Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டி; புதிய கல்வி கொள்கையில் தகவல் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டியும் வழங்கப்பட வேண்டும் என்று புதிய தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்டு உள்ளது. பதிவு: ஆகஸ்ட் 03, 2020 03:20 AM புதுடெல்லி, இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் குழு தயாரித்து வழங்கியுள்ள புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளது. கல்வி துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்த புதிய கல்வி கொள்கை வகை செய்கிறது. பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்கவும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும் சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது. பள்ளிக்…

  2. முதல்வருக்கு எதிராக அவதூறு: சீமான் மனு தள்ளுபடி! மின்னம்பலம் அவதூறு வழக்கை ரத்துசெய்யக் கோரிய சீமான் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “தமிழக அரசின் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. மாநில அரசுக்கும், முதலமைச்சருக்கும் அதிகாரம் எதுவும் இல்லை” என்று கருத்து தெரிவித்தார். முதலமைச்சர் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார். இந்த பேட்டி பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.இதையடுத்து சீமான் மீது முதலமைச்சர் சார்பில் சென்னை மாநகர குற்றவியல் அரசு வக்கீல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி…

  3. இலங்கைத் தேர்தலில் எமது நிலைப்பாடு! – ஈழத்தாயக உறவுகளுக்கு சீமான் கடிதம். ⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂ ஈழத்தாயகத்தில் வாழும் என்னுயிர் உறவுகளுக்கு... வணக்கம்! இந்த உலகில் வாழ்கின்ற எல்லாத் தேசிய இன மக்களையும் போல எல்லா வித உரிமைகளையும் கொண்ட ஒரு சுதந்திர வாழ்வினை வேண்டித்தான் எழுபது ஆண்டுகளாக நம் தாய்மண்ணின் விடுதலைக்காக நாம் போராடி வருகிறோம். ஆனால் சிங்களவர்கள் நமக்கான உரிமைகளை மறுத்ததோடு மட்டுமல்லாமல், நாம் இந்த நிலத்தில் வாழ்ந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்துதான் நம்மை அழித்தொழிக்கும் வேலையைத் தொடங்கினார்கள். பத்தாண்டுகளுக்கு முன்னால் சிங்களப் பேரினவாத அ…

  4. நியூஸ் 18 குணசேகரன் ராஜினாமா! அடுத்து? மின்னம்பலம் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியராக பணியாற்றிய குணசேகரன் இன்று (ஜூலை 31) தனது ராஜினாமா முடிவை தனது சமூக தளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். நியூஸ் 18 தமிழ்நாடு சேனலில் குறிப்பிட்ட கொள்கைக்கு ஆதரவாகவும், குறிப்பிட்ட கொள்கைக்கு எதிராகவும் செய்திகள் தரப்படுவதாக சமூக தளங்களில் புகார்கள் கிளம்பின. இதுகுறித்து நியூஸ் 18 தலைமைக்கு புகார் அனுப்பியிருப்பதாக மாரிதாஸ் என்பவர் தெரிவித்தார். அதையொட்டி மாரிதாஸ் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் குணசேகரன் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று தனது ராஜினாமா முடிவை அறிவித்துள்ளார் குணசேகரன், “நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தொடக…

  5. தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள், தடைகள்; முழு விவரம் சென்னை மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: 'இந்தியா முழுவதும், கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத…

  6. ஜெயலலிதாவின் வீட்டில் காணப்படும் பொருட்கள் குறித்த விபரங்கள் வெளியீடு! மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டில் 4 கிலோ 372 கிராம் தங்கம் மற்றும் 601 கிலோ வெள்ளி பொருட்கள் காணப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்தார். குறித்த வீட்டை நினைவில்லமாக்கும் முற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் குறித்த விபரத்தை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி வீட்டில் 4 கிலோ 372 கிராம் எடையுள்ள 14 வகையான தங்க ஆபரணங்கள், 601 கிலோ 424 கிராம் எடையுள்ள 867 வெள்ளி பொருட்கள், 162 வகையான சிறிய வெள்ளி பாத்திரங்கள் உள்ளன. …

  7. ஜாதிச்சான்றிதழ் கோரி விண்ணப்பித்த பட்டியல் இன மாணவி தாக்கப்பட்ட விவகாரம்: மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு ஜாதிச்சான்றிதழ் கோரி விண்ணப்பித்த பட்டியல் இன மாணவி மீது நான்கு பேர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம், நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பரங்கினி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் பிளஸ் 2-வில் 600க்கு 354 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். இருளர் இனத்தைச் சார்ந்த அவர், மருத்துவ படிப்பு படிக்க விரும்பிய அவர் தனக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம் விண்…

  8. 7 பேர் விடுதலை எப்போது? - கவர்னர் தரப்பு விளக்கம் அளித்துள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர் பேரறிவாளன். இவரது தாயார் அற்புதம்மாள், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “புழல் சிறையில் என்னுடைய மகன் அடைப்பட்டுள்ளான். சிறையில் ஏற்கனவே 50 கைதிகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் பேரறிவாளன், இந்த நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அவருக்கு 90 நாட்கள் ‘பரோல்’ வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.…

  9. மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி.க்கு இட ஒதுக்கீடு; உச்சநீதிமன்றம் தான் அனுமதியளிக்க வேண்டும் - இந்திய மருத்துவ கவுன்சில் பதில் புதுடெல்லி, மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, திமுக, அதிமுக, தமிழக அரசு, பாமக, திக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில், எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட…

  10. அறிவியல் முதல் அரசியல் வரை அப்துல் கலாம்.... மின்னம்பலம் “கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னைத் தூங்க விடாமல் செய்வது எதுவோ, அதுவே இலட்சிய கனவு” என்று இளைஞர்களைத் தட்டி எழுப்பிய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் நினைவு தினம் இன்று. 2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராக இருந்தவர் அப்துல் கலாம். ராமநாதபுரத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த கலாம், விஞ்ஞானி, எழுத்தாளர், சிந்தனையாளர் என அவர் கால் பதிக்காத இடம் இல்லை. எவ்வளவு உயரம் சென்றாலும், அவருடைய எளிமைதான் அவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது என்று சொல்லலாம். குழந்தைகள், மாணவர்கள் மீது தனிப்பிரியம் கொண்ட அப்துல் கலாம் எப்போதும், இளைஞர்கள்…

  11. ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு தடை இல்லை... மத்திய அரசு சட்டம் இயற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு, திமுக, அதிமுக, திராவிடர் கழகம், பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. …

  12. அரசியலுக்கு வரப் போவதில்லை: அறிவிக்கத் தயாராகும் ரஜினி மின்னம்பலம் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா, கொரோனா ஊரடங்கால் அவரது அரசியல் வருகை தள்ளிப் போகிறதா, ரஜினி அரசியலுக்கு வந்து கட்சி தொடங்குவதற்காகவே வரும் சட்டமன்றத் தேர்தலைக் கூட ஒன்றிய அரசு தள்ளிவைக்கிறதா என்றெல்லாம் ரஜினியை மையமாக வைத்து கேள்விகள் ஆயிரம் சுற்றிச் சுழன்று வருகின்றன. இந்த நிலையில் ரஜினி ஜூலை 20 ஆம் தேதி தனது மாப்பிள்ளையின் லம்பார்ஹினி காரில் வலம் வந்ததை ஒட்டி, ‘ஊரடங்கால் அடங்கிப் போவார் என்று நினைத்தீர்களா? ரஜினி வருவார்’ என்றனர் அவரது ரசிகர்கள். லயன் இன் லம்பார்ஹினி என்று ட்விட்டரிலும் கொண்டாடினார்கள். சில நாட்களுக்கு முன், “ரஜினி ஆகஸ்டிலேயே கட்சி தொடங்கியிருக…

  13. போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு இழப்பீட்டு தொகை செலுத்தப்பட்டுள்ளதால் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு மேலும் அறிவித்துள்ளது. மேலும் போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வரின் முகாம் அலுவலகமாக மாற்ற சாத்தியம் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான இழப்பீட்டு தொகையை செலுத்தியது தமிழக அரசு! ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பது தொடர்பில் நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதன்படி சென்னை சிவில் நீதிமன்றத்தில் …

  14. ஆன்லைன்’ சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல் வீட்டில் இருந்தபடியே எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர்களை தூண்டுவதால், ஆன்லைன் சீட்டாட்டத்துக்கு தடை விதிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருக்கிறது. பதிவு: ஜூலை 25, 2020 05:30 AM மதுரை, நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிலுவை வெனன்ஸ். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 5-ந் தேதி இவர் உள்பட 5 பேரை, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூடங்குளம் போலீசார் பிடித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத…

  15. தினமும் 2,000 லிட்டர் கபசுரக் குடிநீர் தயாரித்து வீடு வீடாக விநியோகம்: அசத்தும் மதுரை தம்பதி மதுரை கரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற தினமும் 2 ஆயிரம் லிட்டர் கபசுரக் குடிநீர் தயார் செய்து பொது மக்களுக்கு வீடு வீடாக விநியோகம் செய்து வருகின்றனர் மதுரையைச் சேர்ந்த தம்பதி. மதுரையில் மாண்டிச்சோரி ஸ்கூல் நடத்தும் கணவன், மனைவி இருவர், தற்போது பள்ளி திறக்கப்படாததால் தங்கள் பள்ளி அலுவலக வளாகத்தில் மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள் துணையுடன் தினமும் 2 ஆயிரம் லிட்டர் கபசுரக் குடிநீர் தயார் செய்து வீடு வீடாக டோர் டெலிவலி செய்வதற்கு உதவுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘கரோனா’ வராமல் தடுக்கவும், வந்தால் அதிலிருந்து மீளவும் நோய்…

  16. சென்னை – காட்டாங்குளத்தூரில் 10 பேருக்கு செலுத்தப்பட்டது கொரோனா தடுப்பு மருந்து சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் கோவாக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் சோதனை முறையில் செலுத்தியுள்ளனர். இந்த சோதனைக்குத் தன்னார்வலர்கள் 10 பேர் முன்வந்திருந்த நிலையில், அவர்களுக்கு 2 நாட்களாக முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து இன்று (வியாழக்கிழமை) காலை அவர்களுக்கு முதல் முறையாக கோவாக்சின் தடுப்பு மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டது. அனைத்து மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழுவினர் 2 நாட்கள் இவர்களின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவர் எனக் கூறப்படுகிறது. கொரோனாவைக் குணப்படுத்துவதற்காக ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத்…

  17. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டுமெனக் கோரி, அவருடைய தாயார் அற்புதம் அம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பேரறிவாளனுக்கு உடல்நலக் கோளாறுகள் இருப்பதாகவும் சிறையில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்ததோடு, பெற்றோர்கள் இருவரும் வயதானவர்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதி…

  18. பிரதமர் அலுவலக இணை செயலராக தமிழக ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமனம் முதல்வர் பழனிசாமி வாழ்த்து சென்னை பிரதமர் அலுவலக இணை செயல ராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக ஐஏஎஸ் அதிகாரி அமுதாவுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 1994-ம் ஆண்டு நேரடிஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானபி.அமுதா. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணி யாற்றினார். கடந்த ஆண்டு மத்திய அரசுப்பணிக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், அவர் பிரதமர் அலுவலகஇணை செயலராக நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர்பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தனது நேர்மையாலும், திறமையாலும் அரசின் நன்…

  19. கறுப்பர் கூட்டம் யூ-ரியூப் தளத்தில் இருந்து 500 காணொளிகள் நீக்கம்! கறுப்பர் கூட்டம் யூ-ரியூப் தளத்தில் பதிவிடப்பட்டிருந்த 500இற்கும் மேற்பட்ட காணொளிகள் நீக்கப்பட்டதாக சென்னை சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தளத்தை முடக்க வேண்டும் என யூ-ரியூப் நிறுவனத்திற்கு சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கடிதம் எழுதியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கறுப்பர் கூட்டம் தளத்தை ஒட்டுமொத்தமாக யூ-ரியூப் நிறுவனம்தான் முடக்க முடியும் என்றும் இருப்பினும் அதில் சர்ச்சைக்குரிய காணொளிகள் பல இருப்பதாலும் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சினைகள் மேலும் ஏற்படக் கூடும் என்று கருதுவதாலும் பொதுமக்கள் யாரும் அந்தக் காணொளிகளைப் பார்க்க மு…

  20. நளினி தற்கொலைக்கு முயன்றதன் பின்னணி என்ன? விசாரணையை முடுக்கிவிட்டுள்ள அதிகாரிகள் July 21, 2020 தமிழகத்திலுள்ள வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, திங்கள்கிழமை இரவு துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றிருப்பது குறித்த செய்திகள் வெளியானதையடுத்து அது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள். இதுதொடர்பாக, சிறைத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டுள்ளனர். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் 28 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் தங்களுக்கு விட…

  21. கீழடியில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். கீழடியில் ரூ.12.25 கோடியில் அருங்காட்சியகத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பதிவு: ஜூலை 20, 2020 10:46 AM சென்னை கீழடி அகழாய்வில் தமிழ் நாகரிகத்தைச் சேர்ந்த பல தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், வடிகால் அமைப்புகள், சுடுமண் குழாய்கள், தமிழ் எழுத்துகள் பொறித்த பானைகள், எழுத்தாணிகள், சுடுமண் வார்ப்பு, பானை ஓடுகள், விளையாட்டுப் பொருட்கள், காதணிகள், தங்கம், உலோகப் பொருட்கள் என 2,600 ஆண்டுகள் புதைந்து கிடந்த ஆயிரக் கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச்…

  22. தமிழ் நாட்டில் உணர்வுபூர்வமாகும் சமூக நீதிக் களம் எம். காசிநாதன் / 2020 ஜூலை 20 தமிழகத்துக்குச் சட்டமன்றத் தேர்தல், 2021 மே இல் நடைபெற வேண்டும். 2017 பெப்ரவரியில் தமிழக முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, 2021 மே இல், தனது பதவி காலத்தை நிறைவு செய்யப் போகிறார். “கொல்லைப்புற வழியாக, ஆட்சிக்கு வர மாட்டோம்” என்ற தி.மு.க தலைவர் ஸ்டாலினின் முடிவும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசாங்கம், அ.தி.மு.க அரசாங்கத்துக்கு அளித்த ஆதரவும், எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டிப்பு ‘போனஸ்’ ஆகி, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை, வேறு வழியில் சிந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தியது. அதன் விளைவாகவே, அ.தி.மு.க அரசாங்கம் இன்று வரை நீடித்து வருகிறது; இனியும், 2021 மே வரை நீடிக்கப் போகிறது. …

  23. பி.ஜே.பி-யில் இந்துகள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் பல தரப்பு மக்கள் வரை அனைவரும் இருக்கிறார்கள். சாதி, மதம் பார்க்காமல் சமமாக நடத்துவதோடு, அனைவருக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. சந்தனக்கடத்தல் வீரப்பனை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் என மூன்று மாநில காவல்துறைக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியவர். இவர் 2004-ம் ஆண்டு தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய மூத்த மகள் வித்யா வீரப்பன், கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜ.க-வில் இணைந்தார். அவருக்குத் தற்போது மாநில இளைஞரணி துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. வித்யா வீரப்பன் வித்யா வீரப்பனிடம் ப…

  24. பள்ளிகள் திறப்பு: தமிழக அரசின் நிலை என்ன? மின்னம்பலம் கொரோனா ஊரடங்கு காரணமாக, 2020-21ஆம் கல்வியாண்டு இன்னும் தொடங்கப்படவே இல்லை. மார்ச் 23ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் விடுமுறை இன்னும் தொடர்வதால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி இந்திய அளவில் பெற்றோர்கள் மனத்தில் அலைபாயும் கேள்வியாக உருவெடுத்துள்ளது. அதேநேரம் குழந்தைகளின் பாதுகாப்பும் முக்கியம் என்ற பதற்றமும் பெற்றோர்களிடத்தில் இருக்கிறது. ஆன்லைன் கல்வியிலும் மாணவர்கள் முழுமையான முறையில் சேரவில்லை என்பதே டிஜிட்டல் இந்தியாவின் நிதர்சன நிலை. இந்த விவகாரத்தில் பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை இன்று வரை தெரிவிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. நாடு முழுது…

  25. தமிழகத்தில் கோயில் திருவிழாக்களுக்கு அனுமதி! மின்னம்பலம் தமிழகத்தில் கோயில் திருவிழாக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. திருவிழாக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், பக்தர்கள் தரிசனம் இல்லாமல் கோயில்களில் பூஜைகள் மட்டும் நடந்து வருகிறது. தற்போது திருவிழாக் காலம் என்பதால் பக்தர்கள் இல்லாமல் திருவிழா நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை இன்று (ஜூலை 20) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் குறிப்பிட்ட திருவிழாக்கள் சிறப்பு உடையதாகவும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.