Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 'விரைந்து முடிவெடுங்க கேப்டன்...!'- நெருக்கும் மக்கள் நலக் கூட்டணி! தேமுதிக, தங்களுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்பும் மக்கள் நலக் கூட்டணிதலைவர்கள், விரைந்து முடிவெடுக்க விஜயகாந்த்தை நெருக்கி வருகின்றனர். கடந்த 10-ம் தேதி சென்னையில் நடந்த தேமுதிக மகளிரணி மாநாட்டில், "தேமுதிக தனித்தே களம் இறங்கும், எங்கள் தலைமையை விரும்புவர்கள் எங்களுடன் சேரலாம்" என்று விஜயகாந்த் கூறியதையடுத்து தமிழக அரசியல் போக்கு மாறியது. கூட்டணிக்கு வருவார் விஜயகாந்த் என்று கடைசி வரை நம்பிய திமுகவுக்கு கற்பனையில் கூட 'பழம்' கிடைக்காமல் போனது. பெரிதும் நம்பிய பாஜகவிற்கு, விஜயகாந்தின் முடிவு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இதனால், ஆரம்பத்திலிருந்து தங…

  2. பிரசெல்ஸ் குண்டுவெடிப்பில் காணாமல் போனதாக கருதப்படும் தமிழரை கண்டுபிடிக்க, நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ்சில், சமீபத்தில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 35க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பின்போது, இன்ஃபோசிஸ் ஊழியரும், தமிழருமான ராகவேந்திரன் கணேசன் என்பவர் மாயமானார். அவரைத் தேடும் பணிகளை, இன்ஃபோசிஸ் நிறுவனம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் பெல்ஜியம் அரசு ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், காணாமல் போனதாக கருதப்படும் ராகவேந்திரன் கணேசனை மீட்கும்படி, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலல…

  3. மாற்றம்: சீரழிவுகளிலிருந்து பேரழிவுக்கு! தமிழகத்தில் இடதுசாரிகள் அமைத்த ‘மக்கள் நலக் கூட்டணி’ தேமுதிகவிடம் சரணாகதி அடைந்த நாளன்று அக்கூட்டணிக் கட்சிகளைச் சாராதவர்களிடமிருந்தும் வலி மிகுந்த வார்த்தைகள் வெளிப்பட்டதைப் பார்க்க முடிந்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 124 தொகுதிகளையும் முதல்வர் வேட்பாளர் என்கிற அந்தஸ்தையும் தேமுதிகவிடம் கொடுத்ததோடு கூட்டணியின் பெயரையும் பறிகொடுத்து, ‘விஜயகாந்த் கூட்டணி’ ஆக மாறியிருக்கிறது இடதுசாரிகள் அமைத்த நால்வர் அணி. தேமுதிக வாங்கியிருக்கும் 124 இடங்கள் தனிப்பெரும்பான்மைக்குரிய 118 இடங்களைக் கடந்தவை (52.9%) என்பதோடு, குறைந்தபட்சம் கூட்டணி அரசு எனும் வார்த்தையைக்கூட தேர்தல் உடன்பாட்டு அறிக்கையில் நால்வர் அணியால…

  4. சென்னை, வேலூர், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் உக்கிரம்: தமிழகத்தில் பாலைவனத்துக்கு நிகராக உணரப்படும் வெப்பம் - பகலில் நடமாடவும், இரவில் தூங்க முடியாமலும் மக்கள் தவிப்பு சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க துணியால் முகத்தை மூடியபடி குடைபிடித்துச் செல்லும் கல்லூரி மாணவிகள், படம்: ம.பிரபு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பாலைவனத்துக்கு நிகரான வெப்பம் தற்போது உணரப்படுகிறது. கோடையின் முக்கிய நாட்கள் வருவதற்கு முன்பே, வெப்பத்தின் அளவு மிக அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் சராசரியாக 31 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருப்பதால் மதுரை, வேலூர், சென்னை, திருநெல்வேலி மாவட்டங்களில் வெப்பத்தின் உக்கிரத்தால் சாலைகளில் மக்…

  5. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி 25-ம் தேதி வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.14.28 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு பொது தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் பறக்கும் படையினர் 24.3.16 அன்று சோதனையின்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.6.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 25.3.16 அன்று நடத்தப்பட்ட சோதனையில் வேலூரில் ரூ.1.30 லட்சம், திருவண்ணாமலையில் 340 சிமெண்ட் மூட்டைகள், நீலகிரி மாவட்டத்தில் ரூ.5.20 லட்சம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.4.50 லட்சம், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.1.19 லட்சம், மதுரை மாநகரில் மதுவகைகள் உட்பட மொத்தம் ரூ.12,19,000/- ரொக்…

  6. 'வாசன் காத்திருப்பது யாருக்காக?'- கார்டன் vs அறிவாலயம்! மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக ஐக்கியமான அடுத்தடுத்த நாட்களில் திமுகவின் தேர்தல் பணிகள் வேகமாகி உள்ளன. மாவட்ட வாரியாகவும், தொகுதி, ஒன்றியம், வார்டு வாரியாகயும் 'கட்சி வாக்காளர்' களின் வீடுகளுக்கு நேரில் சென்று வாக்குகளை சரி பார்க்கும் வேலையில் உ.பி.க்கள் இறங்கி விட்டனர். அதிமுக சைடில் 'இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை' என்ற கெக்கலிப்புக்குரல் பலமாய்க் கேட்கிறது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரில் தொடங்கி உள்ளூர் வட்டச் செயலாளர் வரையில் ம.ந.கூ. அணிக்கு கொடுக்கப் பட்டுள்ள 110 சீட்டுகளை குறிப்பிட்டு நக்கலடிக்கின்றனர். 'இது அம்மாவோட ஸ்கீம்க... அம்மா பேச்சை அண்ணன் வைகோ தட்டினதே கிடையாது. அவர் கூட்டணியில் இருந…

  7. 1500 கோடி ரூபாய் குறித்த கேள்விக்கு டென்ஷனாகி வெளியேறிய வைகோ! (வீடியோ) பாலிமர் தொலைகாட்சி நேர்காணலின்போது, 1500 கோடி ரூபாய் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோபத்துடன் பாதியில் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீடியோவை காண... http://www.vikatan.com/news/politics/61297-vaiko-polymer-tv-interview-with-sullen-sensation.art

  8. வைகோவுக்கு கருணாநிதி நோட்டீஸ் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.கவை தங்கள் அணிக்கு இழுக்க தி.மு.க. 500 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பது குறித்து கருணாநிதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.கவும் முன்பு இடம்பெற்றிருந்தது என்பதை தனது நோட்டீஸில் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக, இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க. பொருளாளர் வைகோ, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தே.மு.தி.கவிற்கு 80 தொகுதிகளும் 500 கோடி ரூபாயும் தர முன்வந்ததாக கூறினார். கருணாநிதி ஒரு துண்டுச் சீட்டில் இதனை எழுதிக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். …

  9. தொகுதிப்பங்கீடு: கறார் காட்டும் கருணாநிதி... கையைப் பிசையும் காங்கிரஸ்! சட்டமன்றத் தேர்தலை கோஷ்டிப்பூசல் இல்லாமல் வழிநடத்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒருபக்கம் திணறிக்கொண்டிருக்க, சீட் ஒதுக்கீட்டில் தி.மு.க தலைமை காட்டும் 'திடீர்' கறார் அணுகுமுறையால் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறது அக்கட்சி. தேர்தல் சீட் பங்கீடு தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று காலை கோபாலபுரத்திற்கு வருகை தந்தனர் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும், முகுல் வாஸ்னிக்கும். கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். ஆரம்பக்கட்ட விசாரிப்புகளுக்குப் பிறகு, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு எழுந்தது. கறார் …

  10. விஜயகாந்திடம் ரூ.500 கோடி கருணாநிதி பேரம் பேசியது உண்மை: அடித்து சொல்லும் வைகோ! மதுரை: தே.மு.தி.க.வை தனது கூட்டணிக்கு இழுப்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி 500 கோடி ரூபாய் பேரம் பேசியது உண்மை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டி உள்ளார். இது குறித்து மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், ம.ந.கூ. ஒருங்கிணைப்பாளருமான வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மை. தே.மு.தி.க.வுக்கு 80 தொகுதிகளும் 500 கோடி ரூபாயும் தி.மு.க. தருவதற்கு முன்வந்தது என்ற செய்தி ஒரு நாளிழில் வெளிவந்துள்ளது. அது உண்மையுமாகும். நான் கேள்விபட்டது, தி.மு.க. சார்பாக 500 கோடி ரூபாயும், 80 சீட்டும் தருவதாக கலைஞர் ஒரு துண்டு சீட்ட…

  11. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சென்னை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேமுதிக இணைந்துள்ளதால், எங்களது கூட்டணி வலுவான அணியாக உள்ளது. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் அணியை பூஜ்ஜியங்களின் கூட்டணி என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பூஜ்ஜியம் என்று தெரிந்தபிறகும் தேமுதிக அலுவலகத்திலும், விஜயகாந்தின் இல்லத்திலும் பாஜகவினர் காத்துக் கிடந்தது ஏன்? தமிழ் மாநில காங்கிரஸும் எங்களது அணியில் இணைய வேண்டும். அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%…

    • 0 replies
    • 419 views
  12. முதல்வர் பதவி வேண்டாம் என்று சொல்வதற்கு நான் ஒன்றும் துறவி அல்ல என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக ஆன போதே, அக்கூட்டணி முதல்வர் வேட்பாளராக அவர்தான் அறிவிக் கப்பட வேண்டும் என மதிமுக வினர் எதிர்பார்த்தனர். இதை மாவட்டங்கள்தோறும் நடந்த தேர் தல் ஆலோசனை கூட்டங்களில் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர். மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், ‘கடந்த தேர்தல்களைப் போல பதவி ஆசையில்லை என்று கூறி, யாருக் கும் விட்டுக் கொடுக்கக்கூடாது, எல்லா திறமையும் பெற்றிருக்கும் நீங்கள் (வைகோ) மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளராக வேண்டும்’ என்றனர். அதற்கு வைகோ, ‘உங்கள் கட்டளையை மீற முடியாது. ஏற…

    • 0 replies
    • 548 views
  13. கருணாநிதியுடன் மு.க அழகிரி திடீர் சந்திப்பு: மீண்டும் கண்கள் பனிக்குமா... இதயம் இனிக்குமா? சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியை மு.க அழகிரி இன்று திடீரென சந்தித்து பேசினார். இது, தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் அழகிரி பிறந்த நாளுக்கு அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் தி.மு.க.வில் சலசப்பை ஏற்படுத்தியது அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் மற்றும் பேட்டிகளை தொடர்ந்து தி.மு.க. தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரியை, அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார். கட்சிக்கு எதிராக துரோக செயல்களில…

  14. தனக்கான வீழ்ச்சியை வைகோ தானாகவே உருவாக்கிக் கொண்டார்: தமிழருவி மணியன் சென்னை: விஜயகாந்தின் முதுகுக்குப் பின்னால் அரசியல் நடத்துவது என்ற நிலைபாட்டில் நின்று விட்ட வைகோ, தனக்கான வீழ்ச்சியைத் தானாகவே உருவாக்கிக் கொண்டார் என்பதுதான் உண்மை என காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்து மக்களுக்கு நல்வழி காட்டிட வானத்துத் தேவன் மண்ணில் வந்து இறங்கியது போல் விஜயகாந்தின் வருகையை மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார்கள். விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியிருப்பதன் மூலம் மக்கள் நலக் …

  15. என்னது! கேப்டன் விஜயகாந்த் அணியா? மநகூவில் ஒரு எதிர்ப்பு குரல்! மக்கள் நலக்கூட்டணி, தே.மு.தி.க. உடன் இணைந்ததை தொடர்ந்து, அந்த கூட்டணி இனி 'கேப்டன் விஜயகாந்த் கூட்டணி' என அழைக்கப்படும் என வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கூறியுள்ள நிலையில், அப்படி அழைப்பதை ஏற்க மறுத்துள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் உடுமலையில் சங்கர் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இவரது மனைவி கெளசல்யாவை சந்திப்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவருமான ஆர்.நல்லக்கண்ணு, இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார். பாதிக்கப்பட்ட கெளசல்ய…

  16. விஜயகாந்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது: வைகோ மதிமுக பொதுச் செயலர் வைகோ விஜயகாந்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மக்கள் நலக் கூட்டணியின் முதல்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடந்தது. அதற்குப் பிறகு வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென் மாவட்ட பிரச்சாரப் பணிகளை மார்ச் 28-ம் தேதி தொடங்க உள்ளோம். மக்கள் நலக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. விஜயகாந்துடன் கூட்டணி பேச்ச…

  17. நதிகளை இணைத்து தமிழகத்தை தன்னிறைவுப் பாதைக்கு அழைத்துச் செல்வோம்: ஸ்டாலின் சென்னை: தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைத்து தண்ணீர் தேவையில் தமிழகத்தை தன்னிறைவுப் பாதைக்கு அழைத்துச் செல்ல அனைவரும் இந்த உலக தண்ணீர் தினத்தில் உறுதியேற்போம் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் முகநூலில் பதிவு செய்துள்ளது: "உலக தண்ணீர் தினம்" இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 1992- ஆம் வருடம் நடைபெற்ற "சுற்றுச் சூழல் மற்றும் வளர்ச்சி" குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டில் உலக தண்ணீர் தினம் கொண்டாடுவதன் அவசியம் பற்றி விவாதிக்கப்பட்டு, 1993- ஆம் வருடத்திலிருந்து "உலக தண்ணீர் தினம்" உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று உலக நாடுகளில் உள்ள வேலை வாய்ப்புகளில் ஏறக்குறை…

    • 3 replies
    • 595 views
  18. ஜெயலலிதாவுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு- மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி! அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்து பேசியதோடு, அதிமுக கூட்டணியில் இணைந்து சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சி முடியும் தருவாயில் திடீரென அதிமுக கூட்டணியில் இருந்து விலக்குவதாக சரத்குமார் அறிவித்தார். இதைத் தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சி இரண்டாக உடைந்தது. எர்ணாவூர் நாராயணன் தலைமையில் சமத்துவ மக்கள் கழகம் உருவானது. இந்த கட்சியும் அதிமுகவுக்கு …

  19. நாங்கள் கிங் மேக்கர், விஜயகாந்த் கிங்- மநகூ தலைவர்கள் கலகல பேச்சு நாங்கள் கிங் மேக்கராக இருப்போம், விஜயகாந்த் கிங்காக இருப்பார் என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பேசினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று விஜயகாந்த்தை சந்தித்து கூட்டணி குறித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், விஜயகாந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். முதலில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், 2016 சட்டமன்ற தேர்தல் ஒரு அரசியல் போர். மக்கள் நலக்கூட்டணி-…

  20. நான் யாரிடமும் விலைபோகவில்லை- விஜயகாந்த் பரபரப்பு பேச்சு பணத்தாசையில் அங்கே போய்விட்டார், இந்த பக்கம் விலைபோய் விட்டார் என்று சொன்றார்கள். நான் யாரு பக்கமும் விலைபோகவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி- தேமுதிக கூட்டணி தொகுதி உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தேமுதிக அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது, விஜயகாந்த் பேசுகையில், அனைவருக்கும் வணக்கம், நான் பொதுவா வந்து இந்த மிட்டிங்கில் நிறைய பேசுவேன் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு …

  21. தனிமைச் சிறையிலிருந்து விடுபட்டார் உதயகலா மண்டபம் அகதி முகாமில் உள்ள தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஈழ அகதியான உதயகலா தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதியை அடுத்து இவர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக அவரது கணவரும் திருச்சியில் உள்ள அகதி முகாமில் தங்கியுள்ளவருமான தயாபரராஜ் தெரிவித்தார். நேற்றிரவு தனிமை சிறையில் வைக்கப்பட்டிருந்த உதயகலாவை விடுவித்த பொலிஸார் அவருக்கு மண்டபம் முகாமில் மறுவாழ்வுத்துறை அதிகாரிகள் தனி வீடும் ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும் தனது மனைவி தன்னை வந்து சந்திப்பதற்கு உதவி ஆட்சியாளர் அனுமதி வழங்…

  22. 'விஜயகாந்தை வளைத்தது இப்படித்தான்...!' கடைசி நிமிட காட்சிகள் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சித் தலைவர்களை பாடாய்ப்படுத்தும் சென்டிமெண்ட்டுக்கு மக்கள் நலக் கூட்டணியும் தப்பவில்லை. பங்குனி உத்திரத்தின் நல்லநேரத்தில் கூட்டணியை உறுதி செய்திருக்கிறார் விஜயகாந்த். இதனால், தி.மு.கவின் கடைசி நிமிட நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. 'மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் சேருவார்' என வைகோ பகிரங்கமாக மேடையில் பேசினாலும், தே.மு.தி.க தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வராததால் தி.மு.க, பா.ஜ.க தரப்பில் கொஞ்சம் நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். ' நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்' என கருணாநிதி அழுத்தமாக தனது வார்த்தைகளை முன்வைத்தார். பா.ஜ.கவின் கடைசிநிமிட முயற்சிகள் பலனிக்காமல் …

  23. முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்- மக்கள் நலக்கூட்டணி அறிவிப்பு! மக்கள் நலக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிகவுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் 110 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நேரில் சந்தித்து தங்கள் கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தனர். இதனிடையே, திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கன…

  24. ஆணவக்கொலை: எமனாக வந்த போன் கால்... கவுசல்யாவின் கதறல் வாக்குமூலம்! கள்ளம் கபடமற்ற இரு உள்ளங்களின் காதல் கதை, சாதி வெறியாட்டத்தால் இப்போது கண்ணீரில் முடிந்திருக்கிறது. உடுமலையில் தலித் இளைஞரை காதலித்து கரம்பிடித்தார் என்பதற்காகவே, இளம்பெண்ணையும், அவரை திருமணம் செய்த இளைஞரையும் நடுரோட்டில் நூற்றுக்கணக்கானோருக்கு மத்தியில் மிகக் கொடூரமாக, அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது ஒரு கும்பல். இதில் இளைஞர் சங்கர் இறந்து விட... படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் கவுசல்யா. கல்லூரியில் துவங்கிய காதல் திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கொமரலிங்கம், சாவடி தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி. கூலித்தொழிலாளி. இவரது மூத்த மகன்தான் சங்கர். டிப்ளமோ படித்து மு…

  25. அதிமுகவில் என்ன நடக்கிறது? அதிமுகவில் ஜெயலலிதா அதன் நிரந்தரப் பொதுச்செயலாளர் மட்டுமே அல்ல; அங்குள்ள ஒரே நிரந்தர உறுப்பினரும் அவரே; அவருடைய அமைச்சரவையின் ஒரே நிரந்தர அமைச்சரும் அவரே என்று சொல்லப்படுவது உண்டு. அதனாலேயே அக்கட்சியினுள் நடக்கும் மாற்றங்கள் பொதுவெளியில் பெரிய அளவில் விவாதிக்கப்படுவதில்லை. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அதிசயமாக, 5 ஆண்டுகளுக்குள் தன் அமைச்சரவையை 24 முறை மாற்றியவர் ஜெயலலலிதா. 2011-ல் ஜெயலலிதாவுடன் சேர்ந்து பதவியேற்ற அமைச்சர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே இப்போது பதவியில் நீடிக்கின்றனர். ஒரு முதல்வர் எத்தனை முறை வேண்டுமானாலும் அமைச்சரவையை மாற்றியமைத்துக்கொள்வது அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.