பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
நாம் மகன்/ மகள் வீட்டுப் பிள்ளைகளை பொதுவாக பேரன்... பேரப் பிள்ளைகள் என்று கூறுவோம். உண்மையில் பேரன் என்பது பெயரைத் தாங்கி நிற்பவன் என்பதன் சுருக்கமே ஆகும். போன தலைமுறையில் வைத்த பேர்களை பார்த்தோமானால் பெரும்பாலும் அவர்கள் பரம்பரையில் வந்த பாட்டன் பூட்டன் பெயராகவே இருக்கும். இதைப் போலவே ஊர்ப் பேர்களும் பல வரலாறுச் செய்தியை தாங்கி நிற்பன... தினம் தினம் எத்தனையோ ஊர்களை கேள்விப்படுகிறோம் / கடந்து செல்கிறோம். ஒவ்வொரு ஊர்ப் பெயரும் ஒரு வரலாறுச் செய்தியை தாங்கி நிற்பதை நாம் அறியோம். சில நேரங்களில் ஒரு மாதிரியாக ஊர்ப்பெயர்கள் இருப்பதை அவதானிக்கலாம். அப்படியெனில் அந்த ஊர்களுக்குள் ஏதோ ஒரு பொதுவான செய்தி ஒளிந்திருக்கும். உங்களுக்கு தெரிந்த பழமையான ஊர்ப்பெயரையும் அந்த ஊர் தாங்கியு…
-
- 0 replies
- 14.1k views
-
-
அமெரிக்காவிலுள்ள மிசிகன் இன்ஜினியரிங் கல்லூரி விஞ்ஞானிகள் பறக்கும் ரோபோ வவ்வால்களை தயார் செய்துள்ளனர். பறவையை பார்த்து விமானம் படைத்ததுடன் நிற்கவில்லை. இயற்கையைப் பார்த்து விஞ்ஞானிகள் இன்றும் கற்றுக் கொள்வது ஏராளம். வண்டுகளின் கால் அமைப்பு, பறந்து கொண்டே ஓரிடத்தில் நிலையாக நிற்கும் மீன் கொத்திகள் என்று விலங்கினங்களில் உள்ள விஷயங்களை நம் வாழ்க்கைக்கு பயன்படும் கருவிகளில் புகுத்த முயற்சிக் கின்றனர். ஒலி அலைகளை அனுப்பி, அது எதிரொலிப்பதன் மூலம் எதிரில் உள்ள பொருட்களையோ உயிரினங்களையோ அறிந்து வவ்வால்கள் பறக்கின்றன. இந்த ஒலியை நம்மால் கேட்க முடியாது. ஒருவேளை அவற்றை நம்மால் கேட்க முடியும் என்றால் அது ஒரு விமானம் தரை இறங்கும் போது ஏற்படுமே அவ்வளவு சத்தத்தை ஏற்படுத்தும் என்…
-
- 0 replies
- 967 views
-
-
பாகிஸ்தான் தமிழர்கள்: "நாங்களும் தமிழர்களே" - பெருமிதப்படும் அறியப்படாத சிறுபான்மை சமூகம் சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் Facebook 1980-1990க்கு இடைப்பட்ட காலத்தில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள தமிழர் குடியிருப்பு பகுதியில் நடந்த கோயில் திருவிழா அமெரிக்கா முதல் ஜப்பான் வரை, ரஷ்யா முதல் பப்புவா நியூ கினியா வரை உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் குடிபெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், பாகிஸ்தானில் தமிழர்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறினால் நம்ப முடிகிறதா? ஆம், நம்பித…
-
- 0 replies
- 574 views
-
-
தைப்பொங்கல் திருநாளே தமிழரின் புத்தாண்டாகும் - தமிழீழ விடுதலைப் புலிகள் - நன்றி தமிழீழ ஆவணக்காப்பகம் மிகவும் பழங்குடிகளான தமிழர் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தனர்.மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்திலே உற்பத்தியான தமிழினம் பலவித இயற்கை சமூகக் காரணங்களினால் இடம் பெயர்ந்து காடும் காடு சார்ந்த பகுதியாகிய முல்லை நிலத்திற்குச் சென்றது. பின்னர் அங்கிருந்து வயலும் வயல் சூழ்ந்த பகுதியாகிய மருத நிலத்தை அடைந்தது.இறுதியாகிய கடலும் கடல் சார்ந்த இடமாகிய நெய்தல் நிலத்தை சேர்ந்தது. குறிஞ்சியும் முல்லையும் ,வெப்பமிகுதியினால் தன் நிலை பாலை எனவொரு வடிவம் பெற்றன. எனவே, தமிழர் நில இயல்புகளைக் கூறுமிடத்துப்…
-
- 0 replies
- 682 views
-
-
-
- 0 replies
- 595 views
-
-
தமிழ் உணவுகள்: சங்க கால இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகள் என்னென்ன? #தமிழர்_பெருமை ஜெயகுமார் சுதந்திரபாண்டியன் பிபிசி தமிழ் Getty Images (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிட்டு வருகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் மூன்றாவது கட்டுரை.) "உணவு" என்பதற்கு தமிழில் ஒரு மிகச் சிறந்த வரையறை கொடுத்திருக்கிறார்கள். உணவு என்றால் என்ன என நீங்கள் தேடினால், உலகில் ஒவ்வொரு அறிவியலும் அதை ஒவ்வொ…
-
- 0 replies
- 10.9k views
-
-
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மழைநீர் வெளியேற்றும் நிலவறைக் கால்வாய் - சோழர்கால அசத்தல் தொழில்நுட்பம்! கால்வாய் ஓர் இடத்தில் அகலமாக, பின்னர் குறுகலாக என மாறி, மாறி, வளைவுகளுடன் பாம்பு போல் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளமான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு நீர் அழுத்தத்துடன் வெளியேற்ற இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர். சுமார் 50 ஏக்கர் பரப்பில் பரந்து விளங்கும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலிலிருந்து உபரிநீரை வெளியேற்ற முன்கூட்டியே திட்டமிட்டு பூமிக்கடியில் சுரங்க நீர்வடிகால்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. மழைக் காலங்களில் வரும் அதிகப்படியான உபரி நீரினை வெளியேற்றுவதற்காக கிபி 10-13 நூற்றாண்டில் பூமிக்கடியில் கால்வாய் அமைத்து சுமார் 1,250 …
-
- 0 replies
- 481 views
-
-
கீழடியை ஒத்த வடிகாலமைப்பு ஆதிச்ச நல்லூரிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கீழடியில் கண்டு பிடிக்கப்பட்டது போல வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் வடிகால் குழாய் போன்ற அமைப்பு ஆதிச்ச நல்லூரிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்ச நல்லூரில் அகழாய்வுப் பணிகள் கடந்த மே 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. தமிழக தொல்லியல்துறையின் அகழாய்வு கள இயக்குநர் பாஸ்கர், தொல்லியல்துறை அலுவலர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் ஆய்வு மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆதிச்ச நல்லூரில் 72 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வாழ்விடங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தொ…
-
- 0 replies
- 326 views
-
-
திராவிடம்` என்றால் என்ன? :வி.இ.குகநாதன் ` ‘திராவிடம்` என்ற சொல் குறிப்பது என்ன? இது பற்றிய பல்வேறு தவறான விளக்கங்கள் மக்களிடையே பரவிக் கொண்டிருக்கும் காலமிது. `திராவிடம்` என்பது ஒரு சமற்கிரதச் சொல், `திராவிடம்` என்பது தெலுங்கர்களைக் குறிப்பது, `திராவிடம்` என்பது தென்னிந்தியாவில் வாழும் பார்ப்பனர்களைக் குறிப்பது என்பன போன்ற பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. இச் சூழ்நிலையில் உண்மையில் `திராவிடம்` என்பது என்ன? அச்சொல் வரலாற்றுரீதியாக எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது எனப் பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும். `திராவிடம்` என்பது …
-
- 0 replies
- 1.1k views
-
-
அகிலா இளஞ்செழியன் பிபிசி தமிழுக்காக …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிங்கப்பூருடன் தமிழகத்தின் வணிக, அரசியல் தொடர்பு – ஆராய்ச்சியில் தகவல் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் டாக்டர் இயன் சின்கிளேர் பல்வேறு நாடுகளின் வரலாறு, கல்வெட்டுகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார். சிங்கப்பூரில் கடந்த 7ஆம் திகதி சிங்கப்பூர்-இந்தியா பாரம்பரிய மையத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் இயன் சின்கிளேர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். அப்போது சிங்கப்பூருக்கும், தமிழகத்தை ஆண்ட சோழ வம்சத்துக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்த வர்த்தக, அரசியல் தொடர்பு குறித்து அவர் கருத்தரங்கில் விளக்கியுள்ளார். இதுகுறித்து இயன் சின்கிளேர் கூறுகையில், “சிங்கப்பூரில் கிடைத்த பழமையான கல் குறித்து எனக்குத் தகவல் கிட…
-
- 0 replies
- 417 views
-
-
சோழன் குடா நக்காவரம் தமிழர் ஆடையின்றி ஒருவர் வந்தார். நகைப்புக்குரியவராக, பழிப்புக்குரியவராக, இழிவுக்குரியவராக, தாழ்வானவராக, கேலிக்குரியவராக, கிண்டலுக்குரியவராக அவரை ஆடையணிந்த சமூகம் கருதியது; ஆடையற்றவர் நகுதற்குரியவரானார். என் நாட்டைப் புகழ்ந்து பாடுவோர் போரில் நான் தோற்றால் என்னை இகழ்வாராக என வஞ்சினம் கூறியவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் (புறநானூறு) எனத் தொடங்கும் அவனது வரிகள் புகழ்பெற்றவை. நகுதக் கனர் என்பது காலப்போக்கில் நக்கர் ஆயிற்று. என்ன நக்கலா எனக் கேட்கும் பேச்சு வழக்கும் இன்று உண்டு. ஆடையற்றவர் நகுதற்குரியராதலால் நக்கர் ஆயினர். எவரோ ஒருவர் ஆடையற்றிருந்தால் நகுந்து விட்டுவிடலாம். ஒரு மனிதக் குழுவினரே ஆடை…
-
- 0 replies
- 1.9k views
-
-
-
தமிழ் நாகரிகத்தின் எதிர்காலம் அறிஞர் க.பூரணச்சந்திரன் தமிழ் நாகரிகத்தின் எதிர்காலம் பற்றிப் பலர் கவலையோடும் அக்கறையோடும் விவாதிக்கிறார்கள். பொதுவாக நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய பல விடயங்களை அவர்கள் சொல்லவும் செய்கிறார்கள். அவற்றைப் பகுத்துப்பார்த்தால், பெரும்பாலும் 1. உலக/ இந்திய நாகரிகத்திற்குத் தமிழகத்தின் பங்கு ஏற்றுக்கொள்ளப்படாத நிலை 2. இந்தியாவில் தேசிய நலனுக்கு உகந்த கூட்டாட்சிகள் அமையாத நிலை-தமிழ்த் தேசியம் உருவாகாத நிலை 3. ஆங்கிலத்தின் ஆதிக்கம்/ அதன் பின்னணியிலுள்ள உலகமயமாக்கல் 4. செம்மொழிப் பிரச்சினை 5. ஆதிக்கத்தை எதிர்க்கும் அரசியலும் அதனோடு இணைந்த தமிழ்மேம்பாடும் என்ற பொருள்களில் அடங்குகின்றன. சிலருக்கு தமிழனுக்கு இனவுணர்வில்லையே என்ற…
-
- 0 replies
- 803 views
-
-
தமிழி-யைத் தமிழுக்கு அடையாளப்படுத்தியவர்: ஐராவதம் மகாதேவன். தென்னிந்திய மொழிகள் மற்றும் பண்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் சுதந்திர இந்தியாவில் பன்னெடுங் காலமாக தொடர்ந்து நடந்து வந்த, நடந்து வருகிற, காலங்களில் அடிப்படையான சில ஒத்திசைவான கொள்கைகளை சிலர் கடைபிடித்து வருகின்றனர். அதாவது, தென்னிந்திய வரலாறு மற்றும் அது தொடர்பான வலுவான ஆதாரங்களை தொல்லியல் துறையினர் கண்டடைந்ததை உயர் ஆய்விற்கு, அறிவியல் பூர்வமான சோதனைகள் மேற்கொள்ள பல நூதன வழிகளில் தடைகளை ஏற்படுத்துவது. இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது ஓரிரு விசயங்கள் மட்டுமே பொதுவெளியில் தென்னிந்திய மக்களிடையே அது பற்றி தெரியவருகின்றன அல்லது எளிதில் அது பற்றி திட்டமிட்டு கவனத்தை திசை திருப்பி விடுதல் வேலையைச் செய்து வருகின்ற…
-
- 0 replies
- 920 views
-
-
9 மற்றும் 10-ம் நூற்றாண்டுகளில் லண்டன் நகர மக்கள் தொகை வெறும் 30,000 மட்டும்தான். அதே சமயம், கம்போடிய அங்கோர் நகரில் 10 லட்சம் மக்கள் வசித்திருக்கிறார்கள் என்கிறது வரலாற்று ஆய்வாளர்களின் புள்ளி விவரம். 10 லட்சம் மக்கள் வசித்தார்கள் என்பதில் என்ன இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். அந்த மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நகரத்துக்குத் தேவையான தண்ணீரும் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரும் சீராக விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. கம்போடியா கோயிலுக்கும் பனைக்கும் மட்டும் பிரபலமல்ல, அங்குள்ள ஏரிகளுக்காவும்தான். கம்போடியாவின் மொத்த பரப்பளவு 181,035 ச.கி.மீ. அந்நாடு, 443 கி.மீ நீளமான கடற்கரையைக் கொண்டது. கம்போடியாவில் சிறப்பாகச் சொல்லக்கூடிய விஷயங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், அவ…
-
- 0 replies
- 738 views
-
-
யாப்பகூவ கோட்டை. குருநாகலை மாவட்டத்தின் மகவ என்னும் கிராமத்துக்குச் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இந்தக் கோட்டையானது அமைந்துள்ளது. ஈழத்தின் கலை வரலாற்றில் இரண்டாவது சீகிரியா என வர்ணிக்கப்படுகிறது. கி.பி 478 தொடக்கம் 496 ஆண்டுகள் வரையான காலப் பகுதிகளில் காசியப்ப அரசன் சீகிரியா கோட்டையை நிறுவி குபேரனைப் போல வாழ்ந்தான் என்று மகாவமிசம் கூறுவதைப் போல இயற்கை அரணாக விளங்கும் யாப்பகுவவை சுப எனப்படும் இராசதாணி தங்கியிருந்து தனது ஆதிக்கத்தை செலுத்தியதாக பௌத்த சாதுக்களின் கல்வெட்டுக்களின் மூலம் அறியக் கிடைக்கிறது. சுப எனப்படுபவர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர். இருந்த போதிலும் பதின் மூன்று பௌத்தப் பிக்குகளின் பௌத்த அனுஷ்டானங்களை பாதுகாத்து வந்துள்ளார். மேலும் 121…
-
- 0 replies
- 2.2k views
-
-
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை யாழ் தென்மராட்சியின் மட்டுவில் கிராமத்தில் 1899 ஆம் ஆண்டு ஆணிமாதம் 27ம் திகதி சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளுக்கு மகனாகப்பிறந்தார் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள். தயாரின் தனங்கிளப்பு ஊரிலுள்ள காரைத்தூவிநாயகர் குலதெய்வமான படியால் இவருக்கு கணபதிப்பிள்ளை என்று பெயர் சூட்டப்பெற்றது. மட்டுவில் அமெரிக்கமிசன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை கற்றார். அதன் பின்னர் தனது 17ஆவது வயதில் நம்பிக்கை, தெய்வமயம் இலக்கிய, இலக்கண அறிவு நிரம்பப் பெற்ற மட்டுவில் க.வேற்பிள்ளையிடம் பாடம் கற்று வந்த பொழுது நாவலர் காவியப் பாடசாலையைப் பற்றி கேள்விப்பட்டு அங்கு சென்று கல்விபயின்றார். வண்ணார்பண்ணை காவியப்பாடசாலை பெரிதும் அவரை விருப்பத்தோடு கல்வி கற்க வைத…
-
- 0 replies
- 3.8k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 2-ஆம் பதிவு நாள்: 13.01.2016 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் முதல் முழு நிலவு நாள் கடந்த 09.01.2016-ல் செவ்வனே அமைந்தது. 08.01.2016 விடியற்காலை 06.30-க்கு மெல்லிய கீற்றாகப் பிறை கீழ்வானில் தெரிந்தது. ஆண்டின் 27-ஆம் நாளில் அமைய வேண்டிய முதல் மறைநிலவானது சரியாக 26-ஆம் நாளில் பொருந்தியிருப்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். கடந்த முதல் முழுநிலவு ஒரு நாள் தடுமாறியதன் விளைவே இதுவாகும். 09.01.2016-ன் மறைநிலவை அச்சாகக் கொண்டு அடுத்து வரும் 15-ஆம் நாளில் இரண்டாவது முழுநிலவானது முறைமுற்றியும் நாள் முதிர்ந்தும் தோன்ற வேண்டும். அதாவது 24.01.2016 அன்று தோன்றிட வேண்டும். …
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழின் பொருள் தற்போது உலகத்தில் 6800 மொழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மொழிகளுள் சில தொன்மையானவை. சில புதியவை. சிலவற்றுக்கு இலக்கிய வளம் உண்டு. சிலவற்றுக்கு எழுத்துகூட கிடையாது. சில மொழிகள் நெடுங்காலம் வாழக்கூடிய நலமான நிலையைப் பெற்றுள்ளன. ஒரு சில மொழிகள் அழிவின் விளிம்பில் நிலை தடுமாறிக்கொண்டிருக்கின்றன. உலக மொழிகள் எதற்கும் இல்லாத தனிச்சிறப்புகள் தமிழ்மொழிக்கு உண்டு. கிரேக்க நாட்டு மொழி கிரேக்கம். இங்கிலாந்து நாட்டின் மொழி இங்கிலீசு(ஆங்கிலம்). கிரேக்கம், இங்கிலீசு என்ற சொற்கள் மொழியை மட்டுமே சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் தமிழ் என்ற சொல், மொழி என்பதோடு சேர்த்துப் பதினொரு பொருளைத் தருகிறது. இப்படிப்பட்ட சிறப்பு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லவே இல்…
-
- 0 replies
- 6k views
-
-
-
- 0 replies
- 418 views
-
-
ஆங்கிலேயர்களே பார்த்து நடுங்கிய தமிழச்சி வேலு நாச்சியாரின் மறைக்க பட்ட வரலாறு தமிழ் பெண் என்பதால் தோல்வியை மறைக்க ஆங்கிலயேர் செய்த சதி, மறைக்கப்பட்ட வரலாறு
-
- 0 replies
- 361 views
-
-
தமிழ்க் கடல் தமிழ் ,ஓர் இயன்மொழி. அதாவது வேறு எம்மொழிகளின் துணையின்றித் தானே தனித்துத் தோன்றி வளர்ந்த மூலமொழி.இம் மொழியே உலக மொழிகளைத் தோற்றிய தாய்மொழி.முனைவர் கு. அரசேந்திரன் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து கால்டுவெல், ஞானப்பிரகாசர்,பாவாணர் அடிச்சுவட்டில் தமிழ்-இந்தோ ஐரோப்பிய மொழி உறவினை ஆய்ந்து நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். கடந்த சூலை மாதம் தொடங்கி இலண்டனிலிருந்து இயக்கும் இணையவழி இது பற்றித் தொடர் சொற்பொழிவு ஆற்றி வருகிறார். தாய்- தமிழ்த் தாய் என்னும் அமைப்பு இந் நிகழ்வினைப் பொறுப்பெடுத்து நடத்துகிறது.மாதம் ஓர் சொற்பொழிவாய்த் தொடர்வதென்ற திட்டத்தில் மூன்றாவது சொற்பொழிவும் நடந்து விட்டது.முனைவர் கு.அரசேந்திரனின் ஆய்வுச் சாரமாக இப் பொழிவுகள்…
-
- 0 replies
- 495 views
-
-
-
- 0 replies
- 412 views
- 1 follower
-
-
5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிந்து சமவெளி நாகரிகத்தில் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட குளியல் குளம். சிந்துச் சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் மாடு, எருமை, ஆடு ஆகியவற்றின் மாமிசத்தை பெருமளவில் உணவாக உட்கொண்டிருக்கலாம் என சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. சிந்துச் சமவெளி பிரதேசங்களில் கிடைத்த பானைகளில் இருந்த உணவு எச்சங்களை ஆராய்ந்ததில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சித் துறையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவரும் தற்போது ஃப்ரான்சில் உள்ள CEPAMல் டாக்டர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்…
-
- 0 replies
- 861 views
-