Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சேலத்தில் ஒருவர், பசியால் வாடிய மக்கள் 500 பேருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி அவர்களது பசியைப் போக்கியுள்ளார். கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் 'மக்கள் ஊரடங்கு' பின்பற்றப்படுகிறது. இதனால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடக்கின்றனர். ஆனால், சாலையில் அடுத்த வேலைக்கு உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு உதவும் நோக்கில், சேலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை தாயுள்ளத்தோடு வழங்கி அவர்களது பசியைப் போக்கியு…

  2. மார்ச்–31 க்கு பிறகு தெரியும் கொரனோவை விட பெரிய ஆபத்து.....!

    • 0 replies
    • 585 views
  3. நடிகர் ரஜினிகாந்த் கொரோனா குறித்து வெளியிட்டிருந்த வீடியோவை ட்விட்டர் நீக்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று சனிக்கிழமை கொரோனா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "12-14 மணி நேரம்வரை கொரோனா பரவாமல் தடுத்துவிட்டால், இந்தியாவில் மூன்றாம் நிலை பரவலைத் தடுத்துவிடலாம்" என்ற கருத்தையும், வேறு சில கருத்துகளையும் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ அவரது ட்விட்டர் மற்றும் யு டியூப் பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வீடியோ தங்களது விதிமுறைகளை மீறி இருப்பதாகக் கூறி ட்விட்டர் அந்த பதிவை நேற்று சனிக்கிழமை நீக்கியது. இருந்தபோதும், அந்த வீடியோ யு டியூபில் பார்க்கக் கிடைக்கிறது. ட்விட்டரில் ரஜினிகாந்தை 57 லட்சம் பேர் பின்தொடர்கின்ற…

  4. ஆமை விசாரணையும், ஆளுநர் முடிவும்: ஏழு பேர் விடுதலைக்கு மறைமுக மறுப்பா? மின்னம்பலம் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் அளித்த பதிலை இன்று (மார்ச் 20) சட்டமன்றத்தில் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் வெளியிட்டார். சட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், 7 பேர் விடுதலை குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி கேள்வி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சி.வி. சண்முகம், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7பேர் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே அனைவரது ஆசை. 7 பேர் விடுதலையைப் பொறுத்தவரை அவர்களது விடுதலைக்காகத் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு ஆளுநர் செயலகத்தில் இருந்து பதி…

  5. கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸப் மூலம் வதந்தி பரப்பியதாக 'ஹீலர் பாஸ்கர்' என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் மூன்றாம் தேதிவரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் குனியாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹீலர் பாஸ்கர். நிஷ்டை என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்திவரும் ஹீலர் பாஸ்கர், மருந்தில்லா மருத்துவம், இயற்கை மருத்துவம் என்ற பெயரில் மருத்துவம் செய்துவந்தார். யூ டியூபிலும் இது தொடர்பாக அவர் பேசி வந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் 17ஆம் தேதியன்று கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக செய்தி ஒன்றை சமூக வலைதளங்கள் மூலம் ஹீலர் பாஸ்கர்…

  6. ருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவும் வைரஸ் என்பதால் கொரோனா வைரஸ் தொடர்பான பீதி சென்னை மக்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது. வெறிச்சோடிய தியாகராய நகர் உஸ்மான் ரோடு. சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த 16-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தடுப்பதற்காக வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள் மற்றும் நகை கடைகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. …

  7. முதல்வர் ஆதித்யநாத் அவர்களின் ராம நவமி முட்டாள்தனமும் தமிழக அரசின் கடமையும்... எதிர் வரும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை ராம நவமி திருவிழாவை பெரும் மக்கள் கூட்டத்தைக் கூட்டி கோலாகலமாகக் கொண்டாடப் போவதாகவும், கொரோனா வைரஸ் தாக்காமல் ராமர் பார்த்துக் கொள்வார் என்றும் முட்டாள்தனமான ஒரு உத்தரவை மதக் கிறுக்கன் ஆதித்யநாத் அறிவித்துள்ளார்... அந்த விழாவில் கலந்து கொள்ள தமிழகத்திலிருந்து செல்பவர்கள் திரும்பி வரும் போது தடுப்பு முகாம்களில் 15 நாட்கள் கட்டணம் செலுத்தித் தங்கி இருந்து கொரானா தாக்குதல் இல்லை என்று சர்டிபிகேட் வாங்கிக் கொண்டுதான் தமிழகத்துக்குள் வர வேண்டும் என தமிழக அரசு உடனடியாக ஒரு உத்தரவு போட வேண்டும்.... (1) 1918 ல் வந்த ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலில் சுமார…

    • 6 replies
    • 756 views
  8. அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த மருத்துவ மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தமிழகத்தில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது தமிழகத்தில் இந்த நோய்த் தொற்றியோர் எண்ணிக்கையை 3 ஆக ஆக்கியுள்ளது. 17-ம் தேதி சென்னை வந்தவுடனே அவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். நேற்று மார்ச் 18 அன்று அவர் அறிகுறிகளோடு ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு வந்தார். அவரிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன…

  9. தனுஷ்கோடி கடற்பகுதியில் ஆயிரக்கணக்கில் குவிந்த பூநாரைகள் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழ் jayashankar வலசை வரும் பூநாரை என்று தமிழில் அழைக்கப்படும் ஃப்ளமிங்கோ பறவைகள் தற்போது தனுஷ்கோடி கடற்கரையில் ஏராளமாக வந்து குவிந்துள்ளன. ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில் பகுதிக்கு அதிக அளவில் ஆஸ்திரேலிய ஃப்ளமிங்கோ பறவைகள் ஆண்டுதோறும் வலசை வருவது வழக்கம். ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு இந்தப் பறவைகள் மிகப் பெரிய அளவில் தனுஷ்கோடி வந்து குவிந்துள்ளன. கோதண்டராமர் கோவில் அருகே உள்ள கடற் பகுதியில் இவை ஆயிரக் கணக்கில் குவிந்துள்ளன. ஃப்ளமிங்கோக்களில் அன்டீன் ஃப்ளமிங்கோ, அமெரிக்கன் ஃப்ளமிங்கோ, சைலியன் ஃப்ளமிங்கோ, ஜாம்ஸெஸ் ஃப்ளமிங்கோ போன்ற வகைகள…

  10. கொரோனா அச்சுறுத்தல்: தஞ்சை பெரிய கோயில் மூடப்பட்டது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் மூடப்பட்டுவரும் நிலையில், தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயம் மூடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மால்கள், திரையரங்குகள், கல்வி நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், புராதன சின்னங்கள், சுற்றுலாத் தலங்கள், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களையும் மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோயில் தொல்லியல் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளதாலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடம் என்பதாலும் அந்தக் கோயிலை மார்ச் 31ஆம் தேதிவரை பக்தர்களின் வருகைக்கு தடை விதித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். Pandemi…

  11. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு அங்கீகாரம் – அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிப்பவர்கள் மக்கள் நல்வாழ்வுத் துறையை அணுகி பரிசோதனை மூலமாக நிரூபித்தால் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் இன்று கொரோனா வைரஸ் குறித்த சர்வதேச கருத்தரங்கத்தில் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என கூறினார். மேலும் கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் சிறப்பு சிகிச்சை பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறுவோர் மக…

  12. இந்தியர்கள் ஏன் கோரோனாவுக்கு பயப்பட தேவையில்லை?

    • 1 reply
    • 1.3k views
  13. சிறப்புக் கட்டுரை: ரஜினியின் மருந்து! மின்னம்பலம் விநாயக் வே.ஸ்ரீராம் அன்றந்த வியாழக்கிழமையில் ரஜினி, தனது அரசியல் வியூகத்தின் முதற்கட்ட நகர்வை வெளிப்படுத்தியே விட்டார். அதில் மூன்று கூறுகள் முக்கியமானவை. 1. 65 சதவிகிதம் இளைஞர்களுக்கு வாய்ப்புத் தருவது. 2. தான் முதல்வர் பதவிக்கு வராமல் தன் செல்வாக்கை வைத்து மக்களிடம் பெருவாரியான வாக்குகள் பெற்று அதன் பிறகு ஓரளவுக்கேனும் படித்த, செயலாற்றலும் தன்மானமும்கொண்ட ஓர் இளைஞரைத் தேர்ந்தெடுத்து முதல்வராக்குவது. 3. தேர்தலுக்குப் பின் அவசியமற்ற தொங்கு சதைகள் போன்ற செயல் மையங்களுக்கு ஓய்வுகொடுத்து விடுவது. தன் 40 ஆண்டுக்கால உழைப்பால் தான்பெற்ற தனிப்பெரும் செல்வாக்கைவைத்து வேறு ஒருவரை முதலமைச்…

  14. தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்காக பொருளாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலகல் தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் விருப்பம் தெரிவித்து, தான் வகித்துவந்த பொருளாளர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் குறித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள குறித்த அறிவிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 29 ஆம் திகதிக்கு அன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் ‘பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர்’ பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும் என்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம், தி.மு.க.…

  15. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட அனைத்தையும் மூட அரசு தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா செல்லும் இடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தவிர்க்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு பேரிடராக அறிவிக்கை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு, எடுத்துள்ள பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் பழனிசாமி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். முதல்வர் பிறப்பித்த உத்தரவுகள்: '' * ரயில்களின் மூலம் இந்தியாவின் …

  16. மக்களுக்கு வைத்துள்ள ‘பரீட்சை’ - ரஜினி அரசியல் எம். காசிநாதன் / 2020 மார்ச் 16 “வயது 40 முதல் 45 வரை உள்ள இளைஞர்கள், அதிகாரத்தைக் கையில் எடுக்க வேண்டும்”. “தேர்தல் முடிந்த பிறகு, கட்சியில் பல்வேறு மட்டத்தில் உள்ள பதவிகள், அதிகம் தேவையில்லை” “நான் முதலமைச்சராக மாட்டேன்; வருங்கால முதலமைச்சர் ரஜினி என்று சொல்வதைத் தவிர்த்து விடுங்கள்” என்று, ரஜினி மூன்று முக்கிய அறிவிப்புகளை வௌியிட்டுள்ளார். இந்த அறிவிப்புகள், தன்னை வளர்த்த ரசிகர் மன்றங்களை ரஜினி கைகழுவுகிறார் என்ற ஏமாற்றத்தையும் தோற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‘வருகிறார்... வருகிறார்’ என்ற ரஜினி, இப்போது வந்து விட்டார். ஆனால், அரசியலுக்கு வரவில்லை. அரசியலுக்கு வருவதற்கான எழுச்சியை, உருவாக்க…

  17. வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவு! வெளிமாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 107 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். இதன் தாக்கம் தமிழகத்தில் தற்போது வரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் அண்டை மாநிலங்களில் இருந்து நோய் தொற்று ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன்படி மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்துத் துறையினர…

  18. கோவை, திருப்பூரிலுள்ள முக்கிய வழிபாட்டு தலங்களை தாக்க, அல்லது குறிப்பிட்ட மத இயக்க தலைவர்களை கொல்ல, மதவாத இயக்கம் ஒன்றின் ஆயுதப் பயிற்சி பெற்ற நபர்கள் சதி செய்துள்ளதாக, டி.ஜி.பி., அலுவலகம், இருமாவட்ட போலீஸ் உயரதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவை, திருப்பூர் போலீஸ் உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி., அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ள அறிவுறுத்தல்: தேசிய அளவில் செயல்படும், மதவாத இயக்கம் ஒன்றின் ஆயுதப் பயிற்சி பெற்ற நபர்கள் கோவை மற்றும் திருப்பூரில் ஊடுருவி முக்கிய வழிபாட்டு தலங்களை தாக்கவோ அல்லது குறிப்பிட்ட மத இயக்க தலைவர்களை கொல்லவோ, திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்விரு மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் உயரதிகாரிகள் உஷாராக இருந…

    • 0 replies
    • 352 views
  19. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்துப் பேசிய நடிகர் விஜய் "மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது" என்று கூறினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே சமூக ஊடகங்கள் விஜய் ரசிகர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. மாஸ்டர் திரைப்படம், விஜய் என ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வந்தன. விஜய் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும். அதே போன்ற எதிர்பார்ப்புக்கு இடையே இசை வெளியீட்டு விழாவில் விஜய் …

  20. கொரோனா வைரஸ் : சென்னை விமான நிலையத்தில் 24 விமானங்கள் இரத்து! கொரோனா அச்சம் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் 24 விமானங்களின் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி குவைத், துபாய், சிங்கப்பூர், கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய 24 விமானங்கள் இன்று (சனிக்கிழமை) இரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 11 நாட்களில் 90 விமானங்கள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கொரொனா வைரஸால் உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் பாடசாலை, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன்…

  21. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர் ரஜினிகாந்தின் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு, சந்தேகங்களுக்குப் பதிலளிப்பதைவிட மேலும் பல கேள்விகளையே எழுப்பியிருக்கிறது. அரசியலுக்கு வருவேன் என்ற தனது முந்தைய முடிவிலிருந்து அவர் பின்வாங்குகிறாரோ எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வாரம் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்த ரஜினிகாந்த், அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, நிர்வாகிகள் தெரிவித்த ஒரு கருத்தில் மட்டும் தனக்கு அதிருப்தி இருப்பதாகத் தெரிவித்தார். ரஜினி எந்தக் கருத்து தொடர்பாக அதிருப்தியடைந்தார் என்பது குறித்து ஊடகங்களில் பல்வேறு யூகங்கள் வெளியான நிலையில், தனது நிலை குறித்து விளக்கமளிக்க வியாழக்க…

  22. அரசு பாடசாலைகளில் கண்காணிப்பு கமரா – தமிழக முதல்வர் அறிவிப்பு by : Dhackshala தமிழகத்தில் உள்ள 4,282 அரசு பாடசாலைகளில் 48 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கமரா பொருத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டசபையில் , 110வது விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள், தமிழகத்தில் உள்ள ,4,282 அரசு பள்ளிகளில் ரூ.48 கோடியில் கண்காணிப்பு கமரா பொருத்தப்படும் ரூ.5 கோடி செலவில் புதிதாக 25 ஆரம்ப பள்ளிகள்ஆரம்பிக்கப்படும். 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக ரூ.36 கோடியில் தரம் உயர்த்தப்படும் 30 அரசு உயர்நிலை பள்ளிகள் ரூ.55 கோடியில் மேல்நிலை பள்ளிக…

    • 0 replies
    • 348 views
  23. தமிழகத்தில் இரு புதிய கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க நடவடிக்கை மதுரை மற்றும் தாம்பரத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய இரு புதிய கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை, சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போது தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கினார். அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் நடவடிக்க…

  24. விபத்தொன்றில் இரண்டு கைகளை இழந்தாலும் விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் பெண் ஒருவர். ஹிந்தி மொழி ஆசிரியராகி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பொலிஸ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (62). கட்டடத் தொழிலாளி. இவருக்கு நான்கு மகள்கள், ஒரு மகன். இதில் மூத்த மகள் ஜீவா (38). இவர், செவிலியர் பட்டயப் படிப்பு முடித்துவிட்டு, கடந்த 2005ஆம் ஆண்டு விழுப்புரத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்தார். ஒரு நாள், அவர் இரவுப் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, மின் தடை ஏற்பட்டதால் மின்பிறப்பாக்கியை இயக்கியுள்ளார். இதில் ஏற்பட்ட விபத்தில் அவரது இரண்டு கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மூன்று மாதங்கள் தொடர…

    • 0 replies
    • 414 views
  25. அரசியல் பிரவேசம் குறித்து இன்று முக்கிய அறிவிப்பினை வெளியிடுகின்றார் ரஜினி? நடிகர் ரஜினிகாந்த், மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று(வியாழக்கிழமை) சந்திக்கவுள்ளார். இதனால் அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் இந்த சந்திப்பு 30 நிமிடம் நடைபெற்றது. இன்று கட்சி நிர்வாகிகளுடன் பேசவிருக்கும் விஷயங்கள் குறித்து ரஜினி ஆலோசித்ததாக கூறப்படுகின்றது. நடிகர் ரஜினிகாந்த், கடந்த 5-ஆம் திகதி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கட்சியின் பெயர், கொடி ஆகியவை குறித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.