தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
விடுதலை செய்யக் கோரிய, நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட். டெல்லி: கடந்த 23 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிய ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனைக் கைதி நளினியின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்து உத்தரவிட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் ஆறு பேரில் நளினியும் ஒருவர். தற்போது வேலூர் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். 1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதானவர்களில் நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையும், ஜெயக்க…
-
- 0 replies
- 594 views
-
-
மதிவண்ணன் ( த.பெ ) மதிவாணன் என்ற கைதி 12 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தும் சிறைத்துறையும் அரசும் தன்னை விடுதலை செய்யவில்லை என்பதால் மனவுளைச்சலால் இன்று அதிகாலை தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அவர் எழுதிவைத்துள்ள கடிதத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வந்தும் மனம் திருந்தி சமூகத்தில் சாதாரண மனிதர்களை போல் வாழ்வதற்கான உரிமையை மறுக்கும் மனித உரிமை மீறலில் ஈடுபடும் சிறைத்துறை மட்டும் தமிழக அரசின் மெத்தனப்போக்கால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் காரணம் என்றும் வேறு யாரும் காரணமில்லை என்று எழுதிவைத்துள்ளார். 12 ஆண்டுகள் தண்டனை முடித்த கைதிகளை விடுதலை செய்யவேண்டும். மதிவண்ணன் எழுதிவைத்த கடிதம் வெளியிடப்படவேண்டும் தமிழக முதல்வர் அக்கடிதத்தை பார்த்து நடவடிக்கை எடுக்…
-
- 1 reply
- 347 views
-
-
ராஜீவ் பிரதாப் ரூடி| கோப்புப் படம். நடிகர் ரஜினிகாந்தை தங்கள் பக்கம் இழுக்க மேற்கொண்ட முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த பாஜக புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. இதன் அடுத்த அஸ்திரமாகவே தமிழக பாஜக பொறுப்பாளராக ராஜீவ் பிரதாப் ரூடி நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக, அடுத்தகட்டமாக மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தி ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்திலும் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை தேசிய தலைமை மேற் கொண்டுள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த பாஜக, நடிகர் ரஜினிகாந்தை தங்கள் பக்கம் இழுக்…
-
- 0 replies
- 491 views
-
-
Vaiko · மான உணர்ச்சி தமிழ்நாட்டில் அழியாது! வெந்த புண்ணில் வேல் வீச வேண்டாம்!! வைகோ அறிக்கை உலகின் பூர்வகுடி மக்களான தமிழர்களின் நெடிய வரலாற்றில் தமிழ் இனத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ள துன்பமும், கேடும் போல இதுவரையில் நேர்ந்ததில்லை. இலங்கைத் தீவில் எங்கள் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள் சிங்கள இனவாத அரசால் இலட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். எங்கள் தாய்மார்கள், சகோதரிகள் கற்பு சூரையாடப்பட்டு இராணுவத்தினரால் வதைத்துக் கொல்லப்பட்டனர். வயது முதிர்ந்தோர், குழந்தைகள், ஆயுதம் ஏந்தாத அப்பாவிகள் என எவரையும் விட்டுவைக்கவில்லை சிங்கள அரசு. உலகம் தடை செய்த குண்டுகளை பயன்படுத்தி அழித்தனர். சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணக் காணொளிகளில் நிருபிக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள்…
-
- 0 replies
- 438 views
-
-
தமிழக கிரிக்கெட்டில் நிலவும் சாதி வெறி அலுவலகத்தில் சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எதேச்சையாக கிரிக்கெட் விளையாட்டினைப் பற்றி பேச்சு எழுந்த பொழுது 'தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்கு விளையாடச் சென்ற வீரர்களுள் பெரும்பான்மையானோர் (ஏன் அனைவருமே) பிராமணர்கள்' என்று கருத்து எழுந்த பொழுது ஏறக்குறைய அனைவருமே அதிர்ச்சிக்கு உள்ளாகத் தான் செய்தனர். விளையாட்டினை வெறும் விளையாட்டாக மட்டுமே கண்டு வந்துக் கொண்டு இருந்த அவர்களுக்கு இத்தகவல் முற்றிலுமாக புதிதாக ஒன்றாக இருந்தது. 7 கோடி மக்கள் தொகை இருக்கும் ஒரு மாநிலத்தில்வெறும் 3 சதவீதம் இருக்கும் ஒரு பிரிவினரில் இருந்து மட்டுமே அனைத்து வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர் என்பது தற்செயலான ஒன்றா? …
-
- 3 replies
- 3.1k views
-
-
சென்னை: தமிழகம் உள்பட நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவு முதலே குழந்தைகளும், பெரியவர்களும் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டு வருகின்றனர். குழந்தைகளும், பெரியவர்களும் பட்டாசுகளை வெடிக்கும் போது பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் சிறப்புப் பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறையின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து வழிபாட்டுத் தலங்கள் கூடுதலாக கண்காணிக்கப்பட்டு வருகின்ற…
-
- 1 reply
- 371 views
-
-
சென்னை: தி.மு.க.வில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, விரைவில் நல்ல முடிவு எடுக்கப் போகிறேன் என்று அறிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் குஷ்பு சேரப் போகிறார் என்றும் கூறப்படுகிறது. நடிகை குஷ்பு தி.மு.க.வில் இருந்தபோது கட்சித் தலைவர் பதவி தொடர்பாக மு.க.ஸ்டாலின் மீது விமர்சனம் செய்ததாக கூறிய திமுகவினர் அரை கடுமையாக விமர்சித்து பேசியதோடு, அவர் மீது செருப்பு வீச்சும் நடந்தது. அதோடு, கட்சி கூட்டம், போராட்டம் உள்ளிட்டவற்றில் குஷ்பு ஓரம் கட்டப்பட்டார். இதனால், கடும் அதிருப்தியில் இருந்தார். இதனிடையே, திடீரென திமுகவில் இருந்து விலகுவதாக கூறிய கட்சித் தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். இதனையும் கருணாநிதி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், அதிமுகவில் குஷ்பு சேரப்போவதாக தகவல…
-
- 4 replies
- 684 views
-
-
சென்னை: 'கத்தி' பட விளம்பரங்களில் இருந்து தயாரிப்பாளர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நடிகர் விஜய், ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னை நேசிக்கும் அன்பான தமிழக மக்களுக்கும், அன்பு ரசிகர்களுக்கும் வணக்கம். சில நாட்களாக சில தமிழ் அமைப்புகள் 'கத்தி' திரைப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் நீக்க கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களின் வேண்டுகோளை மதித்து படத்தின் விளம்பரங்களில் லைக்கா பெயரை நீக்க தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொண்டனர். எனவே இந்த பிரச்னை சுமூகமாக முடிந்துவிட்டது. எனவே, எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களும், மக்களும் 'கத்தி' திரைப்படத்தை சந்தோஷமாக கண்டுகளிக்குமாறு…
-
- 4 replies
- 945 views
-
-
ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போன ஜெ.வுக்கு பிரம்மாண்ட வரவேற்பு.. என்ன நடக்கிறது இங்கே? வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளி என தீர்ப்பளித்து சிறைத் தண்டனை அனுபவித்த ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையாகி சென்னை வந்த போது அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்ததை பார்த்த ஜனநாயகவாதிகள் மனதில் இது என்ன மாதிரியான சமூகம்? என்ற கேள்வி இயல்பாக எழவே செய்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் பெங்களூர் சிறையில் இருந்த ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டிசம்பர் 18-ந் தேதி வரை "இடைக்கால ஜாமீன்" தான் கொடுத்தது ஜெயலலிதாவுக்கு. அத்துடன்…
-
- 2 replies
- 1.1k views
-
-
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தோட்டத்திற்குள் புகுந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 21 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். வரதமா அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று காலை முதலே கணக்கம்பட்டி கிராமத்தில் வெள்ளநீர் புகத்தொடங்கியது. இதனால், கிராம மக்களை பாதுகாப்பான பகுதியில் தங்கவைக்கும் நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட தொடங்கியது. ஊராட்சிமன்ற அலுவலக கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள காளிப்பட்டியில் அமைந்துள்ள தோட்டம் ஒன்றை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்குள்ள தோட்டம் மற்ற…
-
- 0 replies
- 1.1k views
-
-
ராஜபக்சேவின் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துள்ள லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் 'கத்தி' திரைப்படம் வெளிவருவதை எதிர்த்து மாணவர்கள் மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு பல போராட்டங்களை நடத்தி வருன்கிறனர். இந்த நிலையில் தீபாவளி அன்று கத்தி திரைப்படம் வெளிவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தி படத்தை லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியிடக்கூடாது என்று நேற்று தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் திரையரங்கு உரிமையாளர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றிக்கு எச்சரிக்கை விடுத்து. இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னையில் உள்ள முன்னணி திரையரங்குகள் சத்தியம் மற்றும் வூட்லண்ட்ஸ் திரையரங்குகள் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு…
-
- 0 replies
- 361 views
-
-
கத்தி பட சர்ச்சையில் சுப்பிரமணியன்சுவாமி என்ட்ரி ஆனது எப்படி? சென்னை: சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி கத்தியை திரையிடச் செய்ய பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி முயன்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் கத்தி படத்தை எதிர்ப்பவர்களை குண்டர் சட்டம் அல்லது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். ராஜபக்ஷே பங்குதாரராக உள்ள லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படம் என்பதால் "கத்தி' படத்தை ரிலீஸ் பண்ண விடமாட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வேல்முருகன் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு போன்றவை பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து "கத்தி' இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், லைக்கா உரிமையாளர் சுபாஷ்கரன…
-
- 0 replies
- 559 views
-
-
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்றதில் மகிழ்ச்சியும் இல்லை, ஜாமீனில் வெளியே வந்ததில் வருத்தமும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றதிலிருந்து, அவர் ஜாமீனில் வெளியே வந்தது வரை திமுக சார்பில் யாரும் எந்தவிதக் கருத்தும் தெரிவிக்கவில்லை. திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் கூட இதுக்குறித்து கருத்துக் கூற மறுத்துவிட்டனர். இப்போது செய்தியாளர்களிடம் பேசியுள்ள கருணாநிதி, தீர்ப்பின் விவரங்களை முழுமையாகத் தெரிந்துக்கொண்டுதான் கருத்துக் கூறவேண்டும் என்று பேசாமல் இருந்தேன். இப்போது தீர்ப்பின் முழு விவரங்களையும் படித்துவிட்டேன். ஜெயலலிதா சிறை சென்றதில் எனக்கு மகிழ்ச்சியும் இல்லை, இப்போது வெளியே ஜாம…
-
- 4 replies
- 562 views
-
-
தமிழகம் முழுவதும் நீடிக்கும் கன மழைக்கு இது வரை 13 பேர் உயிரிழப்பு 19:44:39 Monday 2014-10-20 சென்னை: தமிழகம் முழுவதும் நீடிக்கும் கனமழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 4-வது நாளாக வெளுத்து கட்டும் மழையால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. இதனால் மாநகர் முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், வடகிழக்கு பருவ மழை தொடங்கியதன் காரணமாகவும் சென்னையில் 4-வது நாளாக கனமழை நீடிக்கிறது. இதன் காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்காக காணப்பட்டது. குறிப்பாக பாரி முனை, கோயம்பேடு, பட்டிணபாக்கம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் தண்ணீரில்…
-
- 0 replies
- 382 views
-
-
தமிழ் நாடும் இங்கிலாந்தும் இங்கிலாந்தில் 5 லட்சம் தமிழர்கள் தான் வாழ்கிறார்கள் . ஆனால் அவர்களுக்கு மதிப்பளித்து இலண்டன் தொடர்வண்டித்துறை தமிழில் பயணச் சீட்டு பெறுவதற்கு உதவி செய்கிறது. தானியங்கி இயந்திரம் மூலமாக தமிழில் பயணச் சீட்டை தேர்வு செய்ய உதவுகிறது. தமிழ்நாட்டில் எட்டு கோடி தமிழர்கள் உள்ளனர் . ஆனால் அவர்களுக்கு மதிக்களிக்காமல் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே பயணச் சீட்டை கொடுக்கிறது இந்திய தொண்டர்வண்டித்துறை. தமிழை பயன்படுத்த மறுக்கிறது. பல முறை நேரில் சென்று மனு அளித்தும் தொடர்வண்டித்துறை நிர்வாகம் தமிழர்களின் புகாரை கண்டு கொள்வதில்லை. தமிழர்களை அலட்சியப்படுத்துகிறது. தமிழக அரசும் இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . நடுவண் அரசின் அராஜக இந்தித் திண…
-
- 0 replies
- 365 views
-
-
சிக்கல் இன்னும் முடியவில்லை: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி உச்ச நீதிமன்றம் ஜெயலலி தாவுக்கு விதிக்கப்பட்ட தண்ட னைக்கு இடைக்கால தடை தான் விதித்திருக்கிறது. நிபந்தனை ஜாமீன் மட்டுமே வழங்கப் பட்டிருக்கிறது. அதனால் ஜெய லலிதாவுக்கு இன்னும் சிக்கல் முடியவில்லை என்பதை மறந்து விட வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சொத்துக்குவிப்பு வழக்கின் மனுதாரரான சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும் நீதிபதி கள் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இந்நிலையில் ‘தி இந்து' சார்பாக அவரிடம் பேசிய போது, “இவ்வழக்கில் ஜெய லலிதாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் …
-
- 3 replies
- 613 views
-
-
கோமளவல்லி, நீ கொள்ளையடி – நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் : சசீதரன் ஜெயலலிதா பிணையில் விடுதலையான செய்தி வெளியானதும் தமிழ்த் தேசிய வாதிகள் கொண்ட ஆரம்பித்துவிட்டனர். கோமளவல்லி ஐயங்கார் என்ற இயற்பெயர்கொண்ட கன்னடப் பார்ப்பனப் பெண்ணான ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போதும் பிணையில் விடுதலை செய்யப்பட்ட போதும் தமிழ்த் தேசிய வாதிகளின் வில்லத் தனமான உணர்ச்சிகள் ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கொச்சப் படுத்தி மேலும் அழிவிற்கு உள்ளாக் வருகின்றது தமிழ்த் தேசிய வாதிகளின் பிரதான கழிப்பறையான அமெரிக்கனின் முகநூல் தளத்தில் ஆரம்பித்து ஊடகங்கள் ஈறாக உணவு விடுதிகளில் நடைபெறும் விருந்துபசாரங்கள் வரை ஜெயலலிதா மட்டும் தான் இன்றைய பேச்சு. ஒரு காலத்தில் வாழைக் குலையும் சாராயப் போத்தி…
-
- 0 replies
- 670 views
-
-
ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையையொட்டி, நேற்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீடு அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச்செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் திரளான நிர்வாகிகளும் கருணாநிதி இல்லத்தில் குவிந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 12.25 மணியளவில் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியதையடுத்து கருணாநிதி இல்லத்தில் குவிந்திருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் வெளியேறினர். மதியம் 1.30 மணியளவில் கருணாநிதி இல்லத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியே வந்தார். அப்போது அவரிடம், ‘ஜெயலலிதா ஜாமீனில் விடுவிக்கப்பட்டது தொடர்பாக …
-
- 3 replies
- 581 views
-
-
சந்தன கடந்தல் வீரப்பன் நினைவு தினத்தில் அன்னதானம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சந்தன கடத்தல் வீரப்பன் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று அன்னதானம் நிகழ்ச்சி நடத்த அவரது மனைவி முத்துலட்சுமி ஏற்பாடுகளை செய்தார். ஆனால் சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மறுத்துவிட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முத்துலட்சுமி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் "வீரப்பன் நினைவாக அவரது மனைவி முத்துலட்சுமி நடத்தும் அன்னதான நிகழ்ச்சிக்கு காவல் துறையினர் அனுமதி வழங்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார். http://www.seithy.com/breifNews.php?newsID=119001&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 293 views
-
-
திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் மழை நீரில் திணறும் வாகனங்கள். | படம்: க. ஸ்ரீபரத் சென்னை மாநகரப் பகுதியில் வரலாறு காணாத வகையில் 16 செ.மீ. மழை கொட்டியுள்ளது. தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சாலைகள், சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் தமிழகத்தின் உள் பகுதியில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை சுமார் 10 மணி அளவில் லேசான தூறலுடன் தொடங்கிய மழை நேரம் ஆகஆக வலுத்தது. விடிய விடிய அடைமழையாகப் பெய்தது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதி…
-
- 0 replies
- 367 views
-
-
கொடுமை.. அவசரமாக ஆஸ்பத்திரிக்கு சென்ற ஆம்புலன்சை ஜெ. பாதுகாப்புக்காக நிறுத்திய பெங்களூர் போலீஸ் பெங்களூர்: சிறையில் இருந்து வி.வி.ஐ.பி மரியாதையுடன் ஜெயலலிதா பெங்களூர் ஏர்போர்ட்டுக்கு சென்றபோது அனைத்து வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. ஜெயலலிதா காரின் முன்னுக்கும் பின்னுக்கும், பல வாகனங்களில் பாதுகாப்பு வீரர்கள் இருந்த நிலையில் மிதமான வேகத்தில் ஜெயலலிதா கார் சென்றது. சாலையின் இருபுறமும் நின்றிருந்த தொண்டர்கள் தன்னை பார்க்கவும், பூக்களை வீசவும் வசதியாக ஜெயலலிதா கார் மித வேகத்தில் பயணப்பட்டது. ஜீரோ டிராபிக், அதாவது, அனைத்து சிக்னல்களிலும் சிவப்பு சிக்னல்களை எரியவிட்டு ஜெயலலிதா பாதையில் மட்டும் பச்சை சிக்னல்கள் எரியவிடப்பட்டிருந்தன. கொடுமை.. அவசரமாக ஆஸ்பத்திரிக்கு…
-
- 3 replies
- 461 views
-
-
போலீசாரின் வி.வி.ஐ.பி மரியாதையுடன் சிறையில் இருந்து விமான நிலையம் சென்ற ஜெயலலிதா பெங்களூர்: சிறையில் இருந்து பெங்களூர் எச்.ஏ.எல் விமான நிலையம் வரையிலும் ஜெயலலிதா வாகனம் செல்வதற்காக அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. வி.வி.ஐ.பி அந்தஸ்துடனும், பாதுகாப்புடனும் அவர் ஏர்போர்ட் சென்றார். சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அனுமதி வழங்கிய நிலையில், அந்த உத்தரவு பெங்களூர் மத்திய சிறைச்சாலை அதிகாரிகளிடம் கிடைத்த பிறகு நடைமுறைகளை முடித்துக்கொண்டு ஜெயலலிதா ரிலீஸ் செய்யப்பட்டார். இதன்பிறகு, சிறை வளாகத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, எச்.ஏ.எல் விமான நிலையத்துக்கு கார் மூலமாக ஜெயலலிதா பயணித்தார். போலீசாரின் வி.வி.ஐ.பி மரியாதையுடன் சிறையில் இருந்து விமான நிலையம் சென்ற ஜெய…
-
- 3 replies
- 538 views
-
-
-பெங்களூர் விரைகிறார்கள் அதிமுகவினர் -ஜெயலலிதாவை வரவேற்க பரப்பன அக்ரஹாரா சிறை முன்பு தொண்டர்கள் குவிய வாய்ப்பு -சிறையைச் சுற்றிலும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது பெங்களூர் போலீஸ் -ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது மகிழ்ச்சி-ராம் ஜெத்மலானி -ஜெயலலிதாவுக்கு ஜாமீனை மறுத்து ஹைகோர்ட் தவறு செய்துவிட்டது-ராம் ஜெத்மலானி -தீர்ப்பு தேதியன்று சென்னையில் இருந்து ஜெயலலிதா வந்த சிறப்பு விமானம் பெங்களூரிலேயே நிற்கிறது -பெங்களூர் வந்த சிறப்பு விமானத்திலேயே சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா -தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக் கூடாது என்று கட்சியினருக்கு ஜெ. கட்டளையிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட் -தமிழகத்தில் நடைபெற்ற வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது: உச்சநீதிமன்றம் -2-3 மாதத்…
-
- 13 replies
- 928 views
-
-
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் இருக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் சார்பில் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான பாலி எஸ் நாரிமன் ஆஜராகி வாதாடினார். அதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை இந்திய உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கும் அவருடன் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட அவரது தோழி சசிகலாவுக்கும், அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரனுக்கும் நிபந்தனையுடனான இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. அதேசமயம், பாலி எஸ் நாரிமன் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இந்த வழக்கில் ஆஜரானது தவறு என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன. காரணம் இந்த சொத்துக்குவிப்…
-
- 4 replies
- 1.5k views
-
-
சென்னை: சென்னையில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில், லட்சத்தீவுகளை ஒட்டி ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று காலை 11.30 மணிக்கு பெய்த மழை தொடர்ந்து கொட்டி தீர்த்து வருவதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 தினங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாட்களில் வடகிழக…
-
- 0 replies
- 549 views
-