சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
509 topics in this forum
-
‘எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை’ போராட்டத்தை ஆரம்பித்த சுவீடன் மாணவிக்கு விருது காலநிலை மாற்றத்திற்கு எதிரான ‘எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை’ போராட்டத்தை ஆரம்பித்த சுவீடன் மாணவிக்கு ஜேர்மன் தொலைக்காட்சி விருது வழங்கியுள்ளது. சுவீடன் மாணவியான கிரேட்டா துன்பேர்க்கின் (Greta Thunberg) பொது நலனை பாராட்டும் வகையில் இந்த ‘கோல்டன் கமரா’ விருது வழங்கப்பட்டுள்ளது. விருதினை பெற்றுக் கொண்ட பின்னர் அங்கு உரையாற்றிய அவர், தத்தமது துறைகளை பயன்படுத்தி காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்த பிரபலங்களிடம் கோரிக்கை விடுத்தார். ஆரம்பத்தில் ஜேர்மன் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையை சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த இவ்…
-
- 0 replies
- 249 views
-
-
செப்டெம்பர் 2020 பட மூலாதாரம், ROV SUBASTIAN/SCHMIDT OCEAN INSTITUTE ஆஸ்திரேலியாவில் கிரேட் பேரியர் ரீஃப் என்ற கடலடிப் பவளப்பாறை அமைந்த வடக்குக் கடல் பகுதியில், இதுவரை கண்டிராத "நடக்கும்" மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக மத்திய பசிஃபிக் பகுதியில் காணப்படும் இந்த வகை மீன், ரினோபியஸ் அக்ரிலோபா எனப்படும் தேள் மீன் வகையை சேர்ந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வழக்கத்துக்கு மாறான இருப்பிடம் அல்லாத பிற கடல்பகுதியில் இந்த வகை மீன் காணப்படுவது இதுவே முதல்முறையாகும். அதன் மார்புப்பகுதியோடு ஒட்டி இருக்கும் துடுப்புகளால் கடலுக்கு அடியில் உள்ள தரையில…
-
- 1 reply
- 660 views
-
-
நம்மாழ்வாரும் சித்த மருத்துவமும்: கதிர்நம்பி இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார், சித்த மருத்துவம் குறித்துப் பேசவில்லையா ? சித்த மருத்துவத்தை முன்னெடுக்கவில்லையா ? * தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை/சூழலியல் செயல்பாடுகள் அரும்பிய காலத்தில் இருந்து செயல்பட்டு வந்தவர் நம்மாழ்வார். புழுதியில் உழல்கின்ற உழவர்களை ஒரு படி மேல் ஏற்றுவது தன் வாழ்நாள் இலட்சியம் என்று ஓடித் திரிந்தவர். வேளாண்மையை முழுமையாகக் (wholistic approach) காண வேண்டும் என்பார். மொத்தம் /எண்ணிக்கை (Total/count) என்பதை விட முழுமை (wholesome) என்பதனைக் கணக்கிட வேண்டும் என்பார். அந்த முழுமை என்பதற்குள் நுண்ணுயிர் முதல் பேருயிர் வரை அடங்கு…
-
- 0 replies
- 402 views
- 1 follower
-
-
சர்வதேச புவி தினம் இன்றாகும்! சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதியாகிய இன்று சர்வதேச புவி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக பூமி தினத்தின் தொனிப்பொருள் “பூவி மற்றும் பிளாஸ்டிக்” என்பதாகும். பிளாஸ்டிக் பயன்பாட்டினால் மனித மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். ஏப்ரல் 22, 1970 ஆம் ஆண்டு அமெரிக்காவில் புவி தினம் முதன்முதலாக கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று, புவி தினத்தில் சுற்றுச்சூழலையும் பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்க 193 நாடுகளைச் சேர்ந்த சுமா…
-
- 0 replies
- 247 views
-
-
மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு கனடாவில் தடை June 11, 2019 மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, கனடா அறிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டின் முற்பகுதிக்குள் இவ்வாறு தடை விதிக்கவுள்ளதாக அந்நாட்டப் பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளில் கடந்த ஆண்டு இதேபோன்ற சட்டம் இயற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பானது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சவால் எனவும் தெரிவித்துள்ளார். மீள்சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கவுள்ளதாக கனடா அறிவித்துள்ள போதிலும், பிளாஸ்டிக் பைகள், ஸ்ரோ, பிளாஸ்டிக் தட்டுக்கள் போன…
-
- 1 reply
- 459 views
-
-
வீட்டில் செடிகள் அல்லது மரங்கள் வளர்க்கலாம் எனத் திட்டமிடும் பலருக்கும் இருக்கும் சந்தேகம், என்ன மரங்கள் வளர்க்கலாம், என்ன செடிகள் வளர்க்கலாம் என்பதுதான். அதற்கான விடை இதோ. 'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது நல்லது' என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். மரம் வளர்க்க இடம் இல்லாதவர்களின் அடுத்த சாய்ஸ் செடிகள். இந்த இரண்டையும் ஏன் வளர்க்க வேண்டும் என்ன மாதிரியான தாவரங்கள், செடிகள் வளர்க்க வேண்டும் என்பதிலும் கொஞ்சம் அலசி ஆராயத்தான் வேண்டியிருக்கிறது. ஒரே நீர், ஒரே பாதுகாப்பு முறை... ஆனால், பலன் என்பது கிடைக்க வேண்டுமல்லவா. அதற்குத்தான் பயனுள்ள தாவரங்களைத் தேர்வுசெய்து வீட்டில் நடலாம். அதற்குரிய ஆலோசனைகளை அந்தத் துறை சார்ந்த வல்லுநர்களிடமே கேட்டோம். ஓய்வுபெற்ற வன…
-
- 1 reply
- 2.2k views
-
-
எலக்ட்ரிக் கார்கள் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. அந்த எலக்ட்ரிக் கார்களின் அடையாளமாக கருதப்படுவது எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனமாகும். இந்தியாவில் ஆட்டோமொபைல் மார்கெட் என்பது மிக பெரியதாகும். அவ்வாறு இருக்கையில் இந்தியாவில் டெஸ்லா கார்கள் அறிமுகம் செய்யப்படுமா செய்யப்படாதா என பல கேள்விகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ட்விட்டரில் யஸ்வந்த் ரெட்டி என்பவர் எலான் மஸ்கிடம் ‘இந்தியாவிற்கு எப்போது டெஸ்லா கார்கள் வருகிறது?' என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், ‘இந்தியாவில் இறக்குமதி வரியானது ரொம்ப கூடுதல் (100 சதவிகிதம்) என அறிகிறேன்' என பதிலளித்திருந்தார். 2014 முதலே இந்தியாவில் டெஸ்லா அறிமுகம் செய்யப்படும் என்ர பேச்சு இருந்து வந்தது. 2016 …
-
- 0 replies
- 456 views
-
-
விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல் கனடாவின் மிகப் பெரிய தொழில் எது? கோதுமை, கனோலா எண்ணெய் ஏற்றுமதி மரங்கள் மற்றும் காட்டுப் பொருட்கள் (forestry products) கனிமப் பொருளகள் (minerals) மாட்டிறைச்சி (beef) திராட்சை மது (wine) எஃகு (steel) இதில் எதுவுமே கனடாவின் மிகப் பெரிய தொழில் அன்று. இவை யாவும் பெரிய தொழில்கள்தான். ஆனால், கனடாவின் மிகப் பெரிய தொழில், வட ஆல்பர்டாவில் காடுகளை அழித்துத் தார் மண்ணிலிருந்து கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்வது. கனடா, உலகின் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் நான்காம் இடம் வகிக்கிறது. வளைகுடா நாடுகளைப்போல, எண்ணெய்யை நம்பியே காலம் தள்ளும் நாடு இல்லை கனடா. ஆனால், அதன் பொருளாதாரத்தி…
-
- 0 replies
- 419 views
-
-
டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 800 பேருக்கு வழக்கு டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த சுமார் 800 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுள்ளது. கடந்த வாரம் முழுவதும் நாடளாவிய ரீதியில் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பகுதிகள் பரிசோதிக்கப்பட்டதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். இவற்றில் 30 வீதமான பகுதிகள், நுளம்புகள் பெரும் வகையில் இருந்தமை கண்டறியப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பகுதிகளில் 7 வீதமான பகுதிகளிலிருந்து டெங்கு நுள…
-
- 0 replies
- 287 views
-
-
இயற்கை மீதான மனிதனின் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. அழைப்பு.! இயற்கை மீது மனிதகுலம் நடத்திவரும் போரை முடிவுக்குக் கொ்டுவருமாறு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்தள்ளது. இயற்கை மீதான மனித குலத்தின் தாக்குதல் தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் தற்கொலைத் தாக்குதலுக்கு ஈடானது எனவும் ஐ.நா. எச்சரித்துள்ளது. நியயோர்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று பங்கேற்றுப் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரெஸ் இவ்வாறு தெரிவித்தார். இயற்கை மீதான மனிதர்களின் தாக்குதல்களால் இயற்கைச் சமநிலை சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் இயற்கையைப் பேணி சமநிலையைச் சீர் செய்ய வேண்டும். அமெரிக்காவின் தலைமை இல்லாமல் காலநிலை அவசரநிலைக்கு தீர்வு காண வ…
-
- 0 replies
- 347 views
-
-
மரணத்திற்கு பிறகு இயற்கை நம் உடலுக்கு கொஞ்சமும் இரக்கம் காட்டப் போறதில்லை... ஷாக் ஆகாம படிங்க...! மனிதர்கள் வாழும்போது இயற்கையை படாதபாடு படுத்துகின்றனர், அதனால்தான் என்னவோ இயற்கை மரணத்திற்கு பிறகு மனித உடலுக்கு இரக்கம் காட்டுவதில்லை . அதிர்ஷ்டவசமாக, இயற்கையான சிதைவின் காலத்தை மரணத்தின் நவீன சடங்குகளால் மாற்றப்பட்டுள்ளன. எம்பால் செய்யப்படுவதன் மூலம் சிதைவு செயல்முறையை தாமதப்படுத்த நாம் தேர்வு செய்யலாம், அங்கு நமது உடல் திரவங்கள் பாதுகாப்புகளுடன் மாற்றப்படுகின்றன.தகனம் செய்யப்படும் போது நமது உடல் சாம்பலாக மாற 2,000 பாரன்ஹீட் வெப்பநிலையில் எரிக்கப்படுகிறது. இயற்கையானது நம்மை மீண்டும் பூமிக்கு உரமாக மாற்றும் செயல்முறை மிகவும் கடினமானது. தனக்கும் அழுகும் இற…
-
- 0 replies
- 489 views
-
-
குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்? Getty Images சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குள் சுமார் நான்கு நாட்கள் பயணத்திற்குப் பிறகு, ஒரு குட்டையை நெருங்கியிருந்தோம். அதற்கு முந்தைய நாள்தான், பேறுகாலத்தில் இருந்த யானையை நடுவில் விட்டு, முன்னும் பின்னுமாகப் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற யானை மந்தையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்றைய தினம், மதிய வெயில் சுளீரெனச் சுட்ட வேளையில் நிழலுக்காக அருகிலிருந்த ஒரு குட்டையை நெருங்கினோம். ஆனால், ஓசையின்றிப் பொறுமையாக வருமாறு உடனிருந்த வனக்காவலர் சைகை காட்டினார். அங்குள்ளது யார் என்பது எனக்கு முன்பாக அவருக்குப் புரிந்துவிட்டது. …
-
- 1 reply
- 325 views
-
-
மலேசியா உலகின் குப்பைத் தொட்டியல்ல - திருப்பி அனுப்பப்பட்ட கொள்கலன்கள். மலேசியா விழித்ததை அடுத்து கடந்த மூன்றாம் காலாண்டில் இருந்து, 150 பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை பிரித்தானியா உள்ளிட்ட 13 முக்கியமான செல்வந்த நாடுகளுக்கு மலேசியா திருப்பி அனுப்பியுள்ளது. மலேசியா சுற்றுசூழல் அமைச்சர் தமது நாடு உலகின் குப்பைத் தொட்டியல்ல என தெரிவித்ததே இந் நிலைக்கு காரணமாகும் . பிளாஸ்ரிக் கழிவுகள் அடங்கிய 42 கொள்கலன்களை இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சர் யியோ பீ யின் 2018 ஆம் ஆண்டில் சீனா பிளாஸ்ரிக் கழிவுகளை இறக்குமதி செய்யத் தடை விதித்ததிலிருந்து தேவையற்ற குப்பைகளின் கப்பல்கள் தென்கிழக்கு ஆசியாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்ற…
-
- 0 replies
- 375 views
-
-
கடந்த 66 மில்லியன் ஆண்டுகளிலேயே பூமியின் மிகவும் மோசமான நாள் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் திரட்டியுள்ளார்கள். மெக்ஸிகோ வளைகுடாவிலிருந்து குடைந்து எடுக்கப்பட்ட 130 மீட்டர் அளவுள்ள பாறையின் வாயிலாக அந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. ஒரு மிகப் பெரிய குறுங்கோள் பூமியில் வந்து விழுந்த சில நொடிகள் முதல் சில மணிநேரங்களில் இந்த படிமங்கள் உண்டாகின. அதாவது, உலகின் மிகப் பெரிய விலங்குகளாக கருதப்படும் டைனோசர்கள் அழிந்து, பாலூட்டிகளின் காலம் வளரத் தொடங்கியதே இந்த காலம். இந்த பேரழிவின் உயர் தெளிவுத்திறன் மிக்க தரவுகள் இங்கிலாந்து / அமெரிக்கா தலைமையிலான குழுவினரால் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. படத்தின் காப்புரிமைMAX ALEXANDER/B612…
-
- 0 replies
- 868 views
-
-
சதீஸ் ராமசாமி Living Things தி ஸ்பாட்டட் ராயல் Share கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும் 'தி ஸ்பாட்டட் ராயல்' என்ற வண்ணத்துப்பூச்சியை 1800களின் இறுதியில் ஆய்வாளர்கள் நீலகிரியில் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. யுனெஸ்கோவால் நாட்டின் பல்லுயிர் வளம் நிறைந்த முதல் உயிரச்சூழல் மண்டலமாக நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் அறிவிக்கப்பட்டது. அழிவின் விளிம்பில் உள்ள பல உயிரினங்களின் கடைசிப் புகலிடமாக இந்த நீலகிரி காடுகளே விளங்கி வருகின்றன. இந்தக…
-
- 0 replies
- 260 views
-
-
Woolly Mammoth: 70 ஆயிரம் கி.மீ நடந்த பனி யானைகளின் ராட்சத தந்தங்களின் ஆச்சர்ய வரலாறு பால் ரின்கன் பிபிசி செய்திகள் - அறிவியல் ஆசிரியர் 14 ஆகஸ்ட் 2021, 01:29 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JAMES HAVENS படக்குறிப்பு, ராட்சத தந்தங்களைக் கொண்ட வூலி மமூத் எனும் உயிரினம் வூலி மமூத் (Woolly Mammoth) என்கிற இன்றைய யானைகளுடன் தொடர்புடைய விலங்கினம், அதன் வாழ்நாளில் எவ்வளவு தூரம் பயணித்தது என்பதை அறிய, அவுயிரினத்தின் மிகப் பெரிய தந்தத்திற்குள் இருக்கும் வேதியியலை விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்துள்ளனர். பனி யுகத்தில் வா…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 343 views
-
-
சான் பிரான்சிஸ்கோவின் பிரமண்டா சுவரோவியத்தில் கிரெட்டா அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் பிரதான சாலை ஒன்றில் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க்கின் பிரம்மாண்ட ஓவியமொன்று வரையப்பட்டு வருகிறது. பதினைந்து வயதே ஆன கிரெட்டா துன்பெர்க் என்ற அந்தச் சிறுமி, மனிதர்களுடைய வாழ்க்கை முறையால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு தனியாளாகப் போராடத் தொடங்கியவர். ஸ்வீடனைச் சேர்ந்த இந்த இளம் மாணவிக்கு நோபல் பரிசு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த சுவரோவியக் கலைஞர் ஆந்த்ரேஸ் இக்லெசியாஸ். இவர் கோப்ரே என்ற புனைபெயரில் தனது ஓவியக் கலைப் பணியைத் தொடர்ந்து வருகிறார். இவர் தற்போது …
-
- 0 replies
- 334 views
-
-
ஐரோப்பாவை தாக்கிய... சக்தி வாய்ந்த புயல்கள்: 3 சிறுமிகள் உட்பட... குறைந்தது 13பேர் உயிரிழப்பு! சக்திவாய்ந்த புயல்கள் மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவின் பகுதிகளை தாக்கியதால், 3 சிறுமிகள் உட்பட குறைந்தது 13பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவிலும், பிரான்ஸ் தீவான கோர்சிகாவிலும் மரங்கள் விழுந்ததில் பெரும்பாலான இறப்புகள் பதிவாகியுள்ளன. கனமழை மற்றும் காற்று தீவில் உள்ள முகாம்களை நாசமாக்கியுள்ளது. அதே நேரத்தில் இத்தாலியின் வெனிஸிலும் கனிசமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. புயல்கள், கண்டத்தின் பெரும்பகுதி முழுவதும் பல வாரங்களாக வெப்ப அலை மற்றும் வறட்சியைத் தொடர்ந்து வருகின்றன. கோர்சிகாவில், மணிக்கு 224 கிமீ (140 மைல்) வேகத…
-
- 0 replies
- 322 views
-
-
கிளிநொச்சியின் கழிவகற்றல் பொறிமுறையில் தோல்வி – மு.தமிழ்ச்செல்வன் November 25, 2018 1 Min Read கழிவுகளை கொண்டு வந்து திறந்தவெளியில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். அதனை நாய்களும் காகங்களும் கொண்டு வந்து காணிக்குள்ளும், கிணற்றுக்குள்ளும் போடுகின்றன. இதனால் நாங்கள் நிறைய கஸ்ரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம், நாங்களும் பல தடவைகள் பிரதேச சபையினரிடம் சொல்லியும் அவர்கள் கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை என்றார் பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர். ஆனையிறவு உப்பளத்தைச் சேர்ந்த ஒரு உத்தியோகத்தர் சொன்னார் ஆனையிறவு பரந்தன் பிரதேசங்கள் ஒரு கைத்தொழில் வலயமாக உருவாக்கப்படவுள்ளது ஆனால் உமையாள்புரத்தில் கரைச்சி பிரதேச சபையினரால் கழிவு…
-
- 0 replies
- 521 views
-
-
மாட் மெக்ராத் பிபிசி படத்தின் காப்புரிமை Andy Lyons முன்னெப்போதும் இல்லாத வகையில் பூமியின் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் (கரியமில வாயு) அளவு இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்…
-
- 1 reply
- 366 views
-
-
27 MAR, 2024 | 11:18 AM உலகின் மிகப்பெரியதெனக் கருதப்படும் 26 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு (அனகொண்டா்) வேட்டையர்களால் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமேசான் காடுகளின் கடந்த பெப்ரவரி மாதம் இந்த மிகப்பெரிய பெண் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இந்த பெண் மலைப்பாம்புக்கு அன்னா ஜூலியா' என்று பெயரிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இவ்வகையான பாம்புகள் உலகின் மிகப்பெரிய பாம்புகளாகக் கருதப்படுகின்றன. https://www.virakesari.lk/article/179804
-
-
- 1 reply
- 158 views
- 1 follower
-
-
காலநிலை மாற்றத்துக்காக சர்வதேச ரீதியில் இலட்சக்கணக்கில் அணிதிரண்ட பாடசாலை மாணவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் காலநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டம் நேற்று உலகெங்கும் தொடங்கியது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல மாணவர்கள் இந்தப் புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். நியூயோர்க்கில் நடைபெறும் புவி வெப்பமயமாதலுக்கு எதிர் நடவடிக்கைகள் தொடர்பான பேரணியில் கலந்துகொள்ள கிட்டத்தட்ட 10 இலட்சம் பாடசாலை மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணிக்க உள்ளதாக செய்திகள் தெ…
-
- 7 replies
- 1k views
-
-
'காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப் போகுது பாரு' - இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல, அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான். kallanai cauvery ஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ, திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்குத் தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை, அது காலம் காலமாகப் பயணித்து, கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி அது கடலில் கலப்பது வீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப் போக…
-
- 0 replies
- 822 views
-
-
பட மூலாதாரம்,THE GRASSLANDS TRUST படக்குறிப்பு,இந்த விலங்கு வழக்கமான சாம்பல் நிற ஓநாய்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கட்டுரை தகவல் எழுதியவர், ஜான்வி மூலே பதவி, பிபிசி மராத்தி 21 ஜூன் 2024 சித்தேஷ் பிரம்மங்கர் புனே அருகே உள்ள மக்ரானா என்னும் நகருக்கு சென்ற போது, கொஞ்சம் வித்தியாசமான ஒரு மிருகத்தைப் பார்த்தார். “நாங்கள் அப்பகுதியில் நடந்து சென்றபோது அந்த மிருகத்தை பார்க்க நேர்ந்தது. அது ஓநாய் போல தோற்றமளித்தது, ஆனால் அது ஓநாயா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. அது ஓநாய்களின் வழக்கமான சாம்பல் நிறத்தில் இல்லை. ஆனால் ஒருவித மஞ்சள் நிறத்தில் இருந்தது. இந்த சம்பவம் 2014 இல் இருந்து வந்தது." அ…
-
- 0 replies
- 254 views
- 1 follower
-