Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஓட்டம்? ஜெ., பங்களா கொள்ளை; முக்கிய நபர் வெளிநாடு ஓட்டம்? கோடநாடுக்கு கூலிப்படையினரை அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் மரக்கடத்தல், 'மாபியா' கும்பலின் தலைவன், முன்கூட்டியே வெளிநாடுக்கு தப்பியோடியது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர், ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறை தயாரித்து, கோர்ட்டில் சமர்ப்பித்த சொத்து பட்டியலில், வரிசை எண், 166ல் இடம் பெற்றிருந்தது, 900 ஏக்கர் பரப்புள்ள, கோடநாடு எஸ்டேட். ஜெ., மறைவுக்கு பின், இது யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த எஸ்டேட்டை விட, 99 அறைகள், 48 ஆயிரம் சதுர அடி பரப்பில், அங்கு …

  2. அன்று சசிகலா... இன்று ஓ.பன்னீர்செல்வம்! அ.தி.மு.க.வுக்கு திருமாவின் கிரீன் சிக்னல்? அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்து சந்தித்து வருவதால் வரும் தேர்தல்களில் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, நேற்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீரை திறந்து விட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்ற சந்திரபாபு நாயுடு, 2.5 டி.எம்.சி தண்ணீரை திறப்பதாக உறுதி அளித்தார். இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித…

  3. வெற்றியை ருசியுங்கள்! ஒட்டுமொத்த தேசத்தையும் பேசவைத்துவிட்டார்கள் தமிழக இளைஞர்கள். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டு நடத்திய போராட்டம், ஒருகட்டத்தில் மக்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கெடுக்கும் போராட்டமாக உருவெடுத்தது. சென்னை மெரினா கடற்கரையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடியது இப்போராட்டத்தின் வலிமைக்குச் சான்று. இரவு, பகல் பாராமல் நாள் கணக்கில் அறவழியில் நீண்ட போராட்டம் தமிழக அரசைப் போராட்டக்காரர்களின் பக்கம் திருப்பியது. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் முடிவுக்கு உடன்படுவதைத் தவிர, மத்திய அரசுக்கு வேறு வழியே இல்லாமல் போனது. இ…

  4. பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் கொரோனா முதல் அலையின் தாக்கத்தைவிட இரண்டாம் அலையின் தாக்கம் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் கடுமையாக இருக்கிறது. முதல் அலையை வெற்றிகரமாக எதிர்கொண்ட கிராமங்கள் பலவும், இரண்டாம் அலையில் தீவிர தாக்குதலையும், இறப்புகளையும் சந்தித்து வருகின்றன. இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பலரும் நகரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை நோக்கி படையெடுத்தனர். கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு வந்தவர்கள் பலரும் தங்களது கிராமங்களில் உள்ள சுகாதார நிலையங்களில் போதுமான படுக்கை மற்றும் ஆக்சிஜன் படுக்கை இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் காத்திருந்த காட்சிகளை தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டன. கொரோனாவின் வீரியத்தை குற…

  5. 500,1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததிலிருந்து சுங்கச்சாவடிகளில் சில்லறைத் தட்டுப்பாடு காரணமாக நவம்பர் 11 வரை சுங்கக்கட்டணம் கிடையாது என்று அறிவித்தது மத்திய அரசு. அதன் பின் இந்த சில்லறைத் தட்டுப்பாடு நீடித்ததால் நவம்பர் 14 வரையிலும், பின் டிசம்பர் 2 வரையிலும் நீடிக்கப்பட்டிருந்தது. இந்த தேதி இன்றுடன் முடிவடையும் நிலையில் நாளை முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. சுங்கக்கட்டணம் செலுத்தும் பொழுது ரூ. 200க்கு மேல் செலுத்துவதாக இருந்தால் மட்டுமே பழைய 500 ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், ரூ.200க்கு கீழ் கட்டணம் இருந்தால் சில்லறையாகக் கொடுக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. தற்போது ரூ.2000 மட்டுமே அதிகமாகக் கிடைக்கும் நிலை உள்ளதால் சுங…

  6. இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை: 'தமிழகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்' தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு, அவர்கள் விரும்பும் பட்சத்தில், இந்தியக் குடியுரிமையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவில் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமங்கலம், உச்சம்பட்டி அகதிகள் முகாமில் அதிகாரி ஒருவரின் நடவடிக்கையால் மனமுடைந்த இலங்கை அகதி ஒருவர் உயர்-அழுத்தம் கொண்ட மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தின் உண்மை நிலவரம் பற்றி அறிவதற்காக சென்றிருந்த உண்மை கண்டறியும் குழுவினர், இந்த முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் மிகவும் துயர…

  7. ' முதல்வர் ரேஸில் இருந்து விலகுகிறாரா சசிகலா?!' -எதிர்ப்பை சமாளிக்க 'திடீர்' வியூகம் ' முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்பட்டது கிடையாது. நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா இறந்த அன்றே முதலமைச்சராகியிருக்க முடியும்' -இன்று போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு திரண்டிருந்த கூட்டத்திற்கு மத்தியில்தான் சசிகலா இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். ' மத்திய அரசின் அழுத்தத்தை அடுத்து, முதல்வர் பதவிக்கு கட்சியின் சீனியர்களை முன்னிறுத்தும் வேலைகளைத் தொடங்கிவிட்டார்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. அடுத்த இரண்டே நாளில், 'என்னை மிரட்டி ராஜினாமா …

  8. இலங்­கைக்கு உத­விட கம­ல­ஹா­சன் விருப்­பம் தனது நலன்­பு­ரி சங்­கத்­தின் மூலம் இலங்­கைக்கு உத­வும் விருப்­பத்தை தென்­னிந்­தி­யத் திரைப்­பட நடி­கர், உல­க­நா­ய­கன் கம­ல­ஹா­சன், சென்­னை­யி­லுள்ள இலங்­கை­யின் துணைத்­தூ­து­வ­ரி­டம் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார். கம­ல­ஹா­சன், சென்­னை­யில் உள்ள இலங்­கைத் தூத­ர­கத்­துக்கு கடந்த 24ஆம் திகதி பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். இதன்­போது இலங்­கை­யின் இயற்கை அழகு மற்­றும் சினி­மாத் துறை குறித்து கலந்­து­ரை­யா­டி­னார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­த­நி­லை­யில் இலங்­கை­யின் சுற்­று­லாத…

  9. தமிழகத்தில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க சார்பில் முத்தமிழ்ச் செல்வனும், தி.மு.க சார்பில் நா.புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்துப் பேச, விக்கிரவாண்டியில் முகாமிட்டிருக்கும் இருதரப்புத் தலைவர்களும், வாக்காளர்களைக் கவர பல்வேறு யுக்திகளைக் கையாண்டுவருகின்றனர். இந்நிலையில், இன்று அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் கருப்பண்ணன், கானை ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மேடு ஊராட்சிக்கு வாக்கு சேகரிக்கச் சென்றார். அப்போது, அவரை வரவேற்கும் விதமாக பறை இசைக் கலைஞர்கள் பறையை இசைத்துக்கொண்டிருந்தனர். அந்த இசையின் பின்னணியில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின…

    • 0 replies
    • 409 views
  10. கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் மற்றும் பெண்ணாடம் நகர தே.மு.தி.க. சார்பில் பெண்ணாடத்தில் தே.மு.தி.க. கட்சியின் பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சந்திரக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:– எம்.ஜி.ஆர். விசுவாசிகள் யாரும் இன்று அ.தி.மு.க.வில் இல்லை. தே.மு.தி.க.வால்தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தே.மு.தி.க. போட்டியிட்ட ஒரு தொகுதியில்கூட ஜெயலலிதா பிரசாரம் செய்ய வரவில்லை. ஆனால் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். தமிழ்நாட்டில் சட்டம்– ஒழுங்கு கெட்டு கிடக்கிறது. மின் பிரச்சனை, காவேரி நீர் பிரச்சனை எதுவும் தீர்வு காணப்படவில்லை. தே.மு.தி.க. தெரியாதனமாக அ.தி.மு.க.விடம…

  11. தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கிய நளினி 55 Views ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, 30 வருடங்களாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் அளிக்க விருப்ப மனு அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படும் பணிக்காக, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை ஏற்றுப் பெரு நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், மாதாந்த சம்பளதாரர்கள், தன்னார்வலர்கள், மாணவ மாணவிகள், பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பில் இருந்து தாராளமாக நிதியுதவி …

  12. சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கும் பணி முடிந்தவுடன் தேர்தல் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதிகளின்படி, கட்சி அமைப்புகளின் பொது தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்திட வேண்டும், என்பதற்கு இணங்க, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான பணிகள் தொடங்கப்பட்டு ஏராளமானோர் உறுப்பினர் உரிமைச் சீட்டு வேண்டி, அதற்கான விண்ணப்ப படிவங்களை தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்துள்ளனர். தற்போது இவர்க…

  13. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப் பட்டதால், பழனிசாமியை பதவியிறக்கி விட்டு, தினகரனை முதல்வராக்கும் முயற்சியில், சசிகலா தரப்பு இறங்கியுள்ளது. 'கூஜா துாக்கி' களின் இந்த திட்டத்தை முறியடிக்க, சசி எதிர்ப்பு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், அமைச்சர் கள் பலர் தீவிரம் காட்டி வருகின்றனர். அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலராக அறிவிக்கப்பட்ட சசிகலா, சிறையில் அடைக்கப் பட்ட பின், கட்சியின் முழு கட்டுப்பாடும், தினகரன் கைக்கு வந்து விட்டது. சசிகலாவை ஆதரித்த அதே கும்பல், இப்போது தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அவரை நிறுத்தி வெற்றி பெற வைக்கவும், பண பலத்துடன் களமிறங்கி யது. தினகரன் வெற்றி பெற்ற பின், அவரை முதல்வராக்கவும…

  14. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலை தொடர்பில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நளினியால் தொடரப்பட்ட வழக்கை சென்னை மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. குறித்த வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் தமிழக அமைச்சரவை பரிந்துரைக்கு அனுமதியளிக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நளினி தரப்பில் சென்னை மேல் நீதிமன்றில்; மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு விசாரணையின…

    • 0 replies
    • 409 views
  15. கொரோனா வைரஸினால் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பு – ஒரே நாளில் 798 பேருக்கு தொற்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8,002 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்ட மாவட்டங்களில், சென்னைக்கு அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் 4,273 பேர் அரசு ஏற்படுத்தியுள்ள சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று மட்டும், 11 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 798 பேருக்கு…

    • 1 reply
    • 409 views
  16. 'ஆளே மெலிஞ்சுட்டார்... ஆனாலும், தீர்க்கமா இருக்கார்!' - சிறையில் தினகரன் சந்திப்புப் பின்னணி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட டி.டி.வி.தினகரனை அவரது ஆதரவாளர்கள் சந்தித்துவருகின்றனர். அப்போது, மெலிந்து காணப்பட்ட டி.டி.வி. தினகரனிடம், 'அண்ணனை இப்படியா நாங்க பார்க்கணும்' என்று ஆதரவாளர்கள் வருத்தப்பட்டனர். இரட்டை இலை சின்னத்தை குறுக்குவழியில் மீட்டெடுக்க, டெல்லி ஏஜென்ட்டிடம் பணம் கொடுத்ததாக போலீஸார் டி.டி.வி.தினகரனை கைதுசெய்து திகார் சிறையில் அடைத்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை நடந்துவருகிறது. டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சிலர், சிறைக்குச் சென்று டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்திவர…

  17. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா! சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கடந்த 15 ம் தேதியன்றே, ராகுல் காந்தியிடம் அளித்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார் என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இளங்கோவனின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற பீட்டர் அல்போன்ஸ், தங்கபாலு, செல்வகுமார் மற்றும் திருநாவுக்கரசர் உள்ளிட்ட அக்கட்சியின் ம…

  18. ஜெயலலிதா நினைவிடத்தில் சீன தூதர் அஞ்சலி தமிழகம் வந்த சீன தூதர் தனது குடும்பத்தாருடன் திடீரென மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். இந்தியாவுக்கான சீனதூதராக இருப்பவர் லோ சாஓஹுய். 1985-ல் ஆசியா வெளியுறவுத்துறை செயலராக பொறுப்பேற்ற இவர் 1989 ஆம் ஆண்டு வரை இந்த பதவியில் இருந்தார். 1989 முதல் 1993 வரை சீனத்தூதரகத்தின் இரண்டாவது செயலராக பதவி வகித்தார். பின்னர் 1993 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டுவரை வட அமெரிக்காவில் சீன வெளியுறவு அதிகாரியாக பணியாற்றினார். 96 ஆம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டுவரை அமெரிக்காவிற்கான சீனத்தூதரக அலுவலக இரண்டாம் நிலை செயலாளராக பணியாற்றினார். 2006 முதல் 2016 வரை பல்வேறு நாடுக…

  19. நாகப்பட்டினம்: தமிழக கடல் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து, கடல் வளம் சுரண்டப்படுவதை தடுக்க, அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் 1076 கி.மீ., நீளமுடைய கடலோரத்தில் 13 கடலோர மாவட்டங்களில், 591 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். தமிழக கடல் பரப்பில் ஆயிரக்கணக்கான படகுகள் மீன்பிடிப்பதால், மீன் வளத்தை காக்க ஏப்ரல், மே மாதங்களில் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு, கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு அரசு வழிவகுக்கிறது.மேலும், கடல் வளத்தை பாதிக்கும் இரட்ட…

  20. Exclusive: ஜெ., வழக்கில் அரசு வக்கீலாக சம்மதித்தது ஏன்? ... மனம் திறந்தார் ஆச்சாரியா பெங்களூரு: ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணையில் அரசு வக்கீலாக மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளார் பி.வி.ஆச்சாரியா. பவானிசிங் அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டதை செல்லாது என்று அறிவித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசு தரப்பு தனது வாதத்தை ஹைகோர்ட்டில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க அளித்த காலக்கெடு வெறும் ஒரே நாள்தான். இந்த ஒருநாளைக்குள், வழக்கு குறித்து படித்து, தண்டனையை உறுதி செய்ய கேட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் கர்நாடக அரசு சிக்கியது. அப்போதுதான், ஆபத்பாண்டவராக கர்நாடக அரசின் கண்களுக்கு தெரிந்தார், ஆச்சாரியா. இவர் ஜெயலலிதா வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டபோது, 2005ம் ஆண்டு முதல் …

  21. பிரணாப் முகர்ஜி கடந்த 20 ஆம்நாள் சென்னைலயோலா கல்லூரிக்கு வந்தபோது திரைப்பட இயக்குனர் கவுதமன், உள்ளிட்ட மாணவர்களை கைதுசெய்து தாக்கியுள்ளார்கள் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 20–ந்தேதி சென்னை லயோலா கல்லூரிக்கு வந்தபோது முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் திரைப்பட இயக்குனர் கவுதமன், மாணவர்கள் பார்வை தாசன், கவுதம், ரேமன், கோவண சந்திரன், ஜோதிலிங்கம் மற்றும் தமிழ்இனியன் ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் அழைத்து சென்று தாக்கினர். பின்னர் ஒரு தனியார் விடுதியில் அடைத்து வைத் திருந்தனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலை தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி சென்னையில் இருந்து சென்றபிறகே அனைவரும் விடுவிக்கப்பட்டனர். வன்முறை தாக்குதல் நடத்த…

  22. ராகுலுக்கு தி.மு.க.வின் ஆதரவு ; வருங்கால போக்கிற்கு ஒரு சமிக்ஞை வருட இறுதிப் பரிசாக இதைவிட வேறு எதையும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேட்டிருக்க முடியாது. மூன்று முக்கிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்களில் பெற்ற வெற்றி தந்த உற்சாகத்தையடுத்து, காங்கிரஸின் தற்போதைய நேசக்கட்சிகளும் வரும் நாட்களில் நேச அணிகளாக மாறக்கூடிய கட்சிகளும் எதிர்வரும் 2019 பொதுத்தேர்தலுக்கான அவற்றின் நிலைப்பாடுகளை திடீரென்று மறுமதிப்பீடு செய்யத் தொடங்கியிருக்கின்றன. சென்னையில் கடந்த ஞாயிறன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் உருவச்சிலை திரைநீக்கம் செய்துவைக்கப்பட்ட வைபவத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் காங்கிரஸ் தலைமையிலான அணியின் …

  23. ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து செல்வதை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்து செல்கின்றனர். மேலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களது படகுகளையும் சேதப்படுத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த இரு நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று காலை ராமேஸ்வரம் தாலுகா அலுவலகம் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், அதேபோல் இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களையும் நிபந்தனை இன்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எட…

  24. ”தேசிய அரசியலுக்கும் வருவேன்”: கமலஹாசன் சூட்சுமப் பேச்சு திரைப்படம் தயாரிப்பதைப் போன்றதல்ல அரசியல் என்பதால், அரசியலில் தோல்வி ஏற்படும் என்பது குறித்து அஞ்சப் போவதில்லை என்று நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஊடக நிகழ்வு ஒன்றில் நேற்று (25) கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “தமிழகத்தின் நன்மை கருதியே நான் அரசியலில் இறங்குகிறேன். இது திரைப்படம் தயாரிப்பதைப் போன்றதன்று. அதுபோலவே, இது பணம் சம்பாதிக்கும் ஒரு வழிமுறையும் அல்ல. என்னைக் கருவியாகக் கொண்டு எம் மக்களின் நிலையை உயர்த்தும் ஒரு முயற்சியே. எனவே, எனது அரசியல் வாழ்க்கையில் தோல்வி ஏற்படும் என்ற அச்சம் எனக்கு இல்லை. “எனது சமூகச் சிந்தனைகளே எனது நடிப்பின்…

  25. சசிகலாவுக்கு முக்கியத்துவம் : சொம்பு தூக்கும் செய்தி துறை மறைந்த முதல்வர், ஜெயலலிதா இறுதி ஊர்வல வீடியோ காட்சியில், அ.தி.மு.க., பொதுச்செயலர், சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, செய்தி மக்கள் தொடர்பு துறை விளம்பரப்படுத்தி வருகிறது. அரசின் பணிகளை, திட்டங்களை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்களை, மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தி பரப்புரை செய்வது, செய்தி மக்கள் தொடர்பு துறையின் முக்கிய பணி. ஆனால், கழகங்கள் ஆட்சிக்கு வந்த பின், அது தனி மனித துதிபாடும் துறையாகிப் போனது. அடி பணிந்து நிற்கின்றனர் இருப்பினும், ஆட்சியாளர்கள் என்பதால், யாரும் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.