பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
-முனைவர் த.செயராமன். ஒரு தேசிய இனம் என்பது வரலாற்றின் வினை பொருள்.அது ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் உருவாகிவிடக் கூடிய அல்லது உருவாக்கிவிடக் கூடிய ஒன்றல்ல.ஒரு பொதுவான மொழியைப் பேசக்கூடிய தொடர்ச்சியான வரயறுக்கப்பட்ட நிலப் பகுதியைக் கொண்ட ஒரு பொதுப் பொருளாதார வாழ்வைக் கொண்ட தாங்கள் ஓரினம் என்ற உளவியல் உருவாக்கத்தைப் பெற்றிருக்கக் கூடிய ஒரு நிலையான மக்கள் சமூகம் வரலாற்றுப் போக்கிலே உருவாகி ஒரு 'தேசம்' என்ற நிலையை எட்டுகிறது.இந்தத் தேவைகளை மக்கள் வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நிறைவு செய்து தேசத்தின் உரிமைக் குரலை எழுப்புகிறார்கள். தேசங்களுக்கான தேவைகளை நிறைவு செய்திருந்தாலும் பல தேசிய இனங்கள் வெவ்வேறு கால கட்டங்களிலேயே கண் விழிக்கின்றன.1789 முதல் 1…
-
- 9 replies
- 2.8k views
-
-
நாங்கள் பாவிக்கும் எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்க்கும் பல அர்த்தங்கள் இருக்கும். அன்றாட வாழ்வில் கூட பாவிப்போம் ஆனால் எங்களுக்கு தெரிவதிலை அந்த எழுத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம் அ திருமால் சிவன் பிரம்மா 'எட்டு' என்னும் எண்ணின் குறி இப்படியே ஒவ்வோர் எழுத்துக்கும் பல பொருள்கள் உள்ளன அவற்றை இந்த பகுதியில் சற்று பார்ப்போம்
-
- 7 replies
- 1.9k views
-
-
-
- 1 reply
- 1.8k views
-
-
எழுதுவேமா??? ஐயர் இல்லாமல் பாதிரியார் இல்லாமல் சிவன் யேசு அல்லா இல்லாமல் அதைவிட முக்கியமாக எங்களுக்குள் கெளரவம் பார்க்காமல்.
-
- 0 replies
- 978 views
-
-
நாட்டுப்புறத் தெய்வங்களும் மக்கள் நம்பிக்கைகளும் முனைவர் கு. கண்ணன் நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் வாழ்க்கைத் தேவைகளால் தோன்றியவை. நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்படுகின்றன. பின்னர் அவை சமுதாயத்தால் பாதுகாக்கப்படுகின்றன. தனி மனித உணர்வாலும் சமுதாய உணர்வாலும் நம்பிக்கைகள் மேலும் வளர்கின்றன. அவை காலங்காலமாகத் தொடர்கின்றன. பெரும்பாலும் அச்ச உணர்வினாலேயே நம்பிக்கைகள் தோன்றுகின்றன. வாழ்வில் சில செயல்களுக்கு காரணம் கற்பிக்க முடியாத போது நம்பிக்கைகள் அசைக்க முடியாத உரம் பெறுகின்றன. இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளை அறிய முடியாத போதும் இவை உருவாக்கின்றன. நாட்டுப்புறத் தெய்வம்:- நாட்டுப்புறத் தெய்வம் என்பதை மக்களால் உருவாக்கப்பட்டதும் மக்களில் வாழ்ந்து இ…
-
- 0 replies
- 8.7k views
-
-
சில பழமொழிகளும் , சில பொன்மொழிகளும் சாமியே சைக்கிள்ள போக பூசாரி புல்லட் கேட்டானாம் இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்துப் பயனென்ன ? தைமாத மழை தவிட்டிற்குக் கூட காணாது கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி கூறு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல் திங்குதாம் அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள் ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது இலவப்பஞ்சு ஏன் என்று சேதி கேட்டதாம் ஆண் தாட்சண்யப்பட்டால் கடன் , பெண் தாட்சண்யப்பட்டால் விபச்சாரம் அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை அதிகாரி குசுவிட்டால் அமிர்த வஸ்து தலையாரி குசுவிட்டால் தலையை வெட்டு அக்காள் …
-
- 36 replies
- 14.5k views
-
-
நம் முன்னேர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் நடைபெறும் சுக,துக்க, காரியங்கள் அனைத்திலும் பல சடங்குகளையும், சம்பிரதாயங்களும் கடைபிடித்து வந்தனர்.நாமும் இவற்றில் பலவற்றை இந்த நாள்வரை கடைபிடித்து வருகிறோம். அவை ஒவ்வொன்றிர்க்கும் ஓரு அர்த்தம் உண்டு. சில நேரடியாகவும்,பல மறைமுகமான அர்த்தம் உள்ளனவாகவும் இருக்கும் நம்முன்னேர்கள் செய்யும் காரியங்கள் அனைத்திற்க்கும் அர்த்தம் இருக்கும் அவற்றில் சிலவற்றை சுட்டேன் சுட்டத உங்களுடன் பகிர்கிறேன்
-
- 12 replies
- 3.3k views
-
-
பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர். மனிதர்கள் அடிப்படையில் தம் விருப்பு வெறுப்புகளில், கருத்துக்களில் வித்தியாசப்பட்டவர்கள். அவர்களின் சிந்தனைகளை, நம்பிக்கைகளை, வாழ்க்கை முறையை ஒரே கொட்டடிக்குள் அடைக்க நினைப்பது மிகக் கொடிய வன்முறை. உலகம் தோன்றிய காலத்திலிருந்து நம்பிக்கைகள், சிந்தனைகள், மதிப்பீடுகள் என்பவை காலப்போக்கில் மாறிக்கொன்டும் மறு உருவாக்கத்திற்கு ஆளாகியும் இருக்கின்றன. அடக்கு முறைகள் எவ்வளவு இருந்தாலும் மனிதனின் அடிப்படைச் சிந்தனைகளை அவற்றால் முற்றிலும் முடக்க முடிந்ததில்லை. சமூகம் ஒரு மேம்படுத்துதளை நோக்கி ப…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழ் மொழியின் பால் ஆறுமுகநாவலரை விட, ராமசாமி என்பவருக்குத் தான் தமிழ் பற்று அதிகம் என்ற வகையில் சிலர் இங்கு இகழ்ந்து பேசியதற்காக, ஆறுமுகநாவலர் தமிழிற்கென எழுதின இலக்கணச் சுருக்கத்தை பிரதி பண்ணி வழங்குகின்றேன். ராமசாமி எவ்வளவு தூரம் தமிழுக்குப் பாடுபட்டார் என்பதை அவரது பக்தர்கள் விளக்கட்டும். ஏனென்றால் வடமொழியில் பற்றுக் கொண்டதாக இவர்கள் கேவலப்படுத்துகின்ற ஆறுமுகநாவலரே, இவ்வளவு செய்து இருக்கின்றபோது, இவர்களின் தமிழ் பற்றாளராகச் சாயம் பூசமுனையும் கன்னடக்காரர் எவ்வளவு தூரம் தமிழுக்குப் பாடுபட்டார் என்று அறிய வேண்டமா? ஒரு கோட்டை அழித்து, தன் கோட்டை உயர்த்திக் காட்டுவதை விட, தன் கோட்டை உயரத்துவது தான் சிறந்த வழி. அதையே திறமையாக நாவலர் செய்திருந்தார். கோட்டை அழித்…
-
- 22 replies
- 7.8k views
-
-
தமிழ்மொழி நமது தாய்மொழி. பல்வேறு சிறப்புக்களைக்கொண்ட பண்பட்ட மொழி. அமிழ்தினும் இனியது தமிழ்மொழி என்று பலமொழிகளைப் பயின்ற அறிஞர்கள் பாராட்டுகின்றார்கள். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்றார் மகாகவி பாரதியார். உலகிலேயே முதல் முதலில் தோன்றிய மூத்த மொழி தமிழேதான் என்று பலநாட்டு ஆராய்ச்சியார்கள் கண்டுபிடித்துள்ளார்கள். கணனித் தொடர்புகளுக்கும் மிகவும் இசைவான, இலகுவான மொழியும் தமிழே என்று இன்றைய அறிஞர்கள் இயம்புகின்றார்கள். இவ்வாறு நமது தாய்மொழி பழமைக்குப் பழமையாக இருக்கிறது. புதுமைக்குப் புதமையாகவும் இருக்கிறது. என்றும் இளமையாக இருக்கிறது. அதனால் நமக்குப் பெருமையாக இருக்கிறது. இன்றைக்கு எங்கெங்கு மனிதர்கள் வாழ்கிறார்களோ அங்கங்கெல்லாம் தமிழர்…
-
- 23 replies
- 30.3k views
-
-
ஈழம் - சோலையின் புதிய புத்தகம் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சோலை திண்டுக்கல் மாவட்டம் அய்யன்பாளையத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். பத்திரிகைத் துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தை உடையவர். ஜனசக்தி, தீக்கதிர், நவமணி, அலை ஓசை, மக்கள் செய்தி, அண்ணா ஆகிய நாளிதழ்களில் தொடர்ந்து அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அண்ணா நாளிதழில் 9 ஆண்டுகள் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர். தமிழகத்தில் உள்ள இதழ்களில், நாளேடுகளில் அதிகமான அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவரும் இவரே. புரட்சித் தலைவருக்கும் அமரர் ஜீவாவிற்கும் உற்ற நண்பனாக இருந்தவர். இவரது கட்டுரைகளை வெளியிடுவதன் மூலம் தங்களின் வாசகர் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்…
-
- 0 replies
- 829 views
-
-
மலேசியாவில் யாழ்ப்பாணத்தமிழர்கள் என்னும் நூல் பற்றிய விபரத்துக்கு பிருத்தானியரின் ஆட்சிக்காலத்தில் வேலைவாய்ப்பை/பொருளீட்டலை நோக்கமாகக்கொண்டு ஈழத் தமிழர்கள் மலேசியாவிற்கு குடியகல்வுகளை மேற்கொண்டார்கள். இக்குடியகல்வில் இப்போதுள்ளது போன்ற உயிராபத்திற்காக புலம்பெயர்தல் என்ற நிர்ப்பந்தம் இருக்கவில்லை, ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பின் பேரிலேயே வேலை தேடி சென்றார்கள். அப்படியாக யாழ்ப்பணத்திலிருந்து மலேசியாவிற்கு ஈழத் தமிழர்கள் சென்று 125 ஆண்டுகள் ஆகிவிட்டது. வளப்படுத்தப்படாத மலேயாவிற்கு ஆரம்ப நாட்களில் வந்தவர்கள் கொடிய நோய்களுக்கு மத்தியில், தங்கள் குடும்பங்களைப் பிரிந்து, தனிமையில் பல இன்னல்களைக் கடந்து, பெரும்பாலும் தொடர்வண்டித்துறை, நில அளவைத் துறை, பொது அலுவலகத்த…
-
- 0 replies
- 717 views
-
-
-
- 0 replies
- 986 views
-
-
நூல் மதிப்புரை ஈழக்கதவுகள் 2002 அக்டோபர் திங்களில் யாழ் நகரில் நடைபெற்ற "மானுடத்தின் தமிழ்க்கடல்" மாநாட்டுக்குச் சென்று வந்த சூரிய தீபன் நமக்கு ஈழக் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறார். இது ஒரு பயண நூல் அல்ல. தமிழீழத்தின் ஐம்பதாண்டுக் கால வரலாற்றைப் பதிவு செய்யும் வரலாற்று நூல்கூட அல்ல. தமிழீழ மக்களின் தணியாத விடுதலை வேட்கையையும் வீர உணர்வுகளையும் வடித்துத் தரும் வீர காவியம் என்று குறிப்பிடுவதே சரியாக இருக்கும். வியத்நாமிலும் கியூபாவிலும், பாலஸ்தீனத்திலும் நடைபெற்ற கொடுமைகளை எதிர்த்துக்குரல் கொடுத்தவர்கள் கூப்பிடு தூரத்தில் நடைபெறும் கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருக்கும் அவலத்தை நூலின் முன்னுரையில் சுட்டிக்காட்டும் சூரிய தீபன் உலகம் ஆதிக்கக்காரர்களை மாவீ…
-
- 0 replies
- 4.3k views
-
-
பொதுவாகவே, பெரியாரிஸ்ருக்கள் எனத் தம்மை அடையாளப் படுத்திக் கொள்வோரிடம் நல்ல பழக்கவழக்கங்கள் மீதான ஈடுபாடு நிறையவே உள்ளது. இப்பழக்கவழக்கங்களைத் தத்தமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற இதயசுத்தியான ஆசையும் இவர்களிடத்தில் உள்ளது. பொதுப்பட இந்தச் சாராரிடம் என்னைக் கவர்ந்த விடயங்கள் என சிலவற்றைக் கூறுவதானால், ஒரு விவாத்தில் இறங்குன் விவாதப்பொருள் தொடர்பில் சற்றேனும் தம்மைத் தயார் படுத்திக் கொள்ளல், தரவுகளைக் கடினமாக முயன்று திரட்டிக் கொள்ளல், தங்களது கொள்கையில் ஈடுபாட்டுடனும் உறுதியுடனும் குறைந்தபட்சம் பொது இடங்களிலேனும் நடந்து கொள்ளல், தமது பார்வையில் மக்களிற்குத் தீங்கு என்று தாம் நினைப்பனவற்றை, பொது நலத்திற்கு மேலால்--இன்னமும் சொல்வதானால் சில அர்ப்பணிப்புக்ளையும் செய்து…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழ் எண்கள் என்று ஒன்று இருப்பதே சிலருக்கு தெரிவதில்லை ஏன் எனக்குக் கூட, சில காலம் முன்னர்தான் ஒரு பத்திரிகையில் பார்த்தேன், இலங்கையில் வெள்ளைக்காரர் இருந்த கால்த்தில் பிறந்த ஆண்டை குறிக்க இதைத்தான் பாவித்தார்கள், இன்று கூட சிலர் ஜாதகங்களில் இதைத்தான் பயன்படுத்துகிண்றனர் 99.99% பயண்பாட்டில் இந்த இலக்கம் இல்லை என்றே சொல்லலாம் தமிழ் எண்கள்..!!
-
- 3 replies
- 1.9k views
-
-
இது இந்தோநேசியாவில் உள்ள பாலித்தீவில் உள்ள ஒரு இந்து ஆலயம். அவர்களின் கட்டடக்கலைக்கு ஏற்றவிதத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தோனேசியாவைப் பொறுத்தவரைக்கும், அதிகளவு சுற்றுலாப் பிரயாணிகள் வந்து செல்கின்ற இடம் பாலித்தீவாகும். இப்போது அது இசுலாமிய நாடு என்பதால் அங்கே, வெளிநாட்டவரைக் குறி வைத்து குண்டுவெடிப்புக்கள் நடக்கின்றன. கம்போடியாவில் உள்ள ஒரு இந்துச் சிற்பம். இன்று யுத்ததால் நாடு கலவரப்பட்டுப் போய் அழிந்து போய் விட்டது . கம்போடியாக் காடுகளில் பல இந்து ஆலயங்கள் சிதைவுற்றுக் கிடக்கின்றன. சீனாவில் உள்ள அனுமன் சிற்பம் ஒன்று இது. பாலியில் உள்ள ஆலயமொன்று. நுணுக்கமான சிற்பக்கலைகளைக் கொண்டுள்ளது. அதே ஆலயத்தில் உள்ள குளம். நீர…
-
- 4 replies
- 3.4k views
-
-
தங்கம் வாங்குவது ஒரு பாவச்செயல்’ – பசமைத் தாயகம் பிரச்சாரம் சென்னை, ஏப்ரல் 20: ‘தங்கம் வாங்குவது ஒரு பாவச்செயல்’ எனும் விழிப்புணர்வு பிரச்சாரத்தினை புசுமைத் தாயகம் அமைப்பினர் இன்று (20-04-2007) சென்னை, தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் மேற்கொண்டார். இப்பிரச்சாரத்திற்கு பசுமைத் தாயகம் துணைச் செயலாளர் ச.க.சங்கர் தலைமை வகித்தார். சசிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் போது, நுகர்வோர்கள் தங்கம் வாங்கும் முன்பு அது சுற்றுச் சூழலை பாதிக்காமல், காடுகளை அழிக்காமல், மனித உரிமைகளை நசுக்காமல் உருவானதா என கடைக்காரர்களிடம் கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள நகைக்கடைக்காரர்கள் தாங்கள் விற்கும் தங்கம் இத்தகைய தீமைகள் இல்லாமல் உருவ…
-
- 0 replies
- 746 views
-
-
ஆசியக் கண்டத்திலுள்ள இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலோசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தான் தற்பொழுது உலகில் வேகமாக வளர்ச்சிப் பெற்று வரும் பொருளாதார நாடுகள். வரும் ஆண்டுகளில் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள். இந்தியா, சீனா போன்ற நாடுகள் இன்னும் 20 முதல் 30 ஆண்டுகளில் பொருளாதார வல்லரசாக விஸ்ரூபமெடுக்கக்கூடும். சரி..அது கிடக்கட்டும். ஆனால பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பொருளாதாரம், வர்த்தகம் எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் அலசிப் பார்க்கும் பொழுது சுவரசியமான பல தகவல்கள் கிடைக்கின்றன. அக் கால சோழ மன்னர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திரச் சோழன் போன்றோர் தன் ஆளுமையையும், அதிகாரத்தையும் நிலைநாட்ட மட்டுமில்…
-
- 1 reply
- 4.6k views
-
-
யாழ்பாணத்துக் கட்டடக்கலை தொடர்பாகத் தேடியபோது கிடைத்த தளம் ஒன்று. http://www.geocities.com/rmayooranathan/village_houses.html தலைப்பிற்குப் பொருத்தமில்லாவிடினும், ஒரு விடயம் அக்கால வீடமைப்பு சூழலில் உள்ள வெம்மையைத் தாங்கிப் பாதுகாக்கின்ற நிலையில் தான் அமைந்திருந்தன. ஓலை வீட்டில் உள்ள குளிர்மை, நவீனத்துவமான எந்த வீட்டிலும் கிடையாது. வெளிநாட்டவரின் வீடு கட்டும் முறையை உள்வாங்கி, அதனால் வெக்கையில் புழுங்கியபோது, எமக்குக் குளிரூட்டிகள் தேவைப்பட்டன. அதையும் வாங்கிச் செருகினால், பணச்செலவு, மேல் செலவு! பார்க்கப் போனால், எம் முன்னோர்களை விட நாங்கள் முழு முட்டாள்கள். ஆனால், முன்னோர்களை மூடநம்பிக்கையாளர் என்று திட்டி, எம்மளை நாமே மார்தட்டிப் பெருமிதமடைவோம். …
-
- 0 replies
- 861 views
-
-
சித்திரைப் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டல்ல தை முதல் நாளையே தமிழரின் புத்தாண்டாகக் கொண்டாடுவோம் நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமியர்கள் மொகமது நபி மெக்காவில் இருந்து மெடீனாவிற்கு ஓடிய நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள். கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த டிசெம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கம…
-
- 32 replies
- 9.8k views
-
-
1921-ஆம் ஆண்டு தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழகப் புலவர்கள் கூடிப் பேசினர். தமிழர்களின் ஆண்டுக் கணக்கு எது என ஆய்ந்தனர். பிரபவ முதல் அட்சயவரை நம்மீது திணிக்கப்பட்ட தமிழ் ஆண்டுக்கணக்கை - அறுபது ஆண்டுகள் மட்டுமே உள்ள ஒரு கணக்கை தமிழ்ப் புலவர்கள் ஏற்க மறுத்துப் புறந்தள்ளினர்........................ ஒருமனதாக முடிவு செய்தனர் - திருவள்ளுவர் ஆண்டுக்கணக்கை வைத்துக் கொள்ள முடிவு செய்து அறிவித்தனர். ஆண்டுத் தொடர் எண் எப்படிக் குறிப்பது எனவும் விவாதித்து முடிவு செய்தனர். அதன்படி உலகம் முழுவதும் நடப்பிலுள்ள பொது ஆண்டு முறை எண்ணோடு 31 ஆண்டுகளைக் கூட்டிக் கணக்கிடுவது என முடிவு செய்து அறிவித்தனர். அதன்படி பொது ஆண்டு 2007-க்குத் திருவள்ளுவர் ஆண்டு 2038 ஆகிறது. அம்மாதிரியே த…
-
- 2 replies
- 1.5k views
-
-
கனடிய பிரதமர் தமிழர் புத்தாண்டு என குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்ததையிட்டு சிறிலங்கா அரசாங்கம் குழப்பம் அடைந்திருக்கிறதாம். - தமிழ்நெற்
-
- 0 replies
- 824 views
-
-
இந்துக் காலக் கணிப்பு முறை இந்துக் காலக் கணிப்பு முறை சூரிய மானம், சந்திரமானம் என்னும் இரு முறைகளையும் தழுவி அமைந்துள்ளது. சூரிய மானம் என்பது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தைக் கணிக்கும் முறையாகும். சந்திரமானம் சந்திரனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. பண்டைக்கால இந்திய வானியல் அறிவைப் பயன்படுத்தி உருவான இந்துக் காலக் கணிப்பு முறை இந்தியாவில் மட்டுமன்றிப் பல அயல் நாடுகளிலும் புழக்கத்திலிருக்கும் மரபுவழிக் காலக் கணிப்பு முறைகளுக்கு மூலமாக உள்ளது. இந்துக் காலக் கணிப்பு முறை என்ற ஒரே தொடரால் குறிக்கப்பட்டாலும் இது உண்மையில் ஒரே அடிப்படையையும் அவை புழக்கத்திலுள்ள பகுதிகளின் பண்பாடுகளுக்கு ஏற்பத் தனித்துவமான கூறுகளையும் கொண்ட பல …
-
- 5 replies
- 10.6k views
-
-
யாழ் களத்தின் உறவுகள் பலபேரிற்கு மிகவும் பிடித்த ஒரு பொழுது போக்கு கடவுள் நம்பிக்கை பற்றி விவாதம் தொடக்க முயல்வது ஆகும். இந்த விவாதப் பொருள் பரந்து பட்டது தான். புதிது புதிதாகப் பல முனைகளில் எமது மனம் இந்த விடயம் பற்றி (சாதகமாகவோ பாதகமாகவோ) சிந்திப்பது உண்மைதான். எனினும் யாழ் களத்தில் இந்த விடயத்தில் ஏனோ ஒரே மாவு தான் திருப்பத்திருப்ப அரைக்கப்படுகின்றது. இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. உதாரணத்திற்கு, புராணக் கதைகளினை ஆதாரமாகக் கொண்டு இந்து சமயத்தைத் தாக்குவது நாம் இக்களத்தில் அடிக்கடி காணக்கூடியதாக உள்ள ஒன்று. இது தொடர்பில் எனது கருத்தினைப் பதிவு செய்வதே இப்பதிவினது நோக்கம். ஒருவர் ஒரு ஓவியத்தை வரைந்தாலோ, கவிதையை எழுதினாலோ, சொற்பொழிவு ஆற்றினாலோ, பார்ப்பவர், …
-
- 32 replies
- 10k views
-