தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10242 topics in this forum
-
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை இராணுவ அமைச்சகத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களைத் தரக்குறைவாகச் சித்தரித்து, அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மனதால் நினைத்துக்கொண்டு கடிதங்கள் எழுதுவதாகப் புகைப்படம் வெளியிட்டு இருக்கின்றது. அதுமட்டுமின்றி, ‘நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்களுக்கு என்ன பொருள்?’ என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையும், இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வெளிவந்துள்ளது. இலங்கை இராணுவ அமைச்சகத்தின் கொடூரமான வக்கிர புத்தியை அப்படியே வெளிப்படுத்தும் விதத்தில் இவை அமைந்து இருக்கின்றன. இட்லரின் நாஜிப்படைகள் கூடச் செய்யத் துணியாத அக்கிரமத்தை ஈழத்தமிழ் மக்களுக்…
-
- 1 reply
- 451 views
-
-
சென்னை: கத்தி படத்துக்கு எதிரான போர்க்குரல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இன்று அந்தப் படத்தை எதிர்த்து கடுமையான வாசகங்களுடன் சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர். அதுவும் விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்காகவே இந்த சுவரொட்டி அச்சிடப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டிகளில் இடம்பெற்றுள்ள வாசகங்கள்: அன்பார்ந்த நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க நண்பர்களே, ரசிகர்களே... மூன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகளை திட்டமிட்டு இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி இனப்படுகொலைக்காரன் ராஜபக்சே அரசுக்கு பொருளாதார ரீதியாக உதவிக் கொண்டிருக்கும் லைகா நிறுவனத்துக்கு, நீங்கள் 'கத்தி' திரைப்படம் மூலம் வருமானம் ஈட்டித் தரப் போகிறீர்களா? தொடர்ந்து கொண்டிருக்கும் இனப் பட…
-
- 5 replies
- 798 views
-
-
தஞ்சாவூர்: 94 குழந்தைகள் பலியான கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 11 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ள தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம், பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு 940 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள். இந்த தீ விபத்து தொடர்பாக ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப்பள்ளி நிறுவனர் புலவர் பழனிசாமி, அவருடைய மனைவியும் பள்ளி தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, அப்போதைய தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி…
-
- 6 replies
- 895 views
-
-
திமுகவுக்கு வாக்களித்த மக்களை அவமதித்துவிட்டார்கள்: கருணாநிதி தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக சட்டப்பேரவை இந்த முறை ஜூலை 10-ந் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து ஜூலை 22-ந் தேதி வரை சட்டப்பேரவை நடைபெற்ற 9 நாட்களில் தி.மு.க. உறுப்பினர்கள் 9 முறை வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். தொகுதி மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்பு கேட்டு, தரப்படாத காரணத்தால்தான் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிக்காரர்களை “ஓடுகாலிகள்” என்று ஒரு அமைச்சர் கேவலமாக கூறலாமா? பேரவை தலைவர் இத்தகைய பண்பாட்டுச் சிதைவை அனுமதிக்கலாமா? அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், தமிழகத்திலே சுனாமி பேராபத்து ஏற…
-
- 3 replies
- 430 views
-
-
நான் வேணுமா... உன் மகன் வேணுமா? குழந்தையைக் கொன்ற கள்ளக்காதல் பேய், பிசாசு போன்ற கட்டுக்கதைகளை வைத்துக்கொண்டு மக்களை எப்படி வேண்டும் என்றாலும் திசை திருப்பலாம் என்பதற்கு உதாரணம்தான் திண்டிவனத்தில் நடந்த சிறுவன் கொலை சம்பவம். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமமூர்த்தியும் - ஜெயலட்சுமி தம்பதியர். கடந்த 14-ம் தேதி அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இவர்களின் மகன் தினேஷ்குமார் காணாமல் போனான். ராமமூர்த்தி காவல் துறையிடம் புகார் தெரிவிக்க, போலீஸாரும் கிராம மக்களும் ஊர் முழுக்கத் தேடினர். இரண்டு நாட்கள் கழித்து கிணற்றில் மிதந்துக்கொண்டிருந்த தினேஷ்குமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கிராமத்தில் உலாவரும் பேய்தான் அந்தக்…
-
- 1 reply
- 699 views
-
-
பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமியை தமிழக அரசு எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஈழத் தமிழர் பிரச்சனையில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எத்தகைய துரோகத்தை தமிழினத்துக்கு இழைத்ததோ அதற்கு சற்றும் குறைவில்லை என்கிற வகையில்தான் தற்போதைய பா.ஜ.க அரசும் செயல்பட்டு வருகிறது. அண்மையில் பா.ஜ.கவின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான குழு இலங்கைக்கு சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசியது. இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழு…
-
- 2 replies
- 519 views
-
-
-
- 0 replies
- 800 views
-
-
இலங்கைக் கடற்படை அட்டகாசம்: காரைக்கால் மீனவர்கள் 26 பேர் கைது. காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள், இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். பட்டினச்சேரி, காரைக்கால் மேடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 மீனவர்கள், 5 விசைப்படகுகளில் , நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே, அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை, 26 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றுள்ளனர். இலங்கை ராணுவ முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்ட மீனவர்களிடம், இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 4 மாதங்களில் மட்டும், 35க்கும் மேற்பட்ட புதுச்சேரி மீனவர்கள், இலங்கை கடற்படையால் …
-
- 71 replies
- 5.7k views
-
-
ராமேஸ்வரம்: மாவட்ட ஆட்சியரின் உறுதியினை ஏற்று மீனவர்கள் படகுகளின் உரிமத்தை ஒப்படைக்கும் போராட்டத்தை கைவிட்டனர். அதேவேளையில் மத்திய அரசுக்கு எதிராக இலங்கையில் தஞ்சம் புகும் போராட்டத்தை நடத்துவோம் என மீனவர்கள் அறிவித்துள்ளனர். மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது வழக்கமாக உள்ளது. கடந்த இரு மாத காலத்தில் 258 மீனவர்கள், 57 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்டனர். இதில் 215 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் 43 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளதுடன், இவர்களது 55 படகுகளும் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், 55 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி…
-
- 0 replies
- 322 views
-
-
கடந்த ஜூலை பதினெட்டாம் தேதியன்று இந்திய அரசின் மரபணு பொறியியல் மதிப்பீடுக் குழு மரபணு மாற்றப்பட்ட அரிசி, கடுகு, பருத்தி, கத்திரி, கொண்டைகடலை ஆகிய பயிர்களை வயல்களில் பயிரிட்டு ஆய்வுசெய்ய அனுமதி அளித்தது. ஆனால், மத்திய அரசின் இந்த முடிவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால், அச்சம் கொள்ளத் தேவையில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். கட்சிகள் எதிர்ப்பு தொடர்புடைய விடயங்கள் மரபணுவியல் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இந்த அனுமதிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மரபணு மாற்றப்பட்ட அரிசி உள்ளிட்ட பயிர்களின் கள ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டால், அது இந்திய…
-
- 0 replies
- 319 views
-
-
ஆட்சி மாறியது... அவஸ்தை மாறவில்லை காங்கிரஸ் ஆட்சியே பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் தமிழக மீனவர்கள்! கடந்த மே 26-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற நிலையில், மே 31-ல் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அன்றிலிருந்து கடந்த 22-ம் தேதி வரை தமிழக மீனவர்கள் 258 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டனர். இதில் இதுவரை 215 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் 43 மீனவர்கள் இப்போது இலங்கை சிறையில் இருக்கின்றனர். இந்த மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கைக் கடற்படையினரால் 57 விசைப் படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டன. இதில் இரு படகுகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன. எஞ்சிய 55 விசைப் படகுகள் இலங்கை வசம் உள்ளன. புதிய அரசு …
-
- 0 replies
- 482 views
-
-
சென்னை: ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கும், அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கும் ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள்கிறதோ என்ற வேதனை தமக்கு ஏற்படுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (24ஆம் தேதி) விடுத்துள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கை வருமாறு:- ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு தெரிவித்திருக்கிறதே? இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. குழு, விசாரணை நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா மற்றும் இதர நான்கு தெற்காசிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக இலங்கைக்கு ஐ.நா. விசாரணைக் குழுவை அனுப்புவதற்கு எதிராக இ…
-
- 1 reply
- 466 views
-
-
இந்தியாவுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை உலக வங்கி வழங்கவுள்ளது என்று, உலக வங்கித் தலைவர் ஜிம் யாம் கிம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற் கொண்டார் உலக வங்கித் தலைவர் ஜிம் யாம் கிம். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண்ஜெட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டவர்களை சந்தித்த பின்னர் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும் சென்று அம்மாநில முதல்வர்களையும் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜிம் யாங் கிம், இந்தியாவில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங…
-
- 3 replies
- 399 views
-
-
நீதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க வலியுறுத்தி தி.மு.க. அமைச்சர்கள் தம்மைச் சந்தித்துப் பேசியது உண்மைதான் என சட்டத்துறை முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். நீதிபதிகள் நியமன விவகாரம் தொடர்பாக முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ அதிரடியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நீதிபதி பதவி நீட்டிப்புக்காக தி.மு.க அமைச்சர்கள் சந்தித்து உண்மைதான்: முன்னாள் அமைச்சர் தகவல் இந்த நிலையில் சட்டத்துறை முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் இவ்விவகாரம் குறித்து கூறுகையில், சர்ச்சையில் சிக்கிய நீதிபதி, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால், அவர் பதவியில் தொடருவதை மார்க்கண்டேய கட்ஜூ விரும்பவில்லை என, தன்னைச் சந்தித்த தி.மு.க. அமைச்சர்கள்…
-
- 1 reply
- 480 views
-
-
தாண்டிக்குடி: சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற தாண்டிக்குடி மலைத்தேன் உற்பத்தி, அழிவின் விளிம்பில் உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்டது தாண்டிக்குடி. கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்து 300 அடி உயரமுள்ள இந்த கிராமத்தில், நிலவும் சீதோஷ்ண நிலை, ஓங்கி உயர்ந்த சோலைக்காடுகள் ஆகியவை, தேன் உற்பத்திக்கு சிறந்த இடமாக விளங்குகிறது.இங்கு அடுக்குத்தேன் (பெட்டி), மலைத்தேன் (பாறை), கொசுந்தேன் (செடி, கொடிகள்), கொம்புத்தேன் (மரக்கிளைகள்) ஆகிய உற்பத்தியாகிறது.சர்வதேச தரம்கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு கிடைக்கும் தேன் சர்வதேச அளவில் தரச்சான்றிதழ் பெற்றிருந்தது. தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மூலம் 1954 முதல், இங்கு கிடைக்கும் தேன் பதப்படுத்தப்பட்டு, …
-
- 0 replies
- 1.9k views
-
-
நேற்று முன்தினம் மதுரை, மேலூர், சிட்டாம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியில், சீமான் வாகனம் சென்றபோது, சுங்கச்சாவடியில் வரி கேட்டமையால் எம்மண்ணில் நாங்கள் செல்ல உனக்கு ஏன் வரி செலுத்த வேண்டும் என்று சீமானோடு சென்ற தோழர்கள் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. http://www.pathivu.com/news/32552/57//d,article_full.aspx மோதலில் சுங்கச்சாவடி ஊழியர் அமீத் என்பவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை திடீர் என சீமான் வீட்டை காவல்துறை சுற்றி வளைத்துள்ளனர். இதனை அறிந்த நாம் தமிழர்கட்சி தொடர்களும் அங்கு திரண்டுள்ளனர்.
-
- 1 reply
- 834 views
-
-
சிபிஎஸ்இ பள்ளிகளில் சம்ஸ்கிருத வாரம் கடைப்பிடிப்பதுத் தொடர்பாக பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். சிபிஎஸ்இ பள்ளிகளில் வருகிற ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி முதல் 13ம் திகதி வரை சம்ஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று, சிபிஎஸ்இ கல்வி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. உலகின் முதன்மையான மொழி சமஸ்கிருதம் என்பதால் இதை இந்தியாவில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத் தலைவர்கள் வைகோ, ராமதாஸ் எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் நிலையில், இதுக்குறித்து பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கடுதத்தில் சமூக நீதி, உயரிய கலாச்சாரம், பாரம்பரிய மொழி இவைகளுக்கு பெருமைக்குரியதும், புகழ்பெற்றதுமாக விளங்குவது தமிழ்நா…
-
- 0 replies
- 521 views
-
-
தமிழகத்தையே கலக்கிய ஒரு செய்தி என்றால் உதயநிதி - நயன்தாரா காதல் விவகாரம் தான். ஒரு முன்னணி வார இதழ் இவர்களுக்கிடையே ஏற்ப்பட்ட காதலால் தற்கொலை வரை சென்றதாக தெரிவித்திருந்தது. இதைக் கண்ட உதயநிதியின் மனைவி கிருத்திகா மிகவும் கோபமுடன் டுவிட்டரில் தன் கருத்தை தெரிவித்தார். இதில் மீடியாக்கள் மிகவும் கீழ்தரமாக நடந்துகொள்கின்றன, யாரும் என்னிடம் இது உண்மையா என்று கேட்டு, உங்கள் நேரத்தை வீனாடிக்காதீர்கள் .மேலும் இவர்களுடன் வேறு படத்தில் பணிபுரிந்த இயக்குனர்கள் ராஜேஷ், அட்லி போன்றோரும் இதை கடுமையாக மறுத்துள்ளனர். http://virakesari.lk/articles/2014/07/16/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE…
-
- 4 replies
- 1.9k views
-
-
மே17 இயக்கம் சார்பில் காவேரி டெல்டா மீத்தேன் ஆவணப்படம் திரையிடல் மற்றும் வெளியீடு மே17 இயக்கம் சார்பில் பாலைவனமாகும் காவேரி டெல்டா மீத்தேன் ஆவணப்படம் திரையிடல் மற்றும் வெளியீடு நடைபெறும் இடங்கள்-ஜூலை 19 மற்றும் ஜூலை20: வருகின்ற ஜூலை 19 சனிக்கிழமை மாலை 5 மணியளவில், சென்னை வில்லிவாக்கத்தில் காமகோடி திருமண மண்டபத்திலும்(நாதமுனி திரையரங்கம் அருகில்),புதுக்கோட்டையில் வடக்கு ராஜ வீதி நகர் மன்றத்திலும்,திண்டிவனத்தில் தாய்தமிழ் தொடக்கப் பள்ளியிலும் திரையிடல் நடைபெறுகிறது. வருகின்ற ஜூலை 20 ஞாயிறு மாலை 5 மணியளவில் பாண்டிசேரியில்புதிய பேருந்து நிலையம் அருகில் ஹோட்டல் மார்ஸ் எதிர்ல் உள்ள JVR ஹாலிலும் நடைபெறுகிறது அனைவரும் பங்கேற்கவும்.http://www.pathivu.com/news/32545/57/17/d,ar…
-
- 0 replies
- 445 views
-
-
பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் குறித்து கவலைப்படும் உறுப்பினர்கள், அண்டை நாடான இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போதும் யாரும் குரல் கொடுக்காதது ஏன்? என்று அ.தி.மு.க உறுப்பினர் மைத்ரேயன் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலங்களவை காலை கூடியதும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக வேறொருநாளில் விவாதம் நடத்தலாம் என அவைத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்தார். அதை ஏற்காத எதிர்க்கட்சிகள், தாக்குதல் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் வி…
-
- 0 replies
- 254 views
-
-
இந்தியாவில் அகதிகளாக இலங்கையைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 241 பேர் வசிக்கின்றனர் என இந்திய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்தியாவில் அகதிகளாக ஆப்கானைச் சேர்ந்த 10 ஆயிரத்து 340 பேர், மியான்மரைச் சேர்ந்த 4 ஆயிரத்து 621 பேர், இலங்கையைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 241 பேர் வசிக்கின்றார், நாடு இல்லாதவர்களாக திபெத்தியர்கள் உட்பட ஒரு இலட்சத்து ஆயிரத்து 148 பேரும் உள்ளனர். அகதிகள் எனக் கூறப்படும் வெளிநாட்டினரைக் கையாளுவதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனிய…
-
- 0 replies
- 335 views
-
-
தேர்தலில் தனித்து நின்று ஆயிரம் ஓட்டு வாங்கிக் காட்டுங்கள் என்று தேமுதிகவுக்கு அமைச்சர் வைத்திலிங்கம் சட்டசபையில் சவால் விடுத்து பேசினார். சட்டசபையில் நேற்றைய மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய உறுப்பினர் வெங்கடேசன் (தேமுதிக), ‘‘எங்கள் வாழ்வில் ஏற்றம் தந்த கேப்டன் விஜயகாந்த்’’ என்று ஆரம்பித்து பேசத் தொடங்கினார். அப்போது இடைமறித்து பேசிய அமைச்சர் வைத்திலிங்கம், ‘‘இங்கே உறுப்பினர் பேசும்போது, ஏற்றம் தந்தவர் என்று ஒருவரை குறிப்பிட்டார். ஏற்றம் என்றால் நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்ததே அதுதானா?, ஏற்றம் என்றால் என்ன என்று விளக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டார். அமைச்சரின் பேச்சுக்கு தேமுதிக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய உறுப்பினர் வெங்கடேசன…
-
- 0 replies
- 406 views
-
-
மதுரை,: வீடுகளில் 'ஏசி' வெடித்தது, 'பிரிட்ஜ்' தீப்பிடித்தது என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இவை வெடிக்குமா? தீப்பிடிக்குமா? வெடிக்கும் பொருளை வீட்டில் வைத்திருந்தால் எப்படி நிம்மதியாக தூங்க முடியும் என்ற சந்தேகக் கேள்விகள் நம் மனதில் எழுகின்றன. இரண்டு நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டம் கீழப்பாக்கத்தில் 'ஏசி' வெடித்து தந்தை, மகள் என இருவர் பலி. கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் 'பிரிட்ஜ்' தீப்பிடித்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மூச்சு திணறி பலி என தொடர்ந்து நடந்த இந்த விபத்துகள் நமக்கும் எச்சரிக்கையை தருகின்றன. 'ஏசி', 'பிரிட்ஜ்' பராமரிப்பு குறித்து இத்துறை சார்ந்த நிபுணர்கள் சிலரிடம் கேள்வி எழுப்பினோம். மின்இணைப்பில் தவறு மதுரையை சேர்ந்த 'ஏசி'…
-
- 4 replies
- 2.1k views
-
-
டும்டும்டும்டும்.... இந்தி[/size] Posted Date : 19:34 (10/07/2014)Last updated : 19:38 (10/07/2014) 'பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடு... ரயில்வே துறையில் அந்நிய முதலீடு... காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு...' என்று புதிய பி.ஜே.பி அரசு ஒரேயடியாக அந்நிய மோகத்தில் திளைப்பதைப் பார்க்கும்போது... ஒரு படத்தில் கவுண்டமணி அடிக்கும் கூத்துதான் நினைவுக்கு வருகிறது. வாசலில் நிற்கும் பிச்சைக்காரரைப் பார்த்து, 'சோறு இல்லை போ' என்று சொல்வார் மனைவி. உடனே சீறிக்கொண்டு கிளம்பும் கணவன் கவுண்டமணி, 'அதெப்படி சோறு இல்லைனு நீ சொல்லலாம். இந்த வீட்டுல நான் பெரியவனா... நீ பெரியவனா' என்கிற ரேஞ்சில் குதியாட்டம் போட்டபடியே அந்தப் பிச்சைக்காரரை அழைத்து, 'இப்ப நான் சொல்றேன்... உனக்கு…
-
- 0 replies
- 723 views
-
-
சென்னை: அ.தி.மு.க. ஆட்சியில் அகால மரணங்கள் தொடருவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி, தமிழகத்தில் ஏற்பட்ட போதெல்லாம், அகால மரணங்கள் நடக்கின்றன. உதாரணமாக, கும்பகோணம் மகாமக குளத்தில் ஜெயலலிதாவும், சசிகலாவும் இறங்கி குளித்த போது, 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஏர்வாடியில் தீ விபத்து ஏற்பட்டு, அதில், 28 பேர் பலியாகினர். ஸ்ரீரங்கத்தில் மண விழா ஒன்றில் நடந்த தீ விபத்தில் 54 பேர் பலியாகினர். கும்ப கோணம் பள்ளியில் தீப்பிடித்து 94 குழந்தைகள் கருகினர். எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கிய போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பெண்களும், 19 ஆண்களும் என மொத்த…
-
- 0 replies
- 308 views
-