்களை , சந்தோசங்களை, பிரிவுத்துயரங்களை வாழ்வின்உண்மைகளைக் கண்டுகொண்டிருக்கிறோம். எமது போராட்ட வாழ்வில் உன்னதமான உள்ளங்களோடு பழகும்போது சந்தோசப்படும் நாங்கள், பிரிவு என்று வருகின்ற போது அதிகமாகத்தாக்கப்படுவதென்னவோ உண்மைதான். கப்டன் அக்கினோவின் உள்ளம் கூட அந்த உன்னதமான உள்ளங்களில் ஒன்றுதான். மிகவும் வசதியான குடும்பம். வாழ்வில் பொ…
-
- 1 reply
- 596 views
-
-
கடற்புலிகளின் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் பாமா. கடற்புலிகளின் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் பாமா விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த பெருமளவான சண்டைகளில், அது தரைச் சண்டையாயினும் சரி கடற்சண்டையாயினும் சரி அவற்றிலே தனது பங்களிப்பைச் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவள் எங்கள் பாமா! எல்லாவற்றிலுமே குறிப்பிடத்தக்க திறமையுள்ள, நிறைவான போராளியாக நாம் அவளைக் கண்டோம். நெஞ்சுக்குள் உறைந்து போன அவளது உருவமும் உறுதியான நடவடிக்கைகளும் எந்த ஒரு போராளியையும் அடிக்கடி நினைவு கூரச்செய்யும். “எங்கட பாமாக்காவோ?” என்று அவளைப்பற்றிக் கூறி கண்கலங்கும் போராளிகள் அனேகம். நேற்றுவரை இந்தப் தென்னந்தோட்டங்களிலும், கடலின் உப்பு நீரிலு…
-
- 0 replies
- 344 views
-
-
பூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள் . பூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி இராணுவ கூட்டுப்படைத் தளத்தினுள் கரும்புலிகள் ஊடுருவி சிங்கள இராணுவத்தை பேரதிர்ச்சிக்குட்படுத்தினார்கள். இக் கரும்புலித்தாக்குதல் சிங்கள் இராணுவக் கட்டமைப்பில் திடீரென சீர்குலைவை ஏற்படுத்தி அவர்களை நிலைகுலைய செய்து , தடுமாற்றத்துக் குள்ளாக்கியது. பூநகரிச் சமரில் விடுதலைப்புலிகளின் பலத்திற்கும் இராணுவ வெற்றிக்கும் உறுதுணையாய் அமைந்தவர்கள் கரும்புலிகளே…..! …
-
- 1 reply
- 370 views
-
-
ஒரு உண்மை வீரனின் கதை - லெப்.கேணல் நவநீதன் ஒரு உண்மை வீரனின் கதை நவநீதனைப்பற்றிச் சொல்வதானால் சண்டையில் தான் ஆரம்பிக்க வேண்டும்; சண்டைகளால் தொடர வேண்டும்; சண்டையொன்றில் முடிக்க வேண்டும். அவனது சண்டைகளை விளக்குவதன் மூலம் தான் அவனை வர்ணிக்க முடியும். அந்தளவுக்கு சண்டைக்களங்களிலேயே அவனது வாழ்வு உருண்டோடியது; சண்டைக்களங்களிலேயே அவன் தூங்கி விழித்தான் பழம்பாசியில் ஒரு சண்டை. பால்ராஜ் அவர்கள் வன்னிக்குத் தளபதியாக இருந்த போது அவரது பாதுகாப்பு அணிக்குப் பொறுப்பாக இருந்தவன் நவநீதன் தான். தவிர்க்க முடியாத ஒரு பயணம்; தளபதி போகவேண்டியிருந்தது. அரசியலுக்குப் பொறுப்பாக இருந்த லெப்ரினன்ட் கேணல் சந்திரனும் கூட. போயே ஆகவேண்டும்; நோக்கம் முக்கியமானது. அது இ…
-
- 1 reply
- 425 views
-
-
வீரத்தோடும் விடுதலை வேட்கையோடும் களம்பல கண்ட தளபதி பரிதி என்ற பரிமாணம்! AdminNovember 8, 2021 தளபதி பரிதி என்ற பரிமாணம். நடராஜா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட தளபதி பரிதி 1983 ஆம் ஆண்டு தன்னை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாம் பாசறைப் பிரிவில் பயிற்சியை பெற்றுக் கொண்ட வீரத்தளபதிக்கு தலைமைப்பீடம் சூட்டிய பெயர் றீகன். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளான பிரிகேடியர் பானு, லெப் கேணல் குமரப்பா, ரஞ்சன் லாலா மற்றும் வாசு போன்றோருடன் இணைந்து போரியல் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் தமிழீழம் திரும்பினார் தளபதி கேணல் பரிதி. களம்பல கண்ட நாயகன். தமிழீழம் திரும்பிய தளபதி கேணல் பரிதி மன்னார், யாழ்ப்…
-
- 2 replies
- 800 views
-
-
முல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந்த வன்னிமாவட்ட முன்னாள் படைத்தளபதி நல்லய்யா அமிர்லிங்கம் என்று அழைக்கப்படும் மேஜர் பசீலனின் 23 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்ககாலத்தில் தன்னை இணைத்துக்கொண்ட பசீலன் தொடக்க பயிற்சியினை இந்தியாவில் பெற்று வன்னியில் ஒர் கெரில்லாபோராளியாக தன்னை மாற்றிக்கொண்டு வன்னியில் பல்வேறு தாக்குதல்களை எதிரிமீது தொடுத்து பலபோராளிகளை உருவாக்கி வன்னியில்சண்டைக்காறர்களில் சிறப்பானவன் எனபெயரெடுத்தான் மேஜர்பசீலனின் வன்னி தாக்குதல் அணியில் பிரிகேடியர் பால்றாஜ் அவர்கள் ஒரு போராளியாக இருந்தகாலகட்டங்களில் எல்லாம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய அமைதிப்படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை தொடுத்து பலதளபதிகளை …
-
-
- 19 replies
- 1.9k views
-
-
மேஜர் கணேஸ் நவம்பர் 5, 2020/தேசக்காற்று/விழுதின் வேர்கள்/0 கருத்து ஒரு மலையின் சரிவு! அவனுடைய சாவு ஓர் இலையின் உதிர்வு அல்ல ஒரு மலையின் சரிவு ஆகும். மேஜர் கணேஸ் தமிழ் ஈழ விடுதலைப் போர் வரலாற்றில் மேனி சிலிர்க்க வைக்கும் ஒரு அத்தியாயம் ஆகிவிட்டான். பெருத்த மீசை – தடித்த உதடுகள் – பருத்த மார்பு களத்தில் வெடித்த எரிமலையாய் உலா வந்தவன் கணேஸ். மூதூர் ஆறுகளால் துண்டுதுண்டாகி புவியியல் நிலையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நிலப்பரப்பு .கொலை வெறிச் சிங்களவரின் குடியேற்றப்பகுதி . இஸ்லாமியத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் அவர்கள் வாழ்வையே சூறையாடும் முஸ்லிம் ஊர்காவல் வெறிப்படையின் இருண்ட கூடாரம். 9 இராணுவ முகாம்களாலும்…
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களை குறித்து ச.பொட்டு அம்மான் அவர்கள் கூறுகையில்.! தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவு. சபையில் புன்சிரிப்பும், எம்மிடையே கலகலத்த அதிரடிச் சிரிப்புமாக உலாவந்த தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனாக வணக்கத்திற்கு உரியவனாகிவிட்டான். தமிழ்ச்செல்வனைப் பற்றி எதிலிருந்து தொடங்குவது? அவனது வீரச்சாவிற்கு முந்திய பின்மாலைப்பொழுது…, அநுராதபுர…
-
- 7 replies
- 2.4k views
-
-
https://m.facebook.com/story.php?story_fbid=3405174616251135&id=100002758898211
-
- 0 replies
- 315 views
-
-
லெப்டினன்ட் கேணல் அகிலா அக்டோபர் 30, 2020/தேசக்காற்று/வெஞ்சமரின் நாயகிகள்/0 கருத்து லெப்டினன்ட் கேணல் அகிலா: தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவர் ஓர் தனி அத்தியாயம். எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது. அவருள் இருந்த அந்த ஆளுமை, பல்துறை விற்பன்மை, எமது தேசத்தைக் கடந்து பறந்து போன பெருமை….. அவரது தனித்துவமான இடம் நிரப்பப்பட முடியாததுதான். எப்போதுமே காற்சப்பாத்துக்களைக் கழற்றியறியாத கால்கள், நடந்துவரும் போது தனியானதொரு கம்பீரம் நடையிற் தெரியும். அந்த மெல்லிய உருவத்தின் வல்லமை, அதைவிட உறுதியின் வலிமை, எல்லாவற்றிலுமே முன்னுதாரணமான …
-
- 2 replies
- 664 views
-
-
உங்களை இழந்த இந்நாளில்(30.10.2021) உங்களை நினைவு கூருகின்றோம்😢😢😢🙏வீரவணக்கங்கள் வரதா அக்கா🙏 லெப். கேணல் வரதா / ஆதி...! தமிழீழத்தின் முக்கிய துறைமுகப் பட்டணங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை தனியானதொரு பண்பாட்டின் உறைவிடம்.வல்லவர்களின் துறை வல்வெட்டித்துறை என்பது சாலவும் பொருந்தும்.திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதில் வல்லவர்கள் மட்டுமல்ல,வரலாற்றில் பல தசாப்தங்களுக்கு முன்னரே கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தில் தலை சிறந்தோரையும் கொண்டது தான் வல்வைபூமி.எவருக்குமே கிடைத்தற்கரிய கலியுகக் கடவுளான எமது ஒப்பற்ற பெருந் தலைவன் தமிழீழத் தேசியத் தலைவர் பிறந்த ஊராகவும் இது திகழ்வதால் தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகின்றது. இத்தகைய வரலாற்றுப் பெருமை மிக்க இந…
-
-
- 5 replies
- 662 views
- 1 follower
-
-
கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் காலவிதை: கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன். வீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகின்றான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீரூற்று அம்மா. அவனின் அம்மா திருமலையில் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான். அம்மா தலையை இழுத்து முடிந்தபடி விளக்கையும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடிவந்தாள். அக்கம் பக்கத்து வீட்டுச்சிறுமிகள் எல்லாம் “குட்டான் மாமா வந்திட்டார்” என்ற மகிழ்ச்சியுடன் பாடப்புத்தகங்களை மூடிவிட்டு ஆரவாரித்து நின்றனர். அவர்களுக்கு ஒருபுறம் அச்சமும் இருந்தது. பாடப்புத்தகத்தில் கேள்வி கேட்பார். தேர்வு அறிக்கை பார்ப்பார். என்றாலும் குட்டான் மாமா எவ்வளவு நல்லவர். சிறுமிகளு…
-
- 3 replies
- 600 views
-
-
[size=4]திருகோணமலை துறைமுகத்தில் வைத்து மூன்று சிறிலங்கா கடற்படைக் கலங்களை மூழ்கடித்து காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ரெஜி உட்பட்ட ஆறு கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 23.10.2000 அன்று திருகோணமலை துறைமுகத்தின் மீது கடற்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் சிறிலங்கா கடற்படை பாரிய அழிவுகளை எதிர்கொண்டது. மார்பிள் பீச் பகுதியிலிருந்து துறைமுகத்தினை நோக்கி கடுமையான மோட்டார் தாக்குதல் நடாத்தப்பட துறைமுகத்திற்குள் உள்நுழைந்த கடற்புலிகளும், கடற்கரும்புலிகளும் சிறிலங்கா கடற்படையுடன் கடுமையாகச் சமரிட்டு பாரிய அழிவுகளை ஏற்படுத்தினர். இதன்போது சிறிலங்கா கடற்படையின் தரையிறங்குகலம்(படைக்காவி), போர்ப்படகு உட்பட மூன்று கடற்படைக் கலங்கள் கடற்க…
-
- 8 replies
- 923 views
-