வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
622 topics in this forum
-
சீனாவைப் புறக்கணிக்கும் நாடுகள்: இந்தியாவின் பக்கம் திரும்பும் வெளிநாட்டு முதலீடுகள்! சீனாவில் கொரானா வைரஸ் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை சரியாகப் பயன்படுத்தினால் கோடிக்கணக்கான வெளிநாட்டு முதலீட்டை இந்தியாவால் கவர முடியும் என வர்த்தகப் பொருளாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரானாத் தொற்றை அடுத்து சீனாவில் தங்களது முதலீடு மற்றும் உற்பத்தியை நிறுத்தத் தொடங்கியுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பார்வையை வேறு நாடுகளை நோக்கித் திருப்பியுள்ளன. பிரம்மாண்டமான நிலப்பரப்பு மற்றும் கோடிக்கணக்கான மக்கள் இருப்பதால் இந்தியா ஏற்கனவே ஏற்றுமதிக்கு உகந்த நாடாக பல நிறுவனங்களால் கருதப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றால், உற்பத்திக்கான நாடா…
-
- 0 replies
- 222 views
-
-
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு குறித்தான பேச்சுவார்த்தையொன்று, அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கும் சீனாவின் துணை வணிக அமைச்சர் வாங் ஷோ வென்னுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, கடந்த வாரம் சீனாவுக்கு உத்தியோகப்பூர் விஜயத்தை மேற்கொண்ட போதே, இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு குறித்து பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது, இருதரப்பு வணிக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டள்ளது. அத்துடன், சீனாவுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை ஊக்குவிப்பது, முக்க…
-
- 0 replies
- 380 views
-
-
சுயசார்பு பொருளாதாரம் சாத்தியமா? முகம்மது ரியாஸ் riyas.ma@hindutamil.co.in அன்றாடப் பொது நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. பள்ளிகள் செயல்படும் முறை மாற்றப்படுகிறது; வீட்டிலிருந்து பணி புரிதல் புதிய நடைமுறையாக மாறியிருக்கிறது. அலுவலகங்களில் ஷிப்ட் முறைகளில் ஊழியர்கள் பணிக்கு வரச் செய்யப்படுகின்றனர்; பேருந்துகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பயணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சிகளை அனைத்து நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இவை அனைத்தும் அந்நாடுகளுக்குள்ளான சமூகப்பழக்கவழக்கம் தொடர்பான மாற்றங்கள். இது ஒருபுறம் இருக்க, உலக நாடுகள் தங்களின் பொருளாதார கட்டமைப்பிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத…
-
- 0 replies
- 731 views
-
-
சுயபொருளாதார நீக்கமும் கையேந்தும் அரசியலும்… பாரிஸிலிருந்து சுதன்ராஜ் கொரோனாவுக்கு முன்னால் எல்லா வல்லரசுகளும் அம்மணமாகி ஓடி ஒளிந்து தமது குடிமக்களுக்கு முன்னால் நிர்வாணமாக நிற்கின்ற காலம் இது. ஏப்ரலின் முதல் இரண்டு வாரங்கள் அமெரி;காவுக்கு வாழ்வா-சாவா என்ற போராட்டம், 1 இலட்சத்தில் இருந்து 2 இலட்ம் பேர் வரை மடியலாம் என எந்த வெட்கமும் இன்றி அமெரிக்க அதிபர் ரம்ப் கூறுகின்றார். இதுபோலவே பிரான்சின் பிரதமரும் ஏப்ரல் முதல் இரண்டு வாரங்கள் பிரான்சுக்கு கடினமான காலம் என்கின்றார். பிரித்தானியாவிலும் இவ்வாறே எதிரொலிக்கின்றது. இவ்வாறு உலக வல்லரசுகளின் தலைவர்கள் பலரும் தமது குடிமக்களை பரபரப்புக்கும் அச்சத்துக்குள்ளும் தள்ளிவிட்டு, தம்மை தாப்பா…
-
- 0 replies
- 346 views
-
-
செயற்கை நுண்ணறிவில் முதலீடு; 9,000 ஊழியர்களை பணிநீக்கும் மைக்ரோசாப்ட்! தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft) இந்த ஆண்டு 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்த ஆண்டு நிறுவனத்தின் வேலை குறைப்புக்களின் அண்மைய அலையாகும். எந்தெந்த பிரிவுகள் மேற்கண்ட அறிவிப்பினால் பாதிக்கப்படும் என்பதை மைக்ரோசாப்ட் தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால், அதன் எக்ஸ்பாக்ஸ் வீடியோ கேமிங் பிரிவு இதனால் பாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் (AI) அதிக அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் AI மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்காக மிகப்பெரிய தரவு மையங்களில் $80 பில்லியன் (£68.6 பில்லியன்) செலவிடுகிறது. இந்த குறைப்பு…
-
- 0 replies
- 151 views
-
-
காப்புரிமை Reuters சௌதி அரம்கோ நிறுவனம் பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபட தொடங்கிய முதல் நாளிலேயே அதன் பங்குகளின் மதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. சௌதி அரேபிய அரசுக்கு சொந்தமான உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சௌதி அரம்கோ, சமீபத்தில் தனது நிறுவனத்தின் பங்குகளை முதல் முறையாக விற்பனை செய்தது. சௌதி அரம்கோ நிறுவனத்தின் பங்குகள் இன்று (புதன்கிழமை) அந்நாட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வணிகத்துக்கு வந்தபோது, 25.6 பில்லியன் டாலர்களை திரட்டி அந்நிறுவனம் பெரும் சாதனை படைத்துள்ளது. வெறும் எண்ணெய் வளத்தை மட்டுமே சார்ந்திராமல், புதிய வணிக முன்னெடுப்புகளை எடுக்கும் முயற்சியில் சௌதி அரேபிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில…
-
- 0 replies
- 467 views
-
-
சௌதி அரசின் அரம்கோ நிறுவனம், ரியாத் பங்குச்சந்தையில் தனது நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிடப்போவதை உறுதி செய்துள்ளது. தனது நிறுவனத்தின் 1% அல்லது 2% பங்குகளை சௌதி வெளியில் விடலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சௌதி அரம்கோவின் மதிப்பு 1.2 ட்ரில்லியன் டாலர்களாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. `வரலாற்று சிறப்பு மிக்க நகர்வு` வெளிநாட்டு பங்குச்சந்தைகளில் நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிடுவது குறித்து தற்போது எந்த திட்டமும் இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பல காலங்களாக பங்குச்சந்தையில் நுழைவது குறித்து நடந்த பேச்சுவார்த்தைகளில், வெளிநாட்டு பங்குச்சந்தைகள் குறித்து பேசப்பட்டபோதிலும், தற்போது இந்த திட்டம் ஒதுக்கி வைக்கப…
-
- 0 replies
- 257 views
-
-
பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் ஜப்பானிய மொழியை எங்கு?எப்படி?எவ்வளவு காலத்தில் கற்கலாம் என்பது குறித்த ஒரு சிறப்புச் செய்தித் தொகுப்பைத் தற்போது காணலாம். தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பேர் பொறியியல் படிப்பை முடித்துக் கல்லூரிகளில் இருந்து வெளியேறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு வேலை கிடைப்பதில்லை என்பதால், ஆண்டுதோறும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானிய மொழி தெரிந்தால் எளிதில் வேலை வாய்ப்பைப் பெற முடியும்" என்கிறார் சென்னையில் அமைந்துள்ள ஜப்பானிய மொழிக்கான பயிற்சி மையத்தின் இயக்குநர் அனுராதா. தமிழகத்தில் மட்டும் சுமார் 577 ஜப்பானிய நிறுவனங்கள் உள்ளன. இவற்றில…
-
- 0 replies
- 377 views
-
-
ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 மாநாடு துவங்கியது. கூட்டத்தில் பங்கேற்க வந்த தலைவர்களை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வரவேற்றார். தொடர்ந்து தலைவர்கள் கூட்டாக போட்டோ எடுத்து கொண்டனர். இதன் பின் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் டிரம்ப் பேசுகையில், 5ஜி நெட்வோர்க் சேவையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது நமது பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கு முக்கியம். டிஜிட்டல் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கும் தகவல் கட்டுப்பாடு மற்றும் கொள்கைகளுக்கு அமெரிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் என்றார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2308268 20களின் குழு (Group of Twenty) அல்லது சுருக்கமாக ஜி-20, அல்லது 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத…
-
- 1 reply
- 443 views
-
-
ஜி20 மாநாட்டை உன்னிப்பாக கவனிக்கும் நிதியியல் மற்றும் மூலப் பொருட் சந்தைகள்! பிரித்தானிய பிரதமர் தெரேசா மே – ஜீ 20 மாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் ஆஜன்டீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நேற்றைய தினம் (வியாழக்கிழமை) பிரித்தானிய பிரதமர் உட்பட விசேட தூதுக்குழுவினர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர். சர்வதேச பொருளாதார நெருக்கடிகளின் பிடிக்குள் இருந்த உலகை பாதுகாப்பது எவ்வாறு என்பது குறித்து கடந்த 2008 ஆம் ஆண்டு உலகத் தலைவர்கள் ஒன்று கூடி ஆராய்ந்தமைக்கு அமைவாக இந்த வருடம் அதன் அவசியப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளனர். நிதியியல் மற்றும் மூலப் பொருட் சந்தைகள் இந்த மாநாட்டின் பிரதிபலன்கள் குறித்து மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருகின்றன. முக்கியமாக அ…
-
- 0 replies
- 373 views
-
-
2019 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சிவிகிதம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முந்தைய காலாண்டான ஜனவரி - மாரச் காலகட்டத்தில் இருந்த 5.8% விட குறைவாக உள்ளது. அதேவேளையில், 2018 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சிவிகிதம் 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது கடந்த 5 ஆண்டுகளில் இதுதான் மிகவும் மெதுவான வளர்ச்சிவிகிதமாக கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்திய பொருளாதாரம் தொய்வடைந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்தத தரவுகள் வெளியாகி உள்ளன. முன்னதாக, இன்று (வெள்ளிக்கிழம…
-
- 1 reply
- 355 views
-
-
ஜிடிபி-யில் 20.4% சரிவு..மோசமான பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியது பிரிட்டன்..! கொரோனா தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளதை நாம் கண்முன்னே பார்த்து வரும் நிலையில், வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டன் அதிகாரப்பூர்வமாகப் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அந்நாட்டுத் தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக மக்களின் காவு வாங்கும் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது என ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஒருபக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும், வல்லரசு நாடுகளின் பொருளாதாரச் சரிவும், வர்த்தக மந்த நிலையும் சாமானிய மக்களைப் பயமுறுத்தி வருகிறது. பிரிட்டனில் அப்படி என்ன நடந்தது..? எப்படி #Recession என அறிவிக்கப்…
-
- 2 replies
- 1k views
-
-
ஜேம்ஸ் பாண்ட் - நோ டைம் டு டை திரைப்படத்தின் வெளியீடு 7 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. No Time To Die எனும் புதிய பாண்ட் திரைப்படத்தில் டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாகவும், சஃபின் வேடத்தில் ‘போஹேமியன்' பட நடிகர் ராமி மாலெக் அவருக்கு வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் லியா செடக்ஸ், பென் விஷா, அனா டி அர்மாஸ் மற்றும் லாஷனா லிஞ்ச் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை இயான் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க, Cary Joji Fukunaga இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. டேனியல் கிரெய்க், தனது முந்தைய மூன்று பாண்ட் படங்களிலும் செய்ததை விட அதிகப்படியான சாகச சண்டைக் காட்சிகளை இப்படத்தில் செய்கிறார். வரு…
-
- 0 replies
- 422 views
-
-
ஜேர்மனியை சேர்ந்த BMW நிறுவனத்தின் புதிய வகை எஸ்.யூ.வி அறிமுகம்! ஜேர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனம் புத்தம் புதிய X7 SUV வாகன மாதிரியின் ஔிப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் பிரம்மாண்ட 7 இருக்கைகள் கொண்ட மாதிரியாக வௌிவரவிருக்கும் இந்த பிரம்மாண்ட எஸ்யூவி வாகனம் மெர்சிடிஸ் பென்ஸ், வோல்வோ, அவுடி கார் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் இந்த புதிய மாதிரி வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஹெட்லைட் வடிவமைப்புகள், LED DRL கள் மற்றும் நவீன மேன்சிங் கிரில்களை கொண்டுள்ளது. இந்த எஸ்.யூ.வி.களில் குரோம் சுற்றப்பட்டு உள்ளது. பின்பாகத்தில் மெல்லிய எச்சர…
-
- 0 replies
- 591 views
-
-
டாலருக்கு வந்த வாழ்வு புதிய ஏற்பாடு: அமெரிக்க டாலர் பணமல்ல, செத்த பிணம். பிணத்திற்கு எப்படி எடை அதிகமோ, அப்படித்தான் டாலரின் மதிப்பும் ஊதிப் பெருகியுள்ளது. ஏனென்றால் அது இறந்து போய் 49 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் டாலருக்கு சவுதி அரேபியாதான் மறுவாழ்வு கொடுத்துள்ளது என்று சொல்லியிருந்தோமே, அது உண்மைதான். ஆனால் மறுவாழ்வு பெற்றும் அது பிணமாகத்தானே உள்ளது? அப்படியிருந்தும் எது அமெரிக்காவிற்கு உலகத்தையே அச்சுறுத்தும் அதிகாரத்தைத் தந்தது? அமெரிக்க டாலர் உலகப் பணம் என்ற தகுநிலைதான் அது உலகின் மிகப்பெரிய வல்லரசாக நீடிப்பதற்கு முதன்மைக் காரணம் இன்று வரை உலகளாவிய வர்த்தகம் பெருமளவில் அமெரிக்க டாலரில் நடப்பதுதான். இதனால் உலகப் பொருளாதாரம் தன்னை நம்பியே உள்ளது என்று…
-
- 0 replies
- 943 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images இந்திய நாணயமான ‘ரூபாய்‘ வங்கதேசத்தின் நாணயமான ‘டாக்கா‘வை விட மிகவும் மதிப்பு குறைந்து விட்டது என்று சமூக ஊடகங்களில் சிலர் கடந்த சில நாட்களாக பதிவிட்டு வருகின்றனர். கடந்த 72 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வங்கதேசத்தின் நாணயமான டாக்காவை விட, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக நூற்றுக்கணக்கான பதிவுகளும், படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதற்கு சமூக ஊடகங்களில் பலர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை குற்றஞ்சாட்டியுள்ளனர். சிலர் இந்த இரு நாட்டு நாணயங்களுக்கான வரைகலை படங்களை ஒப்பிட்டு பதிவிட்டுள்ளனர். இருப்பினும், இந்த கருத்துகள் அனைத்தும் தவறு எ…
-
- 0 replies
- 460 views
-
-
-
- 0 replies
- 259 views
-
-
டுவிட்டர் தளத்தை... 44 பில்லியன் டொலர்கள் கொடுத்து வாங்கும் ஒப்பந்தத்தை, இரத்து செய்தார் எலான் மஸ்க்! முன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் தளத்தை 44 பில்லியன் டொலர்கள் கொடுத்து வாங்கும் ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பணக்காரருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டர் தளத்தில் போலி அல்லது ஸ்பேம் கணக்குகள் பற்றிய தகவல்களை நிறுவனம் வழங்கவில்லை என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் தாக்கல் செய்ததில், மஸ்கின் வழக்கறிஞர்கள், போலி கணக்குகள் குறித்து சரியான தகவலை டுவிட்டர் நிறுவனம் தரவில்லை என குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், தனது பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கும் டுவிட…
-
- 3 replies
- 332 views
- 1 follower
-
-
டுவிட்டர் நிறுவனத்தை... 44 பில்லியன் டொலர்களுக்கு, வாங்கிய எலான் மஸ்க்! டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரியும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், முன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்க ஒப்புக்கொண்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில், டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலர்களுக்கு வாங்க எலான் மஸ்க் ஒப்புக்கொண்டார். தொகை பரிமாற்றம், மஸ்க் வாங்கிய பிறகு டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்துவது யார் போன்ற விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை விபரம் வெளியானதும் அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் டுவிட்டர் பங்கு விலை 3 சதவீதம் அதிகரித்தது. சமீபத்தில் டுவிட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்…
-
- 0 replies
- 195 views
-
-
-
- 5 replies
- 1k views
-
-
டொயோட்டாவின் முழு ஆண்டு இலாபம் 21% சரிவு! டொயோட்டா மோட்டார் நடப்பு நிதியாண்டில் இலாபம் ஐந்தில் ஒரு பங்கு குறையும் என்று எதிர்பார்க்கிறது என வியாழக்கிழமை (08)கூறியது. அமெரிக்க டொலரின் பலவீனம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகளின் தாக்கம் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரின் மீது சுமையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. உலகளாவிய வர்த்தக சீர்குலைவு எவ்வாறு வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதற்கான அண்மைய எடுத்துக்காட்டில், உலகின் அதிகம் விற்பனையாகும் கார் உற்பத்தியாளர், மார்ச் 2026 வரையிலான ஆண்டில் இயக்க வருமானம் மொத்தம் 3.8 டிரில்லியன் யென் ($26 பில்லியன்) ஆக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். இது 2025 மார்ச் மாதத்தில் முடிவடைந்த ஆண…
-
- 0 replies
- 180 views
-
-
டொலருக்கு எதிராக... பவுண்ட் வரலாறு காணாத அளவுக்கு, வீழ்ச்சி! உலகளவில் புதிய முதலீட்டாளர்கள் அமெரிக்க நாணயத்தை நோக்கி விரைந்துள்ள நிலையில், டொலருக்கு நிகரான பவுண்ட், வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஸ்டெர்லிங் பவுண்ட், திங்கட்கிழமை ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 5 சதவீதம் சரிந்து 1.0327 பவுண்டாக இருந்தது. திறைசேரியின் தலைவர் குவாசி குவார்டெங், 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய வரிக் குறைப்புத் திட்டத்தை வெளியிட்ட பிறகு 1985 ஆம் ஆண்டிற்கு பிறகு புதிய வீழ்ச்சியைக் கண்டது. 45 பில்லியன் பவுண்டுகள் வரி குறைப்பு தொகுப்பு பொது நிதி நிலைத்திருக்குமா என்பது குறித்த தீர்ப்பை சந்தை வழங்கியுள்ளது. ஆசிய வர்த்தகத்தில் திங்கட்கிழமை …
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
டொலருக்கு எதிரான ஸ்ரேர்லிங் பவுணின் பெறுமதி சரிவை கண்டுள்ளது! புதிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் நோக்கிய அனுமானத்தில் செயற்படுவதால் டொலருக்கு எதிரான ஸ்ரேர்லிங் பவுணின் பெறுமதி 28 மாதங்களுக்கு குறைந்த அளவிற்கு சரிவை கண்டுள்ளது. ஸ்ரேர்லிங் பவுண்ட் 1.1% க்கு முறையே டொலருக்கு எதிராக $1.2242 மற்றும் யூரோவுக்கு எதிராக €1.1004 ஆகக் குறைவடைந்துள்ளது. ஐ.என்.ஜி குழுமத்தின் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஸ்ரேர்லிங் நாணயமானது மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வணிகமுயற்சியாளர்கள் கடைசி நிமிட பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படலாம் என்று பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது. பன்னாட்டு வணிகக் குழுக்கள் இங்கிலாந்தில் முதலீட்டை …
-
- 0 replies
- 541 views
-
-
ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இன்று கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அடுத்த 30 நாட்கள் வரை 26 ஐரோப்பிய நாடுகளின் பயணத்தை அமெரிக்க நிறுத்துவதாக டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை இரவு அறிவித்தார். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்தே ஐரோப்பிய பங்குச் சந்தையானது இன்று பாரியளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், எசுத்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், கிறீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாத்வியா, லீக்கின்ஸ்டைன், லித்துவேனியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நோர்வோ, போலாந்து, போர்த்துக்கள், சிலோவாக்கியா, சுலோவீனியா, ஸ்பெய்ன், சுவிடம் மற்றும் சுவிட்…
-
- 0 replies
- 306 views
-
-
பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதற்கு முன்பு தங்கத்தின் விலை இவ்வளவு உயர்வைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. சில மாதங்களுக்கு முன்பு தங்க நகைகளை வாங்கியவர்கள் அல்லது தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், இன்னும் அதிகமாக வாங்கியிருக்க வேண்டும் என்று இப்போது வருத்தப்படுகிறார்கள். அவ்வாறு முதலீடு செய்யாதவர்கள், தங்கத்தின் விலை இப்படியே உயர்ந்துகொண்டே செல்லுமா என்று கேட்கிறார்கள். உடனடியாக தங்க நகைகளை வாங்குவது அல்லது தங்க ஈடிஎஃப்-களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமா என்றும் அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை, தங்கத்தின் தேவை குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதை உணர்த்துகிறது. உண்மையில் தங்கத்திற்கான தேவை அதிகரித்திருக்க…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-