தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10250 topics in this forum
-
'பகுத்தறிவாளர்’ கருணாநிதிக்கே கோவிலா??... அதிருப்தியில் திமுக சீனியர்கள். ! சென்னை: வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவாளராகவே வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவில் கட்டும் முயற்சிகள் குறித்து திமுக தலைமை மவுனமாக இருந்து வருவது அக்கட்சியில் மூத்த தலைவர்களை கடும் அதிருப்தி அடைய செய்துள்ளதாம்.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா கை பிடித்து பகுத்தறிவாளராக வாழ்ந்தவர் கருணாநிதி. தேர்தல் அரசியல் களத்தில் இருந்தபோதும் தாம் பெரியாரின் கொள்கை வழிவந்தவர் என்பதை தமது பேச்சுகள் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தவர்.பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் எனப்படும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டத்தை நிறைவேற்றியவர். இடஒதுக்கீட்டை பல்வேறு களமுனைகளில் ஆழமாக செயல்படுத்திய…
-
- 1 reply
- 968 views
-
-
உங்களுக்கு தமிழ் தெரியும்ல.. தமிழிலேயே பேசுங்க.. விஷாலுக்கு நீதிபதி அட்வைஸ்! வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் விஷாலை தமிழில் பேசும்படி நீதிபதி அறிவுறுத்தினார். கடந்த 2016ஆம் ஆண்டு விஷாலின் அலுவலகம் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சேவை வரித்துறையினர் நடத்திய சோதனையில் அவர் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பான ஆவணங்கள் சிக்கியதால் விஷாலுக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இதுதொடர்பாக விஷால் தரப்பில் இருந்து எந்த பதிலும் விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து விஷால் மீது அரசு ஊழியர் உத்தரவை மதிக்காமல் இருத்தல் என்ற பிரிவின் அடிப்படையில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்…
-
- 3 replies
- 1.7k views
-
-
சேலம்: சேலத்தில் பாஜகவினரால் தாக்கப்பட்டது குறித்து பியூஷ் மானுஷ் விளக்கம் அளித்துள்ளார். பாஜகவினர் தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாக பியூஷ் மானுஷ் குற்றசாட்டு கூறியுள்ளார். காஷ்மீர் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் பற்றியும் கேள்வி எழுப்ப பாஜக அலுவலகம் சென்றபோது தாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521837 சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கண்டனம் சென்னை : சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் தாக்கப்பட்டதற்கு மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக வன்முறை அரசியலை செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வட மாநிலங்களை போல் தமிழகத்…
-
- 0 replies
- 538 views
-
-
இராமேஸ்வரம்: இராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து 5வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் அரசு தரப்பு நடத்திய பேச்சுவார்த்தையானது தோல்வியடைந்தது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும். கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும், உளர் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24ம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறு…
-
- 0 replies
- 383 views
-
-
நாசாவுக்கு செல்லும் 10ம் வகுப்பு தமிழக மாணவி August 28, 2019 தமிழகத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கு செல்ல தேர்வாகியுள்ளார். ‘கோ4குரு’ என்ற அமைப்பு இந்திய அளவில் அறிவியல் திறமை மற்றும் பொது அறிவு போட்டியின் மூலம் மாணவர்களை தேர்வு செய்து அமெரிக்காவில் உள்ள ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வருகிறது. கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும் இந்தப் போட்டியில் 2019-ம் ஆண்டுக்கான போட்டியில் ஜே. தான்யா தஸ்னம், சாய் புஜிதா மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் முதல் இடம் பிடித்த ஜே. தான்யா தஸ்னம் என்ற தமிழகத்தை சேர்ந்த மாணவி எதிர்வரும் ஒக்ட…
-
- 0 replies
- 407 views
-
-
எங்களுக்கு எதிராக ஓர் ஆதாரத்தைக் கொடுக்க முடியுமா என அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் சவால் விடுத்திருக்கிறார்கள். P Chidambaram ( Twitter ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளின் விசாரணையை ப.சிதம்பரம் எதிர்கொண்டு வருகிறார். சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு மேலாக முன்ஜாமீன் பெற்றுவந்த சிதம்பரத்துக்குக் கடந்த 20-ம் தேதி முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, டெல்லி ஜோர்பார்க் இல்லத்தின் சுவர் ஏறிக் குதித்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவருக்கான 5 நாள்கள் காவல் முடிவடைந்த நிலையில், மேலு…
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள மின்சாரப் பேருந்துகள் தொடர்பான 10 தகவல்கள் இதோ... 1. தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னையில் சோதனை அடிப்படையில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை இன்று துவங்கப்பட்டுள்ளது. 2. FAME INDIA - 2 திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 65 நகரங்களில் 5595 மின்சாரப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் 595 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன. …
-
- 0 replies
- 528 views
-
-
சென்னையில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை August 27, 2019 சென்னை பல்லாவரத்தில் ராணுவ அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஹவில்தார் பிரவீன் குமார் என்பவருக்கும் அவருக்கு கீழ் பணியாற்றிய ஜெக்ஷீர் தான் என்பவுக்குமிடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதன்போது ஆத்திரம் அடைந்த ஜெக்ஷீர் தான்; இன்று அதிகாலை 3 மணிக்கு ஹவில்தாரின் அறைக்கு சென்று அங்கு தூங்கிக் கொண்டு இருந்த ஹவில்தாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துள்ளார். சென்னையில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை#சென்னை #ராணுவ அதிகாரி #சுட்டுக்கொலை http://globalt…
-
- 0 replies
- 584 views
-
-
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த துப்பாக்கிகளுடன் கைதான தமிழக பெண்ணுக்கு விளக்கமறியல்! இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட தமிழக பெண் உள்ளிட்ட நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் நேற்று (திங்கட்கிழமை) ராமநாதபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ராமநாதபுரம் – உச்சிப்புளி அருகே உள்ள கிராமத்தில் வள்ளி (42) என்ற பெண் நேற்…
-
- 0 replies
- 438 views
-
-
அம்பேத்கர் சிலை உடைப்பு ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் – கமல்ஹாசன் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சட்டமேதை அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனை அடுத்து உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக அரசு சார்பில் புதிய சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், வேதாரண்யத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது ஆதிக்க வெறியின் கோர தாண்டவம் தான் என கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், ஒடுக்கப…
-
- 0 replies
- 317 views
-
-
வேலூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தில் தலித் ஒருவரின் சடலத்தை பட்டா நிலத்தின் வழியாகக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தனி சுடுகாடு அமைத்துக் கொடுத்திருப்பது அரசே ஜாதியை ஊக்குவிப்பதுபோல இருக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாராயணபுரம் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த 55 வயதான குப்பன் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்தார். அவரது உடலை அங்குள்ள மண்ணாற்றங்கரையில் தகனம் செய்யச் செல்லும்போது, தங்களது நிலத்தின் வழியாக எடுத்துச் செல்வதற்கு நிலத்தின் உரிமையாளர் தரப்பு …
-
- 0 replies
- 449 views
-
-
சென்னையில் மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் ஆரம்பித்து வைப்பு! சென்னையில் மின்சாரப் பேருந்து சோதனை ஓட்டம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மக்கள் நெரிசல் நிறைந்த மாநகங்களில் 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கமைய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் கட்டமாக 100 மின்சார பேருந்துகள் ஜேர்மனியின் கே.எப்.டபிள்யூ நிறுவனத்தின் நிதி உதவியுடன் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதில் 80 பேருந்துகள் சென்னையிலும், 10 பேருந்துகள் மதுரையிலும், 10 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்படவுள்ளன. இந்நிலையில், சென்னையில் இன்று(திங்கட்…
-
- 2 replies
- 614 views
-
-
ப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா? எம். காசிநாதன் / 2019 ஓகஸ்ட் 26 திங்கட்கிழமை, மு.ப. 10:41 Comments - 0 இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் “ஐ.என்.எக்ஸ்” மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தற்போது மத்திய புலனாய்வு அமைப்பான சி.பீ.ஐ வசம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். 2004 முதல் 2008ஆம் ஆண்டு வரை, நாட்டின் நிதியமைச்சராக இருந்தவர் ப சிதம்பரம். இந்த “ஐ.என்.எக்ஸ்” மீடியா நிறுவனம், 2007 மார்ச் மாதத்தில், அந்நிய முதலீட்டைப் பெறுவதற்கான அனுமதியைக் கேட்க, அந்த அனுமதி, 2007 மே மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது. இந்த அந்நிய முதலீடு வழங்குவது தொடர்பான ஊழல் வழக்கை, 15.5.2017 அன்று பதிவு செய்த சி.பீ.ஐ, அதற்கான அடுத்த…
-
- 0 replies
- 458 views
-
-
கல்வி தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர்.. மாணவர்களின் திறமைக்கு சூப்பர் கௌரவம் தர முடிவுதமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தின் 8வது தளத்தில் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு இன்று வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , தொலைக்காட்சி சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், கல்வி அமைச்சர் செங்கோடடையன், உள்பட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற…
-
- 1 reply
- 386 views
-
-
கடந்தகால அரசாங்கதை விட, ஆட்சிக்கு வந்துள்ள எங்களது அரசாங்கமே சிறுபான்மை மக்களின் விடயத்தில் அதிக அக்கறை காட்டுகிறது. சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவு தூரம் உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க முடியுமோ அவ்வளவு தூரம் வழங்குவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தனிப்பட்ட விடயமாக இந்தியா சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (24) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலினை சினேகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலு, தயாநிதிமாறன், ஆலந்தூர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர். இதன்பின்னர்…
-
- 0 replies
- 308 views
-
-
போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டுமென, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், யுத்தக்குற்றவாளியான ஷவேந்திர சில்வாவை இலங்கை அரசாங்கம் இராணுவத்தளபதியாக நியமித்துள்ளது.இது தமிழர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 2009-ஆம் ஆண்டு நடந்த போரில் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்வதில் முக்கியப் பங்கு வகித்தவர் ஷவேந்திர சில்வா.இவ்வாறான ஒருவரை இராணுவத் தளபதியாக நியமித்தமை கடுமையாக கண்டிக்கத்தக்கது. இவரது தலைமையிலான 58-ஆவது படையணியே போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தது. தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
2019-08-23@ 08:49:39 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவர்கள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், இலங்கை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இவர்கள் இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் என்றும் தகவல்கள் வெளியானது.இதனையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள…
-
- 5 replies
- 959 views
-
-
அப்துல்கலாம் விருதினை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க இஸ்ரோ தலைவர் சிவன் பெற்றுக் கொண்டார். விண்வெளித்துறையில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுகிறது. இந்த விருந்து சுதந்திர தினத்தன்று வழங்கப்படவிருந்தது. சிவன் அன்றைய நாளில் விருதினைப் பெறவில்லை. இந்நிலையில் தலைமை செயலகத்தில் சிவனுக்கு டாக்டர் அப்துல் கலாம் விருதினை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை வழங்கினார். இந்த விருதானது ரூ. 5 லட்சம் காசோலை 8 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியன வழங்கப்பட்டன. நிலவினை ஆராய சந்திரயான் 2 விண்கலத்தை அனுப்பி சிவன் தலைமையிலான இஸ்ரோ குழு மிகப்பெரிய ச…
-
- 1 reply
- 878 views
-
-
நாகை மாவட்டம், கோடியக்கரை கோயிலில் கொள்ளை போன சிலைகள் மீட்கப்பட்டு, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை கோடி முத்துமாரியம்மன் கோயிலிலிருந்த முருகன், வள்ளி , தெய்வானை, மாரியம்மன் ஆகிய நான்கு சிலைகள் கடந்த 16 - ம் தேதி இரவு மர்ம நபர்களால் களவாடப்பட்டன. இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே உள்ளூர் பெண் சாமியாடி ஒருவர், ``களவுபோன சிலைகள் இந்த எல்லைக்குள் பூமியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளன" என்று அருள்வாக்கு கூறியதை நம்பி நான்கு நாள்களாக கிராமத்தினர் வேலைக்கும் போகாமல் பல்வேறு கு…
-
- 0 replies
- 471 views
-
-
நளினியின் பிணைக்காலம் நீடிப்பு! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினியின் பிணைக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பிணைக்காலத்தை நீடிக்ககோரி நளினி மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன் மகளின் திருமணத்திற்காக கடந்த மாதம் 25ஆம் திகதி பிணையில் விடுதலையானார். இந்நிலையில், நளினியின் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால், பிணைக்காலத்தை காலத்தை …
-
- 0 replies
- 675 views
-
-
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அனைவருக்கும் வீடு: முதல்வர் பழனிசாமி மத்திய அரசுடன் இணைந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் வீடில்லாத மக்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம், தலைவாசலில் முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழக முதல்வர் தொடக்கி வைத்தார். இதன்பின்னர் அங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தில் பெறப்படும் தகுதியான மனுக்களுக்கு நிவர்த்தி காணப்படும். பெரும்பாலான மனுக்கள் முதியோர் ஓய்வூதிய கோரிக்கை மனுக்களாக உள்ளன. வயது முதிர்ச்சியால் உழைக்க முடியாத முதியோரு…
-
- 0 replies
- 398 views
-
-
நிபந்தனையின்றி அ.தி.மு.க.வில் இணைகின்றார், தீபா எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அ.தி.மு.க.வில் இணைவதாக மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார். இந்த விடயம் குறித்த கோரிக்கை மனுவை, தீபாவின் கணவரும், எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளருமான மாதவன் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் வழங்கியுள்ளார். குறித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அவரது ஆதரவாளர்களின் ஆதரவுடன் இரண்டரை ஆண்டுகளாக எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை செயற்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஜனவரியில் நடந்த அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் அ.தி.மு.க.வுடன் அமைப்பை இணைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. மறைந்த ஜெயலலிதாவைப் பின்பற்றி செயற்ப…
-
- 0 replies
- 682 views
-
-
ரஜினியின் குரல்: மௌனம் காக்கும் தி.மு.க, அ.தி.மு.க எம். காசிநாதன் / 2019 ஓகஸ்ட் 19 திங்கட்கிழமை, பி.ப. 12:56 “பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜூணன் போன்றவர்கள்” என்று, ரஜினிகாந்த் பேசியது, தமிழக அரசியலில் பரபரப்பாகி இருக்கிறது. துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் ‘கேட்டல், கற்றல், வழி நடத்துதல்’ (Listening, Learning, Leading) என்ற நூலின் வெளியீட்டு விழா, சென்னையில் நடத்தப்பட்டதே பலரது புருவங்களை உயர்த்தியது. துணைக் குடியரசுத் தலைவர் எழுதியுள்ள இந்த புத்தகம் இளம் நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருக்கும். அப்படிப்பட்ட நூலை எழுதியுள்ள பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள…
-
- 0 replies
- 491 views
-
-
ஈரோட்டை தலைநகராக கொண்டு கொங்கு நாடு தனி மாநிலம்... பொங்கலூர் மணிகண்டன் கோரிக்கை.! சென்னை: கொங்கு நாடு என்ற பெயரில் 12 மாவட்டங்களை உள்ளடக்கி ஈரோட்டை தலைநகராகக் கொண்டு தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என அமமுக நிர்வாகி பொங்கலூர் மணிகண்டன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக பொங்கலூர் மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை: நீ லகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல்,, கரூர், திருச்சி,சேலம், விழுப்புரம், நாமக்கல், தருமபுரி கிருஷ்ணகிரி ஆகிய 12 மாவட்டங்களை இணைத்து கொங்கு நாடு என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த மண்ணும் கொங்கு நாடே. கொங்கு நாட்டின் ஒரு பகுதியான மலபார் ஜில்லா, பாலக்காடு கேரளாவுடன் மொழிவாரியாக மாநிலப் பிரிவி…
-
- 4 replies
- 965 views
-
-
அமெரிக்கால போயி வெற்றிக் கொடி நாட்டப் போறாரு நம்ம ஆளு !! எடப்பாடியைக் கொண்டாடிய ராஜேந்தி பாலாஜி !! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28 ஆம் தேதி அமெரிக்கா , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு 10 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார். அதே நேரத்தில் தமிழகத்தில் ஏற்கனவே உலக மூதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றதே. அதில் முதலீடுகள் ஈர்க்கப்படவில்லையா என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதனிடையே வெளிநாடு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பொறுப்புகளை, துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சிடம் கொடுக்காமல் அமைச்சர் தங்கமணியிடம் கொடுத்துச் செல்லப் போவதாக தகவ்லகள் வெளியாகி…
-
- 1 reply
- 666 views
-