தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10255 topics in this forum
-
தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள்! -விஜயகாந்துக்கு மா.செ.கள் உருக்க கடிதம் சென்னை: உங்கள் மீது உள்ள பாசத்தால் வெளியேற முடியாமல் தவிக்கிறோம். தே.மு.தி.க.வை கலைத்துவிட்டு எங்களை பிழைக்க விடுங்கள் என்று 14 தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்துக்கு உருக்கமாக கடிதம் எழுதி உள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன், கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்டு தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் 10 பேரும், 3 எம்.எல்.ஏ.க்களும் கட்சியை விட்டு வெளியேறினார்கள். தி.மு.க.வுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டனர் என அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க.,…
-
- 3 replies
- 519 views
-
-
பணம் இருந்தால் பக்கத்தில் வந்து நில்லு... பெரியார் வழியில் வைகோ! 'கட்சிக்கு நிதியளிப்பவர்கள் மட்டுமே இனி தன்னுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும்' என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருப்பது, கட்சியினரிடையே ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒரு சேர ஏற்படுத்தியுள்ளது. தென்சென்னை, கிழக்கு மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகச் செயல்வீரர்கள் கூட்டம், சென்னை, தரமணியையொட்டியுள்ள வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள ஹேமா மஹாலில் நடைபெற்றது. மாவட்டப் பொறுப்பாளர் கே. கழககுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்றினர். கூட்டத்திற்குப்பின் கட்சி நிர்வாகிகள் பலர், வைகோவுடன் புகைப்படம் எடுத்து…
-
- 1 reply
- 669 views
-
-
2 மணி நேரம் வேடிக்கை பார்த்த மக்கள்... சென்னை கருணையற்ற நகராமா? சுவாதி கொலையை தடுக்க முன்வராமல் வேடிக்கை பார்த்த பயணிகளை விமர்சித்து... ‘நான் சுவாதி பேசுகிறேன்’ என்ற தலைப்பில் ‘வாட்ஸ்-அப்’பில் உருக்கமான தகவல் பரவி வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்டபோது, ரயில் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். கொலையாளி ஒரே ஆள்தான். கல்லை கொண்டு தாக்கத் தொடங்கியிருந்தால்கூட, கொலையாளி மிரளத் தொடங்கியிருப்பான். சுவாதி உதவிக்கு யாரும் வராத நிலையில் தனி ஆளாக போராடி பலியாகியுள்ளார். கொலையாளி தப்பி ஓடும்போதும், யாரும் பிடிக்க முன்வரவில்லை. கொலையாளி அங்கிருந்து சென்ற பின்னரும்கூட உயிருக்கு போராடிய சுவா…
-
- 2 replies
- 1.7k views
-
-
கருணாநிதி போட்ட தடை : திமுகவினர் கடும் அதிர்ச்சி திமுக முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு திமுக தலைவர் கருணாநிதி தடை போட்டுள்ளார். திமுக முன்னாள் அமைச்சரை தனது கோபாலபுரம் இல்லத்திற்கு எக்காரணம் கொண்டு வரக் கூடாது என திமுக தலைவர் கருணாநிதி தடை போட்டுள்ளார். அவர், மு.க.ஸ்டாலினுக்கு துாபம் போட்டு அரசியல் ரீதியிலான பிரச்சனைகளை ஏற்படுவதாக வந்த தகவலை அடுத்தே, இந்த உத்தரவு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், திமுக முக்கிய நிர்வாகிகளே கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள். http://www.virakesari.lk/article/8128
-
- 0 replies
- 466 views
-
-
இன்று இறந்துவிட்ட நான் இன்னும் சில நாள் காட்சி ஊடகத்தில் உங்களுடன் வாழத்தான் போகிறேன். அதற்கு முன் உங்களுடன் சிலவற்றை பேசிவிட்டு போய்விட ஆசைபடுகிறேன். எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதயத்தில் நானும் ஒருத்தி தான். எனக்கான கனவுகள் அதிகம் இல்லை. எல்லோரையும் போன்ற நானும் ஒரு சக மனுஷி தான். இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன். வார இறுதிநாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன். என் அப்பாவும் அப்படித்தான் நினைத்து என்னை அந்த இரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றார். உங்களில் எத்தனை பேர் இன்று அந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை ஆனால் உங்களின் மனதிற்க்குத் தெரிய…
-
- 7 replies
- 1.3k views
-
-
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா! சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கடந்த 15 ம் தேதியன்றே, ராகுல் காந்தியிடம் அளித்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார் என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இளங்கோவனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, செல்வகுமார் மற்றும் திருநாவுக்கரசர் உள்ளிட்ட அக்கட்சியின் ம…
-
- 0 replies
- 409 views
-
-
நளினியை விடுவிக்க முடியாது..! தமிழக அரசு தடாலடி நளினி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தம்மை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இன்று தமிழக அரசின் உள்துறை துணை செயலாளர் டேனியல் தேவஆசீர்வாதம் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார். அதில், 20 வருடங்கள் சிறைய…
-
- 2 replies
- 486 views
-
-
எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் கச்சத்தீவு வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டதா..?' - அதிர்ச்சி கிளப்பும் ஆட்சியரின் ஆவணம் சட்டமன்றத்தில் பெருத்த விவாதப் பொருளாக மாறியிருக்கிறது கச்சத்தீவு. ' அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் வழக்குத் தொடர்ந்தேன். 1974-ம் ஆண்டு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது முதல்வர் கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்?' எனக் கொந்தளித்தார் முதல்வர் ஜெயலலிதா. ' மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்டுவதற்காக கச்சத்தீவை மீட்பேன்' என தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா. இதுகுறித்து சட்டசபையில் நேற்று நடந்த விவாதத்தில் தி.மு.க - அ.தி.மு.க உறுப்பினர்களிடையே பெரும் வாக்குவாதம் எழுந்தது. தி.மு.க உறுப்பினர் பொன்முடியின…
-
- 1 reply
- 1.5k views
-
-
சென்னை ராயப்பேட்டையில் 4 பெண்களும், நுங்கம்பாக்கத்தில் ஒரு பெண்ணும், வடசென்னையில் ஒரு பெண்ணும் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தலைநகரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னை ராயப்பேட்டை, முத்து தெருவைச் சேர்ந்தவர் சின்னராசு.பட்டினப்பாக்கத்தில் ஸ்வீட் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பவித்ரா (18), பரிமளா (19), சினேகா (16) என்று மூன்று மகள்கள். முதல் மனைவி இறந்து விட்டதால் சந்தன வீனா (36) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பவித்ரா, பரிமளா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். சினேகா பிளஸ்2 படித்தார். இவர்கள் கடந்த வாரம் சொந்த ஊரான காரைக்குடிக்குச் சென்று வந்துள்ளனர். கடந்த திங்கள் கிழமை முதல் இவர்களது…
-
- 0 replies
- 665 views
-
-
இலங்கையில் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் அநீதியிழைக்கும் பட்சத்தில் கச்சத்தீவினை மீட்க இந்திய அரசாங்கம் தயங்காது என இந்திய மத்திய அமைச்சர் பொன். ராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். காந்திய மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி இன்று திருப்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க. இதற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும் முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய், இதற்கு தீர்வு தேடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு தகுந்த …
-
- 2 replies
- 549 views
-
-
சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ வெற்றிவேலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான 2ம் நாள் விவாதமும் கடும் அமளிக்கிடையே நடைபெற்று வருகிறது. இலங்கை தமிழர்கள் பிரச்சினை, மீத்தேன் திட்டம் குறித்து பெரம்பூர் அதிமுக எம்.எல்.ஏ வெற்றி வேல் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 16ம்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனை அடுத்து நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் வருகிற 23ம் தேதி வரை கூட்டத்தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டது. 17ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மறைந்த எம்.எல்.ஏ.க்…
-
- 0 replies
- 480 views
-
-
கச்சத்தீவு குறித்து தமிழக சட்டமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இன்று இடம்பெற்றுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த தமிழக முதலமைச்சர், கச்சத்தீவை மீட்பது குறித்து கேள்வி கேட்பதற்கு தி.மு.க உறுப்பினர்களுக்கு அருகதை கிடையாது என குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்திருந்த அவர், தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி, முதலமைச்சராக இருந்தபோதுதான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. 1974 மற்றம் 1976ஆம் ஆண்டுகளில் அப்போதைய மத்திய அரசு இந்த ஒப்பந்தங்களை செய்துகொண்டபோது, அவர்களுடைய தலைவர், அன்றைய முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார்? அதைத் தடுப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? அதை எதிர்த்து ஏதாவது போராட்டம் நடத்தினாரா?…
-
- 0 replies
- 475 views
-
-
‘நாங்களும் தமிழர்கள் தான்... எமக்காகவும் பேசுங்கள்!' -அகதிகள் முகாமின் குரல்கள்... உலகில், உச்சபட்ச வன்முறை என்றுமே ஆயுதங்களால் நிகழ்வதில்லை; அது தன் சக மனிதன் மீது அன்பு செய்ய மறுப்பதால்தான் நிகழ்கிறது. நிச்சயம் ஒரு மனிதனை அன்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஏங்கவிட்டு, அலைய விடுவதைவிட ஒரு வன்முறை இப்புவியில் இருந்துவிட முடியாது. ஆனால், நாம் தினமும் அந்த வன்முறையை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறோம். இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் தன் சக மனிதன் மீது அன்பு செய்ய மறுக்கிறோம் அல்லது இதே காரணங்களுக்காக அரசு வன்முறையை ஏவும்போது கள்ள மெளனம் சாதிக்கிறோம். அன்பும், பாதுகாப்பும் மறுக்கப்பட்டவர்களை அகதிகள் எனும் புது அடையாளத்துடன், சொந்த மண்ணிலிருந்து பெ…
-
- 0 replies
- 526 views
-
-
' வீரப்பனை சந்திக்க விரும்பினாரா பிரபாகரன்?!' -350 பக்கங்களில் விளக்கும் விஜய்குமார் ஐ.பி.எஸ். சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டபோதிலும், மேட்டூரில் உள்ள வீரப்பனின் சமாதிக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்தபடியேதான் இருக்கிறது. இந்நிலையில்தான் வீரப்பன் கொல்லப்பட்டது தொடர்பான முக்கிய விஷயங்களை எழுதி புத்தகமாக கொண்டு வர உள்ளார் வீரப்பன் ஆப்ரேஷனை நடத்திய முன்னாள் அதிரடிப்படைத் தலைவரான விஜய்குமார் ஐ.பி.எஸ். தமிழக, கர்நாடகா வனப்பகுதிகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த வீரப்பனை, தருமபுரியில் வைத்து, கடந்த 2004-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி சுட்டுக் கொன்றது தமிழக அதிரடிப்படை. வீரப்பன் கதையை …
-
- 1 reply
- 1k views
-
-
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியவர் தான் ஜெயலலிதா என்று மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இதில், அதிமுக எம்எல்ஏ செம்மலை கருணாநிதி குறித்து கூறிய கருத்தால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் செம்மலை உண்மைக்கு மாறாக தகவல்களை தருகிறார். இலங்கையில் போர் நடைபெற்ற போது போரில் பொது மக்கள் உயிரிழப்பது இயல்புதான் என்றும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியவர் தான் ஜெயலலிதா என்று பதிலடி கொடுத்தார். …
-
- 1 reply
- 666 views
-
-
' சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை ஏன்?' - பேரறிவாளனுக்கு வந்த திகைப்பான பதில்! இந்தி நடிகர் சஞ்சய் தத் விடுதலை தொடர்பாக, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் எழுப்பியுள்ள கேள்விகளால் அதிர்ந்து போயிருக்கிறது மும்பை, எரவாடா சிறை நிர்வாகம்.'உங்கள் பிரதிநிதியை நேரில் அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்' என அதிர வைக்கிறது எரவாடா சிறை நிர்வாகம். மும்பையில், கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஏ.கே.56 ரக துப்பாக்கியும், சிறிய ரக கைத்துப்பா…
-
- 0 replies
- 487 views
-
-
யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு துரோகியின் பெயர் பலகையைக் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட் துரையப்பா என்பவரின் பெயரை சிங்கள அரசு சூட்டி, இந்தியப் பிரதமர் மோடி அவர்களைக் கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம் திறக்க வைத்துள்ளது. சிங்கள அரசின் சூழ்ச்சிக்கு இந்தியப் பிரதமர் இரையானது வருந்தத்தக்கதாகும். 1975-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இதே திடலில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அதைத் தடுக்க யாழ்ப்பாண மேயராக இருந்த ஆல்பர்ட் துரையப்பா தீவ…
-
- 1 reply
- 509 views
-
-
தமிழகம் திருச்சியில் சிறப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எச்சரித்தமையை அடுத்து நேற்று (17) தீவிரநிலை ஏற்பட்டுள்ளது. தயாபரராஜா என்ற இந்த இலங்கையரை ஏற்கனவே விடுவிக்க உத்தரவு வழங்கப்பட்ட போதும் இன்னும் அவர் விடுவிக்கப்படவில்லை. ஏற்கனவே தயாபரராஜாவின் மனைவியும் மூன்று பிள்ளைகளும் இராமேஸ்வரம் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டனர் எனினும் தயாபரராஜாவை விடுவிப்பதாக அதிகாரிகள் கூறிய போதும் அவர் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று தயாபரராஜாவின் மனைவியும் பிள்ளைகளும் திருச்சி முகாமுக்கு சென்றிருந்த போது தயாபராஜாவை விடுவிக்க முடியாது…
-
- 0 replies
- 441 views
-
-
570 கோடி யாருக்குச் சொந்தம்? தி.மு.க. நடத்தும் நீதிமன்ற யுத்தம்!அலசல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2016, பல கண்கட்டி வித்தைகளைப் பொதுமக்களுக்குக் காட்டிச் சென்றுள்ளது. அவற்றில் சில வித்தைகள், விடை தெரியாத விநோதங்களாக இன்னும் நீடிக்கின்றன. கரூர் தொழிலதிபர் அன்புநாதன் வீட்டில் சிக்கிய பணம் எவ்வளவு? அன்புநாதனுக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? திடீரென சிறுதாவூரில் 18 கன்டெய்னர்கள் ஏன் நின்றன... அதில், என்ன இருந்தன? அதன்பிறகு, அவை எங்கே மாயமாக மறைந்தன? திருப்பூரில் ரூ.570 கோடிகளுடன் வந்த 3 கன்டெய்னர்கள் யாருடையவை? அந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி இதுவரை ஏன் வாய் திறக்கவில்லை என்பன எல்லாம் அப்படிப்பட்ட விடை தெரியாத விநோதங்கள். ஊடகங்கள், போலீஸ், அரச…
-
- 0 replies
- 784 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் உள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது: அதிபர் தேர்தலில் போடிட்யிடுவதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளார் ஹிலாரி என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் முதன் முதலில் ஒருபெண் வேட்பாளர் ஆகியிருப்பது பெண்களுக்கு பெருமை என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும், வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற தனது வாழ்த்துக்களையும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹ…
-
- 0 replies
- 428 views
-
-
'ராஜீவ் வழக்கின் சாந்தனை நான்தான் சுட்டுக் கொன்றேன்!' - சிபிஐ அதிகாரியின் பதற வைக்கும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்! ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் அவ்வப்போது வெளியாகும் மர்மங்கள் அரசியல் களத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறன. அதில் லேட்டஸ்ட் வரவு, ' ராஜீவ் படுகொலைக்குக் காரணமான சாந்தனை நான்தான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன்' என விசாரணை அதிகாரியாக இருந்தவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கும் ஸ்டேட்டஸ். அப்படியானால், 25 ஆண்டுகளாக சின்ன சாந்தன் என்பவர் எதற்காக சிறையில் இருக்கிறார்? என கொந்தளிக்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991ம் ஆண்டு, மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை வழக்கில் …
-
- 28 replies
- 2.3k views
- 1 follower
-
-
கலைஞரின் மறுபக்கம் – கண்ணதாசன் பார்வையில் ஒரு நாளுக்கு முன்னாடிதான் கவிஞர் கண்ணதாசனின் சுயவரலாறான “வனவாசம்” புத்தகத்தைப் படித்து முடித்தேன். அதில் கண்ணதாசன் கருணாநிதியின் குள்ளநரித்தனத்தை அப்போதே தோலுறித்து காட்டியுள்ளார். அதை விட இது நாள் வரை பண்பாளர், பக்குவமான அரசியல்வாதி என்று நான் படித்து வந்த அண்ணாத்துரையின் நிஜ முகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். ஆனால் இந்த உண்மைகளை பற்றியெல்லாம் தற்கால பத்திரிகைகள் எதுவும் எழுதுவதில்லை. அதனால், நான் உட்பட இன்றைய தலைமுறையினருக்கு திராவிட தலைவர்களின் உண்மையான உருவங்கள் தெரியவில்லை. கருணாநிதியும் அண்ணாவும் எப்படி குள்ளநரி தந்திரம் செய்து நேர்மையான திராவிட தலைவர்களையும் பிரமுகர்களையும் கீழே தள்ளிவிட்டு தாங்கள் …
-
- 2 replies
- 3.6k views
-
-
இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படாது இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படாது என இந்திய உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியா இரட்டைக் குடியுரிமையை அங்கீகரிப்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் என்ற வகையீடு ஒன்று காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியினரை அந்த…
-
- 0 replies
- 544 views
-
-
அம்மா, அம்மா, அம்மா..! சட்டப்பேரவை வளாகத்தில் கலகலத்த ஸ்டாலின் அம்மா, அம்மா, அம்மா என்று அம்மா திட்டங்கள் பற்றி ஒரு பெரிய பட்டியல் ஆளுநர் உரையில் வெளியிடப்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் ஆளுநர் உரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆளுநர் உரையை பொறுத்த வரையில் இது அரசினுடைய உரைதான் என்பது வெளிப்படுகிறது. இந்த அரசு என்னென்ன ஆசைப்படுகிறதோ அதையெல்லாம் ஆளுநர் உரையிலே எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். எடுத்து சொல்லி இருக்கிற அதே நேரத்தில் அதை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து எந்த விவரமும், எந்த விளக்கமும் அதில் இடம்பெற…
-
- 0 replies
- 493 views
-
-
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை கோரி பேரணி: சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு சென்னை பேரணியில் பங்கேற்று ஃபேஸ்புக் தளத்தில் பகிரப்பட்ட படங்களுள் ஒன்று. ராஜிவ் கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வர முதல்வரால் முடியும் என்று அற்புதம்மாள் கூறியுள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் பேரணி நடைபெற்று வருகிறது. அற்புதம்மாள் தலைமையில் சென்னை - எழும்பூரில் தொடங்கிய இந்தப் பேரணி, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையில் முடிவடைகிறது. நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், இயக்குநர்கள் ஜனநாதன், கௌதம், ரமேஷ…
-
- 17 replies
- 1.6k views
-