Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் பேசிய வைகோ, ‘இனி ஒருபோதும் தோற்க மாட்டேன். இனி நமக்கு அனைத்திலும் வெற்றி தான்’ என்று கூறி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அண்மையில் அறிவித்தார். இந் நிலையில், தேர்தல் வியூகம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப் பதற்காக மாவட்டச் செயலாளர்கள், ஆட்சி மன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழுக் கூட்டத்தைக் சனிக்கிழமை சென்னையில் கூட்டி னார் வைகோ. தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதற்காக குழு ஒன்று அமைக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மதிமுக பொருளாளர் மாசிலா மணி, ஆட்சி மன்றக் குழு செயல…

  2. சேலம், :பொது அமைதியை கெடுக்க முயன்ற தினகரன், வெற்றிவேல், புகழேந்தி உள்ளிட்ட நான்கு பேர் கைதாகின்றனர். அவர்களை பிடிக்க சேலம் தனிப்படை போலீசார் சென்னை, பெங்களூரு விரைந்துள்ளனர். இதற்கிடையில் முதல்வருக்கு எதிராக நோட்டீஸ் வினியோகித்த 'மாஜி' எம்.எல்.ஏ., உள்பட ஆறு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்து பரோலில் வெளியே வரும் சசிகலாவால் சர்ச்சை உருவாகாமல் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே தினகரன் அணியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வெங்கடாஜலம் தலைமையில் 13 பேர் செப்., 27ம் தேதி காலை 8:00 மணிக்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நோட்டீஸ் வினியோகித்தனர். முதல்வ…

  3. ராகவா லாரன்ஸ் vs வேல்முருகன்

    • 0 replies
    • 567 views
  4. `அவர் அப்படித்தான்': ரஜினியை நேரடியாக விமர்சித்த கமல்! ``காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமல்லாமல் பல விஷயங்களில் நடிகர் ரஜினிகாந்த் அப்படித்தான் இருக்கிறார்" என்று கமல்ஹாசன் நேரடியாக விமர்சித்தார். இரண்டு நாள்கள் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னைப் புறப்பட்டார். முன்னதாகக் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், "குரங்கணி மலை நிகழ்வை கோரமான பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இறந்தவர்கள் பலரும் இளைஞர்கள் என்பதால் எதிர்காலத்தின் ஒரு பகுதி தீக்கரையாகிவிட்டது. வரும் காலத்தில் வனத்துக்குள் செல்வதற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். நான் நேரில் சென்று அவர்களுக்கு இடையூ…

  5. தமிழர் நலனுக்காக தமிழர் வாழ்வுரிமைக்காக அரை நூற்றாண்டு காலமாக போராடி வரும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோ அவர்களுக்கு ஊடகங்கள் முன்னிலையில் "பிரதமர் மோடியைப் பற்றியோ உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கைப் பற்றியோ தவறாகப் பேசிவிட்டு பாதுகாப்பாக வீட்டுக்குத் திரும்பி விட முடியாது" என்று பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச். ராஜாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் இன விடுதலைக்காகப் போராடுகிற தலைவர்கள் அனைவரையும் எப்போதும் ஒருமையில் விமர்சித்துப் பேசுகிற நாலாந்தர பேச்சாளர்தான் எச். ராஜா என்பதை இந்த தமிழகம் நன்கறியும். தமிழினத்தின் தந்தை பெ…

  6. கச்சத்தீவில் புத்தர் சிலை: வழிபாட்டுத் தலங்களால் பிரச்சினைகள் ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது – தமிழிசை சௌந்தரராஜன் கச்சத்தீவில், இலங்கை கடற்படையினர் இரு புத்தர் சிலைகளை திடீரென நிறுவி உள்ளதாக கூறப்படும் தகவல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கச்சத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதால் வழிபாட்டுத் தலங்கள் தவறாக நடத்தப்படுவதாகக் கூற முடியாது என, தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இடங்களிலும் ஒருசில பிரச்சினைகள் வரும்போது, அதற்கு வழிபாட்டுத் தலங்களை அந்த பிரச்சினைக்குள் கொண்டுவரக் கூடாது என்பதே தமது கருத்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எம்மதமும் சம்மதம் என்ற நிலையில் வழிபாட்டுத் தலங்களால் பிரச்சினை…

  7. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஒரு போதும் உடையாது: திருநாவுக்கரசர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஒரு போதும் உடையாது என, தமிழகத்திற்கான காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித் அவர் மேற்படி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும எண்ணம் உள்ளதாகவும், விரைவில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடையும் என்றும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறிய கருத்திற்கு பதில் கருத்து கூறிய திருநாவுக்கரசர் மேற்படி தெரிவித்தார். கமல்ஹாசன் காங்கிரசுடன் இணைஙய விரும்புவதை தான் வரவேற்பதாகவும், ஆனால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஒரு போதும் உடையாது என்றும் தெரிவித்தார். நடிகரும் மக்கள் நீதி ம…

  8. ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் நாளில் ஏழு சிறுமியரைப் பொங்கல் வைக்கச்செய்து, தங்களுக்கு மீன் வளம் தரும் கடல் தாயை வழிபடுகின்றனர் ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராம மக்கள். ராமநாதபுரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் தொண்டி செல்லும் வழியில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உப்பூர் அருகே அமைந்துள்ளது மோர்ப்பண்ணை கிராமம். இங்குள்ள ஸ்ரீரணபத்திரகாளி கோயில் கருவறையில் ஸ்ரீரணபத்திரகாளி, வாழவந்த அம்மன், கட்டாரி காளி ஆகிய தெய்வங்கள் உள்ளன. இந்தக் கோயிலை வழிபடும் கடையர் எனும் மீனவச் சமுதாயத்தினர் ஒவ்வோர் ஆண்டும் ஊர்க்கூட்டம் போட்டு 11 முதல் 13 வயதுக்குட்பட்ட ஏழு …

  9. 17 FEB, 2025 | 10:19 AM இந்தியா-இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தி உள்ளார். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் நேற்று ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது: மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் 3,544 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் பலமுறை விளக்…

  10. அத்தியாவசிய பொருட்களை வாங்க, காலை 6.00 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவுவதை தவிர்க்க, மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவுக்கு மதச்சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும், பாதிக்கப்படுபவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் வெறுப்புணர்வுடன் பார்க்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படுவதில்லை. மாவட்ட ஆட்சியர்கள் அனைத்து மருத்துவம…

    • 0 replies
    • 225 views
  11. கடலூரில் அசத்தும் இளைஞர்கள்: மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேரில் முகக்கவசம் தயாரிப்பு வெட்டிவேரில் தயாரிக்கப்படும் முகக்கவசம் கடலூர் ஊரடங்கு காரணமாக தேக்கம் அடைந்துள்ள மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேரில் முகக்கவசம் தயாரித்து விற்பனை செய்து கடலூர் இளைஞர்கள் அசத்தி வருகின்றனர். வெட்டிவேர் நறுமணமிக்கது மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களையும் கொண்டது. வெட்டிவேரில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெட்டிவேர் சாகுபடி…

  12. இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரியும், நாடு திரும்ப விரும்புவோருக்கான தண்டப்பணத்தை குறைக்க கோரியும் இலங்கை தமிழ் அகதிகள் சென்னையில் அமைதிப் பேரணி ஒன்றை நேற்று நடத்தினர். சுமார் 600 இலங்கைத் தமிழ் அகதிகள் பங்கேற்றிருந்த இந்தப் பேரணியின் முடிவில், தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை முதலமைச்சர் பணியகத்தில் கையளித்தனர். அந்த மனுவில், தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், முகாம்களுக்கு வெளியே வசிக்கும் அகதிகள் நாடு திரும்பும் போது செலுத்த வேண்டிய தண்டப்பணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் பங்கேற்ற ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் செயலாளர் ஞானராஜ…

  13. மத்திய அமைச்சரவை, ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகும் முடிவு திமுகவின் ஒருமித்த முடிவாகும் என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுகவை பொறுத்தவரையில் ஜனநாயக நெறிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவதால், எந்தவொரு முக்கிய முடிவுகளாக இருந்தாலும், யாரும் தனிப்பட்ட முறையிலோ, தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காகவோ எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுக தலைமையில் உள்ள முன்னோடிகள் கூடி கலந்து பேசி பிரச்னையை முழுமையாக ஆராய்ந்த பின்னர்தான் முடிவெடுப்பது வழக்கம். செய்தியாளர்கள் பலமுறை சில அதிமுக்கியமான பிரச்னைகள் குறித்து கேள்வி கேட்கும்போது கூட, திமுக செயற்குழுவோ, பொதுக்குழுவோ கூடி பல்வேறு கருத்துக்களையும் விவாதித…

    • 0 replies
    • 631 views
  14. திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவீச்சு (படங்கள்) பிரிவு: தமிழ் நாடு திண்டுக்கல்லில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவேந்திர குல வேளாளர் பேரவை தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை பழி வாங்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் யூனியன் கரட்டழகன்பட்டி வார்டு கவுன்சிலர் முத்துப்பாண்டி. இவர் முன்பு பசுபதி பாண்டியனின் தேவேந்திர குல வேளாளர் பேரவையில் மாவட்ட பொறுப்பாளராக இருந்தார். பிறகு ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னணி மற்றும் சில தலித் அமைப்புகளில் பொறுப்பு வகித்திருக்கிறார். இவர் மீது பசுபதி பாண்டியன் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நி…

    • 0 replies
    • 1.3k views
  15. தனுஷ்கோடியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் 2 நாட்டுப் படகுகளில் கச்சதீவு அருகே இன்று மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். இவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் சென்று மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் 125 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதாக கடந்த வாரம் ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டது. http://www.dailythanthi.com/node/270794

  16. சசிகலா கணவர் நடராஜனுக்கு... ஹை பிபி.. அப்பல்லோவில் அனுமதி. சென்னை: நேற்று தான் சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய தினமே அவரது கணவர் நடராஜனுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் ம.நடராஜன். அவருக்கு திடீரென நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை தேவைப்படுவதாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் 4வது மாடியில் உள்ள எல் வார்டில் நடராஜன் அனுமதி…

  17. சோனியா காந்தியை சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு இந்திய புதுடில்லிக்கு சென்றுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின். இடைக்காலத் தலைவரான திருமதி சோனியா காந்தி, மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியையும் அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதன் முறையாக அரசு முறை பயணமாக டெல்லி சென்றிருக்கும் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தார். அதன் போது தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் …

  18. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்சிப் பதவி பறிப்பு சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கட்சி பதவியில் இருந்து நீக்குவதாக டி.டி.வி தினரன் அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் உள்ளார். அவரை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே. செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலுடன் வெளியிடுகிறேன் என்று துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் அறிவித்துள்ளார். அறுவை சிகிச்சை தொடங்கி விட்டது என்று கூறிய தினகரன் ஏற்கனவே வைத்திலிங்கம், முக்கிய அ…

  19. கேளிக்கை வரிக்கு எதிராக போராட்டம்: 6 புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியீடு தடைபட்டது பகிர்க தமிழகத்தில் கேளிக்கை வரி அறிமுகப்படுத்தப்பட்டதை எதிர்த்து இன்று புதிய திரைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. இதனால், கடந்த வாரம் வெளியான திரைப்படங்களே இந்த வாரமும் திரையிடப்பட்டுள்ளன. Image captionஇன்று (வெள்ளிக்கிழமை) காலையில் வெறிச்சோடிய சத்தியம் திரையரங்கு சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, திரைப்படங்களுக்கு 18 முதல் 28 சதவீதம் வரை வரிவிதிக்கப்பட்டது. இதனால், அதிகபட்ச திரையரங்கக் கட்டணம் 120 ரூபாயிலிருந்து 153 ரூபாயாக உயர்ந்தது. இந்த நிலையில், சமீபத்தில் 10 சதவீதம் அளவுக்கு கேளிக்கை வரியும் விதி…

  20. லோக்சபா தேர்தல் பிரசாரத் திற்காக, இன்று மாலை, சென்னை வரும் பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியும், நடிகர் ரஜினியும் சந்தித்துப் பேசுகின்றனர். ரஜினி வீட்டில் நடக்கும் இந்த சந்திப்புக்கு பின், மீனம்பாக்கம், ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறும், பிரமாண்ட பொதுக் கூட்டத்தில், மோடி பேசுகிறார். மோடி வருகை, ரஜினி சந்திப்பு காரணமாக, தமிழகத்தில் ஆதரவு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், பா.ஜ., கூட்டணி கட்சிகள் உற்சாகம் அடைந்துள்ளன. லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் உள்ள கூட்டணியில், தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., - கொ.ம.தே.க., - ஐ.ஜே.கே., - புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தமிழக பா.ஜ., வலியுறுத்தல்: இந்த கட்சிகள் சார்பில், 39…

    • 0 replies
    • 670 views
  21. ‘உங்களைக் காலி செய்துவிடுவார் மோடி’ என்றார் குருமூர்த்தி! - வெளிச்சத்துக்கு வருகிறதா வில்லங்க வீடியோ? ‘திறனற்றவர்கள்' என ஆடிட்டர் குருமூர்த்தி கூறிய வார்த்தைகளை வைத்துக் கொதித்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக அமைச்சர்கள். 'அவர் படித்த முட்டாள்' என அமைச்சர் ஜெயக்குமார் கூற, 'திறனற்றவர்கள் என நான் கூறிய வார்த்தை வேறு அர்த்தத்தைக் கொடுத்துவிட்டது' என விளக்கம் கொடுத்திருக்கிறார் குருமூர்த்தி. 'ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு வலுவாகக் கால் ஊன்ற நினைத்த பா.ஜ.கவுக்கு தினகரனின் வெற்றி கூடுதல் கோபத்தை வரவழைத்திருக்கிறது. அதைத்தான் வேறு வடிவில் வெளிப்படுத்துகிறார் குருமூர்த்தி' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை…

  22. தூத்துக்குடி படுகொலையும் எடப்பாடி பழனிசாமியும் MinnambalamAug 22, 2022 07:35AM ராஜன் குறை எடப்பாடி பழனிசாமியின் பிரச்சினை அவரை தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்ட படுகொலைக்கு யாரும் பொறுப்பாக்குகிறார்கள் என்பதல்ல. உண்மையில் அவருக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை யாருமே நம்பவில்லை என்பதுதான். அவரைத் தவிர எந்த ஒரு ஆளுமையுள்ள அரசியல் தலைவர் முதல்வராக இருந்திருந்தாலும் அவர் மீதான மிகப்பெரிய குற்றச்சாட்டாக, அவப்பெயராக அந்த சம்பவம் மாறியிருக்கும். எடப்பாடி பழனிசாமி சிறுபிள்ளை போல சிரித்தபடியே “தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டேன்” என்று கூறியபோது யாரும் அவர் பொய் சொல்கிறார் என்று கொந்தளிக்கவில்லை. உண்மையிலேயே அவருக்கு என்ன நடக்கிறது என்று…

  23. ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம்? - பிம்பம் உடைக்குமா சசிகலா பிரமாணப் பத்திரம்? #VikatanExclusive தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பு தாக்கல் செய்ய உள்ள பிரமாணப் பத்திரம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பக்கூடும் என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையம், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி, அவர்களிடம் நேரில் விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் கு…

  24. இலங்கைக்கு தப்ப முயன்ற மூன்று இலங்கை அகதிகள் கைது தமிழகத்தில் வசித்து வந்த இலங்கை அகதிகள் மூவர் இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற போது மண்டபம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரின் காரணமாக தமிழகத்திற்க்கு அகதிகளாக சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட மூன்று அகதிகள் மண்டபம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்றனர். இதன்போது அவர்களை மண்டபம் பொலிஸார் கைது செய்து மண்டபம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/36552

  25. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்த அத்யாயம்... வருகிறது டிசம்பர் 17 சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று அக்டோபர் 17ம் தேதி ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 17ம் தேதியை நோக்கித்தான் முழுக் காவனமும். ஏனெனில் அன்றைய தினத்துக்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. எனவே அது தொடர்பான செயல்பாடுகளில் கவனம் இருந்தாலும், கட்சியிலும் ஆட்சியிலும் சில அதிரடி உத்தரவுகளையும் மேற்கொண்டு வருகிறார் ஜெயலலிதா. முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சட்டசபைக்கு வருகிறார் என்றாலே அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் வரிசைகட்டி நிற்பார்கள் வரவேற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.