Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்] "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!" "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?" "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?" "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நி…

  2. "சொர்க்கம் போக ஆசை பட்டேன்!" "சொர்க்கம் போக ஆசைப் பட்டேன் சொர்ண சுந்தரியை சற்று மறந்தேன் பார்ப்பனன் இடம் மண்டி இட்டேன் வேர்த்து ஒழுக பிரதட்டை செய்தேன் !" "ஊர் பெரியாரைக் கும்பிட்டு கேட்டேன் தர்மமும் தானமும் செய் என்றான் ஏர் பிடித்தவனைக் கேலியாய்க் கேட்டேன் தர்மமும் தானமும் மிஞ்சியது என்றான் !" "தூர்ந்த கேணியை திருத்திக் கட்டினேன் தேர்த் திருப்பணிக்கு அள்ளிக் கொடுத்தேன் தர்ம சாலை கட்டித் திறந்தேன் ஊர்ப் பலகையில் பெயரும் போட்டேன் !" "மார் தட்டி சத்தம் போட்டேன் கார் அனுப்பி கூட்டம் சேர்த்தேன் மோர் ஊற்றி விழா நடத்தினேன் சீர் திருத்த அறிக்கை விட்டேன் !" "கார் காலம் கோடை ஆக தேர்தல் ஒன்று நாட்டை சூழ சேர்த்த …

  3. with Public ஏப்ரல் 2, உலக சிறுவர் புத்தக தினம் புத்தகங்கள் சிறார்களின் தனி உலகம் புத்தகங்கள் முடிவில்லா வசீகரம் எல்லையற்ற பேரானந்தம் புத்தகங்கள் கிடைத்தற்கரிய பொக்கிஷம் புத்தகங்கள் ஆர்வமுள்ள சிறாருக்கு அளவற்ற மகிழ்ச்சி தரும் புத்தகங்கள் …

    • 0 replies
    • 389 views
  4. இவ்வுலகில் யாரும் பசியோடு இல்லை உலகில் அமைதி நிலவுகிறது எங்கும் சண்டை இல்லை ஈழத் தமிழரின் இனப்படுகொலையை ஐ நா விசாரிக்கிறது யூதர்களும் பலஸ்தீனர்களும் ஒருவரை மற்ரொருவர் மிகவும் நேசிக்கிறார்கள் சமாதானம் ஒரே தீர்வென்று இரேலியர்கள் விரும்புகிறார்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள் நேற்றைய விருந்தொன்றில் ஈஸ்டர் முட்டையை பரிமாறிக் கொண்டார்கள் ஆம் நம்புங்கள் முட்டாள்கள் நிறைந்த இவ்வுலகில் அறிவாளிகள் அனைவரும் கோமாளிகளே! தியா காண்டீபன்

      • Like
    • 3 replies
    • 579 views
  5. இன்றைய வாழ்க்கை கொடுக்கும் அழுத்தத்தை அளக்க ஒரு சுட்டி, அளவீடு இங்கில்லை. மருத்துவமும் அறியாதது அது. அளவில்லா விருப்பங்களே அழுத்தங்களாக பின்னர் இழப்புகளாக மாறுகின்றன என்று சொன்னாலும், அதைக் கேட்போர் என்று எவரும் இல்லை. *************************** பழைய நீதிக்கதை ------------------------------ ஒரு ஊரில் ஒருவர் இருந்தார் அவர் பெயர் அப்துல் கலாம் 'கனவு காணுங்கள்' என்று அவர் சொன்னார் கலாம் ஐயா பொதுவானவர் எளிமையானவர் நல்லவையே சொன்னார் ஆகவே கனவிற்கு மேல் கனவென்று எல்லோரும் காண்கின்றனர் உத்தியோகம் உயர ஊதியம் இரண்டு மடங்காக வீடு மாளிகையாக வாகனம் வசதியாக பிள்ளைகள் தனியே…

  6. சினிமாவுடன் வளர்ந்தோம். ஊர் தியேட்டர்களில் எந்தப் படம் வந்தாலும் பார்த்தோம். சில படங்களை, முக்கியமாக பல எம்ஜிஆர் படங்கள், பல தடவைகள் பார்த்தும் இருக்கின்றோம். இதில் சிலருக்கு தியேட்டர் மாடியில் உள்ள புரொஜெக்டர் அறைக்கு போகும் வாய்ப்பு கிடைத்தும் இருக்கும். ******* கார்பன் வெளிச்சம் ------------------------------- வெளிப்பாட்டு முடிந்து உள்பாட்டு ஓடி இரண்டு மணிகள் அடித்த பின் மின் வெளிச்சம் கலைந்து கும்மிருட்டு சூழ பளிச்சென்று வரும் கண்ணைக் கூசும் …

      • Haha
    • 4 replies
    • 557 views
  7. இன்று நாம் பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் …

  8. வெறுப்பு! *********** அரசமரக் கன்றுகளை அழித்துக்கொண்டிருந்தான் அந்தத்தேசத்து மனிதனொருவன் எத்தனையாண்டுகள் வாழும் மரத்தை ஏன்.. அழிக்கிறாய்யென்றான் வழிப்போக்கன். எனக்கும் கவலைதான் என்னசெய்வது வருங்காலப் பிள்ளைகளும் வாழவேண்டுமே என்று பெரு மூச்சுவிட்டான் அந்த மனிதன். அன்புடன் -பசுவூர்க்கோபி.

  9. வெள்ளிக்கிழமை வேலை ---------------------------------------- இன்று வெள்ளிகிழமை, ஏன் வேலை செய்ய வேண்டும் என்று மனம் கேட்கின்றது. உண்மையைச் சொன்னால் அது ஒவ்வொரு திங்கட்கிழமையிலிருந்தும் இதே கேள்வியையே கேட்கின்றது. முன்னர் ஒரு காலத்தில், வேலை செய்ய ஆரம்பித்து இருந்த நாட்களில், நாங்கள் இவ்வளவு வயது பிந்தி வேலை செய்யத் தொடங்கியிருக்கின்றோம், வேறு பல நாட்டவர்கள் 21 வயதுகளிலேயே ஆரம்பித்து விடுகின்றார்கள் என்று கவலை கூட பட்டும் இருக்கின்றோம். படித்து முடிப்போம் என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு படித்து முடிக்கவே எங்களுக்கு 26 அல்லது 27 அல்லது அதற்கு மேலும் வயதாகி விடுகின்றது. ஆனால், அந்த கூடுதலான ஐந்தாறு வருடங்களாவது நினை…

  10. எச்சரிக்கை ----------- வீட்டில் குடியிருக்கும் எலிகளுக்கு நான் விடுக்கும் கடைசி எச்சரிக்கை இது எச்சரிக்கை நீங்கள் இங்கிருப்பது எனக்குத் தெரியும் அங்கங்கே இருக்கும் கறுப்பு எச்சங்கள் உங்களின் மிச்சங்களே இருட்டில் உருட்டுவதும் பகலில் ஒழிவதுமாக நீங்கள் ஓடித் திரிவதும் தெரியும் தக்காளிச்செடியில் நின்றதாகவும் அம்மணி அழுதார் எலிக்கு ஏனய்யா தக்காளி? ஏக பிரதிநிதியாக இங்கு எல்லாம் உங்களுக்காகவா? முட்டைக்கோதுகள் ரேடியேட்டருக்குள் கிடக்க 'என்ன பாம்பு வளர்க்கிறீர்கள்?' என்று தள்ளி நின்று கேட்டார் மெக்கானிக் பின்னர் மொத்தமாக…

  11. சிறு வயதில், ஊரில் இருந்த நாட்களில், வீட்டிற்கு அப்பாவின் நண்பர்கள் எந்நேரங்களிலும் வருவார்கள். பலர் தேநீர் கேட்பார்கள். கேட்காதவர்களுக்கும் தேநீர் கொடுக்கப்படும், அது ஒரு உபசரிப்பு, மரியாதை போல. சீனியின் அளவு, சாயத்தின் அளவு போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. இப்பொழுது காலம் மாறி, இடமும் மாறிவிட்டது. கேட்பதற்கும் தயக்கம், கொடுப்பதற்கும் தயக்கம், அளவுகள் வேறு தனித்தனியாகிவிட்டது. ** ஒரு கோப்பை தேநீர் -------------------------------- வீட்டுத் தவணைக் கட்டணம் வாகன தவணைக் கட்டணம் வீட்டுக் காப்புறுதி பொருள் காப்புறுதி மருத்துவக் காப்புறுதி கண்ணுக்கு த…

      • Like
    • 2 replies
    • 406 views
  12. கலிபோர்னியாவில் இடைவிடாமல் மழையும், பனியும் ஆக இருக்கின்றது. போன வருடமும் இவ்வாறே. கொட்டும் பனியிலும், கடும் காற்றிலும் ஒரு சோடி கழுகளின் கூட்டையும், அவைகளின் முட்டைகளையும் இங்கு சிலர் பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். இது இங்கு செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றது ************* ஒரு வழிச் சாலை --------------------------- இரண்டு வெண்தலைக் கழுகுகள் அவற்றுக்கு பெயரும் உள்ளது ஒன்று லிபர்ட்டி மற்றது கார்டியன் மூன்று முட்டைகள் போட்டு மாறி மாறி அடைகாக்கின்றன வாழும் நாள் முழுதும் இவை சோடி மாறுவதில்லை கூடும் மாறுவதில்லை ஒவ்வொரு வருடமும் தண்டும் தடியும் கொடியும் புதிதாக அ…

      • Like
    • 3 replies
    • 454 views
  13. மனிதம் செத்துவிட்ட மகாத்மா பூமி! ***************************************** வாசலை திறந்து கொண்டு-நீ வருவாயென்றுதானே ஏங்கிக் கிடந்தது எம் தேசம்… விடுதலை பெற்றபின்னும் தூக்கு கயிறை மாட்டி தூங்கவைத்து அனுப்புமென்பது யாருக்குத் தெரியும். 😢 உன்னைப்போலவே உன் அம்மாவும் ஒவ்வொருநாளும் செத்து செத்து.. உன்வரவுக்காகவே காத்துக் கிடந்தாள்-எனி அவளுக்கு ஆறுதல் சொல்ல யாரால் முடியும் இந்த பூமியில். ஆத்மார்த்த அஞ்சலிகள்🙏 பசுவூர்க்கோபி.

  14. மாதங்களில் நான் மார்கழி. வீதியெங்கும் மாவிலைத் தோரணங்கள் வாசலெல்லாம் வண்ணக் கோலங்கள் பூசணிப் பூக்கள் மத்தியிலே சாணியில் பிள்ளையார் பூவினிலே மெல்லிய பனியுடன் மழைக்காலம் வகை வகையாய் பறவைகள் இசைக்கோலம் நிரை நிரையாய் எறும்புகள் ஊர்வலம் அவசர கதியில் மாந்தர் நகர்வலம் கோடை முடிந்தால் வந்திடும் மார்கழி வாடைக்காற்றும் வந்து வாட்டிடும் பீடை மாதமென்பார் பேதையர் சாடையினால் தை பிறக்கட்டுமென்பர் சோதிடர் பெருவிழாக்கள் குறைந்தாலும் திருவிழாக்கள் களை கட்டும் ஓதுவார் இறைபுகழ் ஓதிச் செல்ல சாதுக்கள் பஜனையில் கூடிச்செல்வர் அடிகளின் திருவெம்பாவை திக்கெட…

    • 13 replies
    • 1.5k views
  15. கவிஞர் பளநிபாரதியவர்களின் கவிதை ஒன்று படிக்கும் போது இங்கு பதிவிடத் தோன்றியது அதனால் இங்கு இணைக்கிறேன்..எமது நாடு பற்றியது. அங்கே நான் உன்னை அழைத்துச் செல்லமாட்டேன் அது கருணையற்ற நிலம் பிரிவின் யுகாந்த வெள்ளத்தில் அது மூழ்கடிக்கப்பட்டது காதலற்ற சொற்களின் முள்வேலியால் …

    • 3 replies
    • 623 views
  16. வாழ்வு தந்தவள் இவளே! ***************************** எழில் கொஞ்சும் மலைகள் தந்தாய் ஏர் பூட்ட வயல்கள் தந்தாய் பயிர் வளர மழையும் தந்தாய் பார் சிறக்க பல்லுயிர்கள் தந்தாய். அழகான அருவி தந்தாய் அகிலம் சுற்றி கடலும் தந்தாய் எரிகின்ற தீயும் தந்தாய் இளவேனிற் காற்றும் தந்தாய். உயர்வான வானம் தந்தாய் உருண்டோடும் மேகம் தந்தாய் வளமான காடு தந்தாய் வலிமைமிகு மரங்கள் தந்தாய். சூரியன்,மதியும் தந்தாய் சுதந்திர பறவைகள் தந்தாய் கடல் நிறைந்த உயிர்கள் தந்தாய் கரையோரம் காட்சிகள் தந்தாய். கலர்,கலராய் மலர்கல் தந்தாய் கண்குளிர பலவும் தந்தாய் இரவு பகல் எமக்குத் தந்தாய் …

  17. எப்போது வினாத் தொடுப்பீர்! ---------------------------------------------- எரிகின்ற காசாவிலிருந்து என்னதான் கிடைக்கும் எலும்புகளும் கிடைக்காது ஏனென்றால் பார்வைக்குக் சிறுமீன்போல் திமிங்கலமாய் நெளிகின்ற இஸ்ரவேலே விழுங்கிவிடும் அப்போ எதற்காக இந்தப் போருக்குள் மேற்கு மேய்கிறது அரபுலகை வெட்டுகின்ற தங்கக் கத்தியாக இஸ்ரவேல் இருக்கிறது அதனால் இருக்குமோ! எவளவு மக்கள் எவளவு பலஸ்தீனர் எவளவு சிறுவர்கள் எவளவு குழந்தைகள் எவளவு மழலைகள் அழிந்தொழிந்து போனாலும் அதைப்பற்றிக் கவலையேது! எமக்குத் தேவை எமது தேவைகள் நிறைவேற எந்தடையும் இல்லாத உலக வெளிதேவை ஊடறுப்போர் யாரெனினும் நாளையது இஸ்ரவேலேயானாலும் பாலஸ்தீனத்தை வைத்தே படை நடா…

    • 12 replies
    • 1.6k views
  18. பூனைகள் விசித்திரமானவை என் வளவில் உணவுதேடிப் பல பூனைகள் வருகின்றன நான் அவற்றுக்கு எந்த உணவும் கொடுப்பதேயில்லை பாவம் அம்மா பூனைகள் என்கின்றனர் பிள்ளைகள் வீட்டுப் பூனைகளும் சரி துரத்திவிடப்பட்டவைகளும் சரி நிரந்தரமாய் ஓரிடத்தில் உணவு தேடுவதில்லை. பசி எடுக்கும் வேளைகளில் அயலில் உள்ள வீடுகளுக்கெல்லாம் அலைந்து திரிகின்றன பக்கத்துவீட்டில் தாராளமாய் உண்டபின்னும் கூட அடுத்தவீட்டிலும் மியாவ் என்றபடி உணவுக்காய் நிற்கின்றன அவை தம் வீட்டில் மட்டும் உண்ணாமைக்கு என்ன காரணம் இருக்கும் என நான் எண்ணுவதுண்டு. வீட்டு உணவு அவற்றிற்கு உருசிப்பதில்லையோ??? அன்றி போதுமானதாக இருப்பதில்லையோ??? கட்டாக்காலி நாய்களைப்போல்தான் பூனைகளும் இப்போ ப…

  19. https://www.facebook.com/photo/?fbid=10161088302041950&set=a.10151018148611950

    • 2 replies
    • 1.2k views
  20. https://www.google.co.uk/imgres?imgurl=https%3A%2F%2Fresize.indiatvnews.com%2Fen%2Fresize%2Fnewbucket%2F1200_-%2F2023%2F08%2Fchandrayaan-3-5-1691547437.jpg&tbnid=cJLSHrbC4Cr1ZM&vet=12ahUKEwi-lLWblvaAAxXIrycCHQuxAj4QMygKegUIARCUAQ..i&imgrefurl=https%3A%2F%2Fwww.indiatvnews.com%2Fnews%2Findia%2Fchandrayaan-3-update-isro-spacecraft-performes-significant-manoeuvre-closer-to-moon-lunar-surface-2023-08-14-886607&docid=WRXkMNPWYsENMM&w=1200&h=696&q=chandrayaan-3&ved=2ahUKEwi-lLWblvaAAxXIrycCHQuxAj4QMygKegUIARCUAQ சந்திரயானின் வெற்றி மேலைத் திசையினன் அம்புலி சென்று விரைந்து திரும்புகையில் - இங்கு பாலைக்கறந்ததைக் கல்லினில் வார…

    • 2 replies
    • 696 views
  21. படிக்க தவறிய புத்தகம் தந்தை படிக்க விரும்பும் புத்தகம் அன்னை படித்தும் பிடித்து போகும் புத்தகம் மழலை தொலைக்க கூடாத புத்தகம் வாழ்க்கை மரணத்தை விட கொடியது போலி வார்த்தைகளுக்கு அடிமையாக இருந்தோம் என்பது . பணம் தான் உலகம் என்று நினைக்கும் சிலரிடம் சொல்லுங்கள்.பணம் பூமியை தவிர வேறெங்கு ம் செல்லுபடியாகாது என்று .... அன்று அடிப்படை வசதி கூட இல்லத்திருந்தோம். ஆனால் மகிழ்ச்சிஇருந்தது .இன்று எல்லாம் இருக்கிறது ஆனால் ... எதோ ஒரு மனக் கவலையுடன் தான் நகர்கிறது ஒவ்வொரு நாளும். உதவி செய்வதில் தவறில்லை,உனக்கென்று கொஞ்சம் வைத்துக் கொள் நாளை உனக்கொரு தேவையென்றால் உதவி பெற்ற்வர் எட்டிக் கூடப் பார்க்க மாடடார். இன்று இருக…

  22. தணியாத தாகம் தன்னந் தனிமையிலே தள்ளாடும் வயதினிலே ஜன்னல் ஒர வான் வெளியை வெறித்துப்பபார்க்கிறேன். வாகன ஒடடம் ஜன நடமாட்டம் விரைந்து செல்கிறது எதையோ தேடி ஓடுகிறார்கள்.அன்றாடம் இது ஆடி ஓடி ஓய்ந்து போன கிராமத்துக்கட்டை காலனின் காகித வரவுக்காய் காத்திருக்கிறேன் ஆனாலும் ஒரு தாகம் என் தாயகம் நோக்கி இருப்பினும் முன்பு ஒரு தடவை சென்று தான் பார்த்தேன். என் வீடு தரைமடடமாகி புல் பூண்டு முட் செடிகள் மூத்தவன் ஒரு தடவை ஆள் வைத்து துப்புரவாக்கியவன் இருப்பினும் பஞ்ச பூதங்கள் தீ நிலம் நீர் ஆகாயம் காற்று பொய்த்துப்போகவில்லை மீண்டும் அவை முளைத்திருந்தன நான் நண்பனுடன் குளித்த கிணறு ஓடிவிளையாடிய மைதானம் சாமி கும்பிடும் கோவில் எல்லாம் தூர…

  23. செந்தமிழ் நாடு செந்தமிழ் நாடென்னும் போதினிலே – கொடுந் தீவந்து பாயுது காதினிலே – அங்கு எம்தமிழ் பாடையில் ஏறியுலாவரல் எண்ண எரியுது நெஞ்சினிலே. ஆயிரம் கோடிக்கணக்கில் சுருட்டி அடைபட்டு மீண்டவர் வந்திடினும் தாவியவர்கள் தயவினுக்காகவே தாழ்பணிந்தேத்தும் தமிழ்நாடு வாழ்வினில் ஊழல் பலபுரிந்தார்க்கும் வணக்கங்கள் செய்து மதிப்பளித்தே காவிய நாயகராக்கி அவரைக் கதிரையில் வைக்கும் தமிழ்நாடு மக்கள் பணத்தினைக் கொள்ளையடித்துத் தம் மக்கள் மருமக்கள் வாழ்வு பெற திக்கெட்டும் சொத்துக்கு வித்தவர் காலினை நக்கிபிழைப்பவர் வாழ்நாடு அன்னை தமிழின் அருமை மறந்து பொய் ஆங்கில மோகம் தனி…

    • 2 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.