Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சுவாதி கொலை வழக்கில் பிலால் மாலிக்கை விசாரிக்க வேண்டிய தேவை என்ன என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் இன்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனப் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை ஜூலை 1-இல் போலீஸார் கைது செய்தனர்.சுவாதி கொலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிலால் மாலிக் சொன்ன வாக்குமூலங்களை ஏன் வெளியிடவில்ல…

  2. காசி, ராமேஸ்வரம் புனித யாத்திரை என்பது பெரும்பாலான இந்துக்களுக்கு வாழ்நாள் கனவு. கங்கை நதியிலும், ராமேஸ்வரம் தீர்த்தத்திலும் புனித நீராடி பாவங்கள் நீங்கி புண்ணியம் சேர்க்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.கங்கை நீராடல் பலருக்கு கனவாகவே முடிந்து போவதால் எல்லோருக்கும் கங்கை நீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக கங்கை நீரை பாட்டில்களில் அடைத்து விற்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ள கங்கைநீர் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டருகிலேயே கங்கை நீர் கிடைப்பது ‘வரப்பிரசாதம்‘ என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் கங்கைநீர் அசுத்தமானது. அதை தபால் நிலையங்களில் விற்…

  3. ராஜீவ் காந்தி கொலை கைதிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு தடை கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து இருந்தது.அதன்படி, நாளை (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பிரபுல்ல சி.பந்த், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் முருகன், சாந்தன், பேர…

  4. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடித்து காட்டிய ராம்குமார்! சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரிடம் கடந்த 13-ம் தேதி மாலை முதல் 15-ம் தேதி மாலை வரை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்தது. ராம்குமாரிடம் போலீஸ் காவலில் நடத்தப்பட்ட விசாரணை குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில் , "எங்கள் விசாரணையில் ராம்குமார் இருந்தபோது 13-ம் தேதி நள்ளிரவில் ரயில் போக்குவரத்து இல்லாத சமயத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அவரை அழைத்து சென்றோம். பயணிகள், பொதுமக்கள் இல்லாத நேரத்தில் எந்த மீடியாக்களுக்கும் தகவல் கசியாத வகையில் ராம்கு…

  5. டெல்லியில் முதல்- அமைச்சர்கள் மாநாடு இன்று நடந்தது. மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உரையை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். அதன் விவரம் வருமாறு:–வலிமையான மாநிலங்களால்தான் வலிமையான மத்திய அரசு அமையும். அதிகாரங்களை மத்தியில் குவிக்கும் பழைய போக்குகளை மாற்றியாக வேண்டும்.அரசியல் பொருளாதார அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருந்து மாறி வரும் காலம் இது. மாநிலக் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது.மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கோஆப்ரேடிவ் கூட்டாட்சியை ஊக்குவிக்கிறது. அந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. நாட்டின் வளர்ச்சிக்கு மாநில அரசுகள் சரிசமமாக பங்குதாரர்கள் என்ற கருத்தை நான் எப்போதும் வர…

  6. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் தினமும் ஒவ்வொரு தகவலாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் பிராமண பெண்ணான சுவாதி முஸ்லீம் மதத்திற்கு மாற இருந்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முஸ்லீம் ஒருவர் தான் இந்த கொலையை செய்திருப்பார் என ஒரு சில கூறி பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. பின்னர் ராம்குமார் கைது செய்யப்பட்டதும் முஸ்லீம் குறித்த தகவல்கள் மங்கிப்போனது. ராம்குமார் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தலித் அமைப்புகள் ர…

  7. ராணுவப் புரட்சி நடந்துள்ள துருக்கியில், 20 தமிழர்கள் உள்பட 200 இந்தியர்கள் சிக்கி தவிக்கின்றனர். அங்கிருந்து 'எங்களை இந்திய அரசு மீட்க வேண்டும்' என்று துருக்கியிலிருந்து தமிழக வீராங்கனைகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். உலக பள்ளி தடகள சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 200 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த அஜித்குமார், தமிழ்ச்செல்வி, பிரியதர்ஷினி உள்பட 20 பேரும் அடக்கம். இந்த நிலையில், துருக்கில் நேற்று ராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய 60 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்காரா பகுதியில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் டிராப்சோன் நகரில் இந்திய வீரர், வீரா…

  8. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையில் வாதத்தை முன்வைக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியது.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய ஏழு பேரும் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுவிப்பது தொடர்பாக அனுமதி கேட்டு, அண்மையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. இந்நிலையில், ராஜீவ் கொலைக் கைதிகள் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பிரஃபுல்லா சி.பண்ட், ஏ.எ…

  9. ''எங்களை தாக்கிய காவலர்கள் 3 பேரையும் டிஸ்மிஸ் செய்யாவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம்'' பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் ராஜா ஆவேசத்துடன் கூறியுள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தோக்கவாடி பகுதியை சேர்ந்த ராஜா, அவரது மனைவி உஷா, மகன் சூர்யா ஆகியோர் நேற்று முன்தினம் மாலை செங்கம்- போளூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் விடுதி எதிரே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதோடு, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது செங்கம் காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர்கள் நம்மாழ்வார் அந்த வழியாக வந்தார். அவர் தகராறு குறித்து ராஜாவிடம் கேட்டுள்ளார். இது குடும்ப தகராறு இதில் போலீசார் தலையிட வேண்டாம் என்று ராஜா கூறியுள்ளார்.இதனால் ராஜ…

    • 2 replies
    • 340 views
  10. 600 சிம்கார்டுகள், 25 மேன்சன்கள், தென்காசி அரிவாள்..!' -ஆந்திரா வரை நீளும் சுவாதி கொலை வழக்கு சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், மூன்று நாட்கள் போலீஸ் விசாரணைக்குப் பிறகு, இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். ' ராம்குமார்தான் கொலையில் ஈடுபட்டார் என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன' என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள். சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ராம்குமாரை, நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் கைது செய்தது போலீஸ். நெல்லை மருத்துவமனையில் சி…

  11. இனிப்பு ஹெரோய்ன் விற்க முயன்ற இலங்கை அகதிகள் கைது ராமநாதபுரத்தில் சீனியை ஹெரோய்ன் போதைப் பொருள் எனக் கூறி விற்க முயன்ற இலங்கை அகதிகள் 3 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு முன்பாக சந்தேகத்துக்கு இடமான முறையில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கியூ பிரிவு பொலிஸார் விசாரணை செய்துள்ளனர். இதன்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில்களை தெரிவித்தனர். அவர்களிடம் 850 கிராம் எடையுள்ள சீனி இருந்தது. இது போதைப் பொருள் எனவும், அதிக விலைக்கு விற்பதற்காக வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரிவித்தனர். சீனியை ஹெராயின் போதைப் பொருள் எனக் கூறி அதிக விலைக்கு விற்க முயன்றதாக அந…

  12. சுவாதியை பார்த்தது முதல் கொலை வரை..! ராம்குமாரிடம் போலீஸ் அடுக்கிய கேள்விகள் சுவாதி கொலை வழக்கு பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஒவ்வொரு அசைவுகளையும் பொது மக்கள் கவனித்து வருகின்றனர். ராம்குமார் மட்டுமா குற்றவாளி, இல்லை வேறு யாரும் இருக்கிறார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கு எல்லாம் விடையளிக்கும் வகையில் போலீஸார், ராம்குமாரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ராம்குமாரை போலீஸார் கைது செய்ய முயன்ற போது அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் அப்போது எந்த விசாரணையும் போலீஸாரால் மேற்கொள்ள முடியவில்லை. இதனால் மூன்று நாள் போலீஸ் காவலில் முழு விவரங்களையும் பெற போலீஸார் முனைப்புடன் செயல்பட்டு …

  13. நாம் தமிழர் கட்சியின் புதுக்கோட்டை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:–ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள சாந்தன் தன்னை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி இலங்கை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது எந்த அளவுக்கு சாத்தியமானதென தெரியவில்லை. எனினும் அவரது உணர்வை மதிக்க வேண்டும். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஜல்லிக் கட்டு நடத்த தனி மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். பள்ளி, கல்லூரி , வழிபாட்டு தலங்களின் அருகே அரசு மதுபானக் கடைகள் இயங்கவில்லை என்று கூறி வந்த அ.தி.மு.க. அரசு , தற்போது பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள 1000 கடைகளை மூடப்போவதாக…

  14. எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 7 பேருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. எம்.ஜி.ஆர் மற்றும் அவரது மனைவியுடன் விஜயன் குடும்பத்தினர் ஆயுள் தண்டனை பெற்றுள்ள 7 பேருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008ல் நடந்த இந்த கொலை சம்பவத்தில் விஜயன் ம…

  15. புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு: சுவாதியின் தந்தையும், கடைக்காரரும் குற்றவாளியை அடையாளம் காட்டினர் ராம்குமாரின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து. சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நடந்தது சுவாதி கொலைக் குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்கான அணிவகுப்பு சென்னை புழல் சிறையில் நேற்று நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்டது. சுவாதியின் தந்தையும், கொலையை நேரில் பார்த்த சாட்சி யான நுங்கம்பாக்கம் ரயில் நிலைய கடைக்காரரும் குற்றவாளியை அடையாளம் காட்டினர். அடையாள அணிவகுப்புக்கு ராம்குமார் முழு ஒத்துழைப்பு அளித்ததாக கூறிய நீதிபதி, சிறையில் அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அடையாள அணிவகுப்பு …

  16. ' 25 ஆண்டு துன்பம் போதும்; இலங்கைக்கே போய்விடுகிறேன்!' -சாந்தனின் கண்ணீர் கோரிக்கை ' ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சட்டவிரோதமாக 25 ஆண்டுகளாக தமிழக சிறையில் துன்பப்படுகிறேன். நான் இலங்கையின் குடிமகன் என்பதால், என்னை அந்த நாட்டுக்கே அனுப்பி வைத்துவிடுங்கள்' என மத்திய உள்துறை அமைச்கத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார் வேலூர் சிறையில் உள்ள சாந்தன். மத்திய உள்துறை அமைச்சக செயலர், மாநில அரசின் உள்துறைச் செயலர், சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர், இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் சாந்தன். அந்தக் கடிதத்தில், " வெளிநாட்டில் வேலைக்குச் சேருவதற்காக கடந்த 91-ம் ஆண்டு படகு மூலம் இந்திய…

  17. புதுடெல்லி: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்தால் ஏற்றுக்கொள்வேன் என கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 41 இடங்களில் போட்டியிட்டு வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விலக வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர்களும், நிர்வாகிகளும் வலியுறுத்தினர். மேலும் இதே காங்கிரஸ் மேலிடத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். நெருக்கடி முற்றியதை தொடர்ந்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, கட்சி மேலிடத்தில் கடிதம் அளித்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இ…

    • 3 replies
    • 597 views
  18. இந்தியாவில் திருப்பூரை சேர்ந்தவர் சரவணன் மதுரை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து விட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.டி. படிக்க கடந்த 10 நாட்களுக்கு முன்பு சேர்ந்தார். இதனால் டெல்லி கவுதம் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கி இருந்தார். நேற்று காலை சரவணன் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தெற்கு டெல்லி பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பொலிஸார் விரைந்து வந்து சரவணன் உடலை கைப்பற்றி மேற்கொண்ட பரிசோதனையில் விஷ ஊசி போட்டு சரவணன் இறந்திருப்பது தெரியவந்தது. மருத்துவ படிப்புக்கு சேர்ந்த 10 ஆவது நாளிலேயே அவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரவணன் தற்கொலை செய்யும் எண்ணத…

  19. பாலியல் பிரச்னைக்கு சிகிச்சை பெற வந்த பெண்களை மசாஜ் என்ற பெயரில் பாலியல் பலாத்காரம் செய்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி துடா சாலையில் சுரேஷ் என்பவர் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இங்கு மூலம், குடலிறக்கம், பாலியல் குறைபாடு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதாக விளம்பரம் செய்து சிகிச்சை அளித்து வந்தார். இவரிடம் கொல்கத்தாவை சேர்ந்த வினய்(26) என்பவர் உதவியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென தலைமறைவானார். ஆனால், வினய் தொடர்ந்து கிளினிக்கை நடத்தி வந்தார். இவரிடம் வரும் நோயாளிகளிடம் சாதாரண மருந்துகளை கொடுத்துவிட்டு ரூ.500 முதல் ரூ.1000 வரை கட்டணம் வசூலித்து வந்தார். அவரிடம் சிகி…

  20. நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் கலைஞர் கருணாநிதியின் கொள்ளுபேரனும், கெவின் நிறுவன இயக்குனர் சி.கே.ரங்கநாதன்-தேன்மொழி தம்பதிகள் மகனுமான மனு ரஞ்சித்துக்கும் பெரியவர்கள் திருமணம் பேசி முடித்திருந்தனர். இந்த திருமண நிச்சயதார்த்த விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள 7 நட்சத்திர ஓட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட விக்ரமுக்கு மிக நெருக்கமான நண்பர்களும், மற்றும் இரு குடும்பத்தைச் சேர்ந்த நெருக்கமான உறவினர்களும், மணமகள் அக்ஷிதாவின் தோழிகளும், மணமகன் மனு ரஞ்சித்தின் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண திகதி பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. என்றாலும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது. திருமணத்தை தி.மு.கழக தலைவர் கருணா…

  21. ‘சுவாதி படுகொலை அன்றே, ராம்குமார் ஊருக்கு கிளம்பியது ஏன்?’ -களமிறங்கிய உண்மை கண்டறியும் குழு சுவாதி படுகொலை வழக்கின் உண்மைகளைக் கண்டறிய எவிடென்ஸ் அமைப்பினர் களமிறங்கியுள்ளனர். ‘படுகொலை வழக்கை அவசர கதியில் முடித்து வைக்கவே போலீஸார் விரும்புகின்றனர். குறிப்பாக, ராம்குமார் பேசிவிட்டால் சிக்கல் ஏற்பட்டுவிடும் என்பதால் சிறையில் கெடுபிடி செய்கிறார்கள்’ என்கிறார் எவிடென்ஸ் கதிர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ‘ படுகொலை வழக்கின் உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கவே போலீஸார் விரும்புகின்றனர். அவரைக் கை…

  22. ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அன்வர் ராஜா. இவருக்கு வயது 71. தற்போது அவர் வட மாநிலத்தை சேர்ந்த குர்ஷித்பானு என்ற 35 வயது பெண்ணை இவர் திருமணம் செய்துள்ளார். இது அன்வர் ராஜாவுக்கு மூன்றாவது திருமணமாகும். ராமநாதபுரம் மாவட்டம் பனைகுளத்தை சேர்ந்தவர் அன்வர் ராஜா. முன்னாள் தமிழக அமைச்சராக இருந்த அவர், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும், அதிமுக சிறுபான்மைப் பிரிவு மாநில செயலாளராகவும் உள்ளார். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தாஜிதா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். கடந்த ஆண்டு தாஜிதா இறந்து போனார். இந்நிலையில் அன்வர் ராஜா நேற்று வடமாநிலத்தை சேர்ந்த குர்ஷித்பானு என்ற 35 …

    • 1 reply
    • 573 views
  23. மதுரை தனியார் ஹோட்டலில் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் பேசியதாவது , ஆண்டுதோறும் ஜூலை 13 ஆம் தேதி தனது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருவதாகவும் , இந்தாண்டு 63 வது பிறந்தநாள் மதுரை ராஜா முத்தையா மண்டபத்தில் கொண்டாடப்படவுள்ளதாக தெரிவித்தார் . இதனை கவிஞர்களின் திருநாள் என வெற்றி தமிழர் பேரவை கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கவிஞரை தேர்ந்தெடுத்து பரிசளித்து வருவதாகவும் . அதனை தொடர்ந்து இந்தாண்டு ஈழத்து கவிஞர்கள் ஜமீல் , நெளபல் ஆகிய இருவருக்கு விருதும் , தலா 50 ஆயிரம் வீதம் நன்கொடையும் வழங்கப்படவுள்ளதாக கூறினார் . அறக்கட்டளை உருவாக்கி ஏழை மாணவர்கள் தாய்மொழி பயின்று உயர்கல்விக்கு உதவி செய்யும் வகையில் தேனி மற்றும் மதுர…

  24. மதுரை, மன உறுதியில்லாமல் தற்கொலை செய்து கொள்வது மனைவியின் முட்டாள்தனமான நடவடிக்கை என்றும், இதற்காக கணவனை குற்றம் சுமத்த முடியாது என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. போலீசார் வழக்கு விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இவரது மனைவி கடந்த 26.12.2004 அன்று தீக்காயங்களுடன் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சையின்போது அவர் தாசில்தாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர், தன் மீது கணவர் அய்யப்பன் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்ததாக கூறினார். இதற்கிடையே சிகிச்சை பலனின்றி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.