Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நடப்ப நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதத்துக்கும் கீழாக வீழ்ச்சிஅடையும்: பிட்ச் ரேட்டிங்ஸ் கணிப்பு கரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதாரச் சரிவு, இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் ஆகியவற்றால் நடப்பு நிதியாண்டில் (2020-21) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.8 சதவீதமாக அதாவது ஒரு சதவீதத்துக்கும் கீழாக வீழ்ச்சி அடையும் என பிட்ச் ரேட்டிங்ஸ் கணித்துள்ளது. இதற்கு முன் பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த நிதியாண்டில் 4.9 சதவீதம் வளர்ச்சி அடையும் எனக் கணித்திருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 0.8 சதவீதமாக வீழ்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளது. ஆனால், வரும் 2021-22ம் நிதியாண்டில்…

  2. ஊரடங்கு காலத்திலும் தங்கத்தின் விலை உயர்வது ஏன்?- பொருளாதார பேராசிரியர் விளக்கம் கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரம் முடங்கியுள்ள அதேநேரத்தில், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த மார்ச் 23-ம் தேதி ரூ.3,087-க்கு விற்ற ஒரு கிராம் தங்கம்(22 காரட்) ஏப்.21-ம் தேதி ரூ.4,044-க்கு விற்கப்பட்டது. மார்ச் 23-ம் தேதி ரூ.3,244-க்கு விற்கப்பட்ட 24 காரட் தங்கம், ஏப்.21-ம் தேதி ரூ.4,413-க்கு விற்கப் பட்டது. ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், சுப நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டா லும் ஆன்-லைன் வர்த்தகம் தொடர்வதால் தங்கத்தின் விலை உயர்வும் தொடர்கிறது. அதேநேரம், கடந்த ஒரு …

  3. உலக முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் நெட்ஃபிலிக்ஸின் சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் 16 மில்லியன் பேர் தங்கள் கணக்கை தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இருப்பினும் உலகம் முழுவதும் நடைபெறவிருந்த தங்களின் அனைத்து தயாரிப்புகளையும் நிறுத்தி வைப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் மேலும் 7.5 மில்லியன் கணக்குகள் தொடங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் வெளியிடவிருந்த நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் எந்த மாற்றமும் இருக்காது என்றும் ஆனால் சில நிகழ்ச்சிகள் தாமதமாவதால் வருங்காலத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அது …

    • 0 replies
    • 326 views
  4. இதனை எழுதிக்கொண்டிருக்கும் வேளை, மருத்துமனைகளில் 11 060 பேரும், 6860 பேர் மூதாளர் இல்லங்களில 6860 பேருமாக 17 920 பேர் கொரோனா வைரசுக்கு இலக்காகி பிரான்சில் உயிரிந்துள்ளனர். உயிரிழப்புக்களின் அதிஉச்சநிலை என்பது செங்குத்தாக குறையாமல், தட்டையாக நீடித்து செல்வதோடு, கீழ்நோக்கி எப்போது செல்லும் என்ற எதிர்பார்ப்போடு பிரென்சு தேசம் காத்திருக்கின்றது. பொதுமுடக்கம் எதிர்வரும் 11ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மே 11க்கு பின்னராக சுவாசக்கவசம் அனைவரும் அணிதல் என்பது கட்டாயமாக்கப்படுவதோடு, கொரோனாவில் இருந்து விடுதல் ஆகும் வரைக்கும் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டிக்கோவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வாழ்க்கை முன்னர் போல் அல்லாது புதியதொரு வாழ்க்கை முறைக்குள் செல்ல அன…

    • 1 reply
    • 756 views
  5. உலக சந்தையில் பூட்டினும் சவூதியின் பின் சல்மானும் அமெரிக்காவின் மசகு எண்ணெய் ஏகாதிபத்தியத்திற்கு நெத்தியடி. இன்றுடன் முடிந்த அடுத்த மாதத்திற்கான கேள்வி விலை பூச்சியத்திற்கு கீழே உலகத்தில் மசகு எண்ணெயை சேமித்து வைக்க இடமில்லை. அதனால், உங்களுக்கு சேமிக்க இடம் இருந்தால் எண்ணெய் இலவசம் https://www.cnbc.com/video/2020/04/20/watch-goldmans-jeffrey-currie-explain-whats-next-for-oil-after-a-futures-contract-went-negative.html

    • 5 replies
    • 1.2k views
  6. தேசிய பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ள காலத்தில் வடமாகாணத்தின் பொருளாதாரம் எவ்வாறான நிலையில் இருக்கிறது? நிச்சயமாக வடமாகாணத்தின் நிதித்துறை, சேவைத்துறை மற்றும் கைத்தொழில்துறை போன்றவற்றில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டு மாகாண மொத்த உற்பத்தியிலும் வீழ்ச்சி வரும். இங்கு மக்களின் வருமானமும் சரி வாழ்வாதாரமும் சரி குறிப்பாக நாள்கூலி வேலை செய்வோரது நிலை பெரும் பாதிப்பிற்குட்படும். வடமாகாணத்தின் சமூகப் பொருளாதாரத்தை எடுத்துப்பார்க்கும் போது தற்போது வந்திருக்கும் நெருக்கடிக்கு மேலாக நீண்டகால யுத்தம் அதன்பின் மீள்கட்டமைப்பின் தோல்விகள் மக்களை நலிவடைய செய்துள்ளன. அந்தவகையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி அவர்களை இரட்டிப்பான வகையில் பாதிக்கிறது. கிராமப்புற பொ…

  7. இந்திய நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி.. எஃப்டிஐ-யில் கட்டுப்பாடுகளை விதித்தது இந்தியா. ரெல்லி: இந்தியாவில் உள்ள பெரு நிறுவனங்களை விலைக்கு வாங்கும் சீனாவின் முயற்சியை முறியடிக்கும் விதமாக அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் முழுவதும் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நிலையில் பங்கு சந்தையில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு மதிப்பும் வேகமாக சரிந்து வருகிறது.இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சீனா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் முயற்சிக்கிறது. அதாவது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டிற்…

  8. பூஜ்யம்தான்.. 60 வருடங்களில் இல்லாத அளவில் ஆசிய நாடுகள். . சர்வதேச நாணய நிதியம் முக்கிய எச்சரிக்கை.! டெல்லி: 60 வருடங்களில் முதன்முறையாக, ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி மோசமாக பாதிக்கப்பட்ட போகிறது என்று எச்சரித்துள்ளது சர்வதேச நாணய நிதியம் (IMF).கொரோனா வைரஸ் தாக்கம் பல துறைகளையும் புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறது. வேலைவாய்ப்பு இல்லாமல் மக்கள் பெரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் ஒரு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது ஐஎம்எப்.உலக பொருளாதாரத்திற்கு இது ஒரு மிக மோசமான, சவாலான, காலகட்டமாகும். ஆசியா-பசிபிக் பிராந்தியங்கள் இதற்கு விதிவிலக்கு கிடையாது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பகுதிகள் பாதிக்கப்…

    • 2 replies
    • 757 views
  9. அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி 195.78 ஆக திடீர் உயர்ச்சி பெற்றுள்ளது. அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் நாணய பரிமாற்று விகிதத்தின் பிரகாரம், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 188.51 ரூபாவாக பதிவாகியுள்ளன. கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி வரலாறு காணாத வகையில் 200.47 ரூபாயாக வீழ்ந்திருந்தது. இந்நிலையில் எல்.ஓ.எல்.சி (LOLC) கூட்டு நிறுவனம், கம்போடியாவிலுள்ள பிரபல நிதி நிறுவனமான ப்ராஸக் மைக்ரோபினாஸ் (PRASAC Microfinance) நிறுவனத்திற்கு தனது 70 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது. இந்த கொடுக்கல் வாங்கல் ஊடாக கிடைக்கப் பெற்ற 422 மில்லியன் டொலர் நிதி இலங்கைக்குள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்…

    • 1 reply
    • 432 views
  10. வாஷிங்டன்: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 25 ஏழை நாடுகளுக்கு உடனடியாக கடனுதவி வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளதாக ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தாக்குலுக்கு இதுவரை உலகளவில் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், சர்வதேச நிதியமான ஐ.எம்.எப்., தலைவராக கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா . நேற்று அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு கடனுதவி அளிப்பதற்கான நிர்வாக வாரிய கூட்டம் நடந்தது. இதில் ஐ.எம்.எப். அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ள 25 ஏழை நாடுகளுக்கு கடனுதவி வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இக்கடனுதவியானது சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீ…

    • 1 reply
    • 334 views
  11. கொரோனாவால் பாதாளத்திற்கு போன கச்சா எண்ணைய் விலையை மீட்டெடுக்கும் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றுள்ளன. வருவாய் இழப்பை குறைக்கும் வகையில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினசரி சுமார் 97 லட்சம் பேரல்களை குறைக்க ரஷ்யாவும், சவூதி அரேபியாவும் இதர ஓபெக் நாடுகளும் சம்மதித்துள்ளன. வீடியோ கான்பரன்ஸ் வழியாக 3 நாட்கள் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஜி- 20 நாடுகளின் எரிசக்தி அமைச்சர்களும் கலந்து கொண்டனர். எண்ணெய் உற்பத்தியை குறைக்க முன்வந்ததற்காக ரஷ்ய அதிபர் புதினுக்கும், சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். உற்பத்தி மீதான கட்டுப்பாடு வருவதை அடுத்து கச்சா எண்…

    • 0 replies
    • 463 views
  12. கொரோனா அனர்த்தத்தின் மத்தியில் இலங்கையின் முன்னிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி கோவிட் 19 அனர்த்தம் உலக ரீதியில் பாரிய சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை முன்கொண்டு வந்திருக்கிறது. இங்கு குறிப்பாக அபிவிருத்தியடையாத நாடுகளின் மீதான பொருளாதார பிரச்சினைகள் கணிசமானவையாக இருக்கும். அந்தவகையில் இலங்கையையின் தேசிய பொருளாதாரத்தை எடுத்து பார்க்கும் பொழுது இது இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் ஏற்படப்போகும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி என்று கூட கருதலாம். 2001ம் ஆண்டு கட்டுநாயக்க விமானநிலையத்தின் மீது நடைபெற்ற தாக்குதலிற்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி,; 1970ம் ஆண்டுகளில் உலக எண்ணெய் நெருக்கடியுடன் வந்த பாரிய பொருளாதார வீழ்ச்சி மற்றும் 1953ம் ஆண்டு காலப்பக…

  13. கொரோனாவால் 90 ஆண்டுகளில் இல்லாத அளவு பேரடி வாங்கப்போகும் உலக பொருளாதாரம் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா கொரோன வைரஸ் தொற்று காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. 1930களில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார மந்தநிலைக்கு பிறகு, உலக பொருளாதாரம் இப்போதுதான் இவ்வளவு கடுமையான நெருக்கடியை சந்திக்க போகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா கூறியுள்ளார். 2021ஆம் ஆண்டில் கூட, இதிலிருந்து பாதி அளவே மீள முடியும் என்று அவர் கணித்துள்ளார். பல உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளதால், நிறுவனங்கள் மூடப்பட்டு, ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்ட…

  14. கொரோனா வைரஸின் பொருளாதார தாக்கங்கள் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஏப்ரல் 01 கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளாவிய ரீதியில், ஒட்டுமொத்த செயற்பாடுகளுமே முடங்கிப் போயிருக்கின்றன. இந்த நோயின் தாக்கமானது, பாரபட்சமின்றி, இராஜ குடும்பங்கள் முதல், அடிமட்ட சாமானியர்கள் வரை, மிக விரைவாகப் பரவிக்கொண்டிருக்கிறது. ஏனைய உலகநாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நிலையானது மிகச்சிறப்பாகக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இன்றிலிருந்து எதிர்வரும் இரண்டு வாரங்கள், இலங்கைக்கு மிகமிக முக்கியமான வாரங்கள் என, வைத்தியர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது. எனவே, இந்த அறிவிப்புக்குப் பின்னால், இன்னும் சில காலம், இலங்கை இவ்வாறே முடங்கிக…

    • 1 reply
    • 1k views
  15. பட்டதெல்லாம் போதும்ப்பா.. சீனாவின் அடி மடியில் கை வைத்த யப்பான்.. அதிர்ச்சி வைத்தியம் ரோக்கியோ: கொரோனா வைரசின் ஆரம்ப புள்ளியான சீனாவுக்கு, அதன் நட்பு நாடான யப்பான் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.சீனாவிலுள்ள உற்பத்தி ஆலைகளை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை மாற்றி தங்கள் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு யப்பான் ஊக்கத் தொகை அளிக்கப்போகிறது. உற்பத்தி ஆலைகள்தான் சீனாவின் முதுகெலும்பு. அதில் யப்பான் முதல் அடியை ஓங்கி அடிக்க ரெடியாகிவிட்டது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உற்பத்திக்கு ஏற்படும் இடையூறுகளை யோசித்து, தனது முக்கிய வர்த்தக கூட்டாளியான சீனாவுடனான வணிக உறவை மறு பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் யப்பான் இருப்பதாக ப்ளூம்பெர்க் ஊடகம் தெரிவித்துள்ளது. இடத்தை…

    • 13 replies
    • 1.9k views
  16. ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்டவை ஆகும். ஆனால், இந்த இரு நாடுகளும் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் என புதிய தரவுகள் கூறுகின்றன. 2020ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பொருளாதாரம் 6 சதவீதம் சுருங்கிவிட்டதாக பேங்க் ஆஃப் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. 1945ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போதுதான் இவ்வளவு மோசமான சூழலை பிரான்ஸ் சந்திக்கிறது. ஜெர்மனியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே சுமார் 10 சதவீதம் குறையும் என்று அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. https://www.bbc.com/tamil/live/global-52210173

    • 0 replies
    • 293 views
  17. கொழும்பு துறைமுக நகரத்தால் பாதுகாப்பு அணிகலன்கள் விநியோகம் கொவிட்-19 தொற்று பரவலுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வகையில் இயங்கும் புறக்கோட்டை மெனிங் மொத்த விற்பனைச் சந்தையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை கொழும்பு துறைமுக நகரம் (CHEC Port City Colombo) நேற்று முன்தினம் (05) நன்கொடையாக வழங்கியுள்ளது. பொலிஸ் படையினருக்கான மற்றொரு பாரிய அளவிலான பாதுகாப்பு கருவிகளின் வழங்கலைத் தொடர்ந்து, நிறுவனம் அடுத்த வாரம் சுகாதார மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்க…

    • 0 replies
    • 330 views
  18. சுயபொருளாதார நீக்கமும் கையேந்தும் அரசியலும்… பாரிஸிலிருந்து சுதன்ராஜ் கொரோனாவுக்கு முன்னால் எல்லா வல்லரசுகளும் அம்மணமாகி ஓடி ஒளிந்து தமது குடிமக்களுக்கு முன்னால் நிர்வாணமாக நிற்கின்ற காலம் இது. ஏப்ரலின் முதல் இரண்டு வாரங்கள் அமெரி;காவுக்கு வாழ்வா-சாவா என்ற போராட்டம், 1 இலட்சத்தில் இருந்து 2 இலட்ம் பேர் வரை மடியலாம் என எந்த வெட்கமும் இன்றி அமெரிக்க அதிபர் ரம்ப் கூறுகின்றார். இதுபோலவே பிரான்சின் பிரதமரும் ஏப்ரல் முதல் இரண்டு வாரங்கள் பிரான்சுக்கு கடினமான காலம் என்கின்றார். பிரித்தானியாவிலும் இவ்வாறே எதிரொலிக்கின்றது. இவ்வாறு உலக வல்லரசுகளின் தலைவர்கள் பலரும் தமது குடிமக்களை பரபரப்புக்கும் அச்சத்துக்குள்ளும் தள்ளிவிட்டு, தம்மை தாப்பா…

  19. பரண் மேல் ஆடு வளர்ப்பு, கீழே கோழி வளர்ப்பு... போனவருடம் தமிழகம் சென்றிருந்த போது, எனது அலுவகத்தில் முன்னர் ஒன்றாக வேலை செய்து சிறந்த நண்பரான ஒருவரின், பண்ணை வீட்டில் தங்கினேன். அவரது தம்பி youtbube மூலம் அறிமுகமான ஒரு நிறுவனத்தின் அனுசரணையுடன் பரண் அமைத்து, மேலே 250 ஆடு, கீழே 1000 கோழி வளர்க்க, வெளிநாட்டு அண்ணர், அவரது நண்பர்கள் உதவியுடன் முதலீடு செய்து தானே முன் நின்று நடத்த போவதாக சொன்னார். கணக்காளர்களுக்கு இருக்கும் ஒரு கோதாரி மனப்பான்மை... முதலில் 5 அல்லது, 10 ஆடுகளுடன் தொடங்கு.... நல்லா போனா... முதலீடை செய்.... 250 ஆடுகள் மிகப் பெரிய முதலீடு.... அவர்கள் சொல்வது, வருமானம்... லாபம்.... சொல்லாதது, வளர்ப்பில் உள்ள கஷடம், நோய், தீவனம்.... இலகுவா…

  20. கொரோனா வைரஸ்: எதிர்காலம் எப்படி இருக்கும்? வீழும் பொருளாதாரத்தை மீட்க என்ன செய்ய வேண்டும்? சைமன் மெயர் பிபிசிக்காக Getty Images (கொரோனா வைரஸ் உலகை எவ்வாறு மாற்றும் என்பது குறித்து பிபிசி தமிழில் வெளியிடப்பட்டு வரும் இரண்டு பகுதிகள் கொண்ட கட்டுரை தொகுப்பின் இரண்டாவது மற்றும் கடைசிபகுதி இது.) நாம் எதிர்காலத்துக்குச் சென்று பார்ப்பதற்கு உதவும் வகையில் எதிர்காலவியல் ஆய்வுத் துறையில் உள்ள ஒரு பழைய உத்தியை நான் இங்குப் பயன்படுத்தப் போகிறேன். எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று நீங்கள் நினைக்கிற இரண்டு காரணிகளை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அந்தக் காரணிகள் வெவ்வேறு விதமாகக் கூட்டுச் சேர்ந்து ஊடாடினால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். நான் எடு…

  21. ஊரடங்கு குறித்த அச்சமும் கவலையும் எல்லோரையும் தொற்றிக்கொண்டிருக்கின்றன. பல லட்சம் மக்கள் தங்கள் வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கின்றனர். எல்லோராலும் இந்த நாட்களை இயல்பாகக் கடத்த முடிகிறதா? அவசியமான பொருட்களெல்லாம் தங்குதடையின்றிக் கிடைக்கின்றனவா? வேலை இல்லாத இந்தச் சூழலில் அதை வாங்குவதற்குக் குறைந்தபட்சக் கையிருப்பு இருக்கிறதா? இப்படியே தொடருமானால் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்? இப்படி ஓராயிரம் கேள்விகள் இருக்கின்றன. இப்படியான நெருக்கடியான சூழலுக்கு மத்தியில்தான் ஆச்சரிய மனிதராகத் தெரிகிறார் வேணுகுமார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தையைச் சேர்ந்தவர் வேணுகுமார். நாகர்கோவிலில் உள்ள தெ.தி.இந்த…

  22. கொரோனவும் உலக பொருளாதாரச்சரிவும்!v

  23. பல எதிர்பார்ப்புக்களுடன் 2020ம் ஆண்டை அடைந்து ஆனால் ஜனவரி முதல் இன்றுவரை பல சோதனைகளை கடந்து, வல்லரசு, சந்திரனில் குடியேறுதல், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதம் என்று பெருமைகளுடன் வாழ்ந்த மனிதன் இன்று அணு அளவு வைரஸுக்கு பயந்து வீட்டில் பதுங்கிக் கிடக்கின்றான். முதலில் ஊரடங்கு, வீட்டில் இருக்கலாம் என்று சந்தோஷப்பட்டாலும் நாட்கள் கடந்து வாரங்களாக மாறும்போது வருமானங்கள் இன்றி செலவுகள் ஏற்படத்துவங்கும் போதுதான் நாம் பொருளாதார ரீதியாகவும் கொரோனா நோயாளிகளாக மாறியுள்ளோம் என்பதை உணர்ந்தோம். சர்வதேச, உள்நாட்டு மட்டத்தில் கொரோனாவின் பரவலானது பெருக்கல் விருத்தியாக விருத்தியடைவதால் உலகளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு தற்போது உற்பத்தி, விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்…

  24. கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொவிட் 19 எனப்படுத் நோயைக் கட்டுப்படுத்த அமெரிக்கா போராடி வரும் நிலையில் 6.6 மில்லியன் அமெரிக்கர்கள் கடந்த வாரம் தொழில் இழப்புக்கான கோரிக்கைகளை தாக்கல் செய்துள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. முன்னைய வாரத்தில் 3.3 மில்லியன் அமெரிக்கர்கள் தொழில்வாய்ப்பினை இழந்துள்ளதாக பதிவாகியிருந்த்து ஆனால் அந்த தொகையானது கடந்த வாரத்தில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்க அரசாங்கம் முடக்கல் நடவடிக்கையை கடுமையாக அமுல்படுத்தியுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், பொருளாதாரமும் மந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்களை கொண்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தற்போது முன்…

    • 0 replies
    • 301 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.