Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சுமார் 5 லட்சத்து முப்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது, நீண்ட காலமாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் நிலவிய நிலையில் அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரிகளை சீனா விதித்து வந்தது. இந்த நிலையில் வர்த்தகப்போர் முடிவுக்கு வந்து கடந்த மாதம் அது தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. அதன் முதல் கட்டமாக கடந்த செப்டம்பரில் முடிவு செய்யப்பட்ட ஆயிரத்து 700 க்கும் அதிகமான அமெரிக்க இறக்குமதி பொருள்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பை சீனா திரும்பப் பெற்றுள்ளது. வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் இந்த வரிக் குறைப்பு அமல்படுத்தப்படும் எனவும் சீனா தெரிவித்…

    • 0 replies
    • 431 views
  2. பிரித்தானியாவின் பிரச்சினையும் இலங்கையின் நிலையும் அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஓகஸ்ட் 17 கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாகப் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், பிரித்தானியாவுக்கு இது, மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. ‘தவறி விழுந்தவனை, மாடேறி மிதித்தது’ என, ஊர்களில் சொல்வதுபோல, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி, தங்களுடைய பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள நினைத்தவர்களை, கொரோனா வைரஸ் மிகப்பெரும் பிரச்சினையில் சிக்க வைத்திருக்கிறது. இது நேரடியாகவோ, மறைமுகமாகவோ நம் நாட்டுப் பொருளாதாரத்துக்கும், நம்மவர் வாழ்வாதாரத்துக்கும் கூடப் பிரச்சினையாக வருகின்ற வாய்ப்புகளைக் கொண்டிருப்பது இன்னும் அபாயமானது. 2020ஆம் ஆண்டின் ஆரம்பம்…

  3. கூகுள், பேஸ்புக், அமேஸானின் மொத்தப் பெறுமதியைவிட அப்பிள் நிறுவன பெறுமதி அதிகரிப்பு By DIGITAL DESK 3 04 NOV, 2022 | 11:43 AM கூகுள், பேஸ்புக், அமேஸான் நிறுவனங்களின் கூட்டு சந்தைப் பெறுமதியைவிட அப்பிள் நிறுவனத்தின் சந்தைப் பெறுமதி அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை நிறைவடைந்த பங்குச்சந்தை விற்பனைகளின் பின்னர் அப்;பிள் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2.307 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது என யாஹூ நிதியியல் தரவுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட்டின் மொத்த சந்தைப்பெறுமதி 1.126 ட்ரில்லியன் டொலர்களாக இருந்தது. அமோஸானின் சந்தைப் பெறுமதி 939.78 பில்லியன் டொலர்களாகவு…

  4. இலங்கையின் பொருளாதார எதிர்காலம் என்ன? அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஓகஸ்ட் 24 2020ஆம் ஆண்டில், இலங்கையின் அரசியல் கட்டமைப்பில் மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 2019ஆம் ஆண்டின் இறுதியில், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்ட பின்பு, நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன, நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி இருக்கிறது. இந்த வெற்றி, அரசியல் ரீதியாக மிகப்பெரும் மாற்றமாகப் பார்க்கப்பட்டாலும், ஒட்டுமொத்த இலங்கையின் பொருளாதார நிலையில், எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவர இருக்கிறது என்பதும் பலரது எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது. 2020ஆம் ஆண்டுக்கென, ஒரு நிரந்தர வரவு-செலவு திட்டத்தை, இலங்கை கொண்டிராத…

  5. பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகரும் இலங்கை போக்குகள், நிலைவரங்கள் குறித்து கணிக்கும் சர்வதேச அமைப்பு தகவல் உடனடியாக நிதியியல் உறுதியற்ற தன்மையை சீராக்கவும் கோரிக்கை ச.சேகர் பல தசாப்த காலமாக பேணப்பட்டு வந்த பொருளாதார சுதந்திரத்தை கட்டுப்படுத்தி, அதனூடாக இலங்கை ரூபாயின் மதிப்பை சீரழிப்பதாக சர்வதேச போக்குகள், நிலைவரங்கள் குறித்து கணிக்கும் சர்வதேச அமைப்பான பெல்வெதர் அறிக்கை வெளியிட்டுள்ளது. விசேட ஈடுபாடுகள் மற்றும் அரசாங்க அனுகூலங்களுக்காக பொது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு கட்டுப்பாட்டான நிலையாக தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார இறுக்கமான சூழலை அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தொடர்ச்சியாக பதவிக்கு வந்த அரசாங்கங்களி…

  6. அரசாங்கத்தின் IFSL திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளை வழங்கும் Saegis கம்பஸ் அதிகளவு போட்டிகரத்தன்மை வாய்ந்த பணியிடங்களில் சிறப்பாக செயலாற்றக்கூடிய திறன்கள் படைத்த பட்டதாரிகளை உருவாக்குவதில் பங்களிப்பு வழங்கும் வகையில், வட்டியில்லாத மாணவர் கடன் (IFSL) திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்ட பட்டப் படிப்புகளை வழங்கவும், கற்கை பூர்த்தி செய்த பின் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவும் உதவ Saegis கம்பஸ் முன்வந்துள்ளது. கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள உயர் கல்விச் சேவைகளை வழங்கும் நிலையமாக அறியப்படும் Saegis கம்பஸ், பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச தொழில் வழங்குநர்களின் கருத்துக் கணிப்புகளினூடாக இந்த விடயத்தின் முக்கியத்துவம…

    • 0 replies
    • 330 views
  7. தனி ஒருவன் நான்... நிலவை கடந்து தொலைவில் இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது என்பது சாத்தியமா? அசாத்தியமா? என மனிதன் சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் செவ்வாய் கிரகத்திற்கு செல்வதையே தன் வாழ்நாள் கனவாய் கொண்டு வாழ்பவர் இவர். தரைப் போக்குவரத்தாக இருக்கட்டும் விண்வெளிப்பயணமாக இருக்கட்டும் அனைத்துமே இவருக்கு அத்துப்படி தான். சாதிக்க துடிக்கும் அனைவரும் தமக்குள் கனவுகோட்டை கட்டுவதுண்டு. ஆனால் இவரின் கனவோ ஆகாச கோட்டையையும் தாண்டி அண்டவெளியில் உலா வருவது. டெஸ்லா (Tesla),ஸ்பேஸ் எக்ஸ் (Space X), பே பால் (Pay Pal) இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது நீங்கள் கேள்விப்பட்டிருப்பதுண்டு. ஆனால் நினைத்து பார்க்க முடியாத இவற்றையெல்லாம் உருவாக்கி தொழினுட்பத்தின் மற்ற…

    • 2 replies
    • 585 views
  8. இந்திய வங்கிகள்: கடன் 'ரைட் ஆஃப்' என்பது பாமரர்களின் பணத்தை கொள்ளையடிப்பதா? கட்டுரை தகவல் எழுதியவர்,தினேஷ் உப்ரேதி பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES *** நூறு/ஆயிரம் கோடி ரூபாய் கடன் ரைட் ஆஃப் செய்யப்பட்டது. இது போன்ற செய்திகள், செய்தித்தாள்கள், டிவி, ஆன்லைன் போர்டல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அடிக்கடி தலைப்புச் செய்திகளாக வருகின்றன. *** என்பதை பார்த்து நீங்கள் இங்கே ஏதோ ஒரு வார்த்தை தவறிவிட்டதாக நினைக்கிறீர்களா? அது அப்படி இல்லை. இந்த மூன்று நட்சத்திரங்களின் இடத்தில் ஏதேனும் ஒரு வங்…

  9. இந்தோனீசியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரு விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100 மில்லியன் டாலர் இழப்பீடு அறிவித்துள்ளது போயிங் விமான நிறுவனம். அந்நிறுவனம் தயாரித்த 737 மேக்ஸ் ரக விமானங்கள் அடுத்தடுத்து இரு விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 346. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் படிப்பு மற்றும் மற்ற செலவுகளுக்கு அளிக்கப்படும் என்று போயிங் தெரிவித்துள்ளது. ஆனால், இதனை ஏற்க பாதிக்கப்பட்டவர்கள் மறுத்துள்ளனர். இந்த இரு விமான விபத்துகளை தொடர்ந்து 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்குவது உலகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-48863709

    • 0 replies
    • 239 views
  10. கொரோனாவால் பாதாளத்திற்கு போன கச்சா எண்ணைய் விலையை மீட்டெடுக்கும் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றுள்ளன. வருவாய் இழப்பை குறைக்கும் வகையில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினசரி சுமார் 97 லட்சம் பேரல்களை குறைக்க ரஷ்யாவும், சவூதி அரேபியாவும் இதர ஓபெக் நாடுகளும் சம்மதித்துள்ளன. வீடியோ கான்பரன்ஸ் வழியாக 3 நாட்கள் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஜி- 20 நாடுகளின் எரிசக்தி அமைச்சர்களும் கலந்து கொண்டனர். எண்ணெய் உற்பத்தியை குறைக்க முன்வந்ததற்காக ரஷ்ய அதிபர் புதினுக்கும், சவூதி இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். உற்பத்தி மீதான கட்டுப்பாடு வருவதை அடுத்து கச்சா எண்…

    • 0 replies
    • 463 views
  11. ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 10% சரிவு AFP சீனாவில் ஆப்பிள் அலைபேசிகளின் விற்பனை குறைந்ததே நிறுவனத்தின் வருவாய் வீழ்ச்சிக்கு காரணமென்று அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி டிம் குக் தெரிவித்ததையடுத்து வியாழக்கிழமை அன்று ஆப்பிளின் பங்குகள் சுமார் 10 சவீத வீழ்ச்சியை கண்டுள்ளன. கடந்த வருடத்தின் கடைசி மூன்று மாதங்களில் ஆப்பிளின் வருவாய் 86 பில்லியன் டாலர்களாக இருக்குமென்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதைவிட ஐந்து பில்லியன் டாலர்கள் குறைவான வருவாய் கிடைத்துள்ளதாக கடந்த புதன்கிழமையன்று அந்நிறுவனத்தின் தரப்பில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக, சீன சந்தைகளை அதிகளவு சார்ந்து செயல்படும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பர்பெர்ரி, எல்விஎம்எச், ஹெர்மஸ் ஆகிய நிறுவனங்க…

  12. சீனாவுடனான பொருளாதார வழித்தட திட்டத்தால், பாகிஸ்தானின் பொருளாதாரம் நீண்டகாலத்துக்கு பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பலுசிஸ்தானின் குவாடர் துறைமுகம் வரை சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு அமெரிக்கா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டின் தெற்காசிய விவகாரத்துறை துணை செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் (Alice Wells) பொருளாதார வழித்தடத்தால் சீனாவுக்குதான் அதிக லாபம் என்றார். இந்தத் திட்டத்தால் பாகிஸ்தான் பொருளாதாரம் நீண்ட கால பாதிப்பை சந்திக்கும் என்று கூறிய அவர், ஆனால் அமெரிக்க தனியார் நிறுவனங்களின் முதலீடு பாகிஸ்தானுக்கு நன்மையே த…

    • 0 replies
    • 271 views
  13. 'இத்தாலி எடுத்த முடிவு' கணிசமான அளவுக்குச் செலவைக் குறைக்க இரு அவைகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்திருக்கிறது இத்தாலி. இதற்குச் சாதகமாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். படத்தின் காப்புரிமை EPA இத்தாலி கீழ் அவையில் இப்போது 600 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை 400ஆகக் குறைகிறது. அதுபோல செனட்டர்கள் எண்ணிக்கை 315லிருந்து 200ஆகக் குறையும். இதனை தம் தேர்தல் வாக்குறுதியாகக் கூறி இருந்தது ஃபைவ் ஸ்டார் இயக்கம். இது இப்போது ஆளுங்கட்சி கூட்டணியில் முக்கிய அங்கன் வகிக்கிறது. இதன் மூலமாக அடுத்த பத்து ஆண்டுகளில் ஒரு பில்லியன் ஈரோ பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்கிறது அக்கட்சி. ஆனால்,…

    • 0 replies
    • 685 views
  14. இலங்கையில் இன்றுவரை பெரும்பான்மை மக்கள் மின்சார வசதி இன்றி வாழுகிறார்கள். மின்சாரம் சகல மக்களுக்கும் கிடைத்தால் அவர்களின் வாழ்க்கை தரம் உயரும். இந்த நாட்டில் பெரும்பாலான மின்சாரம் நீர்வலுவை கொண்டே பிறப்பிக்கின்றது. ஆனால், நீரோ அருகிவருகின்றது. எமது மக்களுக்கு மாற்று மின்சார வழிகளை தருவது அவரக்ளின் பொருளாதார வலுவை உயர்த்தும் ================================================ இலங்கை மின்சார சபை அதிகாரிகள், மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து இலங்கை மின்சார சபைக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இதுவரையில் வருடாந்தம் 80 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்தை பயன்படுத்துபர்களின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. …

    • 6 replies
    • 753 views
  15. தீபாவளிக்காக புத்தாடை, செல்போன் உள்ளிட்ட பல வகை நுகர்வோர் பொருட்களை இந்திய மக்கள் வாங்கி குவித்ததில், வெறும் ஆறு நாட்களில்(செப்29-அக்4) ஆன்லைன் சந்தையில் ரூ.19,000 கோடிக்கு பொருள்கள் விற்பனையாகி உள்ளன என ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் கூறுகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட காரணத்தால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துவிட்டது என கூறப்பட்ட நிலையில் ரூ.19,000 கோடிக்கு பொருள்களை வாங்க பணம் எங்கிருந்து வந்தது என சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன. இந்தியா பொருளாதார சரிவில் இருந்து மீண்டுவிட்டதா? பண்டிகை காலத்தில் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துவிட்டதா என கேள்விகள் எழுகின்றன. சென்னையை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஆனந்த்…

  16. சீனாவைப் புறக்கணிக்கும் நாடுகள்: இந்தியாவின் பக்கம் திரும்பும் வெளிநாட்டு முதலீடுகள்! சீனாவில் கொரானா வைரஸ் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை சரியாகப் பயன்படுத்தினால் கோடிக்கணக்கான வெளிநாட்டு முதலீட்டை இந்தியாவால் கவர முடியும் என வர்த்தகப் பொருளாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரானாத் தொற்றை அடுத்து சீனாவில் தங்களது முதலீடு மற்றும் உற்பத்தியை நிறுத்தத் தொடங்கியுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பார்வையை வேறு நாடுகளை நோக்கித் திருப்பியுள்ளன. பிரம்மாண்டமான நிலப்பரப்பு மற்றும் கோடிக்கணக்கான மக்கள் இருப்பதால் இந்தியா ஏற்கனவே ஏற்றுமதிக்கு உகந்த நாடாக பல நிறுவனங்களால் கருதப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றால், உற்பத்திக்கான நாடா…

  17. இந்தியாவில் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய கூகுள் நிறுவனம் முடிவு இந்தியா டிஜிட்டல்மயமாக்க நிதியத்தை அறிவித்த கூகுள் நிறுவனம் இதன் மூலம் இந்தியாவில் அடுத்த 5-7 ஆண்டுகளில் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது தோராயமாக ரூ.75,000 கோடி முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. கூகுள் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே நடைபெற்ற பேச்சுகளுக்குப் பிறகு இந்த முடிவை கூகுள் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூகுள் சி.இ.ஓ. சுந்தர்பிச்சை கூறியதாவது, “இந்த முதலீட்டை ஈக்விட்டி முதலீடுகள், கூட்டுறவுகள், உள்கட்டமைப்பு, சூழலிய அமைப்பு முதலீடுகள் என்ற வழியில் கூகுள் செய்யவுள்ளது. இந்தியாவின் எதிர்காலம் மற்றும் அதன் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீதான…

  18. மீண்டும்... கச்சா எண்ணை, விலை உயர்வு! உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி அதிகரித்துள்ளது. அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 91.79 டொலர்களாக பதிவாகியுள்ளது. முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் சுமார் 30 டொலர்கள் அதிகரிப்பைக் காட்டுகிறது. https://athavannews.com/2022/1298463

  19. பீஜிங்:வலை­த­ளங்­களில் பல்­வேறு பொருட்­களை விற்­பனை செய்­யும், ‘அலி­பாபா டாட் காம்’ நிறுவ­னத்தை நிறு­விய, ஜாக் மா, நாளை, தன், 54வது பிறந்த நாளன்று, தலைமை செயல் அதி­காரி பத­வி­யில் இருந்து ஓய்வு பெறு­கி­றார். ஆங்­கில பேரா­சி­ரி­யர் இவர், சீனா­வில், மிக­வும் ஏழ்­மை­யான குடும்­பத்­தில் பிறந்து, 20 ஆண்டு­களில், ‘நம்­பர் – 1’ பணக்­கா­ர­ராக உயர்ந்­த­வர். இவ­ரது தந்தை, மாதம், 40 டாலர் ஓய்­வூ­தி­யத்­தில், குடும்­பத்தை நடத்­தி­ய­வர்.ஹங்சோ ஆசி­ரி­யர் கல்லுா­ரி­யில் பட்­டக் கல்வி முடித்து, ஆங்­கில பேரா­சிரி­ய­ராக பணி­புரிந்து வந்த ஜாக் மாவுக்கு, இணை­யத்­தின் அறி­மு­கம், புதிய வாசலை திறந்­தது. ஆசி­ரி­யர் பணியைஉதறி, பின் தன் வீட்­டி­லேயே, ஒரு கம்ப்­யூட்டர் உத­வி­யு­டன்,…

  20. இந்தியா - இணையம் மூலமான வர்த்தகத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் December 28, 2018 இணையம் மூலமான வர்த்தகத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை இந்திய மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சு விதித்துள்ளது. பிளிப்கார்ட் , அமேசன் போன்ற இணைய வர்த்தக நிறுவனங்களுக்கே இவ்வாறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது இணையம் மூலம் விற்கப்படும் சில பொருட்களுக்கு அதிகமான தள்ளுபடி வழங்கப்படுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக உள்ளூர் வர்த்தகர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்தே இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இணைய வர்த்தக நிறுவனங்கள் பங்குதாரராக உள்ள கம்பெனிகளின் தயாரிப்புகளை விற்பதற்கும் சில உற்பத்தி பொருட்களை இயைத்தில் மட்டுமே விற்பனை செய்வ…

  21. பாரீசில் நடைபெறும் சர்வதேச நிதி கண்காணிப்பு கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் விதிக்கப்பட்டுள்ள சாம்பல் நிற பட்டியலில் இருந்து அந்நாடு அடர் சாம்பல் நிறப் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது. அடர் நீலம் என்பது பாகிஸ்தானுக்கு நிலைமையில் முன்னேற்றம் காண்பதற்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இதனால் பாகிஸ்தானுக்கு உலக வங்கி, ஐ.எம்.எப். ஐரோப்பிய யூனியன் போன்றவை நிதியளிக்க மறுக்கலாம். இதையடுத்து கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்பட்டால் அதற்கு சர்வதேச அளவில் நிதி பெற முடியாத நெருக்கடி உருவாகும். தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தீவிரவாதிகளை கைது செய்யவும் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய நிதி ஆதாரங்களைத் தடு…

    • 0 replies
    • 419 views
  22. Huawei Sri Lanka மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகம் (UOM) ஆகியன இணைந்து இலங்கையில் உள்ள படித்த மற்றும் திறமையான இளைஞர்களைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ஐ.சி.டி) களத்தில் தங்கள் திறமைகளை மேலும் மேம்படுத்துவதற்கும், எப்போதும் வளர்ந்து வரும் ஐ.சி.டி துறையில் போட்டித்தன்மையுடன் இருப்பதனை இன்னும் இயலுமைப்படுத்தும் பொருட்டும், புரிந்துணர்வு ஒப்பந்தந்தமொன்றில் கைச்சாத்திட்டன. இது இலங்கை தனது “ஸ்மார்ட் நேஷன்” தொலைநோக்கு பார்வையை அடையும் பொருட்டு, அதனை ஆதரிப்பதற்கான Huawei நிறுவனத்தின் நீண்டகால டிஜிட்டல் உள்வாங்கல் முயற்சியான TECH4ALLஇன் ஓர் அங்கமாகும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் கைச்சாத்திடும் நிகழ்வில், தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மற்றும் உயர்கல்வி, தொழில்நு…

    • 0 replies
    • 542 views
  23. ஊரடங்கு காலத்திலும் தங்கத்தின் விலை உயர்வது ஏன்?- பொருளாதார பேராசிரியர் விளக்கம் கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரம் முடங்கியுள்ள அதேநேரத்தில், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த மார்ச் 23-ம் தேதி ரூ.3,087-க்கு விற்ற ஒரு கிராம் தங்கம்(22 காரட்) ஏப்.21-ம் தேதி ரூ.4,044-க்கு விற்கப்பட்டது. மார்ச் 23-ம் தேதி ரூ.3,244-க்கு விற்கப்பட்ட 24 காரட் தங்கம், ஏப்.21-ம் தேதி ரூ.4,413-க்கு விற்கப் பட்டது. ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், சுப நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டா லும் ஆன்-லைன் வர்த்தகம் தொடர்வதால் தங்கத்தின் விலை உயர்வும் தொடர்கிறது. அதேநேரம், கடந்த ஒரு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.