தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவரால், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட பகுதி பெல்ஜியம் என நீண்ட காலமாக அழைக்கப்படுகிறது. அந்த ஊரை பெல்ஜியம் என மக்கள் அழைத்தது ஏன்? அப்பகுதி மக்களுக்கு என்ன செய்தார் என விவரிக்கிறது இந்த செய்தி... திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் களக்காடு அருகே அமைந்துள்ள அந்த ஊரின் பெயர் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. ஐரோப்பா நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாட்டின் பெயரை கொண்டுள்ளது அவ்வூர்.இந்த பகுதிக்கு ஏன் பெல்ஜியம் என்ற பெயர் வந்தது என விசாரித்தால், அப்பகுதியினர் சொல்லும் தகவல் நம்மை வியக்க வைக்கிறது... பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த டொம்னிக் பியர், இரண்டாம் உலகப் போரினால் ஊனமுற்ற, …
-
- 1 reply
- 1.8k views
- 1 follower
-
-
சென்னை: சென்னையில் காற்றுமாசு அளவு தொடர்ந்து மிகவும் அதிகரித்து இருப்பது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் அமபலமாகியுள்ளது. டெல்லியை விட சென்னையில் காலை 9.30 மணி அளவில் காற்றுமாசு அதிகரித்து இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. காலையில் டெல்லியில் காற்றுமாசு குறியீட்டு எண் 254 ஆக இருந்தபோது சென்னையில் 264 வரை அதிகரித்திருந்தது. வேளச்சேரி, ராமாபுரம், மணலி, கொடுங்கையூர், அண்ணாநகரில் சராசரி காற்றுமாசு 341 புள்ளிகளாக இருந்தது. கடந்த 24 மணி நேர சராசரி மாசு அளவு 272 ஆக உள்ளது. மேலும் சென்னையில் வெள்ளிக்கிழமை வரை காற்றுமாசு அதிகரித்தே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மீண்டும் மழை பெய்யத் தொடங்கினால் சென்னையில் காற்றுமாசு குறையும் என தகவல் வெளியாகியுள்ளது. சுவாசிக்க தக…
-
- 2 replies
- 719 views
-
-
நெல்லை பாளையங்கோட்டையில் நடுசாலையில் சண்டையிட்டுக் கொண்ட மாணவர்களை, திருக்குறளின் 1330 குறள்களையும் எழுதச் சொல்லி போலீசார் தண்டனை வழங்கினர். பாளையங்கோட்டையில் உள்ள இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், வ.உ.சி. மைதானம் மற்றும் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அண்மையில் மோதிக் கொண்டனர். பிறந்தநாள் கேக் வெட்டிய போது ஏற்பட்ட சண்டை மற்றும் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தை வைத்து அவர்கள் சண்டையிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. காதல் விவகாரத்தில் ஒரு மாணவனை பலர் சேர்ந்து கொண்டு தாக்கியதை டிக் டாக் வீடியோவாகவும் வெளியிட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. …
-
- 3 replies
- 754 views
-
-
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு தமிழக அரசு மீண்டும் பரோல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், கடந்த 26 ஆண்டுகளில் பரோல் மூலம் ஒரு நாள்கூட வெளியே வரவில்லை. இதற்கிடையே, கடந்த 2017-ம் ஆண்டு தந்தை மற்றும் சகோதரி உடல்நலம் சரியில்லாத காரணத்தால், அதைக் கணக்கில்கொண்டு அவருக்கு இரண்டு மாத பரோல் வழங்கப்பட்டது. இந்நிலையில், தந்தை குயில்தாசனின் உடல்நலம் குறித்து கவனிக்க பேரறிவாளன் ஒரு மாதம் பரோல் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து, தந்தை குயில்தாசனின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்…
-
- 0 replies
- 383 views
-
-
திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: விடியவிடிய நடக்கும் மீட்பு பணி தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணி இரவிரவாக இடம்பெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டி கிராமத்தில் நேற்று மாலை 5.40 மணிக்கு சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை தெரியாமல் தவறி விழுந்துள்ளான். இந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை தொடர்ந்து 14 மணி நேரமாக மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், 27 அடியில் இருந்த சுஜித், 68 அடி ஆழத்திற்கு சென்று இருந்த நிலையில் தற்போது 70 அடிக்கு சென்று விட்டான். மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக ஒ…
-
- 52 replies
- 7.5k views
- 1 follower
-
-
திருவள்ளுவருக்கு சிலுவைய போடு, இல்ல குல்லா போடு, எனக்கு என்ன..?? அசால்டா பேசி அதிரவிட்ட கலாச்சாரம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்..!! திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். என்னைப் பொருத்தவரையில் அவருக்கு குல்லா போட்டாலும் சிலுவை போட்டாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பாஜகவின் இணையதள பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி நிற ஆடை அணிந்து நெற்றியில் பட்டை கழுத்தில் ருத்ராட்சம் அணிந்திருப்பது போல புகைப்படம் வெளியாகி அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே தன் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்…
-
- 0 replies
- 749 views
-
-
ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்த நாள் விழா: 71 இலட்சம் மரக்கன்றுகளை நட அரசாணை வெளியீடு தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 71 இலட்சம் மரக்கன்றுகளை நட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவரது வயதுக்கு ஏற்ப, மரக்கன்றுகள் நடும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி எதிர்வரும் வருடம் பெப்ரவரி 24ஆம் திகதி, ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற இருக்கின்றது. இந்நிலையிலேயே அவரது பிறந்தநாளை முன்னிட்டு 71 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து 10.40 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட…
-
- 0 replies
- 406 views
-
-
அமுதா IAS அவர்களின் மிக சிறப்பான எளிமையான உரை
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறையில் உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்துகின்றனர் – முருகன் குற்றச்சாட்டு! சிறையில் உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாக ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் முருகன் குற்றம்சாட்டியுள்ளார். சிறைவளாகத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த முருகன் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து தொடர்ந்து தெரிவித்த அவர், முதலமைச்சருக்கு தான் அனுப்பிய மனுவை, நான்கு நாட்களாக அனுப்பாமல் சிறை நிர்வாகமே வைத்துள்ளதாகவும், கைப்பேசி பயன்படுத்தியதாக திட்டமிட்டு தன் மீது பழி சுமத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் விடுதலையும் செய்யாமல், ஆன்மிகவாதியாகவும் வாழ விடாமல் கொடுமைப்படுத்துவதாகவும் முருகன் வேதனை தெரிவித்தார். வேலூர் மத்தி…
-
- 0 replies
- 609 views
-
-
ராஜீவ் படுகொலை: சீமான் பேசியதன் சிக்கலும் அதிலுள்ள ‘கடுகளவு‘ நியாயமும் ஆர். அபிலாஷ் சீமான் தேர்தல் பிரச்சாரத்தின் போது சமீபமாக கூறியது இதுதான்: “முன்னாள் பிரதமர்ராஜீவ்காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். அமைதிப்படை என்ற பெயரில் ஓர் அநியாயப்படையை அனுப்பி, என் இன மக்களைக் கொன்றுகுவித்த ராஜீவ்காந்தி என்ற என் இனத்தின் எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம்என்ற வரலாறு வரும்”. ராஜீவின் அயலுறவு முடிவுகள் முன்னுக்குப் பின் முரணானவை, நிதானமான தெளிவானநோக்கற்றவை, அதன் பலனாகத் தான் ஈழத்தில் கடுங்குற்றங்களை நமது அமைதிப்ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்பதில் ஏற்பட்ட தாமதத்தைப்போல, தற்போது லட்சத்தீவு மற்றும் மகாராஷ்டிரா பகுதியில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச்சென்று காணாமல்போயுள்ள 120 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்பதில் தாமதம் இருக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வள்ளவில்லை, தூத்தூர்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 15 நாட்களுக்கு முன்னர் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களில் பலர் இன்னும் திரும்பாததால், அவர்களை மீட்கக் கோரி உறவினர் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 2017 ஒக்கி புயல் பாதிப்பால் ஏற்பட்ட வலியிலிருந்து தாங்கள் இன்னும் மீளாதநிலையில், தற்போது காணாமல் போனவர்களை கண்டறிய தாமதம் செய்யக்கூடாது என வேதனையோடு பேசுகின்றனர் மீனவர்…
-
- 0 replies
- 426 views
-
-
சுர்ஜித்துடன் இணைந்து இவ்வுலகைவிட்டுப் பிரிந்த மற்றுமொரு குழந்தை! திருச்சியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் மீட்புப் பணிகளை தொலைக்காட்சியில் குடும்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் நிஷா தம்பதிகளின் மகள் ரேவதி சஞ்சனா (2 வயது ) எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. தந்தை லிங்கேஷ்வரன், தாய் நிஷாவுடன் சிறுவன் சுர்ஜித்தின் மீட்புப் பணிகளை தொலைக்காட்சிப் பார்த்து கொண்டிருந்தனர். இதன்போது குழந்தையை காணவில்லை என உணர்ந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். …
-
- 0 replies
- 444 views
-
-
ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் கருவியை கண்டுப்பிடித்தால் பரிசு! ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் கருவியை கண்டுப்பிடிப்பவர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசின் தகவல் தொழிநுட்பத் துறை முதன்மை செயலாளர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த தீபாவளி, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு சோகமாக அமைந்துவிட்டது. அலட்சியத்தால் மீண்டும் விலைமதிப்பற்ற ஒரு உயிரை இழந்துவிட்டோம். இதுவே இந்தியாவில் உயிரிழந்த கடைசி குழந்தையாக இருக்கவேண்டும். இதனை தடுப்பதற்கு அவசரமாக நமக்கு தீர்வு தேவைப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை இதற்கு தீர்வு காண த…
-
- 0 replies
- 471 views
-
-
தமிழர்களின் இதயங்களை கவர்ந்த மோடி இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்கும், சென்னையிலிருந்து 58 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மகாபலிபுரத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை வரலாற்றுச் சிறப்புமிக்கது. பல்லவ மன்னன் ஆண்ட வரலாற்றுச் சுவடுகள் நிறைந்த இந்த இடம், இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அதிசயச் சிற்பங்கள் நிறைந்த இடமாகும். குறிப்பாக, இந்து மத நினைவுச் சின்னங்கள் உள்ள இந்த இடத்தைப் பேச்சுவார்த்தைக்குத் தெரிவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலின் போது, குறிப்பாக 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். அந்தத் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர், “வெளிநாட்டு ஜனாதிபதிகள…
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
சுஜித் இரத்தத்தால் எழுதிய சேதி- வ.ஐ.ச.ஜெயபாலன், தமிழகத்தில் இன்னும் வெற்றிபெறாது தொடரும் குழந்தைகள் பாதுகாப்பு அலட்சியத்துக்கு எதிரான போராட்டத்தில் கழபலியான தமிழ்த் திருமகன் சுஜித்துக்கு பணியாத என் தலை பணிந்து அஞ்சலிக்கிறேன். சிறுவர் பாதுகாருங்கள் என சிந்திய கண்ணீராலும் இரத்தத்தாலும் சுஜித் எழுதிய செய்தி வெறுமனவே ”ஆழ்துழைக் குழியை மூடு” என்பது மட்டுமல்ல என்பதை தமிழ்நாடும் இந்தியாவும் முழுமையாக உணரவேண்டும். உலகில் சிறுவர் பாதுகாக்கபடாத நாடுகளில் இன்றுவரை இந்தியாவும் தமிழ்நாடும் அடங்கும் என்பது துயரமான உண்மையாகும். நாளை பாதுகாக்கபட்ட சிறுவர்களதாகும். . ஆழ்துழைக் கிணறுகளை மூடாமல் விடுதல், தெருவில் இரு சக்கர வாகனங்களில் குழந்தைகளை எடுத்துச் செல்லல், உரிய பாதுகாப்பின்றி கா…
-
- 0 replies
- 551 views
-
-
கூடங்குளம் அணுமின் நிலையம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக வந்த தகவல் பொய்யானது என அந்த அணுமின் நிலையம் மறுத்துள்ளது. அங்குள்ள கணிப்பொறிகள் இணையத்தோடு இணைக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள இரண்டு அணு உலைகள் இயங்கிவருகின்றன. இந்த நிலையில், இந்த அணு மின் நிலையத்தின் கணிப்பொறிகள் மீது DTRACK என்ற வைரஸ் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கணிப்பொறி மீதான தாக்குதல்களில் கவனம் செலுத்தும் சில ட்விட்டர் பயனாளிகள் சிலர் கூறினர். இந்த DTRACK வைரஸ் மூலம் கூடங்குளம் அணுமின் நிலைய கணினியில் இருந்து சில தகவல்கள், அதனை உருவாக்கியவருக்கு அனுப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. …
-
- 0 replies
- 381 views
-
-
புதுடெல்லி: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க அடுத்த ஆண்டு ஜனவரியில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து ஜல்லிக்கட்டை பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் வருகை குறித்து டிசம்பர் மாதத்தில் அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சிமாநாட்டை நடத்தினர். இதனால் மாமல்லபுரம் சுற்றுலா பயணிகளிடையே மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றது. இந்த நிலையில் சீன அதிபரை தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் தமிழகத்துக்கு வருகை தருகிற…
-
- 0 replies
- 431 views
-
-
இடைத் தேர்தல் கொடுத்த அதிர்ச்சி வைத்தியமும் மகிழ்ச்சி வைத்தியமும் எம். காசிநாதன் தமிழ்நாடு இடைத் தேர்தல் முடிவுகள், வழக்கமான இடைத் தேர்தல் முடிவுகள்தான். ஆனால், செய்திகள் நிறைந்தவை. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.கவுக்கு அதிர்ச்சி வைத்தியத்தையும் ஆளும் அ.தி.மு.கவுக்கு மகிழ்ச்சி வைத்தியத்தையும் கொடுத்திருக்கிறது. தமிழகத்தின் வட மாவட்டத்தில் உள்ள ‘விக்ரவாண்டி’ இடைத் தேர்தல், தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணியின் மறைவால் ஏற்பட்டது. மாநிலத்தின் தென் மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தொகுதி, காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமார் இராஜினாமாச் செய்ததால் ஏற்பட்ட இடைத் தேர்தல். இரு தொகுதிகளுமே தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியிடமிருந்து, அ.தி.மு.க கைப்பற்றியிருக்கிறது. விக்ரவாண்…
-
- 0 replies
- 456 views
-
-
அரசியலுக்கு வருவாரா ரஜினி: குழப்பிய தேர்தல் முடிவு! மின்னம்பலம் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அதிக ஆர்வத்துடன் காத்திருந்தவர் ரஜினிகாந்த். அரசியலுக்கு வரப் போகிறேன் என்று அறிவித்து ஒன்றே முக்கால் வருடங்கள் கடந்த பிறகும் ரஜினி தனது கட்சியை ஆரம்பிப்பதற்கு இன்னும் பல்வேறு ஆலோசனைகளையும் வியூகங்களையும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். எடப்பாடி ஆட்சி முடிந்த மறு நொடியே ரஜினி கட்சி ஆரம்பிக்க இருப்பதாக அவரது தரப்பில் பலரும் இதுவரை சொல்லிவிட்டார்கள். இந்தச் சூழலில் இடைத் தேர்தல் முடிவுகளில் திமுக, அதிமுகவின் செல்வாக்கு குறித்து அறிய ஆவலாகக் காத்திருந்தார் ரஜினி. இந்த இடைத் தேர்தலின் மூலம் திமுகவின் வாக்கு வங்கி, அதிம…
-
- 1 reply
- 746 views
-
-
முருகனைக் காப்பாற்ற நளினி உண்ணாவிரதம்! மின்னம்பலம் முன்கூட்டியே விடுதலை மற்றும் உயிருக்கு மோசமான நிலையில் காணப்படும் கணவரைக் காப்பாற்றக்கோரி நளினி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், அவருடைய மனைவி நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில், முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், நளினி மத்திய பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 27 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சிகள், அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
நாட்டுக்கோழியும்...ரூ.1,000 பணமும்... தீபாவளி பரிசு வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ. தீபாவளி பண்டிகையை ஒட்டி கட்சி நிர்வாகிகளுக்கு நாட்டுக்கோழியும், ஆயிரம் ரூபாய் பணமும் பரிசாக வழங்கி அசத்தியுள்ளார் அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், தனது தொகுதிக்குட்பட்ட 500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு அளித்துள்ளார். இதனால் கலசபாக்கம் தொகுதி அதிமுக நிர்வாகிகள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் தங்களிடம் பணிபுரிபவர்கள் மற்றும் சார்ந்து உள்ளவர்களுக்கு தீபாவளி பரிசு வழங…
-
- 0 replies
- 419 views
-
-
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருவேறு ஏ.டி.எம்களில் கொள்ளை அடிக்க முயன்றவர்கள் மோப்ப நாயின் கவனத்தை திசை திருப்ப மிளகாய் பொடி தூவியுள்ளனர். அம்பலூர் பகுதியிலுள்ள இந்தியா ஒன் ஏடிஎம்மிலும் தெக்குப்பட்டு பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. ஏடிஎம்மிலும் நள்ளிரவில் அடுத்தடுத்து இந்த கொள்ளை முயற்சிகள் நடைபெற்றுள்ளன. கைரேகை பதிவதைத் தவிர்க்க கையுறை அணிந்தும் மோப்ப நாயின் கவனத்தை திசை திருப்ப மிளகாய்ப்பொடி தூவியும் சிசிடிவி கேமராக்கள் மீது பெயிண்ட் ஸ்பிரே அடித்தும் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் இயந்திரத்தை திறப்பதற்கான அவர்களது முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் பணம் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறும் போலீசார், கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட…
-
- 1 reply
- 426 views
-
-
கல்கி ஆச்சிரமங்களில் வருமான வரி சோதனை – கல்கி பகவான் தம்பதி தப்பியோட்டம் கல்கி ஆச்சிரமங்களில் வருமான வரி சோதனை நடத்தியதை அடுத்து கல்கி பகவான் விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளி நாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களது கடவுச்சீட்டை வருமான வரித்துறையினர் தீவிரமாக தேடிய போதும் அது கிடைக்கவில்லை. இதனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். இதையடுத்து வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றலாமா என்று வருமானவரி துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். இதற்கிடையே கல்கி பகவான் அவரது மனைவி பத்மாவதி ஆகியோர் உயிருடன் உள்ளார்களா அல்லது இறந்து விட்டார்களா என்று பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்திருக்கிறது. கடந்த 2 …
-
- 7 replies
- 1.5k views
-
-
தீபாவளி நாளில் 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு தமிழகத்தில் இந்த வருடமும் தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், பட்டாசுகளின் அருகில் தீப்பற்றும் பொருட்களை வைக்கக்கூடாது, குழந்தைகளை அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றம், புனித தலங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்…
-
- 2 replies
- 662 views
-
-
தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிக்க மத்திய அமைச்சரவை அனுமதி தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் புதிதாக 75 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில், தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள்…
-
- 1 reply
- 469 views
-