தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10261 topics in this forum
-
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இது விஷயத்தில் தனது நிலைப்பாட்டை மத்திய அரசு 10 நாள்களில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து முடிக்கும்வரை இந்த விவகாரத்தில் தன்னிச்சையான அமைப்பை உருவாக்க மத்திய அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும் அந்தத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. அதனால், இந்த விஷயத்தில் வாரியத்தை உடனடியாக அமை…
-
- 0 replies
- 474 views
-
-
கேரளாவும் தமிழ்நாடும் எழுத்தாளர்களை நடத்தும் விதம் மூன்றாண்டுகளுக்கு முன்பு நான் சுமார் 90 பேர் கொண்ட என் வகுப்புக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுத்தேன். தனியாகவோ நான்கைந்து பேர் சேர்ந்தோ தமது தாய்மொழியில் அல்லது இந்திய மொழி ஒன்றில் இருந்து ஒரு கதையை ஆங்கிலத்தில் மொழியாக்க வேண்டும். அக்கதைகளில் பத்தை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தேன். அப்போது நான் ஒரு விசித்திரத்தைக் கண்டேன். எங்கள் பல்கலைக்கழகத்தில் மலையாளிகள் அதிகம், ஓரளவுக்கு தமிழ் மாணவர்களும் உண்டு, அடுத்து இந்திக்காரர்கள் வருவார்கள். கன்னட மொழி பேசும் மாணவர்கள் அமைதியாக நிழலைப் போல் இருப்பார்கள். ஒரு மாணவர் கூட கன்னடக் கதையை மொழியாக்கவில்லை. முப்பதுக்கு மேல் மலையாள சிறுகதைகளும், இருபதுக்கு மேல் …
-
- 0 replies
- 474 views
- 1 follower
-
-
பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, பொள்ளாச்சி காந்தி சிலை அருகே இன்று (வெள்ளிக்கிழமை) திருநங்கைகள், பெண்கள், ஆண்கள் ஒன்று சேர்ந்து மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நடந்த இந்த மனித சங்கிலி போராட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர். ''பெண்ணின் ஒழுக்கம் மட்டும் பேசாதே - ஆணுக்கும் ஒழுக்கம் உண்டு மறவாதே'' உட்பட பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்தியுள்ளனர். …
-
- 0 replies
- 474 views
-
-
சமூக வலைதளத்தில் முகம் தெரியாமல் ஒளிந்து கொண்டு... விமர்சனம் செய்ய நினைப்பது கையாலாகாதனம்... அது ஒரு பொட்ட_தனம்... சொல்கிறார்.. பாஜகவின்_மதுவந்தி...!
-
- 0 replies
- 474 views
-
-
மீண்டும் கூவத்தூரா? மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பா? மீண்டும் ஒரு கூவத்தூரா? மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பா ? டிசம்பர் 5, 2016க்கு பிறகு தொடங்கிய அரசியல் நிலையற்ற சூழல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிமுகவுக்குள் அதிகாரப் போட்டியும், குழப்பும் வரும் போதெல்லாம் உடனே எழுப்பபடும் கேள்வி இந்த ஆட்சி நீடிக்குமா? ஆளுநர் ஆட்சியை கலைப்பாரா என்பது தான்? மிக சொற்பமான இடங்களிலேயே பெரும்பான்மையை பெற்றுள்ள அஇஅதிமுகவின் ஆட்சி நீடிப்பதற்கு 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பன்னீர் செல்வம் பிரிந்து சென்ற பிறகு சட்டமன்றத்தில் நடைபெற்ற ந…
-
- 0 replies
- 474 views
-
-
சிக்கித் தவிக்கும்... இலங்கைத் தமிழர்களுக்கு, உதவுமாறு... ஜெய்சங்கரிடம் ஸ்டாலின் கோரிக்கை! பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுமாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று (வியாழக்கிழமை) தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட முதலமைச்சர், இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து கலந்துரையாடினார். இதன்போது, இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது நிலவும் தீவிரப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, வேதனையில் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொண்டார். இந்தச் சூழ்நிலை…
-
- 5 replies
- 474 views
-
-
கொரோனா தொற்று : மக்கள் நோயாளர் காவு வண்டிகளிலேயே... உயிரிழக்கும் சோகம்! தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மக்கள் சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்னபதாகவே உயிரிழக்க நேரிடுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனையில் பெரும்பாளான மக்கள் கொரோனா தொற்றுகான சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக மிக நீண்ட வரிசையில் நோயாளர் காவு வண்டிகளிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு நோயாளர் காவு வண்டிகளில் காத்திருக்கும் மக்களில் பெரும்பாலானோருக்கு ஒக்சிஜன் தேவைப்படுவதாகவும், ஒக்சிஜன் கிடைக்கப்பெறாமல் பலர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சும…
-
- 0 replies
- 473 views
-
-
பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிகார் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வந்த பிறகு, நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால், முதலில் மாநில அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பல அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் கோரிவருகின்றன. மாநில அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த தி.மு.க. தயங்குகிறதா? கடந்த ஏப்ரல் மாதத்தில் அகில இந்திய சம…
-
- 0 replies
- 473 views
- 1 follower
-
-
மு.க.அழகிரி | கோப்புப் படம் வரும் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் மு.க. அழகிரியிடம் செய்தியாளர்கள், வரும் தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அழகிரி, "வரும் தேர்தலில் யாருக்கும் என் ஆதரவு இல்லை. இது என் ஆதரவாளர்களுக்கும் பொருந்தும்" எனக் கூறிச் சென்றார். அண்மையில், திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுர இல்லத்தில் வைத்து அழகிரி சந்தித்தார். இதனிடையே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார் என சலசலக்கப்பட்டது. ஆனால், அதற்கான வாய்ப்பு ஏதுமில்லை என ஸ்டாலின் தொடர்ந்து கூறிவந்தார். இந்நிலையில், வர…
-
- 0 replies
- 473 views
-
-
நாகை மாவட்டம், கோடியக்கரை கோயிலில் கொள்ளை போன சிலைகள் மீட்கப்பட்டு, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை கோடி முத்துமாரியம்மன் கோயிலிலிருந்த முருகன், வள்ளி , தெய்வானை, மாரியம்மன் ஆகிய நான்கு சிலைகள் கடந்த 16 - ம் தேதி இரவு மர்ம நபர்களால் களவாடப்பட்டன. இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே உள்ளூர் பெண் சாமியாடி ஒருவர், ``களவுபோன சிலைகள் இந்த எல்லைக்குள் பூமியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளன" என்று அருள்வாக்கு கூறியதை நம்பி நான்கு நாள்களாக கிராமத்தினர் வேலைக்கும் போகாமல் பல்வேறு கு…
-
- 0 replies
- 473 views
-
-
பேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி, பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரியை வாங்கி கொடுத்ததாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும், ஆனால் அந்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றும் பேரறிவாளன் குறித்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு எடுத்…
-
- 0 replies
- 473 views
-
-
பன்னீர்செல்வம் வீட்டுக்கு விரைந்தார் தீபா..! சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விரைந்துள்ளதாகவும் இருவரும் நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணி அளவில் திடீரென வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், கண்களை மூடி தியானம் செய்யத் தொடங்கினார். ஜெயலலிதா நினைவிடத்தில் சுமார் 50 நிமிஷங்கள் தியானம் செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறகு செய்தியாளர்கள் சசிகலா…
-
- 0 replies
- 473 views
-
-
தி.மு.க உறுப்பினராகக் கையெழுத்திட்டுப் புதுப்பித்த கருணாநிதி..! வைரலாகும் புகைப்படங்கள் தி.மு.க-வின் உறுப்பினராக, அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி தன்னைப் புதுப்பித்துக்கொண்டார். அதற்காக, அவர் கையெழுத்திட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய பெயர்களைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதி, அவருடைய பெயரைப் புதுப்பித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில், '15-வது அமைப்புத் தேர்தலையொட்டி கருணாநிதி, உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு, கட்டணம் செலுத்தி உறுப்பி…
-
- 3 replies
- 473 views
-
-
தமிழர்களை பொறுக்கிகள் என இழிவுபடுத்தி பேசி தமிழர்களுக்கு எதிராக தன்னுடைய வாழ்நாள் பெரும்பகுதியை செலவளித்து வரும்  சுப்ரமணியசாமி கோவையில் நடைபெற்ற ஒரு தனியார் விழாவிற்கு வருகை தருவதை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் சுப்ரமணிய சாமிக்கு தமிழர்கள் சார்பில் தங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். சுப்ரமணிய சாமி படம் அச்சிடப்பட்ட பதாகைகளை கிழித்து எறிந்துள்ளனர். கறுப்புக் கொடி ஏந்தி சு.சாமிக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர். தகவல் அறிந்த காவல்துறைனர் நாம் தமிழர் கட்சியினர் சுமார் 20 பேர்களை கைது செய்துள்ளனர் .    http://dinaithal.com/tamilnadu/17443-cupramaniyacami-torn-banners-arrested-20-people-showed-black-flag.html
-
- 0 replies
- 473 views
-
-
‘கைலாசா’ நாடு பெயர் மாறியது- நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ள நித்யானந்தா ‘கைலாசா’ என்ற பெயரில் சாமியார் நித்யானந்தா உருவாக்கியுள்ள நாட்டின் பெயரை ‘ஸ்ரீகைலாசா’ என மாற்றியுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நேரலையில் சத்சங்கம் மூலம் சீடர்களைத் தொடர்பு கொண்ட நித்யானாந்தா இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். அத்துடன் கைலாசா என்ற இணையத் தளத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 8 இலட்சம் பேர் என்ற நிலையில் அதன் சேர்வர் தடைப்பட்டதாகவும் இதனால் வேறு சேர்வர் மாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது வரை கைலாசா நாட்டின் குடியுரிமையைப் பெறுவதற்கு 12 இலட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கார்த்தி…
-
- 0 replies
- 473 views
-
-
உயிருடன் தான் இருக்கும்போதே... ஆவணத்தில் ஆளுநர் கையொப்பமிட வேண்டும்: அற்புதம்மாள் உருக்கம் உயிருடன் தான் இருக்கும் போதே ஏழு பேர் விடுதலை தொடர்பான ஆவணத்தில் ஆளுநர் கையொப்பமிட்டு ஒப்புதல் அளிக்க வேண்டுமென ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், இந்த தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் அமைதி காத்து வருகிறார். பேரறிவாளன், நளினி தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி…
-
- 0 replies
- 473 views
-
-
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பெண் சிசுக் கொலைகள்ஸ அதிர்ச்சியளிக்கும் சர்வே! Posted by: Mayura Akilan Updated: Tuesday, March 5, 2013, 12:17 [iST] சென்னை: பெண், சிசு கரு கொலைகள் சட்டப்படி குற்றம் என்று அறிவித்தாலும் இன்னமும் பல மாவட்டங்களில் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பெண் சிசு, கருக்கொலைகள் தொடர்பாக சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி சார்பில் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் இது தெரியவந்துள்ளது. பெண் சிசுக்கொலை, பெண் சிசு கருக்கொலை உங்கள் பகுதியில் நடந்துள்ளதா? உங்கள் பகுதி மருத்துவமனைகளில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்க்கின்றனரா, தெரிவிக்கின்றனரா, உங்கள் ஊர் ஸ்கேன் மையத்தில…
-
- 0 replies
- 473 views
-
-
ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பான அமுலாக்கத்துறை வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் .மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமுலாக்கத்துறை கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி கைது செய்தது. இந்நிலையில், ப.சிதம்பரம் தொடர்ந்த பிணை மனுவை டில்லி நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று ப.சிதம்பரத்திற்கு நிபந்தனையுடனான பிணை வழங்கியுள்ளது. முன்னதாக, சி.பி.ஐ. தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் ஒக்டோபர் 22ஆம் திகதி உச்ச நீதிமன்றம் சிதம்பரத்திற்கு பிணை வழங…
-
- 0 replies
- 473 views
-
-
2 லட்சம் அப்பாவி தமிழர்களின் இரத்தம் குடித்த கொடூரன் ராஜபக்சேயின் LYCA திரைப்பட நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படத்தை தடை செய் என இனம் காக்கும் வீரத்தமிழர்கள் , அண்ணன் பிரபாகரன் தம்பிகள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/33488/57//d,article_full.aspx
-
- 0 replies
- 473 views
-
-
வேலூர்: வேலூரில் நேற்று 106 டிகிரிக்கு வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். அடிக்கடி ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக கடும் அவதிக்கு ஆளாகினர். வேலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. கடந்த மார்ச் 20ம் தேதி வெயில் 100 டிகிரியை தாண்டியது. பின்பு படிப்படியாக வெயிலின் அளவு 104 டிகிரி உயர்ந்தது. நேற்று காலை முதலே வெயில் கடுமையாக இருந்தது. அனல் காற்று மக்களை திணற வைத்தது. நேற்றைய வெயில் அளவு 106.3 டிகிரி. மாலை வரை வெயில் கொளுத்தியதால் மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதற்கிடையில் அங்கு அடிக்கடி ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக மேலும் மக்கள் அவதிக்கு ஆளாகினர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் முகத்தை துணியால் மூடியபடியு…
-
- 0 replies
- 473 views
-
-
இனப் படுகொலை நாடான சிறீலங்காவில் பொதுநல நாடுகள் மன்ற மாநாட்டை நடத்தாதே என்று வலியுறுத்தி இன்று காலை 10.00 மணியளவில் சாசுத்திரி பவன் மற்றும் இங்கிலந்து துணைத் தூதரகம் முற்றுகைப் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் ஒருகிணைப்பாளர் தோழர் திருமுருகன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்தியா தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொழிலாளர்கள் அணி பொதுச் செயலாளர் சைதை சிவா மனிதநேய மக்கள் கட்சி மாணவரணி மாநிலச் செயலாலர் தோழர் அனிஸ் சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா துணைப் பொதுச் செயலாளர் அம்சா தமிழக மக்கள் சனநாயக கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் ஆதிதிராவிடன் திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை நிலையச் செயலாள…
-
- 0 replies
- 473 views
-
-
’சசிகலாவை எதிர்ப்பவர்கள் அணி திரள்கிறார்கள்!’ - சசிகலா புஷ்பாவின் சிக்னல் அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார். ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா கோரியிருந்தார்.மேலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச உள்ளதாகவும் சசிகலா புஷ்பா தெரிவித்திருந்தார். தற்போது தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த நி…
-
- 0 replies
- 473 views
-
-
சசிகலா நடராஜன் அதிரடி பேச்சு அ.தி.மு.க.,வில் கடும் அதிருப்தி 'குடும்ப ஆட்சி நடத்துவோம்' என, சசிகலா நடராஜன் பேசியது, அ.தி.மு.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவுக்கு, எதிராக வரிந்து கட்ட தயாராகி வருகின்றனர். ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க.,வை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, சசிகலா குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஜெயலலிதா உடல், மக்கள் அஞ்சலிக்காக, ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு இருந்தபோது, அவரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, சசிகலா குடும்ப உறுப்பினர்கள் சுற்றி நின்றனர். இது, அ.தி.மு.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரி…
-
- 0 replies
- 473 views
-
-
மெரினாவில் கடைகளை அடைத்தது போலீஸ்! போராட வந்தவர் கைதால் பரபரப்பு சென்னை மெரினாவில் இளைஞர்கள் போராட்டத்தை தொடங்க உள்ளதாக வந்த தகவலையடுத்து, அங்கிருந்த கடைகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அடைத்து வருகின்றனர். இதனிடையே, மெரினாவில் போராட வந்த ராமேஸ்வரத்தை சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த 16 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய வேளாண்துறை அமைச்சர்…
-
- 1 reply
- 473 views
-
-
காமன்வெல்த் நாடுகளின் அடுத்த சந்திப்பை இலங்கையில் நடத்தக் கூடாது என்று அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளை திமுக கேட்டிருக்கிறது. இது தொடர்பாக காமன்வெல்த் நாடுகளின் தூதர்களை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கள் சந்தித்து பேசியிருக்கின்றன. இலங்கையில் அல்லாமல் வேறு ஒரு இடத்தில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த வேண்டும் என்று திமுக குழுவினர் அந்த நாடுகளின் தூதுவர்களைக் கேட்டுள்ளனர். இளங்கோவன் மற்றும் டி. ஆர். பாலு ஆகியோர் தலைமையில் இரு குழுவினர் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை மனித உரிமை நிலவரங்களைக் காரணம் காட்டி இந்த பிரச்சாரத்தை திமுக மேற்கொண்டு வருகிறது. http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/04/130424_dmkcommenwealth.shtml
-
- 1 reply
- 473 views
-