Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆளுநர் பதவி விலகும்வரை போராட்டம் தொடரும்: மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலகும்வரை தொடர்ந்து போராடுவோம் என, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும் – பாராட்டும் என்ற தலைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்டாலின் மேற்படி தெரிவித்தார். இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், “எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும், இந்த விளம்பரம் நக்கீரன் கோபாலுக்கு கிடைக்காது. அவர் இந்த கைது நடவடிக்கையை கண்டு பயப்படவில்லை. அவர் எத்தனையோ எதிர்ப்புக்களை கடந்து வந்தவர். கோட்டையில் இருப்பவர்கள் செய்த ஊழலை நினைத்து பயப்படுகின்றனர். கிண்டியில் உள்ளவரோ நிர்மலா தே…

  2. கட்டுப்பாட்டு சுவரில் மோதிய திருச்சி ஏர்இந்தியா விமானம்.. எப்படி நடந்தது? அதிகாரிகள் குழப்பம்! திருச்சியில் இருந்து துபாய் சென்ற ஏர்இந்தியா விமானம் கட்டுப்பாட்டு கோபுரத்தின் மீது மோதியது எப்படி என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். அதிகாலை 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. திருச்சியில் இருந்து அந்த ஏர்இந்தியா விமானம் துபாய் நோக்கி சென்றுள்ளது. இந்த விமானம் விமான நிலையத்தின் முடிவில் உள்ள கட்டுப்பாட்டு கோபுரமான ஏடிசி டவர் (விமான போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம்) மீது மோதியுள்ளது. உள்ளே 130 பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் இருந்துள்ளனர். இதனால் நிலைதடுமாறி கொஞ்சம் சுற்று சுவரில் இடித்துள்ளது. அதன்பின் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.மும்பையி…

  3. எம் ஜி ஆருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த விபரங்களை கோரியது ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆருக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்த விபரத்தை அப்பலோ மருத்துவமனை வெளியிடவேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவரை அமெரிக்காவிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகள் ஏன் இடம்பெறவில்லை என பலர் கேள்வி எழுப்பி வந்துள்ளனர். இந்த விவகாரமே தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. 1984 இல் எம்ஜிஆரின் உடல்நிலை பாதிக்கப்பட்டவேளை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் அவர் அமெரிக்காவிற்கு …

  4. சமூக வலைத்தள போராட்டத்தை மறக்க வைத்துள்ள சின்மயி – வைரமுத்து விவகாரம்! October 10, 2018 1 Min Read தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துமீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். சர்வதேச ரீதியாக பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் தமது சாட்சியங்களை பகிரும் மீடூ( MeToo) என்ற கவன ஈர்ப்பை சமூக வலைத்தளத்தில் முன்னெடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பிலேயே கவிஞர் வைரமுத்து, சுவிசிலாந்து நாட்டுக்கு தனக்கு 18 வயதில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்தபோது, தன்னை தவறாக அணுக முயற்சித்ததாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த வியடத்தை வைரமுத்து மறுத்துள்ளார். அறியப்பட்டவர்கள் மீது வழமையாக முன் …

  5. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே சுமார் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி அருகே அரசடிக்குப்பம் கிராமத்தில் மழைநீரை வெளியேற்றுவதற்காக நிலத்தை தோண்டியபோது இந்த தாழி வெளிப்பட்டுள்ளது. நில உரிமையாளர் அளித்த தகவலின்படி ஆத்தூர் அரசு கலை கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் அரசடிக்குப்பம் கிராமத்தில் கிமு 5-ம் நூற்றாண்டு முதல் மக்கள் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த தாழி 120 செ.மீ உயரம் கொண்டது. தாழியின் அருகே, மூட்டுகள் தாழியைச் சுற்றி வட்டவடிவில் வைக்கப்பட்ட லாட்ரைட் கற்கள் காணப்பட்டன. தாழியின் உள்பகுதியில் அடக்கம் ச…

    • 4 replies
    • 1.2k views
  6. ஒரு ஊடகவியலாளர் நீதிமன்றத்தில் வாதாடிய அபூர்வ வழக்கு- நக்கீரன் கோபாலுக்காக வாதாடிய இந்து ராம் October 9, 2018 ஆளுநர் பதவியைத் தவறான சர்ச்சையில் புகுத்தக்கூடாது என்பதற்காகவும், 124 பிரிவு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் நேரில் முன்னிலையாகி நக்கீரன் கோபாலுக்காக வாதாடினேன் என்று இந்து குழுமத் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் தெரிவித்துள்ளார். நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை 13-வது குற்றவியல் நடுவர் கோபிநாத் முன் ஆஜர்படுத்திய வேளையில், நீதிமன்றத்தில் இந்து குழுமத் தலைவர் என்.ராம் நேரில் சமூகமளித்தா…

  7. கடலுக்குச் சென்று, காணாமல் போன 19 மீனவர்கள் மீட்பு – 210 மீனவர்கள் கரை சேரவில்லை… October 10, 2018 தூத்துக்குடியில் இருந்து 2 விசைப் படகுகளில் கடலுக்குச் சென்று கடந்த ஒரு வாரமாக எந்த தகவலும் இல்லாமல் இருந்த 19 மீனவர் களையும் கடலோர காவல் படையினர் நேற்றையதினம் மீட்டுள்ளனர். அதேவேளை கன்னியா குமரியில் 18 விசைப்படகுகளில் சென்ற 210 மீனவர்கள் இன்னும் கரை சேரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 விசைப்படகுகளில் 19 மீனவர்கள் கடந்த முதலாம் திகதி கடலுக்கு சென்ற நிலையில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்து 2 படகுகள் தவிர ஏனைய படகுகள் கரை திரும்பியிருந்தன. இவ்விரு படகுகளையும் மீட்க கடந்த 4 நாட்களாக கடலோர காவல் படையினர், டோனியர் விமானம் மூலம் தேடுதல் பணியில…

  8. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது ; ஸ்டாலின் தமிழகத்தில் பல்கலைகழகங்களில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது என தி.மு.க தலைவரான மு க ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ‘ தமிழகத்தில் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரியதில் அ.தி.மு.கவிற்கு தோல்வி பயம் இருப்பது தெளிவாக தெரிகிறது. பல்கலைகழகங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஆளுநர் பேசியிருப்பது வேதனையை அளிக்கிறது. ஊழல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆளுநர், அது குறித்து நடவடிக்கை எடுக்காதது வேடிக்கையானது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்து ஆளுநரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. பல்கலைகழகங்களில…

  9. நக்கீரன் ஆசிரியர் கோபால், சென்னை விமான நிலையத்தில் கைது! சென்னையில் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னையில் இருந்து புனே செல்ல புறப்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.சில நிமிடம் முன் தமிழக போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்தனர். ஆளுநர் மாளிகையின் உத்தரவின் பேரில் கைது செய்யட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது.Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/nakkheeran-gopal-arrested-chennai-airport-331583.html

  10. தமிழ் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் எவருடனும் கூட்டணி இல்லை – கமல்ஹாசன் திட்டவட்டம் தமிழ் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் எவருடனும் கூட்டணி வைத்துக்கொள்ளத் தயாரில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னை ஈச்சம் பாக்கத்தில் உள்ள கல்லூரியின் விழாவில் கலந்துகொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். அத்துடன் அரசியலில் நான் 8 மாத குழந்தை, இருந்தாலும் சிறுபிள்ளை என நினைத்து விட வேண்டாம் என அவர் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், “என் கொடியும், நானும் பரபரப்பாகப் பறப்பது மக்களுக்காக தான். நான் ஆற்றாமையினால் அரசியலுக்கு வரவில்லை, எதையும் ஆற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு …

    • 3 replies
    • 752 views
  11. மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதிப்பளிக்கும் வகையில் தமிழகத்திற்கு நாளை மழை பொழிவதற்கான வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 4ஆம் தேதி அனுப்பிய எச்சரிக்கைக் குறிப்பில் அக்டோபர் 7ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகத்தில் கன மழை பெய்யுமென குறிப்பிடப்பட்டிருந்தது. மாநிலத்தின் பல இடங்களில் 25 செ.மீட்டருக்கும் மேலான மழைப்பொழிவு இருக்கும் என்பதால், 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு இப்போது திரும…

  12. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு கோரி 4 லட்சம் மனுக்கள் கையளிப்பு October 6, 2018 1 Min Read ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்துள்ள விசாரணைக் குழுவிடம், ஆலையை நிரந்தரமாக மூடுமாறு கோரி நேற்றையதினம் சுமார் 4 லட்சம் மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் கடந்த மே மாதம் நடத்திய அமைதிப் பேரணியின்போது வன்முறை ஏற்பட்டதில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதனை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை சார்பில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. …

  13. பன்னீர்செல்வம் பற்றி டிடிவி: உள்கட்சி விரிசலை அதிகமாக்கும் முயற்சியா? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இறக்கிவிட்டு தன்னை முதல்வராக அமர்த்துவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக) தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று தனது வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் 2017ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாக கூறியுள்ளார். இந்த தகவலை ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் தெரிவிப்பதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறியுள்ள அவர், பன்னீர்செல்வம் தன்னை மீண்டும் மீண்டும் சந்திக்க முயற்சிப்பதை தடுக்கவே இந்த தகவலை இப்போது வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ள…

  14. முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். புழல் சிறையில் ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி எவ்வளவு? புழல் சிறையில் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதாக சிறப்பு கட்டுரை தீட்டியிருக்கிறது தினமணி நாளிதழ். சமீபத்தில் அங்கு நடைபெற்ற 5 சோதனைகளில் 70 எப்.எம் ரேடியோக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஐந்து கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். தமிழகத்தில் 6 சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் புழல் சிறையில் 17 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 65 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் சிறைத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் சட்டவிரோத செயல்கள், …

  15. 7 பேர் விடுதலை தொடர்பில் ஆளுநர் மௌனம் காப்பது ஏன்? – வேல்முருகன் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மௌனம் காப்பது ஏன் என, வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கூறிய அவர் “பேரறிவாளன் மற்றும் நளினி, சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யும் அதிகாரத்தை சட்டப்பிரிவு 1612 இன் கீழ் தமிழக அரசிடம் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். தமிழக அரசும் அவர்களை விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றி, அதற்கு அனுமதி பெறும் வகையில் தீர்மான கடிதத்…

  16. கடலில் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்களைக் காணவில்லை October 5, 2018 காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்களைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஒருவரின் படகில் கடந்த 26 ம் திகதி காலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 6 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் அவர்களுடன் குடும்பத்தினரால் தொடர்புகொள்ள முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 26ம் திகதி கடலுக்குள் சென்ற அவர்கள், முதலாம் திகதி கரை திரும்பி இருக்க வேண்டும் என்ற போதிலும் ஆனால் இதுவரையிலும் திரும்பாதமையினைத் தொடர்ந்து அவர்கள் காணமல் போயுள்ளதாக முறைப்பாடு வழங்கியுள்ளனர். இதையடுத்து கடலோர காவல்படையினரும் ம…

  17. கோர்ட்டில் கண்ணீர் விட்டு அழுதார், நீதிபதி கிருபாகரன். இதயத்தை பிழியும் தீர்ப்பை அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியுமா என்ன? பரிதாபமும், கவலையும், சோகமும் பின்னிப் பிணைந்த நிலையில் இந்த வழக்கில் கண்ணீரை தவிர வேறெதுவும் நீதிபதி கிருபாகரனால் உதிர்க்க முடியவில்லை!! கடலூரை சேர்ந்தவர் திருமேனி. இவர் ஒரு டெய்லர். இவருக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் பிறந்த போதிருந்தே பேசும் திறன் கிடையாது. மற்றவர்களை அடையாளம் காணவும் முடியாது. மூளையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் வலிப்பும் சேர்ந்து கொண்டது. திருமேனி போகாத கோயில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை... டாக்டர்களிடம் மகனை அழைத்து சென்றும் எந்த பிரயோஜனமும் இல்லை.பெத்த மகன் கண் எதிரே வலிப்பு வந்து துடிக்கும்போது இவரால் அதனை…

  18. தமிழகத்தில் நவம்பர்-1 இல் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு! பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஊதிய உயர்வு, ஊதிய நிலுவைத் தொகை ரூ.7 ஆயிரம் கோடி ஆகியவற்றை வழங்கக் கோரி, நவம்பர் 1 ஆம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொ.மு.ச மற்றும் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கள் அறிவித்துள்ளன. இவ்வேலை நிறுத்தத்துக்கான அறிவிப்பை விரைவில் போக்குவரத்து துறை இயக்குநர் மற்றும் தொழிலாளர் துறை ஆணையரிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 6 ஆம் திகதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள…

  19. அக்டோபர் 7ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கன மழையோ, மிக கனமழையோ பெய்யக்கூடுமென இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழக பேரிடர் மேலாண்மை மையம் இதனை எதிர்கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. சென்னையில் புதன்கிழமை இரவிலிருந்து விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. தொடர்ச்சியாக மழை பெய்துவரும் திருவாரூர், சேலம், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் வியாழக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அனுப்பிய எச்சரிக்கைக் குறிப்பில் அக்டோபர்…

  20. கனடாவில் இடம்பெற்ற விபத்தில் தமிழக இளைஞன் உயிரிழப்பு! கனடாவில் நேற்று(புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் தமிழக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தின் கோயம்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவீன் ராஜ்.24 வயதான இவர் கனடாவின் Oshawa பகுதியில் உள்ள Durham கல்லூரியில் MBA படித்து வந்துள்ளார். படிப்பிற்கு இடையே அவர் பகுதி நேர வேலையாக அங்கிருக்கும் பிட்சா கடையிலும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 2 மணிக்கு நவீன் பயணித்த காரும், மற்றுமொரு கார் மோதுண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் வி…

  21. தமிழக அரசுக்கு 50 கோடி ரூபாய் நஷ்டம்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 450 புதிய பேருந்துகளை முதலமைச்சர் வருகைக்காக இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளதால் அரசுக்கு 50 கோடி ரூபாய் நஷ்டம் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், 9 ஆயிரத்து 153 புதிய பேருந்துகள் 7 ஆண்டில் வாங்கப்படும் என அரசு அறிவித்திருந்ததை அதில் சுட்டிக்காட்டி உள்ளார். இதுவரை, பாதி அளவுக்குக் கூட புதிய பேருந்துகள் வாங்காத நிலையில் வாங்கப்பட்ட பேருந்துகளும் முழு அளவில் இயக்கப்படவில்லை என்றும் ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார். புதிய பேருந்துகளை இயக்காமல் பணிமனைகளில் நிற…

  22. ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை, தூக்கிலடக் கோரி சட்டத்தரணி உண்ணாவிரதப் போராட்டம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை, தூக்கிலடக் கோரி காங்கிரஸ் சட்டத்தரணி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைதண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில், தமிழக அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியும், காங்கிரஸ் கட்சி சட்டத்தரணி பிரிவினை சேர்ந்த வழக்கறிஞர் அய்யலுச்சாமி, காந்தி மண்டப வளாகத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று (செ…

  23. சென்னை கோயம்பேட்டில் நேற்று பின்னிரவு ஏற்பட்ட மின்தடை காரணமாக ஏசி இயந்திரத்திலிருந்து வெளியான வாயுவினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். சென்னை கோயம்பேடு அருகே உள்ள மேட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். தனியார் பீட்ஸா நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். இவரது மனைவி கலையரசி மற்றும் மூன்றாம் வகுப்பு பயிலும் 8 வயது மகன். மூவரும் இரவு உறங்கிய பிறகு திடீரென மின்சாரம் நின்றுபோனது. தவறவிடாதீர் இதனால் வீட்டில் உள்ள மினி ஜெனரேட்டரை ஆன் செய்துவ…

    • 3 replies
    • 572 views
  24. திருமுருகன் காந்தி.. விடுதலையானார். 52 நாள் சிறை வாசம் முடிவிற்கு வந்தது!மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஐநா சபையில் பேசியதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஐநாவில் பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். அது மட்டுமில்லாமல் பல முக்கிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.முதலில் இவரை நீதிமன்ற காவலில் எடுக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது, அதனால் அவர் விடுதலைய…

  25. பிரபல இயக்குனர் மணிரத்னத்திற்கு இனந்தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில், சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலில், செக்கச் சிவந்த வானம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் எனக் கூறப்பட்ட தெரிவிக்கப்படுகின…

    • 2 replies
    • 525 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.