Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மூன்றாவது நாளாக நீடிக்கும் சியாரா புயல் : 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை பிரான்ஸில் நிலைகொண்டுள்ள சியாரா புயல் மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையமான மெற்றோ பிரான்ஸ் தெரிவித்துள்ளது. மணிக்கு 140 கி.மீ வேகத்தில் புயல் வீசும் என்பதால், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு மெற்றோ பிரான்ஸ் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து ஆரம்பித்த இந்தப் புயல், நேற்று திங்கட்கிழமை, பரிஸ் உட்பட 45 மாவட்டங்களைச் சூறையாடிச் சென்றிருந்தது. ஈஃபிள் கோபுரம் உட்பட பல பொது இடங்கள் மூடப்பட்டதோடு போக்குவரத்தும் பெருமளவில் தடைப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று மூன்றாம் நாளாக இந்த எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தோடு 12 மாவட்டங்களுக்கு…

  2. காட்டுத்தீயை தொடர்ந்து வெள்ளப்பெருக்கு: அவுஸ்ரேலிய மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிப்பு அவுஸ்ரேலியாவையே புகைமூட்டமாக மாற்றிய காட்டுத்தீக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு சிலநாட்களிலேயே, பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆம்! அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதி தீவிர மழை பதிவாகியுள்ளது. சிட்னி நகரில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 391.5 மில்லிமீட்டர் மழை பொழிந்துள்ளதை அடுத்து, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வெள்ளம் ஏற்படக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதி தீவிர மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிட்னி நகரத்தில் இன்று (திங்கட்கிழம…

  3. அந்தாட்டிக்காவில் வெப்பநிலை சடுதியாக அதிகரிப்பு: பலகோடி மக்களுக்கான எச்சரிக்கை! அந்தாட்டிக்காவில் வெப்பநிலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் பலகோடி மக்களுக்கான எச்சரிக்கையாக இது அமைந்துள்ளது. இதன் வடக்குப் பகுதி முனையில், வெப்ப நிலை 18 புள்ளி 3 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளதாக அந்தாட்டிக்காவின் எல்பெரன்சாவில் அமைந்துள்ள ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது. முன்னர் 17 புள்ளி 5 டிகிரி செல்சியஸ்தான் குறைந்தபட்ச வெப்ப நிலையாக இருந்தது. பனி உருகுவதன் காரணமாக தற்போது வெப்ப நிலை அதிகரித்துள்ளது. வெப்ப நிலை உயர்வதன் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதாகவும் கோடிக்கணக்கான மக்களுக்கு இது பெரும் அச்சுறுத்தலாக மாறிவருவதாகவும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். …

  4. கண்டுபிடிக்கப்பட்ட டிராகன் வகை பல்லி இனம்! உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் சில ஆழ்கடலிலும் அடர்ந்த காடுகளிலும் உயிர்வாழ்கின்றன. அவற்றில் சில வித்தியாசமான தோற்றத்திலும் தனக்கான தனிப்படட்ட இயல்புகளுடனும் காணப்படுகின்றன. அதேபோல சாலமண்டர் வகை இனத்தைச் சேர்ந்த பல்லி ஒன்று, ஐரோப்பாவில் 7 ஆண்டுகளாக ஒரு அடிகூட நகராமல் ஒரே இடத்தை ஆட்கொண்டுள்ளது என ஆய்வறிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. The Independent செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா (Bosnia and Herzegovina) நாட்டில் உள்ள குகை ஒன்றில் வாழும் ஓல்ம் என்று அழைக்கப்படும் ட்ராகன் போன்ற பல்லி, சுமார் 2 ஆயிரத்து 569 நாட்கள் நகராமல் ஒரே இடத்தில் இருந்துள்ளது எனக் கண்டறியப்படுள்ளது. வெள்ளை நிற…

  5. விவசாயம் பாரிய அழிவு: வெட்டுக்கிளிகளுக்கு எதிராக தேசிய நெருக்கடி நிலையை அறிவித்தது பாகிஸ்தான் பாகிஸ்தானில் பாலைவன வெட்டுக்கிளிகளின் வருகையால் விவசாயப் பயிர் விளைச்சல்கள் பாரியை அழிவைச் சந்தித்துள்ள நிலையில், பாலைவன வெட்டுக்கிளிகளுக்கு எதிராக நெருக்கடி நிலையை அந்நாடு அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் ஒரு பக்கம் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் வேளையில் இன்னொரு பக்கம் பாலைவன வெட்டுக்கிளிகளின் அட்டகாசத்தால் ஆபிரிக்க வளைகுடா நாடுகளின் வாழ்வாதாரத்தையே பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் நிலை உருவாகியுள்ளது. எத்தியோப்பியாவை பாலைவன வெட்டுக்கிளிகளின் தலைநகரம் எனலாம். இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள் அங்கிருந்து சூடான், சவுதி அரேபியா, ஈரான் வழியாக பாகிஸ்தானின் ப…

  6. “ சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துப் பேசுபவர்கள் முட்டாள்களின் வாரிசுகள் ” - ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் “ சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துப் பேசுபவர்கள் முட்டாள்களின் வாரிசுகள் ” என காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஆர்வலரான கிரேட்டா தன்பர்க்கை விமர்சித்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் டாவோஸ் 2020 உலக பொருளாதார மாநாட்டில் ஐம்பதாவது கூட்டத்தில் புவி வெப்பமயமாதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், நம் வீடு (புவி) இன்னும் எரிந்துகொண்டுதான் உள்ளது. நாங்கள் சுற்றுச்சூழலைக் காக்கப் போராடி வருகிறோம். ஆனால், இதுவரை அதற்குத் தேவையான எந்த நடவடிக்கையும் உலக நாடுகள் செய்ததாகத் தெரிய…

  7. பிரான்ஸ்சை மையமிட்டுள்ள குளோரியா புயல் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை! பிரான்ஸில் குளோரியா புயல் காரணமாக, பைரனீஸ்- ஒறியன்டேல்ஸ் மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் எதிர்வரும் வியாழக்கிழமை காலை வரை இந்த எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. பைரனீஸ்- ஒறியன்டேல்ஸ் மாவட்டத்தில் தற்போது அடை மழை மற்றும் கடுமையான காற்று வீசி வருவதாக அறியமுடிகின்றது. இதற்கமைய இன்று 80மில்லி மீற்றரிலிருந்து 120மில்லி மீற்றர் வரை மழை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை இந்த கால நிலை மேலும் மோசமான நிலையை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்பெயின் நாட்டில் இதுவரை மூன்று ப…

  8. மலேசியா உலகின் குப்பைத் தொட்டியல்ல - திருப்பி அனுப்பப்பட்ட கொள்கலன்கள். மலேசியா விழித்ததை அடுத்து கடந்த மூன்றாம் காலாண்டில் இருந்து, 150 பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை பிரித்தானியா உள்ளிட்ட 13 முக்கியமான செல்வந்த நாடுகளுக்கு மலேசியா திருப்பி அனுப்பியுள்ளது. மலேசியா சுற்றுசூழல் அமைச்சர் தமது நாடு உலகின் குப்பைத் தொட்டியல்ல என தெரிவித்ததே இந் நிலைக்கு காரணமாகும் . பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய 42 கொள்கலன்களை இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் யியோ பீ யின் 2018 ஆம் ஆண்டில் சீனா பிளாஸ்ரிக் கழிவுகளை இறக்குமதி செய்யத் தடை விதித்ததிலிருந்து தேவையற்ற குப்பைகளின் கப்பல்கள் தென்கிழக்கு ஆசியாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்ற…

  9. நவின் சிங் கட்கா சுற்றுசூழல் செய்தியாளர், பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images எவரெஸ்ட் மலைப்பகுதி உட்பட இமயமலையின் பல பகுதிகளில் தாவரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புதிய ஆராய்ச்சி ஒன்று சுட்டிக்காட்டுகிறது. முன்பு தாவரங்கள் வளராத பகுதிகளில் கூட தற்போது செடிகள் நன்கு வளர்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். செயற்கைகோள் தரவுகளை பயன்படுத்தி 1993ல் இருந்து 2018 வரை, தாவரங்களின் வளர்ச்சி பசுமையான பகுதிகளிலும் பனி படர்ந்த பகுதிகளிலும் எவ்வாறு இருக்கிறது என்பதை ஓர் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் குளோபல் சேஞ்ச் பயாலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. நாசாவின் லேண்ட் சாட் செயற்கைக்கோள் புகைப்படங்களை…

  10. அவுஸ்திரேலியா காட்டுத் தீ : பசுபிக் கடல் முழுவதும் புகை மண்டலம் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இருந்து வரும் புகை பசுபிக் முழுவதம் பரவியுள்ள நிலையில் தென் அமெரிக்காவை நோக்கி நகர்வதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச வானிலை அறிவிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த புகை மண்டலம் அந்தார்டிக்காவை அடைந்திருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவுஸ்திரேலிய தீ விபத்து தொடர்பான நாசாவின் செய்மதி தகவல்களை பயன்படுத்தி அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய முப்பரிமாண புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் அவுஸ்திரேலியாவின் 10.3 மில்லியன் ஹெக்டர் நிலப்…

    • 0 replies
    • 699 views
  11. கடும் வறட்சி.. கட்டுக்கடங்காத காட்டுத் தீ.. 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டு கொல்ல ஆஸ்திரேலிய அரசு முடிவு! கேன்பெரா: கடுமையான காட்டுத் தீ மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல முடிவு செய்துள்ளது.ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இதனால் அங்கு கடுமையான வறட்சியும் ஏற்பட்டுள்ளது.வெப்பத்தால் ஆஸ்திரேலிய வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. மாதக்கணக்காக அவற்றை கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினரும் மீட்பு படையினரும் போராடி வருகின்றனர். தீக்கிரையாகும் விலங்குகள் ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீயை அணைக்கும் பணியில் உள்ளூர் மக்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத் தீ…

  12. 2019 கோடைகால வெப்பத்தால் சுமார் 900 பேர் மரணம் கடந்த கோடை காலத்தில் பிரித்தானியா அனுபவித்த வெப்பத்தின் விளைவாக பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 900 வயோதிபர்கள் உயிரிழந்ததாக உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 21 முதல் 28 வரை நிலவிய இரண்டாவது வெப்பக் காலநிலை மிகவும் ஆபத்தானதாக அமைந்திருந்ததாக என்று இங்கிலாந்துக்கான பொதுச் சுகாதார சேவை (PHE) தெரிவித்துள்ளது. கடந்த வருட கோடைகாலத்தின் மிக வெப்பமான நாளாக கேம்பிரிட்ஜில் 38.7 செல்ஸியஸ் வெப்பநிலையுடன் ஜூலை 25 அமைந்திருந்தது. இது பிரித்தானியாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பநிலைக்கான சாதனையை முறியடித்தது. ஜூன் 28 முதல் 30 மற்றும் ஆகஸ்ட் 23 முதல் 29 வரை இரண்டு அதிகளவிலான வெப்ப காலநிலை காணப்பட்டது. மு…

  13. அதிகரித்துவரும் வெப்பமயமாதல் மற்றும் உலக மயமாதல் போன்றவற்றால் மனித குலம் பெரும் அழிவினை சந்தித்து வருகிறது. மனிதனின் ஆக்கமும் அழிவும் அனைத்தும் இயற்கை சார்ந்தே அமைகிறது.ஒரு இடத்தில் ஆக்கம் என்றால் மற்றொரு இடத்தில் அழிவு என்பதை அடிக்கடி உணர்த்தும் சம்பவங்கள் அதிகம் . காலநிலை மாற்றத்தின் மூலம் இந்த பூமி சந்திக்க கூடிய நிகழ்வுகளை அடிக்கடி செய்திகள் மூலமாக அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.காடழிப்பு, நகரமயமாதல், மழையின்மை போன்ற காரணிகளால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள மனித குலம் தயாராக வேண்டும் என்பதே இயற்கை ஆய்வாளரின் கருத்தாக இருக்கிறது.அண்மையில் நடந்த இரு நிகழ்வுகளே காலநிலை மாற்றத்திற்கு உதாரணம். ஆஸ்திரேலியா காட்டு தீ எங்கு காணும் தீம்பிழம்புகளை கக்கிய வானம், வாழ்வ…

  14. யார் அதிக கதிர்வீச்சு அளவைப் பெறுகிறார்கள், கிரகத்தில் அதிக கதிரியக்க இடங்கள் எங்கே? எங்கள் கிரகத்தில் மிகவும் கதிரியக்க இடங்கள். (செர்னோபில் மற்றும் புகுஷிமாவில் ஏற்பட்ட பேரழிவுகளுக்குப் பிறகு) சுமார் 100 டன் கதிரியக்கக் கழிவுகள் சுற்றுச்சூழலில் விழுந்தன. ஒரு வெடிப்பைத் தொடர்ந்து, ஒரு பரந்த நிலப்பரப்பை மாசுபடுத்துகிறது. அப்போதிருந்து, ஆலை பல அவசரகால சூழ்நிலைகளை அனுபவித்தது, உமிழ்வுகளுடன். சைபீரிய இரசாயன ஆலை, செவர்ஸ்க் நகரம், ரஷ்யா atomic-energy.ru சோதனை மைதானம், கஜகஸ்தானின் செமிபாலடின்ஸ்க் (செமி) நகரம் lifeisphoto.ru வெஸ்டர்ன் மைனிங் அண்ட் கெமிக்கல் காம்பைன், மெயிலு-சூ சிட்டி, கிர்கிஸ்தான் facebook.com செர்னோபில் அணுமி…

    • 0 replies
    • 601 views
  15. வெறும் 20,000 மக்களைக் கொண்ட குட்டி நாடு கடலைக் காக்க எடுத்திருக்கும் வியக்க வைக்கும் முயற்சி படத்தின் காப்புரிமைBENJAMIN LOWY / GETTY Image captionபலாவு நாட்டின் ஒரு பகுதியான ராக் தீவு. பவளப் பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சன் க்ரீம் பயன்பாட்டை தடை செய்யும் உலகின் முதல் நாடாகியுள்ளது பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பலாவு. புற ஊதா கதிர்கள், சூரிய வெப்பம் ஆகியவற்றின் தாக்கத்தில் இருந்து தோலை பாதுகாத்துக்கொள்ள, கடற்கரைகளுக்கு செல்பவர்கள் சன் க்ரீம் பூசிக்கொள்ளும் வழக்கம் பரவலாக உள்ளது. ஆக்சிபென்சீன் (oxybenzone), ஆக்டிநாக்சேட் (octinoxate) உள்ளிட்ட 10 வேதிப…

    • 0 replies
    • 542 views
  16. Started by nunavilan,

    பிளாஸ்ரிக்

  17. பூமியின் காந்த வடதுருவம் ரஷ்யா நோக்கி வேகமாக நகர்வதாக தெரிவிப்பு! பூமியின் காந்த வடதுருவம், ரஷ்யா நோக்கி வேகமாக நகர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க விஸ்கன்சின் மேடிசன் பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞானி பிராட் சிங்கர் இதனைத் தெரிவித்துள்ளார். பூமியின் காந்த வடதுருவத்தின் அமைவிடம், கடந்த 1831ஆம் ஆண்டு முதல் கனடாவின் ஆர்க்டிக் பகுதியில் இருந்து ரஷ்யா நோக்கி, வேகமாக இடம்பெயர்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார். அண்மைக் காலங்களில், ரஷ்யாவின் சைபீரியா நோக்கி, ஆண்டுக்கு சராசரியாக, 54.7 கி.மீ., வேகத்தில் இது நகர்வதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2020ஆம் ஆண்டுக்கான உலக காந்த மாதிரி தகவல்படி, காந்த வட துருவ பாதை அடுத்த சில ஆண்டுகளுக்கு ரஷ்யாவில் தான் இரு…

  18. சுற்றுச்சூழல் மாசடைதல் அளவைக் கண்டறிய மொம்பர்னாஸ் கோபுரத்தை அறிமுகப்படுத்தும் பிரான்ஸ்! பிரான்ஸ் தலைநகரில் சுற்றுச் சூழல் மாசடைதலின் அளவைக் கண்டறிவதற்கு மொம்பர்னாஸ் கோபுரத்தைப் பார்வையிடுவதற்கான புதிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிஸில் உள்ள மிகப் பிரபலமான மொம்பர்னாஸ் கோபும்ரம் எதிர்வரும் 21-ஆம் திகதி வரை வெவ்வேறு வர்ண நிறங்களில் ஒளிரும் எனவும் அது அழகுக்காக மாத்திரமன்றி, பரிஸில் சுற்றுச்சூழல் மாசடைவைக் குறிப்பதற்காக பெரும்பாலும் பயன்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிஸில் உடனுக்குடன் பதிவாகும் சுற்றாடல் மாசடைவுக்கு ஏற்றது போல் பச்சை, இளம் பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு’ஆகிய நிறங்களில் மொம்பர்னாஸ் கட்டிடம் ஒளிரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்…

  19. சுற்றுச்சூழல் ,பருவநிலை மாற்றம் குறித்து ஐநா,சபை நடத்திய மிக நீளமான பேச்சுவார்த்தைகள் எந்த வித உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தன. ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் நீண்ட நேரம் நீடித்த பேச்சுகளால் சலிப்படைந்து கார்பன் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக உறுதியளித்துள்ளன. அடுத்த ஆண்டு கிளாஸ்கோவில் ஐநா.சபையின் பருவநிலை தொடர்பான மாநாடு நடைபெறும்.அதற்குள் அனைத்து நாடுகளும் கார்பன் அமிலத்தை குறைப்பதற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐநா.சபை கேட்டுக் கொண்டுள்ளது. https://www.polimernews.com/dnews/93002/ஐநா.சபையின்-பருவநிலைகுறித்தபேச்சுவார்த்தையில்எந்தவித-உடன்பாடும்எட்டப்படாமல்-நிற…

    • 0 replies
    • 267 views
  20. இயற்கையின் ஆக்கமும் , அழித்தலும் - எரிமலைகள்.! இயற்கையின் பல சக்திகள் இந்த பிரபஞ்சத்தில், அழிவையும், ஆனால் அதே சமயம் அதிசயிக்கும் வகையில் ஆக்கத்தையும் கொடுத்திருக்கின்றன. உதாரணத்திற்கு எரிமலைகளை எடுத்துக் கொள்வோம். ‘ எரிமலைகள் ஆக்க சக்தியா?’, என்று ஆச்சரியம் வரத்தான் செய்யும். எரிமலைகள் இந்த பூமியில் இல்லை என்றால் இந்த கட்டுரை எழுத நானும் இருந்திருக்க மாட்டேன், படிப்பதற்கு நீங்களும் இருந்திருக்க மாட்டீர்கள். இப்படிச் சொன்னால் நம்புவதற்கு மிகவும் கடினமாகத்தான் இருக்கும். புவியில் உயிர்கள் வாழ்வதற்கு எரிமலைகள் அந்தளவு பங்களித்திருக்கின்றன. எரிமலைகளின் அழிக்கும் சக்தியை முதலில் பார்ப்போம். எரிமலைகளை நமக்கு அருகிலயே, அமைதியாக இருக்கும். ஆனால், திடீரென்று ஒருநா…

  21. படத்தின் காப்புரிமை BEDMACHINE/UCI/BAS Image caption டென்மென் பனிப்பாறை பகுதி பூமியின் நிலப்பரப்பில் மிக ஆழமான பகுதி எது என கண்டறியப்பட்டுள்ளது. கிழக்கு அண்டார்டிகாவில் டென்மென் பனிப்பாறைக்கு கீழே கிட்டத்தட்ட 3.5 கிலோமீட்டர் (கடல்மட்டத்தில் இருந்து 11,500 அடி ஆழம்) உள்ள பள்ளத்தாக்குதான் பூமியின் நிலப்பரப்பில் மிக ஆழமான இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது. கடல்கள் மற்றும் சமுத்திரங்களில் மட்டும் தான் இதை விட ஆழமான பகுதிகள் உள்ளன. இந்த பகுதி 20 …

  22. புவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை ! ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிடில் நடைபெற்று வரும் 'உலக நாடுகள் காலநிலை மாநாட்டில்' ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ் (Antonio gutierrez), புவி வெப்பமடைதலுக்கு எதிராக எடுத்த சபதத்தில் எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என்று உறுதியளித்தார். உலகத்தில் அறிவியல் பூர்வமாக இருக்கும் ஞானமும், தொழில்நுட்ப அறிவும் புவி வெப்பமடைவதைத் தடுப்பதாக இருக்க வேண்டும். ஆனால் அரசியல் ரீதியாக அதற்கான நடவடிக்கை இல்லை. 2019, டிசம்பர் 2-13 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் 2015-பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை நிறைவேற்ற எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப் போகிறோம், கடல்நீர் உயர்வதால் பாதிக்கப்படும் …

  23. கிரீன்லாந்தில் பாரிய பனி உருகுவது 400 மில்லியன் மக்களை வெள்ளத்திற்கு ஆளாக்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை கிரீன்லாந்து அதன் தற்போதைய விகிதத்தில் தொடர்ந்து பனியை இழந்தால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் மக்கள் கடலோர வெள்ளத்திற்கு ஆளாக நேரிடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கிரீன்லாந்து பனிக்கட்டி கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இருந்ததை விட ஏழு மடங்கு வேகமாக உருகி வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்த பனி இழப்பின் காரணமாக 1992 முதல் உலக கடல் மட்டங்கள் சுமார் 10.6mm உயர்ந்துள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கிரீன்லாந்தில் இருந்து மட்டும் இந்த நூற்றாண்டின் இறுதியில் கூடுதலாக 7cm கடல் உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விகிதத்த…

  24. அவுஸ்ரேலியாவில் தண்ணீரைப் பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள்! அவுஸ்ரேலியாவின் பெரும்பாலான பகுதிகளை வாட்டிவரும் வெப்பத்தினால், அங்கு தண்ணீரைப் பயன்படுத்த அவுஸ்ரேலியா அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக கிரேட்டர் சிட்னி, ப்ளூ மவுண்டன்ஸ் மற்றும் இல்லாவாரா பகுதி மக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சக் கூடாது, இரு பக்கெட் தண்ணீர் கொண்டுதான் வாகனங்களைக் கழுவ வேண்டும், நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பச் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இதனை மீறும் தனி நபர்களுக்கு 150 அமெரிக்க டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும், வணிக நிறுவனங்களுக்கு 550 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.