Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக அரசு புதிய சட்டமூலம்! இந்தி திணிப்பை தடை செய்யும் நோக்கில், தமிழக அரசு இன்று சட்டமன்றத்தில் ஒரு சட்டமூலத்தை தாக்கல் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து விவாதிக்க சட்ட வல்லுநர்களுடன் நேற்று இரவு அவசர கூட்டம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சட்டமூலம் தமிழ்நாடு முழுவதும் இந்தி விளம்பரப் பலகைகள், திரைப்படங்கள் மற்றும் பாடல்களைத் தடை செய்ய முயல்கிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சட்டமூலம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த திரவிர முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், “அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். அதை நாங்கள் கடைப்பிடிப்போம், இந்தி …

  2. கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது எப்படி? ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் 15 Oct 2025, 11:35 AM தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நடத்திய கரூர் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 15) அளித்த விளக்கம்: கரூர் வேலுசாமிபுரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டம் கட்டுக்கோப்பாக நடைபெற்றது; சுமார் 17,000 பேர் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர் கரூர் விஜய் பிரசார கூட்டத்துக்கு மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது; ஆனால் பகல் 12 …

  3. சென்னையில் பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் சென்னை: சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடுகள் மற்றும் இளைய ராஜாவின் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் ஒன்று வந்தது. அதில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் வீடுகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல, கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் இளைய ராஜாவின் அலுவலகத்துக்கும் வெடிகுண்டு ம…

  4. 16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார் புஸ்ஸி ஆனந்த் October 14, 2025 12:19 pm தலைமறைவாகியுள்ளதாக கூறப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியே வந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட சிலர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மத்திய மாநகர நிர்வாகி பவுன் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, கட்சியின் பொதுச…

  5. கரூர் வழக்கை விசாரிக்கும் சிபிஐ.. தலைமை தாங்கும் அஜய் ரஸ்தோகி.. யார் இவர்? பின்னணி என்ன? Shyamsundar IUpdated: Monday, October 13, 2025, 12:12 [IST] முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி 1958ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்தார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் புகழ்பெற்ற சிவில் வழக்கறிஞராக இருந்த அவரது தந்தை ஹரிஷ் சந்திர ரஸ்தோகியின் வழியில், 1982ஆம் ஆண்டு சட்டத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். வழக்கறிஞராக, நீதிபதி ரஸ்தோகி பல சட்டப் பிரிவுகளில் பணியாற்றினார். அதே சமயம், அவர் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சேவைச் சட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தினார். 1990ஆம் ஆண்டு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், 2004ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். 19…

  6. படக்குறிப்பு, திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழியை பலியிட உயர் நீதிமன்ற தடை விதித்துள்ளது. கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழியை பலியிடுவது, சமைப்பது, அசைவ உணவை எடுத்துச் செல்வது ஆகியவற்றுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அக்டோபர் 10-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இவ்வாறு பலியிடுவது என்பது இந்திய அரசின் பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தலங்களின் விதிகளை மீறுவதாக, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையை, 'சிக்கந்தர் மலை' என அழைப்பதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக, சிக்கந்தர் தர்கா நிர்வாகிகள் பிபிசி தமிழிடம் தெர…

  7. தலையங்கம் கடல்வளம் குன்றுகிறது! இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் மீன்பிடிப்பது தொடர்பாக அண்மைக் காலங்களில் மீனவர்களுக்கிடையே நிகழ்ந்துவரும் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை கொள்ளச் செய்கிறது. ஒரே நாட்டின் அண்டை மாநில, மாவட்ட மீனவர்களுக்குள்ளேயே ஒற்றுமையோ, விட்டுக் கொடுத்தலோ இல்லாத நிலையில், அயல்நாட்டு மீனவர்கள் விட்டுக்கொடுத்து அவர்களது கடல் வளத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? அண்மையில் கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் 26 பேரையும், அவர்களது 8 விசைப் படகுகளையும் வேதாரண்யம் மீனவர்கள் பிடித்து ஆறுகாட்டுத்துறை படகு துறையில் சிறை வைத்து விட்டனர். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு க…

  8. பட மூலாதாரம், UGC படக்குறிப்பு, தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்த தினேஷ் குமார். கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் சமீபத்தில்தான் வேலைக்குச் சேர்ந்தான். குடும்பத்தைக் காப்பாற்றுவான் என நினைத்தோம். விசாரணை என்ற பெயரில் என் மகனை போலீஸ் கொன்றுவிட்டது. என் மகனின் சாவுக்கு நியாயம் வேண்டும்" எனக் கூறியபடி கதறியழுகிறார், முத்துலட்சுமி. தனது மகன் தினேஷ்குமாரை விசாரணைக்கு அழைத்துச்சென்ற காவல் துறையினர் கொன்றுவிட்டதாக கூறுகிறார் முத்துலட்சுமி. ஆனால், 'காவல்துறை கைது செய்துவிடுமோ?' என்ற அச்சத்தில் கால்வாயில் விழுந்து தினேஷ்குமார் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை கூறுகிறது. இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக, கா…

  9. விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி! Vignesh SelvarajPublished: Wednesday, October 8, 2025, 23:32 [IST] நாமக்கல்: அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டசபை தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்…

  10. பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, கரூர் சம்பவம் குறித்து விஜய் காணொளி ஒன்றை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கரூரில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்து 10 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், உயிரிழந்தவர்கள் பலருடைய குடும்பத்தினரிடம் வீடியோ காலில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியுள்ளார். தங்களிடம் வீடியோ காலில் விஜய் பேசியபோது, இறந்தவர்களின் படங்களைப் பார்த்து கலங்கி கண்ணீர் விட்டதாகவும், ''உங்களுடைய குடும்பத்தில் ஒருவனாக நான் உங்களுடன் இருப்பேன். என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்'' என்று கூறியதாகவும் பலர், பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். குழந்தையை இழந்தவர்களிடம் பேசும்போத…

  11. சென்னையில் கடந்த 2017-ல் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்துக்கொன்ற வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கு தண்டனைக்குள்ளான தஷ்வந்த்தை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. Published:Today at 8 AMUpdated:Today at 8 AM தஷ்வந்த் Join Our Channel 31Comments Share சென்னையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு போரூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் நீதிமன்றத்தில் மரண தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குள்ளான குற்றவாளி தஷ்வந்த்தை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருக்கிறது. தமிழகத்தை உலுக்கிய கொடூரம்! இந்த வழக்கின் பின்னணியைப் பொறுத்தவரையில், 2017 பிப்ரவரி 5-ம் தேதி, போரூர் அருகே தனியார் அடுக்குமாடி குடி…

  12. படக்குறிப்பு, லண்டன் ஃபேஷன் ஷோவில் பவானி ஜமுக்காளமும், அதை நெய்தவரும் மேடை ஏற்றப்பட்டனர். கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் ''அந்த மேடையில் கையில் கைத்தறி இராட்டை மாதிரியுடன் என்னை நடக்க வைத்து, வார்த்தைகளின்றி சைகைகளால் இவர்தான் அவற்றை நெய்தவர் என்று என்னை அறிமுகம் செய்தபோது, அங்கிருந்த பார்வையாளர்கள் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். கரவொலி எழுப்பினர். அது எனக்கு மட்டுமின்றி, என்னைப் போன்ற கைத்தறி நெசவாளர்களுக்கான ஓர் அங்கீகாரமாக இருந்தது!'' லண்டனில் செப்டெம்பர் 21-ஆம் தேதி டிவான்ஷைர் சதுக்கத்தில் (Devonshire Square) நடந்த ஃபேஷன் ஷோவில் ஆடை வடிவமைப்பாளர் வினோ சுப்ரஜாவுடன், கைகளில் இரும்பு கைத்தறி இராட்டை மாதிரி வடிவ…

  13. நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம் Mani Singh SUpdated: Wednesday, October 8, 2025, 12:20 [IST] டெல்லி: நடிகை பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். நடிகை குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும் நடிகை குறித்த கருத்துக்களை திரும்ப பெறுவதாகவும் சீமான் தரப்பு கூறியது. இதேபோல் சீமானுக்கு எதிரான பாலியல் புகாரை திரும்ப பெறுவதாகவும் நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. Also Read இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி மீண…

  14. பட மூலாதாரம், Chilukuri Paramathama படக்குறிப்பு, கடந்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் எழுதிய படிக்க முடியாத மருந்துச் சீட்டு வைரலானது. கட்டுரை தகவல் கீதா பாண்டே பிபிசி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பெரும்பாலானவர்கள் கீபோர்டை பயன்படுத்தி எழுதி வரும் தற்கால சூழலில், கையெழுத்து தெளிவாக இருப்பது முக்கியமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், மருத்துவர் ஒருவர் எழுதுகிறார் என்றால், அவரது கையெழுத்து தெளிவாக இருப்பது அவசியம் என்று இந்திய நீதிமன்றங்கள் கூறுகின்றன. மருத்துவர்களின் மோசமான கையெழுத்தை, மருந்தாளர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் போன்ற நகைச்சுவைகள் உலகமெங்கும் பகிரப்படுகின்றன. ஆனால், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஓர் உத்தரவு வெளியிட்ட…

  15. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 772 புதிய வீடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருப்பூர், சேலம், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் திறந்து வைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர். இந்திய ரூபாயில் 44.48 கோடியில் வீடுகள் கட்டப்பட்டு, ரூ.6.58 கோடியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmgerbwo900uso29n0mni5jjs

  16. இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி! Shyamsundar IUpdated: Sunday, October 5, 2025, 10:07 [IST] சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, நடிகர் விஜய்யின் கட்சிக்கு பாஜக ஆதரவுக்கரம் நீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பலத்தைப் பயன்படுத்தி வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க பாஜக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்ட நேரத்தில்தான் விஜய்க்கு ஆதரவாக பாஜக களமிறங்க திட்டமிட்டு உள்ளதாம். விஜய் தனியாக இல்லை என்று தமிழக வெற்றிக் கழக (TVK) தலைமைக்கு ஒரு மூத்த பாஜக தலைவர் தகவல் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. திமுகவு…

      • Like
      • Thanks
      • Haha
    • 42 replies
    • 8.8k views
  17. Published By: Digital Desk 1 05 Oct, 2025 | 11:32 AM இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது. குறித்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (03) இலங்கை தலைமன்னாரிலிருந்து தமிழகம் தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணை 9 மணி 11 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார். பாக்கு நீரிணை கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும் அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக்கு நீரிணை கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. இது தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம்…

  18. படக்குறிப்பு, விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 குழந்தைகள் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்) செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய ரோட் ஷோவை ஒட்டி ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 11 பேர் குழந்தைகள். இம்மாதிரியான ஒரு நெரிசல் மிகுந்த கூட்டத்திற்கு குழந்தைகள் எதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்? குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள்? தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஒவ்வொரு மாவட்டத்தில…

  19. 2026 தேர்தலில் பிராமணர்களுக்கு 5 இடங்களில் போட்டியிட வாய்ப்பு: நாம் தமிழர் கட்சி முக்கிய முடிவு சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தனித் தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை களமிறக்கவும், பிராமணர்களுக்கு 5 இடங்களில் வாய்ப்பளிக்கவும் நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான வியூகம் அமைத்தல், கூட்டணி பேச்சுவார்த்தை, தங்களது கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்தல், பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல் போன்ற தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்திவருகின்றன. அதற்கேற்ப கட்சிகளின் தலைமை, மாவட்ட அளவில் கலந்தாய்வு கூட்டங்கள், பரப்புரை கூட்டங்கள், பொதுக்…

  20. தவெக கரூர் நெரிசல் சம்பவம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என மத்திய பா.ஜ.க அமைச்சர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27), கரூரில் பரப்புரை மேற்கொண்டார் தவெக தலைவர் விஜய். அப்போது அங்கே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தை விசாரிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து 8 எம்.பிக்கள் குழு ஒன்றை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா அமைத்தார். இந்தக் குழுவின் தலைவராக ஹேமமாலினி எம்.பி நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவில் அமைச்சர் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்…

      • Haha
    • 4 replies
    • 306 views
  21. கரூர் சம்பவத்தில் த.வெ.க நிர்வாகிகளின் செயல்பாடுகளால் காட்டமான நீதிபதி செந்தில்குமார், "தலைமைப் பண்பே இல்லை" என விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியில் அரசியல் ரீதியான கருத்துக்கள் பலவாறு பரவும் அதேவேளையில், சென்னை உயர் நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. கரூர் சோகம் - விஜய் அந்த வரிசையில், கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தச் சம்பவத்தில் த.…

  22. புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் மனு: சிறையா? பெயிலா? 3 Oct 2025, 9:04 AM தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு இன்று(அக்டோபர் 3)சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வருகிறது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கரூர் டவுன் போலீசார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை அருகே உறவினர் வீட்டில் தங்கி இருந்த மதியழகனை ப…

  23. கரூர் துயரம் : தமிழக அரசுக்கு ’முக்கிய’ வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்! Published On: 2 Oct 2025, 7:33 PM | By Pandeeswari Gurusamy கரூரில் நடந்த பெருந்துயர சம்பவத்தில் விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை இன்று (அக்டோபர் 2) வெளியிட்டுள்ளனர். கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த நிலையில் மூன்னாள் நீதியரசர் சந்துரு, ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், எம்.ஜி.தேவசகாயம் ஐஏஎஸ், எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, ஊடகவியலாளர் ‘தி இந்து’ என்.ராம், வழக்குரைஞர் ஹென்றி டிபேன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ர…

  24. சென்னை: "தவெக தலைவர் விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது. அப்படி, இருந்திருந்தால் அந்த மொழியில் வெளிப்பட்டிருக்கும்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விருதுநகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விஜய் சென்றதால்தான் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதற்கு காரணம் யார்? ஆனால், அவர் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. திரைப்படத்தின் வசனம் போல வீடியோவில் பேசியுள்ளார். இது நல்ல அணுகுமுறை இல்லை. மற்ற இடத்தில் இல்லாமல் கரூரில் மட்டும் இப்படி நடந்தது எப்படி என விஜய் கேட்பது தவறு. மற்ற இடங்களிலும் இப்படி நடக்க வேண்டும் என அவர் நினைக்கிறாரா? கூட்டத்தில் கத்…

  25. சென்னை: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியது: “தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு, காவல் துறை அஞ்சுகிறதா? தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறை, விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை எனக் கூற வேண்டும். இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். இருவருக்கும் வேறு வேறு நீதியா? விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாததற்கு திமுக - தவெக இடையே மறைமுக டீலிங் உள்ளதா என கேள்வி எழுப்பலாமா? காவல் துறை இது போன்ற ஓர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.