Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியமும் இசையும்

இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை

பதிவாளர் கவனத்திற்கு!

இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி பிரிட்டனில் தமிழர் வாழ்க்கை என்னவாக இருக்கிறது? பலருடன் உரையாடினேன் என்றாலும், ஒரு பேட்டி விசேஷமாக எனக்குத் தோன்றியது. கவிஞர், சிறுகதையாசிரியர், ஊடகவியலாளர் எனப் பன்முக ஆளுமையான இளைய அப்துல்லாஹ்வுடனான உரையாடல்தான் அது. முல்லைத்தீவில் பிறந்த ஸ்ரீபாலமுருகன் பின்னாளில் எப்படி இளைய அப்துல்லாஹ் ஆனார் என்ற அவருடைய இளமைக் கால இலங்கைக் கதையே ஒரு நாவலுக்கான களம். அவர் ஐரோப்பா வந்து சேர்ந்தது, பிரிட்டனைத் தன்னுடைய நாடாக்கிக்கொண்டது, இங்கு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இன்றளவும் அவர் பட்டுக்கொண்டிருக்கும் பாடுகள் யாவையும் அவர் வாய்வழி கேட்கும்போது சுவாரஸ்யமாக்கிவிடுவது அவருடைய கதையாட…

  2. இமையத்திற்கு இயல் விருது! தமிழ் இலக்கியத் தோட்டம், 2018-ஆம் ஆண்டிற்கான வாழ் நாள் சாதனையாளர் இயல் விருதை, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர் இமையத்திற்கு அறிவித்துள்ளது. “தமிழில் இதற்கு இணையாக நாவல் இல்லை” என்று அவரது முதல் நாவலான “கோவேறுக் கழுதைகள்” நூலை தமிழின் முன்னோடி எழுத்தாளர் திரு. சுந்தர ராமசாமி விமர்சித்திருக்கிறார். இந்நாவல் Beasts of Burden என ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. மனித மனங்களின் பல்வேறுபட்ட மனநிலைகளை தன் ஒவ்வொரு புனைவிலும் காத்திரமாக பதிவுசெய்துவரும் இமையம் தமிழ் படைப்பாளிகளில் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும், சாதி ஆதிக்க மனோபாவத்தை தொடர்ந்து விமர்சித்து வரும் ஒருவராகவும் விளங்குகிறார். இவருடைய…

  3. இழப்பதற்கும் அடைவதற்கும் ஏதுமற்ற கலைஞன் பிரபஞ்சன் நேற்றிரவு முழுக்க விடாமல் மழைபெய்து கொண்டேயிருந்தது. தூக்கம் வராத அந்த மழை இரவில் நினைவுகள், எழுத்தாளர் பிரபஞ்சனையே நிலை கொள்ளாமல் சுழன்று கொண்டிருந்தது. அவருக்கு சென்னை பீட்டர்ஸ் காலனியில் ஒதுக்கப்பட்ட வீடொன்று உண்டு. மூன்றாவது மாடி. இப்படியான மழைநாளில் முழுவீடும் ஒழுகும். தன் வாழ்நாளெல்லாம் தேடித்தேடி சேகரித்த பல அரிய புத்தகங்கள் மழையில் நனையும். ஒழுகாத இடம் தேடி, படுக்கவும் இடமின்றி, ஒரு தமிழ் எழுத்தாளனின் பல ஆண்டு கால அலைச்சல் யாராலும் கண்டு கொள்ளப்படாமலேயே போகிறது. போகட்டும். இதனாலெல்லாம் துவண்டுபோகாத படைப்புமனம் வாய்க்கப் பெற்ற படைப்பாளியாகத்தான் நான் பிரபஞ்சனைப் பார்க்கிறேன் இருபதாண்டுகளுக்கு முன் பாண்டிச…

  4. ஈழத்து எழுத்துப்பரப்பில் புதியவர்களின் படைப்பு மொழி-க.சட்டநாதன் நல்ல எழுத்தை-படைப்பைப் படித்தவுடன் இது நல்லது என்பதைத் தேர்ந்த விமர்சகன் இனங்கண்டு கொள்கின்றான். நல்ல வாசகனுக்கும் இந்த நுண்ணிய உணர்திறன் உண்டு. இதனை நாலுபேர் தெரிய எடுத்துரைப்பதும் விமர்சிப்பதும் விமர்சகனது கடமையாகும். ஆனால் இங்கு நமது இலக்கியச்சுழலில் இத்தகைய போக்கு மிக அருந்தலாகவே நடைபெறுகின்றது. இது கண்டனத்துக்குரியதும் கவலைதருகின்ற விடயமுமானது. இங்கிருக்கும் ஒரு சில விமர்சகர்கள் சூழல் முழுவதையுமே குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர்கள் போல -வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், மொத்த இலக்கியச்சூழலையும் தன்னுடைய கட்டுப் பாட்டில் வைத்திருப்பதற்கான உணர்வுடன் -ஒருவகை மிதப்புடன் நடந்து கொள்கின்றனர். தன்னை எ…

  5. பிரபாகரன் என்ன சித்தனா? தெய்வமா? – நேர்காணல் -தமிழ்க்கவி இதுவரை படித்தவர்கள்: 351 நான்வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் பரந்தனைக் கடந்து கிளிநொச்சியை விரைவாக அண்மித்து நீதிமன்ற நிறுத்தத்தில் என்னை இறக்கி விட்டுத் தனது பயணத்தைக் தொடர்ந்தது. கிளிநொச்சிக்கும் எனக்கும் ஒரு பரமார்த்தமான தொடுகைகள் முன்பு இருந்தன. சிறுவயதில் இருந்தே எனது தந்தையார் இங்கு கடமையாற்றியதால் ஏற்பட்டதாலும் இங்கு நெற்செய்கை வயல் இருந்தகாரணத்தினாலும் அது ஏற்பட்டது. நான் கிளிநொச்சியில் இறங்கியபொழுது அந்தக்காலை வேளையிலும் வெய்யில் வெளுத்துக்கட்டியது. வியர்வையில் உடல் தெப்பமாக நனைந்து விட்டதாலும் குறித்த நேரத்திற்கு முதலே வந்து விட்ட காரணத்தினாலும் நீதிமன்ற வளாகத்தின் அருகே…

  6. சிறுகதையின் தோற்றம் 2.1 சிறுகதையின் தோற்றம் காலம் காலமாகக் கதை சொல்வதும், கதை கேட்பதும்எல்லாத் தேசங்களிலும், எல்லா மக்களிடையேயும்வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது. நாகரிகம்தோன்றுவதற்கு முன்பே, மக்கள் இனக் குழுக்களாக இயங்கிவந்த போது, ஓய்வு நேரங்களில் சக மனிதர்களிடம் தொடர்புகொள்வதற்கும், குடும்ப உறவினர்களுடன் பொழுதைக்கழிக்கவும் கதை கூறும் மரபைக் கையாண்டு வந்துள்ளனர்.கதை கூறுபவர் தன்னுடைய கற்பனை வளத்தாலும்,அனுபவத்தின் பயனாலும், தான் கண்டதையும் கேட்டதையும்விரித்துச் சொல்லி, கேட்போரின் பொழுது போக்கிற்குத்துணை நின்றனர். ‘ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜாவாம்’என்று சுவாரஸ்ய உணர்வோடு கதை தொடங்கும் மரபும்நம்மிடையே இருந்துள்ளது…

    • 0 replies
    • 13.1k views
  7. தமிழ் மின்னிலக்கியம் - அலைபேசி எழுத்தும் கிண்டில் வாசிப்பும் சுரேஷ் பிரதீப் எழுதுவதற்கான உந்துதல் எந்தச் சூழலிலும் வரலாம் என்ற நம்பிக்கை பதின்மத்திலேயே என்னுள் ஆழமாக பதிந்துவிட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ஒரு கதையை கணித குறிப்பேட்டின் கடைசி மூன்று பக்கங்களில் எழுதினேன். அதைப்படித்த நண்பனொருவன் என்னை அப்போது எழுத்தாளன் என்று ஒப்புக் கொண்டான். வகுப்பு பெண்களிடம் அந்தக் கதையை காட்டப்போவதாக அடிக்கடி பாவனையாக மிரட்டுவான். நானும் "காட்டிடாதடா" என்பது போல பதறுவேன். இருந்தாலும் உள்ளுக்குள் அந்தக்கதையை எங்கள் வகுப்பிலேயே அதிகமாக பெண் தோழிகளுடைய அவன் கொண்டுபோய் அவர்களிடம் காண்பிக்கமாட்டானா என்றிருக்கும். பள்ளி முடியும் வரை அவன் அந்தக் கதையை காண்பிக்கவில்லை. கல…

  8. படத்தின் காப்புரிமை எஸ்.ராமகிருஷ்ணன் /Facebook இந்த ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதி 2015ல் வெளியான ‘சஞ்சாரம்’ நாவலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பக்கிரி என்ற பாத்திரத்தின் மூலம் நகரும் இந்த நாவல் நாதஸ்வர இசை, நாதஸ்வர இசைக் கலைஞர்களை அடிப்படையாகக் கொண்டது. பெரிதும் அவர்களது துயரம் குறித்துப் பேசுகிறது. "நாதஸ்வர இசைக் கலைஞ்களில் தஞ்சை மண்டலத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள் பேசப்படும் அளவுக்கு கோவில்பட்டி போன்ற கரிசல் பகுதியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள் பேசப்படவில்லை. …

  9. ஈழத்தில் இலக்கியமே இல்லை. இரண்டு மூன்றுபேர் போர்க் கதைகளையும் அதைச் சுற்றிய வலி அனுபவங்களையும் டெம்லேட் மெட்டீரியலாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குள் சண்டையென்றால் சிரிப்பு வருகிறது. தமிழ்நாட்டில் இலக்கியச் சண்டை நடப்பதற்கு வலுவான பல காரணங்கள் உண்டு. புதுமைப்பித்தன் எழுதிய முதல் கதையிலிருந்து இலக்கியத்திற்கான தரம் குறித்த சண்டை சர்ச்சைகளில் இறங்கலாம். பிறகு எழுதிய ஒவ்வொருவரும் உலகத்தரமான கதைசொல்லிகள். மாஸ்டர்கள். ஆதவன் கதைகளை ஆராய்ந்தால் ஒரு பொதுப்புத்தி தமிழன் எழுதிய கதைகள்போல இருக்காது. ஆதவன் எண்பதுகளில் வாழ்ந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டுக்காரன். பா. சிங்காரம் போர்க் கதைகளை பயணக் கட்டுரை சுவாரஸியத்தோடு எழுதினான். தஞ்சை ப்ரகாஷ் முற்போக்கு எழுத்தி…

  10. சட்டநாதன் சிறுகதைகள்-ஈழத்து இலக்கிய ஆளுமைகள்-கட்டுரை-ஜிஃப்ரி ஹாஸன் சட்டநாதன் சிறுகதைகள்: பணிய மறுப்பவர்களின் குரல்கள் ஈழத்தில் எழுபதுகளில் உருவான எழுத்தாளர் சட்டநாதன். ஈழ இலக்கியத்தில் முற்போக்கு இலக்கியத்தின் தீவிர அலை ஓரளவு தணிந்து தேசிய இனப்பிரச்சினை சார்ந்த பதட்டங்கள் இலக்கியத்தினுள் ஊடுருவத் தொடங்கிய காலகட்டத்தின் பிரதிநிதி அவர். முற்போக்கு இலக்கியத்தில் முன்னிறுத்தப்பட்ட மார்க்ஸிய சித்தாந்தக் கருத்துகள் அவரது கதைகளில் ஆங்காங்கே போகிற போக்கில் உதிர்க்கப்பட்டிருப்பதைக் காண முடியும். உதாரணமாக உறவுகள் கதையில் ”சதா முக்கோணக் காதல்கதைகளையே எழுதி வந்த அவள் இப்போதெல்லாம் மனிதன் பால் அதீத நேயம் பூண்டு வர்க்கநலன் பேணும் எழுத்தை வடிப்பதென்றால்..” என்ற வரி…

  11. தோற்றுப் போதலின் அழகியல் - உமையாழ் மிலன் குந்தரேவின் சிறுகதையான The Apologizer-யை முன்வைத்து... எல்லோரையும் முந்திக் கொண்டு தமிழில், உலக இலக்கிய மொழிபெயர்ப்பு நிகழ்வது பற்றி முகநூலில் எழுதி இருந்தேன். அதை வாசித்த நண்பி, “ஆனால் மிலன் குந்தரேவின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவே இல்லையே” என பதில் இட்டிருந்தாள். அது பற்றி அப்போது நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பின்னர் மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி, குந்தரேயின் The Unbearable Lightness Of Beingயை மொழிபெயர்க்க காலச்சுவடு கண்ணனிடம் மொழிபெயர்ப்பு உரிமையை வாங்கச் சொல்லி மன்றாடுவதாகச் சொன்னபோதுதான் அந்த நாவலே இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது உறைத்தது. எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ராஜகோபாலு…

  12. நேர்காணல்: ம. நவீன் “எதையும் வாசிக்காமல் சர்ச்சை என வருபவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.” by வல்லினம் • October 7, 2018 • 1 Comment ம.நவீன், மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் பலருக்கும் அறிமுகமான பெயர். மலேசிய இலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு செல்ல தொடர்ந்து பல ஆக்ககரமான செயற்திட்டங்களை ‘வல்லினம்’ அமைப்பின் மூலமாக முன்னெடுக்கும் இலக்கியச் செயற்பாட்டாளர். தமிழ்ப்பள்ளி ஆசிரியரான இவர், இந்நாட்டின் இலக்கியத்துறையில் முக்கியமான படைப்பாளி. இன்றைய காலக்கட்டத்தில் தொடர்ந்து எவ்வித சமரசமும் இல்லாமதல் நவீன இலக்கியத்தில் தீவிரத்தன்மையுடன் செயல்பட்டு கொண்டிருப்பவர். அதனை நிரூப்பிக்கும் வகையில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தனது படைப்புகளை நூலாக்கி மலேசியத் தமிழ் இல…

  13. பாலுணர்வை அறிதலும் எழுதுதலும் - ஜெயமோகன் ஹாவ்லக் எல்லிஸ் சமீபத்தில் ஓர் இளம் எழுத்தாளர் எழுதிய நாவலை வாசித்தேன். பாலியல் நிகழ்ச்சிகளை விரிவாக எழுதியிருந்தார். ‘துணிந்து’ எழுதியிருப்பதாக அவர் எண்ணிக்கொண்டிருந்திருக்கலாம். இதற்குமுன் இல்லாதவகையில் எழுதியிருப்பதாக பெருமிதம் கொண்டிருக்கவும்கூடும். இளம்வாசகர்கள் சிலர் அதை வாசித்து “ஆகா!” போட்டிருக்கலாம். அப்படி ஒருவர் கவனம் பெற்றுவிட்டால் பலர் உருவாகி வருகிறார்கள். தமிழ்நாட்டில் பாலியல்வரட்சி மிகுதி. ஆகவே என்றுமே பாலியலெழுத்துக்கு வாசகர்கள் அதிகம். அத்துடன் பெரும்பாலான வாசகர்கள் பாலுறவு மட்டுமே வாழ்க்கை என எண்ணிக்கொண்டிருக்கும் முதிரா இளமையில் வாசிக்க வருகிறார்கள். அவர்கள் இவ்வகை எழுத்துக்களையே தெரிவுசெய்கி…

  14. எந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன் இதழ்கள், இளைஞர் முழக்கம் September 15, 2018 இளைஞர் மு‍ழக்கம் தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியமான கவனத்தைப் பெற்ற ‘உப்பு நீர் முதலை’, ‘ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்’, ‘லாகிரி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், ‘உரோமம்’ நாவல் மற்றும் பாராட்டத்தக்க பல்வேறு சிறுகதைகளையும் எழுதிய நரன் அவர்களுடன் உரையாடியதிலிருந்து… நீங்கள் பிறந்து வளர்ந்த சூழல், இலக்கியத்துடன் எப்படி அறிமுகம், நவீன கவிதைக்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்? நான் பிறந்தது விருதுநகரில். என் அம்மா வீட்டு வழியினர் அறுபது ஆண்டுகளாக விருதுநகரில் பருப்பு மற்றும் எண்ணெய் மில்கள் அமைத்துக் கொடுப்பதும், அது சார்ந்த வணிகத்திலும் இருந்தார்கள். …

  15. அம்பாரி யானை by ஜா.ராஜகோபாலன் • September 11, 2018 9௦ களின் தொடக்கத்தில் நவீன தமிழ் இலக்கியம் வாசிக்கத் தொடங்கிய எனக்கு பத்தாண்டுகள் கடந்த பின் சில கேள்விகள் இருந்தன. தமிழ் எழுத்தாளர்களை பொதுவாக வகைப்படுத்தும்போது வணிக எழுத்தாளர்கள், இலக்கிய எழுத்தாளர்கள் எனச் சொல்கிறோம். இலக்கிய எழுத்தாளர்களுக்குள் வந்தால் அதிலுமே சில பிரிவுகள் இருக்கின்றன. எழுத்தின் வகையாலன்றி பேசுபொருளின் அடிப்படையில் நான் வகுத்துக் கொண்ட விதத்தால் இப்படி சொல்கிறேன். இலக்கிய எழுத்தில் பெரிதும் புகழப்பட்ட எழுத்துகளில் பெரும்பான்மையும் உறவுச் சிக்கல்களை, விலக்கமும் நெருக்கமும் அச்சுகளாகி ஆடும் மானிட உறவுகளின் ஆட்டங்களை, அதன் ரகசியங்களைப் பேசியவையாகவே இருந்தன. வெகு குறைவாக அல்லது வெக…

  16. “கலை, இலக்கியம் என்பனவற்றின் இன்றியமையாத பண்புகளிலொன்று மனித நேய உணர்வாகும். இவற்றைப் படைக்கும் கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோர் தம்மளவிலும் இவ்வுணர்வை உடையவர்களாகவே திகழ்வர் எனச்சமுதாயம் எதிர்பார்ப்பது இயற்கையே. ஆயினும் பெரும்பான்மையான கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோரிடம் இவ்வுணர்வை நிறைவாக நாம் கண்டுகொள்ள முடிவதில்லை. ஓரு சிலரிடம் அதனை நாம் முழுமையாக அவதானிக்க முடிகிறது. அத்தகைய மிகச் சிலருள் ஒருவர் நம் மத்தியில் வாழும் இலக்கியவாதி டொமினிக் ஜீவா.” என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கலாநிதி சு.வித்தியானந்தன் புகழ்ந்துரைத்துள்ளார். டொமினிக் ஜீவா, ஒரு படிக்காத மேதை, உன்னத மனிதாபிமானி முற்போக்கு சிந்தனையாளர், தலை சிறந்த பத்திரிக்கையாளர், சிறந்த எழுத்தாளர், …

    • 0 replies
    • 912 views
  17. பிரமிள் இளங்கோ-டிசே 1. ஈழத்திலக்கியம் என வரும்போது தொடர்ந்து வாசிக்கவும் உரையாடவும் வேண்டியவர்களென நான் மு.தளையசிங்கத்தையும் (மு.த), எஸ்.பொன்னுத்துரையையும் (எஸ்.பொ) முன்மொழிந்து வருகின்றவன் . இவர்கள் இருவரையும் விட இன்னொருவரையும் இதில் சேர்க்கலாமோ, விடலாமோ என்கின்ற தயக்கங்கள் எப்போதும் எனக்குண்டு. அது தருமு சிவராம் என்கின்ற பிரமிள். 57 வயதுகள் வரை வாழ்ந்த பிரமிளின் 30 வருடங்கள் இலங்கையிலே கழிந்திருக்கின்றன என வரும்போது அவரை நம்மவராகவே கொள்ளமுடியும். ஒருவகையில் பார்த்தால் அவருடைய மேதமை அவருடைய 20களிலேயே - நிகழ்ந்துமிருக்கின்றது. பிறகான காலங்களில் அவர் அதை விரித்து எடுத்துச் சென்றதையே நாம் எளிதாகப் பார்க்கமுடியும். பிரமிள், அவரின் 20களின் தொடக்கத்…

  18. புதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா பதாகைJuly 10, 2018 நரோபா பிறப்பு /படிப்பு/ குடும்பம் பற்றி ? என்னுடைய மிகச்சிறிய வயதுகள் இடப்பெயர்விலேயே வளர்ந்தன.எறிகணைகள் வீழ்ந்து வெடிப்பதும், உலங்குவானூர்திகள் மேலிருந்து சுடுவதும்தான் எனது சிறியவயதின் நினைவுகளாக அடர்ந்து நிற்கிறது. நான் முதன்முறையாக ஒரு தொகையான சனங்களின் பிணங்களை இடப்பெயர்வு ஒன்றில் நடந்துகொண்டே பார்த்தேன். அந்த இடத்தைவிட்டு அம்மா என்னை மிகவேகமாக இழுத்துக்கொண்டு ஓடினாள். அம்மா முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் களத்தில் என்னை எந்த திசைக்கு இழுத்துக் கொண்டு ஓடினாலும் எங்கும் பிணங்களே நிறைந்திருந்தன. இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையேதான் என்னுடைய பள்ளிக்கூட வாழ்வும் இருக்கிறது.…

  19. பா. அகிலனின் அரசியல் மொழி சேரன் பா. அகிலன் கவிதைகள் கீதா சுகுமாரன் மொழிபெயர்ப்பில் ‘Then There Were No Witnesses’ எனும் தலைப்பில் இருமொழிப் பதிப்பாகவும் கூடவே அகிலனின் ‘அம்மை’ கவிதைத் தொகுப்பும் ஜுன்17 அன்று கனடாவில் வெளியிடப்பட்டது. நிகழ்வில் Then There Were No Witnesses பற்றி நாவலாசிரியர் ஷியாம் செல்வதுரை ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிய மொழிகளில் எழுதும் கவிஞர் இந்திரன் அமிர்தநாயகம், கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான நீத்ரா ரொட்ரிகோ, நூலை வெளியிட்ட மவ்ந்ன்ஸி பதிப்பகம் சார்பில் எழுத்தாளர் நூர்ஜஹான் அஸீஸ் ஆகியோர் ஆங்கிலத்தில் உரையாற்றினர். ‘அம்மை’ தொகுப்பைப் பற்றியும் அகிலனின் இதர கவிதைகள் பற்றியும் எஸ்.கே. விக்கினேஸ்வரன் தமிழில் உரையாற்றினார். இந்திரன் …

  20. கண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை சுயாந்தன் June 10, 2018 தமிழில் நவீன கவிதையின் தற்கால முகத்தை எழுத்து என்ற சிற்றிதழ் மூலம் அழுத்தமாக உருவாக்கியவர்கள் கா.நா.சு மற்றும் சி.சு.செல்லப்பா ஆகிய இருவரும்தான். பிரமிள், நகுலன், பசுவையா (சுரா), கா.நா.சு முதலியவர்கள் எழுதிய கவிதைகளே இன்றைய நவீன கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் முன்னோடியாகவும் இருந்துள்ளது. இருந்து வருகிறது. 'புத்தியால் எழுதப்படுபவைதான் புதுக்கவிதை' என்று ஜெயகாந்தனும் 'புத்தியாலும் எழுதப்படுபவையே புதுக்கவிதை' என ஜெயமோகனும் ஒரு இடத்தில் கூறியிருந்தனர். ஜெயகாந்தன் அறிவார்ந்த தன்மையே நவீன கவிதைக்குப் போதும் என முன்வைக்க ஜெயமோகன் அதுவும் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். கவிதை பற்றிய ஜெயமோகனின் இந்தக் கருத்த…

  21. நேர்காணல்: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு) விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை உணர்ந்தேன். ( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர். ஒன்பது நாவல்கள் உட்பட பதினேழு நூல்களின் படைப்பாளி. அவரது நண்பரும் முதுகலை மாணவருமான அரவிந்த (தமிழ்நாடு) னின் மின்னூல் மூலமான கேள்விகளுக்கு அளித்த நேர்காணல் இது.) கேள்வி 1: தமிழின் முக்கியமான ஒரு நாவலாசிரியராக அறியப்பட்டுள்ளீர்கள். இந்நிலையில் அண்மையில் உங்கள் 'கலிங்கு' நாவல் வெளிவந்திருக்கிறது. வடிவம், உள்ளடக்கம், அதன் சமூகச் செயற்பாடுகள் சார்ந்து நவீன நாவலின்மேல் காத்திரமான கேள்விகள் உருவாகியுள்ள இன்றைய நிலையில், பொதுவாக நாவல்களைப் பற…

  22. அனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா பதாகைFebruary 10, 2018 நரோபா ஊர்/ படிப்பு/ குடும்பம்/ வேலைப் பற்றி.. அனோஜன்: எங்கள் குடும்பத்தின் பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனக்கு ஓர் அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உண்டு. குடும்பத்தின் கடைசிப் பொடியன் நான்தான். பிறந்தது வளர்ந்தது யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலை எனும் ஊரில். எனினும் எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது, 1995-ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடம்பெயர்வு நிகழ்ந்தது. கொடிகாமம், நல்லூர், கொக்குவில், சுண்டுக்குளி மீண்டும் அரியாலை என்று இடம்பெயர்வு காரணமாக எனது வாழ்க்கைச் சூழல் மாறிக்கொண்டே இருந்தது. எனது பதின்ம வயதின் இறுதியில் போர் ஓய்வுக்கு வந்தது. யாழ்ப்பாணத்தில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கொழும்பில் ம…

  23. வைரமுத்துவுக்கு ஞானபீடமா? ஜெயமோகன் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வழியாக நான் ஒன்றை அறிந்தேன், வைரமுத்து ஞானபீடம் பெறுவதற்கான முயற்சிகளில் அனேகமாக வென்றுவிடும் இடத்தில் இருக்கிறார்.எம்.டி.வாசுதேவன் நாயர் உட்பட இந்தியாவின் 16 முக்கியமான எழுத்தாளர்களின் கடிதங்களும் பல்கலை துணைவேந்தர்களின் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயிடுவை இதற்காகச் சந்திக்கவுள்ளனர் என்று கேள்விப்பட்டேன்.. பாரதிய ஜனதாக் கட்சியில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பொறுப்பிலிருப்பவர்கள் சிலர் இதற்கான தனிமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.தருண் விஜயை அழைத்துக் கூட்டம் நடத்தியது, மோடி கவிதைகளை வெளியிட்டது என அவர் சென்ற சில ஆண்டுகளாக படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்தார். …

  24. துயரத்தில் முடிந்த சுந்தரராமசாமியின் காவியம் சு, வேணுகோபால் சுந்தர ராமசாயின் கட்டுரைத் தொகுப்பைப் படித்துக் கொண்டே வந்தபோது உடனடியாகத் தோன்றியது அவரது ‘சவால்’ கவிதைதான். …. இந்தக் கவிதையை அவர் எழுபதுகளின் துவக்கத்தில், எழுதாமல் இருந்துபின் எழுத வந்த காலத்தில் எழுதப்பட்டது என்பது இலக்கிய வாசகர்கள் அறிந்த ஒன்று. இந்தக் கவிதையை எழுதப்படாத துவக்க காலத்திலேயே அவர் மனதில் எழுதிவிட்டார். அவரது கட்டுரைகளின் வழி தன் இருப்பு குறித்து தெரிவிக்க முயன்ற சாரம் அதுதான். இதனை 1963 வாக்கில் பாரதி குறித்து எழுதவந்த கட்டுரையிலேயே காணலாம். எனவே சுந்தர ராமசாமி பெரும் கனவுகளோடுதான் விரும்பி இலக்கியத்துறைக்கு வந்துள்ளார். இந்தக் கனவுகளே க.நா.சு. போல சற்று மூர்க்கமாக தம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.