Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்கள் இரத்து! சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்களின் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழுநேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் 4 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கான விமான சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://athavannews.com/சென்னை-உள்ளிட்ட-நான்கு-ம-2/

  2. நீட் தேர்வு பயம்: அரியலூரில் மாணவி விபரீத முடிவு- நடந்தது என்ன? ஆர்.அருண்குமார் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் நீட் தேர்வில் வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கடினமாக இருந்ததால் அரியலூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? அரியலூர் ரயில்வே நிலையம் அருகே நடராஜன், உமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவரது மகள் கடந்த ஆண்டு பிளஸ் டூ வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் கடந்த ஆண்டு நீட் தேர்வ…

  3. தமிழகத்தில் விறுவிறு... சுப்ரீம் கோர்ட் சுறுசுறு... தொட்டுவிடும் தூரத்தில் வருகிறது தீர்ப்பு தேதி தமிழகத்தில் அரசியல் நிகழ்வுகள் வேகமாக மாறியபடி உள்ள நிலையில், தலைமை நீதிபதி மாற்றம், நீதிபதி விரைவில் ஓய்வு என, டில்லி யில் சுப்ரீம் கோர்ட்டும் சுறுசுறுப்பாவதால், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நெருங்கு கிறது என்ற பேச்சு அடிபடுகிறது. பெங்களூர் சிறப்பு கோர்ட்டில், 18 ஆண்டுகளாக நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. நீதிபதி குன்கா அளித்த தீர்ப்பால், முதல்வர் பதவியை இழந்து சிறைக்கு சென்றார் ஜெய லலிதா. ஆனா…

  4. வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை October 15, 2018 வைகை அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக 66 அடியை எட்டியிருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூலவைகையாறு, வருசநாடு, வெள்ளிமலை வனப்பகுதி, கொட்டக்குடி ஆறு மற்றும் முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் தேக்கப்படுகிறது. இதன் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த ஓகஸ்ட் மாதம்; கேரளாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக 7 ஆண்டுகளுக்கு பின்னர் அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 …

  5. அசாமை போன்று தமிழகத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடைக்க தடுப்பு முகாம் அமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முறையான ஆவணங்கள் இன்றி தமிழகத்திற்குள் ஊடுருவிய வெளிநாட்டினர் தற்போது திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனையே தடுப்பு முகாமாக மாற்றுவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் தொடங்கி இன்று நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் மத்திய பாஜ அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைபடுத்த தடுப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. தலைநகர் கவுகாத்தியில் இருந்து 129 கி.மீ தூரத்தில் உள்ள கோல்பாராவில் உள்ள …

    • 0 replies
    • 351 views
  6. ‘சசிகலா பெயரை ஏன் தவிர்க்கிறார் தினகரன்?!’ - ஆர்.கே.நகர் கலவர நிலவரம் ஆர்.கே.நகர் தொகுதிக்குத் தேர்தல் நடந்து முடியும் வரையில், தொகுதி மக்களுக்கு நிம்மதியான உறக்கம் என்பது கேள்விக்குறிதான். ‘அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா பெயரைச் சொல்லாமலேயே தொகுதிக்குள் வலம் வருகிறார் தினகரன். கட்சித் தலைமையின் பெயரை மறைப்பது, சசிகலா மீதான குற்றச்சாட்டுகளை வலுப்படுத்துகிறது’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தண்டையார்பேட்டையில், தினகரன் ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் நேற்று வருமானவரித்துறை சோதனை நடந்தது. ‘பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக உறுதியான தகவல் வந்ததன் அடிப்படையிலேயே சோதனை நடந்தது. இதில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல இயலாது. தே…

  7. தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் நாடுதிரும்பும் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜ.நா.சபையின் அகதிகள் ஆணைக்குழுவின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் அகதிகள் தமது தாயதகத்தில் இருந்து இந்தியா சென்ற 1 600 பேர் கடந்த ஆண்டு நாடு திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 30 வருட காலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பெரும்பாலானவர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக சென்றிருந்ததனர். எனினும் 2009ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அகதிகள் நாடு திரும்புவதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி கடந்த 2010ஆம் ஆண்டில் 2040 பேர் நாடு திரும்பியுள்ளதுடன் …

    • 0 replies
    • 350 views
  8. கோவை: தமிழர்களை அரணாக வைத்துக் கொண்டு, அவர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தவர் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் என்று கூறி சூட்டை கிளப்பி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். மறைந்த முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தபால் தலைகளை நிறுத்திய மத்திய அரசை கண்டித்தும், அந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ''நாட்டுக்கு நல்ல திட்டங்களை கொடுத்தவர்கள் என்ற முறையிலும், நாட்டின் உயர்வுக்கு வழிவகுத்தவர்கள் என்ற முறையிலும் இந்திரா காந்தி, ர…

  9. தவெகவில் இணைந்த செங்கோட்டையன்; சால்வை அணிவித்து வரவேற்ற விஜய் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம், TVK 27 நவம்பர் 2025, 05:07 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜயின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை நேற்று (நவ. 26) அவர் ராஜினாமா செய்த நிலையில், இன்று தவெகவில் இணைந்துள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுப்பிய செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். இன்று தவெக கட்சி அலுவலகத்துக்கு சென்றார். …

  10. ஜெயலலிதா மரண விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் நீடிப்பு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரண விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்த ஆணையகம் விசாரணை நடத்தி வருகின்றது. எனினும் ஆணையத்தின் கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அவகாசம் நீடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நீடிக்கப்பட்ட கால அவகாசமும் நேற்றுடன் நிறைவடைந்தமையால், தமிழக அரசு மேலும் 4 மாதம், கால அவகாசத்தை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற பெயரில் போராட்டம் நடத்தினா…

  11. 75 ஆவது சுதந்திர தினம்: இந்திய அரசியலில் தமிழ்நாடு தனித்து நிற்பது ஏன்? போராட்டங்கள் வாயிலாக மாநிலத்தின் வரலாறு முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 ஆகஸ்ட் 2022, 08:17 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போதைய தமிழ்நாட்டின் அரசியல் மனநிலையை வடிவமைத்ததில் இந்திய சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் நடந்த பல போராட்டங்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. சுதந்திரத்திற்கு முன்பாகவே துவங்கிய இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், விடுதலைக்குப் பின் நடந்த குலக் கல்வி எதிர்ப்புப் போராட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்டம், 1965ல் நட…

  12. படக்குறிப்பு, சுமார் 200 ஏக்கருக்கும் மேல் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கை தூய்மைப்படுத்தி, அதில் 93 ஏக்கருக்கு பசுமைப் பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிடப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், க. சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தென் சென்னையில் அமைந்துள்ள பெருங்குடியைச் சுற்றி வாழும் மக்கள் பல ஆண்டுகளாக அங்கு மலை மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் குப்பைகளால் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தக் கழிவுகளை முற்றிலுமாக அகற்றி, திடக்கழிவு மறுசுழற்சி செய்வதற்கான பயோமைனிங் திட்டத்தை தமிழ்நாடு அரசு 2022ஆம் ஆண்டு கொண்டு வந்தது. இதன் மூலம் தங்கள் பல ஆண்டுக்…

  13. பட மூலாதாரம்,NAAM TAMILAR KATCHI எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. தலைமையே தவறு செய்யும்போது கட்சியில் தொடர விரும்பவில்லை எனக் கூறுகிறார், மருத்துவ பாசறையின் மாநில நிர்வாகியாக இருந்த இளவஞ்சி. 'விருப்பம் இருந்தால் கட்சியில் இருக்கலாம். இல்லாவிட்டால் போய்விடலாம்,' என்கிறார் சீமான். நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலரும் விலகுவது ஏன்? இதற்கு சீமான் கூறும் விளக்கம் என்ன? நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் கரு.பிரபாகரன், திருச…

  14. `என் ஆயுளுக்குள் இந்தியாவைப் பெருமையடையச் செய்வேன்!' - கமல் சூளுரை சென்னையில், தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன், `என் ஆயுளுக்குள் இந்தியாவைப் பெருமையடையச் செய்வேன்' என்று பேசியுள்ளார். சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில், சில நாள்களுக்கு முன்னர் நடந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் பேசிய கமல்ஹாசன், `ஜனவரி 26-ம் தேதி முதல் களத்தில் இறங்கப்போகிறேன். பயணத்தை எங்கிருந்து, எப்படித் தொடங்குகிறேன் என்பதை வருகிற 18-ம் தேதி வெளியாகும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறேன்' என்று அறிவித்து, அரசியல் களத்தில் கவனம் ஈர்த்தார். இப்படி நேரடி அரசியலில் முழுவீச்சில் இறங்கியுள்ள கமல், வேளச்சேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்…

  15. ஓட்டுக்கு துட்டு ’நோ’! ஒரே குடும்ப ஆட்சி ‘நோ’! மக்களாட்சிக்கு ’யெஸ்’ - ஜனநாயகத்திற்காக களமிறங்கும் பெண்கள் "ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!" என்று பாரதியார் எழுதிய வரிகளுடன் தொடங்கியது அந்த நிகழ்வு. கொளுத்தும் வெயிலில் பெசன்ட் நகர் கடற்கரையோரம் சுமார் 300 பெண்கள் நீலநிறத்தில் உடையணிந்து ஒன்றாகக் குழுமியிருந்தார்கள். புரட்சி உற்சாகமூட்டும் வரிகளும், அநீதி, ஊழல், முறைகேடான ஜனநாயகத்திற்கு எதிரான பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தார்கள். மெரினாவில் 2017 ஜனவரியில் கண்ட மக்கள் புரட்சிக்குப் பிறகு கடற்கரையோரம் மக்கள் ஒன்றாகக் களமிறங்கி குரல் கொடுப்பது என்பது அடிக்கடி நிகழும் செயலாகி விட்டது. தைப்புரட்சி முழுவதுமாய் வெற்றி பெற்றதோ இல்லையோ, ஆனால் மக்கள் தங்களது தேவைக…

  16. சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் 30-வது வணிகர் தின விழா, உலக வர்த்தக ஒப்பந்த எதிர்ப்பு மாநாடு இன்று நடந்தது. பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் கே.வி.கந்தசாமி செட்டியார் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.வி.ரத்தினம், தலைமை நிர்வாக செயலாளர் சி.எல்.செல்வம், துணை பொதுச் செயலாளர்கள் பெருங்குடி எஸ்.சவுந்திரராஜன், ஜவருல்லாகான், சண்முகநாதன், பழனியப்பன், ஹபிபுல்லா, மாவட்ட தலைவர்கள் ப.தேவராஜ், வியாசை எம்.மணி, மணலி டி.ஏ.சண்முகம், வி.ஏ.கருணாநிதி, கோபால், திருவடி, நிதிக்குழு எஸ்.ஆர்.பி.ராஜன், என்.ஏ.தங்கதுரை, சாலமன், சையது அகமது, திருஞானம் முன்னிலை வகித்தனர். மாநில முதன்மை துணை தலைவர் டி.பாலகிருஷ்ணன், தேசிய கொடியேற்றினார். இரா.ரத்தினசாமி வணிக …

    • 0 replies
    • 350 views
  17. "விவசாயிகளையே பிச்சை எடுக்க விட்டுட்டாங்க; எங்களையா கண்டுக்கப் போறாங்க?" ஈழ அகதிகள்! "தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இந்த 26 வருடங்களில் மூன்று வேளை சாப்பாட்டுக்காக மட்டுமே எங்களுடைய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது"- திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் மக்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர். தமிழக அரசு அண்மையில் தாக்கல்செய்த பட்ஜெட்டில், இலங்கை தமிழ் அகதிகளுக்காக 116 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை எத்தனை பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், அகதிகள் மறுவாழ்வு பதிவேடோ, சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கி இருப்பதாகவும், முகாம்களுக…

  18. மேகதாது அணைக்கு அனுமதி.. திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம். கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட அந்த மாநில அரசுக்கு அனுமதி அளித்ததை கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ரூ. 5900 கோடியில் புதிதாக அணை கட்ட கர்நாடகம் முயற்சித்து வருகிறது. இதற்கான அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் ஏற்றுக் கொண்டது.இதையடுத்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழன…

  19. 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த செப்டம்பர் மாதம், சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஜிம் மாஸ்டரான சுரேஷ்குமார்(38) செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகிலுள்ள ஒரு குடிசைப் பகுதியில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் அவருடைய நண்பரும் எண்ணூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநருமான டெல்லி பாபு(39) என்பவரும் காணாமல் போனார். கடந்த செப்டம்பர் 16ஆம் தேதியன்று வீட்டிலிருந்து புறப்பட்ட டெல்லி பாபு வீடு திரும்பவில்லை. இதனால் டெல்லி பாபுவை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கோரி அவரது தாயார் லீலாவதி செப்டம்பர் 23ஆம் தேதியன்று எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கிடையே மகனின் நண்பர் என்ற முறையில், இறந்துபோன சுரேஷி…

  20. 8 வழிச்சாலை: நில உரிமையாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது - சென்னை ஹைகோர்ட் அதிரடி. சென்னை: சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்து அதன் உரிமையாளர்களை மறு உத்தரவு வரும் வரை அப்புறப்படுத்த கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வந்தது. இதில் விவசாய நிலங்கள், பாரம்பரியமாக கட்டப்பட்ட வீடுகள் என கையகப்படுத்தப்பட்டன. இதற்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப…

  21. எம்ஜிஆர் முதல் தேர்தலிலேயே வென்ற ரகசியம் தெரியுமா? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 26 பிப்ரவரி 2021 புதுப்பிக்கப்பட்டது 24 டிசம்பர் 2022 பட மூலாதாரம்,MGR FAN CLUB 1977ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர். துவங்கிய அ.தி.மு.க, சந்தித்த முதல் தேர்தலிலேயே அபார வெற்றி பெற்றது. புதிதாக ஆரம்பித்த ஒரு கட்சி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது இந்தியா முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 1971ல் இருந்து 1977க்குள் தமிழ்நாட்டிலும் தேசிய அளவிலும் பல சம்பவங்கள் நடந்திருந்தன. அதன் விளைவுகள் மிகத் தீவிரமானதாக இருந்தன. 1977ல் எம்.ஜி.ஆரின் வெற்றி…

  22. மதுரை விடுதியில் தங்கியிருந்த பெண்களைப் படம் பிடித்து அனுப்பிய மாணவி கைது 19 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TN POLICE மதுரையில் ஒரு விடுதியில் தங்கியிருந்த பெண்களை வீடியோக்கள், புகைப்படங்களாகப் பதிவு செய்து அவற்றை ராமநாதபுரம் மருத்துவர் ஒருவருக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட மாணவி ஒருவரும், அதைப் பெற்ற மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படங்கள், வீடியோக்கள் ஏதேனும் இணையதளங்களுக்கு விற்கப்பட்டனவா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். விடுதியில் தங்கியிருந்த சக பெண்கள் தங்கள் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக விடுதி ஊழியரிடம் …

  23. திருச்சி சிறப்பு அகதிகள் முகாம் சிறையில் மோதல்: இலங்கை அகதி கைது 15 அக்டோபர் 2013 திருச்சி சிறப்பு அகதிகள் முகாம் சிறையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில், இலங்கை அகதிகளை தடுத்துவைது கண்காணிக்க சிறப்பு முகாம் சிறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30 வயதுடைய நிர்மல் ஆனந்த், மற்றும் 32 வயதுடைய இலங்கநாதன், ஆகியோருக்கு இடையே நேற்று முன்தினம் இரவு, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பில் முடிந்தது. சிறையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், ஒருவருக்கு மண்டை உடைந்தது. தகவலறிந்த சிறை பொலிஸார் நிர்மல்குமாரை மீட்டு, சிறை வளாகத…

  24. யானை-மனித எதிர்கொள்ளல்: பாதுகாப்பில் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருவது ஏன்? பி.சுதாகர் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யானை ஒரு நாளைக்கு சராசரியாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை நடக்கும். தினமும் 250 கிலோ வரை உணவு எடுத்துக்கொள்ளும். 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். ஒரு இடத்தில் சாப்பிட்ட உணவின் மூலம், சாணத்தில் இருக்கும் விதைகளுக்கு உயிர்கொடுத்து புது செடிகளையும், மரங்களையும் மற்றொரு இடத்தில் வளர்க்கும் என்று சொல்லப்படுகிறது. யானைகளைக் குழந்தையைப் போல அன்பானது மற்றும் குறும்புத்தனம் கொண்டது என்று சொல்வதுண்டு. இன்று உலக யானைகள் …

  25. அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்! மின்னம்பலம்2022-01-01 தமிழ்நாட்டில் அடிக்கடி வெள்ளம், பெருமழை போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் நிலையில், தக்க நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, சென்னை வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்தவேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மைய அரசை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து மைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “பெருமழைக் கால சூழலில் மாநில அரசு அதை எதிர்கொள்வது குறித்த ஒரு முக்கியமான விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். பெருமழை, கடும் புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள மாநில அரசு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.