Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. "பிரியமான தோழிக்கு [நண்பிக்கு]" இலங்கையின் தலைநகரமான கொழும்பு நகரத்தில், வெள்ளவத்தை என்ற குட்டி யாழ்ப்பாணத்தில், இனியா மற்றும் ஓவியா என்ற இரண்டு நெருங்கிய நண்பிகள் வாழ்ந்தனர். அவர்கள் குழந்தை பருவத்திலிருந்தே பிரிக்க முடியாதவர்களாக பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தனர், சிறு குழந்தை பருவத்தில் ஒன்றாக விளையாடியும், பின் ஆரம்ப பாடசாலையிலும் உயர் பாடசாலையிலும் ஒன்றாக கற்றனர். அவர்கள் இருவரும் தங்களுக்குள் உள்ள ஒவ்வொரு ரகசியத்தையும், கனவுகளையும், சாகசங்களையும் ஒன்றாக ஒளிவு மறைவு இன்றி பகிர்ந்து கொண்டனர். அவர்களின் பிணைப்பு பிரிக்க முடியாதது, அவர்கள் வெள்ளவத்தையின் இரட்டையர் என்று கூறும் அளவுக்கு அங்கு பிரபலமாக இருந்தனர். பறவைக்கு கூ…

  2. அவனுக்கு வயது 44. ஜனவரி 26 மாலை 6:15 மணியளவில் Ulm நகரத்தில் Muensterplatz இல் உள்ள ஸ்டார்பக்ஸ் கோப்பிக் (Starbucks Coffee) கடைக்குள் நுளைந்த போது அவனிடம் துப்பாக்கி ( HK416) ஒன்றும், கைத்துப்பாக்கி ஒன்றும் இரண்டு கத்திகளும் இருந்தன. கோப்பியை ருசித்தவனுக்கு இப்பொழுது சிகரெட் தேவைப்பட்டது. கோப்பிக் கடைக்குள் புகைக்க அனுமதி இல்லை. கடைக்கு வெளியே போனால்தான் சிகரெட் பிடிக்க முடியும். எழுந்து கொண்டான். தனது மேசைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு தம்பதியிடம், “நான் புகைக்க விரும்புகிறேன். எனது பையைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கனிவுடன் கேட்டுக் கொண்டான். வாயில் இருந்து புகை தானாகவே வரும் அளவுக்கு வெளியே குளிர் இருந்தது. சிகரெட் புகையையும் அதனுடன் கலந்து விட்டான். கோப்ப…

  3. மனிதம் இன்னும் ..... அண்மையில் சென்ற வெள்ளிக் கிழமை சாய் சென்டர் இல் ஒரு திருமண விழாவுக்கு சென்று இருந்தேன். நல்ல மழை பெய்து ஓய்ந்திருந்த வேளை.,நேரத்துடன் சென்றதால் அங்கும் இங்கும் விடுப்பு பார்த்து கொண்டிருந்தேன். ஒரு வயதான தம்பதிகள் கணவனுக்கு எண்பது வயதுக்கு மேல் இருக்கும் மனைவியை கவனமாக நுழை வாயில் அருகில் இறக்கி விட்டு அவர் கார் தரிப்பிடம் தேடி சென்றுவிடடார். மனைவி கைத்தடியுடன் நிற்கிறார் . அவரருகே ஒரு பெண்மணி இறங்கி உள் நுழைய முற்படட போது வயதான மனைவி என்னை ஒரு இருக்கையில் உட்க்காரவைக்கமுடியுமா எனக் கேடடார். குளிருக்குள் நிற்க சிரமமாயிருக்கிறது என்றார் . பெண்மணியும் வாருங்கள் உள்ளே செல்வோம் என அழைத்து, உயர்த்தி மூலம் (லிப்ட்) அழைத்து சென…

  4. நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கன்ட கந்தரை சிட்னி முருகனின்ட வசந்த மாளிகையில் சந்திக்க முடிஞ்சுது.மனுசனுக்கு நல்லா வயசு போய்விட்டது பஞ்சு மெத்தை தலைமுடியுடன் முதியோருக்கு ஒதுக்கப்பட்ட கதிரையில் அமர்ந்திருந்தார். அருகில் சென்று " எப்படி சுகம் அண்ணே ,என்னை தெரியுதோ" என்னை நன்றாக சில நிமிடங்கள் உற்றுப்பார்த்தவர் "அட நீயே உலக தமிழரின் கருத்துக்களத்தில் கிறுக்கி கொண்டிருந்த கிறுக்கன் தானே உன்ட புனை பெயர் புத்....தானே" "கி.. கி.. .ஒம் அண்ணே" "நல்லா மெலிந்து போனா ஏதாவது வருத்தம் கிருத்தமே " "சீ சீ டயபட்டிக்கு மருந்து எடுக்கிறன் அது தானோ தெரியவில்லை" "நீ இங்கிலிஸ் மருந்தே எடுக்கிறாய் " "ஒம் " "அடே விசரா! நானும் அதை தான் எடுத்…

  5. Started by putthan,

    கிணற்றடியில் குளித்து கொண்டு நின்றவனுக்கு ,தம்பி குளிக்கும் பொழுது அந்த தேசிக்காய் மரத்துக்கு வாய்க்கால் தண்ணியை வெட்டிவிடு என தந்தை சொன்ன ஞாபகம் வரவே ஒடிப்போய் மண்வெட்டியை கொண்டு வந்து தண்ணியை திருப்பிவிட்டான். காலில் சேறு அதிகமாக படிந்துவிடவே கிணற்று படியில் தேய்த்து கழுவிவிட்டு மீண்டும் குளிக்க தொடங்கினான்.. "நீ உன்னை அறிந்தால் நீ உன்னை " என்ற பாடலை பாடியபடி வாளியை கிணற்றினுள் இறக்கினான் ,தொம் என கீழே விழுந்தது வாளியினுள் தண்ணீர் நிறைந்தவுடன் " உன்னிடம் மயங்குகிறேன்" என்ற அடுத்த பாடலை பாடியபடி இழுக்க தொடங்கினான் ,பக்கத்து வீட்டு வளவில் இருந்த கிணற்றடியிலிருந்து கண்ணா ஆரிடம் மயங்கிறாய் என்ற குரல் கேட்க வெட்கத்தில் "இல்லை அண்ரி சும்மா ரேடியோவில் போகின்றது அதை …

      • Haha
      • Like
    • 11 replies
    • 946 views
  6. அச்சம் தவிர் ------------------- முன்னரே ஒரு தடவை தொலைபேசியில் கதைத்திருந்தாலும், அவனை நேரே பார்க்கும் போது, குறிப்பாக அவனின் நீண்ட தாடி அது நெஞ்சு வரை விழுந்திருந்தது, என்னவெல்லாமோ நினைக்க வைத்தது. அவனின் பெயரிலே அவன் யார், அவனின் மார்க்கம் என்னவென்று தெளிவாக இருக்கின்றது. ஆனாலும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வேலைக்கு வரும் போதும் அப்படியே, அதே தோற்றதுடனேயே வருவார்கள் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. தனியாக வந்து வேலையில் சேர்ந்த அவன் சில மாதங்களின் பின்னர் அவனின் மனைவியை இங்கு வரவழைத்தான். இந்த நாட்டிற்கு உள்ளே வருவதற்கு மிக இலகுவான வழிகளில் ஒன்று இங்கு சட்டரீதியாக வேலை ஒன்றில் இருக்கும் கணவன்மார்களின் மனைவிகளுக்கு உண்டு. அந்த விசாவ…

  7. வேலுப்பிள்ளைமார் ------------------------------- காலையிலேயே வந்து விடுங்கள் என்று அவன் சொல்லியிருந்தான். இரண்டு தடவைகள் தொலைபேசியில் கூப்பிட்டு ஞாபகப்படுத்தினான். காலை 10 மணிக்கு முன்னரே அங்கே நிற்க வேண்டும், அப்புறம் அங்கிருந்து திரும்பி வர பின்னேரம் ஆகி விடும், அன்றைய பொழுது முழுவதும் இப்படியே போய்விடப் போகின்றது என்று தெரிந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை இப்படியாகிப் போவதில் இஷ்டமில்லை தான், ஆனாலும் அவனை மறுக்க முடியவில்லை. நீங்கள் இருவரும் வந்து பாப்பாவை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான். இவர்கள் நேர ஒழுங்கில் மிக மோசமானவர்கள். உலகில் இந்தளவிற்கு நேரத்தை துஷ்பிரயோகம் செய்யும் வேறு எவரையும் என் அனுபவத்தில் நான் கண்டத…

  8. புதிதாக வந்தவர்கள் -------------------------------- அந்த வீட்டின் முன்னால் அவ்வளவு ஆட்கள் இதுவரை கூடினதே இல்லை. இருபது வருடங்களுக்கு மேலாக இதே தெருவிலேயே, ஒரே வீட்டிலேயே நான் இருக்கின்றேன். அந்த வீடும், அங்கு இருப்பவர்களும் அதைவிட இன்னும் அதிக காலமாக அங்கே இருக்கின்றார்கள். அங்கு இருப்பவர்கள் இருவரும் வயதான கணவன் மனைவி. நாங்கள் இங்கு குடிவரும் போதே அவர்கள் வயதானவர்களாக இருந்தார்கள். சில வருடங்களில், வருடம் முழுவதும் கூட, அவர்களின் வீட்டிற்கு எவரும் வருவதில்லை. ஆட்கள் வந்த வருடங்களில் கூட ஓரிருவரே இதுவரை வந்து போயிருக்கின்றனர். ஆரம்பத்தில் அவர் என்னுடன் அவ்வளவாகப் பழகவில்லை. பிள்ளைகளும், நானும் ஒருநாள் தெருவில் பந்து விளையாடிக் கொண்டிருந்தோம். ப…

  9. கறுப்புச் சட்டை ------------------------ அறிவித்தலில் இருந்த திகதிகளை கழித்துப் பார்த்தால், அவருக்கு 55 வயதுகள் தான் ஆகியிருந்தது என்று வந்தது. அடப் பாவமே, இப்படி இடைநடுவிலேயே போய்ச் சேர்ந்து விட்டாரே என்ற மெல்லிய கவலை பற்றிப் பிடித்தது. அவரை சில தடவைகள் அங்கே இங்கேயென்று பார்த்திருக்கின்றேன். ஆனால் பழக்கம் எதுவும் இல்லை. ஒரு தடவை கூட அவருடன் உரையாடியதும் இல்லை. நல்ல மனிதன் என்று அவர் உயிருடன் இருக்கும் போதே பலரும் சொல்வார்கள். தோற்றத்தில் இன்னும் ஒரு பத்து வயதுகள் அதிகமாகவே தெரிந்திருந்தார். எப்படி இறந்திருப்பார் என்று அறிவித்தலில் போட மாட்டார்கள், ஆனால் காலமானார் என்று இருந்தது. அகாலமானார் என்று இல்லை, ஆகவே விபத்து என்று எதுவும் இல்லை. காலம…

  10. மரியானா அகழி ------------------------- அவன் அந்த ஒழுங்கையால் ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது போய் வந்து கொண்டிருந்தான். போகும் போது என்னையும் வா என்று வலியவே துணைக்கு கூட்டிக் கொண்டு போனான். அந்த ஒழுங்கையின் முடிவில் ஒரு கோயில் இருந்தது. ஆனால் இருவரும் கோயில் போய் சாமி கும்பிடுகிற ஆட்கள் இல்லை. ஏன் இந்த ஒழுங்கையில் தினமும் வருகின்றோம் என்று பல நாட்கள் நான் நச்சரித்த பின், அவன் உண்மையைச் சொன்னான். அந்த ஒழுங்கையில் இருந்த பெண் பிள்ளை ஒன்றின் பின்னால் அவன் சுத்துகின்றானாம் என்று அவன் சொன்னான். அந்தப் பிள்ளையும் எங்களின் வகுப்பு தான். அந்தப் பிள்ளையின் குடும்பம் 83ம் ஆண்டுக் கலவரத்தில் கொழும்பில் இருந்து இடம்பெயர்ந்து ஊருக்கு வந்தவர்கள். என்னை ஏன் கூட்டி…

  11. அடிப்படை அனுபவம் ---------------------------------- பல வருடங்களின் முன் மகனுக்கு எட்டு வயதாக இருந்தது. அன்று ஒரு பிள்ளை எட்டு வயதில் எட்டு வித்தைகளையாவது கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று இந்தச் சூழலில் ஒரு நிர்ப்பந்தம் இருந்தது. எட்டு வயதில் ஒரு அஷ்டாவதானி போல. இன்று சூழலின் நிர்ப்பந்தம் இன்னும் அதிகமாகிவிட்டது. ஒவ்வொரு பிள்ளைகளையும் சதாவதானிகளாக மாற்றாமல் இது ஓயாது போல. எனக்கு இதில் துளியளவும் நம்பிக்கையும் இல்லை, கூட்டத்துடன் சேர்ந்து ஓடுவதற்கான பொறுமையும் அன்று இருந்திருக்கவில்லை. ஊரில் நீச்சலை நானாகவே தான் சிறு வயதில் கற்றுக் கொண்டேன். கடலில் தான். சேர்ந்து போயிருக்கின்றோம், ஆனாலும் அவரவரே நீந்திப் பழகினோம். ஒரு நாள் இரண்டு பாகம் கடலில் கீ…

  12. ஆகஸ்ட் இரண்டு -------------------------- சந்தியில் நண்பன் ஒருவன் பலசரக்கு கடை வைத்திருந்தான். அந்த நாட்களில் ஒரு நாளின் சில பகுதிகளை அங்கே செலவிடுவதும் எங்களின் வழக்கமாக இருந்தது. பல சமயங்களில் நண்பனின் இரு சகோதர்களும் கூட அங்கே வியாபாரத்தில் நிற்பார்கள். எங்களுக்குள் ஒரு சில வயதுகளே இடைவெளி. கடை ஒரு அமைவான இடத்தில் இருந்தது. புதிய சந்தைக் கட்டிடத்தில் சந்தியை நோக்கிய திசையில் கடை இருந்தது. கடையில் இருந்து பார்த்தால் சந்தி முழுவதும் தெரியும். அப்பொழுது நான் சில தனியார் கல்வி நிலையங்களில் படிப்பித்துக் கொண்டிருந்தேன். மிகுதி நேரங்களில் இந்தக் கடை, பந்தடி, கடற்கரை, கோவில் வீதி, சந்தியில் மற்றும் ஊரில் இருக்கும் திண்ணைகள், கல்யாண வீட்டுச் சோடனைகள…

  13. "அமைதியின் கதவு திறக்கட்டும்" இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய மீனவ கிராமத்தில், வங்காள விரிகுடாவின் அலைமோதும் நீருக்கும் தீவின் பசுமையான காடுகளுக்கும் இடையில், ரவி என்ற இளம் மீனவன் வசித்து வந்தான். ரவி தனது 25 வருட வாழ்க்கையில் மோதல்களையும் கொந்தளிப்பையும் தவிர வேறு எதையும் அறிந்திருக்கவில்லை. வடக்கும் கிழக்கும் என்றும் சண்டை, வலி மற்றும் பயம் ஆகியவற்றிற்கு உள்ளாக்கிக் கொண்டு இருக்கும் இந்த மண்ணில் தான் அவன் பிறந்தான். பல தசாப்தங்களாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் ஒரு மிருகத்தனமான உள்நாட்டுப் போரால் சிதைக்கப்பட்டன. இந்த மோதல் ரவி போன்ற எண்ணற்ற குடும்பங்களுக்கு சொல்லொணாத் துன்பத்தையும், இழப்பையும்…

  14. "பிரியமான தோழிக்கு [காதலிக்கு]" இலங்கை, யாழ் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில், அன்று மகிழன் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் பொதுவாக கருணையும், இரக்கமும் கொண்டவன். அவன் இளம் பொறியியலாளராக இருந்தும் எழுத்தின் மீதும் ஆழ்ந்த ஆர்வம் கொண்டு இருந்தான். ஒரு நாள் யாழ் நூலகத்தில், இலக்கிய புத்தகங்களை அவன் கண் மேய்ந்துகொண்டு இருந்தபொழுது, தற்செயலாக அவன் கண்ணில் பட்டவள் தான், இன்று அவனின் பிரியமான தோழியான, அன்பு மனைவியான இலக்கியா. இலக்கியத்தில் முதுநிலைப் பட்டம் பெற யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருக்கும் அழகான மற்றும் புத்திசாலி இளம் பெண் அவள். இருவர் கண்களும் அங்கு தங்களை அறியாமலே ஒருவரை ஒருவர் மேய்ந்தன. 'ஹாய்' என்று மகி…

  15. "என்ன தவம் செய்தேனோ...!" நான் சாதாரண வகுப்பு மாணவன். நான் எங்கள் சுண்ணாம்பு கல் வீட்டின் திறந்த விறாந்தையில் உள்ள குந்தில் இன்னும் படுத்து இருக்கிறேன். நேரம் காலை ஆறு மணி. கதிரவன் எட்டிப்பார்க்க தொடங்குகிறான். இன்னும் அம்மா தேநீர் போட அடுப்படிக்கு போகவில்லை. இன்று வெள்ளிக்கிழமை அது தான் அம்மா குளித்து, இப்ப எம் முற்றத்தில் உள்ள துளசியை வளம் வந்து பூசை செய்து கொண்டு இருக்கிறார். நான் படுத்தபடியே, தலைமாட்டில் நான் வைத்திருந்த பாக்கெட் ரேடியோவை இலங்கை, இந்தியா காலை செய்திகள் அறிய திருப்பினேன். "பாலியல் வன்கொடுமை வேகமாக அதிகரித்து வரும் இடங்களில் ஒன்று இன்று இந்தியா. சமீபத்திய ஆய்வின் படி இந்தியாவில் ஒருநாளைக்கு 106 பாலியல் வல்லுறவுகள் நடைபெறுகிறது.…

  16. குரு பார்வை -------------------- அது எங்களின் பரம்பரைப் பள்ளிக்கூடம், அங்கே தான் படிக்க வேண்டும் என்று சொல்லியே அங்கே முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். வீட்டிலிருந்து அந்தப் பாடசாலைக்கு போகும் வழியில் இன்னும் இரண்டு பாடசாலைகள் இருந்தன. ஆனாலும், அவை இரண்டையும் தாண்டிப் போய், பரம்பரையை தொடரும் கடமை எனக்கு அந்த தூரத்துப் பாடசாலையில் இருந்தது. அத்துடன் அங்கே சில ஆரம்ப வகுப்புகள் மட்டுமே இருந்தன. அந்த வகுப்புகள் முடிந்த பின்னர் என்ன செய்வதென்ற இக்கட்டான நிலை இந்தப் பரம்பரையில் இதற்கு முன்னர் ஏற்பட்டிருக்கவில்லை. அந்த நிலை எனக்கு ஏற்படும் போல இருந்தது. பின்னர், வேறு வழியில்லாமல், சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பெரிய பாடசாலைக்கு, பெரிய வகுப்புகளுக்காக …

  17. "ஆசையில் ஓர் காதல்" மலை அடிவாரத்தில் உஷா என்ற அழகிய இளம் பெண், தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். அவள் நீண்ட கருங் கூந்தலையும் பிரகாசிக்கும் அழகிய கண்களையும் கொண்டு இருந்தாள். அவள் ஒரு உண்மையான காதல் தனக்கு கிடைக்க வேண்டும் என்று பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து ஏங்கி வந்தாள். ஆனால் இப்ப அவள் பல்கலைக்கழகம் போன பின்பும், இன்னும் அப்படியான ஒரு காதலை அவளால் அடைய முடியவில்லை. ஒரு நாள், பல்கலைக்கழக விடுமுறை நாளில், தன்னந்தனிய சிறு பத்தைகள் நிறைந்த காட்டுப்பகுதியில், இயற்கையின் அழகையும் அங்கு பறந்து திரியும் பறவைகளையும் ரசித்தபடி நடந்து சென்றாள். அப்பொழுது அவளுக்கு எதிராக நல்ல உயரமும் அழகிய வலிமை பொருந்திய உடல் அமைப்பும் கொ…

  18. "நிலவே முகம் காட்டு .. " ஞாயிறு, செப்டம்பர் 23, 2018, நிலாவில் பாபாவின் முகம் தெரிவதாக சென்னை நகரம் இரண்டு மணித்தியாலத்துக்கு ஆர்வமும், அதிர்ச்சியும் அடைந்தது. பலர் கைகளில் டெலஸ்கோப் இருந்தது. நிலாவையே பார்த்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் பிரத்தியேக கண்ணாடி அணிந்தும் இருந்தனர். அப்போது அவர்களில் சிலர், "ஆமாம்.. பாபா முகம் தெரிகிறது" எனக் கூறி பரவசப்பட்டனர். ஒருசிலர் நிலாவை பார்த்து வணங்கவே ஆரம்பித்து விட்டனர். எனக்கு இவர்களை பார்க்க வேடிக்கையாக இருந்தது, நான் உயர் வகுப்பு படிக்கும் கூலித் தொழிலாளியின் மகன். எங்கள் குடிசைக்கு கொஞ்சம் அருகில் தான், ஒரு மாட மாளிகையில் ஒரு கோடீஸ்வரர் வாழ்ந்து வாரார். அவர் குடும்பமும் தமது மொட்டை மாடியி…

  19. ஆதித்தாயின் மொழி --------------------------------- 'ஆதித்தாய்' என்றொரு சிறுகதையை ஈழத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் சில வருடங்களின் முன்னர் எழுதியிருக்கின்றார். எனக்கு மிகவும் பிடித்த ஈழத்து எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்கள். செங்கை ஆழியானையும் மிகவும் பிடிக்கும். இன்னும் சிலரையும் பிடிக்கும். முத்துலிங்கம் ஒரு எழுத்தாளர் என்பதை விட, அவரை ஒரு கதை சொல்லி என்றே சொல்லவேண்டும். அவருடைய பல கதைகளை வாசிக்கும் போது, இந்தக் கதை எங்கள் வீட்டில், அக்கம்பக்கத்தில், ஊரில், உலகத்தில் நடந்த, எங்களுக்கு முன்னரேயே தெரிந்த நிகழ்வுகளாகவே தெரியும். ஆனாலும் அவர் அதை சொல்லும் விதமும், அதை முடித்து வைக்கும் விதமும் ஒவ்வொரு தடவையும் அலுக்காத ஒன்று. விளையாடி விட்…

  20. "காதல் கடிதம்" காதலின் சின்னம் காதல் கடிதம் என்பார்கள். அங்கு தான் ஒருவர் மற்றவர் மேல் உள்ள மோகம் அல்லது அழகு வர்ணனையை தங்கு தடை இன்றி, வெட்கம் இன்றி, வெளிப்படையாக கூறமுடியும். யாருக்கு தெரியும் என் காதல் தவறான புரிதலுடனும், பிழையான இடத்தில் சேர்ந்த காதல் கடிதத்துடனும் மலர்ந்தது என்று! “என் அன்பிற்கினியவளே, அழகின் தேவதையே என் மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடுகிறேன். அதை நீ எப்ப அறிவையோ நான் அறியேன்? எனக்கு முன்னால் உன்னைப் பார்க்கிறேன், நான் தலை முதல் கால் வரை உன்னை அன்போடு மெல்ல வருடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டு உன்னை ரசிக்கிறேன், ‘அன்பே! உண்மையாக உன்னைக் காதலிக்கிறேன்! உன்னுடைய இனிமை நிறைந்த தனி…

  21. "பார்வை ஒன்றே போதும்" திடீரென எதேச்சையாக இருவர் சந்திக்கும் பொழுது அவர்களின் கண்கள் அப்படியே ஒருவரை ஒருவர் அசையாமல் கணப்பொழுது நின்றுவிட்டது என்றால், அதுவும் இளம் ஆணும் பெண்ணும் என்றால், 'கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!' என்பதைவிட அது வேறு ஒன்றாக இருக்க முடியாது. இதை பட்டாசு வெடிப்பது போல இதயங்கள் வெடிக்கின்றன என வர்ணிப்பார்களும் உண்டு. இருவரின் தனித்துவமான வெளிப்படையான இயல்புகள் ஒருங்கினையும் பொழுது மின்சாரம் பாய்வது போல அந்த உணர்வு தானாக ஏற்படுகிறது. அது அப்படியே இருவரையும் விழுங்கிவிடுகிறது என்று நான் முன்பு படித்த கவிதை ஒன்று எ…

  22. ஆரண்ய காண்டம் ---------------------------- இராமன் நாடு விட்டு காடு போய், அங்கு காட்டில் வாழ்ந்த நாட்கள் தான் ஆரண்ய காண்டம் என்று படித்திருக்கின்றோம். அங்கே காட்டில் கொடிய அரக்கர்களும், அசுரர்களும் இருந்தார்கள். அவர்கள் வனத்தில் தவமிருந்த அப்பாவி முனிவர்களுக்கு தொல்லைகளும், கஷ்டங்களும் கொடுத்தார்கள். இராமன் அந்த துஷ்டர்களைக் கொன்று அழித்தார் என்று அந்த ஆரண்ய காண்டத்தில் இருக்கின்றது. அப்படியே இராவணன் வந்து சீதாப்பிராட்டியை கவர்ந்து சென்றதும் அதே ஆரண்ய காண்டத்தில் தான். 'ஆரண்ய காண்டம்' என்னும் படம் தான் தமிழில் வந்த மிகச் சிறந்த பாதாள உலகம் பற்றிய, தாதாக்களை, சண்டியன்களை, ரவுடிகளை பற்றிய படம் என்று பல வருடங்களின் முன் ஒரு எழுத்தாளர் எழுதியிருந்த…

  23. "உதவும் கரங்கள்..!" நாம் ஒரு இருட்டில் தொலைந்து போனால், யாராவது ஒருவர் கொஞ்சம் வெளிச்சம் தந்து பாதுகாப்பான வழியை காட்டினால் நல்லது. ஆமாம் ஒரு சிறிய ஒளி, எங்கள் வீட்டிலும் நாம் வாழும் உலகிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், முதலில் நாம் அதற்கு உடந்தையாக இருக்கவேண்டும். அன்பான சொற்களால், இதயத்தை மகிழ்வாக தொடுவதால், காது கொடுத்து கேட்பதால், அல்லது இதயபூர்வமாக உதவும் கரங்களால் இதை செய்யமுடியும். அதையும் பணத்தை விட, விளம்பரம் செய்வதை விட, முழுக்க முழுக்க அன்பினால் செய்யவேண்டும். அங்கு ஆடம்பரமான மேன்மை அல்லது பாசாங்குத்தனம் இருக்கக் கூடாது. மற்றவர்கள் வேண்டும் என்றால், உங்களை பெருமையாக கூறட்டும். எதோ தன் சுய பெருமைக்கு, பெரிதாக செய…

  24. "குடும்பம் ஒரு கோயில்" "கோவில் கூடாது என்று சொல்லவில்லை. கோவில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிட கூடாது" - பராசக்தி உண்மையில் கலைஞர் மு கருணாநிதியின் இந்த வசனம் அன்று எனக்கு விளங்கவில்லை. நான் அதை பெரிதுபடுத்தவில்லை. எதோ சந்தையில் வாங்கும் தலையணையில் கவர்ச்சியாக எழுதி இருக்கும் ஒரு வசனம் போல் அதை எடுத்துக்கொண்டேன். வீடு என்பது நான் இரவில் உறங்கும் இடமாக, வீட்டு புறா மாதிரி, தினம் திரும்பும் ஒரு வசிப்பிடமாக கருதினேன். வீடு என்பது கட்டாயம் ஒரு குடும்பத்தின் அடையாளம் என்று கூட கருதலாம். ஆமாம் நான் பாதுகாப்பாக, குடும்ப வலைக்குள் அகப்பட்டவனாக, அதே நேரம் பொதுவாக மகிழ்வாக, அன்பு விளையும் ஆலயமாக உணர்ந்தேன். ஆமாம் ’ஆ’ என்றால் ஆன்மா.’லயம்’ எ…

  25. லுங்கி டான்ஸ் ---------------------- புதுச் சாரம் தான் புது உடுப்பு என்ற எண்ணம் எனக்கு ஒரு காலத்தில் இருந்தது என்றால் சிலருக்கு அது ஆச்சரியமாகக் கூட இருக்கலாம். உண்மையில் ஆச்சரியம் என்னவென்றால், இன்றும் 'புது உடுப்பு ஒன்றைப் போடுங்கோ...........' என்று வருட நாளிலோ அல்லது தீபாவளி அன்றோ சொல்லப்படும் போது, என்னையறியாமலேயே ஒரு புதுச் சாரத்தை கட்டிக் கொண்டு வந்து நிற்பது தான் ஆச்சரியமாக இருக்கின்றது. புதுச் சாரம் மடங்காமல், இடுப்பில் அப்படியே ஒட்டாமல், கோதுமை மா களி பூசின மாட்டுத்தாள் பேப்பர் போல நிற்கும் அந்த உணர்வை வேறு எந்த புது உடுப்பும் கொடுப்பதில்லை. ஒரு வருடம் முழுவதும் பாடசாலைக்கு வெள்ளை சேட் இரண்டு, நீலக் காற்சட்டை ஒன்று போதும். அடுத்த வருடம்…

      • Thanks
      • Like
      • Haha
    • 45 replies
    • 3.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.