- Open Club
- 57 members
- Rules
ரசித்தவை

72 topics in this forum
-
இன்று தற்செயலாக இந்தக் கவிதையை யாழ்க் களத்தில் பார்க்க நேர்ந்தது. இதை ரசிகை என்ற அம்மணி பதிந்திருந்தார். என்னைக் கவர்ந்திருந்ததால் மீள் பதிவு இது..! ரசிகைக்கு நன்றி. அன்னை ஒரு பிறவி தருவாள் அடுத்தடுத்து பல பிறவி.... உன் மேல் ஆசை கொண்டவள் தருவாள். மண்ணில் தன் வாழ்வு முடியும் வரை உன்னை சுத்தி சுத்தியே வந்து.. உனக்கு முன்னமே தான் சாக நினைப்பாள் தன்னை உனக்கு தந்தவளை... தரணியே நீதான் என்று வழ்பவளை.. தருணம் கிடைக்கும் போதெல்லாம் நாய் பேய் என்று நாக்கிழந்து பேசும் மனிதா ஒரு வேளை அவளுக்கு முதலாய் உன் ஆவி பிரிந்தால் உண்மையாய் உனக்காய் அழ உலகில் ஒருத்தி அவள் மட்டுமே இருப்பா…
-
- 0 replies
- 873 views
- 1 follower
-
-
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்த லோகமணி என்ற ஏழை பெண்ணின் தாய்மை உணர்வை பாராட்டி மாநிலத்தின் தலைமை காவல் இயக்குநரான (DGP) திரு.கவுதம் சவாங் அவர்கள் அழைத்து நேரடி காணொளி மூலம் "போலீஸ் சல்யூட்" அளித்து கெளவரப்படுத்தியுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியுற செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவின் போது ரோந்து பணியில் ஈடுப்பட்ட போலீசாருக்கு ஏழை பெண் ஒருவர் குளிர்பானங்கள் வாங்கிக்கொடுத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக மக்கள் அனவைரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதாரத்துறையினர், போலீசார், தூய்மை பணியாளர்கள் போன்றார் நேரடியாக களத்தில் இறங்கி கொரோனாவுக்கு எதிராக…
-
- 0 replies
- 842 views
-
-
-
- 4 replies
- 790 views
-
-
தேவராஜ்-மோகன் இயக்கத்தில் உருவான "உறவாடும் நெஞ்சம்" படத்தில் வந்த மீசை அரும்பும் கல்லூரி பருவத்தில் கேட்ட பாடல் இது.. மனதை வசீகரிக்கும் இசை..திரும்பத் திரும்ப காசெட் ரெக்கார்டரில் கேட்ட பாடல்.. இசைஞானியின் ஆரம்பகால பாடல்களில் பிரசித்தி பெற்றவைகளில் இதுவும் ஒன்று..! இந்தப் பாடலின் காணொளியை யுடுயூபில் தேடியபோது இந்தக் காணொளிதான் கிடைத்தது..!! பாடலுக்காகவே பார்க்கலாம்..
-
- 2 replies
- 812 views
- 1 follower
-
-
பல நாட்கள் கழித்து இளையராஜாவின் இசையில் இந்தப் பாடல் மிகவும் பிடித்தது..! இப்பாடலின் பின்னணியில் காட்சிகளின் வனப்பு மிக அருமை.. புல்வெளிக் குன்றுகளில் மின்விளக்குகளை அமைத்து ஒளிரவிட்டு, அருகில் சிறு குளத்தில் அன்னப் பறவைகளை நீந்தவிட்டுள்ள காட்சியமைப்புக் கலை, கண்கவரும் வண்ணம் அமைந்துள்ளது. கீழே இரண்டாவது காணொளியில் கிராபிக்ஸ் தொகுப்பு பாடல் வரிகளுடன் நம்மையும் கூடவே பாடத் தூண்டுகிறது..!
-
-
- 1 reply
- 655 views
- 1 follower
-
-
இன்று(15-01-2020) மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் கெத்துக்காட்டி, வீரர்களை கலங்கடித்த காளை..! ரசிக்கத்தக்க காணொளி..!!
-
- 0 replies
- 399 views
- 1 follower
-
-
டிஸ்கி: இன்று 2020 புது வருடத்தில் முதல் வாரத்தின் வெள்ளிக்கிழமை வார விடுமுறை நாள்..! பொழுது போகாமல் தொலைகாட்சியின் "டென்ட் கொட்டா" அப்.பில் உயர்தர HD ப்ரிண்டில் வெளிவந்துள்ள படங்களை அசிரத்தையாக முதல் சில காட்சிகளை மட்டும் ஓடவிட்டு ப்ரிவியூ பார்க்க ஆரம்பித்தேன். அதில் காளிதாஸ் என்ற இப்படத்தினை பார்க்க ஆரம்பிக்கையில், முதல் சில நிமிடங்களிலேயே ஒரு பெண்ணின் துர்மரணம்.. அதை விசாரிக்க வரும் காவல் அதிகாரி, சில கோணங்களில் விசாரணையை ஆரம்பிக்க, எனக்கும் 'இந்த மரணம் எப்படி நடந்திருக்கும்..?' என ஊகிக்க ஆரம்பித்து படத்தோடு ஒன்றி விட்டேன்..! சில 'லாகிக்' சறுக்கல்களை தவிர, கடைசி வரை விறுவிறுப்பாகவே படம் இருந்தது. இயக்குநருக்கு இதுதான் முதல் படம் என்பதை நம்ப மு…
-
- 2 replies
- 1.3k views
-
-
வழக்கமான திருமண காணொளிகளை பார்த்திருப்போம்.. "அடச் சே..! இவ்வளவுதானா..?" என அலுத்திருப்போம்..! சிலர் வித்தியாசமான முறையில் முயற்சித்திருப்பர்... அவ்வகையில் இந்தக் காணொளி தெலுங்கில் இருந்தாலும் சற்று ரசிக்கக் கூடியதுதான்..!! (கீழேயுள்ளது திருமணக் காணொளிதானா? என்ற ஐயப்பாடும் உண்டு..)
-
-
- 4 replies
- 701 views
- 1 follower
-
-
கிராமத்தின் பள்ளிப் பருவத்தில், இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பபட்டு, நான் விரும்பிக் கேட்ட பாடல் இது..! ஏறக்குறைய 45 வருடங்கள் கழித்து, அதே பாடலை யாழ்ப்பாணத்தில்(2016) எஸ்.பி.பி பாடியபோது..! 😎
-
- 0 replies
- 828 views
- 1 follower
-
-
'நானும் பாட்டுப் பாடுறேன் பேர்வழி'யென அஸ்ட கோணலாய் ஆடி பந்தா காட்டும் சில தன்னார்வ பாடகர்களுக்கிடையே இந்தக் காணொளியில் வருபவர் எளிமையாக ஆர்ப்பாட்டமில்லாமல் நன்றாக பாடியுள்ளார். முகச்சாயலில், இவர்கள் ஈழத்தை சார்ந்தவராக இருக்கலாமென தோன்றுகிறது..!
-
-
- 12 replies
- 1.8k views
- 1 follower
-
-
கல்லூரியில் படிக்கும்பொழுது விடுதியில் சிலசமயம் இசைக்குழுக்களின் கச்சேரி நடப்பதுண்டு. அம்மாதிரி சமயங்களில் சிலர் தண்ணியை போட்டுக்கொண்டு குத்துப்பாட்டுக்களுக்கு ஆடுவதுண்டு..! ஆனால் நடனம் தெரியாவிட்டாலும் சிலசமயம் நம்மையும் அறியாமல், பாட்டுக்கு சுருதி ஏற ஏற நம் கால், கைகள் தாளம் போடுவதுண்டு. சிலர் தம்மையும் அறியாமல் வயது வித்தியாசம் பாராமல் ஆண்களும், பெண்களும் எழுந்து ஆடுவதும் உண்டு.. அம்மாதிரியே இந்தப்பாடலும் சிலரை ஆட வைத்துள்ளது..!
-
- 1 reply
- 1.1k views
-
-
இப்படியும் ஒரு நகைச்சுவை..!
-
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
எழுபதுகளின் ஆரம்பத்தில் கல்லூரியில் படிக்கும்போது இப்பாடல் மிகவும் பிரபலம்..! இப்பொழுது புது வடிவில்..
-
- 2 replies
- 809 views
- 1 follower
-
-
மீன்கொடி பறந்தபாண்டிய நாட்டின்வான்புகழ் மதுரைஎங்கள் ஊர் ! வேப்பம்பூ எங்கள் பூ வீரம்தான் எங்கள் வாழ்வு வெற்றி ஒன்றே எங்கள் உயிர் ! இறைவன் என்றாலும் குற்றம் குற்றமே என்று நின்ற ஊர் எங்கள் மதுரை ! அபலை என்றாலும் நீதி கிடைக்கும் என்று நிறுவிய கண்ணகியின் காதை நிகழ்ந்த நகர் எங்கள் மதுரை ! வேலை சரியாகச் செய்யவில்லைஎன்றால் சொக்கன் என்றாலும் சாட்டைச் சொடுக்கு கொடுப்போம் நாங்கள்! உலகப் பொது மறை திருக்குறளை உரசிச் சரிபார்த்த சான்றோர் சங்கம் எங்களூர் தமிழ்ச் சங்கம் ! நீதிக்குத் தலை கொடுத்த நெடுஞ்செழியன் ஆண்ட மதுரை எங்கள் மதுரை ! முத்துடைத்து எங்கள் நாடு முகம் சுழிக்கா விருந்து படைக்கும் பெயருடைத்து மல்லிகை வாசமாய் மணம் ப…
-
- 0 replies
- 472 views
-
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
இசையின் ஒரு வடிவம் செல்வி செயலலிதா அம்மையார் மறைந்தபொழுது, செயா தொலைக்காட்சி, அவரின் காணொளிகளை நேரலையாக ஒளிபரப்பியபோது, அதன் பின்னணியில் ஒரு வயலின் இசை மட்டும் மெல்லிதாக ஒலித்துக்கொண்டே இருந்தது மனதை மிகவும் பாதித்தது. இசையின் மூலம் மனதை வருடி, சோகத்தையும் உணர்த்தலாம் என்பதை இவ்விசையை உணர்ந்தால் புரியும்.. யுடுயூபில் தேடியதில், அந்த இசையொலி கிடைத்தது.. உணர்ந்து ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுள்ளது..! முழு வடிவம்..
-
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
இதர் ஆவோ...! தமிழ் நாட்டில் அந்நியநாட்டு மொழியாம் 'இந்தி'யை திணிக்க முயலுகையில், நம் பார்போற்றிய கான்ராக்டர் "நேசமணி", இந்தி சொல்லித்தரும் பாங்கை இங்கே பார்க்கலாம்..!
-
- 0 replies
- 799 views
-
-
ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சியின் யூடியூபில் பழைய தமிழ்ப் பாடல்களை பார்ப்பது வழக்கம். அப்படி உலாவரும் பொழுது, இந்த இசைக்குழுவின் வாத்திய இசை மிகவும் கவர்ந்தது. நீங்களும் கேட்டுப் பாருங்களேன், நிச்சயம் ரசிப்பீர்கள்..!
-
- 3 replies
- 1.1k views
-
-
"மேரா சபுநோ கி ராணி கப் ஆயா கீ தூ..?" - "என் கனவு ராணி எப்போது வருவாள்..?" என்னங்க, 'இந்த வயசுல இவருக்கு இளமை திரும்புகிறதா..' என்று நினைக்கிறீர்களா..? பரண் மீதிருக்கும் பழைய பஞ்சாங்கத்தை தேடலாமென ஏறிப் பார்த்தால், பழைய எல்பி ரெகார்ட் ஒன்றுதான் கிடைத்தது..! சுழலவிட்டேன்.. பாடலும் வந்தது.. அதோடு வீணை இசையும் புது வடிவில்..!! ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுள்ளது..! Start the music...
-
- 1 reply
- 637 views
- 1 follower
-
-
இளங்காற்று வீசுதே... இப்பாடலை கேட்கும்போதெல்லாம் அரசுப்பணியின் ஆரம்ப காலங்களில், தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, வருசநாடு, உடங்கல், பெரியகுளம் போன்ற மலையடிவாரப்பகுதிகளில், இளங்காளையாய் சக அலுவலர்களுடன் திட்டப்பணிகளுக்காக சுற்றித் திரிந்த பசுமையான நினைவுகளை மீட்டுச் செல்லும்.. இப்பகுதிகளைப் பார்த்து இப்போ பல வருசமாச்சுது.. போடி, கம்பம் பள்ளத்தாக்குகளின் சுழல்காற்றின் வாசத்தில், இவ்விளங்காற்றும் தவழட்டும் இனிமையாய்..!
-
-
- 2 replies
- 1.7k views
- 1 follower
-
-
'சங்கீத ஞானம்' இல்லாவிட்டாலும் இளையராஜாவின் பாடலை, இந்த வீணை இசைமழையில் கேட்பது காதுகளுக்கு மிக இனிய தேன்மழை..! வீணை இசைக் கலைஞருக்கு ஒரு சபாஷ்..!
-
- 0 replies
- 1k views
-
-
இரைமீட்டல்.. பொறியியற் கல்லூரியின் இறுதியில் படிக்கும்பொழுது... காலை ஏழே முக்கால் மணி வாக்கில் மாயவரத்திலிருந்து வரும் புகைரத வண்டி, சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று பல்கலைக்கழக மாணவர்களை இறக்கிவிட்டுச் செல்லும்.. அடுத்த சில நொடிகளில் கடலூரிலிருந்து வந்து நிற்கும் மாணவர்களின் ரயில்.. ரயில் நிலையத்தின் எல்லையிலேயே எம் பொறியியற் கல்லூரி அமைந்துள்ளது. காலை 08:10 க்கு கல்லூரி வகுப்புகள் ஆரம்பிக்கும்.. ஆனால் நாங்கள் 07:30 மணிக்குள் விடுதியின் உணவகத்தில் உணவருந்திவிட்டு, விடுதியின் வாசலில் 07:50 மணிக்கு சரியாக வந்து அமர்ந்துவிடுவோம்..! அப்புறமென்ன..? கல்லூரி மாணவ, மாணவிகள் பட்டாளம், பல்கலைக்கழகத்தை நோக்கி வண்ண வண்ண மாணவியரோடு ஊர்வலமாக செல்லும்.. It'…
-
- 0 replies
- 1.2k views
-
-
நிஜமும், நிழலும்..! இரண்டு நாளைக்கு முன்பு யாழ்கள உறவு பாஞ் அவர்கள், ஈழத்து கலைஞர்கள்(மன்மதன் பாஸ்கி மற்றும் சிறி சித்தப்பா) நடித்த ஒரு காணொளியை வாட்ஸ் அப்பில் அனுப்பிருந்தார்.. முதலில் அசிரத்தையாக பார்க்க ஆரம்பித்த நான், இக்காணொளியை கண்டு முடித்தவுடன் கவரப்பட்டு யூடுயுபில் இந்த இரட்டையர்கள் நடித்த பல காணொளிகளை வரிசையாக ரசித்து வருகிறேன்.. புலத்தில் (லா சப்பல்?)எடுக்கப்பட்டுள்ள இக்காணொளிகள் மிகவும் நன்றாக உள்ளது.. அவற்றில் சில.. ( ஈழத்து தமிழர்களிடம் நல்ல,அற்புதமான திறமைகள் உள்ளன, ஆனால் வெளியே தெரிய மாட்டேன்கிறது..! )
-
- 1 reply
- 687 views
-
-
பென்சனர் குரூப்..! நகரங்களில், கிராமங்களில் இம்மாதிரியான 'பெருசு'கள், உதார் விட்டுக்கொண்டு, வெட்டியாக பொழுதைக் கழிப்பதைக் காணலாம்.. இக்காணொளியும் அம்மாதிரியான மனிதர்களை பிரதிபலிக்கிறது..!
-
-
- 10 replies
- 1.6k views
-
-
பிரதமர் மோடி இந்த நாட்டுக்கு தேவையா? காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது விடயமாக இன்றைய நியூஸ்7 தொலைக்காட்சி விவாதத்தில் 'வழக்கறிஞர் பிரசன்னா'வின் சில கருத்துக்கள் கவர்ந்ததன.. அவற்றில் இது ஒன்று..
-
-
- 1 reply
- 998 views
-