Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மத்திய அரசில் இணைகிறாரா ஜெயலலிதா? - டெல்லியை அதிர வைக்கப்போகும் ஜூன் 14! டெல்லியில் வருகிற 14-ம் தேதி, பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 'பா.ஜ.க அரசில் அங்கம் வகிக்க வேண்டிய நிர்பந்தத்தில் அ.தி.மு.க உள்ளது' என்கின்றனர் பா.ஜ.க தலைவர்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, அன்று காலை 10 மணிக்கே தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி. 'இவ்வளவு முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன?' என்ற கேள்வியை நேற்று எழுப்பியிருந்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. இதற்கு அ.தி.மு.க தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக …

  2. ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற 38 இலங்கை அகதிகள் கைது: பலர் தப்பி ஓட்டம்? காஞ்சிபுரம்/செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே, ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற இலங்கை அகதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 15 பேர் காவல்துறையினரிடம் சிக்காமல் தப்பி விட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளிடம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவர்களிடம் பெருமளவில் பணம் பறிக்…

  3. கருணாநிதிக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்! -சொல்றது திருமாவளவன் கடலூர்: தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தொல்.திருமாவளவன் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன் அக்கூட்டணியில் இருந்து விலகியது. அதன்பின், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தே.மு.தி.க., த.மா.கா. இணைந்து கூட்டணியாக தேர்தலை சந்தித்தன. இந்த தேர்தலில் இக்கூட்டணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தமிழக சட்டசபை தேர்தலில் பல்லாயிர கோ…

  4. ஜேர்மனியில் நாடுகடத்தப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? #Germany#People ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்டு தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பபட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனியில் பல்வேறு காரணங்களுக்காக புகலிடம் மறுக்கப்பட்டு தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களின் பட்டியலை அந்நாட்டு அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில், 2014ம் ஆண்டை விட 2015ம் ஆண்டில் சுமார் 60 சதவிகித புலம்பெயர்ந்தவர்களை தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. இவர்களில் 22,369 நபர்களை கட்டாயப்படுத்தி அவர்களின் தாய்நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், 2014ம்…

    • 0 replies
    • 442 views
  5. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரும் வருகிற 11-ம் தேதியோடு 25 ஆண்டுகால சிறை வாழ்க்கையை நிறைவு செய்கிறார்கள். இவர்களின் விடுதலையை எதிர்நோக்கி நடக்கும் கோரிக்கை பேரணி அரசியல் கலப்பு இல்லாமல் அதிர வைக்கிறது. விசாரித்துவிட்டுக் காலையில் அனுப்பி விடுகிறோம் என்று சொல்லித்தான், கடந்த 1991-ம் ஆண்டு ஜுன் மாதம் 11-ம் தேதி பேரறிவாளனை போலீஸார் அழைத்துச் சென்றார்கள். அன்றிலிருந்து இன்று வரையில் பேரறிவாளனுக்கு விடியவே இல்லை. இத்தனை ஆண்டுகால சிறைவாசத்தில் ஒருநாள் கூட பேரறிவாளன் பரோலில் வெளிவரவில்லை. இவருடன் முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் உள்ளிட்டவர்களும் சிறையில் …

  6. 'சாட்சிகளை கலைப்பார், தப்பி விடுவார்..!' - பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்க அரசு கடும் எதிர்ப்பு "முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில், பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார். அதனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருப்பூரில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் வடக்கு காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் பிரேமலதா மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். …

  7. பல நாட்டின் கூட்டோடு நடத்திய போரின் இழப்புகளும் துயரங்களும் குடும்பங்களையும், ஈழத்தமிழர் உலகெங்கும் வாழும் உணர்வாளர்களையும் விட்டுப் போகவில்லை. இருப்பின் உயிலும் வாழ்வின் உறுதியும் நிரந்தரமாக வேண்டுமென்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கும் வேளையில் பச்சோந்திகளாக மாறி, விடுதலை வழிகளையே மாற்றப் புறப்பட்டிருக்கும் புல்லுருவிகள் மத்தியில், நின்றாடும் இந்த இக்கட்டான நேரத்தில் ஜெயலலிதாவின் வாக்குறுதியின் தலையீட்டுக் கருத்தும் நம்பிக்கை தருகிறது. தகர்ந்து போகாதவாறு அ.தி.மு.க ஆட்சியின் கோட்டை நுழைவு துவண்டு போன எம்மைத் துள்ளித் துள்ளி எழவைத்துள்ளது. ஈழத்தமிழர் அக்கறையாக ஜெயலலிதாவின் மூலமான விசயம் எதிர்க்கட்சி எத்தகைய அழுத்தங்கள் கொடுத்தாலும் அவற்றைச் சமாளித்…

  8. காலில் விழுந்த காங். எம்.எல்.ஏ... பதிலுக்கு தானும் விழுந்த கிரண் பேடி.. இது புதுச்சேரியில்! புதுச்சேரி: பதவியேற்பு விழாவின் போது தனது காலில் விழுந்து வாழ்த்து பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் காலில் பதிலுக்கு கிரண்பேடியும் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கு பெற்றவர் இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமைக்குரியவர் கிரண்பேடி. இவர் டெல்லி சட்டசபைத் தேர்தலின் போது பாஜக முதல்வர் வேட்பாளராக களமிறங்கி, தோல்வி அடைந்தார். இந்நிலையில், நேற்று அவர் புதுச்சேரியின் துணைநிலை கவர்னராக பொறுப்பேற்றார். அப்போது கிரண்பேடியை பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சந்தித்து சால்வை அணிவித்தனர். …

  9. திருமாவளவன் கோரிக்கை: ராஜேஷ் லக்கானி நிராகரிப்பு! சென்னை: காட்டுமன்னார் கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மீண்டும் அந்தத் தொகுதியின் வாக்குகளை எண்ண வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிராகரித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இது தொடர்பாக அவர்,'வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு காரணமாகவும், வாக்குச்சாவடி எண் 81ல் முறையாக வாக்குப்பதிவு நடக்கததாலும் தாம் தோல்வியுற்றதாகவும், எனவே ஒரு வார்டில் மறுவாக்…

  10. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா, பணத்தை கொடுத்து பதவியை வாங்கியுள்ளார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா பணத்தை கொடுத்து பதவியை வாங்கியுள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை நிறைவேற்ற 15 லட்சம் கோடி தேவைப்படும். ஏற்கனவே கடனில் சிக்கி தவிக்கும் தமிழகத்தில் அவர்களின் தேர்தல் அறிக்கை எப்படி சாத்தியம் ஆகும். அதிக அளவு பணம் விநியோகிக்கப்பட்டதாக கூறி அரவக்குறிச்சி, தஞ்சாவூர், சட்டமன்ற தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது வேடிக்கையானது, அது அவமானமானது. எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல், மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ந…

  11. பேரறிவாளனின் உடல்நிலை பாதிப்பு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நிலையில், வேலூர் சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு, வேலூர் அரச மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிறுநீரகத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.tamilmirror.lk/173322/ப-ரற-வ-ளன-ன-உடல-ந-ல-ப-த-ப-ப-#sthash.a90Pwarb.dpuf

  12. 65 அகதிகள் மாயம் - அவுஸ்திரேலியா தப்பிச் செல்ல திட்டமா? தமிழகத்தில் உள்ள முகாம்களில் இருந்து மாயமான 65 அகதிகள் அவுஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தூத்துக்குடியில் முகாமிட்டு இந்திய உளவுப்பிரிவு பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் தாப்பாத்தி, குளத்துவாய்பட்டி, தூத்துக்குடி ராம்தாஸ்நகர் ஆகிய மூன்று இடங்களில் அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த நிலையில் சென்னை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 65 இலங்கை அகதிகள் தப்பி தலைமறைவாகி விட்டனர். அவர்கள் கேரளா அல்லது தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு ச…

  13. சென்னை ஆட்டோக்களில் திரைப் பட ட்ரைய்லர்கள் ( காணொளி) திரைப்படங்களை விளம்பரம் செய்வதில் நாளுக்கு நாள் புதிய யுக்திகள் கையாளப்படுகின்றன. தற்போது, சென்னையில் தமிழ் திரைப்படத்தின் விளம்பர முன்னோட்ட காட்சிகள் ஆட்டோக்களில் திரையிடப்படுவதுதான் அந்த புதிய யுக்தி. இந்திய நகரங்களில் முதன் முறையாக சென்னையில் இந்த சிறு திரைகள் சுமார் 500 ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ளன. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இறைவி படத்தின் முன்னோட்டம் இணையத்தை தவிர்த்து சென்னையில் பல ஆட்டோக்களிலும் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. கைப்பேசி செயலி (mobile app) போன்ற தொழில்நுட்ப உதவியுடன் இயக்கப்படும் இந்த சிறிய எல்.இ.டி. திரைகள், ஆட்டோ வாகனத்தின் இஞ்சின் இயங்க ஆரம்பித்த 10 வி…

  14. தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் தேர்தல் ரத்து சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்துவதற்கு உரிய சூழல் இல்லாத காரணத்தால், தமிழக ஆளுநர் கோரியபடி, ஜூன் 1-ம் தேதிக்கு முன்னதாக, தமிழ்நாட்டின் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், ஜூன் 1-ம் தேதிக்கு முன்னதாக தேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா கடிதம் எழுதியதை தவிர்த்திருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த முன்பு விடுத்த அறிவிக்கையை ரத்து செய்யுமாறும் தமிழக ஆளுநரை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருக்கிறது.. மாற்றியமைக்…

  15. உலக தமிழ் மாநாடு, செம்மொழி அந்தஸ்து என்ன பயன்? நீதிபதிகள் சரமாரி கேள்வி பாரம்பரியமிக்க தமிழை இளைய தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்காமல், பல கோடி ரூபாய் செலவு செய்து உலக தமிழ் மாநாடு நடத்துவதாலும், செம்மொழி தமிழ் என்று கூறிக்கொள்வதாலும் என்ன பயன் ஏற்படப்போகிறது? என்று தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆர்.லட்சுமிநாராயணன் என்பவர் தாக்கல் செய்தார். அதில், ‘இந்தி மொழி பேசாத மாநிலங்களை சேர்ந்த மக்களுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ரூ.50 முதல் ரூ.200 வரை வசூலித்து தொலைதூர இந்தி மொழிப் படிப்பை சொல்லிக் கொடுக்கிறது. அதுபோல, தமிழ் தெரியாத பிற மாநில மக்களுக்கும், வெளிநாட்டவருக்கும்…

  16. 'அரசியல் உலகை விட்டுப் போகிறேன்':தமிழருவி மணியன் உருக்கம்! சென்னை: அரசியலில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைத் தொடர்ந்து,காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் அரசியல் உலகைவிட்டும் பொதுவாழ்வை விட்டும் போகிறேன் என்றும் தெரிவித்து உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நட்சத்திரங்கள் இல்லாத இரவு நேரத்து வானம், சங்கீத மொழி பேசி சலசலத்து ஓடுவதற்குத் தண்ணீரின்றிக் காய்ந்து கிடக்கும் ஓடை, இலைகள் உதிர்ந்து கிளைகளோடு மட்டும் காட்சிதரும் ஒற்றை மரம் ஆகியவற்றைப் போன்றதுதான் என் அரசியல் வாழ்வும். உண்மை பேசினால் உயரமுடியாது என்று உணர்ந்த பின்பும், பொய்யை விலை பேசி விற்பவருக்குத் தான் பதவியும் …

  17. ஆஸிக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் இரு இலங்கையர் உட்பட நால்வர் இந்தியாவில் கைது அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்களை அழைத்துச்செல்ல பணம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த நபர் மற்றும் இலங்கை அகதி உட்பட நான்கு பேரை இந்தியப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர்கள் நால்வரையும் தமிழ்நாடு கோயம்புத்தூர் பகுதியில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொத்தூர் அகதி முகாமைச் சேர்ந்த எடிசன் எலியஸ் ராஜா ( 48), இலங்கை கிளிநொச்சி பகுதியை சேர்ந்த விமலன் (31), தமிழ்நாடு வலசரவாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் பெட்ரிக் (27) நேசப்பாக்கம் சென்னையைச் சேர்ந்த விஜிதா (34) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். …

  18. மோடிக்கு ஜெ. எழுதும் கடிதங்கள் எல்லாம் குப்பைதொட்டிக்கே.! பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா எழுதும் கடிதங்கள் அனைத்தும் குப்பை தொட்டிக்குத்தான் செல்கின்றன என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் தெரியபடுத்தி அது தொடர்பில் தீர்வு காணவேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகின்றமை வழமையான விடயம். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி, பிரதமருக்கு கடிதம் எழுதுவதில் ஜெயலலிதா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆனால், அவரது எண்ணப்படி அவர் எழுதும் கடிதங்கள் அனைத்தும் குப்பைக்குதான் செல்கின்றன. …

  19. நச்சு கலப்பு? தமிழகத்தில் விற்பனையாகும் 'பிரெட்'டிலும் மாவட்டம் தோறும் மாதிரி ஆய்வு நடத்த முடிவு டில்லியில் நடத்திய ஆய்வில், 'பிரெட்' வகைகளில், புற்றுநோயை உண்டாக்கும் நச்சு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, 'தமிழகத்திலும், உணவு பாதுகாப்புத்துறை இது குறித்த ஆய்வுகளை நடத்த வேண்டும்' என, நுகர்வோர் அமைப்புக்கள் வலியுறுத்தி உள்ளன. டில்லியில் விற்பனையாகும், 'பிராண்டட்' வகை, 'பிரெட்'களை, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் ஆய்வு செய்ததில், புற்றுநோயை உருவாக்க அதிகம் வாய்ப்புள்ள, 'பொட்டாசியம் புரோமேட்' என்ற, ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு வேதிப்பொருளான பொட்டாசியம் அயோடேட், தைராய்டு பிரச்னையை ஏற்படுத்தும் என, தெரிய வந்துள்ளத…

    • 0 replies
    • 568 views
  20. 6வது முறையாக ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார் ..! (படங்கள்) 6வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். மேலும் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. சென்னையில் கடந்த 20ம் தேதி நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் அவர் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து புதிய அரசு அ…

  21. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் 2016 சட்டப்பேரவைத் தேர்தல் : தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் துவங்கியது. சென்னை அண்ணா பல்கலை, மதுரை, சேலம், ஆத்தூர் தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அனைத்து வாக்குகளும் எண்ணும் பணி துவங்க உள்ளது. சென்னையில் 16 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையில் 9,621 பணியாளர்கள…

  22. 'இனி மக்கள் நலக் கூட்டணி வேண்டாம்!' -கேப்டனை மடைமாற்றும் தொண்டர்கள் சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்குக் கிடைத்த அதிர்ச்சித் தோல்வியில் இருந்து இன்னமும் விஜயகாந்த் மீளவில்லை. 'உள்ளாட்சித் தேர்தலில் கௌரவ வெற்றி கிடைக்காவிட்டால் நிலைமை இன்னமும் மோசமாகிவிடும்' எனக் கட்சிக் கூட்டத்தில் வேதனைப்பட்டிருக்கிறார் அவர். தே.மு.தி.க.வைத் தொடங்கிய நாள்முதலாக சந்தித்து வரும் தேர்தல்களிலேயே மிக மோசமான தோல்வியை சந்தித்தது இந்த சட்டமன்றத் தேர்தலில்தான். அதிலும், உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் வாங்கிய வாக்குகளும், கிடைத்த மூன்றாவது இடமும் தே.மு.தி.க தலைமையை அதிர வைத்தன. தேர்தல் முடிவில் அதிலும், கட்சியின் வாக்கு சதவீதம் இரண்டரை சதவீதம் அளவுக்குக் குறைந்…

  23. 'ஈழவிடுதலை என்பதெல்லாம் வெறும் வசனம்தானா?' -சீமானுக்குத் தடை போடும் மாணவர் அமைப்பு 'முள்ளிவாய்க்கால் முடிவல்ல' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், பங்கேற்க இருக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு மாணவர் அமைப்பு ஒன்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருக்கிறது. 'நிகழ்ச்சியின் நோக்கம் புரியாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்' என வேதனைப்படுகிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். மூத்த பத்திரிகையாளர் பா.ஏகலைவனால் எழுதப்பட்ட, 'முள்ளிவாய்க்கால் முடிவல்ல, இனி என்ன செய்யலாம்?' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடக்க இருக்கிறது. இந்த விழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், திருச்சி வேலுச்சாமி,கெளதமன், காசி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.