கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
விடிகின்ற விடியலிலே விரைவு வேண்டும் நமது வீதியிலே சுதந்திரமாய் தலை நிமிர்த்தித் திரிய வேண்டும் பறி போகின்ற நிலத்தினையும் காக்க வேண்டும் இப் பாரினிலே தமிழன் புகழ் ஓங்க வேண்டும் இழுக்கல்ல போராட்டம் தெளிதல் வேண்டும் இகல்வெல்ல ஒன்றிணைந்தே முயல வேண்டும் விழுகின்ற தலைமுறையும் வாழ வேண்டும் விடியலிலே புதுதேசம் மலர வேண்டும் சொந்தத்தில் அறிவுடைமை வளர வேண்டும் சோம்பலுற்ற அடிமை நிலை மாற்ற வேண்டும் சொந்தங்கள் தமிழ்மக்கள் எனும் எண்ணம் வேண்டும் சோர்வின்றி இனங்காக்க துடிக்க வேண்டும் வந்தேறிக் கூட்டங்கள் ஓட வேண்டும் வக்கற்ற ஆட்சியினை மாற்ற வேண்டும் குத்தகங்கள் செய்வோரை களைதல் வேண்டும் கூத்தாடிக் கூட்டங்கள் மாய வேண்டும். அறிவிழந்த மனிதரென்றே …
-
- 8 replies
- 1.2k views
-
-
வளையற் குவியல் ஒன்றைக்காட்டி வல்லமை கேட்டதோர் கவிதை. என் நெஞ்சிலுதித்ததை அங்கு பகிர்ந்தேன். இது கவிதையல்ல ஓர் ஏழையின் குமுறல். அது கீழே. ஓர் ஏழையின் குமுறல் கைநிறையப் போடக் கலர்கலராக் குவிச்சிருக்கு பைநிறையப் பணமிருந்தாப் பார்த்துப் பார்த்து வாங்கிக்கலாம். ஏழைக நம்பளுக்கு எதுக்கிந்த வளையலெல்லாம் வாழ வழியில்லையாம் வளையலொரு கேடா புதுப் புள்ளத்தாச்சிக்குப் போடுவாங்க வளைகாப்பு எட்டு மாதப் புள்ளத்தாச்சி எம் பொழைப்பு கல்லுடைப்பு கல்லுடைக்கும் கைக்கு காப்பு சரிவருமா? நாட்கூலி வாங்கி நானூத்தும் கஞ்சிலதான் ஆத்தா மனம் மகிழும் அவவயிறும் குள…
-
- 6 replies
- 1.2k views
-
-
இறந்த காலத்தில் வாழ்பவன் நிகழ்கால பிணம் ஆவான்.... எதிர்காலத்தில் வாழ்பவன் நிகழ்கால ஏமாளி ஆவான்.... நிகழ்காலத்தில் நிகழ் காலமாக வாழ்பவனே மனிதனாவான் @ கவிப்புயல் இனியவன் இறந்த காலத்தில்வாழ்பவன் நிகழ்கால பிணம் ஆவான்.... எதிர்காலத்தில் வாழ்பவன் நிகழ்கால ஏமாளி ஆவான்.... நிகழ்காலத்தில் நிகழ் காலமாக வாழ்பவனே மனிதனாவான் @ கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 702 views
-
-
ஒரு சோடி அணுக்கவிதை 💙💙💙 உன் சிரிப்பில் கருகாமல்..... நெருப்பில் கருகியிருக்கலாம்.... காயம் தான் இருந்திருக்கும்.... வலி காலத்தால் இறந்திருக்கும்.... 💚💚💚 நீ பிரிந்து விட்டாய்... என்று பலமுறை.... சொல்லிவிட்டேன்.... சொறனை.... கெட்ட என் இதயம்... நீ வருவாய்யென..... கதவை திறந்துவைத்து... காத்துக்கொண்டு இருக்கிறது......! 💙💙💙 இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் இலங்கை யாழ்ப்பணம்
-
- 15 replies
- 2.2k views
-
-
மிரட்டுகின்ற மிடியனைத்தும் மிரண்டு ஓட மிடிமையிலும் மிடுக்குடனே ஒற்றுமையைப் பேண வேண்டும் அறத்தின் நெறி காக்கின்ற செயலைச் செய்து மனிதர் நாம் மனிதத்துடன் வாழ வேண்டும்! அருமை பெருமையுடன் தாய்மொழியைப் பேண வேண்டும் அரும் பெரும் புகழை எமதாக்கிக் கொள்ள வேண்டும் இருள் சூழ்ந்த நிலை போக்கி என்றும் வாழ்வில் இழப்பின்றி எம்மவர்கள் எழுச்சியுடன் ஆள வேண்டும்! கருமமே கண்ணாகக் கொள்ள வேண்டும் களவின்றிப் பொய்யின்றி வாழ்தல் வேண்டும் இளகாதோர் மனமிளகச் செய்ய வேண்டும் இளமையிலே உரிமை தனை வெல்ல வேண்டும்! அரும்பாடு பட்டேனும் அறவோர் நாளும் அறிவுக்கண் திறக்க வழி செய்ய வேண்டும் அறமில்லாச் செயலுக்கு முற்றுப் புள்ளி அறிவு கொண்டே எவருமிங்கு வைக்க வேண்டும்! ந…
-
- 2 replies
- 675 views
-
-
ஊருக்கு போய் வந்த தம்பர்..! (பாகம்2) ***************************** பெரு மூச்சுவிட்ட தம்பர் பின் தொடர்ந்தார்.. வெளிநாடுகளில் ஒருத்தரும் இல்லாத குடும்பங்களும் வேலை,வீட்டுத்தோட்டம் படிப்பென்று பண்போடுதான் சிக்கனமாய் வாழுதுகள் பாருங்கோ இங்கிருந்து சிலர் ஊருலாப்பென்று ஊருக்கு போய் எதோ சந்திர மண்டலத்துக்கு போய் வந்த மாதிரி வெளிநாட்டைப்பற்றி விளாசித்தள்ளுவார்களாம். பாருங்கோ. வந்து நிற்கிற கொஞ்ச நாட்களுக்குள்ள கிடாய் அடிச்சு கோழி அடிச்சு மதுப்போத்தல்ல விழுந்தடிச்சு பக்கத்து வீடுகளுக்கு பகட்டுக் காட்டி காசையெடுத்து வீசி …
-
- 8 replies
- 1.1k views
-
-
அரசியல் ஆதிகாலம் தொட்டு எம்மை ஆட்டுவிக்கும் அரசியல் வேதனைக்குள் மக்கள்தன்னை விட்டுவிட்ட அரசியல். சாதியென்ற சகதியுள்ளே தாழ்ந்து விட்ட பேயரை மோதவிட்டி லாபம்காண முயலுகின்ற அரசியல் கட்சியென்ற பேரில்சேரும் கள்வர்தம்மை ஆட்சியில் எச்சரிக்கை ஏதுமின்றி ஏற்றிவைக்கும் மக்களை உச்சநிலை வறுமைக்கேற்றி ஒன்றுமற்ற கையராய் பிச்சையேற்க வைத்திடும் ப…
-
- 0 replies
- 737 views
-
-
இதயத்தில்... குடிகொண்டிருக்கும்.. இதய தேவதையே.... !!! உன் தூக்கம்.... கலையக் கூடாது... என்பதற்காக.... மெதுவாக நடக்கிறேன்....!!! திடுக்கிட்டு... எழுந்துவிடக் கூடாது... என்பதற்காக.... மெதுவாக பேசுகிறேன்...!!! இரத்தச் சுற்றோட்டத்தில் ஓடி விளையாடும்... இதய தேவதையே.... விழுந்து விடாதே....!!! மூச்சுக்காற்று... உன்னை சுட்டு விடக்கூடாது.... என்பதற்காக.. கும்பக மூச்சு விடுகிறேன்......!!! @ எல்லாம் உனக்காகவே அன்புடன் கவிப்புயல் இனியவன்
-
- 7 replies
- 1.2k views
-
-
ஊருக்கு போய்வந்த தம்பர்..! *********************** ஊருக்கு போனபோது ஒருபோத்தல் பியர் அடிக்க பாருக்கு.. (Bar) போன்னான் பாருங்கோ.. அங்கவந்த சின்னம் சிறுசு பெருசுகள் எல்லாம் தாள் தாளா எறிஞ்சு-பின் தண்ணியில குளிச்சு தவளுதுகள். ஒரு கூட்டம் உட்காந்து காசுவந்த கதை சொல்லி கதைச்சு பெருமைபேசி கஞ்சா, புகையில என புகையாக் கக்குதுகள். பிச்சைக்காஸ் அனுப்பினான் இவனுக்கு பின்னால போனவன் கொட்டிக்குவிக்கிறானாம் என தான் கொடுத்தனுப்பினவன் போல வெட்டி முறிக்கிறான் ஒருத்தன் விட்டுத்தொலை மச்சான் நீ மற்றவனுக்கு போன் போடு வந்தா மலை …
-
- 14 replies
- 1.5k views
- 1 follower
-
-
நீளங் கொண்ட வானத்தில் பறக்கும் நேசங் கொண்ட பறவைகளே என் தேசங் கொண்ட நிலையென்ன திரும்ப வந்தால் கூறுங்கள்! வாசங் கொண்ட மலரங்கே வண்ண இதழ்கள் விரிப்பதில்லை பேசுங்கிளியும் கிள்ளை மொழி பேசாதிருக்கு என்கிறார்கள்! வீசும் தென்றல் உடன் சேர்ந்த மாமரத்து விளையாட்டும் வேப்ப மரத்துக் குயிற்பாட்டும் நேசமுடன் நினைவிருக்கும் நாசம் எல்லை மீறியதாம் நாட்டில் காணா வாழ்வோடு! கூசும் கொலைகள் கொள்ளைகளும் குழவி மேனி கூடக் கலைத்தாடும் நீசம் எல்லை மீறுவதாய் நேரக் கேட்டே மனமும் துடிக்கிறதே! மாசும் கொண்டோர் மனமெல்லாம் மருகிப் பிறழ்வாய் மனத் தாகம் பூசும் முகங் கொள் வேடங்கள் புரிவோர் மலியப் பொருளுண்டோ! காசுக் கடிமையாய் போகும் கயவர் கைக…
-
- 4 replies
- 979 views
-
-
கொரோனாவுக்கு முன் 🤍🤍🤍 வீடுவரை உறவு.... வீதி வரை மனைவி... காடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ...? ( கவியரசு கண்ணதாசன் ஐயா) கொரோனாவுக்கு பின் 🤍🤍🤍 வீடுவரை உறவு.... வீடு வரை மனைவி..... வீடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ...? ( சிரிப்போம் சிந்திப்போம்) இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் இன்று ஒருவர் இறந்தால் அது கொரோனா எனப்படுகிறது யாருமே அவரை பார்க்க முடியாது எல்லோரும் வீட்டுக்குள்ளே அழுகை அரசு உடல் கூட கொடுக்காது
-
- 2 replies
- 713 views
-
-
மறைந்த ஈழத்துப் பெருங்கவிஞர் மகாகவியவர்கள் நானறிந்தவரை குறும்பாக்களை தமிழில் முதன்முதல் அறிமுகம் செய்தவர். அவரைப்பின்பற்றிப் பலரும் பின்னர் குறும்பாக்களையெழுதத் தொடங்கினார்கள். குறும்பா என்பது குறுகியா பாவாகவும் அதேவேளை குறும்பு கலந்ததாகவும் இருந்தாலேயே குறும்பா இலக்கணத்துக்கு உட்படும். எமது ஈழக்கவிஞர் மகாகவியைப் பின்பற்றி நானெழுதிய தற்போதைய யுகே காலநிலைக்கேற்ற குறும்பாவை இங்கு தருகிறேன். நண்பர்களும் இதை முயற்சித்துப்பார்க்கலாம். நாற்படையுங் கொண்டுயர்ந்த நாடு -யுகே நாணா நவமாதர் வீடு காற்தொடையின் கவடுவரை காரிகையர் கவுணுயரும் காலமிங்கு சம்மர் கடுஞ் சூடு
-
- 12 replies
- 1.7k views
- 1 follower
-
-
நம்பி வாங்கிய நாய்..! ******************* பஞ்சாயத்து தலைவர் பதிவிலிருந்து.. சாந்தமில்லாத சப்பை முகம் கொண்ட வெளிநாட்டு நாயொன்றை விரும்பி வாங்கினேன். கடனாக.. அயல் வீட்டுத் தொந்தரவை அடக்கலாமென்று.. வாசலில் காவலுக்கு வைத்தால் வரும் எதிரி அனைத்தையும் வரவிடாமல் தடுக்குமென்று.. ஆனால் நாயிப்போ எனது நடு வீட்டுக்குள் கிடந்து.. நான் வளர்க்கும் பிராணிகளை நடு நடுங்க வைக்கிறது. நாளைக்கு என் வீட்டில் நான் இல்லை என்றாலும் நான் பட்ட கடன் சொல்லி நாய் மட்டும் …
-
- 8 replies
- 1.2k views
-
-
தடையெனவே இருந்தவைகள் எல்லாமே தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும் வாழ்விற்கு வளம் கொழிக்கும் எல்லாமே வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்! சுமையெனவே துயர் தந்த எல்லாமே நகரட்டும் விலகட்டும் மறையட்டும் நல்லோர்க்கு நலம் சேர்க்கும் எல்லாமே பரவட்டும் தொடரட்டும் பலம் பெறட்டும்! பொய்மைக்கு துணை போன எல்லாமே உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும் உண்மைக்கு வலுச் சேர்க்கும் எல்லாமே நிறையட்டும் நிமிரட்டும் வலுக்கட்டும்! கீழ்மைக்குத் துதி பாடும் எல்லாமே கிழியட்டும் எரியட்டும் அழியட்டும் மேன்மைக்கு எழில் கூட்டும் எல்லாமே வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்! எழில் கொண்டு எழில் கண்ட பொழில் கொள் இப்பூவுலகிலே எழில் உளங்கொண்டு வாழும் நல்மாந்தர் எல்லாமே வாழட்…
-
- 6 replies
- 609 views
-
-
மரம் சொன்ன குறள் நன்றி மறப்பது நன்றன்று.. *********************** நான் பெரிய மரமாய் இருந்தாலும் என்னில் கூடு கட்டி குடி வாழும் பறவையினத்தை துரத்தாமல் மதிக்கிறேன். என்னை இதே இடத்தில் வாழவைத்தது ஒரு பறவை. அதன் எச்சத்தில் இருந்தே நான் மரமானேன். மனிதர்களே நீங்களும் யோசியுங்கள் ஏதோ ஒரு வளியில் யாரோ ஒருவரின் உதவி கிடைத்திருக்கும். அதை மறக்காதே என இந்தத் திருக்குறளை சொல்லி சிலுப்பியது மரம் …
-
- 6 replies
- 2.4k views
-
-
என் அன்புள்ள ரசிகனுக்கு இலக்கியக் கவிப்பேரரசு எழுதும் கடிதக் கவிதை 📝📝📝 ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள் என்னை ஊனமாக்கி மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறியச் செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....! # என்இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்குத் தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது .... இரவில் கனவில் வருவாள் ....? ஏங்கிக்கொண்டிருக்கும்..... இதயத்துக்குப் புரியும் …
-
- 0 replies
- 1k views
-
-
நிராகரிப்பு என்பது வேதனைக்கு உரியது ஆனால் நிராகரிப்பினால் ஏற்படும் அனுபவம் வலிமையானது பல நிராகரிப்புகளில் ஏற்படும் அனுபவங்கள் கற்றலுக்கான வாய்ப்பாகிறது முகிலின் நிராகரிப்பால் மழை உருவாகிறது மழையின் நிராகரிப்பால் மண் ஈரமாகிறது விதை நிராகரிக்கப்படுவதால் நிழல் கொடுக்கும் பெரு விருட்சமாகிறது நிராகரிப்பு என்பது தோல்வியின் கடைசி ஆயுதம் நிராகரிப்பு என்பது உடைந்து போன பின்னும் எழத் துடிப்பது நிராகரிப்பு என்பது உடைந்து போகாமல் இருக்க உள்ளூர எழுந்து மறையும் ஓராயுதத் தோற்றங்களில் ஒன்று யாரோ ஒருவரின் நிராகரிப்பு இன்னொருவரால் நேசிக்கப்படுகின்றது யாரோ ஒருவரின் நிராகரிப்பால் நிராகரிக்கப்பட்டவரின் திறமை உயர் கணிப்புக்குள்ளாகிறது நிராகரிக்கப்பட…
-
- 11 replies
- 4.4k views
-
-
-
மங்கையவளின் மரக்கறிக் கடை..!(காய்கறிக்கடை) ************************* பகுதி-1 முதலில் தக தகவென்ற மேனியை பார்த்ததும் தக்காழியை வாங்கி வைத்தேன். முந்தானையை பார்த்து முனகினேன் முருங்கக்காய் வரத்து குறைவென்றாள். கையை வைதேன் சும்மா சுறண்டாதீர்கள் மென்மையான தோல் உதிரம் வருமென்றாள் எடுத்து பார்த்தேன் பீற்றூட் கிழங்கு. அவளின் விரலை பிடிப்பதுபோல் எண்ணினேன் முளிந்து பார்த்தாள் எனது கையில் இருந்தது வெண்டிக்காய் உடைக் வேண்டாமென உறுமி விட்டு சிரித்தாள். அவளி…
-
- 11 replies
- 1.1k views
-
-
எதிர்பார்த்துக் காத்திருக்கும் நீளமானதொரு தொலைவில் ஆழமானதொரு மௌனமும் கோரமானதொரு வெறுமையும் தவிப்பானதொரு தனிமையும் வஞ்சகமானதொரு புன்னகையை வீசிவிட்டு அருகே நின்று வா வா என்று வருந்தி அழைக்கும்! மௌனமும் வெறுமையும் தனிமையும் புதைந்து கொண்டிருக்கும் நம்பிக்கையை தட்டி எழுப்பி நலம் விசாரித்து விட்டு திசை தெரியாமல் போ போ எனத் துரத்தி விட்டு ஹா ஹா என்று கோரச் சிரிப்பு சிரிக்கும்! துடித்துக் கொண்டிருக்கும் மொழிகளுக்கிடையே மறைந்து போகும் மௌனம் மௌனத்துக்கு நடுவே ஒலித்து மறைந்து போகும் கதறல் இவற்றைக் கண்டு உள்ளூர நகைத்துக் கொள்ளும் வெறுமை! எதுவுமே இல்லாமையே வெறுமை எதுவுமே கிடைக்காமையே ஏக்கம் இல்லாமையும் கிடைக்காமையும் வாழ்வின் தாக்கமான தேக்கம்! மௌனங்களுக்கு தாளம் ச…
-
- 4 replies
- 781 views
-
-
கரும்புலி மறவர்கள் கரும்புலி மறவரே கரும்புலி மறவரே எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிந்தீரே எம் ஈழ மக்களுக்கு ஏற்றம் புரிகையிலே வெந்தழிந்தாலும் வீழ்விலை என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைத்தீரே நசுக்குண்ட தமிழீழத்தின் நலத்துக்கு உழைக்கையிலே பெருக்குண்ட துயரெலாம் தூசுகள் என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவினீரே தீந்தமிழீழத்தின் மலர்ச்சிக்கு உதவுகையிலே ஏய்ந்த துன்பமும் இன்பமே என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே இழந்த தமிழீழம் ஈட்ட முனைந்தீரே இழந்த தமிழீழம் ஈட்ட முனைகையிலே உழந்த நெஞ்சிலும் உவகையே என்றீரே கரும்புலி மறவரே கரும்புலி மறவரே என்மொழி என்னினம் என்நிலம் என வாழ்ந்தீரே என் மொழி என்ன…
-
- 4 replies
- 747 views
-
-
-
- 1 reply
- 822 views
-
-
ஞானம் எனக்குப் பிறக்காதாநானவ் விறையை உணரேனாஊனுள் கலந்து உள்ளுருகிஉளத்தில் நிறைந்த தெய்வதத்தின்மோன நிறைவில் முழுதாகமூழ்கிப் பிறப்பின் முழுநோக்கைஆன மட்டும் புரிந்தந்தஅறிவின் தெளிவில் இவ்வுலகில்ஏனென் இருப்பு என்பதனைஎனது மனதில் உணரேனா?எங்கும் நிறைந்த சக்திதனைஎன்னைப் படைத்த திருவருளைஅங்கும் இங்கும் என்னாதுஅனைத்தும் நிறைக்கும் அன்புருவைபொங்கும் மகிழ்வில் உளமாரப்புரிந்து சிலிர்க்கும் நற்பேறைதங்கு தடைகள் இல்லாதுதமியன் அடைய முடியாதா?ஒன்றும் இல்லாச் சூனியத்தில்உதித்ததிந்தப் பேரண்டம்என்றோ ஒருநாள் உருவழிந்துஎங்கும் எதுவுமில்லாமல்இன்று நேற்று நாளையெனும்எதுவுமில்லாப் பரவெளியில்ஒன்றிக்கலந்து போய்விடுமாம்உயிர்ப்பேயற்று உறைந்திடுமாம்.என்றிவ்வாறாய் அறிஞா் பலர்எமக்கு விளக்கம் கூறுகிறார்நன்ற…
-
- 7 replies
- 1.7k views
-
-
கவிதை ஆர்வலர்களே அடியேன் அறிந்த கவிதை வகைகளும் அதற்கான சிறுவிளக்கமும் அவற்றுக்கு அடியேன் எழுதிய கவிதைகளும் தொடர்ந்து பதியப்போகிறேன். இது தற்கால எதிர்கால கவிதை ஆர்வலருக்கு சிறு தீனி போடும் என நம்புறேன் @ கவிப்புயல் இனியவன் 1) ஹைக்கூ 2) சென்றியு 3) லிமரைக்கூ 4) ஹைபுன் 5) குறள்கூ 6) சீர்க்கூ 7) கஸல் என்பவை முதலில் வருகின்றன
-
- 43 replies
- 5.8k views
-
-
கில்லாடி நாடு கெட்டுப் போனாலும் நமக்கென்ன என்றே தன் வீடு மட்டும் வாழ விதிவகுத்த கில்லாடி தொண்ணூறைத் தாண்டி தொண்டு கிழமானாலும் மண்ணாசை மாறாதெம் வாழ்வழிக்கும் கில்லாடி ஈழத்தமிழர்களை இனக்கொலைக்கு ஆளாக்கி வாழத்தன் சொந்தம், வழிவகுத்த கில்லாடி. மந்திரிகளாக்க மகள் மகன்மார் பேரர்களை செந்தமிழ் ஈழத்தைச் சிதைத்திட்ட கில்லாடி …
-
- 2 replies
- 1.1k views
-