இலக்கியமும் இசையும்
இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை
இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
204 topics in this forum
-
அனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா பதாகைFebruary 10, 2018 நரோபா ஊர்/ படிப்பு/ குடும்பம்/ வேலைப் பற்றி.. அனோஜன்: எங்கள் குடும்பத்தின் பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனக்கு ஓர் அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உண்டு. குடும்பத்தின் கடைசிப் பொடியன் நான்தான். பிறந்தது வளர்ந்தது யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலை எனும் ஊரில். எனினும் எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது, 1995-ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு நிகழ்ந்தது. கொடிகாமம், நல்லூர், கொக்குவில், சுண்டுக்குளி மீண்டும் அரியாலை என்று இடம்பெயர்வு காரணமாக எனது வாழ்க்கைச் சூழல் மாறிக்கொண்டே இருந்தது. எனது பதின்ம வயதின் இறுதியில் போர் ஓய்வுக்கு வந்தது. யாழ்ப்பாணத்தில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கொழும்பில் ம…
-
- 3 replies
- 1.3k views
-
-
தடம் இதழ் ஜெயமோகன் விகடன் தடம் இதழ் நிறுத்தப்பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். தமிழுக்கு முக்கியமான இதழாக இருந்தது என்பதே என் உளப்பதிவு. எந்த ஒரு சிற்றிதழும் அதற்கான ஒரு சிறிய சாய்வுடனேயே இருக்கும். விகடன் பேரிதழ் கூட அந்தச் சாய்வுகொண்டதுதான். தடமும் அச்சாய்வு கொண்டிருந்தது. பொதுவாக தமிழ் அறிவுலகில் உள்ள இடதுசாரி,தமிழ்த்தேசிய, திராவிட அரசியல் சாய்வு என அதை வகுத்திருந்தேன். ஆனால் தமிழிலக்கியத்தின் எல்லா குரல்களும் அதில் ஒலிக்க இடமளித்தது. தமிழில் இதுவரை வெளிவந்த இதழ்களிலேயே பார்வைக்கு அழகானது தடம்தான். பக்கவடிவமைப்பில் அது ஒர் உச்சம். நான் தொடர்ச்சியாக வாசித்த ஒரே இதழ். பெரும்பாலும் இதழ்களில் எழுதியுமிருக்கிறேன். நான் தடம் இதழில் எழுதிய கட்டுரைகள் முக்கி…
-
- 5 replies
- 2.2k views
-
-
புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கு வயது ஏறக்குறைய 40 ஆண்டுகளே. மிஞ்சிப் போனால் இன்னும் ஒரு 50, 60 ஆண்டுகள்தான் இப்போதைய தொடர்ச்சியில் அதனால் ஒரு தீவிர அலையாக இயங்க முடியும். அதற்குப் பின்பு அது மெலிந்து ஒடுங்கி விடக் கூடிய சூழலே உண்டு. பிறகு அது வெவ்வேறு மொழிகளில் வேறு விதமானதாகவே இயங்கும். ஆகவே மொத்தமாகப் பார்த்தால் தமிழில் அதனுடைய ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்குள்தான். இதற்குள்ளேயே அதனுடைய சாத்தியங்கள், சாதனைகள் எல்லாம். இந்த அவதானிப்பை வேறு யாரும் தங்களுடைய அவதானங்களின் வழியாகவும் வேறு தர்க்கத்தினாலும் மறுத்துரைக்கலாம். ‘இதென்ன வகையான சோதிடம் – ஆருடம்? யாரிந்தத் தீர்க்கதரிசி?’ என்று அவர்கள் நகைக்கவும் கூடும். ஆனால், ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ உருவாகி வந்த வழியை நோக்க…
-
- 0 replies
- 473 views
-
-
வரலாற்றை மீட்டுருவாக்கும் நாவல்கள் 2019 - ந.முருகேசபாண்டியன் · கட்டுரை பூமியில் மனித இருப்பு, கடந்த காலம் என்ற நினைவுகளின் தொகுப்பாக விரிந்து தொடர்கிறது. தலைமுறைகள்தோறும் செவிவழிக் கதைகளாகச் சொல்லப்படுகிற சம்பவங்கள், கடந்த காலத்தைப் பதிவாக்கிட முயலுகின்றன. நினைவுகள் ஒருபோதும் அழியாதவை என்ற நம்பிக்கையுடன், மனிதர்கள், சமகாலம் குறித்த பேச்சுகளை உருவாக்குகின்றனர். மனிதனைச் சமூகத்துடன் இணைக்கிற கண்ணியான மொழி, நினைவுவெளியில் பேச்சுகளையும், நடந்து முடிந்த நிகழ்வுககளின் வழியாகக் காத்திரமான அரசியலையும் சமூகத் தொடர்ச்சியையும் கட்டமைக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித வாழ்க்கையின் வரையறையையும் சமகாலத்தின் போக்குகளையும் கண்டறிந்து ஆட்சி செய்த அதிகார வர்க்கத…
-
- 4 replies
- 1.9k views
-
-
ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பயணம் - கானா பிரபா ஈழத்தில் போர்க்கால இலக்கியங்களின் ஆரம்பம் வீதி வழி நாடகங்களாகவும், பின்னர் இசை நாடகங்களாகவும், கதைகளாகவும், கவிதைகளாகவும், பரந்து விரிந்த போது இவற்றையெல்லாம் மீறிய கலைப்படைப்புகளாக வெளிவந்து ஆட்கொண்டவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள். இவற்றோடு வாழ்ந்து கழித்தவருக்கு பாடல்களைக் கேட்கும் போது எழும் உணர்வுக்கு வார்த்தை அலங்காரம் கட்ட முடியாது. ஈழத்தில் குறிப்பாக எண்பதுகள், தொண்ணூறுகளில் வாழத் தலைப்பட்டவருக்கு இம்மாதிரி அனுபவங்களைக் கேட்டவுடனேயே தம் கண் முன்னே தரிசிப்பர். அவ்வளவு உணர்வு பொருந்திய வரிகளைக் கொண்டமைந்து எமது வாழ்வியலோடு அந்தக் காலகட்டத்தில் கலந்து நின்றவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப்…
-
- 0 replies
- 985 views
-
-
சிறுகதையின் தோற்றம் 2.1 சிறுகதையின் தோற்றம் காலம் காலமாகக் கதை சொல்வதும், கதை கேட்பதும்எல்லாத் தேசங்களிலும், எல்லா மக்களிடையேயும்வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது. நாகரிகம்தோன்றுவதற்கு முன்பே, மக்கள் இனக் குழுக்களாக இயங்கிவந்த போது, ஓய்வு நேரங்களில் சக மனிதர்களிடம் தொடர்புகொள்வதற்கும், குடும்ப உறவினர்களுடன் பொழுதைக்கழிக்கவும் கதை கூறும் மரபைக் கையாண்டு வந்துள்ளனர்.கதை கூறுபவர் தன்னுடைய கற்பனை வளத்தாலும்,அனுபவத்தின் பயனாலும், தான் கண்டதையும் கேட்டதையும்விரித்துச் சொல்லி, கேட்போரின் பொழுது போக்கிற்குத்துணை நின்றனர். ‘ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜாவாம்’என்று சுவாரஸ்ய உணர்வோடு கதை தொடங்கும் மரபும்நம்மிடையே இருந்துள்ளது…
-
- 0 replies
- 13.1k views
-
-
தமிழ் வணிக எழுத்தின் தேவை | எழுத்தாளர் ஜெயமோகன் January 18, 2021 தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு அன்புள்ள ஜெ உங்கள் வலைப்பதிவில் பல பதிவுகளில் பொழுது போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளைக் கடந்து இலக்கிய வாசிப்பிற்கு வருவது பற்றி நீங்களும், பிறரும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். வாசிப்புத்தேடல் உள்ளவர்களைப் பொறுத்த அளவில் (என்னைப்போல் குறைவான வாசிப்பு உள்ளவர்களுக்கும் ) அது உண்மைதான். தேடல் உள்ளது. தொடர்கிறது. முன்பு விழுந்து விழுந்து படித்த பல படைப்புகள், மற்றும் சில எழுத்தாளர்கள் பக்கமே போக நாட்டமில்லை. இப்பதிவுகளில் சுஜாதா, பாலகுமாரன் பெயர்கள் அடிக்கடி (எள்ளலாக ) சுட்டிக்காண்பிக்கப் படுவதைப் பார்த்திருக்கிறேன்.ஏற்கனவே படித்துக் கடந்து வந்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கவரிமான் என்பது மான் இனம் அல்ல, அதன் உண்மையான பெயர் கவரிமா . அதாவது கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல. இமயமலையில் வாழும் மாடு வகையை சார்ந்தது, அதுவும் *எருமை மாடு* வகையைச் சார்ந்ததாகும். இதையே நமது மக்கள் #கவரிமான் என்று குழப்பிக் கொள்கிறார்கள். #கவரிமான் எங்கு வசிக்கிறது..? முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா..? எப்படித் தற்கொலை செய்து கொள்ளும்? *"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்* *உயிர்நீப்பர் மானம் வரின்.”* என்கிறார் திருவள்ளுவர் ( 969ஆம் குறளில் ) கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும்.... அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்தக் குறளுக்குக் கூறப…
-
- 0 replies
- 2.8k views
-
-
-
https://youtu.be/Hs77KPdoSWk மாதாந்தம் நடைபெறும் இந்த நேரலை நிகழச்சியை உலகெங்கும் உள்ள தமிழர்களின் நிகழ்வுகளை எடுத்து லண்டனில் இருந்து தொகுத்து வழங்குகிறார்கள்.
-
- 0 replies
- 799 views
- 1 follower
-
-
நேர்காணல்: ம. நவீன் “எதையும் வாசிக்காமல் சர்ச்சை என வருபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.” by வல்லினம் • October 7, 2018 • 1 Comment ம.நவீன், மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் பலருக்கும் அறிமுகமான பெயர். மலேசிய இலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு செல்ல தொடர்ந்து பல ஆக்ககரமான செயற்திட்டங்களை ‘வல்லினம்’ அமைப்பின் மூலமாக முன்னெடுக்கும் இலக்கியச் செயற்பாட்டாளர். தமிழ்ப்பள்ளி ஆசிரியரான இவர், இந்நாட்டின் இலக்கியத்துறையில் முக்கியமான படைப்பாளி. இன்றைய காலக்கட்டத்தில் தொடர்ந்து எவ்வித சமரசமும் இல்லாமதல் நவீன இலக்கியத்தில் தீவிரத்தன்மையுடன் செயல்பட்டு கொண்டிருப்பவர். அதனை நிரூப்பிக்கும் வகையில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தனது படைப்புகளை நூலாக்கி மலேசியத் தமிழ் இல…
-
- 0 replies
- 1.5k views
-
-
எழுதும் கதை - ஷோபாசக்தி [‘காலம்’ 61|62- பேராசிரியர் நுஃமான் சிறப்பிதழில் வெளியாகிய எனது கட்டுரை] 1997- 2024 காலப்பகுதியில் நான் எழுதிய மொத்தச் சிறுகதைகளும் தொகுப்பாக்கப்பட்டு ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது. அதற்கான இறுதிக்கட்டத் தொகுப்புப் பணிகளை இன்று இரவு சென்னையில் முடித்தேன். காலையில் இலங்கை செல்லவிருக்கிறேன். இந்த உற்சாகமான தருணத்தில், நான் எழுத வந்த கதையை வாசகத் தோழர்களிடம் பகிர்ந்துகொள்வது பொருத்தமாகயிருக்கும் என நம்புகிறேன். இலக்கியத்தின் மீதான ஈர்ப்பும் மதிப்பும் எனக்கு எந்த வயதில் ஏற்பட்டன என நிதானித்துச் சொல்ல முடியவில்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்தே கையில் கிடைப்பதை எல்லாம் படித்தவாறே இருக்கிறேன். ஜெயகாந்தனின் கதைகள் மற்றும் வீரகேசரிப் ப…
-
- 0 replies
- 194 views
-
-
மேடைவதைகள், சில நெறிகள். ஜெயமோகன் February 19, 2022 (Peter Saul ) இலக்கிய கூட்டங்கள் பற்றிய ஒரு செய்தியை அண்மையில் வாசித்தேன். மறைந்த குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை பற்றி அமுதசுரபி ஆசிரியரும் எழுத்தாளர் சங்கத்தலைவருமாக இருந்த விக்ரமன் ( வேம்பு) ஒரு கட்டுரையில் குறிப்பிடும்போது அவர் தமிழின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவர் என்றார். பிறரும் அதை பதிவு செய்திருக்கிறார்கள். கல்கி மறைந்தபோது எஸ்.ஏ.பி. ஆற்றிய உரை தமிழின் தலைசிறந்த உரைகளில் ஒன்று என்று அவருடைய மகன் ராஜேந்திரன் தன் குறிப்பொன்றில் பதிவு செய்திருக்கிறார். விவேகானந்தர், பகவத் கீதை இரண்டிலும் பெரும் ஈடுபாடு கொண்டவராகிய எஸ்.ஏ.பி. விவேகானந்தர் நூற்றாண்டின்போது தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சென்…
-
- 0 replies
- 545 views
-
-
படைப்பாளியைச் சுரண்டிக் கொழுக்கும் பதிப்பகத்தார்கள்! -எழில் முத்து தமிழ்நாட்டில் பதிப்பகங்களுக்கு பஞ்சம் இல்லை. ஆனால், அதில் நேர்மையாக எழுத்தாளனுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு தான் பஞ்சமோ பஞ்சம்! உச்சபட்ச பித்தலாட்டமும், சுரண்டலும் நிலவும் துறைகளில் பதிப்பகத் துறை முக்கியமானது. சொன்னால் நம்பமாட்டீர்கள், பல அறிவாளிகளை எல்லாம் அதோகதிக்கு ஆளாகியுள்ளார்கள்! நல்ல வேளையாக எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு நேர்மையான மீனாட்சி புத்தக நிலையத்தார் அமைந்தனர்! இந்த பதிப்பகம் வருடம்தோறும் ஜே.கேவுக்கு லட்சக்கணக்கில் ராயல்டி கொடுத்தனர். அவர் இறந்த பிறகும் விற்பனையில் 15% ராயல்டி இன்றும் தந்து வருகின்றனர். ஆனால், பிரபல எழுத்தாளர் சுஜாதாவிற்கு அப்படி அமையவில்லை.ம…
-
- 0 replies
- 450 views
-
-
இலக்கிய சிகரம் பேட்டி - பகுதி 1 2021 டிசம்பரில் இலக்கிய சிகரம் எனும் இதழில் வெளியான பேட்டி இது. நான்கு பகுதிகளாக வெளியிடப் போகிறேன். முதற் பகுதி இங்கே: சொல்வனம், இலக்கிய சிகரம் பேட்டி - ஆர். அபிலாஷ் உங்களைப் பற்றி அறிமுகக் குறிப்பு தர முடியுமா? பதில்: என் அப்பாவுக்கு சொந்த ஊர் நாகர் கோயில் அருகிலுள்ள பத்மநாபபுரம் எனும் சிற்றூர். அம்மாவுக்கு விளவங்கோடு தாலுகாவில் உள்ள காஞ்சாம்புறத்தில் உள்ள, கடலை ஒட்டிய, வைக்கலூர் எனும் பகுதி. நான் பள்ளிக் கல்வி பயின்றது தக்கலையில். கல்லூரிக் கல்வியில் இளங்கலையை நாகர்கோயிலில் உள்ள ஸ்காட் கிறித்துவக் கல்லூரியிலும்,…
-
- 2 replies
- 724 views
- 1 follower
-
-
படைப்பே முதல். படைப்பாளியே முதல்வன் என்று பேச நமது விமர்சகர்கள் முன்வரவில்லை: தெளிவத்தை ஜோசப் – அகழ் இலங்கையின் மலையக இலக்கிய முன்னோடி என்று ‘தெளிவத்தை ஜோசப்பை’ தயக்கமின்றிச் சொல்லலாம். மலையக மக்களின் வாழ்வியலை பிரச்சாரம் இன்றி முற்போக்கு அம்சத்துடன் எழுதியவர் அவர். மலையக சமூகத்தில் ஊடுருவியிருந்த சுரண்டலும், ஒடுக்குமுறையும் அவரது புனைவுலகத்தின் அடிநாதமாக ஒலித்தன. அவரது காதாமந்தர்கள் பெரும் தத்தளிப்பு சிக்கல் கொண்டவர்கள் அல்ல. மாறாக எளிய அன்றாட பிரச்சினைகளில் சிக்கி அழுத்தப்படுபவர்கள். தெளிவத்தை ஜோசப்பின் படைப்புலகம் என்பது எளிய மனிதர்களின் அன்றாடச் சுமையின் துயரம்தான். சிலசமயம் அந்தத் துயரில் ஒளி ஒரு கீற்றாக வெளிப்படுகிறது. எந்தவித கட்சி சார்போ, கோட்பாடு சார்ந்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
இமையம் எழுதிய செல்லாத பணம் என்ற நாவலுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 1964ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதியன்று பிறந்தார் இவர். பெற்றோர் சூட்டிய பெயர் அண்ணாமலை. தற்போது அரசுப் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். 'கோவேறு கழுதைகள்' என்ற நாவலின் மூலம் தமிழ் எழுத்துலகில் பரவலாக அறியப்பட்ட இமையம், 'கோவேறு கழுதைகள்' , 'ஆறுமுகம்', 'எங் கதெ', 'செடல்', 'செல்லாத பணம்' ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 'மண் பாரம்', 'கொலைச்சேவல்', 'சாவு சோறு', 'வீடியோ மாரியம்மன்', 'நன்மாறன் கோட்டைக் கதை' ஆகிய தொகுப்புகளாக வெளியாகியிருக்கின்றன. …
-
- 0 replies
- 515 views
-
-
இசையில் நனைந்த லண்டன்… சிம்பொனி அரங்கேற்றிய இளையராஜா 9 Mar 2025, 7:34 AM லண்டனில் இசையமைப்பாளர் இளையராஜா தனது நீண்ட நாள் கனவான சிம்பொனியை இந்திய நேரப்படி இன்று (மார்ச் 9) நள்ளிரவு 12.30 மணிக்கு அரங்கேற்றினார். கடந்த ஆண்டு, தான் சிம்பொனி எழுதி வருவதாகவும் விரைவில் அதனை அரங்கேற்ற உள்ளதாகவும் இளையராஜா தனது ரசிகர்களுக்கு அறிவித்தார். இதற்காக இளையராஜா முழு மூச்சில் தீவிரமாக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், லண்டனில் சிம்பொனி அரங்கேற்றுவதற்கு முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அரசியல் மற்றும…
-
- 1 reply
- 194 views
-
-
எனது இலக்கியம் அரசியல் சார்ந்ததுதான் March 2, 2025 ஷோபாசக்தி உயிர்மை பிப்ரவரி 2025 இதழில் வெளியாகிய எனது நேர்காணல். சந்திப்பு: சோ.விஜயகுமார் ஒரு நீண்ட புலம்பெயர் வாழ்வில் இருக்கிறீர்கள். இதில் ஈழத்தோடும் தமிழகத்தோடும் உங்களுக்கு இருக்கக்கூடிய இன்றைய உணர்வுகளை எப்படிக் காண்கிறீர்கள்? இலங்கையில் யுத்தம் முனைப்பாக ஆரம்பிப்பதற்கு முன்பே இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர ஆரம்பித்துவிட்டால் கூட, 1983-ஆம் ஆண்டு யுத்தம் உக்கிரமான பொழுதில்தான் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக, குடும்பங்களாக இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் அகதிகளாகச் சென்றனர். அந்தச் சூழலில்கூட எக்காரணம் கொண்டும் தாய்நாட்டை விட்டு வெளியேறுவது இல்லை என்ற தீர்க்கமான முடிவோடு இருந்தவன் நான். நமது தாய்நாட்டில…
-
- 0 replies
- 252 views
-
-
மகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன் [கோ சாரங்கபாணி] [ஈரோட்டில் 10,11-8-2019ல் நிகழ்ந்த சிறுகதை அரங்கில் பேசப்பட்ட கதைகள் பற்றிய கட்டுரை] தமிழக வரலாற்றில் புலம்பெயர்வு தொல்நெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது. வணிகத்தின் பொருட்டு தென்கிழக்கு ஆசியத் தீவுகளுக்கு பயணித்ததாக இருக்கலாம். அல்லது தேசாந்திரியாக நிலமெங்கும் அலைந்து திரிந்ததாகவும் இருக்கலாம் அல்லது போருக்காக மண் நீங்கியதாகவும் இருக்கலாம். செல்லும் இடங்களில் தங்கள் பூர்வீக வாழ்வின் எச்சங்களை எப்போதும் விட்டு வந்தார்கள். பண்டிகைகளாக, சிற்பங்களாக, ஏதோ ஒரு சடங்காக பண்பாட்டு நினைவு பேணப்பட்டு வந்தது. மிகப்பெரிய அளவிலான புலம் பெயர்வு என்பது காலனிய காலகட்டத்தில் நிகழ…
-
- 0 replies
- 792 views
-
-
ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை “கலாசாரமானது ஆதிக்கத்தன்மையுடையதாக இருக்கும்போது, அது வன்முறையானதாக இருப்பது மட்டுமன்றி அனைத்து உறவுகளையும் அதிகாரத்திற்கான போரட்டங்களாகவும் கட்டமைக்கும்” - பெல் ஹூக்ஸ் The Will to Change: Men, Masculinity, and Love “நாம் ஆற்றல் மிக்கவர்கள். ஏனெனில் வன்முறையிலிருந்து வெளியேறி தொடர்ந்து வாழ்வதென்பதே நமது ஆற்றலுக்கு சாட்சிதான். இதன் மொத்த சாராம்சமும் முற்றுமுழுதாக நமது ஆற்றலையும் வளர்ச்சியையும் பற்றியது” - ஓட்ரி லோர்ட் https://www.blackpast.org/african-american-history/1982-audre-lorde-learning-60s/ பெண்ணிய அக்கறையாளர்கள் இணைந்து தயாரித்த கண்டனக் கூட்டறி…
-
-
- 12 replies
- 1.2k views
-
-
மலேசியா சிங்கப்பூரில் தமிழ்நூல்களை விற்பனைசெய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழாசியா என்னும் தளத்தின் தொடக்கவிழாவுக்காக ஆற்றிய வாழ்த்துரை. https://tamilasiabooks.com/ https://www.jeyamohan.in/145363/
-
- 0 replies
- 802 views
-
-
எந்த ஒரு வார்த்தையை வாசிக்கும் பொழுதும் வலமிருந்து இடமாகவோ அல்லது இடம் இருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும் எழுத்துக்கள் மாறாமல் ஒன்றுபோல் வார்த்தைகளை அமைத்துப் பாட்டை இயற்றியுள்ளார் ஒரு பாடலாசிரியர்.
-
- 0 replies
- 592 views
-
-
அகதிகளுக்கான பைபிளை எழுதுகிறேன் - ஷோபாசக்தி நேர்காணல் இருபது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தும் எழுத்தில் இயங்கி வரும் நீங்கள்; தற்காலஇலக்கியப் போக்குகளால் சலிப்படைகிறீர்களா? சலிப்பு என்பதற்கு என் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் இடமே கிடையாது. சலிப்பையோ, விரக்தியையோ, உளச் சோம்பலையோ ஒருபோதுமே நான் உணர்ந்ததில்லை. கற்பனைத் திறன் உள்ளவனுடைய வாழ்க்கை வேறு. உலகம் வேறு. அவனுக்கான ஒழுங்குகளும் பழக்கவழக்கங்களும் ஒழுக்கமும் வேறு. நான் அங்கேயேதான் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறேன். பலரால் மகிழ்ச்சியை அடையத்தான் முடியும். எனக்கு அதை உருவாக்கவே தெரியும். மகிழ்ச்சி என் சுண்டுவிரல் அசைவுக்காகக் காத்திருக்கும் நாய்க்குட்டி. எனவே வாழ்வின் எந்தக் கட்டத்திலும் என்னை எதிர்மறை …
-
- 1 reply
- 729 views
-
-
புதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா பதாகைOctober 6, 2020 (புதிய குரல்கள் பகுதியில் பொதுவாக எழுத்தாளரின் விரிவான நேர்காணல் மற்றும் அவருடைய ஆக்கத்தை பற்றிய விமர்சன கட்டுரை இடம் பெறும். இம்முறை அவைத்தநித்தநியாக இல்லாமல் எழுத்தாளருடன் உரையாடிப் பெற்ற அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் முதல் பகுதியிலும், கட்டுரை இரண்டாம் பகுதியிலும் இடம்பெறும் வகையில் ஒரே பதிவாக வெளிவருகிறது. கேள்விகளுக்கு பதில் அனுப்பிய எழுத்தாளர் சாதனாவிற்கு நன்றி) எழுத்தாளர் சாதனா – ஒரு அறிமுகக் குறிப்பு கே: உங்களைப் பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுதீவில் ஒரு குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக நான் பிறந்தேன். அப்பா ஒரு வாகனச் சாரத…
-
- 0 replies
- 814 views
-