Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. கடமையிடமும் கண்ணியத்திடமும் இலட்சியத்திடமும் போராட்டத்திடமும் துணிச்சலிடமும் வெற்றியிடமும் நெருங்கி இரு! கடனிடமும் துரோகத்திடமும் ஏமாற்றத்திடமும் பலவீனத்திடமும் பயத்திடமும் குற்றத்திடமும் விலகி இரு! எளிமையிடமும் தூய்மையிடமும் பொறுமையிடமும் விடாமுயற்சியிடமும் அன்பிடமும் அறிவிடமும் நிஜத்திடமும் நல்லொழுக்கதிடமும் நெருங்கி இரு! பொறாமையிடமும் மூட நம்பிக்கையிடமும் அறியாமையிடமும் தீய ஒழுக்கத்திடமும் கோழைத்தனத்திடமும் கஞ்சத்தனத்திடமும் தற்பெருமையிடமும் பேராசையிடமும் விலகி இரு! உரிமையானவர்களிடமும் உரிமைகளை உணர்வுகளை மதிப்பவர்களிடமும் தேவையான உறவுகளிடமும் தேவையான உணர்வுகளிடமும் நெருங்கி இரு! உரிமை இல்லாதவர்களிடமும் உரிமைகள் உணர்வுகளை உதாசீனம் செய்பவர்களிட…

  2. இன்னும் அவர்கள் இசைந்தும் அசைந்தபடியும் தான் இருக்கின்றனர். பெருங்குரலெடுத்து அழமுடியாத அவலம் கொண்டவர்கள் தினமும் மகிழ்வாய்க் கண்மூடித் தூங்கி அறியாதவர்கள் சிலநாட்களேனும் பாரங்களின்றிப் பசியாற முடியாதவர்கள் பசிக்கும் வயிறைப் பானைத் தண்ணீரில் நிரப்பியபடி பிள்ளைகள் வயிற்றை நிரப்பத் துடிப்பவர்கள் கோடை வெயில் கொடுமழை கண்டும் கால்கடுக்கத் தினம் கனவு நெய்பவர்கள் கணவனின் அணைப்பின்றி மனது தகிக்கையில் கண்டவர் பார்வையில் கசங்கித் துடிப்பவர்கள் அடிமுடி தேடியும் அகப்படா அன்பின் அகலமும் நீளமும் ஆழமும் அறியாத எரிதளலின் எச்சமாய் இருப்பவர்கள் இடர்கள் கடந்தும் கடக்காததுவாய் தொடரும் துயரில்…

  3. மாறி மாறி உருவெடுத்து வருகுதடா கொரோனா- ஊசி அடித்து உவத்திரவ கொரோனாவை துரத்தி விடுவம் என்றால் ஊசியார் கூட அவர் வாழும் காலம் வலுவிழக்க சண்டை போட முடியாமல் கொண்டு போன ஆயுதமும் முடிஞ்சு போக ஒளித்திருந்த கொரோனா ஓடி வந்து திரும்பக் குந்துது அட பாடுபட்டு ஒன்றுக்கு இரண்டு ஊசி போட்டும் தேடித் தேடி வருகுது திரும்பத் திரும்பத் கொரோனா மாறி மாறி உருவெடுத்து வருகுதடா கொரோனா போன கதையைக் காணோம் இன்னும் இனி ஆளுக்கு ஒரு ஊசி என்று அடுத்தடுத்து போட்டு வாழும் வரை இது தானோ ஆருக்குத் தெரியும். பா.உதயன் ✍️

  4. ஒரு கல்லுக்கும் உண்டு சுதந்திரம் ஒரு மரத்துக்கும் உண்டு ஒரு வார்த்தையிலும் உண்டு சுதந்திரம் பறவையின் இறக்கையிலும் உண்டு சட்டம் சொல்கிறது விதி என்று... அழிந்து போகும் வரை உடல் இருக்கும் போவதும் வருவதும் என நுரைத்து வரும் குமிழிகள் நொடியில் மறைவது போல இருக்கும் சுதந்திரம் அர்த்தமற்றது... மனம் அது மிகை கொள்ளாது ஓர்நாள் நிலைபெற்ற வழியில் வெடித்து வெளியே நடமாடும் கை விலங்கை உடைத்த பின் அது மாறும்... ஒன்று உள்ளே போகும் அல்லது வெளியே வரும் உலகம் புதிதென நம்பும் எல்லாவற்றையும் அறியத் துடிக்கும் மனம் வீசியதில் சிக்கியதில் தொடங்கும் கவனம்... கடந்த காலத்தின் அனுபவம் மனதோடு கலந்து விட்டதால் அது தான் முன்னால் வருகிறது இருப்பதோடு கலக்கிறது தடுமாறுகிறது மனம் ஆனால் …

  5. என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. எனி வரும் காலம் பற்றி முளித்திருக்கவே வந்த கனவிது. இப்படியும் நடக்கலாம்..! ***************** வேலை ரோபோக்கள் வீடெங்கும் திரியலாம் விரும்பிய சமையலறை காணாமல் போகலாம் மூன்று வேளையுணவும் மாத்திரையாகலாம் முளித்திருக்க கதிர்வீச்சால் உறுப்பும் திருடலாம். சந்திரன் செவ்வாய்க்கு ரொக்கட் பறக்கலாம் சரித்திர தேடல்கள் குழி வெட்டிப்புதைக்கலாம் சுவாசிக்கும் காற்றும் காசுக்கு விற்கலாம்-எம் சுயசரிதை சொல்ல சிப்பொன்றும் வைக்கலாம். பிறப்பு வீதத்தை ஐம்பதால் குறைக்கலாம் பிறந்த பின் வீரத்தை கோழையாய்யாக்கலாம் வயோதிப மரங்களை ஊசியால் சாய்க்கலாம் வயது வரமுன்னே பெரியவர் போலாக…

  6. எவரை எவர் ஏமாத்துகின்றனர் வளமை போலவே இந்த முறையும் இந்திய அதிகாரி அதே 13 க் கதையை சொல்லிப் போனார் எத்தனை முறை சொன்னார்கள் என்று எனக்கு ஞாபகம் இல்லை ஆனால் முப்பது வருட கதை இது இத்தனை வருடமாக இந்தியாவை ஏமாத்த இலங்கைக்கு மட்டும் தெரியும் இது சிங்கள இராஜதந்திரம் முப்பது வருடமாய் ஈழத் தமிழனை ஏமாத்த இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மட்டும் தெரியும் இது இன்னும் ஒரு இராஜதந்திரம் இனி வரும் காலமும் இன்னும் ஒரு பொருளாதார ஓப்பந்தம் எழுத இந்திய அதிகாரிகள் மீண்டும் வருவார்கள் அப்பவும் இன்னும் ஒரு முறை நினைவூட்டுவர் அந்த 13 க் கதையை சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் கதை போலே மீண்டும் வேதாள…

  7. உடைந்து போய் கிடக்கிறது தமிழர் தலைமை- உடைந்து போய் கிடக்கிறது தமிழர் தலைமை ஒட்டவும் முடியாமல் உயர்த்தவும் முடியாமல் கட்சிக்கு ஒரு கொள்கை இல்லை ஆளுக்கு ஒரு கொள்கை அவர் அவரே தனித் தனியே ஆனால் வீட்டுக் கட்சி என்று மட்டும் பெயராம் வீணாய்த் தான் முடிஞ்சுபோச்சு கதையாம் ஈழம் கேட்டு வந்தவர்கள் எல்லாம் தாளம் மாறிப் பாடுறாங்கள் இப்போ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலிக் காச்சல் பூனைக் காச்சல் இன்னும் விட்டுப் போகல்ல புதுசு புதுசாய் கதையை மட்டும் அளந்து தள்ளுறான் ஐயா சம்மந்தர் தம்பி சுமந்திரனோடு தனி வழியாம் அடுத்தவரின் சொல்லு ஒன்றும் கேட்பதில்லையாம் ஆங்கிலமும் சட்டமும் அவர்கள் மட்டும் …

  8. கருத்துக்கள உறவுகள் பதியப்பட்டது 36 minutes ag திறமைகள்..! ********** ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு திறமையுண்டு-மனிதா உன் திறமை எங்கே? கசக்கினால் இறக்கும் கறையான்கூட அதன் உமிழ்நீரில் மண்குழைத்து அடுக்குமாடி கட்டி அதற்குள் வாழுது புற்றெனும் வீட்டில். ஓரிடத்தில் இருந்தே வலை பரப்பி வீடு கட்டி வந்து விழும் உணவை உண்டு உயிர்வாழும் சிலந்தி. உயரத்தில் இருந்தும் ஒழுகாமல் தேனை அ…

  9. அனந்தியே.... அன்புக்குரிய... அரசியே.... அகிலத்தையும்.... அண்டதையும்.... அதிரவைக்கும்.... அழகியே..... அன்னமே....... அன்பும்... அடக்கமும்.... அங்கங்களாய் .... அமைந்த....... அதீத.... அற்புதமான.... அபூர்வ..... அமுதே..... அன்னையின்..... அனுமதியோடும்... அயலவரின்.... அரவணைப்போடும்... அம்மனின்.... அலங்காரமாய்.... அவையில்.... அமர்ந்திருப்பவளே.... அன்னையானாய்.. அப்பனானேன்.... அருமையான.... அரவிந்தனை.... அவதரித்தாய்... அவனியில்.... அரண்மனை..... அரசரானோம்..... அன்பானவளின் அங்கம்.... அவதியாகி.... அசையாது.... அடங்கிட.... அல்லல்பட்டு... அமைதியானது.... அடிமடியில்.... அவ்வுயிர்..... …

  10. என் அன்பு இதயங்களுக்கு..விரைவில் 2வது பாகமும் தொடரும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.நன்றிகள்

  11. விடிகின்ற விடியலிலே விரைவு வேண்டும் நமது வீதியிலே சுதந்திரமாய் தலை நிமிர்த்தித் திரிய வேண்டும் பறி போகின்ற நிலத்தினையும் காக்க வேண்டும் இப் பாரினிலே தமிழன் புகழ் ஓங்க வேண்டும் இழுக்கல்ல போராட்டம் தெளிதல் வேண்டும் இகல்வெல்ல ஒன்றிணைந்தே முயல வேண்டும் விழுகின்ற தலைமுறையும் வாழ வேண்டும் விடியலிலே புதுதேசம் மலர வேண்டும் சொந்தத்தில் அறிவுடைமை வளர வேண்டும் சோம்பலுற்ற அடிமை நிலை மாற்ற வேண்டும் சொந்தங்கள் தமிழ்மக்கள் எனும் எண்ணம் வேண்டும் சோர்வின்றி இனங்காக்க துடிக்க வேண்டும் வந்தேறிக் கூட்டங்கள் ஓட வேண்டும் வக்கற்ற ஆட்சியினை மாற்ற வேண்டும் குத்தகங்கள் செய்வோரை களைதல் வேண்டும் கூத்தாடிக் கூட்டங்கள் மாய வேண்டும். அறிவிழந்த மனிதரென்றே …

  12. வளையற் குவியல் ஒன்றைக்காட்டி வல்லமை கேட்டதோர் கவிதை. என் நெஞ்சிலுதித்ததை அங்கு பகிர்ந்தேன். இது கவிதையல்ல ஓர் ஏழையின் குமுறல். அது கீழே. ஓர் ஏழையின் குமுறல் கைநிறையப் போடக் கலர்கலராக் குவிச்சிருக்கு பைநிறையப் பணமிருந்தாப் பார்த்துப் பார்த்து வாங்கிக்கலாம். ஏழைக நம்பளுக்கு எதுக்கிந்த வளையலெல்லாம் வாழ வழியில்லையாம் வளையலொரு கேடா புதுப் புள்ளத்தாச்சிக்குப் போடுவாங்க வளைகாப்பு எட்டு மாதப் புள்ளத்தாச்சி எம் பொழைப்பு கல்லுடைப்பு கல்லுடைக்கும் கைக்கு காப்பு சரிவருமா? நாட்கூலி வாங்கி நானூத்தும் கஞ்சிலதான் ஆத்தா மனம் மகிழும் அவவயிறும் குள…

    • 6 replies
    • 1.2k views
  13. மிரட்டுகின்ற மிடியனைத்தும் மிரண்டு ஓட மிடிமையிலும் மிடுக்குடனே ஒற்றுமையைப் பேண வேண்டும் அறத்தின் நெறி காக்கின்ற செயலைச் செய்து மனிதர் நாம் மனிதத்துடன் வாழ வேண்டும்! அருமை பெருமையுடன் தாய்மொழியைப் பேண வேண்டும் அரும் பெரும் புகழை எமதாக்கிக் கொள்ள வேண்டும் இருள் சூழ்ந்த நிலை போக்கி என்றும் வாழ்வில் இழப்பின்றி எம்மவர்கள் எழுச்சியுடன் ஆள வேண்டும்! கருமமே கண்ணாகக் கொள்ள வேண்டும் களவின்றிப் பொய்யின்றி வாழ்தல் வேண்டும் இளகாதோர் மனமிளகச் செய்ய வேண்டும் இளமையிலே உரிமை தனை வெல்ல வேண்டும்! அரும்பாடு பட்டேனும் அறவோர் நாளும் அறிவுக்கண் திறக்க வழி செய்ய வேண்டும் அறமில்லாச் செயலுக்கு முற்றுப் புள்ளி அறிவு கொண்டே எவருமிங்கு வைக்க வேண்டும்! ந…

  14. அரசியல் ஆதிகாலம் தொட்டு எம்மை ஆட்டுவிக்கும் அரசியல் வேதனைக்குள் மக்கள்தன்னை விட்டுவிட்ட அரசியல். சாதியென்ற சகதியுள்ளே தாழ்ந்து விட்ட பேயரை மோதவிட்டி லாபம்காண முயலுகின்ற அரசியல் கட்சியென்ற பேரில்சேரும் கள்வர்தம்மை ஆட்சியில் எச்சரிக்கை ஏதுமின்றி ஏற்றிவைக்கும் மக்களை உச்சநிலை வறுமைக்கேற்றி ஒன்றுமற்ற கையராய் பிச்சையேற்க வைத்திடும் ப…

    • 0 replies
    • 741 views
  15. ஊருக்கு போய் வந்த தம்பர்..! (பாகம்2) ***************************** பெரு மூச்சுவிட்ட தம்பர் பின் தொடர்ந்தார்.. வெளிநாடுகளில் ஒருத்தரும் இல்லாத குடும்பங்களும் வேலை,வீட்டுத்தோட்டம் படிப்பென்று பண்போடுதான் சிக்கனமாய் வாழுதுகள் பாருங்கோ இங்கிருந்து சிலர் ஊருலாப்பென்று ஊருக்கு போய் எதோ சந்திர மண்டலத்துக்கு போய் வந்த மாதிரி வெளிநாட்டைப்பற்றி விளாசித்தள்ளுவார்களாம். பாருங்கோ. வந்து நிற்கிற கொஞ்ச நாட்களுக்குள்ள கிடாய் அடிச்சு கோழி அடிச்சு மதுப்போத்தல்ல விழுந்தடிச்சு பக்கத்து வீடுகளுக்கு பகட்டுக் காட்டி காசையெடுத்து வீசி …

  16. நீளங் கொண்ட வானத்தில் பறக்கும் நேசங் கொண்ட பறவைகளே என் தேசங் கொண்ட நிலையென்ன திரும்ப வந்தால் கூறுங்கள்! வாசங் கொண்ட மலரங்கே வண்ண இதழ்கள் விரிப்பதில்லை பேசுங்கிளியும் கிள்ளை மொழி பேசாதிருக்கு என்கிறார்கள்! வீசும் தென்றல் உடன் சேர்ந்த மாமரத்து விளையாட்டும் வேப்ப மரத்துக் குயிற்பாட்டும் நேசமுடன் நினைவிருக்கும் நாசம் எல்லை மீறியதாம் நாட்டில் காணா வாழ்வோடு! கூசும் கொலைகள் கொள்ளைகளும் குழவி மேனி கூடக் கலைத்தாடும் நீசம் எல்லை மீறுவதாய் நேரக் கேட்டே மனமும் துடிக்கிறதே! மாசும் கொண்டோர் மனமெல்லாம் மருகிப் பிறழ்வாய் மனத் தாகம் பூசும் முகங் கொள் வேடங்கள் புரிவோர் மலியப் பொருளுண்டோ! காசுக் கடிமையாய் போகும் கயவர் கைக…

  17. கொரோனாவுக்கு முன் 🤍🤍🤍 வீடுவரை உறவு.... வீதி வரை மனைவி... காடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ...? ( கவியரசு கண்ணதாசன் ஐயா) கொரோனாவுக்கு பின் 🤍🤍🤍 வீடுவரை உறவு.... வீடு வரை மனைவி..... வீடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ...? ( சிரிப்போம் சிந்திப்போம்) இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் இன்று ஒருவர் இறந்தால் அது கொரோனா எனப்படுகிறது யாருமே அவரை பார்க்க முடியாது எல்லோரும் வீட்டுக்குள்ளே அழுகை அரசு உடல் கூட கொடுக்காது

  18. ஊருக்கு போய்வந்த தம்பர்..! *********************** ஊருக்கு போனபோது ஒருபோத்தல் பியர் அடிக்க பாருக்கு.. (Bar) போன்னான் பாருங்கோ.. அங்கவந்த சின்னம் சிறுசு பெருசுகள் எல்லாம் தாள் தாளா எறிஞ்சு-பின் தண்ணியில குளிச்சு தவளுதுகள். ஒரு கூட்டம் உட்காந்து காசுவந்த கதை சொல்லி கதைச்சு பெருமைபேசி கஞ்சா, புகையில என புகையாக் கக்குதுகள். பிச்சைக்காஸ் அனுப்பினான் இவனுக்கு பின்னால போனவன் கொட்டிக்குவிக்கிறானாம் என தான் கொடுத்தனுப்பினவன் போல வெட்டி முறிக்கிறான் ஒருத்தன் விட்டுத்தொலை மச்சான் நீ மற்றவனுக்கு போன் போடு வந்தா மலை …

  19. மறைந்த ஈழத்துப் பெருங்கவிஞர் மகாகவியவர்கள் நானறிந்தவரை குறும்பாக்களை தமிழில் முதன்முதல் அறிமுகம் செய்தவர். அவரைப்பின்பற்றிப் பலரும் பின்னர் குறும்பாக்களையெழுதத் தொடங்கினார்கள். குறும்பா என்பது குறுகியா பாவாகவும் அதேவேளை குறும்பு கலந்ததாகவும் இருந்தாலேயே குறும்பா இலக்கணத்துக்கு உட்படும். எமது ஈழக்கவிஞர் மகாகவியைப் பின்பற்றி நானெழுதிய தற்போதைய யுகே காலநிலைக்கேற்ற குறும்பாவை இங்கு தருகிறேன். நண்பர்களும் இதை முயற்சித்துப்பார்க்கலாம். நாற்படையுங் கொண்டுயர்ந்த நாடு -யுகே நாணா நவமாதர் வீடு காற்தொடையின் கவடுவரை காரிகையர் கவுணுயரும் காலமிங்கு சம்மர் கடுஞ் சூடு

  20. நம்பி வாங்கிய நாய்..! ******************* பஞ்சாயத்து தலைவர் பதிவிலிருந்து.. சாந்தமில்லாத சப்பை முகம் கொண்ட வெளிநாட்டு நாயொன்றை விரும்பி வாங்கினேன். கடனாக.. அயல் வீட்டுத் தொந்தரவை அடக்கலாமென்று.. வாசலில் காவலுக்கு வைத்தால் வரும் எதிரி அனைத்தையும் வரவிடாமல் தடுக்குமென்று.. ஆனால் நாயிப்போ எனது நடு வீட்டுக்குள் கிடந்து.. நான் வளர்க்கும் பிராணிகளை நடு நடுங்க வைக்கிறது. நாளைக்கு என் வீட்டில் நான் இல்லை என்றாலும் நான் பட்ட கடன் சொல்லி நாய் மட்டும் …

  21. தடையெனவே இருந்தவைகள் எல்லாமே தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும் வாழ்விற்கு வளம் கொழிக்கும் எல்லாமே வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்! சுமையெனவே துயர் தந்த எல்லாமே நகரட்டும் விலகட்டும் மறையட்டும் நல்லோர்க்கு நலம் சேர்க்கும் எல்லாமே பரவட்டும் தொடரட்டும் பலம் பெறட்டும்! பொய்மைக்கு துணை போன எல்லாமே உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும் உண்மைக்கு வலுச் சேர்க்கும் எல்லாமே நிறையட்டும் நிமிரட்டும் வலுக்கட்டும்! கீழ்மைக்குத் துதி பாடும் எல்லாமே கிழியட்டும் எரியட்டும் அழியட்டும் மேன்மைக்கு எழில் கூட்டும் எல்லாமே வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்! எழில் கொண்டு எழில் கண்ட பொழில் கொள் இப்பூவுலகிலே எழில் உளங்கொண்டு வாழும் நல்மாந்தர் எல்லாமே வாழட்…

  22. என் அன்புள்ள ரசிகனுக்கு இலக்கியக் கவிப்பேரரசு எழுதும் கடிதக் கவிதை 📝📝📝 ஒரு கவிஞன் தன் வலிகளை.... வரிகளாய் எழுதுகிறான் .... ஒரு ரசிகன் அதை ஆத்மா ... உணர்வோடு ரசிக்கிறான் ..... கவிதை அப்போதுதான் ... உயிர் பெறுகிறது .....! # என் உயிரை உருக்கி .... நான் எழுதும் கவிதைகள் என்னை ஊனமாக்கி மனதை ... இருளாக்கி இருந்தாலும் .... கவிதைகள் உலகவலம் வருகிறது ... உலகறியச் செய்த ரசிகனே ... உன்னை நான் எழுந்து நின்று .... தலை வணங்குகிறேன் .....! # என்இரவுகளின் வலி...... விழித்திருந்த கண்களுக்குத் தெரியும் .... பகலின் வலி அவள் எப்போது .... இரவில் கனவில் வருவாள் ....? ஏங்கிக்கொண்டிருக்கும்..... இதயத்துக்குப் புரியும் …

  23. மரம் சொன்ன குறள் நன்றி மறப்பது நன்றன்று.. *********************** நான் பெரிய மரமாய் இருந்தாலும் என்னில் கூடு கட்டி குடி வாழும் பறவையினத்தை துரத்தாமல் மதிக்கிறேன். என்னை இதே இடத்தில் வாழவைத்தது ஒரு பறவை. அதன் எச்சத்தில் இருந்தே நான் மரமானேன். மனிதர்களே நீங்களும் யோசியுங்கள் ஏதோ ஒரு வளியில் யாரோ ஒருவரின் உதவி கிடைத்திருக்கும். அதை மறக்காதே என இந்தத் திருக்குறளை சொல்லி சிலுப்பியது மரம் …

  24. ஒரு சோடி அணுக்கவிதை 💙💙💙 உன் சிரிப்பில் கருகாமல்..... நெருப்பில் கருகியிருக்கலாம்.... காயம் தான் இருந்திருக்கும்.... வலி காலத்தால் இறந்திருக்கும்.... 💚💚💚 நீ பிரிந்து விட்டாய்... என்று பலமுறை.... சொல்லிவிட்டேன்.... சொறனை.... கெட்ட என் இதயம்... நீ வருவாய்யென..... கதவை திறந்துவைத்து... காத்துக்கொண்டு இருக்கிறது......! 💙💙💙 இலக்கியக் கவிப்பேரரசு இனியவன் இலங்கை யாழ்ப்பணம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.