தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
அதிமுக முன்னாள் அமைச்சரும், டிடிவி தினகரனின் அமமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்தவருமான வி.செந்தில் பாலாஜி, தமது ஆதரவாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். ஸ்டாலினை சிறந்த தலைவராகப் பார்ப்பதாகவும் அவர் மீதுள்ள ஈர்ப்பால் தாம் திமுகவில் இணைந்ததாகவும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 'அதிமுக ஒரு மூழ்கும் கப்பல்' என்றும் தகுதிநீக்கம் செல்லும் என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது, மேல்முறையீடு செய்யாமல் இடைத் தேர்தலை சந்திக்கலாம் என்று தினகரனிடம் கூறியதாகவும் இணைவுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி கூறினார்…
-
- 0 replies
- 1.1k views
-
-
"ஆம்புலன்ஸில்" வந்து லீவு கேட்டு, அதிர வைத்த ஊழியர்! உடம்பு சரியில்லைன்னு எத்தனையோ முறை சொல்லியும் கேட்காததால், ஊழியர் ஒருவர் ஆம்புலன்சில் வந்து லீவு லட்டர் தந்த அவலம் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம் காஸ்பாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பாபு அரசு போக்குவரத்து கழகத்தில் 5 வருடமாக டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், பாபுவுக்கு நேற்று முன்தினம் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் அவரை குடும்பத்தார், முள்ளாம்பரப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஒரு பக்கம் சிகிச்சை நடந்து கொண்டிருந்த நேரத்தில், மலர்கொடி சென்னிமலை ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
சசிகலாவிடம் இன்று வருமான வரி விசாரணை.. பெங்களூர் சிறையில் வைத்து! சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று தங்களது விசாரணையை தொடங்குகிறார்கள். கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான 187 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினார்கள். இதில் ஏராளமான நகைகள், பணம், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் போன்வற்றை வருமான வரித்துறையினர் கைப்பற்றினார்கள்.எனவே சோதனையில் சிக்கிய பொருட்கள், ஆவணங்கள் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை, ஏற்கனவே சிறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால், சசிகலா மவுன விரதம் இருப்பதால் அதற்கு அனுமதி அளிக்க சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது.அதற்கு பிறகு 10 நாட்கள…
-
- 0 replies
- 756 views
-
-
பிரிவினைவாத பேச்சு: சீமான் மீது வழக்கு! தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளை பேசும் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் வகையில் பேசியதற்காக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தரமணியில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழ், தெலுங்கு பேசும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பேசியுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தின் காணொளிக் காட்சியை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான ராஜ்குமார் யூட்யூப் இணையதளத்தில் கண்டுள்ளார். இரு மொழிகளை பேசும் மக்களிடையே பிரிவினை உண்டாக்கும் வகையில் சீமான் பேசியதாகக் கருதிய ராஜ்குமார் இவ்விவகாரம் குறித்து சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை…
-
- 0 replies
- 565 views
-
-
ரஜினி தனது மனைவி லதா மற்றும் பேரன்கள் யாத்ரா, லிங்காவுடன் சேர்ந்து தியேட்டரில் 2.0 படம் பார்த்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்களில் லதா ரஜினிகாந்தின் இருக்கைக்கு பின்னால் ஒரு பெண் நிற்கிறார். அந்த பெண் ரஜினி வீட்டு பணிப்பெண் என்றும் அவர் நின்று கொண்டே படம் பார்த்தார் என்றும் சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது. தியேட்டரில் இருக்கை இருந்தும் பணிப்பெண்ணை நிற்க வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரஜினியின் பிறந்தநாளான இன்று அந்த புகைப்படங்களை மீண்டும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து விமர்சிக்கிறார்கள். அவர் பணிப்பெண் தான் என்றும், தியேட்டரில் இருக்கைகள் இருந்தும் அவரை நிற்க வைத்தனர் என்றும் தமிழ் நடிகர் ஒருவர் ஆங்கில …
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு December 10, 2018 சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக சேலத்தில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு இதற்காக 10 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளது இந்த திட்டத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என பாதிக்கப்படும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தை கைவிடக்கோரி பாதிக்கப்படுபவர்கள் மற்றும் விவசா…
-
- 1 reply
- 571 views
-
-
படத்தின் காப்புரிமை NATHAN G Image caption கௌசல்யா சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக, ஆணவப்படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவி கெளசல்யாவிற்கு கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் மறுமணம் நடைபெற்றது. பறை இசை முழங்கும் சமயத்தில் கௌசல்யா - சக்தி ஆகியோர் திருமண உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். சங்கரின் தந்தை வேலுச்சாமி, சங்கரின் இரு இளைய சகோதரர்கள் விக்னேஷ் மற்றும் யுவராஜ் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு தம்பதியை வாழ்த்தினர். சங்கரின் பாட்டி மாரியாயி தம்பதிக்கு மாலை எடுத்து கொடுத்தார். …
-
- 8 replies
- 2.7k views
-
-
தமிழகத்தின் மூவாயிரம் ஊர்களின் பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய நடவடிக்கை தமிழகத்தில் பிற மொழிகளிலுள்ள மூவாயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படுமென அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார் சென்னையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியதாவது, “தமிழகத்தில் பிற மொழிகளிலுள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய உலக தமிழாராய்ச்சி நிறுவனம் தற்போது முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அதன்படி ஆங்கிலத்திலுள்ள ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும். இதற்காக வருவாய்த்துறை, செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம…
-
- 2 replies
- 614 views
-
-
2018ன் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்.. கனிமொழிக்கு விருது.. குவியும் பாராட்டு! 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. பிரபல செய்தி நிறுவனமான லோக்மட் சார்பில் வருடா வருடம் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விருதுகள் வழங்கப்படும். இந்த வருடமும் இதற்கான பெயர்கள் தேர்வு செய்யப்பட்டது.அந்த வருடம் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசியது, எழுப்பிய பிரச்சனைகள், நடந்து கொண்ட விதம், நாடாளுமன்றத்திற்கு வெளியே நடந்து கொண்ட விதம் என்று பல விஷயங்களை மையப்படுத்தி இந்த விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்த முறை 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது…
-
- 0 replies
- 389 views
-
-
தமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை, நாங்கள் சகோதரர்கள்: கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை என்று கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். #Karnataka #Mekedatu கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. நாங்கள் தமிழகத்துடன் சண்டை போட விரும்பவில்லை. நாங்கள் சகோதர மாநிலம். மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே பயனளிப்பதாக இருக்கும். இரு மாநிலங்களும் பயன்…
-
- 2 replies
- 453 views
-
-
கருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி-கமல்ஹாசனுக்கு தி.மு.க அழைப்பு! மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவச்சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முழு உருவச்சிலை அறிவாலய வளாகத்தில் திறக்கபபடவுள்ளது. அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு, சிலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறும் விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, கருணாநிதி சிலையை திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில், விழாவுக்கு அகில இந்திய அளவில் தலைவர்கள் அழைக்கப்படுகின்றார்கள். மேலும் நாளைமறு நாள் மு.க.ஸ்டாலின் டெல்…
-
- 1 reply
- 774 views
-
-
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட 26ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அயோத்தி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 26ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரித்து இந்து அமைப்புகளும், கண்டித்து முஸ்லிம் அமைப்புகளும் ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளன. இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்பட…
-
- 0 replies
- 597 views
-
-
இயற்கை விவசாயத்திற்காக பாடுபட்ட நெல் ஜெயராமன் காலமானார் சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த விவசாயி நெல்ஜெயராமன் (வயது-60), சிகிச்சை பலனின்றி இன்று (வியாழக்கிழமை) காலை காலமானார். பாரம்பரிய, இயற்கை விவசாயங்களை பேணிப்பாதுகாத்துவந்த நெல்ஜெயராமன், பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திவந்ததோடு 160ற்கும் மேற்பட்ட அரியவகை நெல் விதைகளை சேகரித்தவர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்த அவர், இன்று காலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவி…
-
- 9 replies
- 2.7k views
-
-
பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தியதாக விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டார். சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு தனியார் மகளிர் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததை விடுதியில் தங்கியிருந்த பெண்கள் கண்டறிந்துள்ளனர். பெண்கள் விடுதி சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகளை வாடகைக்கு எடுத்து மகளிர் விடுதி நடத்துபவர் சம்பத்குமார் என்ற சஞ்சய் (45). வேலைக்குச் செல்லும் பெண்கள் அந்த விடுதியில் தங்கி இருந்தனர். …
-
- 1 reply
- 963 views
-
-
பொன் மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேலுவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் பழங்கால கோயில்களில் ஐம்பொன் சிலைகள் மற்றும் விலைமதிப்புள்ள சிலைகள் கடத்தப்பட்டன. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் கடத்தல் சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்டு கொண்டு வந்தார்.எனினும் அவர் மீது நம்பிக்கை இல்லை என கூறி தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தமிழக அரசின…
-
- 1 reply
- 646 views
-
-
இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்…. ரஜினிகாந்த் December 4, 2018 இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள 2.0 திரைப்படம் இந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் இந்தியா டுடே சார்பில் எடுக்கப்பட்ட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அரசியல், சினிமா, தனி வாழ்க்கை, முக்கிய பிரச்சினைகள் குறித்து மனம் திறந்திருந்த ரஜினிகாந்த் இலங்கைத் தமிழர் விவகாரம் தமிழகத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாகவே இருந்துவருகிறது. இலங்க…
-
- 3 replies
- 869 views
-
-
மேகதாது அணைக்கு அனுமதி.. திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம். கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட அந்த மாநில அரசுக்கு அனுமதி அளித்ததை கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ. 5900 கோடியில் புதிதாக அணை கட்ட கர்நாடகம் முயற்சித்து வருகிறது. இதற்கான அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் ஏற்றுக் கொண்டது.இதையடுத்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழன…
-
- 0 replies
- 350 views
-
-
கருணாநிதியின் சிலை திறப்பும் தேசிய அளவிலான கூட்டணியும் எம். காசிநாதன் / 2018 டிசெம்பர் 03 திங்கட்கிழமை, மு.ப. 11:39 Comments - 0 திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியின் சிலையை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கச் சம்மதம் தெரிவித்திருப்பது, அரசியல் வியூகங்களுக்கு தமிழகத்தில் ஒரு தளத்தை உருவாக்கியிருக்கிறது. தி.மு.கவும் காங்கிரஸும் கூட்டணிக் கட்சிகளாக இருந்தாலும் “ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை தி.மு.க” என்ற முணுமுணுப்பு காங்கிரஸ்காரர்களிடம் இருக்கிறது. ஆனால், டிசெம்பர் 16ஆம் திகதியன்று, கருணாநிதியின் சிலையை சோனியா காந்தி திறந்து வைக்கிறார். காங்கிரஸ்- தி.மு.க உறவை, முன்னெடுத்துச் செல்லும் முக்கிய…
-
- 1 reply
- 1.3k views
-
-
சென்னையில் இன்று போராட்டம் – 70 அமைப்புகள் பங்கேற்பு! தமிழக ஆளுநரைக் கண்டித்து சென்னையில் இன்று (திங்கள்கிழமை0 நடைபெறவுள்ள முற்றுகைப் போராட்டத்தில் 70 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள் என ம.தி.முக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். நேற்று (ஞாயற்றுக்கிழமை) தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆளுநர் ஒவ்வொரு பகுதியாகச் சென்று மாவட்ட ஆட்சியர், பொலிஸ் கண்காணிப்பாளரை சந்திப்பது முறையல்ல. தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியா நடக்கிறது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தாமதம் செய்யும் ஆளுநரைக் கண்டித்து ஆளுநர் மாளி…
-
- 1 reply
- 1.1k views
-
-
10 வயசு சிறுமி.. மிரட்டி மிரட்டியே பாலியல் தொல்லை.. சப் இன்ஸ்பெக்டர் போக்சோவில் கைது. யூனிபார்மில் கையில் துப்பாக்கியுடன் விறைப்பாக நிற்கும் இவர்தான் 10 பெண் குழந்தையை நாசம் செய்தவர். சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் வாசு. மாதவரம் பால் பண்ணை போலீஸ் ஸ்டேஷனில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். வில்லிவாக்கம் ஜகநாதபுரம் பகுதியில்தான் குடியிருக்கிறார். இவர், நேற்று முன்தினம் தன் வீட்டு பக்கத்தில் தெருவில் 10 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தார்.உடனே அருகில் சென்று அந்த குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்ய ஆரம்பித்துள்ளார். அந்த குழந்தையோ கத்தி அலறி உள்ளது. இதனால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஓடிவந்தார்கள். ஆனால் அதற்குள் வாசு எஸ்…
-
- 0 replies
- 446 views
-
-
டிபன் ரெடி.. ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு திட்டம்... அமைச்சர் மணிகண்டன் அதிரடி. 2019 ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். 1954-ல் தமிழக முதல்வராக காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மாணவர்கள் படிக்க வேண்டும் என்று மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதனால், பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதே நேரம், பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகமானது. அதன் பின்னர் வந்த எம்ஜிஆர் உட்பட அனைத்து முதல்வர்களும் மதிய உணவு திட்டத்தை சிறப்பாக முன்னுக்கு கொண்டு சென்றனர்.இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அரசு பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி …
-
- 0 replies
- 408 views
-
-
ஏன் தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்? சரத்குமார் விளக்கம்!
-
- 0 replies
- 932 views
-
-
தமிழகத்தில், தமிழர் வரலாறுடன் பின்னிப் பிணைந்த சிலைகளை கடத்தி விற்று, கொழுத்த, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என்ற பெயரில் இருந்த திருடர்களின் சிம்ம சொப்பனமாக இருந்தவர், பொன் மாணிக்கவேல். இவரை தவிர்க்குமுகமாக இந்த சிலை கடத்தல் வழக்குகளை CBI விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு இருந்தது. ஆனால் அதை சென்னை உயர் நீதிமன்றம் தடுத்து, அவரே விசாரிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்து இருந்தது. இந்நிலையில் இன்று அவர் ஓய்வு பெரும் நாள். சிலை கடத்தலுடன் தொடர்பான அரசியல் வாதிகள் பெரும் மகிழ்வுடன் இருந்தனர். அவரும், தனது சக ஊழியர்களிடம் பிரியாவிடை பெற்று இருந்தார். தமிழக அரசு நிம்மதியாக புதிய அதிகாரியினை நியமித்து இருந்தது. அவர் தமிழர் அல்ல. ஆயினும், அவரது பணியை மேலு…
-
- 6 replies
- 1.1k views
-
-
கருணாநிதி சிலை திறக்க சென்னை வருகிறார் சோனியா காந்தி : November 29, 2018 1 Min Read அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னை வருகைதரவுள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் காலமான கருணாநிதிக்கு தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. அத்துடன் தி.மு.க. நிறுவனர் அண்ணாவுக்கும் புதிய சிலை அமைக்கப்பட உள்ளது. அண்ணா-கருணாநிதி ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்த விழாவை தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாக மாற்ற ஏற்பா…
-
- 2 replies
- 752 views
-
-
உட்கார வச்சேன், சாப்பாடு கொடுத்தேன், 15 நிமிஷம் டைம் கொடுத்தேன்.. இதுதான் பொன் மாணிக்கவேல் ஸ்ரைல் ! சென்னை: இளைஞர்களை நம்பி என் பணியை விட்டுச் செல்கிறேன் என்று ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தனது பிரிவு உபசார விழாவில் உருக்கமாக கூறியுள்ளார்.தமக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்து விட்டார் பொன்.மாணிக்கவேல். எத்தனை எத்தனை சிலைகளை மீட்டெடுத்தார் இவர்!! குறிப்பாக 50 வருஷத்துக்கு முன்னாடி காணாமல் போன ராஜராஜ சோழன், உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகளை குஜராத்திலிருந்து மீட்டு கொண்டு வந்ததற்கு தஞ்சாவூர் மக்களே விழாவாக எடுத்து கொண்டாடினார்களே.. இதைவிட வேறு என்ன சிறப்பு ஐஜி-க்கு இருக்க முடியும் ?பொன் மாணிக்கவேல் என்றால் அதிரடி.. நாளை முதல் அது மிஸ்ஸாக போகுது ! …
-
- 2 replies
- 825 views
-