தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
மதுரையில் அரசு பஸ் - லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 14 பேர் பலி; 45 பேர் காயம் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மதுரை மேயர் ராஜன் செல்லப்பா | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி மதுரை அருகே அரசுப் பேருந்தும், சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 14 பேர் உடல் நசுங்கி இறந்தனர். ஏறக்குறைய 45-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். திருநெல்வேலியில் இருந்து அரசுப் பேருந்து இன்று குமுளிக்குப் புறப்பட்டுச் சென்றது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 60 பயணிகள் இருந்தனர். இப்பேருந்து இன்று மாலை 4.15 மணி அளவில் மதுரை மாவட்டம், ட…
-
- 0 replies
- 543 views
-
-
சென்னை: கடற்கரை நகரில் 'காற்று வியாபாரம்' இந்தியாவில் பெருநகரங்களில் காற்று மாசடைந்துவரும் நிலையில், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மக்களுக்கு விற்கும் வியாபாரத்தை நிறுவனம் ஒன்று சென்னையில் துவங்கியுள்ளது. மருத்துவ சான்றிதழ் எதுவும் தேவைப்படாத இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களை யார் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம் என்று அந்த நிறுவனத்தின் விற்பனை முகவர்கள் கூறுகின்றனர். விளையாட்டு வீரர்களுக்கு இந்த சுவாசக் காற்று சிலிண்டர்கள் உதவியாக இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், காற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு சுற்றுச்சூழல் மாசடைந்துவிட்டதா என்ற கவலைகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மருத்துவர்களின் அறிவுறுத்தல்…
-
- 0 replies
- 509 views
-
-
ஜெ. மீதான 'பிறந்தநாள் பரிசு வழக்கு' 4 வாரங்கள் ஒத்திவைப்பு தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வர் ஜெயலலிதா முறைகேடாக பிறந்தநாள் பரிசு பெற்றதாக தொடுக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவின் இறுதிக்கட்ட விசாரணையை இந்திய உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஷ் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கின் விசாரணை இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது ஜெயலலிதா தரப்பிலான வாதத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த வழக்கு பதியப்பட்டது என்றும், அதிலும் காலம் கடந்தே அந்த வழக்கு பதியப்பட்டது என்றும் கூறப்பட்டது. மேலும், இதே காரணங்களை ஏற்றக்கொண்டே, முன்னதாக உயர்நீதிமன்றமும் …
-
- 0 replies
- 494 views
-
-
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்வார்: அற்புதம்மாள் நம்பிக்கை [ Monday,1 February 2016, 06:20:46 ] தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் சட்டப்பிரிவு 161-ஐ பயன்படுத்திபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்வார் என்றும் அந்த அறிவிப்பு இன்னும் பத்து நாட்களில் வரும் என நம்புவதாக பேரறிவாளனின்தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக ஈரோட்டில் நேற்று பொதுக்கூட்டம்நடைபெற்றபோது அற்புத்தம்மாள் இவ்வாறு தெரிவித்துள்ளார். ’கடந்த 25 ஆண்டுகளாக செய்யாத குற்றத்துக்காக என் மகன் பேரறிவாளன் சிறையில் உள்ளார். பேரறிவாளனிடம் வாக்கு மூ…
-
- 0 replies
- 708 views
-
-
இலை மலர்ந்தது... ஆனால் ஈழம் மலர வில்லை... குமரியில் ஒலித்த ஈழத் தமிழர் குரல்! நாகர்கோவில்: விடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றம்சாட்டப்பட்ட ஈழத் தமிழர் மகேந்திரன் குழித்துறை நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தபட்டார். பலத்த பாதுகாப்போடு அவரை திருச்சி காவல்துறையினர் அவரை அழைத்து வந்தனர். நீதிமன்ற வளாகத்தில் வந்தபோது திடீரென மகேந்திரன், பொய் வழக்கு போட்டு கைது செய்திருக்கிறார்கள், அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் இல்லை, நிவாரண வசதிகள் எதும் இல்லை, பெண்கள் கருமுட்டை விற்று வாழும் சூழலே அகதிகள் முகாமில் உள்ளது என கோஷமிட்டவரே வந்தார். குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் ஆஜரான மகேந்திரன் வழக்கு பிப்ரவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது…
-
- 0 replies
- 593 views
-
-
நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டுக்கு அத்தியாவசியமான சக்தி : சத்யராஜ்
-
- 0 replies
- 631 views
-
-
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் பழ.கருப்பையா: தமிழக அரசு மீது சரமாரி புகார்! அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள பழ.கருப்பையா, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதோடு, கழிவு நீர் கால்வாய் இணைப்புக்கு கூட லஞ்சமாக பெருந்தொகை தரும் சூழல் உள்ளது என்றும், இயற்கை வளம் சூறையாடப்படுகிறது என்றும் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார். சென்னை துறைமுகம் சட்டப்பேரவை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ பழ.கருப்பையாவை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று அதிரடியாக நீக்கினார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பழ.கருப்பையா இன்று செய்தியாளர்களை சந…
-
- 0 replies
- 815 views
-
-
அதிமுகவில் இருந்து பழ.கருப்பையா எம்எல்ஏ நீக்கம்! சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா எம்.எல்.ஏ. நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த பழ.கருப்பையா துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்நிலையில், அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், பழ.கருப்பையா கட்சியின் கொள்கை-குறிக்கோள், கோட்பாட்டிற்கு முரணான வகையில் பழ.கருப்பையா செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில், ஆளும் அ.தி.மு.க. அமைச்சர்கள் அவதூறாக பேசியதால் …
-
- 0 replies
- 686 views
-
-
மருத்துவ மாணவிகள் மூவர் தற்கொலை;சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே 3 மருத்துவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மூவரின் சாவிலும் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும் மாணவிகளின் உடலை பரிசோதனை செய்ய சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி சின்னசேலம் அடுத்த பங்காரம் பகுதியில் இயற்கை மருத்துவ யோகா கல்லூரி உள்ளது . இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாணவிகள் பல முறை புகார் அளித்து…
-
- 1 reply
- 740 views
-
-
நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் [ Monday,25 January 2016, 03:51:17 ] தமிழகத்தின் இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஸ்ரீலங்கா கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 76 படகுகளை விடுவிக்க வேண்டும், கைதுசெய்யப்படும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு படகுகள் அரசுடமையாக்கப்படும் என்ற ஸ்ரீலங்கா மீன்வளத்துறை அமைச்சரின் பேச்சுக்கு தமிழக மீனவர்கள் சார்பில் மத்திய அரசு ஸ்ரீலங்கா அரசுக்கு கன்டனம் தெரிவிக்க வேண்டும், பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடி உரிமையை பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட நான்கு அம்சக்கோரிக்கையை அவர்கள் முன…
-
- 0 replies
- 358 views
-
-
கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவை புறக்கணிக்க தமிழக மீனவர்கள் தீர்மானம்! ராமேஸ்வரம்: இலங்கை வசம் உள்ள படகுகளை மீட்க கோரியும், பாரம்பர்ய பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை பெற்றுத்தர வலியுறுத்தியும், கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவை புறக்கணிக்க தமிழக மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இந்தியாவால் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் கோயிலின் வருடாந்திர திருவிழா, இந்த ஆண்டு வருகின்ற பிப்ரவரி மாதம் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழாவிற்காக, தமிழகத்தில் இருந்து செல்லக்கூடிய பக்தர்கள் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களது விசைப்படகுகளில் செல்ல இருந்த நிலையில், ராமேஸ்வரம் …
-
- 0 replies
- 632 views
-
-
சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று 37.7%; அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று 35.7% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக லயோலா கல்லூரியின் "மக்கள் ஆய்வகம்" கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், தேர்தல் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக "மக்கள் ஆய்வகம்" ஒரு கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ராஜநாயகம் இந்த முடிவுகளை வெளியிட்டார். இதில் யார் தலைமையில் ஆட்சி என்ற யூகம் தொடர்பான பகுதியில், வரும் சட்டமன்ற தேர்தலில…
-
- 0 replies
- 480 views
-
-
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு! சென்னை: வேலூரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவன், மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் 131வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். குஷ்பு பேசுகையில், ''அம்மா குடிநீர், அம்மா உப்பு என அனைத்திலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டி அம்மா புகழ் பாடுகிறார்கள். அதேபோல், ஜட்டியில் போட்டோ ஒட்டியவரை பிடித்து உள்ளே தள்ள தனிப்படை அமைச்சாங்க. மதுவுக்கு எதிராக பாடல் பாடிய …
-
- 0 replies
- 512 views
-
-
சென்னை மக்களை மனம் திறந்து பாராட்டிய சச்சின்! ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை முதல் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை வரை, எம்.ஆர். எப். நிறுவனம் ஸ்பான்ஷராக இணைந்துள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க, சச்சின் சென்னை வந்திருந்தார். நிகழ்ச்சியில் பேசிய சச்சின், "சென்னையில் பெய்த கனமழைக்கு பிறகு இப்பொழுதுதான் முதன்முறையாக சென்னை வந்துள்ளேன். நான் முன்பு எப்படி பார்த்தேனோ அப்படியேதான் இருக்கிறது. எந்த ஒரு மாற்றமும் எனக்கு தெரியவில்லை. பெரு வெள்ளத்தை சென்னை மக்கள் எதிர்கொண்ட விதமும் என்னை வியக்க வைத்தது. சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டபொழுது மக்களுக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் எல்லா பகுதியிலும் இருந…
-
- 0 replies
- 701 views
-
-
தமிழகத்தில் 5 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு தமிழகத்தில் புதனன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மாநிலத்தில் சுமார் 5 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் ஐந்து கோடியே 79 லட்சத்து 72 ஆயிரத்து 690 வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2,88,17,750 பேர் என்றும் பெண் வாக்காளர்கள் 2,90,93,349 பேர் என்றும் மூன்றாம் பாலினத்தவர் 4,383 பேர் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில்தான்…
-
- 0 replies
- 407 views
-
-
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்காக முதல்வரிடம் முறையிட திரைப்பட சங்கங்கள் முடிவு! சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, பேரணியாக சென்று முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிடப்போவதாக தமிழ்த் திரைப்பட சங்கங்கள் அறிவித்துள்ளன. இது தொடர்பாக சென்னையில் இன்று நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட ஒட்டு மொத்த தமிழ் திரையுலக சங்கங்கள் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் நாசர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கூறுகையில், "பேரறிவாளன் உட்பட 7 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டு …
-
- 0 replies
- 497 views
-
-
'தை பிறந்தால் வழி பிறக்கும்' சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் 'தை பிறந்தால் வழி பிறக்கும்'- என்ற பழமொழிக்கு ஏற்றவாறு இந்த முறை தை பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்றிலிருந்து நான்கு மாதத்தில் தமிழகத்தில் புதிய அரசு அமைந்திருக்கும். அது, தற்போது இருக்கின்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அ.தி.மு.க) அரசாகவே இருக்குமா அல்லது அதற்கு போட்டியாக களத்தில் நிற்கும் திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க.) அரசாக இருக்குமா என்பதே 'பொங்கல் பட்டிமன்றமாக' தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆம், தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, மே மாதத்தில் புதிய அரசு அமைய வேண்டும். அந்த ஜனநாயக திருவிழாவில் எந்தெந்தக் கட்சிகள் யார் யாரோடு உறவாடும் அல்லது பகையாடும் என்பது இ…
-
- 0 replies
- 516 views
-
-
மாட்டிறைச்சி சந்தையை குறி வைத்தே ஜல்லிக்கட்டு தடை செய்யப்படுகின்றதா....? [Sunday 2016-01-17 08:00] கடந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாததால் 80 ஆயிரம் காளைகள் விற்கப்பட்டதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மாட்டிறைச்சி சந்தையை குறி வைத்தே ஜல்லிக்கட்டு தடை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.இந்தத் தடையால் நாட்டு மாடுகள் அடியோடு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.ஏர் பூட்டி நடத்தப்படும் விவசாயம் முற்றிலுமாகக் கைவிடப்பட்டு, டிராக்டர் மூலம் உழுகிற விவசாயத்துக்குக் காளை மாடுகள் பயன்படுத்தப்படுவது இல்லாமல் ஆகிவிட்டது. அதேபோல காளை மாட்டு வண்டிகளும் அடியோடு மறைந்துவிட்டன.இந்த நிலையில், இன விருத்திக்காக மட்டுமே ஜல்லிக்கட்டு காளைகள் …
-
- 0 replies
- 2.3k views
-
-
ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், இதனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்தது. இதனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஜல்லிக்கட்டு நடத்த அ…
-
- 2 replies
- 900 views
-
-
வரும் பேரவைத் தேர்தலில் திமுகவின் குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் துக்ளக் ஆசிரியர் சோ கூறினார்.துக்ளக் இதழின் 46-ஆவது ஆண்டு விழா, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதெமியில் நேற்று இரவு நடைபெற்றது.விழாவில் சோ.ராமசாமி பேசியது:அதிமுக ஆட்சியில் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதேசமயம் சில நிறைகள் இருக்கின்றன. வெள்ளத்துக்கே ஜெயலலிதாதான் காரணம் என்று சொல்ல முடியாததால், நிவாரண உதவிகள் வழங்குவதில் குறைகள் கூறுகின்றனர். ஆனால், அதிலும் போகப் போக ஒரு வரைமுறை வந்து எல்லா இடங்களிலும் திருப்திகரமான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.குடும்ப ஆட்சி போனதற்கு...:தொழில்துறை வளர்ச்சிக்கு பெரும் பணியை முதல்வர் ஜெயலலிதா ஆற்றி வரு…
-
- 1 reply
- 746 views
-
-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ’’தமிழ் கடவுளான முருகப் பெருமானின் முக்கிய விழாவான தைப்பூசத்துக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தைப்பூசம் அன்று விடுமுறை விடப்படுகிறது.தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தினங்களில் அரசு விடுமுறை அளிப்பது போல் தைப்பூசத்துக்கும் பொது விடுமுறை அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மதுரை திருமலை நாயக்கருக்கு விழா எடுப்பது போன்று மதுரையை ஆண்ட பாண்டிய மன்னருக்கும் அரசு விழா எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது தமிழ் சமூகத்துக்கு மிகப்பெரிய அவமானம். தமிழ…
-
- 0 replies
- 542 views
-
-
ஒண்ணாம் வகுப்பு ' டிஸ்கன்டினியு ' தமிழகத்தில் ஹெட்மாஸ்டர்! கிருஷ்ணகிரியில் போலி சான்றிதழ் மூலம் அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்த 1-ம் வகுப்பு 'டிஸ்கன்டினியு' ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். போலீசில் பிடிபட்டால்தான் அவர் உண்மையில் பணியில் எவ்வாறு தாக்குபிடித்தார் என்பது தெரியவரும். கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்து பிடிபட்டார். இவரிடம் போலி சான்றிதழ்கள் பெற்ற பலரும் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி வருவது விசாரணையில் தெரிய வந்தது. பாலக்கோட்டைச் சேர்ந்த முனியப்பன் (37) என்பவருக்கு இவர் அளித்த போலி சான்றிதழ் மூலம் அவர், அரசு பள்ளியில்…
-
- 0 replies
- 713 views
-
-
திருச்செந்தூர் கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குட்டித் திமிங்கலங்கள் நேற்று ஒரே நேரத்தில் கரை ஒதுங்கியது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரை ஒதுங்கிய திமிங்கலங்களை பார்ப்பதற்கு நள்ளிரவிலும் பொதுமக்கள் கடற்கரைகளில் திரண்டனர்.6 அடி முதல் 18 அடி வரை நீளம் கொண்ட அந்த திமிங்கலங்களின் எடை 100 முதல் 200 கிலோ வரை இருந்தன. ஆலந்தலை முதல் கல்லாமொழி வரையிலான கடல் பகுதியின் கடற்கரைகள் இவ்வாறு சுமார் 100 திமிங்கலங்கள் வரை பரவிக் கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடலில் காயம்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணிகளில் காவல்துறையினர், ஊர்காவல்படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். திமிங்கலங்கள் கரை ஒது…
-
- 6 replies
- 1.6k views
-
-
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மனிதநேயம் கொண்டு அனைத்து பணிகளையும் தாயுள்ளத்தோடு தமிழகத்திற்கு செய்து வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்களின் அன்பான வேண்டுகோள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரை மனிதநேய அடிப்படையில் கருணையோடு விடுதலை செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள். பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் 2014 ஆம் ஆண்ட…
-
- 0 replies
- 573 views
-
-
மீண்டும் தாய்க் கழகத்தில் ஐக்கியமாகிறார் நாஞ்சில்? அண்மையில் தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்த விவகாரத்தில், நாஞ்சில் சம்பத்தின் அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளரின் பதவி பறி போனது. எனினும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக அவர் இன்னும் நீடிக்கிறார். அதனால், தனது நீக்கம் குறித்து அதிமுக தலைமைக்கு மனம் திறந்த மடல் ஒன்றை நாஞ்சில் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த மடலில், தனது நிலைப்பாட்டையும், மதிமுகவில் இருந்து தான் விலகிய பிறகு அதிமுக தலைமைக்கு தான் காட்டிய விசுவாசம் குறித்தும், மனதை உருக்கும் வகையில், கொட்டியிருக்கிறாராம். தற்போது தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அவருக்கு மீண்டும் துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி தரப்படவில்லையெ…
-
- 1 reply
- 954 views
-