Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 'பட்டினி இல்லா தேசம்': பசி போக்கும் சென்னையின் அன்னதான சேவை அமைப்பு கட்டுரை தகவல் எழுதியவர்,ஹேமா ராக்கேஷ் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட்டினி இல்லா சென்னையை உருவாக்க வேண்டும்.. பட்டினி இல்லா இந்தியாவை உருவாக்க வேண்டும்.. பட்டினி இல்லா உலகத்தை உருவாக்க வேண்டும். இது தான் எங்களின் தொலைநோக்கு சிந்தனை என கூறுகிறார் அருண் குமார். இவர் சென்னையில் இயங்கி வரும் No Food Waste என்ற அமைப்பின் சென்னை நிர்வாக இயக்குநர். No Food Waste என்ற அமைப்பு சென்னையில் உள்ள ஆதரவற்றவர்கள், காப்பகங்களில் வசிப்பவர்கள், சாலையோரம் வசிப்பவர்கள் ஆகியோருக்கு இலவசமாக உணவு வழங்கி வரும…

  2. 'பதவி ஆசை இல்லை'- ஓபிஎஸ் வெளியிட்ட சசிகலாவின் பழைய மன்னிப்புக் கடித விவரம் ஓபிஎஸ் பண்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு. | படம்: ம.பிரபு தமிழக முதல்வராக சசிகலா கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ள சூழலில், தனக்கு 'அரசியல், பதவி ஆசை இல்லை' எனக் குறிப்பிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சசிகலா எழுதிய பழைய மன்னிப்புக் கடிதத்தை வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம். சென்னை, க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். நேற்று ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் மேற்கொண்ட தியானப் புரட்சியும் அதனைத் தொடர்ந்து அவர் அளித்த அதிரடி பேட்டியும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படு…

  3. 'பன்னீர்செல்வத்திடம் ஏன் பேசினார் அமித் ஷா?!' - குடியரசு ‘முதல் மரியாதை’ கொதிப்பில் கார்டன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் நடவடிக்கைகளால் அதிர்ந்து போய் உள்ளனர் மன்னார்குடி உறவுகள். 'குடியரசு தின விழாவில் குடும்பத்துடன் பங்கேற்றது; விழாவில் பங்கேற்க மன்னார்குடி உறவுகளுக்கு அழைப்பிதழ் அனுப்பாதது; டெல்லி பா.ஜ.க நிர்வாகிகளுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பது போன்ற காரணங்களால் கார்டன் தரப்பினர் கடுகடுப்பில் உள்ளனர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆளுமையுள்ள முதல்வராகக் காட்டிக் கொள்ள முற்படுகிறார் பன்னீர்செல்வம்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செ…

  4. 'பன்னீர்செல்வம் பலம் பெற்றுவிடக் கூடாது!' - கடுகடு கார்டன்; தகிக்கும் தம்பிதுரை தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் 23-ம் தேதி தொடங்குகிறது. புதிய திட்டங்கள், நிவாரணம், அதிகாரிகளுடன் கலந்தாய்வு என பரபரப்பாக இயங்கி வருகிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 'முதல்வராக சசிகலா பதவியேற்பதற்காக குறிக்கப்பட்ட நல்ல நாட்கள் தள்ளிக் கொண்டே போகின்றன. பிரதமரை நேரடியாகச் சந்திக்கச் சென்ற தம்பிதுரைக்கும் உரிய மரியாதை கிடைக்கவில்லை" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு எளிதாக வர முடிந்த சசிகலாவால், முதல்வர் பதவியை நோக்கி நகர முடியவில்லை. கடந்த சில நாட்களாக வெளிப்பட்டு வரும் முட்டல், மோதல்கள் நேற்று பகிரங்கமாகவே வெடிக்கத் தொடங்கின. …

  5. 'பன்னீர்செல்வம்... சசிகலா... ஸ்டாலின்..! இப்போது என்ன செய்யலாம்?'' விளக்கும் சட்ட வல்லுநர் தமிழக அரசியல் சூழ்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் டி.ஏ.சி.ஜெனிதா விரிவாக விளக்கம் அளித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அடுத்து அ.தி.மு.க. சட்டப்பேரவை குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதத்தையும் ஏற்றுக் கொள்வதாக…

  6. 'பல்கலை’ஞர் கருணாநிதி - மினி தொடர் 1. பத்திரிகையாளர் பள்ளி மாணவராக இருந்தபோதே பத்திரிகையாளர் அவதாரம் எடுத்தவர் கலைஞர் கருணாநிதி. சொல்லப்போனால், அதுதான் அவருடைய நீண்டநெடிய அடையாளமும்கூட. 15 வயதில் `முரசொலி' இதழைத் தொடங்கினார். அப்படிப் பார்த்தால், சுமார் 80 ஆண்டுப் பயணம் அவருடைய பத்திரிகை ஆசிரியர் பணி. பேச்சாளர், நாடக நடிகர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, படத் தயாரிப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முதலமைச்சர் எனப் பன்முகம்கொண்ட ஓர் அரசியல் தலைவர் கருணாநிதி. ஐந்து முறை முதலமைச்சர், ஐந்து முறை எதிர்க்கட்சித் தலைவர், 74 திரைப்படங்களுக்குத் திரைக்கதை அமைத்தவ…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 17 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 18 ஏப்ரல் 2025 தமிழ்நாடு முழுவதும் உள்ள சாதி சங்கங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவது எந்த அளவுக்குச் சாத்தியம்? தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்கத் தவறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்…

  8. இந்தியாவில் எந்தவொரு அரசியல் கட்சி மீதும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு, அரசுகளுக்கு அல்ல என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, பொது அமைதியைக் காக்கவேண்டி பாமகவைத் தடை செய்யவும் தனது அரசு தயங்காது என எச்சரித்திருந்தார், ராமதாஸின் கைதிற்குப் பின்னர் பாமக பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராமதாஸ், பேருந்துகள் மீதான கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச் சொத்துக்களையும் தனியார் சொத்துக்களையும் சேதப்படுத்தல், மரங்களை வெட்டிச் சாய்த்தல் …

  9. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது புதல்வர் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொண்றமை தொடர்பில் காணொளி ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, அந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் கூடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கூடலூர் பழைய நகரத்தில் அண்மையில் இடம்பெற்ற பொது கூட்டத்தில் உரையாற்றிய அவர், வழக்கத்தில் தீவிரவாதிகள் எதிரியிடம் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக சயனைட் குப்பிகளை உட்கொள்வது அல்லது ஒருவரையொருவர் சுட்டுக்கொல்;வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவர். எனினும், சிறுவனை கொல்வது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும் அழகிரி குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையும் தமிழ்ம மக்களின் க…

  10. 'பிக் பாஸ்' விமர்சன சர்ச்சையால் தமிழக பா.ஜ.,வுக்கு நெருக்கடி தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப் பாகும், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் காய்த்ரி ரகுராம் தெரி வித்த கருத்தால், தமிழக பா.ஜ., நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் துவங்கி, பாலிவுட்டில் கோலோச்சி, தமிழுக்கு வந்துள்ளது, 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. இதில், பிரபலங்களை, வீட்டுக்குள், 100 நாட்கள் பூட்டி வைத்து, உளவியல் ரீதியாக போட்டி நடத்தப்படுகிறது. தமிழ் தொலைக்காட்சி நேயர்களுக்கு, மிகவும் புதிய நிகழ்ச்சியான இதில், பா.ஜ., பிரமுகரும், நடிகை மற்றும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பங்கேற்ற…

  11. 10 ஜூலை 2024 திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு பகுதியை பூர்வீகமாக கொண்டவர் சசிகாந்த் செந்தில். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தன்னுடைய பணியை துவங்கிய அவர், 2019-ல் தனது ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தார். "பன்முகத்தன்மை வாய்ந்த ஜனநாயகத்தின் அடிப்படை கூறுகள் சமரசம் செய்யப்படும் போது, அரசு அதிகாரியாக பணியை தொடர்வது நியாயமற்றது’’ என அப்போது அவர் வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்து, நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். பிபிசி தமிழின் ஆசிரியர் தங்கவேல் அப்பாச்சி நடத்திய பிரத்யேக நேர்காணலில் காங்கிரஸின் அரசியல், இந்தியா கூட்டணி, வெறுப்பு அரசியலுக்கு எதிர…

  12. 'பிரேக்கிங் நியூஸ்' நிறைவா? - தமிழக அரசியலில் 9 நாட்கள் மீதான அலசல் சமீப காலமாக இந்தியாவே உற்று கவனித்துக் கொண்டிருப்பது தமிழக அரசியல் நிலவரத்தை மட்டுமே. ஒரு தியானம் அனைத்துக்கும் ஆல்ஃபாவாக இருந்தது என்றால் நம்பித்தானே ஆகவேண்டும். அந்த 'தியானப் புரட்சிக்கு' மக்களின் ஆதரவு உணர்ச்சிப் பெருக்குகளாக வெளிப்பட, ஆட்டம் கண்டது அதிமுக. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஜானகி, ஜெயலலிதா அணிகள் பிரிந்தது எப்படி எதிர்பார்க்கப்பட்ட விளைவாக இருந்ததோ அப்படித்தான் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டதும். ஆனால், இத்தனை விரைவில் அது நடந்தேறிவிடும்; அதுவும் எப்போதுமே அமைதி காத்துவந்த …

  13. 'பீப்' பாடல்.. சிம்பு, அனிருத் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு 'பீப்' பாடல்... நடிகர் சிம்பு , இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது கோவை மாநகர காவல்துறை. பெண்களை மிக கேவலமாக சித்தரித்து பாடல் இயற்றி உள்ளதாக நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு எதிராக கோவையில் காவல்துறையில் புகார் அளித்த மாதர் சங்கத்தினர், சிம்பு - அனிருத் புகைப்படங்களை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிம்புவின் குரலில், அனிருத் இசையமைத்ததாகச்சொல்லி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது ஒரு பாடல். பாடலின் ஆரம்ப கட்ட வார்த்தைகள் அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு மிக மோசமான வார்த்தைகளுடன் துவங்குகிறது அந்த பாடல…

  14. 'புதிய முதலமைச்சர் தேர்வாகிறாரா?' -எம்.எல்.ஏக்கள் அழைப்பின் பின்னணி அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு வருமாறு அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'நாளை பொதுச் செயலாளராக பதவியேற்கிறார் சசிகலா. தொகுதிகளில் எம்.எல்.ஏக்கள் செய்ய வேண்டிய நலத்திட்ட பணிகள் என்ன என்பது குறித்து, ஓ.பி.எஸ் தலைமையில் இன்று விவாதிக்க உள்ளனர்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், சசிகலாவை பொதுச் செயலாளராக நியமனம் செய்துவிட்டு, சொந்த ஊர் திரும்பினர் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள். நேற்று இரவு மீண்டும் தலைமைக் கழகத்தில் இருந்து அவசர அழைப்பு. ' நாளை காலை சென்னை வாருங்கள்' என்று. இதனால், எம்.எல்.ஏக்கள் மத்தியில் திட…

  15. புதுடில்லி: 'பெரா' வழக்கில், 'டிமிக்கி' கொடுக்கும் தினகரனுக்கு, உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது;மூன்று மாதத்தில், வழக்கை முடிக்க நீதிபதிகள் கெடு விதித்தனர். 'வழக்கை இழுத்தடிக்க, இது போன்ற மனுக்களை தாக்கல் செய்தால், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, நீதிபதிகள் எச்சரித்தனர். சசிகலாவின் அக்கா மகன் தினகரன், 1996ல், பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், சட்ட விரோதமாக, பல கோடி ரூபாய் முதலீடு செய்தது தொடர்பாக, அமலாக்கத் துறை, இரு வழக்குகளை பதிவு செய்தது. மனு தாக்கல் இவை, சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், 20 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. 'இந்த வழக்குகளை விரை…

  16. பட மூலாதாரம்,TM KRISHNA/FACEBOOK படக்குறிப்பு, டி.எம். கிருஷ்ணா கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியின் பெருமைக்குரிய சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசைக் கலைஞரான டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு சில இசைக் கலைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மியூசிக் அகாடமியை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். சென்னையில் கர்நாடக சங்கீதத்தின் மரியாதைக்குரிய அமைப்பாகத் திகழும் தி மியூசிக் அகாடமி, ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக இசையில் சிறந்த இசைக் கலைஞர்களைத் தேர்வுசெய்து பல்வேறு விருதுகளை வழ…

  17. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வேலூர் சிறையிலுள்ள பேரறிவாளனின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டதற்கானகாரணங்களை மத்திய அரசு வெளியிடத் தேவையில்லை என மத்தியத் தகவல் ஆணையம் கூறியிருக்கிறது. கருணை மனுக்கள் குறித்த மத்திய அமைச்சரவையின் பரிந்துரைகளுக்கு தகவலறியும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது, எனவே பேரறிவாளன் தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்த விபரங்கள் அளிக்கப்பட்டேயாக வேண்டும் என வற்புறுத்த முடியாது என தகவல் ஆணையர் சுஷ்மா சிங் தீர்ப்பளித்திருத்திருக்கிறார். ஆனால் ராஜீவ் காந்தி கொலை குறித்து விசாரித்த நீதிபதி ஜெயின் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி உருவாக்கப்பட்ட பல்முனை கண்காணிப்ப…

  18. 'பேரறிவாளன் குற்றவாளி அல்ல....!' -விசாரணை ஏஜென்சி வீசிய வெடிகுண்டு (விகடன் எக்ஸ்க்ளுசிவ் ) (விகடன் எக்ஸ்க்ளுசிவ் ) முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் அவ்வப்போது வெளியாகும் மர்ம முடிச்சுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் குற்றவாளியே அல்ல, என விசாரணை ஏஜென்சி வெளியிட்ட தகவல் இப்போது வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், கடந்த 1999ம் ஆண்டு முதல் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக் கிறார் பேரறிவாளன். இவரது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற பேரறிவாளனின் மனு உச்சநீதிமன்றத்தில…

  19. 'பேராசைப் பெருமாட்டி!'- ஜெ.வுக்கு கருணாநிதி பதிலடி கதை! சென்னை: திருமண விழா ஒன்றில் முதல்வர் ஜெயலலிதா கூறிய அப்பன் - மகன் கதைக்கு பதிலடியாக திமுக தலைவர் கருணாநிதி கதை ஒன்றை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், " அ.தி.மு.க. தலைவி வழக்கம் போல “குட்டிக் கதை”களைப் படித்திருக்கிறார். அந்தக் காலத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் இது போல குட்டிக் கதைகளைக் கூறும் மூதறிஞர் ராஜாஜி என்று இவருக்கு நினைப்பு போலும்! அடுத்தவர் மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்று வாழ்வதே இனிய இல்லறம்” என்று பேச்சைத் தொடங்கிய ஜெயலலிதா, தனது ஆட்சிக் காலத்தில் எத்தனை பேரின் மகிழ்ச்சியைக் கெடுத்து, மன வருத்தத்தைக் கொடுத்து, அதிலே இன்பம் கண்டார் என்பதை; வேல…

  20. 'பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கும் வரை போராட்டம் ஓயாது' சசிகலா புஷ்பா ஆவேசம் ''அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பதவியி லிருந்து சசிகலாவை நீக்கும் வரை என் போராட்டம் ஓயாது,'' என, அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி., ஆவேசமுற்றார். தினமலர் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி: *அ.தி.மு.க., பொது செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றுள்ளாரே? அவர் பொது செயலாளராக பொறுப்பு ஏற்றது, கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் உணர்வு களுக்கு எதிரானது. அவர் தற்காலிகமாக பொது செயலாளர் பொறுப்பு ஏற்றது சட்டப்படியான செயல்பாடு இல்லை. *எப்படி கூறுகிறீர்கள்? பொது செயலாளராக வர…

  21. பட மூலாதாரம்,NAAM TAMILAR KATCHI எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. தலைமையே தவறு செய்யும்போது கட்சியில் தொடர விரும்பவில்லை எனக் கூறுகிறார், மருத்துவ பாசறையின் மாநில நிர்வாகியாக இருந்த இளவஞ்சி. 'விருப்பம் இருந்தால் கட்சியில் இருக்கலாம். இல்லாவிட்டால் போய்விடலாம்,' என்கிறார் சீமான். நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலரும் விலகுவது ஏன்? இதற்கு சீமான் கூறும் விளக்கம் என்ன? நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் கரு.பிரபாகரன், திருச…

  22. 'போடுங்கம்மா ஓட்டு அதுக்குதான் இந்த பாட்டு'..தேசிய அளவில் ட்ரெண்டாகும் சிம்பு! சென்னை: வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி சிம்பு எழுதி, பாடியிருக்கும் ஓட்டுப் போடல் சற்றுமுன் வெளியானது. நெருங்கி வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. மற்றொருபுறம் மக்களை 100% வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது. இதற்காக மக்கள் மத்தியில் பிரபலமானவர்களை வைத்து பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சிம்பு ஓட்டுப் போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். சிம்புவுடன் இணைந்து விடிவி கணேஷ் பாடியிருக்கும் இந்தப் பாடல் தற்போது …

  23. பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்த தினேஷ் குமார். கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் சமீபத்தில்தான் வேலைக்குச் சேர்ந்தான். குடும்பத்தைக் காப்பாற்றுவான் என நினைத்தோம். விசாரணை என்ற பெயரில் என் மகனை போலீஸ் கொன்றுவிட்டது. என் மகனின் சாவுக்கு நியாயம் வேண்டும்" எனக் கூறியபடி கதறியழுகிறார், முத்துலட்சுமி. தனது மகன் தினேஷ்குமாரை விசாரணைக்கு அழைத்துச்சென்ற காவல் துறையினர் கொன்றுவிட்டதாக கூறுகிறார் முத்துலட்சுமி. ஆனால், 'காவல்துறை கைது செய்துவிடுமோ?' என்ற அச்சத்தில் கால்வாயில் விழுந்து தினேஷ்குமார் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை கூறுகிறது. இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக, கா…

  24. வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்திருக்கிறார். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இன்னும் இரண்டு நாட்கள் நடக்கவிருக்கும் இந்தக் கூட்டத்தில் இன்று மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த 36 பேர் கலந்துகொண்டனர். கட்சி தேர்தலை அணுக வேண்டிய முறை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.…

  25. சென்னை: மக்களை சந்திக்கும் மறுமலர்ச்சிப் பயணத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் மேற்கொள்ள உள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (24.09.2013)சென்னை எழும்பூரில் உள்ள தலைமையகமான தாயகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாட்டு அரசியலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் கனவுகளை நனவாக்கும் இயக்கமாக, திராவிட இயக்கத்தின் காலத் தேவைக்கான புதிய பரிமாணமாக வார்ப்பிக்கப்பட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கம்பீரத்துடன் தலைநிமிர்ந்து நிற்கிறது. தனது இருபது ஆண்டு கால அரசியல் பயணத்தில், இடைவிடாத போராட்டங்களால், மகத்தான தியாகத்தால், தன்னலமற்ற நேர்மை நெறியால், கணக்கற்ற அல்லல்களையும் இன்னல்களையும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.