தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10246 topics in this forum
-
இலங்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்க அரசை கண்டித்து, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு, மே 17 இயக்கத்தால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 11ம் திகதி இடம்பெற்ற இம்முற்றுகைப் போராட்டத்தில் இதில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். தமிழக மக்கள் முன்னணியின் தோழர்கள் பொழிலன் மற்றும் அரங்க குணசேகரன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தோழர் கி.வே.பொன்னையன், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் அருணபாரதி மற்றும் தோழர்கள், தமிழர் விடுதலை கழகத்தின் சுந்தரமூர்த்தி மற்றும் தோழர்கள், தமிழர் விடியல் கட்சியின் பாபு மற்றும் தோழர்கள், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கத்தின் சிவகாளிதாசன் மற்றும் தோழர்கள்…
-
- 0 replies
- 355 views
-
-
இலங்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்க அரசை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, தமிழீழ இனப்படுகொலையின் கூட்டாளியாக இருந்து, தமிழீழ விடுதலையை அழிக்கத் துடிக்கிற அமெரிக்காவை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டது. எந்த பொருளாதார நலனுக்காக தமிழீழ விடுதலையை அமெரிக்கா அழிக்கத் துடிக்கிறதோ, அந்த பொருளாதாரத்தை முடக்குவோம். அமெரிக்காவின் நிறுவனங்களான PEPSI, COCA COLA. KFC போன்றவற்றின் பொருட்களைப் புறக்கணிபோம். தமிழீழத்தில் நடந்ததும், நடப்பதும் இனப்படுகொலை. இனப்படுகொலைக்கான சர்வத…
-
- 1 reply
- 216 views
-
-
சென்னை போலீஸ் ஸ்டேஷனில் ஈழத் தமிழர் அடித்து கொலை- நீதி விசாரணைக்கு உத்தரவிட வேல்முருகன் கோரிக்கை!! சென்னை: சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஈழத் தமிழர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையைச் சேர்ந்த மோகன் என்ற ஈழத் தமிழர் விசாரணை என்ற பெயரில் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறே…
-
- 4 replies
- 695 views
-
-
கன்னியாகுமரி அருகே உள்ளது சின்னமுட்டம். மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். கடந்த சில நாட்களாக விசைப்படகு மீனவர்களுக்கு மீனவர்களின் வலையில் குறைந்த அளவு மீன்களே சிக்கி வந்தன. இதனால் குறைந்த அளவு விசைப்படகுகளே கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் விட்டு விட்டு சாரல்மழை பெய்து வருகிறது. இந்த சாரல்மழையின் காரணமாக கடலில் மீன்கள் அதிக அளவு கிடைக்க தொடங்கி உள்ளது. இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று ஒரே நாளில் 300-க்கும்…
-
- 0 replies
- 430 views
-
-
விரைவில் எதிர்பாருங்கள்..!
-
- 5 replies
- 645 views
- 1 follower
-
-
மக்களுக்கு சேவையாற்ற நமீதா அரசியலில் குதிப்பு 2015-09-03 18:13:16 | General மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலுக்கு வர விரும்புகிறேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை நமீதா தற்போது உடல் எடையை 18 கிலோ குறைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் நிருபர்களிடம் கூறியதாவது; தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துவிட்டேன். தமிழில் வெளிவந்த இளைஞன் படத்துக்கு பிறகு நான் நடிக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் வாய்ப்பு வராமல் இருந்ததற்கு காரணம் என் உடல் எடை கூடியதுதான். தற்போது என் உடல் எடையை 18 கிலோ வரை குறைத்துவிட்டேன். மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன். அரசியலில் இறங்க வேண்டும் என்ற ஆசை எனக்கு ந…
-
- 2 replies
- 393 views
-
-
ராமேஸ்வரம்: தீவு பகுதிகளின் கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல்களை பாதுகாக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டதாக பாம்பனைச் சேர்ந்த லெட்சுமி என்பவர் அமெரிக்க நிறுவன விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வங்க கடலில் உள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை பகுதியில் உள்ள 28 கிராமங்களை சேர்ந்த பெண்கள் கடல் பாசிகளை சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலில் சுமார் 2200 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் மன்னார் வளைகுடா இயற்கை பாசி எடுக்கும் பெண்கள் கூட்டமைப்பின் கீழ் இயங்கி வருகின்றனர். இந்த கூட்டமைப்பின் தலைவராக பாம்பன் சின்னப்பாலம் கிராமத்தை சேர்ந்த லெட்சுமி (46) இருந்து வருகிறார். கடலில் உயிரற்ற பாறைகளில் வளரும் பாசிகளை சுற்று சூழலுக்கும், கடல் வளத்திற்கும் பாதிப்பு …
-
- 0 replies
- 564 views
-
-
-
- 0 replies
- 751 views
-
-
ஜெயலலிதா-சோ சந்திப்பு வீடியோ...உரையாடலுடன் வாட்ஸ் அப்பில் கசிய விட்ட ஜெயா டிவி விஷுவல் எடிட்டர் கைது. சென்னை : துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் சோ எஸ். ராமசாமியை, முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சந்தித்த வீடியோ காட்சிகளை இருவரது உரையாடலுடன் வாட்ஸ் அப்பில் உலவ விட்ட ஜெயா டி.வி. விஷுவல் எடிட்டர் புலி என்று ஊழியர்களால் அழைக்கப்படும் சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் 15 நாட்கள் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். சோ ராமசாமி, மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 27 ஆம் தேதி மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த காட்சிகள் ஆடியோ இல்லாமலும், புகைப்படமா…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தியா இலங்கைக்கு வழங்கிய போர்க்கப்பலை திரும்பப் பெற வேண்டும்- கலைஞர் கோரிக்கை • உள்ளக விசாரணையை வலியுறுத்தும் அமெரிக்காவை இந்திய அரசு கண்டிக்க வேண்டும்- கலைஞர் கோரிக்கை கலைஞர் அவர்களே! நீங்கள் பதவியில் இருக்கும்போது இலங்கைக்கு கச்சதீவை வழங்கியதை மறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் நீங்கள் பதவியில் இருக்கும்போது இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு வழங்கிய உதவிகளை மறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் நீங்கள் பதவியில் இருக்கும்போது உங்கள் மகள் இலங்கை சென்று மகிந்தவுடன் கைகுலுக்கி பரிசில்கள் பெற்று வந்ததையும் மறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் நீங்கள் பதவியில் இருக்கும்போது இலங்கை அரசுடன் சேர்ந்து இந்திய அரசும் தமிழர்களை அழித்ததை மறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் பதவியி…
-
- 0 replies
- 299 views
-
-
முறையற்ற பேச்சுக்கு ஒரு மன்னிப்பு கேட்பது பெரியார் பேரனுக்கு இழுக்கல்ல! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் ஜெயலலிதா வும் போயஸ் கார்டனில் சந்தித்துப் பேசியது பற்றி, இளங்கோவன் சொல்லிய கருத்து இன்று வில்லங்கமாகியிருக்கிறது. மோடி - ஜெயலலிதா சந்திப்பு பற்றி முதலில் இது கள்ள உறவு, அதாவது அரசியல் கள்ள உறவு என்று இளங்கோவன் பேசினார். பின்னர் சென்னையில் நடைபெற்ற ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய இளங்கோவன் மோடி - ஜெ சந்திப்பு பற்றி சிரித்துக் கொண்டே, "எனக்குத் தெரியும் இந்த வயதில் தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை.. அதனால தப்பா நினைக்காதீங்க," என்று சொன்னது மகா ஆப…
-
- 5 replies
- 3k views
-
-
ஓய்வு பெற்றார் நீதிபதி குமாரசாமி: அரை மணி நேரத்தில் முடிந்தது பிரிவு உபச்சார விழா நீதிபதி சி.ஆர்.குமாரசாமி| கோப்புப் படம் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர். குமாரசாமி இன்று (திங்கள்கிழமை) ஓய்வு பெற்றார். இதனையொட்டி பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் உள்ள 1-ம் எண் அரங்கில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. விழாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுப்ரோ கமல் முகர்ஜி தலைமை வகித்தார். உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் விழாவில் கலந்து கொண்டனர். 'அரை மணி நேரத்தில் முடிந்தது' நீதிபதி சி.ஆர். குமாரசாமியின் பிரிவு உபச்சார விழா அரை மணி நேரத்திலேயே முடிவுற்றது. மதியம் 2 மணிக்கு நிகழ்ச்சி தொடங…
-
- 0 replies
- 332 views
-
-
மெட்ராஸ்... நல்ல மெட்ராஸ் -1 ( புதிய தொடர்) - தமிழ் மகன் சென்னை என்றதும் அதன் பிரிக்க முடியாத வாசனையாக கூவம் ஆறும் நினைவுக்கு வரும். துர்நாற்றம் வீசும் சாக்கடை. மூக்கைப் பிடித்துக்கொண்டுக் கடக்கப்பட வேண்டிய கழிவுக் கால்வாய். கறுப்பு ஆறு. இப்படியாகத்தான் இந்த ஆறு இன்றைய மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. ஆனால், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த ஆற்றின் வாசம் அது அல்ல; அந்த ஆற்றின் நிறம் அது அல்ல. கங்கை, காவிரி போல அதுவும் ஓர் ஆறு. அதில் மக்கள் நீர் பிடித்தார்கள். நீர் குடித்தார்கள். குளித்தார்கள். இந்த ஆற்றுக்கும் ஓர் அருமையான கடந்த காலம் இருந்தது. அது சாக்கடையாகவே தோன்றி சாக்கடையாகவே கடலில் கலக்கும் ஆறு என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நம் நினைவில் தேங்கிவிட…
-
- 25 replies
- 11.4k views
-
-
காங்கிரஸ், பா.ஜ.க. பிரமுகர்களை கிழித்து தொங்கப்போட்ட திருமுருகன் காந்தி.
-
- 19 replies
- 1.8k views
-
-
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே போலீஸார் துப்பாக்கிச் சூடு: தேர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; 4 வீடுகள் தீ வைத்து எரிப்பு - 11 பெண்கள் உட்பட 70 பேர் கைது; ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் ஏற்பட்ட மோதலில் தேர் மற்றும் 4 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது சேஷசமுத்திரம் கிராமம். இக் கிராமத்தில் 79 குடும்பங்களை சேர்ந்த சுமார் 250 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் மாரியம்மன் கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகின்றன…
-
- 0 replies
- 400 views
-
-
இணையத்தள நிருபர் மீது அண்ணன் வைகோ பாய்ச்சல்..! தனது மகனின் சிகரட் வியாபாரம் குறித்த கேள்வியால் எரிச்சலுற்ற அண்ணன் வைகோ அவர்கள் புகை பிடித்தல் மதுவைவிட கொடியதல்ல என்கிற விளக்கத்தை நமக்கெல்லாம் அளித்துள்ளார். அதுசரி, கலைஞர் கருணாநிதி மதுக்கடைகளைத் திறந்தபோது எங்கிருந்தார் அண்ணன்?
-
- 0 replies
- 1.7k views
-
-
சென்னை விமான நிலையத்தின் மேற்கூரை 50 ஆவது முறையாக இடிந்து விழுந்து, தனது அரை சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. ஆகஸ்ட்டு 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள, சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில், வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தின் 2 ஆவது தளத்தில் மேற்கூரை இடிந்து விழுந்தது. சென்னை விமான நிலையம் கடந்த 2013 ஆம் ஆண்டு. சுமார் 2,300 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை 50 முறை அதன் மேற்கூரை இடிந்து விழுந்து வெற்றிகரமாக தனது அரை சதத்தை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-airport-roof-half-century-0th-tim…
-
- 12 replies
- 632 views
-
-
தயாநிதி மாறனின் முன் ஜாமீன் ரத்து- 3 நாட்களுக்குள் சி.பி.ஐயிடம் சரணடைய வேண்டும்: ஹைகோர்ட் அதிரடி!! சென்னை: பிஎஸ்என்எல் சட்ட விரோத இணைப்பக வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ரத்து செய்துள்ளது. அத்துடன் 3 நாட்களுக்குள் சி.பி.ஐயிடம் தயாநிதி மாறன் சரணடையவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தயாநிதி மாறன் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் (700 இணைப்புகள்) வைத்திருந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது கூறப்பட்ட புகார் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லியில் உள்ள…
-
- 4 replies
- 275 views
-
-
7 தமிழரை ஏன் விடுதலை செய்யக் கூடாது? மத்திய அரசின் வாதம் தெளிவில்லை - உச்சநீதிமன்றம் டெல்லி : "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை ஏன் விடுவிக்கக் கூடாது ?" என்பதற்கான வாதங்கள் மத்திய அரசிடம் தெளிவாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி (முருகனின் மனைவி), ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிஃபுல்லா, பினாகி சந்திர கோஷ், அபய் மனோகர் ச…
-
- 2 replies
- 382 views
-
-
ஆகஸ்ட் 15ம் திகதி ஜெயலலிதா வெளியிடும் அதிரடி அறிவிப்பு: பரபரப்பு தகவல்[ ஞாயிற்றுக்கிழமை, 09 ஓகஸ்ட் 2015, 05:54.03 AM GMT +05:30 ] தமிழகத்தில் இருக்கும் மதுபானக்கடைகளை மூடுவது குறித்த 3 அறிவிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுவிலக்கு போராட்டம் நடத்தி காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழக அரசு மதுக்கடைகளைக் குறைக்க திட்டம் தீட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ‘டாஸ்மாக்’ மேலாண் இயக்குனர் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதையடுத்து மதுக்கடைகளை அதிரடியாகக் குறைப்பதற்கு, மாவட்டங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஒவ்வொரு ம…
-
- 0 replies
- 432 views
-
-
சென்னை வந்த பிரதமர் மோடியிடம் அம்மையார் கோரிக்கை பட்டியலை தமிழக மக்களின் சார்பாக அளித்துள்ளார்.. நிறைவேறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.. டிஸ்கி: கச்சத்தீவு எங்களுடையதுதான், சொல்லிப்புட்டோம்..! அடுத்த நூறு வருசத்திலையாவது திரும்ப வாங்கிப்புடவேணும்..!! - டைம்ஸ் ஆஃப் இந்தியா.
-
- 0 replies
- 306 views
- 1 follower
-
-
காரில் ஒரு பக்கம் உங்கள் மனதுக்கு பிடித்தவர் அமர்ந்திருக்க, மறுபக்கம் வங்காளக்கடலை ரசித்தபடியே பயணம் செய்யும் அழகிய அனுபவத்தை தரக்கூடியது கிழக்கு கடற்கரை சாலை. குறைந்த செலவில் வார விடுமுறையை நிறைவாக கொண்டாட விரும்புவர்களுக்கு ஈ.சி.ஆர் ஒரு வரப்பிரசாதம். ஒரு காரும், நான்கு நண்பர்களும் இருந்தால்போதும், காலை முதல் மாலை வரை எத்தனை முறை வேண்டும் என்றாலும் ஈ.சி.ஆரில் டிரிப் அடித்துக்கொண்டிருக்கலாம். நெருக்கடியான சென்னை சாலைகளில் பயணம் செய்து அலுப்பானவர்கள், விசாலமான, காற்றோட்டமான, இயற்கை எழில் கொஞ்சும் ஈ.சி.ஆரை பார்த்தால் குழந்தையை போல துள்ளி குதித்துக்கொண்டு கார் ஓட்ட ஓடிவருவார்கள். திருவான்மியூரில் ஆரம்பித்து முட்டுக்காடு படகு குழாம், மாமல்லபுரம், புலிக்குகை, கடப்பாக்கம் கோ…
-
- 8 replies
- 1k views
-
-
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, டாஸ்மாக் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், அந்த கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு காவல்துறையினரின் மிரட்டல்தான் காரணம் என்று டாஸ்மாக் ஊழியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மதுவுக்கு எதிரான போராட்டம் வலுத்து வரும் நிலையில், ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் 2 டாஸ்மாக் கடைகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், மர்ம நபர்களின் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு டாஸ்மாக் ஊழியர் பலியாகி உள்ள சம்பவம், டாஸ்மாக் ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம் டாஸ்மாக் மதுக்கடையில், விற்பனை ஊழியராக இருப்பவர் தலைவா…
-
- 0 replies
- 248 views
-
-
திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது கொலை முயற்சி உட்பட 12 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் செயல்பட்ட மதுக்கடையை மூட வலியுறுத்தி கடந்த 2 நாட்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் வைகோவின் தாயார் மாரியம்மாள், தம்பி ரவிச்சந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர். நேற்றுமுன்தினம் மாலையில் போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடை செயல்பட்டதை அடுத்து, மதுக்கடையை மக்கள் முற்றுகையிட்டனர். போலீஸார் தடியடி நடத்தினர். மதுக்கடைக்குள் புகுந்த சிலர் கடையை சூறையாடினர். போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கல்வீச்ச…
-
- 0 replies
- 178 views
-
-
தி.மு.கவினர் கையில் இருக்கும் பெரும்பாலான மது தயாரிக்கும் நிறுவனங்கள்: அதிர்ச்சி தகவல்[ திங்கட்கிழமை, 03 ஓகஸ்ட் 2015, 08:38.19 AM GMT +05:30 ] தமிழகத்தில் எந்த எந்த நிறுவனங்கள் மது உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன என்பது பற்றிய பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 15 நிறுவனங்கள் மது தயாரிப்பில் ஈடுபட்டள்ளன. மதுவுக்கு எதிராக தற்போது குரல் கொடுத்து வரும் தி.மு.கவை சேர்ந்தவர்கள் கையில்தான் தமிழகத்தில் பெரும்பாலான மது தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. இவர்களிடம் இருந்துதான் டாஸ்மாக்கிற்கு அதிகமாக மது கொள்முதல் செய்யப்படுகிறது. பீர் வகைகள்: சென்னை புருவரீஸ்-பெங்களூரு தொழிலதிபர். மோகன் புருவரீஸ் - மருத்துவக் கல்லுரி உரிமையாளர். எம்.பி புருவரீஸ்- எம்.பி புருஷோத்தமன். கல்ஸ…
-
- 1 reply
- 215 views
-