Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அகநானூறு முதல் நற்றிணை வரை.. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கார்த்திகை தீபம்! கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதுபற்றி சங்ககால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை பற்றி பார்க்கலாம்.. கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீப விழாவினைப் பற்றி சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. களவழி நாற்பது: ''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கிலே - கார் நாற்பது கார்த்திகை சாற்றில் கழி விளக்குப் போன்றனவை - களவழி நாற்பது அகநானூறு: ''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப் புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழி தூதொடு வந்த மழை'' சீவக சிந்தாமணி: குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன கடி…

  2. ஏழு நிமிடம்தான் இன்தமிழை இரு கரத்தில் ஏந்தி பருகிடலாம். நன்றி தாயே......!

  3. குறள் எண்: 891 குறள் எண்: 236 குறள் எண்: 1271 மேலும் பார்க்க: https://www.youtube.com/@LydianNadhaswaramOfficial/videos

  4. மலையக மக்களின் அடையாளமான காமன் கூத்தும் கிழக்கில் காமண்டியும் – கிரிஜா மானுஶ்ரீ. written by admin August 2, 2025 மனிதனின் ஆர்வம், எதிர்பார்ப்பு எத்தகையது என்பது உலகறிந்த விடயமே. விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க கிழக்கில் காமண்டி எவ்வாறு இருக்கப் போகின்றது என்ற ஆர்வத்துடன் அனைவரும் ஒன்றுத்திரண்டு சென்றோம். தப்பிசை ஒலி முழங்க வண்ணமயமான ஒளி அமைப்புகளுடன் வரவேற்றது காமண்டி. மலையகத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் அமாவாசை மூன்றாம் நாள் காமன் கூத்து நிகழ்த்தப்படுகின்றது. பிரித்தானியரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தமிழக மக்களின் 200வது ஆண்டினை நினைவு கூறுவதாகவே காமன் கூத்து சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் மாணவர்களால் கிழக்கில் காமண்டி என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டது. கடந்த வ…

    • 3 replies
    • 487 views
  5. மறைக்கப்பட்ட மெய் முகங்கள்- கோபிகா நடராசா. written by admin August 3, 2025 மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டே, அழகைப் பேணுவது என்பது மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருந்துவருகிறது. கற்காலத்தில் குகைச் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களில் இருந்து, இக்காலத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செல்ஃபிக்கள் வரை, மனிதர்கள் தங்கள் உருவத்தைப் பற்றியும். அதை அழகாகக் காட்ட வேண்டும் என்பதைப் பற்றியும் எப்போதும் அக்கறை கொண்டிருந்துள்ளனர். நாகரிகத்தின் வளர்ச்சிக்கேற்ப, அழகு குறித்த வரையறைகளும், அதை அடையும் வழிமுறைகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே வந்துள்ளன. இந்த நீண்ட பயணத்தில், இயற்கையோடு ஒன்றிய பாரம்பரிய அழகு முறைகளிலிருந்து, இன்றைய நவீன தொழில்நுட்பம் சார்ந்த அழகு சாதனங்கள் மற்றும் மருத்துவ அணுகும…

  6. பிழை என்பது என்ன? குற்றம் என்பது என்ன ? தவறு என்று தெரியாமல் செய்வது பிழை தெரிந்தே செய்வது குற்றம் பிழை மன்னிக்கப்படலாம் தவறு தண்டிக்கப்படும் பிழை வேறு குற்றம் வேறு

  7. உயர்விலும் உயர்வுநவிற்சி - சுப.சோமசுந்தரம் பொதுவாக உயர்வுநவிற்சி என்பது இலக்கிய இன்பத்திற்கான ஒரு மரபு; இலக்கியச் சுவை கூட்டும் முயற்சி. எடுத்துக்காட்டாக, பிரிவாற்றாமையில் வாடும் தலைவிக்குத் தோலில் ஏற்படும் ஒரு மாற்றம் அல்லது தாக்கம் பசலை எனப்படுவது. அச்சூழலில் உள்ளத்தின் பிரதிபலிப்பாய் உடல் இயங்கும் இயற்கை நிகழ்வாகப் பசலை இருக்கலாம். அவ்வாறெனில் அதனை உயர்வுநவிற்சி எனச் சொல்வதற்கில்லை. இயற்கை நிகழ்வெனில் இக்காலத்திலும் அது பிரிவாற்றாமையின் வெளிப்பாடாக அமைதல் வேண்டும். அவ்வாறான வெளிப்பாடு இன்றைய அறிவியல் உலகில் பதிவு செய்யப்படவில்லை. எனவே பசலையை ஒரு இலக்கிய மரபாகவே கொண்டு அதனை உயர்வுநவிற்சியாய் வகைப்படுத்துதல் நம் பகுத்தறிவுக்கு எட்டுகின்ற பொருளாய் இப்போதைக்குத் தோன்றுகிறத…

  8. தினம் ஒரு தமிழ்ப் பாடல் - சுப.சோமசுந்தரம் "தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்! தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!" --------------திருமந்திரம் பாடல் 3065. பாடற் குறிப்பு : புற வழிபாட்டை விட அக வழிபாட்டுச் சிறப்பைக் கூறும் திருமூலரின் மற்றொரு பாடல். எளிமையான வரிகள். இப்பாடலுக்கான எந்த உரையும் பாடலை விட எளிமையாக அமைய முடியாது. இருப்பினும்.... பாடற் பொருள் : தேனின் சுவை கறுப்பா சிவப்பா ? வானுக்குள் ஈசனைத் தேடும் மதியற்றோரே ! (இங்கு வான் என்பது புறவுலகிற்கான குறியீடு). தேனுக்குள் அதன் சுவை காட்சிப்படுத்த முடியாமல் ஒன்றறக் (inherent) கலந்ததைப் போல், இந்த ஊனுடம்புக்குள்ளேயே ஈச…

  9. தினம் ஒரு தமிழ்ப் பாடல் - சுப.சோமசுந்தரம் என் இளம் பிராயத்தில் என் ஆச்சி (பாட்டி) அடுத்த வீட்டு ஆச்சியிடம் என் சேட்டைகள் குறித்து அங்கலாய்த்தாள், “ஒம் பேரன் என்னா சேட்டை பண்ணுதாங்கே !”. நிஜத்தில் நான் இவளுக்குத்தான் பேரன். என்னை அவள் பேரன் ஆக்கியது அவர்களது நட்பின், உறவின் நெருக்கத்தைக் காட்டுவது. சில காலம் கழித்துத் தமிழாசிரியர், கம்பனின் யுத்த காண்டத்தில் “குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின் வந்த அகனமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம் புகலருங் கானம் தந்து புதல்வராற் பொலிந்தான் நுந்தை" என இராமன் வீடணனுக்குச் சொன்னதை எடுத்துரைத்த போது சத்தியமாக என் ஆச்சிதான் நினைவுக்கு வந்தாள். தயரதனின் நா…

  10. இலக்கிய உறுபொருள் - சுப.சோமசுந்தரம் எனது பள்ளித் தோழர்களுக்கான வாட்ஸ்அப் குழுமத்தில் 'தினம் ஒரு தமிழ்ப் பாடல்' எனும் தலைப்பில், எனது சிறிய இலக்கிய வாசிப்பின் அடிப்படையில், தற்போது சுருக்கமாகப் பதிவிடுகிறேன். அங்கு இன்றைய என் பதிவை இங்கும் பகிரத் தோன்றியது. இன்றைய இப்பதிவின் நோக்கங்கள் இரண்டு (இரு நோக்கு இதன் கண்ணுளது !). ஒன்று, நட்பின் திறம் பேசுவது; இரண்டு, இலக்கியத்தின் உறுபொருள் பற்றியது. மனதின் மென்மையான உணர்வுகளைப் படம் பிடிப்பதில் கம்பன் கைதேர்ந்த கலைஞன். நட்பின் திறம் கூற ஓரிடத்தில் ராமனையும் சுக்ரீவனையும் கையிலெடுக்கிறான். கம்பராமாயணம் பாடல் 3812 இல் "வானிடை மண்ணில் நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார் தீயரே எனினும் உன்னோடு உற்றவர் எனக்கும் உற்…

  11. வில்லுப்பாட்டு கச்சேரி என்பது, கீழ்கண்ட கருத்தில் இருக்க வேண்டும். மக்களுக்கும் புரிய வேண்டும். வில்லுப்பாட்டுக்கான கதைகள் பல்வேறு வகையில் அமைகின்றன. மரபு வழிக்கதைகள் முதல் தற்கால நிகழ்வுகள் வரை எதையும் வில்லுப்பாட்டுக்கான கதையாகக் கொள்ளலாம். ஆனால் கட்டமைப்பு நிலையில் அவை பொதுவான வடிவத்தைக் கொண்டு விளங்குவதைக் காணலாம். வில்லுப்பாட்டில் வரும் கதைகள் பொதுவாகப் பின்வருமாறு அமையும், அவை அ) தொன்மைக் கதைகள் ஆ) நாட்டுப்புறக் கதைகள் இ) தெய்வக் கதைகள் ஈ) சமுதாயக் கதைகள் உ) வரலாற்று வீரர் கதைகள் ஊ) நடப்பியல் நிகழ்வுகள் போன்றனவாகும். இவ்வகையில் அய்யன் கதை, வள்ளியம்மன் கதை, பார்வதியம்மாள் கதை, மார்க்கண்டன் தவசு, அரிச்சந்திரன் கதை, கிருட்டிணசாமி கதை, பெருமாள்சாமி கதை, மாகாளியம்மன் கதை…

  12. குறளோடு கவிபாடு / "குறள் 613" "பரந்த இதயத்தில் முயற்சியின் வலுவில் உறுதியான அலையாக சக்தி பிறக்குமே! உலகிற்கு உதவ கொடுக்கும் கையை உன்னத பெருமையாக உலகம் போற்றுமே வசதி செல்வம் மகத்துவம் அல்லவே!" "உழைப்பில் இதயங்கள் என்றும் ஒளிருமே மற்றவர்களையும் உயர்த்த உயரமாக நிற்குமே! அடுத்தவரின் வலியை துடைக்க முயலுமே ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு அழுத்தத்திலும் உதவிடும் மகிழ்வே உயர் பண்பாகுமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  13. Wednesday, August 20, 2014 மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. இந்த வரிகளைக் கேட்டு வியக்காமல் எவ்வண்ணம் இருப்பது? அனைவரும் சமம் எனக் கொள்வது அத்தனை எளிதான காரியம் இல்லை! சிறியோரையிகழ்தலதனினுமிலமே என்பதைக் கூடக் கடைபிடிக்கலாம் ஆனால் பெரியாரை வியத்தலும் இலமே என்பதைக் கடைபிடிப்பது எப்படி என்ற கேள்வி முதலில் எழுந்தது. ஆனால் கவிதையை மீண்டும் மீண்டும் படிக்கும் போதுதான் கவியின் சொல் வீச்சும் கருத்தாழமும் தெரிகிறது! கவிதையின் முதல் வரி மிகவும் பிரசித்திபெற்றது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகளைப் பிரயோகிக்காத தமிழர்கள் உலகில் இல்லையெனவேகொள்ளலாம்! உள்ளூரில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சரி, எல்லா த…

  14. கறுப்பு-கருப்பு எது சரி? | பிழையுடன் பயன்படுத்தும் சொற்கள்

  15. குறளோடு கவிபாடு - "குறள்: 413" & "குறள்: 628" "குறள்: 413" "அறிவு பரந்து கிடக்கும் உலகில் அயராது அதைத் தேடி சுவைக்க அக்கம் பக்கம் யார் நின்றாலும் அச்சம் துறந்து கேள்வி கேட்டு அமுது ஞானத்தை செவி உண்ணட்டும்!" "குறைந்த உணவை நிறைவாக அருந்தி குற்றமில்லா உயர்ந்த அறிவு கொண்ட குறைகள் அற்ற ஆன்றோர் போல் குமிழி வாழ்வில் நிறைவு அடைய குன்றாய் நிலைக்க கேட்டு அறிவாய்!!" "குறள்: 628" "இன்பம் கண்டும் துள்ளிக் குதிக்காதவன் துன்பம் வருகினும் துவண்டு விடான்! வண்ணவண்ணக் கனவில் மகிழ்ந்து உறங்குபவன் சின்னசின்ன தோல்வியிலும் தன்னை இழப்பானே கூனிக்குறுகி மூலையில் ஒதுங்கி விடுவானே!" "எண்ணம் நல்லதாய் வாழ்வை நோக்…

  16. பிழைகள் நீக்க ஒரே வழி இதுதான்

    • 0 replies
    • 2.4k views
  17. "ஓரெழுத்து சொற்கள்" / "ONE-LETTER WORDS" The total letters in Tamil are 247, out of these 45 letters are one letter word. That means these 45 letters have a separate meaning. Let us know them!! / 247 தமிழ் எழுத்துக் களில் 45 க்கும் மேலான எழுத்துக்களுக்கு தனியாக பொருள் உண்டு என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தமிழில் உள்ள அந்த ஓரெழுத்து வார்த்தைகளும் பொருளும் கிழே தரப்பட்டுள்ளன. வாசித்து மகிழவும். ஆங்கில மொழியில் அப்படி ஒரு 2 அல்லது 3 சொல் மட்டுமே உண்டு. அவை: 'A' – used when mentioning someone or something for the first time in a text or conversation. 'I' – Used to refer to oneself as speaker or writer. 'O' – Used to express surprise or strong emotion, …

  18. "தூக்கணமும் குரங்கும்" / விவேகசிந்தாமணி எல்லோரும் படிக்கும் வண்ணம் எளிய தமிழில், நீதிக் கருத்துகளை பாடலாக எழுதப்பட்ட, ஒரு பழைமையான நூல் விவேக சிந்தாமணி ஆகும். இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியாது. எந்த காலத்தில் இயற்றப்பட்ட நூல் என்பதும் தெரியாது. நாயக்கர் காலத்தில் இந்த நூல் உருவாகியிருக்கலாம் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். பொதுவாகவே நீதி நூல்கள் அதை செய், இதை செய்யாதே என்று நேரடியாக அறிவுறுத்தும். விவேக சிந்தாமணி அப்படி பட்ட நூல் அல்ல. இது கதை மூலம், நடைமுறையாக, எடுத்துக் கூறும் நூலாகும். இனி தூக்கணமும் குரங்கும் என்ற நாலு வரிப் பாடலைப் பார்ப்போம். "வானரம் மழைதனில் நனையத் தூக்கணம் தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடு…

  19. "தமிழுடன் ஒரு விளையாட்டு" - 03 [காளமேகப் புலவரின் தகரவரிசை, ககரவரிசை பாடல்கள்] இவர் இயற்பெயர் வரதன். இவர் ஆசு கவி (நொடிப் பொழுதில் பாடல் எழுதுபவர்) பாடுவதிலும் சிலேடைப் படல்கள் (ஒரே பாடல் இரு பொருள்) பாடுவதிலும் வல்லவர். இவர் காலம் 15ம் நூற்றாண்டின் இடைப்பகுதி. பாடுக! என்றதும் மழை பொழிவதைப்போல் பாடும் திறமை இவர் பெற்றதால், இவர் ‘காளமேகம்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார் என்பர். வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருச்சிக்கு அருகே அமைந்துள்ள, திருவானைக்கா [திருஆனைக்காவல்] கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறி அவரை திருமணம் செய்துகொண்டார். இனி அவரின் தகரவரிசை, ககரவரிசை பாடல்க…

  20. "தமிழுடன் ஒரு விளையாட்டு" - 01 கைத்தொலை பேசி, முகநூல் போன்ற எந்த வசதியும் இல்லாத பண்டைய தமிழ் நகரம் ஒன்றில், ஒரு இளைஞன், தனது காதலை ஒரு இளம் பெண்ணிடம் தனிமையில் சந்தித்து சொல்ல விரும்பினான். அவளோ அவளின் தந்தையுடன் சென்று கொண்டிருந்தாள். தந்தைக்கும் மற்றும் வீதியால் செல்லும் மற்றவர்களுக்கும் தெரியாமல் தனது விருப்பத்தை அவளிடம், அவளின் பின் நடந்து கொண்டே உரையாடலாக கூறினான். அவளும் அதை நன்றாக விளங்கிக்கொண்டு, தானும் தமிழில் சளைத்தவள் இல்லை என்பது போல, விடுகதை யாகவே பதிலைக் கூறினாள். அதை புரிந்துகொண்டு, "நான் எப்போது வரட்டும்? " என்ற அவனின் அடுத்த கேள்விக்கும் அவள் மீண்டும் விடுகதையாகவே தமிழுடன் அழகாக விளையா…

  21. எது கெடும் ? அடேயப்பா... கெடுவதற்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார். (01) பாராத பயிரும் கெடும். (02) பாசத்தினால் பிள்ளை கெடும். (03) கேளாத கடனும் கெடும். (04) கேட்கும்போது உறவு கெடும். (05) தேடாத செல்வம் கெடும். (06) தெகிட்டினால் விருந்து கெடும். (07) ஓதாத கல்வி கெடும். (08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். (09) சேராத உறவும் கெடும். (10) சிற்றின்பன் பெயரும் கெடும். (11) நாடாத நட்பும் கெடும். (12) நயமில்லா சொல்லும் கெடும். (13) கண்டிக்காத பிள்ளை கெடும். (14) கடன்பட்டால் வாழ்வு கெடும். (15) பிரிவால் இன்பம் கெடும். (16) பணத்தால் அமைதி கெடும். (17) சினமிகுந்தால் அறமும் கெடும். (18) சிந்தி…

  22. "பண்டைய இலக்கியத்தில் மரணம்" (புறநானுறு & நாலடியார்) பண்டைத் தமிழரின் வாழ்க்கை குறித்த பதிவாக விளங்குகின்ற சங்க இலக்கிய காலம் பொதுவாக கி மு 500 ஆண்டுகளுக்கும் கி பி 200 ஆண்டுகளுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம். இயற்கையாக நடைபெற்ற மரணத்தைக் கண்டு பயந்த சங்க கால மனிதர்களின் மனித மனம், மரணத்தில் இருந்து, எவருமே விடுபட இயலாது என்பதை உணர்ந்தவுடன், அதனைக் கூற்றுவன், கூற்று, காலன் எனப் பழித்தது அவர்களின் பாடலில் இருந்து தெரிய வருகிறது. அவ்வகையில், யானைகள் மதிற் கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த யானைகள், மனித உயிர்களை இரக்கம் எதுவுமின்றி கொல்லும் கூற்றுவனைப் போல் காட்சி அளித்தன என்கிறார் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு ம…

  23. "பண்டைய இலக்கியத்தில் மரணம்" [திருக்குறள், தேவாரம் & திருவருட்பா] மக்கள் மரணம் பற்றி அறிய ஆவலாகவும் அதேநேரம் கவலையாகவும் உள்ளார்கள். ஏனென்றால், 1] ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்ககள் மற்றும் அன்பானவர்களுக்கு, அது ஒரு வேதனையை கொடுத்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையை ஓரளவு முன்னையதில் இருந்து சீர்குலைகிறது அல்லது மாற்றி அமைகிறது, 2] வாழ்க்கையின் முழுமையற்ற அபிலாஷைகள் [Incomplete aspirations of life], 3] மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்ற விளக்கம் இல்லாமை ஆகும். மரணத்தின் கருத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதல், பதட்டத்தைக் குறைப்பதற்கும் மரண பயத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.